வெள்ளி, 8 அக்டோபர், 2010

வருகிறது ஒரு சிறப்பு நாள், நேரம்


இன்று அக்டோபர் எட்டு.
இன்னும் இரண்டு நாட்களில் வருகிறது ஒரு சிறப்பு.
இந்த நூற்றாண்டின் 
பத்தாம் வருடம், 
பத்தாம் மாதம்,
பத்தாம் நாள், 
அன்றைக்கு, காலை பத்துமணி பத்து நிமிடங்களுக்கு, 


நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள், என்ன செய்துகொண்டு இருக்கின்றீர்கள் 
என்பதை, engalblog@gmail.com முகவரிக்கு மெயிலுங்கள். 

முடிந்தால், செல் காமிரா / டிஜிட்டல் காமிரா கொண்டு பத்து மணி பத்து நிமிடம் ஆகும்பொழுது உங்கள் கண்ணுக்குத் தெரிந்த நல்ல காட்சியை படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். சுவையான விவரங்களையும், படங்களையும் 'இது நம்ம ஏரியா வலையில் வெளியிடுவோம். 

பங்கு பெறுகின்ற வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துகள்! 

எடக்கு மடக்கு கேள்விகள், சந்தேகங்கள் இவற்றை, இந்தப் பதிவிற்கு பின்னூட்டமாக பதியுங்கள். 

நன்றி. 
            

29 கருத்துகள்:

 1. ஆமாம் வி ஆர கே - அவைகள் அதீத கனவுகளாக இருந்தால் கூட, சுவையாக இருந்தால் வெளியிடுவோம்!

  பதிலளிநீக்கு
 2. அப்பாவி தங்கமணி - 10-10-10 அன்று 10:10 க்கு எடுக்கப்பட்டது என்று - 'இட்லி' படம் அனுப்பக்கூடாது! ஆமாம், இப்பவே சொல்லிப்புட்டோம்!

  பதிலளிநீக்கு
 3. ரெம்ப ரெம்ப வித்தியாசமா சிந்திக்கிறிங்களே. எப்படி.

  பதிலளிநீக்கு
 4. தமிழ் உதயம் சார் - எங்கள் வாசகர்களை அடிக்கடி வம்புக்கு இழுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் முதல் அப்ஜெக்டிவ்.

  பதிலளிநீக்கு
 5. கண்ணுக்குத் தெரிந்த நல்ல காட்சியை படம் எடுத்து//

  க்குக்குக்கும்..

  பதிலளிநீக்கு
 6. //'இட்லி' படம் அனுப்பக்கூடாது! ஆமாம், இப்பவே சொல்லிப்புட்டோம்! //

  repeat

  பதிலளிநீக்கு
 7. இட்லிதானே. இண்ட்லி இல்லையே:))

  பதிலளிநீக்கு
 8. எங்க இப்படி உங்களுக்கு குசும்பு.

  10.10.2010 அன்று 10.10 என்று இப்போ 12.23 PM பார்க்கிறேன்.

  இந்தியாவை நம்பி ஐ.டி செர்விசெஸ் வித்தால் கஷ்டமிரிடம் (கஸ்டமர்!) திட்டு, விற்கவில்லை என்றால் சி.இ.ஓ விடம் திட்டு - அட போங்கப்பா !

  இன்று 10.10 க்கு விற்றதால் கஷ்டமிரிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தேன் !!

  பதிலளிநீக்கு
 9. அதிகம் பேர் புகைப்படங்களை அனுப்பினால் இடம் "பத்து"மா.

  பதிலளிநீக்கு
 10. // அப்பாதுரை said...
  கண்ணுக்குத் தெரிந்த நல்ல காட்சியை படம் எடுத்து//

  க்குக்குக்கும்..//

  காமிரா கனைக்கிறதா?

  எல் கே :))) ஆமாம்.

  வானம்பாடிகள் இட்லி தான் வேண்டாம்!

  சாய் அக்டோபர் பத்தாம் தேதி இன்னும் வரவில்லை.

  ஹேமா - பத்து பத்து பத்து பத்து பத்து ... !!

  சை கொ ப(த்தும்!)

  பதிலளிநீக்கு
 11. நான் பிறந்தது 10 ஆம் மாதம், ஞாயிற்றுக் கிழமை, காலை 10:10 மணிக்கு . ம்ம்ம்ம்....தேதிதான் பத்து இல்லை.
  நீங்கள் குறிப்பிடிருக்கற நேரத்துல, என் அகக்கண் விரும்பற காட்சி, புறக்கண்ல பட்டா, நிச்சயமா படம் எடுத்து அனுப்பறேன்.:)

  பதிலளிநீக்கு
 12. நன்றி மீனாக்ஷி ..!

  பதிலளிநீக்கு
 13. இந்த மாதத்தில் 5 வெள்ளி, 5 சனி
  5 ஞாயிறு. 826 வருடங்களுக்கு ஒருமுறை தான் இப்படி வருமாம்

  விஜய்

  பதிலளிநீக்கு
 14. அப்பசரி..
  பட், எப்படி எடுத்த படம் 10 மணி, 10 னிடம், 10 ம் தேதி, 10 ம் மாசம், 10 ம் வருடனு நிருபிக்கிறது..?

  பதிலளிநீக்கு
 15. தகவலுக்கு நன்றி விஜய் சார்!

  மாதவன் சார் - எங்களுக்கு அனுப்பப் படுகின்ற படங்களை, ஒரு Negative rheostat monochrome de-scanner இல் feed செய்து உண்மையைக் கண்டுபிடித்துவிடுவோம்!

  பதிலளிநீக்கு
 16. //சாய் அக்டோபர் பத்தாம் தேதி இன்னும் வரவில்லை. //


  அட போச்சுசுப்போ.

  மனசாட்சி - எதுக்கும் நீ மருத்துவரை காண்பது நல்லது

  பதிலளிநீக்கு
 17. ஆமா.. காலை பத்து பத்தா ராத்திரி பத்து பத்தா... எதைப் போட்டா புடிக்கோணும்?

  பதிலளிநீக்கு
 18. //Negative rheostat monochrome de-scanner இல் feed

  ஆங்! அவரு ஆதங்கத்தோட கேட்டா இப்படி கன்னா பின்னானு திட்றீங்களே?

  பதிலளிநீக்கு
 19. காலைனு போட்டிருக்கீங்க... ஹி ஹி..

  (எதுக்கும் பின்னூட்டக் கணக்குல சேரட்டும். டாப் டொன்டிலே இருந்திருந்து இப்பத்தான் வந்திருக்கேன்)

  பதிலளிநீக்கு
 20. அப்பாதுரை சார்,
  காலை பத்து பத்து - ஆமாம் கரெக்ட்.
  இரவு பத்து பத்து என்றால் 22:10 ஆகிவிடுமே!

  பதிலளிநீக்கு
 21. எங்களை நீங்க டாப் ட்வெண்டி இல over take செய்துவிடக் கூடாது என்பதற்காக நாங்களும் உங்க கமெண்ட் பார்க்கும் பொழுதெல்லாம் அதே எண்ணிக்கையில் கமெண்ட் போட்டுவிடுவோம் !! ஹா ஹா ஹா!

  பதிலளிநீக்கு
 22. அஞ்சு சனி வேணும்னா 826 வருசத்துக்கு ஒரு முறை வரலாம், ஆனா ஒரு சனி மாத்திரம் முன்னூத்து அறுவத்தஞ்சு நாளும் நிமிசத்துக்கொருக்கா வருதே?
  (தகவலுக்கு நன்றி விஜய், அடுத்த பார்டிக்கு உதவும்)..

  பதிலளிநீக்கு
 23. அப்பாதுரை அய்யா..108 நல்ல எண். அப்படியே கொஞ்சம் halt பண்ணிக்கோங்க.

  முயல் ஆமை கதையிலே வருமே - முயல் அது மாதிரி...

  ஹி ஹி இதை நான் சொல்லலீங்க.
  சாய்ராம், மீனாட்சி, மாதவன் - இவங்க சொல்றாங்க.. !

  பதிலளிநீக்கு
 24. இந்த பதிவு "எந்திரன்" படம் மாதிரி release ஆவதற்கு முன்னாடியே hit-ஆயிடுச்சே ..! 150 comments எடுத்துடுவீங்க போலிருக்கே.. (கண்ணா... ஒரு ரசிகரின் comment .. ஒரு கோடி ரூபாய் மாதிரி!)

  பதிலளிநீக்கு
 25. //இந்த மாதத்தில் 5 வெள்ளி, 5 சனி
  5 ஞாயிறு. 826 வருடங்களுக்கு ஒருமுறை தான் இப்படி வருமாம்

  விஜய் //
  இந்த வருடத்திலேயே ஜனவரிமாதமும் அப்படி இருந்ததே
  :-)
  (in all the non-leap years, the total number of days from 01 january to 30 september is 273 which is a multiple of seven (days) - in other words, in all the non leap years the january and october day/tes will look alike)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!