சனி, 25 மே, 2019

பாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...




1) பாஸிட்டிவ் கிராமம்.  அரியலுார் அருகே உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வீட்டுக்கு வீடு கிணறு அமைத்து, வறட்சி நிலவும் இந்த நேரத்திலும், பஞ்சமில்லாமல் குடிநீர் பருகுவதுடன், விவசாயமும் செய்து வருகின்றனர்.




2)  மார்பக புற்றுநோயைஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியும்!
மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும்உள்ளாடை போன்ற எளிய கருவியை கண்டு பிடித்ததற்காக, 'நாரி சக்தி விருது' பெற்றுள்ள, கேரள மாநிலத்தைச் சேர்ந்த, விஞ்ஞானி, சீமா.  




3)  புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில், நீர் நிலைகளை துார்வாரும் இளைஞர்களிடம், மூதாட்டி ஒருவர், 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துஉதவியுள்ளார்.  இந்தப் பணம், 100 நாள் வேலை திட்டத்தில் உழைத்து, சம்பாதித்தது.  (நன்றி பானு அக்கா)




4)  உடனடியாக செயலாற்றி உதவிய இளைஞர்கள்.




5)  தொடர் பாஸிட்டிவ்!  மூன்றாவது செய்தியின் தொடர்ச்சி!  நல்ல குணங்களை சட்டெனப் பிடிக்கும் மாணவர்கள்.




=================================================================================================




சானா  முதல் வேனா வரை....:)

வசந்த காலக் கோலங்கள்
 எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...
கடந்த வார நாட்களில்
 குவிந்திடும்... கருத்துக்கள்..
அதற்கு எந்தன் ரிவியூக்கள்ள்ள்:))

முதலில் கொஞ்சம் என்னுடைய முன்னுரை... எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருங்கோ..பிளீஸ்ஸ்!!!!


பாருங்கோ கோமதி அக்கா எவ்ளோ அமைதியா, அதிரா என்ன சொல்லப்போறா என ஆவலாக இருக்கிறா.... கீதா... தலையை ஆட்டாமல் இருங்கோ கர்ர்ர்:)).. ஹையோ கீசாக்கா எழும்பி நிக்கக்கூடாது:) இருந்து கேளுங்கோ என் ஸ்பீச்சை:)). அதாரது குறுக்கே நிற்பது:) ஓ நெல்லைத்தமிழன்.. கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ பின்னால அஞ்சுவுக்கு மறைக்குதாம்:))... அஞ்சூஊஊஊ அங்க பாருங்கோ  சைட்டில, தாடி இல்லை, ஆனா சுவரில இருக்கிற அனுக்கா போஸ்ட்டரை ஒருவர் உத்துப் பார்க்கிறாரே:).. அவர்தான் ஸ்ரீராம்:) அவருக்கும் ஒரு கப் சாயாக் குடுத்திடுங்கோ:).. ஆரையும் தவற விட்டிடக்கூடாது, எல்லோருக்கும் சாயாவை ஒழுங்காக் குடுங்கோ அஞ்சு:)... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பானுமதி அக்கா.. இன்னுமோ லொக்கூ லொக்கூ :).. இந்தாங்கோ இந்த சுவீட்டைப் போடுங்கோ வாயில:))..

“வணக்கம் சகோதரியே”.... ஸ்ஸ்ஸ்ஸ் கமலாக்கா ஹையோ இப்போ பேசப்போவது நீங்களில்லை அதிராவாக்கும்..:)) கர்ர்ர்:), கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ:))..

 “பொன்னார் மேனியனே”... ஆவ்வ்வ்வ் துரை அண்ணனை ஆரு உள்ளே விட்டது:).. ஹையோ இது எங்கள்புளொக் மேடை துரை அண்ணன்.. இங்க வந்து தேவாரம் எல்லாம் பாடக்கூடா:)) அபச்சாரம் அபச்சாரம்.. ஹா ஹா ஹா முடியேல்லை முருகா... அஞ்சூஊ இப்பத்தானே சொன்னேன் எனக்கு அடிக்கடி சோடாத் தரோணும் என:)) எங்கின போயிட்டா கர்ர்ர்ர்ர்:)).

நான் ஒழுங்கா எங்கள்புளொக் வந்தால்தானே ரிவியூ எழுத வேண்டி வரும்:), ஒழுங்காக வராவிட்டால்.. எழுதாமல் தப்பலாம் என.. கட் அடிச்சேன் சில நாட்கள்:)) ஆனாலும்......:), சரி அது போகட்டும்.

1.பொதுவான என் கருத்து சனிக்கிழமைகளுக்கானது:

சனிக்கிழமைகளில் வரும் செய்திகள் நல்ல செய்திகள்தான், அதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனா அச் செய்திகள் யாவும் ஏற்கனவே நியூஸ் இல் வந்தவை என்பதாலும், தலைப்பைச் சொல்லி விட்டு, லிங் தானே குடுக்கிறார் ஸ்ரீராம் என்பதாலும்... எத்தனை பேர் அந்த லிங்கில் போய்ப் பார்க்கிறார்களோ தெரியவில்லை, மற்றும் பெரும்பாலும் பலரது பொதுவான கருத்து “இன்றைய செய்திகள் அனைத்தும் அருமை”, “இது ஏற்கனவே படிச்ச செய்திதான்”.. இப்படி வருகின்றன... அதனால ஏற்கனவே வந்த செய்தியைப் போடாமல், செவி வழிச் செய்திகள்.. அல்லது எங்கும் படிக்க முடியாதவை.. அப்படியானவற்றைப் போட்டால் நன்றாக இருக்குமே என்பது என் கருத்து. இப்போ நெல்லைத்தமிழன் ஏன் கீழே குனிகிறார்ர் கர்ர்ர்.. கல்லைக் கீழே போடுங்கோ பிளீஸ்ஸ்:))

இப்போ விமர்சனப்பகுதி ஆரம்பிக்கப்பட்டது நல்லதொரு வரவேற்கக்கூடிய திருப்புமுனை.. அதனால நெல்லைத்தமிழன் அடிக்கக் கலைத்தாலும் ஓடிப்போய் மேசைக்குக் கீழ ஒளிச்சிருந்தும் இதையேதான் சொல்லுவேன்:))

இன்றைய பொஸிடிவ் செய்திகளில்.. ஹேமாசென் என்பவர்தான் அதிகமாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் என்பது பின்னூட்டங்கள் மூலம் தெரிய வந்துது.

ஏ அண்ணன் கையிலிருந்த கிரிக்கெட் சனலுக்கான ரீவி ரிமூட்டைப் பிடுங்கிவிட்டு:)). கையிலே பேனாவைக் கொடுத்து ரிவியூ எழுதச் சொல்லிட்டார் ஸ்ரீராம்..., அழகாக, அதிராவைப்போல அலட்டாமல்:))  சோட் அண்ட் சுவீட்டாக எழுதி முடித்திட்டார் ஏ அண்ணன். 

அதனை அனைவரும் விரும்பி ரிவியூவுக்கே ரிவியூவா என்பதைப்போல கொமெண்ட்ஸ் போட்டிருக்கிறார்கள்.. கீதா, ஸ்ரீராம், நெ.தமிழன், துரை அண்ணன், கீசாக்கா, பானுமதி அக்கா, நானும் உள்ளேன் ஐயா என கெள அண்ணன், டிடி, கரந்தை அண்ணன், கமலாக்கா, கில்லர்ஜி, ஜீவி ஐயா, மாதேவி, காமாட்சி அம்மா, கோமதி அக்கா, அப்பாவி அதிரா:), அஞ்சு, தளிர் சுரேஷ், துளசி அண்ணன், ஜி எம் பி ஐயா..... பாருங்கள் இத்தனை பேரும் வந்து கொமெண்ட்ஸ் போட்டிருக்கிறார்கள்.. இதிலிருந்து என்ன தெரியுது.. ஏ அண்ணனின் எழுத்தும் மற்றும் முக்கியமாக சனிக்கிழமை ரிவியூ வையும் மக்கள் படு பயங்கரமாக வரவேற்கின்றனர்... அனைவருக்கும் அதிரா சார்பில் நன்றி..[இந்த நன்றியில் அஞ்சு சேர்ப்பில்லை:))]. 

2.பொதுவான என் கருத்து ஞாயிற்றுக் கிழமைக்கானது:

ஞாயிறில் பெரும்பாலும் சுவாரஸ்யமாகவே போஸ்ட் இருக்கும், பல சமயம் என்ன செய்தியா, கதையா, கவிதையா என்பதைப்போல எதிர்பார்ப்புடனும் திறப்போம், ஆனா கே ஜி எஸ் அங்கிள் சுற்றுலா சென்றாரோ அவ்ளோதேன்ன்ன்:)).. ஹா ஹா ஹா மிக அழகாக அருமையாகப் படங்கள் எடுத்துப் போடுகிறார், நாம் போக முடியாத, போகாத இடங்களைப் பார்க்கும் ஆவல் பெருகுகிறது, இருப்பினும் இதுபற்றி முன்பு ரிவியூ எழுதிவிட்ட நெல்லைத்தமிழன், கீசாக்கா, ஏ அண்ணன் மூவரும் கொஞ்சம் குறைபட்டுத்தான் சொல்லியிருக்கின்றனர்.. அக்குறைகள் எனக்கும் இருக்கு. [கோமதி அக்கா பொஸிடிவாக மட்டுமே ரிவியூ குடுத்திருக்கிறா:), நெகடிவ் பகுதியை அவ தொடவில்லை:)))]

அதாவது, எடுக்கும் படங்களை அப்படியே அனுப்புகிறார்.. ஒரு படத்தை ஒம்போது வியூவில் எடுத்துப் போடும்போது (கீசாக்காவைச் சொல்லல்லே:) ஹா ஹா ஹா) படம் பார்க்கும் ஆவல் குறைஞ்சிடுது.

யார் போடுகிறார்களோ தெரியவில்லை, படங்களுக்கு மெருகூட்டுவது தலைப்பு வாக்கியங்கள் ஹா ஹா ஹா.

இதில் இன்னொரு குறை எனச் சொல்லும்போது, அதுபற்றி ஆர்வமாகக் கேள்வி கேட்டால் பதில் கிடைப்பதில்லை, அது கொஞ்சம் மனதுக்கு சங்கடமாகிடுது.. இதை விட நாம் கூகிளில் பார்த்திடுவோமே என எண்ண வைக்குது.. அதை கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் நல்லது.


இன்றைய படங்கள் பார்க்க, எனக்கு எங்கள் இடத்தை பார்ப்பதைப்போல இருக்கு ஆறும் மலைகளும் மிக அழகாக அதிராவைப்போல:) [[ஹையோ ஏதோ ஒரு ஃபுளோவில் வந்திடுச்சூ விட்டிடுங்கோ:))]] இருக்கு, மனதுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி.

அதில் எனக்குப் பிடிச்ச வசனம்...
///நம்ம பையனை வீரனாக்கறாங்க//
இதில் அவரும், ஒரு வீரனைப்போலவே போஸ் குடுக்கிறாராம் ஹா ஹா ஹா:).

அதில் எனக்குப் பிடிச்ச படம்...
மிக நன்றாக இருக்கு, இதேபோல ஒரு இடம், இதேபோல ஒரு மலையுடன் இங்குண்டு... அந்த மலைக்கு ஸ்கொட்டிஸ் வைத்திருக்கும் பெயர் ஸ்லீப்பிங் இண்டியன்... அதாவது ரெட் இண்டீஸ் இருக்கினம் எல்லோ.. அவர்களுக்கு மூக்கு நீளமாம்.. இந்த மலையைப் பார்த்தால் ஒருவர் நிமிர்ந்து படுத்திருப்பதைப்போலவும் வானம் பார்த்து மூக்குத் தெரிவது போலவும் இருக்கும்.. அதனால இப்பெயர். அதன் சாயல் இதில் தெரிகிறது.

கொஞ்சக்காலம் கீதாதான் மீ ட 1ஸ்ட்டா வருவா:)).. இன்று மலை என்றதும் துரை அண்ணன் கீதாவைக் கடலிலே தள்ளிப்போட்டு முந்திக்கொண்டார்ர்.. அதிரா செய்வதை:)) துரை அண்ணன் செய்திருக்கிறார்.

ஊசிக்குறிப்பு:
இந்தப் போஸ்ட்டுக்கு அஞ்சு மட்டும் வரவும் இல்லை கருத்தும் சொல்லவில்லை என, அங்கு அதிரா உட்பட நாமெல்லோரும் மிகவும் மனம் வருந்தி வேதனைப்பட்டோம்ம்:)) ஹா ஹா ஹா... அஞ்சு ஏன் இப்படி வராமல் விட்டா:)).. ஹையோ நாளைக்கு வேர்க் இருக்கு மீ ரன்னிங் யா:)).

3.பொதுவான என் கருத்து திங்கட்கிழமைக்கானது:

இன்று எப்பவுமே சுவாரஸ்யமான நாளாகவே இருக்கும், அதிலும் நமக்குத் தெரிந்தோரின் சமையல் குறிப்பு எனில், ஆஹா கும்மி அடிக்கலாமே என மனம் துள்ளும். சமையலும் பார்த்தாயிற்று, கும்மியும் அடித்தாயிற்று என்பதுபோல நாள் முடியும். திங்கள் காலையில்.. இன்று யாருடைய குறிப்போ என நினைக்க வைக்கும்.. ஆனா இந்த வருடம் எனக்கு திங்கள் செவ்வாயும் வேர்க் இருப்பதனால், போன வருடம்போல அதிகம் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

முன்பெல்லாம் இங்கு அஞ்சு 2,3 குறிப்புக்கள் போட்டா. சூப்பராக இருக்குதென ஒரு பேச்சுக்குச் சொன்னோம்:)) உடனே  “தான் சமையல் வல்லுனர்” ஆகிட்டேன்ன் என ஓடிப்போய் டேவடைக் கிச்சின் எனத் திறந்தா:)) ஆஹா அஞ்சுவோ இது என நினைச்சு நான் திறந்த வாய் மூடவில்லை:)).... கிச்சினை மூடிட்டா ஹா ஹா ஹா:)).

சென்னைக் கீதா அனைவரையும் யெல்ப்புக்கு அழைத்துப்போய்ச் சமைச்சு அனுப்புவா:), பெங்களூர்க் கீதா ஆனதும் ஆளே மாறிட்டா:)). கீசாக்காவுக்கு அன்று மட்டும் வருத்தம் வராது:), தன் பக்கம் போட்டிக்குப் போடுவா ஒரு பருப்பு வடையாவது, ஆனா இப்போ அவ சமைப்பதில்லையாம் வீட்டில்:)) ஹா ஹா ஹா..  கோமதி அக்கா குறிப்பு அனுப்புகிறேன் எனச் சொல்லியிருக்கிறா நாங்க வெயிட்டிங்:). கமலாக்கா களம் குதிச்சா:) பின்பு சத்தமில்லையே:)).

எங்கள் புளொக்கில்.. நெல்லைத்தமிழனின் பங்கு அளப்பரியது..

திங்கள்+செவ்வாயில்.. நமக்கிருக்கும் ஒரு பொதுக்குறையை சொல்ல நினைக்கிறேன், அதுக்காக நான் சொல்வது சரி என ஆகிடாது என்பதையும் கவனத்தில் கொள்க:)..

இங்கு போஸ்ட்டுக்குக் கொமெண்ட்ஸ் போட வருகிறோம் எனில் முதலாவது எங்கள் புளொக்கின் ஆசிரியர்களுக்காக, இரண்டாவது நமக்குத் தெரிந்தோரின் சமையல் குறிப்பு, கதை வந்திருக்கிறதே அவர்களுக்காகப் போய்க் கொமெண்ட் போடோணும் எனும் விருப்பத்திற்காக.

இப்படி நமக்குத் தெரிந்தோர், புளொக்கில் இருப்போர் எனில், அவர்களே நமக்கு பதில் தருவார்கள் நாமும் பேசிவிட்டு ஓடிடுவோம்ம் எந்தக் கவலையும் இருப்பதில்லை,.. ஆனா..,

சில சமயம் நமக்கு தெரியாதோரிடம் இருந்து சமையல் குறிப்போ, கதையோ வாங்கி இங்கு வெளியிடும்போது, இங்கு வரும் நமக்கு பதில்களையோ அல்லது ஒரு சின்ன வரவேற்போ - ஆசிரியர்களாவது தர வேண்டும்... இல்லை எனில், எதுக்காக மினக்கெட்டுக் கொமெண்ட்ஸ் போட்டோம் எனும் எண்ணம் உதித்து விடுகிறது. காலையில் வருவோரை மட்டுமே போஸ்ட்களில் ஸ்ரீராம் வரவேற்பார்.. ஆனா உலக நாட்டுக் கணக்கைப் பார்க்கும் போது நம் நம் நாட்டுக் காலையில் தானே வர முடியும்.. அப்போ தாமதமாக வருவோருக்கு வரவேற்பு இருப்பதில்லை சில சமயங்களில்.. இதனைக் கவனத்தில் எடுத்தால் மகிழ்ச்சியே. [[இது என்னுடைய கருத்து மட்டுமில்லை:)) அஞ்சுவுடையதுமாக்கும்:)).. பின்ன.. பரிசெனில் தனியா வாங்கிடுவேன்ன்.. அடி எனில் பங்கு போட ஆள் வேணுமெல்லோ:)) அப்பாடா கோர்த்துவிட்டாச்சு:)) ஹா ஹா ஹா.]].

2. கடந்த திங்களுக்கான என் கருத்து:

திங்கட்கிழமை, கரண்டியைக் கையில் எடுத்திருப்பது பானுமதி அக்கா:), நெல்லைத்தமிழனாக இருக்குமோ எனத்தான் சந்தேகத்தோடு இருந்தேன்.

சோட் அண்ட் சுவீட்க்குப் புகழ் பெற்றவர் பானுமதி அக்காதான்:), கதையாகட்டும், சமையல் குறிப்பாகட்டும்.. பின்னூட்டமாகட்டும்:)).. ஆனா வீடியோவில மட்டும் யாருமில்லாமல் தனிமையிலேயே 20 நிமிசம் பேசுறா ஹா ஹா ஹா:)).

பானுமதி அக்கா போட்டிருக்கும் குறிப்பு  “5 ஸ்டார்” கேக்:).. ஆனா ஸ்ராரைக் காணம்:))

 அதைக் கடலைமா அல்வா எனவும் சொல்லலாம்:)).. பெயரா இப்போ முக்கியம்?:), மிக அருமையாக அழகாக.. சோட் அண்ட் சுவீட்டான ஒரு ரெசிப்பி போட்டு மகிழ்வித்திட்டா நம்மை எல்லாம்..  அதுக்கு நன்றி.

4.பொதுவான என் கருத்து செவ்வாய்க்கிழமைக்கானது:

இது, மேலே திங்களுக்கு சொன்ன அதே கருத்துத்தான்... ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும் இன்று ஆருடைய கதையோ என... திங்கள், செவ்வாய் முயற்சியை இப்படியே தொடர வேண்டும் என எங்கள் புளொக் ஆசிரியர்களைக் கேட்டுக் கொள்கிறேன்..

2. இது கடந்த செவ்வாய்க்கான என் கருத்து:

இம்முறை “கிராமிய மணம் கமழும்” கதைகளுக்குச் சொந்தக்காரரான, கலா அண்ணியின் உரிமையாளர்:) துரை அண்ணனின் கதை வந்திருக்கிறது..

மிக அழகாக, ஒரு உடைந்த பஸ்ஸில் நம்மை எல்லாம் ஏற்றி, அதனுள் ஒரு ஆசிரியரையும், பழைய மாணவியையும் ஏற வைத்து:), அந்த சிறு தூர பஸ் பயணித்திலயே, தன் கணவரோடுகூட ஆலோசனை பண்ணாமல்:), அந்த ரீச்சரையும் கணவரையும் தனக்கு அப்பா அம்மா ஆக்க்கிடுறா அந்த மாணவி.. வீட்டுக்குப் போனபின் என்னாகியிருக்குமோ என நினைக்க நெஞ்சு படபடக்குது ஹா ஹா ஹா ..

ஒவ்வொரு வசனமும் மிக மிக சுவாரஸ்யம், மகிழ்ச்சியான கதை, துரை அண்ணனுக்கு நன்றி.

5. புதன்கிழமைக்கான பொதுவான என் கருத்து:

புதன் கிழமைப் போஸ்ட் ஒரு புதிய, வித்தியாசமான முயற்சி, வரவேற்கத்தக்கது. பல சமயம் மிகவும் சுவாரஸ்யமாகவும், சில சமயம் போரிங்காகவும் நகருது. இப்போஸ்ட்டை மெருகூட்டி விடுவது.. அதற்கு வரும் பின்னூட்டங்களே. முன்பு கெள அண்ணன் பதில்கள் கொடுக்கமாட்டார்ர், பெரிசாக ஆரையும் கவனத்தில் கொள்ளாததுபோல இருப்பார்.. அது அவரின் சுபாவமாகக்கூட இருக்கலாம், ஆனா இப்போ அவர் ஓடி ஓடி அனைவரையும் வரவேற்று, பதில்கள் குடுப்பதனால் பின்னூட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது.

கேள்வித் திலகமாக இன்றுவரை முதலிடத்தில் இருப்பது அஞ்சுதான்:))..  இந்த மாபெரும் சபையில் வச்சு, அஞ்சுவுக்கு “கேள்வியின் நாயகி” எனும் பட்டத்தைச் சூட்டி, கையிலே ஒரு மஞ்சள் என்வலப் கொடுத்து, அதனுள் 99,999.00 பவுண்டுகளுக்கான செக் உம் வைத்துக் குடுக்கிறேன்[இதென்ன கணக்கு என ஓசிப்பீங்க:)).. அதிரா ஆரு?:), மீ வருமுன் காப்போனாக்கும்:) வாற கிழமை உங்களுக்கும் புரியும்:)))]].

அடுத்து 2 வதாக, நெல்லைத்தமிழனுக்கும் வர வர டவுட்ஸ் அதிகமாகுது:))..  இருவருக்கும் வயசாக வயசாக:)) மறதி அதிகமாகி:) அதனால கேள்விகள் எழும்புவது இயற்கைதானே:)) ஹா ஹா ஹா ஹையோ இப்போ எதுக்குக் கல்லை எடுக்கிறீங்க இருவரும்.

கீசாக்கா, பானுமதி அக்காவுக்கு இடைக்கிடைதான்:) கேள்விகள் வந்து போகுது...:).

2. இது கடந்த புதனுக்கான என் கருத்து:

வழமைபோல இன்றும் கேள்வி பதில்களும் பின்னூட்டங்களும் சுவாரஸ்யம், இன்றும் அஞ்சுவும் நெல்லைத்தமிழனும் மட்டுமே கேள்வி கேட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு கேள்விக்கு 4 பதில்கள் வரும்:).. இப்போ இருவர் ரிரயேர்ட் ஆகிட்டினம் போல:) அதில் எங்கள் புளொக்கின் மூணாவது ஆசிரியர் ஸ்ரீராமும் ஒருவர்:).

ஆண்களே, இப்போ எதுக்கு மீசை + தாடி வளருது:) டெய்லி சேவ் பண்ணுவது எவ்ளோ கஸ்டமாக இருக்கு என கவலைப்பட்டுக்கொண்டிருக்க:)).. பெண்களுக்கு ஏன் மீசை இல்லை என, உலகத்தில இருக்கிற பிரச்சனை எல்லாம் விட்டுப்போட்டு:), அஞ்சுவுக்கு மீசையில பிரச்சனை:)) ஹா ஹா ஹா:)... அதனால மீசை வச்ச ஒரு அக்காவைத் தேடிப்பிடிச்சுக் களமிறக்கியிருக்கிறார் கெள அண்ணன்:)) கர்ர்ர்ர்ர்ர்:)).

அதிரா கஸ்டப்பட்டு, கடன்பட்டு... சே..சே.. ஒரு ஃபுளோவில வந்திட்டுது விடுங்கோ:)).. பதில் அனுப்பியிருந்தும்.. பரிசு தராமல் ஏமாற்றிய நாள் இன்று:)).. அப்பூடின்னு சொல்ல மாட்டேன்ன்ன்:)).. அதிராவுக்கு விலைமதிப்பற்ற பரிசு கிடைச்ச நாள் இன்று..

எங்களுக்கு.., சரியோ தப்போ சாத்திரம் எனில் ரொம்பப் பிடிக்கும், கேள்விப்பட்டால் ஓடிப்போய்க் கேட்காமல் விட்டதில்லை:))... அந்த வகையில் என் கை எழுத்துப் பார்த்து.. கிராஃபோலஜி புகழ்:)) ஏ அண்ணன், மற்றும் கெள அண்ணனும் பதில் தந்தது மகிழ்ச்சி, நன்றி.


ஆனால் கெள அண்ணன் சொன்னார்..

 /// புள்ளி வைக்கும் எழுத்துகளுக்கு அதிரா சிறிய வட்டங்களை புள்ளிகளாக வரைந்துள்ளதால், எந்த விஷயத்திலும் அவரை convince செய்வது மிகவும் சிரமம்//// என.. நான் டொட் வைப்பதில்லை வட்டம்தான் போடுவேன் தமிழுக்கு[இதைகூட இதுவரை அவதானிக்கவில்லை நான்:))], ஆனா என்னைக் கன்வின்ஸ் பண்ணுவது மிக மிக ஈசி:))... அடுத்தவர் பண்ணாவிட்டாலும் நானே பண்ணவைச்சிடுவேன்:)) ஹா ஹா ஹா.


6. வியாழக்கிழமைகளுக்கான பொதுவான என் கருத்து:

ஞாயிறைப்போலவே, வியாழனும் ஸ்ரீராம் கையிலதான் தவழும், ஆனா ஞாயிறு அப்பப்ப கை மாறினாலும் வியாழன் மாறியதில்லை என்றே நினைக்கிறேன். வியாழன் எப்பவும் சுவாரஸ்யம், குறை சொல்ல இடமில்லை, அதுபோல ஸ்ரீராமும் சாமமானாலும் அனைவருக்கும் கொமெண்ட்ஸ் கொடுத்து கவனிப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.

நான் திரும்ப திரும்ப சொல்கிறேன் என நினைச்சிடாதீங்கோ.. ஒருவர் வந்து நமக்குக் கொமெண்ட்ஸ் போடுகிறார் எனில், அவர்களுக்காக நாமும் ஒரு பதிலாவது கொடுத்தால்தானே மகிழ்ச்சி. எதுக்காக அவர்கள் நம் பக்கம் வருகிறார்கள்? நமக்காகத்தானே? இதை அனைத்து புளொக்கேர்ஸ் உம் கவனத்தில் கொண்டால் மகிழ்வேன்...:).

2. கடந்த வியாழனுக்கான என் கருத்து:

எப்பவுமே காசிக்கு நான் போகிறேன் எனச் சொல்வது அதிராதான்:), ஆனா மின்னாமல் முழங்காமல் காசிக்குப் போய் வந்திட்டார் ஸ்ரீராம்.. அந்தத் தொடர்தான் போகுது இப்போ... எங்கட ஆட்களுக்கு எங்கின போனாலும் ஒரு டேவடை:)) சே சே தேவதை கிடைப்பா:).. அது ராசி அப்பூடி:)) ஹா ஹா ஹா அந்த வகையில ஸ்ரீராமுக்கும் ஒரு குண்டுத் தேவதை கிடைச்சா:).. ரயில் ஸ்நேகிதத்தில:))... கடந்த நால்வரின் ரிவியூவிலும் அவ பயணம் செய்தவ:)).. அதிரா ரிவியூ எழுதும் வாரத்தில ரெயினை விட்டு இறங்கியது கவலைக்குரிய சங்கதி:)).. நான் ஒண்ணும் அவவை இறங்கச் சொல்லல்ல ஜாமீ:)) ஹா ஹா ஹா:).



இப்போஸ்டின் முடிவில், ஸ்ரீராமின் கவிதை:)) இக்குண்டுத் தேவதைக்காக இருக்குமோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).. மீ ரொம்ப நல்ல பொண்ணு:)).

7. வெள்ளிக்கிழமைகளுக்கான பொதுவான என் கருத்து:

வெளிநாடுகளில், பொதுவா சனி, ஞாயிறு விடுமுறை நாள், அதனால வெள்ளிக்கிழமைகளில் எல்லோர் முகத்திலும் புன்னகை தவழும், சும்மா சும்மா சிரிப்பார்கள் வேர்க் பிளேஸில:))... அந்த வகைக்கேற்ப, ரிலாக்ஸிங் டேயாக, எங்கள் புளொக்கின் வெள்ளி இருப்பது மிகவும் சந்தோசம்... பாடல் கேட்டுப் பொழுது விடியும்... பாட்டை மட்டும் போடாமல், அதன் சுயசரிதம் படம் அனைத்தையும் போடுவார் ஸ்ரீராம்.. அப்போதான் நமக்கு தெரியும்.. இப்படி ஒரு பாட்டிருக்கோ..., இப்படியும் ஒரு படம் வெளி வந்ததோ என...

இது பால்:) வேறுபாடோ, இல்லை வயசு வேறுபாடோ இன்றி அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு நாள்.

இந்த வெள்ளிப் போஸ்ட் பார்த்து, நான் பார்த்த படங்கள் பல உண்டு.  பாடல் நன்றாக இருந்தால், படம் பார்க்கச் சொல்லும் மனசு எனக்கு:). இடைக்கிடை, புதிய பாடல்களையும் இணைக்கலாமே.. 

இதில் சினிமாப் பிரியர்கள்:) அதிகம் அதுபற்றி அலசுவதுண்டு.. நெல்லைத்தமிழன்,பானுமதி அக்கா, சினிமாப் பார்ப்பதில்லை எனச் சொல்லிக்கொண்டே விளக்கம் கொடுக்கும் கீசாக்கா, ஜீவி ஐயா, கீதா, ஏ அண்ணன்.., துரை அண்ணன்.... எல்லோரும் களம் இறங்கி சிக்ஸர் அடிப்பினம்:)).. நானும் அஞ்சுவும், ஒரு ஓரமாக நின்று புதினம் பார்ப்போம்:))

2. கடந்த வெள்ளிக்கிழமைக்கான என் கருத்து:

ஆவ்வ்வ்வ்வ் என் மேடைப்பேச்சை நிறைவேற்றும் நாள் வந்து விட்டது:)).. என் ஸ்பீச் முடிஞ்சதும் எல்லோருக்கும், கீரை வடை, பருப்பு வடை, அனைத்துவகை ரோல்ஸ், சமோசா, மிதிவெடி... அனைத்தும் உண்டு, அத்தோடு ஸ்ரீராமின் ரீ கஃபேயில்:)) இருந்து அனைவருக்கும் றீ-ஃபில் - ரீ:) இலவசமாகவே உண்டு:)).. அதனால, கால் விறைச்சாலும், எழும்பிடாமல் இருங்கோ பிளீஸ்ஸ்:)).

இம்முறை சிவந்த மண் படத்தை அறிமுகம் செய்து, அதிலிருக்கும் ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீராம்.  முடிவிலே ஒரு “மொக்கைப்புதிரையும்” ஆரம்பித்திருக்கிறார்:)) ஹையோ இது அவர் சொன்னதுதான் நான் அல்ல:))..

///இந்த வார மொக்கைப்புதிர்  :  கண்ணில் இடும் மை பற்றி தமிழில் என்னென்ன திரைப்பாடல்கள் வந்துள்ளன?  ///

இதுக்கு முதலாவதாக களமிறங்கிய வல்லிம்மா சொன்ன பதில்தான் என் மனதிலும் ஓடியது... “கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்குப் பொய் அழகு..”.. எனக்கு அப்பாடலும் ரொம்பப் பிடிக்கும்...

இன்று நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்:)).. நெல்லைத்தமிழன், எங்காவது அடிக்கடி.. படிச்ச வருடம், வகுப்பைச் சொல்லி என்னிடம் மாட்டி விடுவார்ர்ர்:)).. அதை கரெக்ட்டாக:) நிரூபிக்க இன்றும் ஒரு குளூ குடுத்திட்டார் எங்களுக்கு ஹா ஹா ஹா:)..

இதில் ஒரு உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும், இந்த திங்கள், செவ்வாய்.. மற்றும் இப்போ சனிக்கிழமை, இவற்றுக்கு ஒவ்வொருவரையும் கேட்டு, எழுதச் சொல்லித் தூண்டி, அவர்களிடம் இருந்து வாங்கி, இங்கு ஸ்ரீராம் வெளியிடுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயமே, ஆனால்.. இதனால..

எவ்ளோ அவமானங்கள், மனக்கவலைகள் கசப்புக்கள்.. ஸ்ரீராமுக்கு ஏற்பட்டிருக்குமோ தெரியவில்லை [ கேட்டுக் கேட்டு வாங்கிப் போடுகிறார் என], ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் இப்படி ஒவ்வொருவரையும் கேட்டு வாங்குவதால்தான், வலையுலகம் கொஞ்சமாவது உற்சாகமாக இருக்கிறது, வலைச்சரம், தமிழ்மணம் என இருந்தபோது கொஞ்சம் போட்டி போட்டு உற்சாகமாக இருந்தோம், இப்போ அப்படியும் எதுவும் இல்லையே...

 சோர்ந்து போயிருப்போரெல்லாம், ஸ்ரீராம் கேட்டுவிட்டாரே என உசாராகி எழுதி அனுப்புகின்றனர்.. இதன் மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிஞ்சிருக்கும் திறமைகள் வெளியே வருகிறது..  குறிப்பு அனுப்புவதற்காகவே பலர் வீட்டில் சமைக்கின்றனர்:)) இல்லை எனில் ரேக் எவே தானே ஹா ஹா ஹா ஹையோ முறைக்காதீங்கோ:)) நான் அஞ்சுவைச் சொன்னேன்:)).

இதனை இப்படியே தொடர எங்கள் புளொக்கின் அனைத்து ஓனர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்🙏.

எனக்குப் பாருங்கோ அதிகம் அலட்டுவது பிடிக்காதாக்கும்:)).. ஹா ஹா ஹா அதனால இத்தோடு என்னுரையை முடிச்சுக் கொள்ள நினைக்கிறேன், [அமைதி அமைதி.. அஞ்சூஊஊஊஊ சபையைக் கொஞ்சம் ஜமாளியுங்கோ கர்ர்:))] சோட் அண்ட் சுவீட்டாக முடிச்சுப்போட்டா அதிரா எனக் கவலைப்படாதீங்கோ:)).. வேறு வடிவில் இன்னொரு சந்தர்ப்பம் அமையாமலோ போகும்:)).. என் எழுத்தில் குறைகள் இருப்பின், கோபிக்காமல் மன்னிக்கவும்:)).. திட்டுவதாயின்.. சிரிச்சுச் சிரிச்சுத் திட்டவும்:)) இத்தோடு என்னுரையை முடித்துக் கொண்டு மேடையை விட்டு இறங்குகிறேன் .. நன்றி.

============== =============== ============== =========== ==============
இங்கே, ஒவ்வொரு நாளுக்கான தலைப்பும் “2” ம் நம்பரில் குடுத்திருக்கிறேன், அந்த அந்த நாளுக்கான லிங்கும் அதில் இணைக்கப்பட்டிருக்கு, அதனால எந்தக் காலத்தில் இப்போஸ்ட் படிச்சாலும், எதைப்பற்றி எழுதப்பட்டிருக்கு என்பதை கண்டு, படிக்க ஈசியாக இருக்குமெல்லோ.
============ ============ ============= =========== ========== ==========
ஊசிக்குறிப்பு:
எங்களுக்கு இன்று வெள்ளி தொடங்கி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்.. வரை ஸ்கூல் ஹொலிடே, அதனால இங்கு ஸ்கொட்லாண்டுக்குள்ளேயே கொஞ்சம் தூரப்பயணம்.. குட்டிச் சுற்றுலா செல்கிறோம்.. சனி காலையில் புறப்பட்டால், அநேகமாக செவ்வாய்தான் திரும்புவோம், அதனால சொல்லாமல் கொள்ளாமல் ஓடலாம் என இருந்தேன்:)).. ஆனா ஸ்ரீராம் எழுதச் சொல்லிட்டமையால், இது வெள்ளியோடு முடிகின்றமையால், என் கடமையை முடித்து விட்டேன்:)), ஆனா நாளைக்கு என்னால் வந்து அனைவருக்கும் பதில் குடுக்க முடியாமல் இருக்கும், பயணத்தின் போது படிப்பேன் அனைத்தையும் ஆனா கொமெண்ட் போட முடியாதே...

ஹோட்டல் போனதும் அல்லது முடியும்போது பதில் போட முயற்சிக்கிறேன் ஆனா வழமைபோல முடியாமல் போகும்.. நான் பதில்கள் தராவிட்டாலும் குறை நினைக்காமல் பெரிய மனது பண்ணி மன்னிச்சுக் கொள்ளுங்கோ...

ஆனா என்  “செக்” இருப்பா:)).. அதனால முடிஞ்சவரை அவவைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்.. அவவுக்கும் இடையே ஏதோ புரோகிராம் இருக்கிறதாம். அடிதடி, கல்லெறி எல்லாம் தயங்காமல் நீங்கள் நாளைக்கே குடுக்கலாம்:)) ஆனா பரிசு எனில் அதிரா வரும்வரை வெயிட் பண்ணுங்கோ:).
👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭👭

231 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. //எங்கள் புளொக்கில்.. நெல்லைத்தமிழனின் பங்கு அளப்பரியது..//

      நூற்றுக்கு நூறு உண்மை! நியாயமாக எங்கள் ஆசிரியர் குழுவில் அவர் பெயரையும் ஸ்ரீராம் சேர்த்திருக்க வேண்டும்! வரவேற்புக்கிடையே புகுந்துவிட்டேனா? :-)))))

      நீக்கு
    3. வாங்க கிருஷ் ஸார்...

      உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.

      நீக்கு
    4. ஐயோ.... இப்போதான் கிருஷ்ணமூர்த்தி சாரோட கமெண்டைப் பார்த்தேன்... சும்மா கலாய்க்காதீங்க. இங்க எழுதறவங்க, பங்கு பெறுபவர்கள் எல்லாருமேதான் காரணம். சில பேர்களை எழுதினேன்னா, பேர் சொல்ல விட்டுப்போனவர்கள் மனவருத்தத்துக்கு ஆளாவார்கள்.

      தி.பதிவு எழுத ஆரம்பித்ததே ஸ்ரீராம் 'அனத்தியதால்'. பிறகு எனக்கு ரொம்ப இண்டெரெஸ்ட் வந்துவிட்டது. சிறுகதைக்கும் அதுதான் காரணம். நிறைய தடவை தீம் மனதில் ஓடும், ஆனால் எழுத ஆரம்பிக்க நேரம் வருவதில்லை.

      இங்க, 'கலாய்த்தாலும்' யாரும் (ஒரு சிலர் தவிர... அவங்கள்லாம் சீரியஸ் டைப்) தவறா எடுத்துக்கொள்வதில்லை. ஒரு மாதிரி எல்லோரும் ரிலேஷனாகிவிட்டோம் என்று நினைக்கிறேன் (அதிரா, ஏஞ்சலின், கீதா ரங்கன், கோமதி அரசு மேடம், துரை செல்வராஜு சார், கீதா சாம்பசிவம் மேடம், காமாட்சி அம்மா, வல்லிம்மா, கில்லர்ஜி, கமலா ஹரிஹரன் மேடம், பானுமதி வெங்கடேச்வரன், ஜீவி சார், கரந்தை ஜெயக்குமார் சார், ஜி எம் பி சார். ஏகாந்தன் சார்.... திண்டுக்கல் தனபாலன்.. அபூர்வ வருகை தரும் கோபு சார், மிகிமா.... லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது)

      நீக்கு
    5. நெ த சொல்வதை வழிமொழிகிறேன்.

      நீக்கு
    6. ///கிருஷ்ண மூர்த்தி S25 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:10///
      நன்றி_()_

      நெல்லத்தமிழன் கெள அண்ணனை எப்பூடி லிஸ்ட்டில் போட மறந்தீங்க:) ஹா ஹா ஹா:)... புரியுதோ:)

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, நெல்லை மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும், இனி வரப்போகும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு, காலை வணக்கம் துரை ஸார்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் வந்திருக்கும் அனைவருக்கும், இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. காலை வணக்கம் கீதா அக்கா. வாங்க வாங்க..

      நீக்கு
    4. வணக்கம் துரை செல்வராஜு சார்... அனைவருக்கும் காலை வணக்கம். நாமெல்லாம் சுறுசுறுப்பு. அதிகாலையில் எழுந்துவிடுகிறோம். இன்னும் தூங்கி வழியும் ஏஞ்சலினுக்கும் அதிராவுக்கும் "சாம" வணக்கம்

      நீக்கு
    5. ஏஞ்சல் வந்தாச்சு நெல்லை!!!

      நீக்கு
    6. ///இன்னும் தூங்கி வழியும் ஏஞ்சலினுக்கும் ///
      ரொம்ப கரீட்டூஊஊ:)..

      ///அதிராவுக்கும் சாம வணக்கம்/// கர்ர்ர்ர்ர் சாமம் கத்திக்கொண்டே கட்டிலால விழுந்தேனாம்ம்ம்:)... இப்போதானே தெரியுது காரணம்:)... ஹா ஹா ஹா

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்...

    பாசிட்டிவ் கிராமம் ஈர்க்கிறது...

    ஓ இன்று பூஸாரோ!! ஆஹா அப்ப பயங்கர கும்மிதான் அவர் வாலைப் பிடித்து...ஹா ஹாஹ் ஆ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ரெங்கன். பூஸார்தான்... அனால் அவர் பயணத்தில் இருப்பதால் முடிந்தபோது நம்முடன் கும்மியில் இணைவார்.

      நீக்கு
    2. ஓ பூசார் பயணத்திலா அதான் இங்கு அதிகம் அதிரவில்லையோ...ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
    3. இன்று முடியவே முடியாமல் போச்சு கீதா:(

      நீக்கு
  4. அப்பாவி ஞானானந்தை அதிராவின் விமர்சனம் அதிரடி...

    அதுவும் புதுமையாக!...
    தனக்கே உரித்தான பாணியில்
    அடித்து விளையாடி இருக்கிறார்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.நற்செய்திகள் கொண்டு வரும்
      சனிக்கிழமைக்கும் வணக்கம். ஸ்ரீராமுக்கு நன்றிகள். பானும்மாவுக்கும் தான்

      நீக்கு
    2. தண்ணீர் உள்ள கிராமம். மனம் குளிர்ந்தது.
      எங்க வீட்டுக்கிணற்றிலும் பொதுவாகத் தண்ணீர் வற்றுவதில்லை.
      இறைவன் திருவருள்.Ariyalur.

      நீக்கு
    3. வீரதீர இளைஞர்களின் செயல் மிகப் பாராட்டுக்குறியது. சங்கிலி கிடைத்ததா தெரியவில்லையே.
      பட்டப் பகல் கொள்ளையா பயங்கரமாக இருக்கிறதே.

      தான் 100 நாள் உழைத்துச் சேர்த்த பணத்தைக் கொடுத்த மூதாட்டிக்கு வாழ்த்துகள் .இந்த
      நல்லவருக்காக மழை பெய்யட்டும்.
      நாரி சக்தி விருது பெற்ற சீமா அவர்கள் தொண்டினால் மகளிர் பயன் பெறட்டும்.
      இந்த வார செய்திகள் அனைத்தும் நம்பிக்கை கொடுக்கின்றன.

      அதிரா அவர்களின் அதிரடி விமர்சனங்கள் சூப்பர்.
      அவர்கள் சொல்வது போல எ பி அனைவரையும் எழுதுவதற்கு ஊக்குவிக்கிறது.

      இத்தனை விவரமாக அலசி எழுதுவதற்கு எத்தனை பொறுமை வேண்டும்.
      வாழ்த்துகள் அதிரா.
      உங்கள் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய
      பிரார்த்தனைகள்.

      நீக்கு
    4. வணக்கம் வல்லிம்மா.. வாங்க வாங்க.. இப்போதைய சென்னை நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது. வெயில்....அனல்... மழை இல்லை. அதிரா சுவாரஸ்யமாகச் செய்திருக்கிறார். உங்களுடன் எங்கள் பாராட்டுகளும்...

      நீக்கு
    5. நன்றி திரை அண்ணன் வல்லிம்மா ஶ்ரீராம்... எல்லோரும் இவ்ளோதூரம் என் எழுத்தை ரசிப்பீங்களென நான் நினைத்திருக்கவில்லை... பாடுபட்டதற்கான பலன் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு...

      நீக்கு
  5. அதிரடி அதிரடியாகக் களம் இறங்கி ஓர் கலக்கு கலக்கிட்டார். பதிவு நீளம் என்றாலும் அதன் தாக்கம் தெரியாமல் கடைசி வரை சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கார். ஒவ்வொருத்தரையும் கலாய்ப்பதிலும் விடவில்லை. எல்லோரையும் சகட்டு மேனிக்குக் கலாய்த்திருக்கிறார். ஒவ்வொரு கிழமைக்கும் இரண்டு விதங்களில் விமரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரடின்னு நீங்களே சொல்லிட்டீங்களே கீதாக்கா... இரண்டு வித விமர்சனமும் சிறப்பு. பொதுவான கருத்து, பதிவைப்பற்றிய தனிக்கருத்து. சுவாரஸ்யம். முதல் ரவுண்ட் என்பதால் பொதுக் கருத்து ஓகே.. அடுத்த ரவுண்டுகளில் என்ன செய்வார் என்று பார்க்க ஆவல்!

      நீக்கு
    2. மிக்க நன்றிகள் கீசாக்கா... யாரும் எதையும் தப்பா எடுக்க மாட்டீங்க எனும் நம்பிக்கையில் சந்தோசமாகக் கலாய்த்தேன் ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. @திறீராம்ம்ம்
      ///முதல் ரவுண்ட் என்பதால் பொதுக் கருத்து ஓகே.. அடுத்த ரவுண்டுகளில் என்ன செய்வார் என்று பார்க்க ஆவல்!////
      என்னாதூஊஊஊஊ அடுத்த ரவுண்டும் இருக்குமோஓஓ விடுங்கோ விடுங்கோ மீ காசிப்படிக்கே பேமனட்டாப் போயிடுரேன்ன்ன்:)...
      நான் நேற்று யோடிச்சேன் கொஞ்சப்பேர்தானெ இருக்கினம் ரிவியூ எழுத... அப்போ பின்பு ஶ்ரீராம் என்ன செய்வார் என...

      ஆனா ஶ்ரீராம் 2வது சரிவராது... கதை சமையல் வேறு.. இது வேறு... 2 வது ரௌண்ட் என்பது போஸ்ட்டுக்கான கொமெண்ட்ஸ் போலாகிடும்:)...

      அதனால கிழக்கால மேற்கால வானம் பூமி முகட்டு வளை:).. மேசைக்குக் கீழ எல்லாம் பார்த்து ஓசியுங்கோ ஏதும் புது ஐடியாக் கிடைக்கும் என்பது என் தாழ்மையான கருத்து...
      இடைக்கிடை கெள அண்ணனையும் மேசைக்கு கீழ அனுப்பி ஓசிக்க வையுங்கோ:).. ஹா ஹா ஹா..
      இது புது மொபைல்:)... நிறைய எழுத்துப் பிழை வருது சமாளியுங்கோ 0பிளீஸ்.. திருத்திக் கொண்டிருக்க நேரம் போதாது:(

      நீக்கு
  6. அரியலூர் அருகில் இருக்கும் கிராமம் செம! இப்படியே ஒவ்வொருவரும் முயன்றால் நன்றாகவே இருக்கும். மக்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்.

    இந்த லிங்க் போனதும் கணினி டவுன்...அதான் போய்ட்டு திரும்பி வந்தேன்..

    மற்ற பாசிட்டிவ் செய்திகள் போகும் முன் அதிராவின் பாசிட்டிவ் செய்திகள் குறித்த கருத்திற்கு என் கருத்தை வைத்துவிட்டு மற்ற செய்திகளைப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா சனிக்கிழமைக்கான உங்கள் கருத்தை நான் சரிதான் என்று சொன்னாலும் நாம் இதனையும் பார்க்க வேண்டும். அதாவது இப்போதெல்லாம் செய்தித் தாள்களில் கூட முதல் பக்கம் நெகட்டிவ் செய்திகள் தான் வருகிறது. இதைப் பற்றி மறைந்த நம் அப்துல்கலாம் ஐயா அவர்களும் சொல்லியிருக்கிறார். பாஹே- ஸ்ரீராமின் அப்பாவிற்கும் இதே கருத்துதான்.
      நல்ல விஷயங்கள் எந்தச் செய்தித் தாளிலும் பெட்டிச் செய்தியாகவோ அப்படித்தான் வருகிறது. அதற்கு அத்தனை முக்கியத்துவம் தராமல்.

      அடுத்து பொதுவாகவே மக்கள் செய்திகள் வாசிக்கும் போது ஒரு கொலை, கொள்ளை, அரசியல் அக்கப் போர் இருந்தால், இது போன்ற பாசிட்டிவ் செய்திகள் கண்ணில் பட்டாலும் மனம் மீண்டும் கமல் என்ன சொல்லறார், அந்த நடிகை, நடிகர் பற்றி என்ன செய்தி, ஸ்டாலின் ராகுல் மோதி என்ன வம்பு என்றுதான் படிப்பதில் ஆர்வம் காட்டுவார்களே தவிர பாசிட்டிவ் செய்திகள் கண்ணில் பட்டாலும் மனதில் பதியாது. ஹிஹிஹிஹி.... இது பொதுவானன் மாஸ் சைக்காலஜி இல்லையா...

      எனவே செவி வழி வருவது, பார்ப்பது என்பது ரொம்பக் கஷ்டம் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படி வருபவற்றில் ஆதாரமும் இருக்க சான்ஸ் இல்லை. நாம் பல கேள்விகள் எழுப்ப முடியும் இல்லையா...

      தேர்வு எழுதும் போது கூட நாம் எழுதும் பதில் சின்னதோ பெரிதோ அதில் முக்கியமான பாயின்டை கலரால் அண்டர்லைன் செய்து ஹைலைட் செய்து காட்டச் சொல்லுவார்கள். அப்போதுதான் தேர்வு பேப்பரை திருத்துபவர்களின் கண்களில் அது பட்டு மார்க் கிடைக்கும் என்று..

      அது போல எபியில் அது ஹைலைட் செய்து காட்டப்படுகிறது....

      என்னைப் போன்றோருக்கு இப்படியான செய்திகள் கூட எபி மூலம் தான் அறிய வாய்ப்புண்டு அதிரா. மற்றபடி அறிய வாய்ப்புகள் மிகவும் குறைவு.

      எனக்குத் தெரிந்து சனிக்கிழமை போஸ்ட் என்றில்லை மற்ற போஸ்டுகளுக்கும் கூட அருமை என்ற பின்னூட்டம் காமண்.

      லின்ட் போய் படிக்கவும் செய்கிறார்கள் வழக்கமாக வாசித்துக் கருத்து இடுபவர்கள் லிங்க் சென்றும் வாசிப்பார்கள்.

      அறிந்த செய்தி என்று சொல்பவர்கள் ஓரிரண்டுபேர் என்றே தோன்றுகிறது...

      எனவே அது அப்படியெ தொடரலாம் என்பது என் தனிப்பட்டக் கருத்து...

      கீதா

      நீக்கு
    2. நன்றி கீதா... நான் சொல்லவேண்டியதை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

      நீக்கு
    3. கீதா நீங்க சொல்வது உண்மைதான் ...

      இருந்தாலும் சனிக்கிழமைப் போச்ட்டுக்கு முன்பு வரும் கொமெண்ட்ஸ் , பேஜ் வியூவுக்கும்.. ரிவியூ ஆரம்பித்தபின் வரும் கொமெண்ட்ஸ் , பேஜ் வியூவையும் செக் பண்ணினாலே தெரியுமே மக்களின் விருப்பம் எதுவென:)...
      மக்களுக்குப் பிடிப்பதைக் கொடுப்பதில்தானே நம் மகிழ்ச்சி அடங்கியிருக்கு..

      சிம்பிளா ஒரு உதாரணம் சொல்லட்டோ....
      கேப்பங்கூழ் உடம்புக்கு எவ்ளோ நல்லது, ஆனா தனியே கேப்பங்கூழ் மட்டும் விற்றால் முன்னேற்றமும் மக்களின் வரவும் குறைவாகவே இருக்கும்...
      அதற்குப் பதில்... மாற்றி அல்லது மக்கள் அதிகம் விரும்பும் உணவையும் சேர்த்து விற்கும்போது கடை பொப்பூலராகும்... மக்கள் வரவும் கூடும்...

      நான் எங்கள்புளொக்கின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே கூறியிருக்கிறேன்... :).. எத்தனை பேர் விரும்புகிறார்கள் என... மஜோரிட்டியையும் பார்க்க வேணும் எல்லோ:)..

      கர்ர்ர்ர்ர்4 ஶ்ரீராம்:).. ச்ச்ச்சும்ம ச்சும்மா ஹெட் ஐ ஆட்டக்கூடாதாக்கும்:).. ஹா ஹா ஹா

      நான் சொன்னது தவறெனில் படிக்காமலேயே கிழிச்சு பெங்களூர்க் கடல்ல வீசிடுங்கோ பிளீஸ்:)...

      நீக்கு
  7. //கீசாக்கா, பானுமதி அக்காவுக்கு இடைக்கிடைதான்:) கேள்விகள் வந்து போகுது...:).//
    கேள்விகள் நிறைய இருந்தாலும் காலை பதிவு பார்க்கையில் கேட்காமல் பின்னர் வரலாம் என்றிருந்தால் பின்னர் மறந்து விடுகிறது. பார்ப்போம், இனியாவது கேள்விகள் கேட்க முடியுதா என்னவென்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராம்... இந்த சபாஷ் எதற்கு? ரொம்ப வயதாவதால் அடிக்கடி மறதி வருகிறது என்று கீசா மேடம் ஒத்துக்கொண்டதற்கா?

      நீக்கு
    2. //பார்ப்போம், இனியாவது கேள்விகள் கேட்க முடியுதா என்னவென்று!//

      நெல்லை..... இதற்குதான் சபாஷ்....!

      நீக்கு
    3. ஹை நான் தப்பித்தேன்!! பூசார் என்னை இதற்குச் சொல்லவில்லை!! ஹா ஹா ஹ ஹெ எஹ் ஹெ ஹெ...நான் கேள்வியே கேட்பதில்லை!! பாவம் அவ்வப்போது கேட்கும் கீதாக்கா பானுக்கா மாட்டிக்கிட்டாங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. கீதாவுக்கும் எனக்கும் கேள்வியே வருவதில்லை:)... இன்னும் வயசாகவில்லையோ:)..

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. மூதாட்டி அதுவும் தனது 100 நாள் வேலைத்திட்டத்தில் உழைத்த பணம் 10 ஆயிரம் என்பதற்கு விலை மதிப்பில்லாத உயர்ந்த தொகை...பாட்டி வாழ்க! உங்களைப் போன்றோர் சமுதாயத்தில் இருப்பதால்தான் இச் சமுதாயம் கொஞ்சமேனும் உருப்படுகிறது...

    மனதை நெகிழ்த்திய செய்தி. பானுக்கா மிக்க நன்றி இச்செய்தியை அறியத்தந்தமைக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாவது செய்தியைத் தொடர்ந்த அந்த பாசிட்டிவி செய்தி (புதுக்கோட்டை கொத்தமங்கலம் அருகே.ஆஅலங்குடி..) தூர்வார பாட்டி உதவியவுடன் இரு குழந்தைகள் (அனுஷ்கா!!!!!!!! அனுஷ்கா பெயர் வைத்திருப்பவர்கள் எல்லோருமே!!ஆஆஆ வேண்டாம் பாசிட்டிவ் செய்தியில் கும்மி!!!! ஆனந்த்) தங்கள் சேமிப்பை கொடுத்து உதவியது வாவ் போட வைத்தது. மோட்டிவேஷன்!! இப்படித்தான் இங்கு செய்திகள் வாசிக்கும் போது நம் மனதிலும் நாமும் ஏதேனும் சின்னதாகச் செய்யலாமே என்ற ஓர் எண்ணம் உதிப்பது என்பதே மிகவும் பாசிட்டிவான விஷயம். மோட்டிவேஷன்! எபிக்கு நன்றி.

      குழந்தைகளுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

      லிங்க் சென்றால் உடனே கணினி சோர்ந்து விடுகிறது. டூ மச் மெமரி அதன் மூளையில் ஏற மறுக்கிறது வயதாகிவிட்டதே!! ஹா ஹா ஹா டக்கென்று மூளையில் ஒரு பளிச் மொபைலில் லிங்க் வாசித்து இங்கு கருத்து ஹிஹிஹிஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
  10. அதிரா.... உங்க விமர்சனம் ரசித்துப் படித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல நகைச்சுவையோடு உங்க எண்ணங்களை நேரடியாக எழுதியிருக்கீங்க. வியாழன் பாதி வரை படித்திருக்கிறேன்.

    சிறிது நேரத்தில் பயணம். (கீதா ரங்கன்க்கா. ஜவ்வரிசி பாயாசம் ரெடியா?) இரவோ நாளையோ இல்லை சமயமிருந்தால் பயணத்தின்போது எழுதறேன் தட்டச்சுப் பிழை வரலாம்.

    சாமமானாலும் - மூலம் வடமொழி "ஜாமம் ஆனாலும்" - இரவானாலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீதி படிச்சு முடிச்சுட்டீங்களா நெல்லை?

      நீக்கு
    2. படித்துவிட்டேன். இரவு இல்லைனா நாளை இரவு பதிலெழுதுவேன்

      நீக்கு
    3. ஆஆவ்வ்வ்வ் நன்றி நெல்லைத் தமிழன்... நாங்களும் சாமம் எனத்தான் சொல்லுவோம்ம்ம்:)...

      கீதா ஜ:)வ்வரிசி வாங்கியாச்சோ:).. நெல்லைத்தமிழன் தம்பி(உங்கட முறையில் சொன்னேன்) வருகிறாராம்ம்ம்... போயும் போயும் பாயாசமா கேட்கிறார் கர்ர்ர்ர்:)..

      நீக்கு
  11. //இங்கு வரும் நமக்கு பதில்களையோ அல்லது ஒரு சின்ன வரவேற்போ - ஆசிரியர்களாவது தர வேண்டும்//-- முழுமையா நான் ஒத்துக்கொள்கிறேன். பின்னூட்டம் போட்டால் அதற்கு மறுமொழி தருவதுதான் முறை. இல்லாட்டா வேலை மெனக்கெட்டு கருத்து எழுதாமல் கடந்து போயிடலாம் இல்லை "அருமை", "நன்று", "ரசித்தேன்" என்று சொல்லிடலாம். நான் பொதுவா தொடர்ந்து மறுமொழி இல்லையென்றால் பின்னூட்டம் இடுவதில்லை.

    இடுகையைத் தவிர, பின்னூட்டம், மறுமொழி என்று இருப்பதால்தான் சில தளங்கள் களைகட்டுது. இதனைப் புரிந்துகொள்ளாமல் சிலர் சில தளங்கள்லதான் பின்னூட்டம் போடறாங்கன்னு தவறா நினைப்பது சரியல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லத்தான் நினைக்கிறேன்... சமயங்களில்தான்...

      நீக்கு
    2. ////முழுமையா நான் ஒத்துக்கொள்கிறேன்.///
      ஆஆஆ நன்றி நெல்லைத் தமிழன் நீங்க எங்கள் இனம்:)...
      பின்ன பந்தி பந்தியாக ரைப்பண்ணும் நமக்குத்தானே தெரியும் அதன் வருத்தம் ஹா ஹா ஹா...

      குறையாக இல்லை ஶ்ரீராம்... யாராவது சொன்னால்தானே புரியும் என்பதால் சொன்னேன்.. குறை எதுவும் சொல்லாமலும் எழுதியிருக்கலாம் நான்.. ஆனால் அதனால் உங்களுக்கு என்ன நன்மை..

      நீங்கள் எல்லோரையும் நன்கு கவனிக்கிறீங்க...
      நான் எந்த நாட்களுக்குச் சொன்னேன் என்பதைக் கவனித்தால் புரியும்...

      எங்கேயோ படித்த வரிகள் நினைவுக்கு வருது...
      “நான் செய்யும் அனைத்துக்கும் ஆமாப் போடும் நட்பை விட, அப்பப்ப தட்டிக்குடுத்து தவறை சுட்டிக் காட்டும் நட்புத்தான் எனக்கு தேவை”...

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    அரியலூர் அருகே இருக்கும் இரண்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு வீடு கிணறு அமைப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

    பெண்களின் நோய் தீர்வாக மார்பக புற்றுநோய் கண்டறிய கருவியை உருவாக்கிய விஞ்ஞானி திருமதி சீமா அவர்களுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.

    ஆறு, குளம், தூர்வாரும் நல்ல பணிக்காக தான் கஸ்டபட்டு சம்பாதித்த பணத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவிய திருமதி ராஜம்மாளை பாராட்ட வார்த்தைகளில்லை. அதனை கண்டு தங்கள் சேமிப்பான உண்டியல் பணத்தை மொத்தமாக கொடுத்த குழந்தைகளும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் நல்ல மனங்களுக்கு வாழ்த்துக்கள்.

    வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இன்றைய அனைத்து செய்திகளும் சிறப்பானவை. நன்றி.

    இவ்வார விமர்சன பகுதியை சகோதரி அதிரா அவர்கள் தன்னுடைய பாணியில் கலக்கி விட்டார். சிறப்பான சுவை நிறைந்த தன் எழுத்துக்களுடன், தன்னுடைய இயல்பான நகைச்சுவை பாணியுடனும் இவ்வார விமர்சனம் சகோதரி அதிரா அவர்களின் கைவண்ணத்தில் மிகவும் அருமையாக இருந்தது.படித்து ரசித்தேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும். என் மனம் நிறைந்த நன்றியும். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.... என்னைப்பொறுத்தவரை மார்பகப்புற்றுநோய் செய்தி மிக மிக நல்ல செய்தி. சமீபத்தில் ஒரு உறவை இந்த வகையில் இழந்தது கூட காரணமாக இருக்கலாம்!

      அதிரா கலக்கி விட்டார்தான்... உங்களையும் வம்புக்கு இழுத்திருக்கிறார் போல...

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. //சமீபத்தில் ஒரு உறவை இந்த வகையில் இழந்தது கூட காரணமாக இருக்கலாம்!// என் அம்மாவும்! இப்போவும் எப்போவும் மறக்க முடியாதது.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      /சமீபத்தில் ஒரு உறவை இந்த வகையில் இழந்தது கூட காரணமாக இருக்கலாம்!/

      உண்மைதான்.! நாங்களும் ஒரு உறவை (என் மன்னிக்கு மன்னி) இப்படித்தான் இழந்துள்ளோம். மிக வருத்தமான நிகழ்வு. இதற்கொரு நிரந்தர தீர்வு கிடைத்தால் நல்லதுதான்.!

      அதிரா "சகோதரி" என்ற முறையில் கலாய்த்திருக்கிறார். மிகவும் ரசித்தேன். உண்மைகளை அவர் மனம் திறந்து கூறியமைக்கு பாராட்டலாம்.. விமர்சனம் நன்றாக இருந்தது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. என் அக்காவை 25 வயது இந்த மார்பகப்புற்றுநோய் கொடு போனது.
      யாருக்கு இந்த நோய் வரக்கூடாது என்பதுதான் என் வேண்டுதல்.
      என் அக்கா எனக்கு தோழி, வழிகாட்டி, தெயவம். .

      நீக்கு
    5. கமலா அக்கா, கோமதி அக்கா...

      இவ்வளவு விழிப்புணர்வு இருந்தும் நம் இல்லங்களில் இது நிகழ்வது சோகமான விஷயம். இனியாவது விழிப்புடன் இருக்கவேண்டும்.

      நீக்கு
  13. அதிரா-- உங்க விமர்சனம் வெகு நீளம். உங்க எழுத்து, நகைச்சுவை, படிக்கும்போது அயர்வு தரலை. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    ஶ்ரீராம் கேட்டுக் கேட்டு வாங்கிப் போடுகிறார்"-- உண்மைதான். ஶ்ரீராம் நினைத்தால் அவரே மாதம் இரண்டு சிறுகதைகள் எழுதிடலாம். ஆனாலும் பலருக்கும் இடம் கொடுத்து மிளிரவைக்கணும், தளத்தின் பல்சுவை ரசனை அதிகமாகணும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இதனைச் செய்கிறார்.

    பிளாக் நடத்துவதில் பைசா வரவு கிடையாது, நிறைய நேரம்தான் செலவழியும் (சமயத்தில் வீட்டாரின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர் இருக்கும்). ஆனாலும் நட்புக்காகவும் ரசனைக்காகவும் (இலக்கிய) நிறையபேர் தளங்கள் நடத்தறாங்க. அதிலும் சிலர் காழ்ப்புணர்வோடு பின்னூட்டம் போடும்போது எனக்கு அவை ரசனைக் குறைவாகத் தெரியும். நாமே பின்னூட்டம் போடும்போது தவறுதலா கலாய்த்துடலாம். அதனைக் குறிப்பிட்டால் உடனே சரி செய்துகொள்ள முடியும். ஆனால் ஹர்ட் பண்ணுவதுபோன்ற பின்னூட்டங்கள் தவிர்க்கப்படணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​உண்மைதான் நெல்லை. சமயங்களில் பின்னூட்ட பதில்களுக்கு ஒரு ப்ளோ வந்துவிடும். சமயங்களில் ரொம்ப வறட்சியாக இருக்கும்...

      நீக்கு
    2. நெல்லை ஹைஃபைவ் ஹைஃபைவ்! நான் இன்று பிசியாக இருந்ததால் இந்தக் கருத்தை காலையில் சொல்ல நினைத்து அப்புறம் வரேன் என்று போய்விட்டேன். இங்கு வந்து சரி நாம் போட நினைத்ததை யாரேனும் போட்டிருந்தால் ஹைஃபைவ் சொல்லலாம் என்று வந்தால் நீங்கள் போட்டுருக்கீங்க...

      அப்படியே டிட்டோ செய்கிறேன் ஸ்ரீராம் பற்றி சொன்னதையும், அதன் பின் வந்த பின்னூட்டம் பற்றிய கருத்தையும்...அப்படியே நானும் சொல்கிறேன்.

      மாற்றுக் கருத்து வரலாம் அது சிந்தனையை வளர்க்கும் ஆனால் அதையும் நயம்படச் சொல்லலாம். மற்றும் நீங்கள் சொல்லியிருக்கும் ஹர்ட்டிங்க் கமென்ட்ஸ் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்..அதை முழுவதும் ஆதரிக்கிறேன்..

      கீதா

      நீக்கு
    3. நன்றி நெல்லைத்தமிழன்... இங்கு கும்மி போடும் நாம் எல்லோரும் ஒத்த அலைவரிசையில் இருப்பதால்தான் கோபமில்லாமல்.. அடிகிடி பட்டாலும் :) ஒத்துப் போகிறோம் ஹா ஹா ஹா...

      மனவருத்தம் தரும் பின்னூட்டங்கள் வந்தால் என்ன பண்ணுவது... எங்கள் உறவுக்காரப் பெண்ணைப்போல பலமான ஒரு சத்தத்தில் சிரித்துக் கொண்டே கடந்திடோணும் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  14. கிணற்றுக்கிராமம் பாராட்டுக்குறியது.

    அதிராவின் அதிரடி விமர்சனம் அருமை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. ஸ்காட்லாந்துக்குள்ளேயே கொஞ்ச தூரம் பயணமா? ஏஞ்சலின் ஏற்கனவே சொன்னாரே.. ஸ்காட்லாந்த் என்பதே 5-6 தெருக்கள்தான், அதனாலதான் பிரிஞ்சு போறாங்கன்னாரே... அதைச் சுத்திவரவே சில நாட்கள் ஆகுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? சரி, சரி... அடுத்த மாதம் ஸ்விஸ் போகலாம்னு இருந்தேன். கேன்சல் செய்து விட்டேன்.

      நீக்கு
    2. நெல்லை ஹா ஹா ஹா ஹா...

      ஸ்காட்லாந்து செமையா இருக்கும் ஒரே க்ரீன் தான் மலையும் நதிகளும் சின்ன நீரோடைகள் என்று...என் நாத்தனார் போய்வந்து படங்கள் எல்லாம் காட்டினார். ஏற்க்னவே நான் நெட்டிலும் பார்த்திருக்கிறேன் என் பெரிய மச்சினரின் பெண் அங்குதான் மேல்படிப்பும் படித்தாள். செம ஊரு...அங்கு இயற்கை அதிகம் என்பதால் சுத்திவர நாட்கள் தான் ஆகும்...!!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா ஸ்விஸ்!! இப்ப நான் ஒரு ரகசியம் சொன்னா கண்டிப்பா நீங்க அடுத்த மாதம் ஸ்விஸ் போயிடுவீங்க..அந்த ரகசியம் டாம் அண்ட் ஜெர்ரிக்கு மட்டும் தான் தெரியுமாக்கும் !!! டாம் அண்ட் ஜெர்ரி ப்ளீஸ் அந்த ரகசியத்தைச் சொல்லிடாதீங்க!!!! ஹப்பா ஒரு வழியா கொஞ்சம் ஸ்ரீராமை குழப்பியாச்சு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. //டாம் அண்ட் ஜெர்ரி ப்ளீஸ் அந்த ரகசியத்தைச் சொல்லிடாதீங்க!!!!//

      இந்த எச்சரிக்கை இரண்டு நாட்களுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்!!!! Late...

      நீக்கு
    5. நெல்லைத்தமிழன் , அதிராவாலதான் ஸ்கொட்லாண்ட் என ஒரு நாடு இருப்பதே அஞ்சுவுக்கு தெரிய வந்ததாக்கும்:).. இதில ச்கொட்லாண்ட் பற்றிக் கதைக்கிறாவோ கர்ர்ர்ர்:)..
      பிரித்தானிவில பாதி ஸ்கொட்லாட்.. மீதி இங்கிலண்ட்:).. ஆனா ஸ்கொட்லாண்ட் 6 கோடி மக்கள்... இங்கிலாந்தில?:).... வாணாம் சொல்ல மாட்டேன் .. :) கேட்டால் பயந்திடுவீங்க:)..

      ஆஆஆ என்னாதூஊஊ ஶ்ரீராம் சுவிஸ் க்குப் போகப்போறாரோஒ? ஏன் தேன் மூன் க்கோ...:) ஹையோ பெரும்பாலான மக்கள் இதுக்குத்தான் சுவிஸ் ஸ்கொட்லாண்ட் க்கு வருகினம்:)... ஆனா வயதானோர் போவது இங்கிலாந்துக்கு ஹா ஹா ஹா:)...

      கீதா ரொம் அண்ட் ஜெரி காசிக்குப் பயணம்:)...

      நீக்கு
  16. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம் வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  17. கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சீமா அவர்களின் கண்டுபிடிப்பு அட சூப்பரா இருக்கிறதே என்று சொல்ல வைத்தது. அருமையான விஷயம். குடோஸ் சீமா அவர்களுக்கு!! இது நடைமுறையில் பாமரமக்கள் உட்பட எல்லோரும் (பெண்கள்) பயன்படுத்தும் விதத்தில் வந்துவிட்டால் மிக மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.....அல்லது அந்த வசதி இருக்கும் பொது மையங்கள் வந்தாலும் நல்லதே..ஆனால் அது கமர்ஷியலாக ஆகாமல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நல்ல கண்டுபிடிப்பு என்று எனக்கும் தோன்றியது.

      நீக்கு
  18. அப்பாவி ஞானி மிக மிக அருமையாக ஓர் அலசல் அலசி காய வைத்துக் கும்மி, கோலாட்டத்துக்கு வழி போட்டிருக்கார் ஆனால் கும்மிக்கு இரு கை வேண்டுமே....அவர் பயணத்தில் சரி சரி பரவால்ல நாங்கல்லாம் சேர்ந்து நல்லா வாலைப் பிடிச்சு இழுத்துவிடுவோம். அதிரா நீங்க என்னதான் உங்க செக் க்குக்கு உங்களுக்குப் பதிலா ஆஜராகிக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளச் சொன்னாலும் ஜெர்ரி அவங்க சேம் சைட் கோல் எங்க கூட சேர்ந்து கும்மி அடிப்பாங்க உங்க வாலைப் பிடிச்சு டஃப் கொடுப்பாங்க ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா நடுநடுவே வந்து கலந்து கொள்வேன் என்று சொல்லியிருக்கிறார்.

      நீக்கு
    2. நன்றி கீதா...
      மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஶ்ரீராம் முடியாமல் போச்சு... இல்லை எனில் இன்று எங்கள் புளொக் திருஸ்டி பட்டிருக்கும் ஹா ஹா ஹா...

      நீக்கு
  19. அதிரா இன்று சனி இங்கு செம கூட்டம் போடும்...முதலில் வாசித்து முடிச்சாச்சு. உங்க வழக்கமான ஸ்டைல் எல்லாரையும் கலந்து கட்டி ஓட விட்டு ஹா ஹ ஹாஹஹாஹ...இருங்க இப்ப ஒவ்வொண்ணா வரேன்...கருத்து போட...எத்தனைக்கு போடனு பார்க்கறேன்..கரன்ட் வேற போகுது...திடீர்னு மகனின் ஃப்ரென்ட்ஸ் வருகை...இடையில் வரேன்

    //இங்கு வரும் நமக்கு பதில்களையோ அல்லது ஒரு சின்ன வரவேற்போ - ஆசிரியர்களாவது தர வேண்டும்//

    இதைக் கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன். அப்படி வருவதால்தான் ஓர் ஆர்வம் வரும் எழுதியவரும் பதில் அளிக்க. அதன் பின் வரும் பின்னூட்டங்களில் நமக்கு ஸ்வாரஸ்யம் இருந்தால் அல்லது பதில் சொல்லுவது போன்று இருந்தால் அதாற்கும் பதில் சொல்லிக் கலாய்த்து அப்போதுதான் அது ஸ்வாரஸ்யமாகப் போகிறது...என்பதை நான் மிகவும் ஆதரிக்கிறேன்...

    கீதா
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அப்படிக் கருத்து இடுபவர்களுக்கு நேரமும் இருக்க வேண்டுமே...மீண்டும் பதில் சொல்லி அப்படித் தொடர்வதற்கு....பல சமயங்களில் பலருக்கும் அப்படி நேரம் இல்லாமல் போய்விடுகிறது என்றே தோன்றுகிறது. எனவே ஒரு சில தளங்கள் மட்டுமே அதுவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும் தளங்கள் மட்டுமே போகவும் தோன்றலாம்...பதிவைப் பொருத்து...

      கீதா

      நீக்கு
    2. நேரமும் இருக்க வேண்டும் என்பது சரி... தினமும் பதிவிடும் வேலை இருப்பதால் சற்றே சிரமம்.. ஆனாலும் இது சரியான பதில் இல்லை.. முடிந்தவரை பதில் அளிக்கப்படும்!

      நீக்கு
    3. ஸ்ரீராம் நான் சொன்னது குறிப்பிட்ட தளம்னோ, எபி நோ இல்லை. பொதுவாகவே.

      நாங்க எழுதும் தளத்தில் கூட இப்போ எங்களால் பதிவும் போட முடிவதில்லை துளசி பதிலும் கொடுக்க தாமதமாகிறது..துளசிக்குப்.பிற தளங்களுக்கும் பதில் தருவதில் தாமதம்.

      எனக்குமே இடையில் பல பிரச்சனைகள் என்பதால்தான் பதிவே போடாமல் இருக்கிறேன் ஸ்ரீராம். மனதில் பல எண்ண ஓட்ட்ங்கள் எனவே என்னை ஸ்லோ ஆக்கிவிட்டது.

      இதைப் போன்று பலருக்கும் இருக்கலாமே என்றும் நினைத்துப் பார்த்தேன். அதான்...

      கீதா

      நீக்கு
    4. உண்மை கீதா... பதில் கிடைக்காது எனும் தளங்களில்... பெரிய கொமெண்ட் போட மனம் வருவதில்லை... அது சரியோ தப்போ தெரியவில்லை... :)

      நீக்கு
  20. அதிரா நான் எழுதும் திங்க பதிவு பத்தி சொன்னது ....ஹிஹிஹிஹி...

    மீண்டும் முன்பு போல் போட முயற்சி செய்கிறேன்...எனக்கும் அப்படி எழுதத்தான் ஆசை...

    வேலை அழைக்கிறது வருகிறேன் மீண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தீர்களா... அதிராவே சொல்லிட்டாங்க...

      சீக்கிரம்... சீக்கிரம் அனுப்புங்க..

      நீக்கு
    2. அனுப்பறேன் ஸ்ரீராம். கண்டிப்பாக. படங்கள் எல்லாம் ஆர்கனைஸ் செய்யணும். செய்து பதிவு எழுதணுமே அதுதானே ஸ்லோவாகுது எனக்கு ஹிஹிஹி...கண்டிப்பா வரும்...

      கீதா

      நீக்கு
  21. //மழைநீரை சேமிக்க தேவையான நடவடிக்கைகளில், விவசாயிகள் இறங்க வேண்டும். மழை நீரை கிணற்றுக்கு அருகில் வடிகால் அமைத்து சேகரிக்க வேண்டும்.விளை நிலங்களுக்கு அருகில் பண்ணைக் குட்டையை அமல்படுத்தினாலும், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.//

    பிரிட்டோ ராஜ் கூரியாது நல்ல யோசனை.
    அரியலூர் மாவட்ட மக்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய வழக்கங்களை நாம் முன்னேறாத தன்மை என்றுநினைக்கிறோம். கிணறுகளை மூடி விட்டோம்...

      நீக்கு
    2. எதில் முன்னெற்றம் வேண்டும் என்பதில் தவறியதால்தான் ஸ்ரீராம். பழைய வேளாண்மை, தண்ணீர் பராமரிப்பு, சேமிப்பு இவை எப்போதுமே எந்தக் காலத்திற்கும் கை கொடுக்கும் விஷயங்கள். சென்னையில் மாமியாரின் வீட்டில் உள்ள கிணற்றிற்கு அத்தனை மழை நீரும் (??????) போய்ச் சேருவது போல் வடிவமைத்திருக்கிறார்கள். ஆனா பாருங்க சென்னைல மழையே இல்லை!!!!! வெள்ளம் வந்த போது கிணற்றில் நாமே தொட்டியில் இருந்து எடுப்பது போல தண்ணீர் நிரம்பி வழிந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் தொடங்கி இப்போது வறண்டு....

      கீதா

      நீக்கு
    3. இனியாவது விழித்துக்கொண்டு திருந்தினால் சரி...

      நீக்கு
  22. , விஞ்ஞானி, சீமா பற்றியும் அவர் உன்னதமான கண்டுபிடிப்பு பற்றியும் உங்கள் முகநூல் பகிரவை படித்து விட்டேன். அவருக்கு வாழ்த்துக்கள்.
    இருப்பவர்களுக்கு கொடுக்க மனம் இல்லாத போது தான் கஷ்டப்பட்டு வேலை செய்து பேரன் படிப்புக்கு வைத்து இருக்கும் பணத்தை ஊர் நலனுக்கு கொடுத்து இருப்பது மகத்தானசேவை. ராஜம்மாள் அவர்கள் வாழ்க வளமுடன். நலமுடன்.

    பதிலளிநீக்கு
  23. அஆவ் எல்லாருக்கும் சனிக்கிழமை வணக்கம்ஸ் :) இருங்க பதிவை படிச்சிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  24. ///வானம் பார்த்த பூமியான இக்கிராமத்தில், வானம் பொய்த்து, கடும் வறட்சி நிலவும் இப்போதும், ஊர் முழுக்க வாழை, எலுமிச்சை, கொய்யா, கேந்திப்பூக்கள், சம்பங்கி, பலா, மா, முந்திரி என, விவசாயம் நிறைந்து, பசுமையாக காட்சியளிக்கிறது.//

    ஆஹா மனம் மகிழ்கிறது .உண்மையான பாசிட்டிவ் கிராமம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிராமங்களில்தான் உயிர் இருக்கிறதுபோலும்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் கிராமங்களில்தான் உயிர் இருக்கிறது இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள் தான். காந்தியன் எக்கனாமிக்ஸ் நான் மிகவும் ரசித்து வாசித்தது ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  25. நான் சமீபத்தில் எங்கள் கிராமத்திற்கு சென்ற பொழுது பல வீடுகளில் கிணறுகள் தூர்க்கப்பட்டிருந்ததைப் பார்த்து மனம் வருந்தினேன். அரியலூர் மக்களின் பழக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களிடையே விழிப்புணர்வு பரவ வேண்டும் பானு அக்கா.

      நீக்கு
  26. செய்திகள் அனைத்தும் அருமை...

    விமர்சனம் கலக்கல்...

    பதிலளிநீக்கு
  27. விஞ்ஞானி சீமாவின் கண்டுபிடிப்பு மிகவும் உபயோகமானது. தன் எளிய சம்பாத்தியத்தில் சேமித்த பணத்தை தூர்வாருவதற்காக வழங்கிய மூதாட்டியும், அவரைத் தொடர்ந்த இரு பள்ளிக் குழந்தைகளையும் மனமார பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. அதிராவின் விமர்சனம் அவர் வழியில் அதகளம்!

    பதிலளிநீக்கு
  29. // ஆரம்ப நிலையிலேயே, புற்றுநோய் அபாயத்தை கண்டுபிடிக்க முடியும் //

    நம் நாட்டு மகளிர்க்கு மிக அவசியம் சீமா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பாதித்ததை மக்கள் நலனுக்கு கொடுத்த ராஜம்மாளின் நல்லமனம் வாழ்க .
    கொள்ளையனிடமிருந்து நகையை மீட்டுக்கொடுத்தவர்களுக்கு பாராட்டுக்கள் .
    சந்தோஷமாயிருக்கு ராஜம்மாளை பாராட்டி ஒரு நொடி பாவம் அந்த மூதாட்டி ஏழ்மையிலும் பொது நலனுக்கு தந்தார் என்று நினைக்கும்போதே அடுத்த செய்தி சுரேஷ் அனுஷ்காவின் செயற்கரிய செயல் வாவ் கிரேட் .பெரியோர்கள் பலருக்கு பாடம் .நல்லா இருக்கணும் குட்டீஸ்
    அனைத்து செய்திகளும் அருமை

    பதிலளிநீக்கு
  30. ஆஆ இன்னிக்கு ரிவ்யூ எங்க ஸ்கொட்லான்ட் பூனையா ??? ஆவ் வந்துட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... நீங்கள்தான் அதிரா பேசிய கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தீர்கள்.... தெரியாதா?!!!

      நீக்கு
    2. ஹஆஹாஆ :) அது ஸ்ரீராம் எங்க தலைவி ஒன்றிரண்டு மீட்டிங்கில் பேசினா நினைவிருக்கும் :) இவங்கதான் இடைவெளியில்லாம உரையாற்றங்களே அதான் குழம்பிட்டேன்

      நீக்கு
  31. //ஆனா இப்போ அவ சமைப்பதில்லையாம் வீட்டில்:)) ஹா ஹா ஹா.. //அநியாயமா இல்லையோ!இந்த வெயிலில் வெந்து கொண்டேசமைக்கிறேனாக்கும்! வேண்டாம்னு தான் மாமா சொல்றார். ஆனால் சாப்பாடு வாங்கினால் அது சாப்பிட முடியறதே இல்லை. அதில் உள்ள காரம் இப்போல்லாம் அவருக்கே ஒத்துக்கறதில்லை! நானோ காரம் பக்கமே போக யோசிப்பேன். நிதானமான காரம் தான். இப்போல்லாம் ஊறுகாய் எதுவும் சாப்பிடுவதில்லை. வெங்காயம் நறுக்கி உப்புப் போட்டுக் கலந்து கொண்டு அதான் தொட்டுக்க! தேங்காய் போட்ட கறி என்றாலோ பொரிச்ச கூட்டு என்றாலோ சாப்பிடுவேன்.நோ வதக்கல்! நெஞ்சை எரிய ஆரம்பிக்குது! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... மனதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. அதுவும் அடுப்புக்கு அருகில் இந்த வேகாத வெயிலில் இருப்பது கஷ்டம்.

      நீக்கு
    2. இன்று என் பாஸ் விரதம். நான் மோர்சாதம் போதும் என்று சொல்லி விட்டேன். தொட்டுக்கொள்ள காய்ந்த நார்த்தங்காய்!

      நீக்கு
    3. இதில் என்ன வருத்தம் நெ.த. மென்மையான மனசு உங்களுக்கு! ஒரு காலத்தில் இந்த மாதங்களில் தான் உறவினர் கூட்டம் வரும்! அடுப்படியில் நின்று கொண்டே இரண்டு பக்கமும் தோசைக்கல்லைப் போட்டுக் கொண்டு 70,80 தோசைகள் வார்த்தாகணும். உதவியெல்லாம் கிடைக்காது! :))))) என்னால் முடியலையேனு சொல்லக் கூட முடியாது! இப்போ மாமா தோசையே பண்ணாதேனு சொல்லிடறார். அது போதாதா? முடிஞ்சப்போ செய்து சாப்பிட்டுக்கலாம். முடியலைனா சாதமே காலம்பரேயே வைச்சுட்டு ராத்திரிக்கு மோர் சாதமா சாப்பிட்டுக்கலாம்.

      நீக்கு
    4. நான் விரதம் இருந்தால் அவரும் இருந்துடறேன் என்கிறார். ஆகவே இருவருக்குமாகச் சேர்த்து ஏதேனும் எளிமையாச் செய்துடுவேன். பொங்கல் மாதிரி. அல்லது 2,3 சப்பாத்திகள் தொட்டுக்கத் துவையல் அல்லது வெஜிடபுள் ஊறுகாயுடன். நான் தயிரே தொட்டுக்கொண்டு விடுவேன்.

      நீக்கு
    5. இரவு நான்கு சப்பாத்தி... ஜாம்... பேசாமல் ஊறுகாய் தொட்டுக் கொண்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது! ஒரு காலத்தில் குருமா இல்லாமல் சப்பாத்தி சாப்பிடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்...!

      நீக்கு
    6. கீசா மேடம்... நான் சமையல் செய்யும் நாட்களில், பெண்ணுக்கு கையில் டிஃபன் கொடுக்கமாட்டேன் (அதுக்கு 4 மணிக்கு எழுந்து பண்ணணும்). காலை சமையல், மதியம் அனேகமா மோர் சாதம், இரவு அரிசி உப்புமா/தோசை/கரைத்த தோசை போன்றவை. அதுக்கே எனக்கு நாக்கு தள்ளிடும் (ஒரு வேளை சமைத்து, பிறகு பாத்திரம் அலம்பி, அக்கடான்னு உட்காரும்போது அடுத்த வேளைக்கு என்ன செய்ய என்று தோணும் அயர்ச்சி). இதுல வெயில் காலம் இன்னும் கஷ்டம்.

      நீங்க சொல்லும்போதுதான், நாங்க வந்தபோது இ ச தோசை வார்த்துப்போட்டது நினைவுக்கு வந்தது. நல்லவேளை அது குளிர்காலம்..

      நீக்கு
  32. செம அதிரடி. கல கலக்கிறது.

    பதிலளிநீக்கு
  33. / கேள்வியின் நாயகி” எனும் பட்டத்தைச் சூட்டி, கையிலே ஒரு மஞ்சள் என்வலப் கொடுத்து, அதனுள் 99,999.00 பவுண்டுகளுக்கான செக் உம் வைத்துக் குடுக்கிறேன்//
    கர்ர்ர்ர்ர்ர் :) என்னோட கர்ர்ர்ர் கௌதமன் சாருக்கு மட்டுமே புரியும் :)

    இது மட்டும் இப்போ பார்த்து பதில் சொல்றேன் மற்றவற்றிற்கு அப்பப்போ வரேன் .வெளியே பிரயாணம் வந்து கும்மி அடிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் பயணமா? அடடே....

      நீக்கு
    2. ஓ ஏஞ்சல் ஃபார்ம் லியா சூப்பர்....நம்ம ஃப்ரென்ட்ஸ்கு எல்லாம் ஒருஹக் எங்க சார்பில் கொடுத்திடுங்க...அந்த உங்க பெட் ஆடார்!! பாவமா இருந்தாங்களே அவங்களுக்கு ஸ்பெஷல்....

      கீதா

      நீக்கு
  34. எங்க தலைவியின் விமர்சனம் அட்டகாச கலக்கல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மியாவ் ..நேர்கொண்ட பார்வையில் விமர்சனம் மிளிர்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சலின்— பின்னூட்டம் நீங்க எழுதணும். அதிரா எழுதி அனுப்பினதை காபி பேஸ்ட் செய்யக்கூடாது. ஓவர் ஜால்ராவா இருக்கு... ஹா ஹா

      நீக்கு
    2. ஒருவேளை அதிராவும் ஏஞ்சலும் ஒரே பயணத்தில் அருகருகே இருக்கிறார்களோ நெல்லை?

      நீக்கு
    3. Nooooo tharsamayam naan aadu meipathil busy 😀😀😀

      நீக்கு
  35. //பானுமதி அக்கா போட்டிருக்கும் குறிப்பு “5 ஸ்டார்” கேக்:).. ஆனா ஸ்ராரைக் காணம்:))// அதிரா நீங்கள் மைசூர்பாக்கில் மைசூரையும்,ரசகுல்லாவில் ரசத்தையும் தேடுவீர்களோ? ஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஆ :) பானுக்கா சரியா கண்டுபிடிச்சிட்டாங்க :)

      நீக்கு
    2. பானுக்கா ஹா ஹா ஹா பாருங்க செம டஃப் கொடுத்துருக்காங்க பூஸாருக்கு.. ஏஞ்சல் பூஸார் வாலைச் சுருட்டி பதுங்கி கட்டிலுக்கடியில் இருப்பாங்க பாருங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  36. சோட் அண்ட் சுவீட்க்குப் புகழ் பெற்றவர் பானுமதி அக்காதான்:), கதையாகட்டும், சமையல் குறிப்பாகட்டும்.. பின்னூட்டமாகட்டும்:)).. ஆனா வீடியோவில மட்டும் யாருமில்லாமல் தனிமையிலேயே 20 நிமிசம் பேசுறா ஹா ஹா ஹா:)). ஹாஹாஹா, சிரித்து மாளவில்லை அதிரா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ரசித்தேன் அதை... அதே போல கமலா அக்கா பேச எழுவது போலவும், அவரை அமர்த்தி விட்டு இவர் பேசுவது போலவும் வருவதையும் ரசித்தேன்!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஆமாம்.. நானும் இந்த இடத்தை ரசித்தேன். "வணக்கம் சகோதரி" என்ற வுடனே அதிரா சகோதரி (சகோதரி. என்பது என் முத்திரையாகி (முத்திரை மோதிரம் மாதிரி) விட்டது. தவிர்க்க இயலவில்லை.) என்னை ஏதோ கலாய்த்திருக்கிறார் என படித்து வரும் போது நகைச்சுவையாக எழுதியிருப்பதைப் கண்டதும் நானும் சிரித்து விட்டேன். விமர்சனம் மிக நன்றாக எழுதியுள்ளீர்கள் அதிரா சகோதரி..(மறுபடியும்.! ஹா ஹா ஹா) பல இடங்கள் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. ஒவ்வொரு நாளைய பதிவுக்கும் விமர்சிக்கும் முன், முன்னோட்டமாய், அந்தந்த நாளைப்பற்றி விமர்சித்த முறையும் நன்றாக இருந்தது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  37. ஆஆஆ நேக்கு நெஞ்சு நடுங்குது கால்கள் பதைக்குது கை துடிக்குதே ஆனா மிடியல்லியே மன்னிச்சுக்கோங்கோ வருவேன் நன்றி எல்லோருக்கும்

    பதிலளிநீக்கு
  38. அதிரா...

    சனிக்கிழமை செய்திகள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதற்கு கீதா சொல்லியிருப்பது சரியான பதில். செய்திகளின் நிரூபகத்தன்மைக்காக லிங்க். அதுமட்டுமல்லாமல் அவர்களது செய்தியை நாம் திருடுவது போல ஆகக்கூடாது என்னும் காப்பிரைட் பிரச்னைக்காகவும் லிங்க். சில செய்திகளை சிலர் அறிந்திருக்கலாம். ஆனாலும் நல்ல செய்திகளை ஒரே இடத்தில் பார்க்க ஒருவாய்ப்பாகவும், ஒரு தொகுப்பாகவும் இருக்கும்.

    ஞாயிறாகட்டும், திங்கள், செவ்வாய் ஆகட்டும் முடிந்தவரை பதிலளிக்கிறோம். பதில் அளிப்பதுதான் முறை என்பதையும் அறிந்துள்ளோம். தவிர்க்க முடியாத சில சமயங்களில் விட்டுப்போய் விடுகிறது. செவ்வாய்ப் பதிவுகளில் கதை எழுதியவர் வந்து பதில் அளித்தால் சிறப்பு. இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. பொதுவாக நாங்கள் வரவேற்று விடுகிறோமே...

    பதிலளிநீக்கு
  39. நேற்று பகலில் தூங்கவே இல்லை...இரவு துபாய் விமான நிலையத்துக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது 3.30...

    இமைகள் மூடாதிருக்க ஒத்துழைக்க வில்லை..

    4.30 வரையில் மிக சிரமத்துடன் விழித்திருந்து எபியின் கதவுகள் திறந்ததும் நல்லதாக நாலு வார்த்தைகள்...

    அதிரடியின் அதிரடிகளைக் கண்டு
    ஆகா... என்றிருந்தது...

    அதையும் சொல்லி விட்டு கண்ணயர்ந்து
    இப்போது மீண்டும் வந்திருக்கிறேன்...

    வளர்க எபி!..
    வாழ்க தமிழ்ச் செல்வி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க துரை செல்வராஜூ ஸார்...

      துபாய் விமான நிலையம்..?

      நீக்கு
    2. %//வாழ்க தமிழ்ச் செல்வி!./%
      Ithai party enakku slight chest ache saaneeee mudiyalai

      நீக்கு
    3. இப்போதான் கொஞ்சம் புரிஞ்சிருக்கு...

      ஆமா...
      அது யாரு தமிழ்ச் செல்வி!?..

      இந்த வயசுல அன்ணனுக்குப் புத்தி இப்படியாப் போவணும்?...

      நீக்கு
    4. ஹாஹாஆ :) அப்போ துரை அண்ணா அதிரடியை சொல்லலியா :) இப்போ தான் நெஞ்சுக்கு நீதி :) அது நிம்மதி

      அப்போ தமிழ்ச்செல்வி யாரா இருக்கும் :))

      நீக்கு
    5. //அப்போ தமிழ்ச்செல்வி யாரா இருக்கும் :))//

      சிவகார்திகேகேயனைத்தான் கேட்கணும் ஏஞ்சல்...

      நீக்கு
    6. மெயிலில் இந்த அபுரியைத் தேடிகிட்டு மெதுவா வர்றேன்! எங்கே இருக்குன்னு தேடிகிட்டே வந்து....

      இதோ இருக்கு...

      கீர்த்தி சுரேஷைத் பார்த்து சிகா பாடும் பாடல் "வாடி என் தமிழ்ச்செல்வி..." படம் ரெமோ?

      நீக்கு
    7. ஓஹோ :) நான் லேட்டஸ்ட் படமெல்லாம் பார்ப்பது வெகு அபூர்வம் .அதான் தெரில :) ரெமோ பார்க்கலை சிவாது மெரினா அப்புறம் வ.வா .சங்கம் வேலைக்காரன் தான பார்த்தேன்

      நீக்கு
  40. ஆயினும்,

    இந்த விமர்சனப் பகுதி ஆரம்பிக்கப் பட்டிருப்பதே எல்லோர் பார்வையையும் தெரிந்து கொண்டு மேம்படுத்த முடிந்தவற்றை மேம்படுத்தத்தான். எனவே தயங்காமல் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  41. பதிவுகளுக்குப் பின்னூட்டமென்பது மொய்க்கு மொய் தான் என்று துணிச்சலோடு சொல்லும் விமரிசனம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பதிவுலக வழக்கம் ஜி எம் பி ஸார்.

      ஆனால் அதிரா சொல்லியிருப்பது வேறு.

      அளிக்கப்படும் பின்னூட்டங்களுக்கு பதிவு போட்டவர்களின் பதில், அக்நாலெட்ஜ்மென்ட்.

      நீக்கு
  42. ஆஆஆ என்னா நடக்குதூஊஊஉ என் செக் ஒழுங்கா இன்னும் இங்கின வரேல்லைப்போல ... இந்த மாதம் அவவுக்கு சலறி கட்ட்ட்ட்ட்ட்ட் ஜொள்ளிட்டேஏஏன்ன்ன்ன்....
    ஆஆஅ எஞசின் ஸ்ராட் ஆகுதே... அனைவருக்கும் நன்றி... வருகிறேன் பதில்தர.... இப்போ மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிச்சாப் போச்சு... அப்புறமா வாங்கி அதிரா...!!

      நீக்கு
    2. அப்புறமா வாங்க என்று படிக்கவும்...

      ச்சே...
      என் அவசரத்தை உபயோகப்படுத்திகிட்டு கூகுள் அப்பப்போ காலை வாரி விட்டுடுது!

      நீக்கு
    3. ஹலோவ் மியாவ் ஆடு மெய்ச்சி கோழி மேய்ச்சி ஆட்டுகுட்டிஸ் கூட விளையாடிட்டு இப்போ கொஞ்சம் முன் தான் வந்தேன் .வந்ததும் மீ கமெண்ட்டிங் :)

      நீக்கு
    4. அப்பாடி... இதெல்லாம் அதிராவுக்கு... நான் பதில் சொல்ல வேண்டாம்!

      நீக்கு
  43. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்--- னாலே கொட்டாவி தான். எதுக்காக அதிரா எக்கு தப்பு தெரியாம இதை அடிக்கடி யூஸ் பண்ணறாங்கங்கறன்னு அதை பாக்கும் போதெல்லாம் நெனைச்சிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///mostly used by girls to describe someone or something cute or sweet.. example- Guy- Dear Smiley this flower is for you. Smiley-Aww!!!so nice of you dear.///

      நீக்கு
    2. அது அதிரா பாணி ஜீவி ஸார்...!

      கொட்டாவியும் உற்சாகமாகி விடும்!

      நீக்கு
    3. :) அது aaw வந்து இங்கே ஸ்கூல் கேர்ள்ஸ் யங் லேடிஸ் எல்லாரும் சொல்லும் வார்த்தை choo chweet மாதிரி ..வாவ் ஆவ் ஆனது :

      நீக்கு
    4. அப்பாடி... இது ஜீவி ஸாருக்கு... நான் பதில் சொல்ல வேண்டாம்! ஹிஹிஹி....

      நீக்கு
    5. //வாவ் ஆவ் ஆனது ://

      ஆஹா! எத்தகைய கண்டுபிடிப்பு இது! கன்வின்ஸ் ஆனேன்.

      நீக்கு
  44. குழந்தைகள் பெரியவர் ராஜம்மாள் அவர்களைப் பார்த்து உதவியது மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஈரமனது உடைய இவர்களை பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும். மண் குளிர வேண்டும் வானம் இறங்கி வர வேண்டும் இவர்களை பாராட்ட.
    இளைஞ்ர்கள் பணி பாரட்டவேண்டிய செயல், வாழ்த்துக்கள்.
    அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள் வழங்கிய உங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    உறவினர் வருகை அதனால் மீண்டும் இப்போதுதான் வர முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா...

      எங்கள் நண்பர்களில் ஒருவர் வீட்டுக்கு உறவினர் வருகை தர இருந்தார்களாம். இங்கே வரவேணாம்... எங்களுக்கே தண்ணீர்க் கஷ்டம்.. வெளியில் தங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்களாம்... சொன்னார்கள்!

      நீக்கு
  45. அதிராவின் விமர்சனம் அருமை.
    அதிரா சொன்னது போலவே ஆவலாக அதிரா என்ன சொல்கிறார் என படித்து விட்டேன் காலையில்.
    ஆனால் தம்பிபெண் மாப்பிள்ளை விருந்து வந்து இருந்தார்கள் வீட்டுக்கு. தம்பி குடும்பம் என் சம்பந்தி அம்மா கலயாணம் விசாரிக்க வந்து விட்டார்கள், அதனால் கருத்து இட வர முடியவில்லை.

    ஒரு வார பதிவை மிக அழகாய் பொறுமையாக தன் கருத்தை ஆணித்தரமாய் தனக்கே உரிய முறையில் எடுத்து சொல்லி விட்டார்.


    பதிலளிநீக்கு
  46. இந்த வெள்ளிப் போஸ்ட் பார்த்து, நான் பார்த்த படங்கள் பல உண்டு.//

    நான் என் விமர்சனத்தில் குறிப்பிட்டேன், அதிராவை பழைய படங்களை தேடிப் பார்க்க வைத்தநாள் என்று.

    பதிலளிநீக்கு
  47. சோர்ந்து போயிருப்போரெல்லாம், ஸ்ரீராம் கேட்டுவிட்டாரே என உசாராகி எழுதி அனுப்புகின்றனர்.. இதன் மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிஞ்சிருக்கும் திறமைகள் வெளியே வருகிறது..

    உண்மைதான்.

    குறிப்பு அனுப்புவதற்காகவே பலர் வீட்டில் சமைக்கின்றனர்:)) இல்லை எனில் ரேக் எவே தானே ஹா ஹா ஹா ஹையோ முறைக்காதீங்கோ:)) நான் அஞ்சுவைச் சொன்னேன்:)).//


    சமைப்பதை அனுப்ப வேண்டும் என்றால் படம் எடுத்து ஆக வேண்டும், அந்த சமையலை செய்யவேண்டும் தானே!
    அதிரா போல் யாராவது சமைத்து கொடுத்தால் உட்கார்ந்து சாப்பிடும் காலம் இப்போது போய் குறிப்பு கேட்டால் என்ன செய்வோம் அதிரா.
    எங்கள் இரண்டு பேருக்கு சமையல் செய்ய மலையை பிரட்டும் அலுப்பு ஏற்படுகிறது. யாராவது உறவினர், நண்பர்கள் வந்தால் உடலுக்குள் தெம்பு பாய்ந்து வேலை செய்ய முடிகிறது அது என்ன மாயம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரமம் புரிகிறது கோமதி அக்கா.. அதே நிலைதான் இங்கும்!

      நீக்கு
  48. மேடை பேச்சு களைப்பை போக்க பன்னீர் சோடா நன்றாக இருக்கும் அஞ்சு கொடுத்தாரோ?
    இடை இடையே வேறு கேட்டு இருக்கிறீர்கள்.
    அஞ்சு விமர்சனம் செய்யும் போது நீங்கள் வந்து அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் அதிரா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கோமதி, அன்பு கீதா, இந்த வெய்யிலில் நீங்கள் அவதியுறுவது வருத்தமாக இருக்கிறது.
      பல் வேறு தொந்தரவுகளால் சமையல் பக்கம் போவதில்லை.
      எல்லோரும் செய்வதை ரசித்துப் படிக்கிறேன்.

      நீக்கு
    2. வணக்கம் அக்கா, வெய்யிலில் டேபிள் ஃ பேன் வைத்து இருக்கிறேன் இடை இடையே அதில் காற்று வாங்க்கி கொள்வேன் , இருந்தாலும் வெயிலில் சமைப்பது கஷ்டம். அப்புறம் சமைப்பதிலும் அலுப்பு வந்து விட்டது.
      மனதை உறசாகப்படுத்தி எழுப்பினால்தான் வண்டி ஓடுது.

      நீக்கு
    3. https://4.bp.blogspot.com/-YCvAdNyRJbE/XORsRwnhiSI/AAAAAAAAQc4/dj8iqstTSKk_Gt6BI_3g1rqaxdl7-gDjQCLcBGAs/s400/11.jpg

      இந்தாங்க கோமதி அக்கா பன்னீர் சோடா அடுத்த ரவுண்டுக்கு கொண்டாறேன் இப்போ ஐஸ் சாப்டுங்க

      நீக்கு
    4. ஓ ! ஏஞ்சல் அதிராவின் ஜஸ் களைப்பை போக்கி விட்டது.
      அடுத்த ரவுண்டுக்கு பன்னீர் சோடாவா? நன்றி நன்றி.

      நீக்கு
  49. அஞ்சூஊஊஊ இண்டைக்கு ஶ்ரீராம் புல்ல்ல் ஸ்ரெந்த்ல இருக்கிறார், மேசக்கு கீழ சமோசா ஒரு பொக்ஸ் ஒளிச்சு வச்சிருக்கிறேன்.. அதில ரெண்டு எடுத்து ஶ்ரீராமுக்குக் குடுங்கோ... நன்றி ஶ்ரீராம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமோஸாவா? இந்த வெயிலுக்கு சரிப்படுமா? ஐஸ்க்ரீம் இல்லையா? இல்லாட்டி ஒரு 7 அப்? லிம்கா?

      நீக்கு
    2. ஐஸ்க்ரீம் :) இந்தாங்க ஸ்ரீராம் :) நானே செஞ்சது அந்த ஐஸ் மேலே சத்தியம்

      https://4.bp.blogspot.com/-YCvAdNyRJbE/XORsRwnhiSI/AAAAAAAAQc4/dj8iqstTSKk_Gt6BI_3g1rqaxdl7-gDjQCLcBGAs/s400/11.jpg

      நீக்கு
    3. ஏஞ்சல்...

      நன்றி.

      அதை எடுக்கும்போது அதன் ஓரத்தில் இது அதிரா பக்கத்தில் திருடியது என்று இருந்ததை நான் படிக்கவில்லை!

      நீக்கு
    4. grrrrr :) sriram

      http://www.mykidsite.com/wp-content/uploads/2015/04/Angry-Baby-In-White-Dress.jpg

      நீக்கு
  50. //[கோமதி அக்கா பொஸிடிவாக மட்டுமே ரிவியூ குடுத்திருக்கிறா:), நெகடிவ் பகுதியை அவ தொடவில்லை:)))]//

    நானும் ஞாயிறு போகும் ஊர்களின் விவரங்கள் கேட்டு இருந்தேன் அதிரா, அப்புறம் கீதாரெங்கனின் கருத்தையும் பகிர்ந்து இருந்தேன். அதனால்தான் போன ஞாயிறு அண்ணா நிறைய விஷயம் சொல்லி இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  51. // ஒருவர் வந்து நமக்குக் கொமெண்ட்ஸ் போடுகிறார் எனில், அவர்களுக்காக நாமும் ஒரு பதிலாவது கொடுத்தால்தானே மகிழ்ச்சி. எதுக்காக அவர்கள் நம் பக்கம் வருகிறார்கள்? நமக்காகத்தானே? இதை அனைத்து புளொக்கேர்ஸ் உம் கவனத்தில் கொண்டால் மகிழ்வேன்...:).//

    கவனிக்க வேண்டிய விஷயம் தான்.

    அருமையான கருத்து.

    நான் நினைத்துக் கொள்வேன் எப்படி 'எங்கள் ப்ளாக்' தினம் பதிவு போட்டு அத்தனை பேருக்கும் வணக்கம், நன்றி, மற்றும் கருத்துக்கள் போடுகிறார்கள் என்று வியப்புதான். அதுவும் ஒரு சாதனைதான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எப்படி 'எங்கள் ப்ளாக்' தினம் பதிவு போட்டு அத்தனை பேருக்கும் வணக்கம், நன்றி, மற்றும் கருத்துக்கள் போடுகிறார்கள் என்று வியப்புதான். அதுவும் ஒரு சாதனைதான்.//

      புரிதலுக்கு நன்றி. அதனாலேயே சில சமயங்களில் சுருக்கமான பதில்கள்!!!

      நீக்கு
    2. அதே அதே :) இந்த நல்ல விஷயத்தை எங்க தலைவி கிட்டயிருந்தே கற்றுக்கொண்டேன் .
      ஆரம்ப நாளில் என் பக்கம் போஸ்ட் போட்டுட்டு எனக்கு கமெண்ட் கொடுக்கும் மற்றும் ஃபாலோயர்ஸ் ஆனவர்கள் பக்கமே ஓடுவேன் பதிலளிக்க மறந்து

      நீக்கு
  52. //ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் இப்படி ஒவ்வொருவரையும் கேட்டு வாங்குவதால்தான், வலையுலகம் கொஞ்சமாவது உற்சாகமாக இருக்கிறது,//
    அப்படியேவழிமொழிகிறேன் :) நூற்றுக்குநூறு உண்மை

    பதிலளிநீக்கு
  53. /// ந்தப் போஸ்ட்டுக்கு அஞ்சு மட்டும் வரவும் இல்லை கருத்தும் சொல்லவில்லை என, அங்கு அதிரா உட்பட நாமெல்லோரும் மிகவும் மனம் வருந்தி //

    எனக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் வர முடியாதது கஷ்டமே ..நான் இரவு வந்து பார்க்கும்போது லேட்டாகிடுது அப்படியே விட்டுடுவேன்

    பதிலளிநீக்கு
  54. ///இல்லை எனில் ரேக் எவே தானே ஹா ஹா ஹா ஹையோ முறைக்காதீங்கோ:)) நான் அஞ்சுவைச் சொன்னேன்:)).//

    கர்ர்ர் வெளி சாப்பாடெல்லாம் நான் அனுமதிப்பதில்லை :) ஒன்லி ஹோம் மேட் :)

    பதிலளிநீக்கு
  55. கொஞ்சக்காலம் கீதாதான் மீ ட 1ஸ்ட்டா வருவா:)).. இன்று மலை என்றதும் துரை அண்ணன் கீதாவைக் கடலிலே தள்ளிப்போட்டு முந்திக்கொண்டார்ர்.. அதிரா செய்வதை:)) துரை அண்ணன் செய்திருக்கிறார்.//

    ஹா ஹா ஹா அதிரா முதல்ல அது நீங்கதான்னு நினைச்சுப் போட்டேன்...துரை அண்ணா பாவம் அவர் தள்ளவே மாட்டாராக்கும். நான் கீழ விழ இருந்தாலும் ...ஹையகோ என் தங்கை கீழ விழாமல் பொன்னார் மேனியனே காப்பாற்றய்யா என்று சொல்லி தேவாரம் பாடி கைதூக்கி மலை ஏற்றி விட்டிருப்பாராக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா..

      சீர் என்றும்
      சிறப்பு என்றும்
      செய்ததில்லை..

      தங்கை தளம் தேடி
      தகவு ஒன்றும்
      புரிந்ததில்லை...

      ஆனாலும்
      என்மீது எத்தனை பாசம்...
      என்றென்றும் வளரட்டும்
      அன்பின் நேசம்...

      அண்ணன் என்று
      ஆகிவிட்டால் அகல்வதில்லை..
      அன்பு அன்றி யாதொன்றும்
      புகல்வதில்லை...

      அண்ணன் தங்கை
      பாசம் ஒன்றே உயிரின் வாசம்..
      அதுவன்றோ பாரதத்தில்
      தென்றலாக வீசும்....

      நீக்கு
    2. அன்புச் சகோதரி கீதாவுக்கு நன்றி..

      அண்ணன் ஆனவன் தள்ளி விடுவானா...
      தள்ளி விடுபவன் அண்ணன்
      ஆவானா!?...

      கீதாவின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. ஓ... பாட்டாவே படிச்சுட்டீங்களா....

      அப்போ நானும்...

      ம்ம்ம்......

      அன்பெனும் நதியில் நீந்தும் அண்ணன்தங்கை
      பொங்கிடும் உறவு நட்பு என்றும் வற்றா கங்கை
      எங்கள் தளம் செய்த புண்ணியம்..
      தங்கள் யாவரின் அன்பும் நட்பும்
      குன்றாது என்றும் கலகலக்க
      மன்றாடுகிறேன் இறையை...

      நீக்கு
    4. சகோ துரை செல்வராஜூ அவர்கள் கவிதை அருமை

      ஆஹா ஸ்ரீராம் ! கவிதைக்கு கவிதையா?(பாட்டுக்கு பாட்டு போல்)
      இரண்டு கவிதையும் தேனும் பாலும் போல் அன்பு என்ற வெள்ளத்தில் ஓடோடி வரும் அதிராவுக்கு மகிழ்ச்சியை தரும்.

      நீக்கு
  56. இந்த வார நல்லமனிதர்களும் சுவாரஸ்யமானவர்கள். நம்பர் 3 மூதாட்டியும் அவரை 5-ல் தொடர்ந்த வாண்டுகளும் வாழ்த்துக்குரியவர்கள்.

    அந்தப்படத்தில் கருப்பு மாடு பசியோடு நிற்க, இந்த ஐயாவும் அம்மாவும் அதை முறைப்பதேன்!

    அதிரா தன் பாணியில் விளாசியிருக்கிறார் இந்த ரிவ்யூ சனியை! வெள்ளிக்கிழமைபற்றி சொல்கையில், ’’..கீதா, ஏ அண்ணன், துரை அண்ணன்.. எல்லோரும் களம் இறங்கி சிக்ஸர் அடிப்பினம்:)).. நானும் அஞ்சுவும், ஒரு ஓரமாக நின்று புதினம் பார்ப்போம்:))’- என்கிறாரே அப்பாவி! அஞ்சுவும் அதிராவும் எந்தப் புதினத்தைப் பார்த்தனர் அல்லது படித்தனர்! யாரெழுதியது அது, அதை ஓரமாக நின்று பார்க்கவேண்டிய அவசியம் என்ன? புதிரா.. ஐ மீன்.. அதிரா , புதிருக்கு விடை சொல்வாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ஏகாந்தன் சார் மேடம் மேதகு பூஸார் குதிரை வண்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார் :) அதனால் இப்போ நான் பதில் சொல்றேன் .

      நம்ம ஊர்ல புதினம்னா புத்தகம் இலக்கியம் ஆனா மேடத்தோட ஊர்ல புதினம்னா வேடிக்கை பார்த்தல் :) என்ன நடக்குதுன்னு ஓரமா நின்னு பார்த்திட்டிருப்போம் அதை சொல்றார் .எனக்கு சினிமாவே பெரிசா தெரியாது விவித்பாரதி பாட்டு மட்டுமே கொஞ்சம் கேட்டதுண்டு ..இருவருக்கும் பழைய பாட்டுக்கள் பற்றி ஞானம் குறைவு அதான் ஆச்சர்யமா வேடிக்கை பார்ப்போம்

      நீக்கு
    2. சகோதரி ஏஞ்சல், அதிராவின் தமிழுக்கு அப்பப்போ விளக்கம் சொன்னால்தான் என்னைப்போன்ற தமிழ் F (fail) ஆசாமிகளுக்கு உதவியாக இருக்கும். புதினம் விளக்கத்துக்கு நன்றி!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!