வியாழன், 6 ஆகஸ்ட், 2020

விசித்திரக்கனவும் வித்தியாச அனுபவமும்

ஒரு வித்தியாசமான, விசித்திரமான கனவு பற்றி என் மேலதிகாரி சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.


​வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது.  சென்னை சமீபத்தில் பார்க்காத காற்றும், மழையும்,  அலுவலக நேரம் முடிந்தும் கிளம்ப முடியாத நிலை.  எனவே கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தோம்.​


எங்களுக்கெல்லாம் மேலதிகாரியாக இருந்த ஒருவர் காலமானதாக தகவல் வந்ததும் மனம் ஒரு கணம் திடுக்!  அவர் டெரர் என்று பெயரெடுத்தவர்.  நேர்மை, கட்டுப்பாடு என்கிற பெயரில் சில டார்ச்சர்கள் கொடுத்தவர்.  நல்லதுக்காக செய்தாலும் நாடகத்தனம் அதிகம் அவரிடம்.  விளம்பர ஆசையும் அதிகம்.  பர்தா போட்டுக்கொண்டு (அவர் ஆண்) மாறுவேடங்களில் எல்லாம் சென்று "சோதித்தவர்"!


​அவர் ஓய்வுபெற்று பத்துவருடங்களான நிலையில் வாட்ஸாப்பில் அவர் மறைவுச் செய்தி...  கொரோனாவில் போனாரா, இயற்கையாகப் போனாரா என்று பேசிக்கொண்டிருந்தோம்.   அதே நாளில் எங்கள் வேறு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த என் நண்பரும் கொரோனாவுக்கு பலியானதாக தகவல் வந்து என்னை சோகத்துக்குள்ளாக்கி இருந்தது.  இது என் இரண்டாவது நண்பனின் மரணம்.  ஒரு மாதத்துக்கு முன் என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் மதுரையில் பலியானான்.  ​

இவற்றைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது இன்னொரு அதிகாரி "அவர் போயிட்டார்...   இப்போ என்னன்றீங்க"  இதில் யாருக்கு வருத்தம் ஸ்ரீராம்?" என்றார்.  "நிச்சயம் போனவர்களுக்கில்லை.  விடுதலை ஆகிவிட்டார்கள்" என்றேன்.  "சரியாக அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.  பயந்து பயந்து வந்துடுமோ என்கிற நிலையை அவர்கள் கடந்து விட்டார்கள் பாருங்கள்...   டார்ச்சரிலிருந்து விடுதலை" என்றார்.  "சரி, கூட இருப்பவர்களுக்கு?  ஸாரி, கூட இருந்தவர்களுக்கு?" என்றேன்.  "பயம்தான்" என்றார்.  அவர் கொரோனா பாதித்து மீண்டு வந்தவர்.

ஆம், வந்து விடுமோ, வரப்போகிறது என்கிற நிலை மார்ச் மாதங்களில் இருந்தபோது இருந்த பயம், ஸ்ட்ரெஸ் இப்போது குறைந்திருக்கிறது.  நாள்பட நாள்பட 'என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே' மனநிலை வந்து விடுகிறது.  பயந்து பயந்து எத்தனை நாள் இருட்டில் இருப்பது?

என் பழைய அனுபவங்கள் இரண்டை சொன்னேன்.  அலுவலகத்திலேயே பகல் நேரத்திலேயே தனித்திருந்த ஒரு நாளில் கேட்டுக்கொண்டிருந்த அமானுஷ்ய சத்தங்கள் பற்றி, அதற்கு முன்னர் ஒரு தனித்த பேய் பங்களா போலிருந்த அலுவலகத்தில் நான் மட்டும் தங்கியிருந்தபோது இருந்த இரவு அனுபவங்கள் பற்றி, பழைய வீட்டில் தனித்திருந்த ஓரிரவில் என் மச்சினன் என் அருகே படுத்திருப்பது போல தோன்றி, அவன் குரலும் கேட்டது போல இருக்க, சற்று நேரத்தில் (இரவு பன்னிரண்டரை மணி) அவன் காலமான செய்தி தொலைபேசியில் வந்த விஷயம் பற்றி எல்லாம் சொல்லி விட்டு, அது மாதிரி சமயங்களில் எல்லோருக்குமே சற்று உதறல் இருக்கும் என்று சொன்னேன்.  

பூட்டியிருந்த வீட்டை விட்டு  அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து தெருவில்  நின்றபோது பயம் விலகியது என்று சொன்னேன்.  வெட்ட வெளியில் கூட பயம் இருக்கும் தருணங்கள் உண்டு.  இரவில் விசில் அடித்துக்கொண்டு வருவோம், (ஜி எம் பி ஸார் கூட ஒரு பதிவில் சொல்லி இருந்தார்!) பாடிக்கொண்டு வருவோம்...   அது மாதிரி இடங்கள் வேறு...   நான்கு சுவர்களுக்குள் இருந்த பயம் வெட்ட வெளியில் இல்லாமல் போனது என்று சொன்னேன். அதுவும் ஒரு எண்ணம்தான்!

"ஐயோ பயமுறுத்தாதீங்க ஸ்ரீராம்" என்றார் பெண் அதிகாரி.

அதில் அந்த மச்சினன் மேட்டரை மட்டும் மறுபடி கேள்வி கேட்டு தெரிந்து கொண்டார் அந்த பெண் அதிகாரி.  அப்போது கனவுகள் பற்றியும் பேச்சு வந்தது.  இதெல்லாம் பிரமை, நாமாக நினைத்துக் கொள்வது என்றார் ஆண் அதிகாரி.

நான் புது வீடு வந்தததும் என் அம்மா திதி கொடுத்ததையும் அதே சமயம் அப்பா திதி கொடுக்க முடியாமல் போனதையும் சொன்னேன்.  அந்த வருத்தம் எனக்கிருந்தபோது திதி நாளுக்கு முதல்நாள் என் கனவில் என் அப்பா புது வீட்டில் இருப்பது போல வந்ததையும் சொன்னேன்.

"நீங்கள் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் கனவு அப்படிதான் வரும்"  என்றார் ஆ அ

"அப்படிச் சொல்லாதீர்கள்...   சில கனவுகள் ஆச்சர்யமானவை" என்றார் பெண் அதிகாரி..  

"என் மாமியார் இறந்து, அவருக்கு காரியம் செய்யும் நாள் நெருங்கிய நேரம்...  அன்று காலை எழுந்து வந்த என் நாத்தனார் தனக்கு வந்த கனவைச் சொன்னார்.   செத்துப்போன அத்தை வீட்டு வாசலில் நிற்கிறாராம்.  வீட்டுக்குள் வர முயற்சிக்கிறாராம்.  முடியவில்லையாம்.  ஏதோ ஒன்று தடுப்பது போல தடுமாறுகிறாராம்.  இதில் ஆச்சர்யம் என்ன என்றால் காரிய நாளுக்காக படைக்க இவர்கள் வாங்கி வைத்திருந்த புடைவையை அவர் கட்டி இருந்ததுதானாம்..."

"ஓ...   ஆச்சர்யம்தான் மேடம்..."

"இது இல்லை ஆச்சர்யம்.  கொஞ்ச நேரம் கழித்து எழுந்து வந்த என் பெண் (பள்ளியில் படிக்கும் பெண்) "அம்மா...  அம்மா... ஒரு கனவும்மா...  பாட்டி வந்து இருக்காங்க..." என்று தொடங்கி இதே கனவை இப்படியே சொன்னதுதான்.  அதில் பெரிய ஹைலைட் அவள் கனவிலும் அதே புடைவையைக் கட்டிக்கொண்டுதான் காட்சி அளித்திருக்கிறார் அத்தை...  இதற்கென்ன சொல்றீங்க?"

"ஆச்சர்யமாதான் இருக்கு.  மழை கொஞ்சம் விட்டிருக்கு..  வாங்க போகலாம்..."  என்று கிளம்பினோம்.

==================================================================================================


சென்ற வாரம் துளஸிஜி என்ன ஸ்ரீராம், உங்கள் கவிதையைக் காணோம்னு கேட்டுட்டாரா?  மாட்டிக்கிட்டாங்க மக்கள்னு ஒண்ணு எழுதிட்டேன்!  எப்படி இருக்குனு சொல்லுங்க...!

ஆராய்ச்சியால் 
அடைய முடியாது அவனை
உணர நினைத்தால் போதும்
கலந்துவிடுவான் உங்களுடன்தான்  கடவுளாக அழைக்கப் படுவதை 
விரும்பிய ஒருவன் 
எதிரொலிக்கும் மலை உச்சியில் 
கடவுளே என்று நாற்திசையிலும்
கூவிக் 
காத்திருந்தான், தான்
கடவுளென்று அழைக்கப்பட

இரண்டுமுறை கூவியும் 
பதிரொலி இல்லை
மூன்றாவது முறை
கடவுளே கடவுளே கடவுளே
என்றதும்
'ஏன் கூவுகிறாய்' என்றது
கீழ்திசை.
'என்ன வேண்டும் உனக்கு' என்றது
மேல்திசை
மயங்கி விழுந்த அவன் கேட்கவில்லை
வடதிசையிலிருந்து வந்த குரலை.
'மனதுள் நினைத்தாலே போதுமே
வருவேனே...'

தென்திசை புன்னகை 
மட்டும் புரிந்தது.

==================================================================================================

23-7-20 வியாழன் பதிவிலிருந்து வெட்டப்பட்டது...   இப்போது இடப்படுகிறது!

சென்ற வாரம் முன்பு ஒரு உல்டாப்பாடல் கொடுத்திருந்தேன்.  இது அதற்கும் ஒருவாரம் முன்பு அக்னி நட்சத்திர வெயிலில் செய்த முயற்சி!

காற்று வரும்....  காற்று வரும்...

ஜன்னல் திறந்து வைத்திருந்தால் காற்று வரும் அதை 
மூடிவைத் திருந்தால் மூச்சடைக்கும் 

Fan போட்டுகிட்டாலும் காற்று வரும் 
அந்தக் காற்றினில் வெப்பமும் சேர்ந்தே வரும்..

காற்று வரும்...  காற்று வரும்...

ஏஸி என்றொரு மிஷின் வைத்தேன் அதை 
எப்போதும் ஆன் செய்திருப்பேன்..
சில்லென்று ஆகும்... வேர்வையும் போகும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் காற்று வரும்...
காற்று வரும்..


========================================================================================================

விக்கிப்பீடியாவின் வேண்டுகோள்....
===================================================================================================


கீழ்வரும் பகுதியை பொக்கிஷம் என்று சொல்லாமல் பழைய குப்பையிலிருந்து என்று சொல்லி விடுகிறேன்.  அப்போதுதான் திட்டுகளிலிருந்து தப்பிக்கலாம்.  

சென்ற வாரம் குமுதம் ஒரு பக்கக் கதை பற்றி பின்னூட்டங்களில் நெல்லையும், ஜீவி ஸாரும் பேசிக்கொண்டார்கள்.  அப்போது குமுத பாணி ஒரு பக்கக் கதை ஒன்றை வெளியிடுவதாக சொல்லி இருந்தேன்.  அதுதான் இது!  
===========================================================================

இப்போது மிக உபயோகமான, ஒரு அழகிய ம பொ சி புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் குமுதத்தில் வந்த இந்த அரசு கேள்வி பதில் பகுதி அவர் மாண்பைக் குறைக்கிறது!
==============================================================================================

ஒரு ஜோக்கோடு இந்த வாரம் டாட்டா காட்டலாம்...!!=============   =====================  ============  =============  =======    ==============      ===================

198 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா... வணக்கம். துரை ஸார் காணோம்... வல்லிம்மாவும் காணோம்!

   நீக்கு
 2. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நேற்று ஸ்ரீராமஜன்மபூமியின் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விமரிசையாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. அனைவருக்கும் ஸ்ரீராமன் அருளால் கொரோனா தாக்கம் முற்றிலும் நீங்குவதற்குப் பிரார்த்திக்கிறேன். ஜெய்ஸ்ரீ ராம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   தொல்லைகள் குறைய  ஸ்ரீராமரை இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 4. இன்னிக்குக் கீழிருந்து மேலாகப் படித்துக் கொண்டு போனேன். ஆனாலும் மபொசி செய்தியும் ஒரு பக்கக் கதையும் படிக்கணும். ஸ்ரீராமின் அமானுஷ்ய அனுபவங்கள் அருமை. எனக்கு என் அம்மா வந்து என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாற்போல்/கூப்பிடுகிறாப்போல் உணர்வு பல சமயங்கள் வந்திருக்கின்றன. மற்றபடி கனவெல்லாம் இப்படி வரதே இல்லை. கனவே இல்லாமல் எப்படினு தெரியாமலேயே கத்திக் கூப்பாடுபோட்டு எல்லோரையும் அலற அடிக்கிறோமுல்ல! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவுகள் பற்றி பேசினால் அது ஒரு நீண்ட சப்ஜெக்ட்!   நிறைய விசித்திரங்கள், தற்செலயோ, நிஜமோ எல்லோருக்கும் இருக்கும்.

   'கவிதை'யும் இன்னும் படிக்கவில்லையா?!!

   நீக்கு
 5. நீங்கள் படிக்கும் மபொசி புத்தகம் கட்டபொம்மன் பற்றியதா? அடுத்த வியாழனில் பகிர்ந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். மபொசி மாண்பு மிகு ஆக ஆசைப்பட்டாரோ என்னமோ தெரியாது. ஆனால் அவர் அதற்குத் தகுந்தவரா என்பது ஒரு கேள்வியே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அவர் மனதுக்குள் அந்த ஆசை இருந்ததாகத்தான் தெரிகிறது.  
   நான் படிக்கும் புத்தகம் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி அல்ல.  தமிழக சுதந்திரப்போராட்ட வரலாறு முதல் தொகுதி.  அதுவும் எஸ்ராவின் எனது இந்தியாவும் ஒரே நேரத்தில் இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று படித்து வருகிறேன்!

   நீக்கு
  2. மபொசியின் சுதந்திரப் போராட்ட வரலாறா? நன்றாக இருக்கும் என்று கேள்வி. படிச்சுட்டுப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   நீக்கு
  3. நிச்சயம் முயற்சிக்கிறேன்.

   நீக்கு
 6. இந்தக் கதை படித்த நினைவு இல்லை. ஆனாலும் குமுதத்தில் இப்படித்தானே வரும்! :P க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...   ஹா....  ஹா...   படித்து விட்டீர்களா?  ஆனாலும் நீங்க பாஸ்ட் ரீடர்!

   நீக்கு
 7. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.
  ஆவி உலக நடமாட்டம் உண்மைதான்.
  போனவாரம் என் கனவில் வந்த என் அன்பு மாமா,
  (நான் அவரை நினைக்கவில்லை.) நேற்று
  அதாவது புதன் கிழமை மறைந்தார்.

  நவம்பர் சென்னையில் எல்லோரும்
  ஒரு திருமணத்தில் சந்தித்து மிக ஆனந்தமாக
  உரையாடிக் கொண்டிருந்தோம்.

  கனவுகளை நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  ஆச்சர்யம் உங்கள் அனுபவமும்,

   நீக்கு
  2. என்னுடைய கனவில், என் பெரியப்பா முன்பு நிறைய தடவை வந்திருக்கிறார். (கீழநத்தத்தில் அவரிடம்தான் நான் வளர்ந்தேன். எனக்கு அவ்வளவு பிடித்தமானவர் அவர்). என் அப்பாவும் நான் கொஞ்சம் சகோதரர்களுடன் மனஸ்தாபத்தில் இருந்தபோது, என் கனவில் வந்து, நீ செய்வது தவறு, தம்பிக்கு வீட்டையும் நிலத்தையும் கொடுத்ததில் என்ன தவறு? அவன் சுமாராக இருக்கிறான் என்பது தெரியாதா? உன்னிடம் கேட்டுச் செய்திருக்கவேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்' என கடுமையாகக் கேட்டார். அப்போதிலிருந்து அந்த மனஸ்தாபம் இல்லை.

   நீக்கு
  3. அது உங்கள் மனசாட்சியின் குரல்?  நம் ஆழ்மன எண்ணம் கனவாக வந்து விட்டதோ?  இல்லை பெரியவர்கள்தான் நம்மை வழி நடத்துகிறார்களோ...

   நீக்கு
  4. இல்லை ஸ்ரீராம். அவர் நேரிடையாக வந்து பேசினார். நான் நினைக்கிறேன் extreme caseல மட்டும்தான் இந்த மாதிரி கனவுகள் வரும் என்று.

   நீக்கு
  5. நேரிடையாக என்றால்?  கனவு இல்லையா? 

   நீக்கு
  6. நேரிடையா பேசறது. We can't imagine the conversations. நமக்குத் தெரியும், அவங்க நம்மிடம் பேசறாங்கன்னு. இதுபோல புட்டபர்த்தி சாய்பாபாவும்.

   நீக்கு
  7. எனக்கு இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஒரு கேள்வியை கேட்கவும் முடியவில்லை.

   நீக்கு
  8. கனவுல - நான் அதிகாலை கனவை மட்டும்தான் நம்புவேன். அப்போதான் என் அப்பா வந்து என்னிடம் கோபமாகப் பேசினார். என் தம்பியிடமும் அதனைச் சொன்னேன்.

   இன்னொண்ணு சொல்றேன் ஸ்ரீராம். சில அபூர்வ இடங்கள் அல்லது அபூர்வ மனிதர்களை கனவில் சந்திப்பேன். சொன்னா நம்ப மாட்டீங்க. என்னிடம் எப்போதுமே கேமரா இருக்கும். (என் இயல்பு அது. டக் டக் என்று படம் பிடிப்பேன்). ஆனால் கனவில் கேமராவை ஆப்பரேட் பண்ண இயலாது. என்னதான் அமுக்கினாலும் ஃபோட்டோ பிடிக்காது. இது மாதிரி நிறைய தடவை எனக்கு அனுபவம். Personalஆ நமக்குத் தெரியும் எது உண்மையான கனவு என்று. ஆனால் இதனைச் சொன்னால் மத்தவங்க நம்பமாட்டாங்க.

   நீக்கு
  9. நெல்லை...    இதற்குமேல் என்னால் ஆச்சர்யப்பட முடியாது!   மேலே மேலே ஆச்சர்யமான செய்திகள்...

   நீக்கு
  10. //இதற்குமேல் என்னால் ஆச்சர்யப்பட முடியாது!
   மேலே மேலே ஆச்சர்யமான செய்திகள்...//

   - அட! இன்றைய கவிதை இங்கே அல்லவா ஒளிந்திருக்கிறது !

   நீக்கு
 8. விக்கிபீடியாவில் இப்போல்லாம் எதையும் தேடிப்பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வேண்டுகோளே பக்கங்களை அடைத்துக் கொண்டு விடுகிறது. உங்கள் கவிதை/வசனக்கவிதை இரண்டும் அருமை. துளசிதரன் வேண்டுகோளில் வந்திருக்கும் தத்துப்பித்துவக் கவிதை நல்லாவே இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா அக்கா...   விக்கிக்கு விரும்புபவர்கள் பணம் அனுப்பலாமே...   அதனால்தான் இதை வெளியிட்டேன்!  இந்த அறிவிப்பைத் தடார்ந்து கீழே வந்தால் படித்துத் தெரிந்து கொள்ளலாம் விவரங்களை.

   நீக்கு
 9. மற்ற கருத்துகளுக்கு மீண்டும் வருகிறேன்.
  சென்னைக்குப் பேச வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓகே அம்மா...   மெதுவா வாங்க...   நானும் பணிக்குக் கிளம்பவேண்டும்.

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி கமலா அக்கா...    வாங்க, வணக்கம்.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  அலுவலக அரட்டை நன்றாக உள்ளது. அலுவல் நேரங்கள் போக, இப்படி மனம் விட்டு நண்பர்களோ, உறவுகளோ சேர்ந்திருக்கும் போது பேசுவது மனம் நிறைந்து இருக்கும்.

  தங்கள் அதிகாரி கனவுகள் பற்றி விவரித்தது உண்மைதான்.அவர்களுக்கு அன்றைய தினம் முழுவதும் மனது கஸ்டமாக இருந்திருக்கும் என்பது மட்டுமல்ல.. நினைவிலும் அது என்றும் தங்கியிருக்கும்.

  சில சமயம் நாம் அன்றைய பகலிலோ, அல்லது சமீபத்தில் பேசினதையோ அடிப்படையாகக் கொண்டு கனவுகள் அமையும். சில சமயம் எனக்கு தீடிரென வரும் கனவுகள், அதுவும் முழுமையாக நினைவிலிருந்து கொண்டு வருத்தத்தைமோ, மகிழ்வையோ தந்து கொண்டேயிருக்கும். சில சமயம், கனவில் விழிப்பு வந்து எழுந்தால் கூட, மறுபடி உறங்கும் போது அதே கனவு தொடராகவும் வந்திருக்கிறது. மொத்தத்தில் கனவு ஒரு புரியாத புதிர்தான்.

  கவிதை நன்றாக உள்ளது. ரசித்தேன்.
  நான்கு திசைகளிலும் சப்தம் வரும் என்பதை உணர முடியாமல் போன சாதரண மனிதன் அவன். எப்படி கடவுளாக ஆசை கொள்ள முடியும்.? இதைதான் "கண்டவர் விண்டிலர்.. விண்டவர் கண்டிலர்.." என்று சொல்கிறோமோ? மிக அருமையாக யோசித்து, எங்களையும் யோசிக்க வைக்கும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். மிகுதிக்கு பின் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. அலுவலகத்தில் எப்போதும் அரட்டை அடிக்க முடிவதில்லை.  அன்று மழை புண்ணியம் கட்டிக்கொண்டது!

   ஆம், பேசியதையோ, மனதில் இருக்கும் உள்மன எண்ணங்களோ கனவுக்குள் காரணமாக இருக்கலாம்.  தொடர் கனவு எனக்கும் வந்திருக்கிறது.  முன்பே எழுதியும் இருக்கிறேன்.

   கவிதையை ரசித்ததற்கு நன்றி.

   எதிரொலி மலையுச்சியில் நான்கு திசைகளிலும் வரும் வாய்ப்பு இருக்கும்தானே?  அதை வைத்துதான் கற்பனை!

   நன்றி கமலா அக்கா...

   நீக்கு
  3. தொடர்கதை போலக் கமலாவுக்குத் தொடர் கனவு!!!!!!!!!!!!! ஆச்சரியமாய்த் தான் இருக்கு. நானும் கனவு காண்பேனோ என்னமோ! ஆனால் விழித்தால் எதுவுமே நினைவில் இருப்பதில்லை.

   நீக்கு
  4. தொடர் கனவு என்றால் இன்று பாதி நாளை மீதி என்று வராது என்று நினைக்கிறேன்.   நீண்ட கனவாய் இருக்கும்!

   நீக்கு
 12. //..ஜன்னல் திறந்து வைத்திருந்தால் காற்று வரும் அதை
  மூடிவைத் திருந்தால் மூச்சடைக்கும் ..//

  அடடா! இவ்வளவு நாள் தெரியாமல்போய்விட்டதே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹாஹாஹா! கிண்டலா!

   நீக்கு
  2. ஏகாந்தன் சார்... unlike Chennai, இங்க காற்று ரொம்ப வேகமா வீசுது. என் அறையின் ஒரு சன்னலில் என் பெண் கொடுத்த டிவைஸ் வைத்து சிறிது (1/2 அடிக்கும் குறைவாக) திறந்துவைப்பேன். காற்று பிச்சுக்கிட்டு போகுதி. இரண்டு தடவை உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது (குளிர் காற்றினால். ஹா ஹா இன்றுதான் இரண்டாவது தடவை)

   நான் நம்புவது, தினமும் காலையில் சன்னல்களைத் திறந்து புது காற்று அறையில், வீட்டில் வரச் செய்யணும். அப்புறம் சன்னல்களை மூடி வைத்துவிடலாம். அறையில் புது காற்று இல்லைனா, அது உடல் நலத்திற்கு கேடு.

   நீக்கு
  3. நெல்லை, சென்னையோடு பெங்களூரை ஒப்பிட முயற்சித்ததே தவறு! பெங்களூர் பெங்களூர்தான். எனக்குப் பிடிக்கும். பாதித் தமிழர்களுக்கு அதிகக் காற்று, குளிர் என ஒத்துக்கொள்வதில்லை என அறிகிறேன்.
   ஜன்னல் திறப்புபற்றி நீங்கள் சொல்வது சரி. இரவு மூடியிருந்த கதவுகளைக் காலையில் திறந்துவைத்துக் காற்றை உள்ளே நாங்களும் அழைப்போம். ரூம்கள் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகும். இரவிலும் நான் ஜன்னலைத் திறந்துதான் வைத்திருப்பேன். அடைத்துப்போட்டுவிட்டு என்னால் தூங்க முடியாது. நேற்று நள்ளிரவுக்குப் பின் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்தது. விடியற்காலையில் பரவாயில்லை.

   நீக்கு
  4. //அடடா! இவ்வளவு நாள் தெரியாமல்போய்விட்டதே..//

   ஹா...   ஹா..  ஹா...  ஏகாந்தன் ஸார்...    என் மாமியார் ஜன்னலை பெரும்பாலும் திறப்பதே இல்லை.  நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்து அலுத்துப் போனேன்!

   நீக்கு
  5. சென்னையிலும் காற்று அவ்வப்போது பலமாக வீசும்.  நம் வீடு அமையும் இடத்தைப் பொறுத்தது அது என்று நினைக்கிறேன்.   சுற்றிலும் அடர்த்தியாக வீடுகள் இருந்தால் காற்று எங்கே வர?  

   இந்தப் எப்போது பாடப்பட்டது என்றால், கொரோனா காற்றில் பரவலாம், ஏ ஸி போட்டுக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் சொல்லப்பட்ட நேரத்தில் எழுதியது.

   நீக்கு
  6. இங்கே கடும் வேகத்தில் காற்று! பக்கத்துத் தோப்பு அசோகா மரம் இஷ்டத்துக்கு வளைந்து கொடுத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இத்தனை நேரம் வெயிலும் இல்லாமல் இருந்து இப்போத்தான் கொஞ்சம் சுள்!

   நீக்கு
  7. இன்று இங்கே வெயில்தான்!

   நீக்கு
 13. அனைவருக்கும் காலை வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய ஃபார்மில் வியாழன் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சார்பில் நன்றி.

   நீக்கு
  2. // நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய ஃபார்மில் வியாழன் பதிவு. //

   அப்படியா?  நன்றி.  அதென்ன பழைய ஃபார்மேட்?    அனுபவங்களை கதை போல எழுதுவது போரடிக்கிறதோ!

   நீக்கு
 14. கவிதை பிரமாதம் ஶ்ரீராம்.சும்மா சொல்லக் கூடாது உங்களுக்கு வார்த்தைகள் வசப்படுகின்றன. உங்கள் கவிதைகளை புத்தகமாக போடுங்கள். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 15. காலை வேளையில் இப்படி ஒரு கதையா? செல்ஃபோனை டெட்டால் போட்டு கழுவ வேண்டும்.
  இந்த கதை அடுத்த வாரம் வாசகர்கள் கடிதம் பகுதியில் ஒருவர், "இப்படிப் பட்ட பலனை படித்த நாத்தனார் அண்ணனையும், மன்னியையும் கிண்டல் செய்வாளே தவிர, இ்ப்படி நழுவ மாட்டாள்" என்று எழுதியிருந்ததும் நினைவில் இருக்கிறது. எனக்கோ அந்த கதையே புரியவில்லை, இந்த வாசகர் கடிதம் வேறு அதிகம் குழப்பியது. ஆனால் பஞ்சாங்கத்தில் பல்லி விழுந்ததற்கெல்லாம் பலன் போட்டிருக்கும் என்று தெரிந்து கொண்டேன்.
  இங்கெ குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், குமுதத்தில் வாசகர் கடிதங்கள் சுவையாக இருக்கும். மற்ற பத்ததிரிகைகள் பாராட்டு கடிதங்களை மட்டும் பிரசுரிக்கும் பொழுது குமுதம் மட்டும் "ஆரம்பித்து விட்டீர்களா உங்கள் அரை வேக்காட்டுத்தனத்தை.." "உங்கள் மண்டையில் இருப்பது என்ன என்று நிரூபித்து விட்டீர்கள்" என்று குமுதத்தை விமர்சிக்கும் கடிதங்களையும் பிரசுரம் செய்வார்கள். Anti publicity ஆகக்கூட இருக்கலாம், ஆனால் ஸ்வாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கதையை எழுதியவர் ரா கி ரங்கராஜன் என்று நினைக்கிறேன். அந்தப் புனை பெயர் அவருடைய பெண்ணின் பெயர்.

   நீக்கு
  2. உங்களுக்கு கதை ஞாபகம் இருப்பதே ஆச்சர்யம்.  அதில் அடுத்த வாரம் வந்த வாசகர் கடிதம் நினைவில் இருப்பது இன்னும் ஆச்சர்யம்!  எழுதியது யார் என்று கூடச் சொல்வீர்களோ?  அரகண்டபுரம் பிரதாப்சிங்?  அயன்புரம் சத்தியநாராயணன்?!!

   நீக்கு
  3. தடுத்தாட்கொண்டபுரம் ஜ பிரதாபன்?

   நீக்கு
  4. //இந்தக் கதையை எழுதியவர் ரா கி ரங்கராஜன் என்று நினைக்கிறேன்.//

   ஹேமா ஆனந்ததீர்த்தன் என்றொரு எழுத்தாளர் இருந்தார்..........

   நீக்கு
  5. இல்லை ரா.கி.ர.தான். அவர்தான் விதம் விதமான புனை பெயர்களில் எழுதுவார். எனக்கு அவர் எழுத்து பிடிக்கும். 

   நீக்கு
  6. //இல்லை ரா.கி.ர.தான். //

   இருந்தார் என்றுதான் சொன்னேன்.  அவர் என்று சொல்லவில்லை.   ஹேமா ஆனந்ததீர்த்தனுக்கும் துக்ளக் துர்வாசருக்கு ஒரு சமயம் துக்ளக்கில் சண்டை நடந்தது!

   நீக்கு
 16. கனவுகள் வருவதற்கான காரணங்கள் இதுவரை விஞ்ஞான ரீதியாக சொல்லப் படவில்லை.

  கவிதையை ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஞ்ஞானம் பலவற்றைச் சரியாகச் சொன்னதில்லை. தங்கள் குழப்பத்தை, தடுமாற்றத்தை, தெளிவின்மையை விஞ்’ஞானி’கள் பொதுவாக ஒப்புக்கொள்வதில்லை!

   நீக்கு
  2. கனவுகள் பெரும்பாலும் விடுகதை போலத்தான் வரும். அதை விடுவித்து புரிந்துகொள்வது சிலருக்கு மட்டுமே சாத்தியம்.

   நீக்கு
  3. கனவுகள் நாமே அறியாத நம் ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.  ஆனால் அதையும் பொய்ப்பிக்கும் கனவுகளும் உண்டே!  ஒன்று பார்த்தீர்கள் என்றால் நாம் அறியாத, நாம் போகாத இடங்கள் பற்றி கனவுகள் பெரும்பாலும் வருவதில்லை!  நன்றி கில்லர் ஜி.

   நீக்கு
 17. வெளியே - மொழி என்று பேசிக்கொண்டு, தமிழ் என்று உருகிக்கொண்டு, பண்பு-ஆடு எனக் கதைத்து ஆட்சியில் உள்ளவனுக்கு ஆடுமாதிரி தலையசைத்துக்கொண்டு, உள்ளுக்குள்ளே.. உள்ளே.. உள்ளே.. நாற்காலிக்காக ஏங்கித் தவித்துக்கொண்டு .. என்ன கஷ்டம்டா இது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீசைக்காரரை சொல்கிறீர்களா! அவர் கருணாநிதி காலத்தில் மேலவைத் தலைவராக கொஞ்ச காலம் இருந்தார் என்று ஞாபகம்.

   நீக்கு
  2. அவர் சுதந்திர போராட்டத்தில் எல்லாம் கலந்து கொண்டவர்.

   நீக்கு
  3. தன் மதிப்பைத் தானே கெடுத்துக்கொண்டவர்களில் ஒருவர்.

   நீக்கு
 18. கனவுகள் என்றும் சுவாரசியமானது தான்...

  // உணர நினைத்தால் போதும் // ஆகா...!

  விக்கிப்பீடியா கட்டுரைகளில் தமிழ் முதலிடம் பெற்றுள்ளது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //விக்கிப்பீடியா கட்டுரைகளில் தமிழ் முதலிடம் பெற்றுள்ளது...//

   அதில் நம் முனைவர் ஜம்புலிங்கம் அய்யாவின் பங்கு பற்றியும் குறிப்பிட வேண்டும்.

   நன்றி DD.

   நீக்கு
 19. முரண்பாடாக ஒரு படத்தை குமுதத்தில் பார்த்ததும் அன்றோடு விட்டேன்...

  அதுவும் ஆயின 25 வருடங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன படம்? க்ளூ கொடுங்க!

   நீக்கு
  2. அது என்ன, குமுதம் பாணியிலேயே புதிர் போட்டு ஆவலைத் தூண்டுகிறீர்கள்!!

   நீக்கு
  3. நாங்க எப்போவோ குமுதம் படிப்பதை நிறுத்திட்டோம். ஆனந்த விகடனை நிறுத்தியும் 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கல்கி கொஞ்ச நாட்கள்/வருடங்கள் வாங்கினோம். பின்னர் அதையும் மங்கையர் மலரையும், பக்தி, சக்தி, ஆலயம் போன்ற எல்லாப் புத்தகங்களையும் நிறுத்திப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகின்றன.

   நீக்கு
  4. இந்த வருடம் தொடக்கம் முதலே நான் எந்தப் பத்திரிகையும், புத்தகமும், நாளிதழும் வாங்கவில்லை!

   நீக்கு
  5. என்னுடைய மச்சினன் வீட்டில் குமுதம், பேப்பர் போன்றவை வந்திருக்கின்றன. அவனோ பக்கத்து ஊருக்குப் போயிருக்கிறான் என்பதால் அவை எங்க வீட்டுக்கு வந்தன. இப்படித்தான் இந்த வார குமுதம் இன்று படித்தேன். சாரு நிவேதிதா தொடரைத் தவிர எதுவுமே எனக்குப் பிடிக்கலை. எப்படி இருந்த பத்திரிகை இப்படி ஆயிடுச்சே என்று தோன்றுகிறது. (விகடனும் அதே கதைதான். )

   நீக்கு
  6. உண்மைதான்.  அப்போதெல்லாம் வரந்தரிகள் சுவாரஸ்யமாகவே இருந்தன.  குமுதத்தில் அஞ்சு பைசா அம்மு, வெயிட் வெங்கம்மா என்றெல்லாம் ஜோக் தந்தோர் வரும்!  சஞ்சீவியின் சந்தேகங்கள், மிஸ்டர் ராஜ் ஜோக்ஸ்...

   நீக்கு
  7. எஸ்.ஏ.பி. ஆசிரியராக இருந்தபொழுது அது குமுதம், சுஜாதா ஆசிரியரான பொழுது முதம், மாலன் ஆசிரியராக இருந்த பொழுது தம், அப்போதுதான் நடிகையின் கதை என்னும் கண்ராவி வந்தது, அதி ஒப்புக் கொள்ள முடியாமல் மாலன் வெளியேறினார். நான் குமுதம் வாங்குவதை நிறுத்தி விட்டேன். 

   நீக்கு
  8. நடிகையின் கதை என்றால் கமலா தாஸ் எழுதியதா?

   நீக்கு
 20. இந்த ஆவி -
  பால் >> தயிர் என்ற வர்ணிப்புடன்
  இளம் நடிகையின் படத்தை வெளியிட்டு
  புளகாங்கிதம் கொண்டிருந்தது..

  அன்றோடு அதையும் விட்டேன்...
  மைனா படம் வந்து எத்தனை வருடங்கள் இருக்கும்!?...

  அவளே அவளைக் காட்டுகின்றாள்... உனக்கென்ன வந்தது?...

  சமையலறை, பூஜையறை, ...... அறை என்று எதற்காக இருக்கின்றன?...

  குறைந்த பட்சம் திரைச்சேலையாவது கிடையாதா!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ.வில மதனை ஆசிரியராகக் கொண்டு புதன் கிழமைல ஒரு பேப்பர் மாதிரி வந்தது.90ல் நான் மும்பை போயிருந்தபோது இந்தப் பேப்பரை வாங்கிக்கொண்டு நான் தங்கியிருந்த வீட்டுக்குப் போனேன். (அந்த பேப்பரில் கடைசிப் பக்கம் கொஞ்சம் ஓவர் கவர்ச்சிப் படம் இருக்கும்). என் boss (office boss) ன் மாமனார் வீட்டில்தான் தங்கியிருந்தேன். அவர் இதனைப் பார்த்துட்டு ஸ்லோகம்லாம் தினம் சொல்றீங்க, இந்த ஆபாசப் பத்திரிகை நல்ல இமேஜ் கொடுக்காதே என்றார்.

   குமுதம்லாம் நான் திருமணம் ஆவதற்கு முன்பு வச்சிருந்தால், கொஞ்சம் அப்பா பார்த்தா திட்டுவாரே என்று யோசிப்பேன். 8ம் வகுப்பு வரை, கொஞ்சம் கடுமையா கண்காணித்து அறிவுரை சொல்லுவார். அதற்கு அப்புறம் எனக்கு சப்போர்ட்டிவ் ஆகத்தான் இருப்பார். அப்பாவைப் பற்றி எழுதும்போது அவர் நினைவு வருகிறது. எவ்வளவு இதமா அறிவுரை சொல்வார், சில விஷயங்களில் நேர சொன்னால் தர்மசங்கடம் வரும் என்று நினைத்து எனக்கு இன்லேண்ட் லெட்டெரில் எழுதுவார். எந்தக் காரணம் கொண்டும், ஒரு பையனுடைய பிரச்சனையை, அம்மாகிட்டயோ, என் சகோதரர்கள் கிட்டயோ பிரஸ்தாபிக்க மாட்டார். (என் மனைவிகூட, என்ன இது உங்க வீட்டுல தனித்தனியா ரகசியமா பேசிக்கறீங்க என்பார். மாமனார் ரொம்ப ஓபன் டைப்)

   நல்ல விஷயங்கள் மட்டும்தான் பொதுவுல பேசுவோம். செய்யும் தவறு, கண்ட கண்ட புத்தகத்தை என் ஷெல்ஃபில் பார்த்தால், அதேமாதிரி, என்ன மாதிரி பெண் வேணும் என்றெல்லாம் சொல்ல வாய்ப்புலாம் தருவார். பிறகு ஒருநாள் இதனைப்பற்றி எழுதறேன்.

   நீக்கு
  2. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. வளர்ந்த கதை என்ற தலைப்பில் மின்நிலாவுக்கு வாராவாரம் எழுதி அனுப்பலாமே!

   நீக்கு
  3. பால் - தயிர்...     என்னவாக இருக்கும்?!!  ஆனந்த விகடன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அத்தாண்டுய பாரம்பரியக் கலாச்சாரத்தை இழந்துவிட்டது.  கல்கியும்!

   நீக்கு
  4. நெல்லை...   உங்கள் அப்பா பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.  நானும் என் மகன்கள் குறை பற்றி அவர்களிடம் தனியாகத்தான் பேசுவேன்.  

   நீக்கு
  5. //ஆ.வில மதனை ஆசிரியராகக் கொண்டு புதன் கிழமைல ஒரு பேப்பர் மாதிரி வந்தது.//

   இந்த விகடன் பேயறை நானும் காலை முதல் யோசிக்கிறேன்.  நினைவுக்கே வரமாட்டேன் என்கிறது!  ஜூனியர் போஸ்ட்?

   நீக்கு
 21. படித்துவிட்டேன். பின்னூட்டம் போட ரொம்ப நேரம் ஆகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் போட்டுட்டீங்களே!

   நீக்கு
  2. வாங்க நெல்லை!  

   கேஜிஜி...    நெல்லை மற்றவர்களுடைய கமெண்ட்ஸில் புகுந்து அவர் கருத்தைச் சொல்லி இருக்கார்.  அவர் சொந்தக் கருத்து இனிதான் வரும் என்று அர்த்தம்.  சரிதானே நெல்லை?!!

   நீக்கு
 22. எஸ்.ஏ.பி. ஆசிரியராக இருந்த வரை எனக்கு குமுதம் பிடித்தது.
  கனவுகளை பற்றி எழுதியிருக்கிறீர்கள், குமுதத்தில் 1972ல் ரா.கி.ரங்கராஜன் எழுதிய "23வது படி" என்னும் கதை யாராவது படித்திருக்கிறீர்களா? அதில் வரும் கதாநாயகனுக்கு கனவுகள் பலிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் கொஞ்சம் படித்த ஞாபகம் இருக்கு.

   நீக்கு
  2. ஆம்.  சில வருடங்களுக்கு முன் இந்தக் கதை பற்றி இந்த தளத்தில் பகிர்ந்ததாகவும் நினைவு.  என் வீட்டில் பைண்டிங் இருந்தது.   இப்போது எங்கே இருக்கிறது என்று தேடவேண்டும்!

   நீக்கு
  3. 23 ஆம் படி படித்த நினைவு இருக்கு. அதை விட எனக்குப் படகு வீடு படிக்கத் தான் ரொம்ப ஆவல்.

   நீக்கு
  4. முன்னரும் 'படகு வீடு' பற்றி நீங்களும் வல்லிம்மாவும் சொல்லி இருக்கிறீர்கள்.  நான் படித்ததில்லை.

   நீக்கு
  5. //எனக்குப் படகு வீடு படிக்கத் தான் ரொம்ப ஆவல்.// - கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கிடைக்கும் என்றார்.

   நீக்கு
  6. கொடுங்களேன்...  படித்துவிட்டுத் தருகிறேன்.

   நீக்கு
 23. பல்லி விழுந்த பலன். குமுதம் கொஞ்சம் கிளு கிளு கதைகளை மட்டும்தான் பிரசுரிப்பாங்க. இந்தக் கதையைப் படித்தவங்க, பல்லி கீழ போய் நின்று தன் மேல் விழட்டும் என்று காத்திருப்பாங்களோ?

  குமுதத்தில் இன்னொரு கதையும் படித்த நினைவு. (பெண்ணை அழைப்பதென்றால், ஹலோ என்று கை கொடுக்கும்போது அவளது உள்ளங்கையைச் சுரண்டணும் என்று).

  இதை வாசகர்கள் ஆர்வத்துடன் படிப்பாங்க. அடுத்த வாரம் திட்டி வாசகர் கடிதம் அனுப்புவாங்க. ஆனால் மனசளவுல இந்த மாதிரி கதைகளைப் படிப்பாங்க.

  இதனால்தான் குமுதம் என்றாலே எங்க வீட்டுல பெண்கள் மட்டும்தான் படிக்கணும்னு சொல்வாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்கள் மட்டும்தான் !!!! முதல் மூன்று பாராக்களுடன் நான்காம் பாரா ஒத்துப்போகவில்லையே!

   நீக்கு
  2. நம்ம வயசு அப்படி. அப்பா வெளில போயிருக்கும்போது குமுதம் இதழைப் படித்துவிடுவேன். அதுபோல சுஜாதா கதைகளும், அதுக்கு ஜெ. வின் ஓவியங்களும். ரொம்பவே ஒரு மாதிரி இருக்கும்.

   நீக்கு
  3. சமீபத்தில் பேஸ்புக்கில் முன்பு குமுதத்தில் வந்த குரங்கு கதை பற்றி பிரஸ்தாபித்திருந்தார்கள்.   அதன் தலைப்பை மிகச்சரியாக ஒரு நண்பர் கமெண்ட் பண்ணி இருந்தார்.  நானும் அந்தக் கதை படித்திருந்த நினைவுவ வந்தது!  நேர்மறையோ, எதிர்மறையோ...   என்ன சொன்னாலும் இவை மனதில் தங்கி விடுகின்றன!

   நீக்கு

  4. //இதனால்தான் குமுதம் என்றாலே எங்க வீட்டுல பெண்கள் மட்டும்தான் படிக்கணும்னு சொல்வாங்க.// எங்க வீடுகளிலே நேர்மாறாகப் பெண்கள் படிக்கக் கூடாத புத்தகம் "குமுதம்" எனத் தரவே மாட்டாங்க! மாமால்லாம் படிச்சுட்டுச் சுருட்டித் தூக்கிப் போட்டுடுவார்கள்.

   நீக்கு
  5. குமுதத்தில் 'படிக்கக் கூடாத ஜோக்' என்று ஒரு பகுதி வரும்.   குமுதமே படிக்கக் கூடாத பத்திரிகையாய் இருந்திருக்கிறது!

   நீக்கு
  6. எங்க வீட்டுல (அம்மாவின் அம்மா) குமுதம், ஆவி கல்கி எந்த புக்கும் வாங்கியதில்லை. கதைப்புத்தகங்கள் உட்பட. படிக்கும் புத்தகம் தவிர வேறொன்றும் காணேன் அப்படின்ற எழுதப்படாத சட்டம்!

   கீதா

   நீக்கு
  7. //குமுதமே படிக்கக் கூடாத பத்திரிகையாய் இருந்திருக்கிறது!// To be fair, குமுதம் மிக இண்டெரெஸ்டிங் ஆன பத்திரிகை. நான் 75-80களில் படிக்காத பத்திரிகையே கிடையாது. வீட்டில் பார்சல் கட்டிவரும் பேப்பரைக்கூட விட்டுவைத்ததில்லை. எனக்கு ரொம்பப் பிடித்தது குமுதம், சாவி, விகடன். அதற்கு அடுத்ததுதான் இதயம். மயன் போன்றவை அவ்வளவு இண்டெரெஸ்டிங் ஆக இருக்காது.

   நீக்கு
  8. மயன்? கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கு...   இல்லாத மாதிரியும்  இருக்கு!

   நீக்கு
  9. மணியன் ஆரம்பித்த இலக்கியப் பத்திரிகை. இதன் ஆசிரியர் எம்.எஸ். உதய மூர்த்தி. தன் பெயரை வைத்து மயன் என்று பத்திரிகை பெயர் வைத்தார் இதயம் பேசுகிறது மணியன்.

   இதில் ஒரு செய்தி இருக்கு. சாவி ரொம்ப டேலண்டட். (சட் சட்னு கோபம் வரும் ஆள். அதனால் பத்திரிகை ஓனர் பாலுவுக்கு கொஞ்சம் சங்கடமாக ஆகிடும்) ஆனா மணியன் பாலிடிக்ஸ் செய்யத் தெரிந்தவர். சாவி, ஊர் சுற்றி பயணக் கட்டுரைகள் எழுத வேண்டியதை மணியன் பறித்துக்கொண்டார், அல்லது அமெரிக்க விஜயத்தை மணியன் பறித்துக்கொண்டார் என்று சொல்வாங்க.

   நீக்கு
  10. ஓ...    மறந்துபோன செய்திகள்.

   நீக்கு
  11. //எங்க வீடுகளிலே நேர்மாறாகப் பெண்கள் படிக்கக் கூடாத புத்தகம் "குமுதம்" எனத் தரவே மாட்டாங்க!// கரெக்ட்! குமுதத்தை பெரும்பாலும் ஆண்கள்தான் படிப்பார்கள். பெண்கள் ஆ.வி.,கல்கி, அமுதசுரபி, கலைமகள் இவைகளை விரும்புவார்கள்.இந்த நெல்லைக்கு எல்லாம் அலாதி. 

   நீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  13. மயன் ஆரம்பிக்கப்பட்ட பொழுது எம்.எஸ்.உதயமூர்த்தி ஆசிரியர் இல்லை, வேறு ஒருவர், அவர் பெயர் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.. ஒரு பேராசிரியர். கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பார். ஜீ.வீ.சாருக்கு தெரிந்திருக்கும். அவர் ஆசிரியராக இருந்த பொழுது 'வரதட்சணை ஒழிப்பு சிறப்பிதழ் என்று ஒன்று கொண்டு வந்தார்.அதில் நான் எழுதிய 
   'தட்சணை அழித்த தாட்சயினி வரதட்சணையை அழிக்க இயலாமல் தவமியற்றுகிறாள் குமரியிலே அவள் ஏக்கத்தில் சிந்திய கண்ணீரே அவளது மூக்குத்தியோ?'என்னும் புதுக்கவிதை வெளியானது.   

   நீக்கு
  14. எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து மணியனும், கருணாநிதி பணம் கொடுத்து சாவியும் ஆரம்பிக்கப் பட்டன.
   மணியன் இளைஞர்களுக்காக மயனும், சாவி மாலனை ஆசிரியராகக் கொண்டு திசைகளும் ஆரம்பித்தனர். திசைகளில் இப்போது பிரபலமாக இருக்கும் பட்டுக்கோட்டை பிரபாகர், கார்த்திகா ராஜ்குமார், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் (அப்போது அவர் ஜெயந்தஸ்ரீ பாரதி), அப்போது இயக்குனர் ஆகாத வசந்த், கே.பாலச்சந்தரின் மகன் பால கைலாசம் போன்றவர்கள் ஆசிரியர் குழுவில்  பணியாற்றினார்கள்.  அதன் முதல் பதிப்பில் மாலன் 
   கணந்தோறும் பிறக்கிறேன் கணந்தோறும் இறக்கிறேன் தொடுவானத்திற்கப்பால் தொலைதூரம் செல்கிறேன் 
   என்று ஒரு கவிதை எழுதியிருந்தார்,. அதன் முதல் வரியான 'கணந்தோறும் பிறக்கிறேன் ' என்பதைத்தான் நான் என் பிளாகின் tag line ஆக வைத்துக் கொண்டிருக்கிறேன். 

   நீக்கு
  15. மணியனின் இதயம் பேசுகிறதும் என்றிருக்க வேண்டும். 

   நீக்கு
  16. திசைகள் பத்திரிகையில் இணைந்துகொள்ள என் அண்ணனுக்கும் அழைப்பு வந்தது.  யார் யார் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார்களா அவர்களிடமிருந்தெல்லாம் சாம்பிள் அனுப்பப் சொன்னார்கள்.  நான் என் தென்றலையும், என் அண்ணன் தன் வசந்தத்தையும் அனுப்ப, அவனுக்கு அழைப்பு வந்தது.   அவன் செல்லவில்லை!  எனக்கு வரவில்லை

   நீக்கு
 24. ஸ்க்ரொலில் முதலில் கண்ணில் பட்டது கவிதை. ஆமாம் துளசி கேட்டிருந்தார். இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன். கருத்துகள் எந்த பதிவிற்கும் வரலை.

  அட்டகாசம் ஸ்ரீராம். முதல் நாலு வரி வாசித்ததுமே அட கடவுள் கவிதைன்னு!

  உங்களுக்கு கவிதை மிக நன்றாக வருகிறது ஸ்ரீராம். அதில் சொல்லப்படும் கருத்து உட்பட.

  பேசாம நீங்க உங்க கவிதை எல்லாம் தொகுத்து ஒரு புக்கா போட்டுடலாம்.

  மிகவும் ரசித்தேன் கவிதையை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சார்பில் நன்றி.

   நீக்கு
  2. நன்றி கீதா...  மேலே பானு அக்காவும் இதையே சொல்லி இருக்கார்!

   நீக்கு
  3. ஆமாம் ஸ்ரீராம் பார்த்துவிட்டேன். இப்பத்தான் மேலே கீழே என்று போய் வருகிறேன் !!!

   ரெண்டு பேர் சொல்லியாச்சு அப்ப அடுத்து அமேசான் கிண்டில் தான்! பாருங்க கௌ அண்ணா அடிச்சுப் பிடிச்சு உங்க கிட்ட கேட்டு அனுப்பச் சொல்லி எல்லாத்தையும் போட்டுருவார் பாருங்க! அட்வான்ஸ் வாழ்த்துகள்!

   கீதா

   நீக்கு
  4. ஹா...  ஹா...  ஹா...   நன்றி கீதா.

   நீக்கு
 25. ஆராய்ச்சியால்
  அடைய முடியாது அவனை
  உணர நினைத்தால் போதும்
  கலந்துவிடுவான் உங்களுடன்//

  கரீக்டு ரொம்பவே!! அசாத்திய வரி நான் மிகவும் ரசித்த வரி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவன் இன்னும் என்னுடன் கலக்கவில்லை!

   நீக்கு
  2. அவன் இன்னும் என்னுடன் கலக்கவில்லை!//

   ஹா ஹா ஹா ப்ளஸ் 1

   கீதா

   நீக்கு
  3. // ஹா ஹா ஹா ப்ளஸ் 1 //

   இப்போதான் சிஸ்டத்தையே மாத்தறாங்களாமே!!!!!

   நீக்கு
 26. உங்களின் கனவு அனுபவங்கள் ஆச்சரியும் கூடவே உங்களுடன் கூட வேலை செய்யும் பெண்ணின் அனுபவம் இன்னும் ஆச்சரியம். நான் எனக்கானதை ஒரு பதிவில் சொல்கிறேன் இங்கு என்றால் நீளமாகும். நீங்கள் முன்பு எழுதினப்பவே நானும் எழுத நினைத்தது ஆனால் வழக்கம் போல ஹிஹிஹிஹி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவுப் பதிவுகள்!   தனியாகத் தொகுத்து விடலாம்!

   நீக்கு
 27. உல்டா பாடல் செம. அப்ப அக்னி நட்சத்திர வெயில்னா நிறைய உல்டா பாடல்கள் கொஞ்சம் கடுப்பில் வருமோ!! ஹா ஹா ஹா ஹா. இப்ப அங்கு மழை இல்லையா? அப்பா இன்னும் கூலா நிறைய வரவேண்டுமே..

  மழை மழை மழை மழை மண்ணில் வந்தது
  துளி துளி துளியாய் ஏரியும் நிறைந்தது
  ஆறும் வழிந்தது கடலில் கலந்தது சங்கமம்

  இது ஆறு நிறைந்து ஓடியப்ப மழை அடித்துப் பெய்தப்ப மனதில் வந்தது எழுதி வைத்தேன்...ஹிஹிஹிஹி...பாட்டு என்னன்னு தெரிஞ்சுருக்குமே!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா அதே அதே ஸ்ரீராம்.

   இன்று சங்கமம் ந்ற வார்த்தைய பார்த்ததும் உடனே கணினியில் அதை தேடி எடுத்தேன்.

   உங்க பாடலையும் பாடிப் பார்த்துவிட்டேன்!!

   கீதா

   நீக்கு
  2. //உங்க பாடலையும் பாடிப் பார்த்துவிட்டேன்!! //

   அனுப்பினால் வெள்ளியில் சேர்த்து விடலாமே!

   நீக்கு
 28. விக்கியின் வேண்டுகோள் நானும் பார்த்தேன் ஸ்ரீராம்.

  பல்லி விழுந்த பலன் கொஞ்சம் யூகிக்க முடிந்தது. ஹிஹிஹி குமுதம் என்பதால்!

  மா பொ சி பற்றிய அந்தக் கேள்வி பதில் சுவாரசியம். மா பொ சி பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டவை கேட்டிருக்கிறேன் அவரது தமிழ் வல்லமை குறித்து. இவரைச் சிலம்புச் செல்வர்னு சொல்லுவாங்கல்லியா?!

  ஜோக் ரசித்தேன்.

  எல்லாமே சுவையாக இருந்தது ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா.  ஆம். அவர் சிலம்புச் செல்வர் என்றுதான் அழைக்கப் பட்டார்.

   நீக்கு
  2. விக்கிக்கு முன்பு இப்படி வந்த போது வீட்டில் அனுப்பியதுண்டு. இப்போது அனுப்பப்பட்டதா என்று தெரியவில்லை

   ஸ்ரீராம்

   நீக்கு
  3. நாம்தான் அனுப்பவேண்டும்.

   நீக்கு
  4. St. Xavier's school, Palayamkottai centenary celebrationsக்கு இளையராஜா கச்சேரி வைக்கணும்னுதான் திட்டம் போட்டிருந்தாங்க. அதுல 5 லட்சம் ரூபாய் fund raise பண்ணலாம்னு நினைச்சிருந்தாங்க. ஆனால் இளையராஜா அதிகமாக கேட்டதினால் அது வைக்கலைன்னு கேள்வி. அப்புறம் சிலம்புச் செல்வரை chief guest ஆகப் போட்டார்கள். அவர் கையினால் ஓவியத்துக்கு இரண்டாவது பரிசாக (மாவட்டத்தில்) 25 ரூபாய் கொடுத்தார்கள் (79ல்)

   நீக்கு
 29. ஸ்ரீராம்ஜி நான் கேட்டதைக் குறிப்பிட்டு உடனே கவிதையுமெ எழுதிப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது.

  கவிதை பிரமாதம். அம்சமாக இருக்கிறது. அழகாககச் சிந்திக்கின்றீர்கள். இறைவனனை நினைத்தாலே போதும் உண்மையான அன்புடன், நம்மோடு கலந்து விடுவான். நல்ல சிந்தனைக் கருத்து!

  பாராட்டுகள், வாழ்த்துகள்.ஸ்‌ரீராம்ஜி. மீண்டும் நன்றி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துளசி ஜி...    கவிதை விரும்பிக் கேட்டதற்கும், வந்து ரசித்ததற்கும்!

   நீக்கு
 30. உங்கள் கனவு அனுபவங்கள் வியப்பாக இருக்கிறது. அது போல உங்கள் அலுவலகத்தவரின் கனவும். அதுவும் அவர் மகளும் அவளின் அத்தையும்(?) ஒரே போன்று கனவு கண்டது வியப்பு.

  குமுதத்தில் ஒருபக்கக் கதைகள் வாசித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது. அப்போதெல்லாம் ஊரில் இருந்த லைப்ரரியில், அப்புறம் பக்கத்துவீடுகளில் அவர்கள் வாங்குவதை என் அம்மாவுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது என்றாலும் அவர்களிடம் வாங்கி என்னை வாசிக்கச் சொல்லி நான் வாசித்ததும் நினைவில் வருகின்றன.

  அப்படி ஆனந்தவிகடன், குமுதம் எல்லாம் வாசித்ததுண்டு. கதை புத்தகங்களும்.

  கதையும் நன்றாக இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குமுதத்தில் அப்போது இவை பிரபலம்! நன்றி துளஸிஜி.

   நீக்கு
 31. மாபொசி பற்றியது, ஜோக் எல்லாம் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 32. கொரோனாவால் நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் இறந்தது சோகம்.

  //நாள்பட நாள்பட 'என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே' மனநிலை வந்து விடுகிறது//

  ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான், மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

  //பழைய வீட்டில் தனித்திருந்த ஓரிரவில் என் மச்சினன் என் அருகே படுத்திருப்பது போல தோன்றி, அவன் குரலும் கேட்டது போல இருக்க, சற்று நேரத்தில் (இரவு பன்னிரண்டரை மணி) அவன் காலமான செய்தி//

  உங்கள் மச்சினர் கனவில் வந்தது போல் என் அப்பா வந்தார்கள் என்று முன்பு உங்கள் தளத்தில் சொல்லி இருக்கிறேன். (கனவில் என்னுடன் பேசினார்கள்.)


  //சில கனவுகள் ஆச்சர்யமானவை" என்றார் பெண் அதிகாரி.. //

  அந்த பெண் அதிகாரி சொன்ன கனவும் ஆச்சரியப்பட வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உங்கள் மச்சினர் கனவில் வந்தது போல் என் அப்பா வந்தார்கள் என்று முன்பு உங்கள் தளத்தில் சொல்லி இருக்கிறேன்./

   ஆமாம் கோமதி அக்கா.  ஞாபகம் இருக்கிறது.

   நீக்கு
 33. காற்று கவிதை நன்றாக இருக்கிறது.
  இங்கும் இப்போது காற்று மிக அதிகமாய் வீசுகிறது.ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் காற்று அதிகமாக இருக்கும் என்பார்கள். வைகையில் தண்ணீரோ மழையோ இல்லை.

  பல்லி விழுந்தால் பஞ்சாங்கத்தில் பலன்கள் பார்ப்பது இல்லை அம்மா விபூதி பூசி விடுவார்கள் தண்ணீர் குடிக்க சொல்வார்கள் அத்துடன் சரி.
  நகைச்சுவை பகிர்வு சிரிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 34. எல்லா கனவுகளுக்கும் அர்த்தம் உண்டு, ஆனால் கனவுகளின் அர்த்தம் நமக்கு விளங்குவதில்லை.

  பதிலளிநீக்கு
 35. எனக்கெல்லாம் கனவு அப்படியே பலித்து தொலைக்கிறது முந்தாநேத்து சறுக்குமரத்தில் சறுக்குவதுபோல் அலறி விழுந்தேன் கனவில் நேத்து வாக்கிங் போகும்போது ரீசண்டா யானைக்குட்டி மண் மேட்டிலிருந்து சொய்ங் னு விழுமே அதே மாதிரி இறங்கும் இடம் வந்தது canal பக்கம் ஒரு நிமிஷம்கனவு   மனக்கண்ணில் தோன்ற :) பேசாம சுத்தி நடந்து படி வழியே இறங்கினேன் ..கொரோனா நிறைய பயந்து நடுங்கி பேருந்தில் கூட வேலைக்கு போகாம இன்னும் நிறைய ஷாப்ஸ் பக்கம் போகலாமா எல்லாத்தையும் ஆன்லைனில் வாங்கிட்டிருக்கேன் .போன் வாரம்தான் 4மாதங்கள் கழிச்சி பஸ் இல் போனேன் .ரெண்டு க்ளவுஸ் மாஸ்க் எல்லாம் போட்டுட்டுதான் போனேன் .என் பர்சில் பணமில்லை கார்ட் ட்ரான்ஸாக்க்ஷனேதான் இத்தனை காலமும் .பயம்லாம் எப்போ முடிவுக்கு வரும்னு தெரிலா .அடுத்த WAVE வருதுன்னு பீதியை கிளப்பறாங்க .
  குமுதம்லாம் வாங்கினா அம்மாவுக்கு திட்டு விழும் :) எங்க வேட்கை மாலைமதி மங்கையர்மலர் கல்கி .அப்புறம் பாக்கெட் நாவல் .
  அது சரி இப்போல்லாம் புத்தக பெட்டிக்கடைகளில் முந்திமாதிரி புக்ஸ் தொங்க விட்டிருக்காங்களா ?காரர் இவ்வருட சென்னைவிசிட் கனவில் தீ நுண்மி தீவைத்துவிட்டது 

  ஜோக்  ரசிரித்தேன் ,,இப்பவும் மாவு அரைக்க வைக்கிறாங்களா :)) டவுட் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல்...    ஆரம்ப பயம் இப்போது இல்லை என்றாலும் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் என்கிற பயம் மனதுள் இருக்கிறதுதான்!

   நீக்கு
 36. எனக்கு கனவு என்பதெல்லாம் Exam நாளை இருப்பது போலவும், இன்னும் prepare பண்ணவில்லை போலவும் வந்து ரொம்பவுமே டென்ஷனாவேன். தூக்கம் கலையும்போதுதான் அப்பாடா... எக்ஸாம் பிஸினெஸ்லாம் இல்லை என்று தோன்றி பெரிய நிம்மதியா இருக்கும். நம்ம ஆழ்மனத்துல உள்ள பயம், சென்ற ஜென்ம நினைவுகள் என்று கலந்துகட்டி கனவுகள் வரும்னு நினைக்கிறேன்.

  முன்னமே எழுதியது போல, என்னால பறக்க முடியும்னு நான் நம்பும்படியாக அடிக்கடி கனவு வரும். (நான் பறக்க முடியும்னு நம்புறேன் ஹா ஹா)

  7ம் வகுப்பு படிக்கும்போது மெழுகினால் ஆன இறக்கையை அணிந்துகொண்டு காவலிலிருந்து தப்பிக்க நினைத்து கடலிலிருந்து ரொம்ப மேல பறந்தால் சூட்டில் மெழுகு உருகும் என்றும் கடலுக்குக் கிட்டத்தில் பறந்தால் இறக்கை கனம் அதிகமாகும் என்ற க்ரேக்க (?) கதையை வகுப்பில் சொன்னார்கள். இரு கைகளிலும் மற்றும் இரு கால்களிலும் சுளகு கட்டிக்கொண்டு நானும் பறக்க முயற்சி பண்ணணும் என்று நினைத்தேன். எங்க ஊர் (தாளவாடி) ஆற்றுப் பாலத்தில் நின்றுகொண்டு, ஆற்றில் முழுவதும் மணலாக இருந்த இடத்தில் முதலில் வெறும்ன குதித்துப் பார்க்கலாம் என்று நினைத்து பாலத்தின் கைப்பிடிச் சுவருக்கு அந்தப் பக்கம் சென்றேன். யாரோ பார்த்துவிட்டு எச்சரித்ததனால் அந்த முயற்சியைக் கைவிட்டுட்டேன். (இல்லைனா கால் உடைந்திருக்குமாயிருக்கும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///இன்னும் prepare பண்ணவில்லை போலவும் வந்து ரொம்பவுமே டென்ஷனாவேன். தூக்கம் கலையும்போதுதான் அப்பாடா... எக்ஸாம் பிஸினெஸ்லாம்//

   சேம் பின்ச் :) எனக்கென்னமோ நம் இருவருக்கும் பள்ளி நாட்களில் எக்ஸாம் ரிஸல்ட்ஸ் விஷயத்தில் எதோ தீரா மனக்குறை இருக்கு னு நினைக்கிறன் .எனக்கு ப்ளூ கலர் அரைத்தாவணி யூனிஃபார்ம்  ரெண்டு ஜடை மடிச்சிக்கட்டி போட்டு லேப் போறமாதிரி எல்லாம் அந்த எக்ஸாம் கனவுடன் வரும் .ஆனா பாருங்க பிஎஸ்ஸி ,எம் எஸ்ஸி அப்புறம் பி எட் இந்த நாட்களின் எக்ஸாம் கனவே வந்ததில்லை  ஆச்சர்யமா இருக்கு .இந்த ஸ்கூல் எக்ஸாம் கனவு பற்றி யாரவது விளக்கப்படுத்தினா நல்லா இருக்கும் :) என் பொண்ணு யூனிவர்சிட்டி போனபின்னும் எனக்கின்னும் ஸ்கூல் கனவு வருது இதுக்கு ஒரு எண்டு கார்ட் போட்டே ஆகணும் :) 

   நீக்கு
  2. பரீட்சை சம்பந்தமான கனவுகள் இன்னும் பயமுறுத்துகின்றன. பரீட்சைக்கு நான் படிக்கவேயில்லை. எக்ஸாம் ஹால். குழப்பம். சஞ்சலம் இப்படி ஏதோ ஒரு வகையில் என்னை சோரவைக்கும் கனவுகள் துரத்துகின்றன..

   நீக்கு
  3. பரீட்சைக்கு லேட் ஆகப் போகும் கனவு, பரிட்சை எழுதப்போய் பென்சில் கூட இல்லாமல் அவதிப்படும் கனவு எல்லாமே எனக்கும் வேலை பார்க்க ஆரம்பித்த பிறகும் வந்த கனவுகள்.
   அடிக்கடி வரும் கனவுகள் வரிசையில், தரையில் நான்கைந்து அடிகள் வேகமாக நடந்து ஒரு எம்பு எம்பினேன் என்றால் ..... கொஞ்ச நேரம் மூச்சை இழுத்து பிடித்து ....... அப்படியே பறக்க ஆரம்பிப்பேன். அதற்கப்புறம் பல கிலோமீட்டர்கள் அப்படியே வேகமாகப் பறந்து செல்வேன்!
   வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன - ஆனால் இப்போதும் அதே அலுவலகத்தில், அதே சிடுமூஞ்சி பாஸ் உடன் வேலை செய்வது போலவும் - அவர் எனக்கு சம்பள உயர்வு கொடுக்காமல் அல்லது சம்பளமே கொடுக்காமல் வேலை செய்ய விடுவது போலவும் அடிக்கடி கனவுகள் வரும்!

   நீக்கு
  4. நெல்லையின் இந்தக் கனவு பற்றி அவர் ஏற்கெனவே சொல்லி இருக்கிற மாதிரி நினைவு.  அதே கனவு ஏஞ்சலுக்கும் வருவது ஆச்சர்யம்..  அதைவிட ஆச்சர்யம் ஏகாந்தன் ஸாருக்கு கனவுகள் சஞ்சலம் தருகின்றன என்பது.  

   வாழ்க்கையில் சில சோதனையான கட்டங்களை மனம் எதிர்கொள்ள நேரிடும்போது இதுபோன்ற கனவுகள் வரும்போலும்...

   கேஜிஜி...உங்களுக்கு  வரும் கனவுகளுக்கான காரணத்தை எப்போதாவது ஆராய்ந்திருக்கிறீர்களா?

   நீக்கு
  5. பரீட்சை கனவுகளுக்கு முக்கிய காரணம் - என்னுடைய பதின்ம வயதில் நான் எட்டாம் வகுப்புக்குப் பிறகு - புதிதாக துவங்கப்பட்ட ஜூனியர் டெக்னிகல் ஸ்கூலில் சேர (மொத்தமே முப்பது சீட்டுகள்தான் - தொடங்கப்பட்ட காலத்தில்) நூறு பேர்களில் ஒருவனாக விண்ணப்பம் அனுப்பியிருந்தேன். (நான் எங்கே அனுப்பினேன் - எல்லாம் என் சார்பில் என் அப்பாதான் செய்தார்!) ஸ்கூலில் அட்மிசன் கிடைக்குமா கிடைக்காதா என்று உறுதியாகத் தெரியாத நிலையில் - ஏற்கெனவே நான் படித்துக்கொண்டிருந்த நேஷனல் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்கு சென்று வந்துகொண்டிருந்தேன். பாடங்களை கவனிக்க மாட்டேன். எப்படியும் இந்த ஸ்கூலை தொடரமாட்டேன் என்ற நம்பிக்கையில், வீட்டுப்பாடம் எழுதாமல், புத்தகம், நோட்டுப் புத்தகம் எதுவும் வாங்காமல் - எதற்கும் இருக்கட்டும் என்று வகுப்புகளை மட்டும் attend செய்துகொண்டிருந்தேன். ஒருவேளை என்னுடைய உள்மனதில் - ஒருவேளை JTS ல் சேர தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் - என்ன ஆகும் என்ற கிலி இருந்திருக்கலாம் - அது பின்நாட்களில் கனவாக வந்து வந்து துன்புறுத்தி இருக்கும்!
   பறக்கும் கனவு வருகின்ற நாட்களில் எல்லாம் சில நாட்களில் புதுமையான முயற்சி எதையாவது செய்து அதில் வெற்றி பெறுவேன்.
   அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு ஒருவேளை உள்மனது வேலையைத் தொடர்ந்து உரிய ஓய்வு வயது வரை வேலை பார்த்திருக்கலாம் என்று நினைத்ததால் அலுவலக கனவுகள் வந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்!

   நீக்கு
  6. //பறக்கும் கனவு வருகின்ற நாட்களில் எல்லாம் சில நாட்களில் புதுமையான முயற்சி எதையாவது செய்து அதில் வெற்றி பெறுவேன்.//

   இது பொருந்தி வருகிறது.   புரிந்து கொள்ள முடிகிறது.

   நீக்கு
  7. பறக்கும் கனவு எனக்கும் வந்திருக்கிறது. குறைந்தது இரண்டு முறை. ஒரு கனவு நினைவில் இருக்கிறது:

   மாலை நேரம் இரவு நெருங்க விரும்பும் பொழுது. கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கிறோம் நானும் நண்பர்களும். ஆனால் மைதானம் போன்று தெரியவில்லை. சுற்றிலும் ஹை-டெக் பில்டிங்குகள்! நமது நாடே இல்லை அது. இருட்டப்போகிறது. வானின் மெல்லொளி மட்டும் நீலமாக எங்கும். மின்விளக்கெதையும் கனவில் காணவில்லை! ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த நான் திடீரென ஒரு உணர்வில் எழும்புகிறேன். மேலே மிதக்கிறேன். பறப்பதாக இல்லை. செங்குத்தாகவே மிதக்கிறேன்.. அலைகிறேன். ஒரு கவலை. பெரிய கட்டிடங்களில் மோத நேருமோ? ஆனால் இல்லை. லாவகமாக அதன் இடுக்குகளில் புகுந்து விண்ணில் மிதக்கிறேன்.. effortless floating in the air !இப்படி சென்றது கனவு, விழிக்கும் வரை!

   நீக்கு
  8. வெளிநாடு போயிருப்பவர்களுக்கு வெளிநாட்டுக்கு கனவுகள்.  போகாத எனக்கு உள்நாட்டுக்ககனவுகள்.  தெரியாத இடம்ம், பொருள் பற்றி கனவில் வருவதில்லை பாருங்கள்.

   நீக்கு
 37. என் கனவுகளில் வரும் சம்பவங்களை என் கதைகளில் சொல்லி இருப்பேன் இண்டெரெஸ் டிங் பதிவு

  பதிலளிநீக்கு
 38. கனவுகளும் அனுபவங்களும் ஆச்சரியம் அளிக்கின்றன. கவிதை அருமை. விக்கிப்பீடியாவின் வேண்டுகோள் நியாயமானதாகப் படுகிறது. நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 39. இந்த வருடக் கவிதை இங்கு வந்தது இன்றைய ஆச்சரியம். பொதுவாக 2014, 15 போன்றவைதான் வியாழன் வாசலில் நிற்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...  ஹா...  ஹா...


   என் உறவுகளில் ஒருவர் பற்றி சொல்லவேண்டும்.  தினமும் சமைப்பார்.  அதில் மிஞ்சி விடும்.  அதை பிரிஜ்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடுவார்.  குறைத்து சமைக்கலாம்.  ஆனால் எப்படியோ பிரிஜ்ஜில் வைக்கவேண்டிய உணவு இருந்துகொண்டே இருக்கும்.  பெரும்பாலும் பழைய உணவுகளையே சாப்பிடுவார்.  புதிய அன்று சமைக்கும் உணவு அவரைப்பொறுத்த அளவில் மறுநாள்தான்!  ஒருநாள் அதை உடைக்கச் சொல்வேன்.  தூக்கிப்போட்டு புதுசு சாப்பிடச் சொல்வேன்.  கேட்கமாட்டார்!

   நீக்கு
  2. பழசின்மீது தீராக்காதல் !

   நீக்கு
 40. எனக்கு கனவு என்பதெல்லாம் Exam நாளை இருப்பது போலவும், இன்னும் prepare பண்ணவில்லை போலவும் வந்து ரொம்பவுமே டென்ஷனாவேன். தூக்கம் கலையும்போதுதான் அப்பாடா... எக்ஸாம் பிஸினெஸ்லாம் இல்லை என்று தோன்றி பெரிய நிம்மதியா இருக்கும். நம்ம ஆழ்மனத்துல உள்ள பயம், சென்ற ஜென்ம நினைவுகள் என்று கலந்துகட்டி கனவுகள் வரும்னு நினைக்கிறேன்.///// எல்லோருக்கும் இதே கனவா. தாங்காது சாமி.:(
  இதென்ன பயங்கரம் என்றே தெரியவில்லை.
  ஏன் இந்த பயம் என்றும் புரியவில்லை.
  ஏஞ்சல் சொல்வது போல அதன் பின் கல்லூரி
  சென்றதெல்லாம் பயமுறுத்தவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.  ஒரு நாள் திடீரென விழித்து எழப்போகிறேன்.  அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் கண்ட கனவாய் இந்த வாழ்க்கை இருக்கப்போகிறது என்கிற பகல் கனவு எனக்கு உண்டு!

   நீக்கு
 41. அதென்ன.. குமுதம் பாணியில் புதிர்?...

  ஒரு க்ளூ கொடுங்கள் - என்றெல்லாம் கௌதம் ஜி அவர்களும் ஸ்ரீராம் அவர்களும் கேட்டிருக்கிறார்கள்...

  அன்பின் சகோதரிகளுக்கு மத்தியில் அந்தப் படத்தை விவரிக்க விரும்பவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ...   சரி, விடுங்கள்!

   நீக்கு
  2. ஓ ஹோ --- அந்தப் படமா. அது வெளிவந்த இதழ் ஞாபகம் இருக்கு. வாரம் ஒரு ஆசிரியர் என்று பிரபலஸ்தர்கள் பலரையும் ஒவ்வொரு வாரமும் குமுதம் வெளிவந்த நாட்களில், சுஜாதா ஆசிரியராக இருந்த வாரத்தில், குமுதத்தின் நடுப்பக்கத்தில் வந்த படம் என்று ஞாபகம். (பல வருடங்களுக்குப்பின் சுஜாதாவே குமுதம் ஆசிரியராக - எஸ் ஏ பி மறைவுக்குப்பின் - முழு பொறுப்பேற்று குமுதத்தை சிறப்பாக நடத்தினார் என்பது வேறு விஷயம்.)

   நீக்கு
  3. ஓ...   தகவலுக்கு நன்றி.   அதைச் சொல்கிறீர்களா?   

   நீக்கு
 42. அந்த குமுதம் அரசு பதில், ம.பொ.சியைப் பற்றிச் சொல்லவில்லை. மற்றவர்களின் குணாதிசியங்களைத் தான் கோடி காட்டுகிறது.

  அரசு (அரசுகள்) கேள்வி-பதில் பகுதியிலும் கொடி நாட்டியவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம பொ சி யின் மாண்புமிகு ஆகும் ஆசை நிறைவேறவில்லை என்று சொல்கிறார்!

   நீக்கு
  2. ம.பொ.சி. துன்பச் சூழலில் வாடிய போதும் தன் மரியாதையை இழக்காதவர்.
   அவர் முழு சரிதத்தைத் தேடிப் படித்துப் பாருங்கள். 1964 காலகட்டத்தில் ஒரு நிகழ்வு. ஒரு இலக்கியக் கூட்டம். 'அவர் யார் தெரியுமா?' என்று கவிஞர் கா.மு. ஷெரிப் அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்த அவர் கைதூக்கிய பொழுது அவர் முழுக்கை சட்டை கக்கப்பகுதியில் கிழிந்திருந்தது. இன்றும் மனசை வாட்டுகிறது.
   மரியாதைக்குரிய சிலர் பிற்காலத்தில் மரியாதைக்குரிய பதவிகளை அலங்கரிக்கும் பொழுது இவர்கள் பட்ட பாட்டிற்கு, பாவம், இப்பொழுதாவது ஒரு நியாயம் வழங்கப்பட்டதே என்று மனம் நிம்மதியுறுகிறது. நீங்களானால்?..

   இந்த அடையாளம் கூட கிடைக்கப் பெறாமல் கடைசி வரை தியாகங்களையே வாழ்க்கையாக்கிக் கொண்ட பல இலட்சியவாதிகள் வாழ்ந்து மறைந்த நாடு இது. அவர்கள் பட்டியல் மிகப் பெரிது.


   நீக்கு
  3. ம.பொ சி மீதான உங்கள் மரியாதையையும் அன்பையும் தெரிந்து கொண்டேன் ஜீவி ஸார்.  நன்றி.

   நீக்கு
 43. //சென்ற வாரம் துளஸிஜி என்ன ஸ்ரீராம், உங்கள் கவிதையைக் காணோம்னு கேட்டுட்டாரா? //

  இதுவும் இன்னொரு கனவு போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம்.  இப்போ எல்லாம் எது கனவு, எது நிஜம் என்றே தெரிய சில நிமிடங்கள் பிடிக்கின்றன!   நன்றி ஜீவி ஸார்.

   நீக்கு
  2. Thulasidharan V Thillaiakathu6 ஆகஸ்ட், 2020 ’அன்று’ பிற்பகல் 1:15

   ஸ்ரீராம்ஜி நான் கேட்டதைக் குறிப்பிட்டு உடனே கவிதையுமெ எழுதிப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது.

   நீக்கு
  3. ஓ! இவர் தான் அந்த 'துளசி'யா?.. நான் வேறொருவராக்கும் என்று நினைத்தேன்.

   நீக்கு
  4. நீங்கள் துளசி கோபால் என்று நினைத்து விட்டீர்களோ?   

   நீக்கு
  5. எஸ்.. எங்களுக்கெல்லாம் அவர் தான் துளஸி.
   இவர் தி.கீதா. அன்புச் சகோதரி.

   நீக்கு
  6. //எங்களுக்கெல்லாம் அவர் தான் துளஸி.//

   :) 

   அப்போ எங்களுக்கு அவர்?

   நீக்கு
  7. // எஸ்.. எங்களுக்கெல்லாம் அவர் தான் துளஸி.
   இவர் தி.கீதா. அன்புச் சகோதரி.// இல்லை. ஒரே ஐ டி உபயோகித்து தி கீதாவும் (நாங்க கீ சா விலிருந்து வேறு படுத்த கீதா ரெங்கன் என்று குறிப்பிடுவோம்) மற்றும் துளசிதரனும் கருத்துரை இடுவார்கள். மேற்கண்ட கருத்துரை எழுதியவர் துளசிதரன். தி கீதா / கீ ரெ அல்ல.

   நீக்கு
 44. ஹேமா (ரா.கி.ர. ?) என்ற பெயர் தான் முன்னின்று அந்த ஒரு பக்கக் கதையை உங்களைப் படிக்க வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

  ஒரே பக்கம் தான். எழுத்தில் தான் என்ன ஜாலம்?.. கடைசி வரி தான் கதையாகியிருக்கிறது. எவ்வளவு 'நேக்'காக எழுதுவதில் விளையாடியிருக்கிறார்
  என்று மலைக்கத்தான் வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட எண்ணமே இல்லாதவர்களையும் பயிற்சி கொடுப்பது போல எழுதத் தூண்டிய லாவகம். இழந்து போன சொர்க்க நாட்கள் அவை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியும் ஒரு கோணம்!   பாராட்டவும் வாய்ப்பு...

   நீக்கு
  2. ரா.கி.ரா. குமுதத்தில் எ.க.எ.(எப்படி கதை எழுதுவது?) என்று ஒரு தொடர் எழுதினார். அதில் ஒரு பக்க கதை எழுதி பழகுங்கள் என்று சொல்லியிருப்பார். 

   நீக்கு
 45. //அவர் ஆசிரியராக இருந்த பொழுது 'வரதட்சணை ஒழிப்பு சிறப்பிதழ் என்று ஒன்று கொண்டு வந்தார்.அதில் நான் எழுதிய 
  'தட்சணை அழித்த தாட்சயினி வரதட்சணையை அழிக்க இயலாமல் தவமியற்றுகிறாள் குமரியிலே அவள் ஏக்கத்தில் சிந்திய கண்ணீரே அவளது மூக்குத்தியோ?'என்னும் புதுக்கவிதை வெளியானது.   //

    பானு அக்கா...    ஆசிரியர் யாரோ இருந்துவிட்டுப் போகட்டும்...   கவிதையையே சொல்லும் உங்கள் ஞாபகசக்தி என்னை மறுபடியும் பிரமிக்க வைக்கிறது.  

  பதிலளிநீக்கு
 46. எஸ்.ஏ.பி. ஆசிரியராக இருந்தபொழுது அது குமுதம், சுஜாதா ஆசிரியரான பொழுது முதம், மாலன் ஆசிரியராக இருந்த பொழுது தம், அப்போதுதான் நடிகையின் கதை என்னும் கண்ராவி வந்தது, அதி ஒப்புக் கொள்ள முடியாமல் மாலன் வெளியேறினார். நான் குமுதம் வாங்குவதை நிறுத்தி விட்டேன். ஆ.வி.யை 2000இல் நிறுத்தினேன். கல்கியை 2007 வரை வாங்கி கொண்டிருந்தேன். குமுதம் ஸ்நேகிதியும், ம.மலரும் வாங்கினேன். இப்போது கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான தகவல்கள் பானுமதி மா.
   எஸ் ஏ. பி கண்ணியம் + குறும்பாக எழுதுவார்.
   அப்புறம் கசப்பானது குமுதம்.

   நீக்கு
 47. //ஆராய்ச்சியால்
  அடைய முடியாது அவனை
  உணர நினைத்தால் போதும்
  கலந்துவிடுவான் உங்களுடன்//

  இது ஒரு ப்ரெஸ் ஸ்டேட்மெண்ட்! பின் வரும் கவிதைவரிகளுக்குத் தேவையில்லாதது. இதனைத் தவிர்த்து மற்றதைப் படித்தால்,
  கவிதை நன்று!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் தோன்றியது.  அந்த வரிகளை நீக்கி இருக்கலாம், இல்லாமல் போடலாம் என்றுதான் நானும் நினைத்தேன்.  எழுதியது வீணாய்போப்போகுமே என்கிற ஆதங்கம்!

   நீக்கு
 48. மறைந்த நம் உறவுகள் நம்மைக் கனவு மூலம் தொடர்பு கொள்கிறார்கள் என்பது உண்மையே. என் மகன் கல்லூரியில் படிக்கும்போது என் மனைவி காலமானார். அதன்பின் ஒரு மாத இடைவெளிக்குப்பின் நிகழ்ந்த நிகழ்விது.காலேஜ் பஸ் காலை 7-15க்கு வரும். நான் காலை 4-45க்கு எழுந்து அவனுக்கு காலை உணவும், பகலுக்கு லஞ்ச்சும் தயார் செய்ய வேண்டும். ஒருநாள் தூங்கிக்கொண்டிருக்கும்போது பரபரப்பாக என் மனைவியின் குரல்...
  'என்னங்க, இன்னும் எழுந்திருக்கல்லியா, பையனுக்கு காலேஜுக்கு போக டிபன், லஞ்ச் செய்ய வேண்டாமா...??'என்று. வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து பார்த்தால் மணி ஐந்து. என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமிது.

  பதிலளிநீக்கு
 49. மறைந்த நம் உறவுகள் நம்மைக் கனவு மூலம் தொடர்பு கொள்கிறார்கள் என்பது உண்மையே. என் மகன் கல்லூரியில் படிக்கும்போது என் மனைவி காலமானார். அதன்பின் ஒரு மாத இடைவெளிக்குப்பின் நிகழ்ந்த நிகழ்விது.காலேஜ் பஸ் காலை 7-15க்கு வரும். நான் காலை 4-45க்கு எழுந்து அவனுக்கு காலை உணவும், பகலுக்கு லஞ்ச்சும் தயார் செய்ய வேண்டும். ஒருநாள் தூங்கிக்கொண்டிருக்கும்போது பரபரப்பாக என் மனைவியின் குரல்...
  'என்னங்க, இன்னும் எழுந்திருக்கல்லியா, பையனுக்கு காலேஜுக்கு போக டிபன், லஞ்ச் செய்ய வேண்டாமா...??'என்று. வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து பார்த்தால் மணி ஐந்து. என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமிது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!