Friday, January 19, 2018

வெள்ளி வீடியோ 180119 : உந்தன் பேர்கூட சங்கீதம் ஆகின்றது ; பொழுது நமக்காக நமக்காக விடிகின்றதுபழனிபாரதி பாடலுக்கு சிற்பி இசை அமைத்திருக்கிறார்.  

இந்தப் படத்தில் இருக்கும் ஏழெட்டு சிறிதும் பெரிதுமான பாடல்களில் இது ஒன்று மட்டும் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியது.

விக்ரமன் படம் என்பதாலோ, அப்போது அங்கு வேறு பொழுது போக்கில்லாததாலோ, இந்தப் படம் ரிலீசான சமயம் நான் இதை மதுரை சக்தி-சிவம் திரை அரங்கில் பார்த்தேன்.  என் மகன் பிறந்த சமயம் அது.  மாமனார் வீடு சென்று அவனைப் பார்த்து விட்டு,  பொழுது போகாமல் பார்த்த படம்.  அப்போதே இந்தப் பாடல் கவர்ந்து விட்டது.

அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று.  வழக்கமான ஏமாற்றிய காதலியை, அவள் திருமணத்திலேயே பார்த்து அதிர்ச்சியடடைந்து காதலன் பாடும் காட்சி.  

ஆனந் பாபு நடிப்பில் வந்த படங்களில் சில நல்ல பாடல்கள் அமைந்ததுண்டு.  அவற்றில் இதுவும் ஒன்று.  சமீபத்தில் சன் டிவி திரைவிழாவில் மோகினியைப் பார்த்தபொழுது சிரிப்பாக இருந்தது.  இந்தக் காட்சியைப் பார்க்கும்போது அது நினைவுக்கு வருகிறது.
எல்லாப் புகழும் எஸ் பி பி க்கே!

வானம் நூறாகலாம் 
யாவும் பொய்யாகலாம் 


62 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வ்ணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு சகோ!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹை என்னாது இது!!!!? இங்கு என்ன நடக்கிறது??!!!! அதிசயம் ஆச்சரியம்....ஆனால் உண்மை...நான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ...ப்ளாகர் மெதுவாகப் போட்டும் நான் 1...ஆ!!!! யாருமில்லையா இன்று வரிசையில்!!! குலாப்ஜாமூன் அட்வர்டைஸ்மென்டாகிப் போனதோ ஹா ஹா ஹா

கீதா

துரை செல்வராஜூ said...

வணக்கம் ஸ்ரீராம் கீதா அனைவருக்கும்..

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். துரை செல்வராஜு சகோவைக் காணோம்!

துரை செல்வராஜூ said...

மூன்று நிமிடங்களாக இங்கே மிகப் பெரிய போராட்டம்..

முதல் முறையாக எபி.. திறக்கவேயில்லை..

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். அதற்குள் உங்களைக் காணோம் என்று தேடிவிட்டேன்.

ஸ்ரீராம். said...

ஆமாம்... முதல்முறையாக கீதா ரெங்கன்ஃ பர்ஸ்ட்!

ஸ்ரீராம். said...

எனக்கும் எங்கள் தளம் திறக்க நேரம் எடுத்துக்கொண்டது துரை செல்வராஜூ ஸார். தமிழ்மணத்துடன் வேறு போராட்டம். நல்லவேளை இன்று (என்) கண்ணுக்குத் தெரிகிறது!

துரை செல்வராஜூ said...

முதல் கருத்துரையே 6.02..

ஆனால் நான் 6.00 மணிக்கே கதவைத் தட்டி விட்டேன்...

வாழ்க நலம்..

Thulasidharan V Thillaiakathu said...

துரை சகோ நானும் அப்படியே....கதவைத் தட்டித் தட்டித் திறக்காமல்....எப்படியோ பூங்கதவே தாள் திறவாய் என்று ப்ளாகருக்குப் பாடி ஜீபூம்பா என்றதும் திறந்தது!! ஹாஹா ஹா!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இல்லை ஸ்ரீராம்...துரை சகோதான் முதல் பாருங்க ஹாஅ ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாடலைக் கேட்டதும் விக்ரமன் வாசனை வந்துவிட்டது! இப்பாடலைக் கேட்டிருந்தாலும் அத்தனை அதிகம் கேட்டதில்லை ஸ்ரீராம்..இப்போது கேட்டதும் நீங்கள் சொல்லாமலேயே விக்ரமன் படம் என்பதன் சாயல் வந்தது. விக்ரமன் படம் பாடல்கள் ரிப்பீட்டு ங்கர மாதிரி இருக்கிறது. எனது சமீபகால எண்ணம். எந்தப் பாடலைக் கேட்டாலும் எங்கேயோ கேட்டது போலுள்ளது!!!!!!

பாடல் நல்ல பாடல். எஸ்பிபி கேட்கணுமோ??!!! மோகினி ஏன் இப்படி ஒரு போஸ்!! பார்த்ததும் சிரித்துவிட்டேன்!!!

கீதா

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்!

ஸ்ரீராம். said...

வணக்கம் பானு அக்கா.

ஸ்ரீராம். said...

கீதா.. மோகினி பற்றிய முந்தின பாரா கமெண்ட் படித்ததால் அப்படி ஒரு போஸ்!

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
தம +1

துரை செல்வராஜூ said...

என்னங்க... இப்படியாகிப் போச்சு...

6.03 வரைக்கும் ஆடாத ஆட்டம் ஆடியது எபி... நான் சொல்லிய வாழ்த்தும் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டது..

சரி..போகட்டும்.. என்று இருந்தால்
இப்போது வந்து நிற்கிறது வாழ்த்து...

யாருமில்லை வரிசையில் என்று நினைத்தால் -

ஜீபூம்பா ஊரெல்லாம் சுற்றி விட்டு நல்ல பிள்ளையாக வந்து நிற்கிறது..

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்லபாடல்! இதுவரை கேட்டதில்லை.எஸ்.பி.பியின் பாடலென்றால், கேட்டுக்கொண்டே இருக்கத்தோனும். கேட்க வைத்தமைக்கு நனறி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்தேன். நன்றி.

KILLERGEE Devakottai said...

நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.
இப்பொழுது இந்த மாதிரி பாடல்கள் எழுத முடியாதா ? ரசிக்கும் இசையை தரமுடியாதா ?

திறமைசாலிகள் இன்னும் வெளிச்சத்துக்கு வரமுடியாமல் தவிக்கின்றார்கள்.

ஏகாந்தன் Aekaanthan ! said...

Fast-paced music by Sirpi. SPB இனிதாகப் பாடியுள்ளார். பழனி பாரதி என் மதிப்பில் கொஞ்சம் உயர்கிறார்.
முன்பே கேட்டிருக்கிறேன். வெகுநாட்களுக்குப் பின் கேட்டதில் மகிழ்ச்சி.

ஆனந்த் பாபு அடிக்கடி கண்ணீரை சுண்டிக்கொண்டிருந்ததைப் பார்த்துத் தேம்புகிறாரோ மோகினி !

Thulasidharan V Thillaiakathu said...

ஜீபூம்பா ஊரெல்லாம் சுற்றி விட்டு நல்ல பிள்ளையாக வந்து நிற்கிறது..//

ஹா ஹா ஹா ஹா ஆமாம் துரை செல்வராஜு சகோ!!! ஜீபூம்பா சமர்த்தா தான் வேலை செய்திருக்கு...நான் லேட்டா கமென்டை போட்டாலும் லேட்டஸ்டா தான் போடுவேன்னு சொல்லுதோ?!!!! ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இந்தப் படம் பார்த்ததில்லை. எனவே பாட்டும் கேட்டதில்லை. நான் கேரளா பக்கம் ஒதுங்கியதன் பின் தமிழ்ப்படங்கக்ள் பார்ப்பதே அரிதாகி அப்புறம் பாலக்காட்டிற்கு வந்த பிறகு அதுவும் நான் தனியாக சினிமா பார்க்கத் தொடங்கிய பிறகுதான் மீண்டும் தமிழ்ப்படம் பார்க்க முடிந்தது. பாலக்காட்டில் என்ன படங்கள் வருமோ அவைதான்..அப்போதெல்லாம் பாலக்காட்டில்தமிழ்ப் படங்கள் வருவது ரொம்பவே அரிது. அப்புறம் தான் நிறையத் தமிழ்ப்படங்கள் வரத் தொடங்கின அதுவும் மாஸ் கதாநாயகர்கள் படங்கள் தான் வரும். இப்போதும்..அப்படியே..

பாடல் நன்றாக இருக்கிறது. வரிகளும் நன்றாக இருக்கின்றன.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் ஸ்ரீராம் அப்புறம் நினைத்துக் கொண்டேன் நீங்கள் சன்டிவி அந்த விழாவில் பார்த்ததால் இப்படம் போட்டுருக்கீங்கனு அது சரி நீங்க பார்த்து சிரித்த அந்த சன் டிவிமோகினி எப்படி இருந்தாங்க? ஹிஹிஹிஹி

கீதா

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ ஸ்ரீராம்:

பெண்ணை அழவைத்துப் படம் போட்டு, அதற்குக் கீழே ’எல்லாப் புகழும் எஸ் பி பி க்கே!’ என்றெழுதிவைத்தால் என்ன அர்த்தம் ?

இளமதி said...

அனைவருக்கும் வணக்கம்!

சகோ ஸ்ரீராம் வழமை போல இன்றும் இனிய பாடல்!
முன்பு கேட்ட பாடல். நீண்ட கால இடைவேளைக்குப் பின்பு இன்று மீண்டும் கேட்டேன்.

இசை, குரல், பாடல் வரிகளென அன்றைய பாடல்கள் என்றும் இனிமை!

பகிர்விற்கு நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!

த ம வாக்குப் போட முடியவில்லையே..:(
மீண்டும் வந்து முயற்சி செய்கிறேன்.

athiraமியாவ் said...

ஹா ஹா ஹா இங்கின என்ன நடக்குதூஊ? ஒயுங்காக் கவனிக்காமல் கீதாவுக்கு 1ஸ்ட் பிறைசூ குடுத்து... குடுத்த கையோடு லபக்கெனப் பிடுங்கிட்டாரே ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்:)... ஹா ஹா ஹா :)... கீதா வாங்கோ பிரித்தானியாக் காண்ட் கோர்ட்டுக்குப் போவோம்:)..

துரை அண்ணனின் வாழ்க்கையில் இன்று விதி விளையாடி விட்டதேஏஏ:)..

டமில்மனத்தில்:) திருத்தவேலை நடக்கிறதாம் அதனால ஆரும் வோட் பற்றி இன்று நோ வொறீஸ்ஸ்ஸ்... :)... குடும்பி... வெரி சோரி... டங்கு கொஞ்டமா ஸ்லிப்ட்:)..
கும்மி மட்டும்தான்:)..

athiraமியாவ் said...

படம் பார்த்ததில்லை.. பாடல் கேட்டிருக்கிறேன்...
இப்பாடலைப் போட்டு... இங்கின வருகை தரும் இளைஞர்களின் பால் மனத்தில் :) பழைய நினைவுகளைக் கிளற வச்சு:) குடும்பத்திலே கொயப்பத்தை உண்டுபண்ணி விட்ட ஸ்ரீராமுக்கு சங்கிலி வரப்போகுதூஊஊஊஊ:) கழுத்துக்கல்ல கையுக்கு:)..

இங்கே பாருங்கோ ஏகாந்தன் அண்ணன்கூட மோகினிக்குக் கவலைப்படுறாரே:)) ஹா ஹா ஹா..

///ஆனந்த் பாபு அடிக்கடி கண்ணீரை சுண்டிக்கொண்டிருந்ததைப் பார்த்துத் தேம்புகிறாரோ மோகினி ///

athiraமியாவ் said...

நாகேஷ் தாத்தவின் மகன் ஆனந்தபாபு நடிச்ச இன்னொரு பாடலும் பார்த்திருக்கிறேன்... பாடல் நினைவுக்கு வரவில்லை.. ஆனா அதில், மனதில் ஆளமாகப் பதிந்து விட்ட வரி....

“மாடி வீட்டு ஜன்னல்கூட சட்டை போட்டிருக்கு
இங்கே ஒரு சின்னப் பொண்ணு அம்மணமாயிருக்கு”....

Asokan Kuppusamy said...

மிகவும் இனிமை பாராட்டுக்குரியது தமிழ்மணம் என்ன ஆனது

நெல்லைத் தமிழன் said...

இந்தப் பாடலைக் கேட்ட ஞாபகம் இல்லை. பாடலும் அவ்வளவு ரசிக்கலை. காலையிலேயே த.ம தெரிந்ததால் போட்டுவிட்டேன்.

'கவிதாயினி அதிரா' - புதுசா பாடல் இயற்றாதீங்க. 'சேரிக்குள்ளே சின்னப் பொண்ணு அம்மணமாயிருக்கு' என்பது கவிஞரின் வரி.

வல்லிசிம்ஹன் said...

அந்தக் கதா நாயகி மோஹினி இல்லை.
SPB குரலுக்காக கேட்கலாம். இந்த மதிரி பாடறவன் அழற காட்சி எல்லாம்
இனிமேல் வராமல் இருக்கட்டும். அந்தப் பொண்ணு வாழ்க்கை என்னாவது.

விக்ரமன் படங்களில் பிடித்தது புது வசந்தம்.சரி என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.​

ஸ்ரீராம். said...

மீள் வருகைக்கு நன்றி துரை செல்வராஜூ ஸார்... ஸ்பாமில் சென்று மாட்டி விடுகிறது! அவ்வப்போது எடுத்து விடுவேன்!

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்....

ஸ்ரீராம். said...

நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கில்லர்ஜி.

ஸ்ரீராம். said...

நன்றி ஏகாந்தன் ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி துளஸிஜி. இந்தப் பாடல் நீங்கள் கேட்டதில்லையா? அட!

ஸ்ரீராம். said...

//பெண்ணை அழவைத்துப் படம் போட்டு, அதற்குக் கீழே ’எல்லாப் புகழும் எஸ் பி பி க்கே!’ என்றெழுதிவைத்தால் என்ன அர்த்தம் ?//

ஏகாந்தன் ஸார்... பாடலின் உணர்ச்சி வெள்ளம் என்று கூடச் சொல்லலாமோ! எஸ் பி பி நன்றாய்ப் பாடியிருக்கிறார்.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி இளமதி... தமிழ்மணம் ரிப்பேர் வேலை நடந்து கொண்டிருக்கிறதாமே...

ஸ்ரீராம். said...

நன்றி அதிரா... நீங்கள் சொல்லியிருப்பதை நான் இளமதி சகோவுக்கு பதிலாயத் தந்துவிட்டேன்!

ஸ்ரீராம். said...

அதிரா...

நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் பாடும் வானம்பாடி படப்பாடலான 'வாழும்வரை போராடு' பாடல்.

ஸ்ரீராம். said...

நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி நெல்லை. பாடல் கேட்டதில்லையா? உங்களுக்குத் பிடிக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான்.

ஸ்ரீராம். said...

வாங்க வல்லிம்மா... பாடல் காட்சியில் வருவது கதாநாயகி இல்லை. படத்தின் நாயகி மோகினி. ஆம், புதுவசந்தம் விக்ரமன் படம்தான்.

Avargal Unmaigal said...

நானும் வந்து பாடலை கேட்டுட்டுப் போய்விட்டேன் ஆனால் என்ன கதாநாயகி இடத்தில் அதிராவையும் ஏஞ்சலையும் வைத்து பார்த்தேன் அவங்க அழுதால் எப்படி இருக்குமென்று ஹீஹீ

Geetha Sambasivam said...

என்ன இன்னிக்கு ஏஞ்சலைக் காணோமே??????????????????? பேப்பர் க்ராஃப்ட்ஸில் பிசி?

ஶ்ரீராம், இப்படி எல்லாம் படங்கள் வந்திருப்பதோ, பாடல்கள் வந்திருப்பதோ உங்கள் மூலம் தான் தெரிஞ்சுக்கறேன். ஹிஹிஹி, ஆனால் ஆனந்த் பாபுவையும் தெரியும். மோகினியையும் தெரியும்! படம் புது வசந்தமா? விக்ரமனின் முதல் படம் இல்லையோ? பார்க்கலை! நான் பார்த்த விக்ரமன் படம் ரோஜா, கார்த்திக் நடிச்சது! படம் பெயர் நினைவில் இல்லை. மோகினியை பாலசந்தரின் தொடர்களில் தொலைக்காட்சி சானல்களில் பார்த்திருக்கேன்.

ஸ்ரீராம். said...

இந்தப் பாடல் புது வசந்தம் இல்லை கீதா அக்கா... விக்ரமன் படம்தான். படத்தின் பெயர் 'நான் பேச நினைப்பதெல்லாம்..'

Angel said...

அக்கா கீதாக்கா நேற்று போஸ்டை பார்த்து என்ன படம்னு ஆராய்ச்சி செய்ய போனதில் கமெண்டை பப்லிஷ் பண்ணாம போய்ட்டேன் :) போனில் பப்லிஷ்ட் னு காட்டுது ஆனா வர மாட்டங்குது இங்கே

Angel said...

நேற்று போட்டும் போடாத கமெண்ட் :)

இது மோகினியில்லை :) போன்ல பார்க்கும்போது கொஞ்சம் லைலானு ஒரு ஹீரோயின் இருந்தாங்களே அவங்க மாதிரி இருந்தது
பெரும்பாலான விக்ரமன் ஹீரோஸ் இப்படி கிட்னி உட்பட எல்லாத்தையும் ஹீரோயின்ஸுக்கு தாரை வார்ப்பாங்க சூர்யா நடிச்ச படம் அப்புறம் கேப்டன் நடிச்ச படம்லாம் அதே லைன்தான் ..இப்போ படமெடுக்கிறாரா அவர் ?
நாகேஷின் மகனின் மகன் எதோ [படத்தில் நடிக்கிறாரான்னு விகடனில் வாசிச்சேன் .

ஸ்ரீராம் spb யின் தீவிர ரசிகர்னு நினைக்கிறேன் எங்கிருந்து இப்படி ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிக்கிறீங்க :)

Geetha Sambasivam said...

பாட்டை இப்போத் தான் கேட்டேன். பாட்டு நல்லா இருக்கு. ஏஞ்சலின், அது மோகினி தான் என கூகிள் இமேஜ் செர்ச்சில் சொல்லுதே! :)

ஸ்ரீராம். said...

//அது மோகினி தான் என கூகிள் இமேஜ் செர்ச்சில் சொல்லுதே! :) //

இவ்ளோ ஆராய்ச்சியே வாணாம் கீதாக்கா... என்னைக் கேட்டா சொல்லிட்டுப் போறேன்!

காட்சியில் வரும் நடிகையின் பெயர் லதா என்கிறார் விக்கி. மோகினி வேறு! கதை இன்னான்னா... சின்ன வயசுலேருந்தே அந்த லதாப் பொண்ணை வளர்த்து ஆளாக்கி இவர் தியாகமாய் ஏழையாய் இருப்பதில் அந்தப் பெண் வழக்கம்போல வளர்ந்து நல்ல வேலைக்கு வந்ததும் இவரைப் புறக்கணித்து வேறுஒருவனை மணக்க, அந்த மண விழாவிலே பாடும் வாய்ப்பு தமிழ் ஹீரோவுக்கு. பாடி முடித்துவிட்டு தற்கொலைக்குப் போகும் ஹீரோவை தடுத்தாட்கொண்ட முன்னேற்றி வழிக்கு கொண்டுவருவது நாயகி மோகினி. அவரும் காதலனால் ஏமாற்றப்பட்டு தற்கொலைக்கு வந்தவரே. கடைசியில் ஆ வும் மோ வும் எப்படி இணைகிறார்கள் என்பது கதை.

ஹப்பா...... டி....

ஸ்ரீராம். said...

//ஸ்ரீராம் spb யின் தீவிர ரசிகர்னு நினைக்கிறேன் எங்கிருந்து இப்படி ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிக்கிறீங்க :)//

ஏஞ்சலின்.. நான் எஸ் பி பி யின் அதி தீவிர ரசிகன்தான்! அடுத்ததாய் ஜெயச்சந்திரன், அப்புறமாய் கே ஜெ யேசுதாஸ், மனோ...! ஹிந்தியில் கிஷோர் குமாரின் தீவிர ரசிகன். நான் சொல்லும் சில எஸ் பி பி பாடல்களை நீங்கள் யாராவது இப்போதான் கேட்கிறேன் என்று சொன்னால் ஆச்சர்யமாகிவிடும் எனக்கு!

Angel said...

Garrr sriram எந்த ஆ நு தெளிவா சொல்லனும் கீதா அக்காவுக்கு .Wikipedia சொல்லுது அந்த படத்தில் ரெண்டு ஆனந்த் நடிகராஙனு.

Angel said...

@ கீதா க்கா .ஆமா நான் வீடியோ பார்த்து குழம்பிட்டென்

Angel said...

எங்கே என் கமெண்ட் காணோம் .இப்ப புரியுது நெல்லை தமிழன் அடிக்கடி கமெண்ட் காணும் நு சொல்ரார் கர்ர்ர் for Google

Anonymous said...

En comment kaanom�������

Angel

ஸ்ரீராம். said...

​//Garrr sriram எந்த ஆ நு தெளிவா சொல்லனும்//

ஏஞ்சல்...

குருவாயூரப்பா.....

ஆனந்த் மோகினியை திருமணம் செய்ய வந்து திருமணத்திலிருந்து விலக்கிக்கொண்டு, மோகினி மீண்டும் நல்ல நிலைக்குவ வந்தவுடன் திருமணம் செய்ய வரும் வில்லன். ஆனந்த்பாபு ஹீரோ. மோகினியை கலெக்ட்ர் ஆக்குபவர். இறுதிக்கு காட்சியில் திருமண வீட்டின் வெளியே யேசுதாஸ் குரலில் ஏலேலங்கிளியே என்று பாடி மோகினியுடன் இணைபவர்.​

Angel said...

போனில் தெரியாத கமெண்ட் இப்போ தெரியுதே :))

Geetha Sambasivam said...

//சின்ன வயசுலேருந்தே அந்த லதாப் பொண்ணை வளர்த்து ஆளாக்கி இவர் தியாகமாய் ஏழையாய் இருப்பதில் அந்தப் பெண் வழக்கம்போல வளர்ந்து நல்ல வேலைக்கு வந்ததும் இவரைப் புறக்கணித்து வேறுஒருவனை மணக்க// இதே கதைக்கரு தானே கார்த்திக்-லைலா, சிநேகா நடிக்கும் ஒரு படத்திலும் வந்தது! லைலாவை அதில் மருத்துவர் ஆக்குவார் கார்த்திக்! :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!