சனி, 9 அக்டோபர், 2010

பத்து செய்திகள், பத்து கமெண்டுகள் !



# டி.ஜி.பி.,யாக லத்திகாசரண் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் 'அதிரடி' உத்தரவு. 

** லத்திகாவுக்கே 'லத்தி' சார்ஜா! 

# ஆத்தூர் அருகே நரபலி முயற்சி ? 
** யார் அந்த நரபலி? ஆத்தூர் அருகே என்ன முயற்சி செய்தார் அவர்? 

# இந்தியா - ஆஸி., 2வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா பேட்டிங், அதிரடி ஆட்டம்.
** இப்பிடித்தான் முதல் டெஸ்டும் ஆரம்பித்தது. அப்புறம் என்ன ஆச்சு? 

# 20 கி.மீ., நடைப்போட்டி : இந்திய வீரருக்கு வெண்கலம். 
** எவ்வளவோ தடைப் போட்டிகளில் அன்றாடம் ஜெயித்து வரும் இந்தியருக்கு, நடைப்போட்டி சர்வ சாதாரணம்! 

# மின்சார ரயில் தப்பியது.  
** பவர் கட்டா? 

# பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் இந்தியா அல்ல :முஷாரப். 
** அது சரி. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எது - அதையும் சொல்லிடுங்க சார்! 

# அடுத்த காமன்வெல்த் போட்டி: பெண்களுக்கான மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி!  
** இன்றளவில் இந்தியா இன்னும் இருபது தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள மற்ற போட்டிகளுக்கும் ஏதாவது வேட்டு வைப்பார்களா? 

# நிலவில் காய்கறிகள் விளைவிப்பது சாத்தியமா?   
** விளைவிப்பது சாத்தியமாக இருக்கலாம்; ஆனால் விலை(க்கு) விப்பது (விற்பது) சாத்தியமா?         
    
  
# இந்திய ஜனநாயக கட்சி தமிழகத்தில் தனித்து போட்டி. 
** எங்களைக் கேட்டால், தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவிக்கும் கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து, போட்டியிடலாம். 


# அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு இணையாக கூட்டம்? விஷப்பரீட்சையில் காங்.,
** இதுல என்னங்க விஷப்பரிட்சை? 'பிரியாணிப் பொட்டலங்கள் தயார் செய்தால் போதாதா?' என்கிறார் 'விஷ'யமறிந்த தொண்டர் ஒருவர்!   

13 கருத்துகள்:

  1. பத்தும் முத்து.........வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. /'பிரியாணிப் பொட்டலங்கள் தயார் செய்தால் போதாதா?' என்கிறார் 'விஷ'யமறிந்த தொண்டர் ஒருவர்! /

    குவார்ட்டர் இல்லாம கூட்டம் சேராதே. ‘விஷ’மக்காரத் தொண்டரோ

    பதிலளிநீக்கு
  3. பத்து பத்து பத்து பத்தும் போது பத்து தேய்க்கிற மாதிரி ஞானக்கண்ல ஒரு படம் தோணுது.

    பதிலளிநீக்கு
  4. //ஆனால் விலை(க்கு) விப்பது (விற்பது) சாத்தியமா?//

    வாங்கத் தயார்னு சொல்லுங்க! விலை விச்சுடுவோம்!

    //அது சரி. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எது - அதையும் சொல்லிடுங்க சார்! //
    இதை பர்வேஸ் முஷாரப் வந்து தான் சொல்லணுமாக்கும்! நம்மை ஆள்கிரார்களே, அந்தப் புண்ணாக்குகள் தான்!

    பதிலளிநீக்கு
  5. அப்பாதுரை சார்!

    பத்துப் பத்துன்னு நல்லாப் பளபளன்னு தேச்சிருக்காங்கன்னா சொல்றீங்க! எனக்கென்னவோ இந்தப்பத்துப் போடற பழக்கம் குறைஞ்சாத் தேவலைன்னுதான் தோணுது!

    பதிலளிநீக்கு
  6. பத்து செய்திகளுக்கும் , பத்து கமெண்டுகளுக்கும் பத்துவின் பத்து பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  7. பத்துப் பாட்டு.. பதிற்றுப் பத்து.. போல் இங்கு பத்து விஷயம் பத்தி பத்தி பத்தி-யாய் (..... because because because is a conjunction !!) எழுதியுள்ளீர்கள். நன்று. பத்துப் பத்தாக எழுதவேண்டும் என்று தத்து பித்தாக எழுதாமைக்கு நன்றி. ( நான்தான் அப்படி எழுதுகிறேனோ? )

    இரண்டு விஷயங்கள் இடிக்கின்றன. நகைச்சுவைக்காக "நரபலி" "மின்சார ரயில்" செய்திகளை ஜோக்-காக நினைப்பது தவறு. வேண்டுமென்றால் ஒன்று செய்யாலாம். இந்த மின்சார ரயில் பாதையில் பாறையை வைத்தவனை(ளை?) நரபலி கொடுக்கும் ஆளிடம் சேர்த்து விடலாம்.

    ளை-யை அடைப்புக் குறியில் எழுதிவிட்டேன் என்றாலும் - பெண்கள் இதுபோன்ற தவறுகள் செய்வது குறைவு தான் என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
    (அப்பா தாய்க்குலத்திடமிருந்து தப்பித்தேன்!!)

    பதிலளிநீக்கு
  8. என்ன ஒரே பத்துப் போட்டபடி இருக்கீங்க !

    பதிலளிநீக்கு
  9. அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு இணையாக கூட்டம்? விஷப்பரீட்சையில் காங்.,
    ** இதுல என்னங்க விஷப்பரிட்சை? 'பிரியாணிப் பொட்டலங்கள் தயார் செய்தால் போதாதா?' என்கிறார் 'விஷ'யமறிந்த தொண்டர் ஒருவர்!

    ...:-)

    பதிலளிநீக்கு
  10. நல்லா கலாய்க்கிறீங்க....
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!