Wednesday, October 13, 2010

காமினி சி(வா)த்த மாத்தி யோசி! (சவால் சிறுகதை)

எல்லாம் நினைத்தபடி, திட்ட மிட்டபடி நடந்தது.  டாக்டரின் ஒத்துழைப்புக்கு நன்றி சொன்னாள் காமினி.  நர்ஸ் ஜூனியர் டாக்டர் எல்லாரும் சாட்சிக்கு இருக்கிறார்கள். " பேஷண்ட் ஆபரேஷனுக்கு முன்பாக பயத்தில் தப்பி ஓடி விட்டார்"  என்று வலுவான சாட்சிகளை தயார் செய்தாகிவிட்டது அவர்களுக்குத் தெரியாமலே.  இனி டாக்டர் வெளியேறி அறை காலியானதும் தான் வெளியேறி காரியத்தை கவனிக்க வேண்டியதுதான்.  காமினிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.  

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.      

       

சிவாவுக்கு செல் போனில் ஓர் அழைப்பு.  "மறக்காமல் ரெண்டு துப்பாக்கி எடுத்துக் கொண்டு வந்து விடு" என்று நினைவூட்டினாள்.  சொன்னபடி கேட்கும் பெருமாள் என்றால் சிவாதான்.  சொன்ன வண்ணம் செய்த பெருமாளுக்குப் போட்டி.  காமினிக்கு சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது.

பிறகு எல்லாம் பிளான்படி வேகமாக நடந்தது.  


பரந்தாமன் நல்ல ஆள்தான்.  என்னதான் நல்லவர் என்றாலும் வருமான வரி ஏய்க்காதார் யார்?  அவரும் அந்தத் திருக் கூட்டத்தில் ஒரு தொண்டர்.  தானம் தர்மம் எல்லாம் செய்வதற்கு மனம் தயங்கவில்லை என்றாலும் இந்த வரி கட்டுவதில் ஏமாற்றாமல் இருக்க மனம் வருவதில்லை.  அங்கும் இங்கும் லஞ்சம் கொடுக்க கள்ளப்  பணம்  இல்லாமல்  சரிப்படவில்லை.  பெரிய தலைகள் எல்லாம் வீட்டுக்கு அஸ்திவாரமாக ரகசிய அறைகள் கட்டி வைத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக அடுக்கி வைக்கிறார்களாம்.  பரந்தாமன் இன்னும் அந்த லெவலுக்கு உயரவில்லை.  அதனால்தான் பணத்தை வைரமாக மாற்றி ஒளித்து வைக்க முடிவு செய்து மும்பையிலிருந்து   இரண்டு கோடிக்கு ஆறே ஆறு வைரம் வாங்கி வந்தார்.

அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் முன்பே பதிவு செய்து, பின் காலி செய்து காலியாகவே வைத்திருக்கப பட்ட அறையில் பூசாடியில் தண்ணீருக்கு நடுவே பாலிதீன் பையில் அண்டர் வாட்டர் ஸ்விம் செய்துகொண்டிருந்தது அந்தப் பொதிவு. திட்டமிட்டபடி அதை எடுத்து வருவதற்காக  சிவாவை சரியான வேஷத்தில் வெளியில் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள் காமினி.  கையில் துடைப்பமும் பணியாளியின் உடையும் அவளுக்கு கொஞ்சம் கூடப் பொருத்தமாக இல்லைதான். என்ன செய்வது! சிவாவுக்கு ஓட்டல் செக்யுரிட்டி  யூனிபாரம் நன்றாகப் பொருந்தியிருந்தது!!   

    

காமினி பொட்டலத்துடன் வெளியே வரும்போது அடுத்த அறையிலிருந்து  இரண்டு நல்லுடையணிந்த முரடர்கள் வெளிப்பட்டார்கள்.  அவர்கள் காமினியை நெருங்கி என்ன ஏது என்று கேட்பதற்கு முன்னால் கைத்துப்பாக்கியுடன் பாய்ந்து வந்தான் சிவா.   

     

"ஏய், யார் நீ? இங்கே என்ன செய்யறே?  இந்த அறையைத்தான் காலையிலேயே கிளீன் செய்தாகிவிட்டதே?  இங்கே உனக்கு என்ன வேலை?  எங்கே உன் அடையாள கார்டு?"  பட பட வென்று பொரிந்த படி வந்த சிவா " கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.  இந்தப் பசங்க யாருன்னே தெரியலை. " என்று கிசு கிசுத்துவிட்டு " சார் நீங்க கொஞ்சம் உள்ளே போங்க.. ஓட்டல்லே டெரரிஸ்ட் அட்டாக் இருக்குன்னு தகவல் வந்திருக்கு " என்றதும் இரண்டு தடியன்களும் மும்பை தாக்குதல் நினைவுக்கு வர தப தபவென்று உள்ளே ஓடினார்கள்.    

   

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


செல்வாக்குள்ள அரசியல்வாதியின் கையாட்கள் கண்டபடி வேட்டையாடுவதாக பலத்த வதந்திகளுக்கு நடுவே வைரம் வந்தடைய வேண்டும்.  அதற்குதான் இந்த நாடகம் எல்லாம்.

ரூமுக்குள் பாய்ந்து கதவை தாளிட்டுக் கொண்ட குண்டர் இருவரும் பாத்ரூமுக்குள் பதுங்கிக் கொண்டிருக்க வேண்டும்.  சந்தடியே இல்லை.  போலீஸ் படை வீரர்களாக இருந்தாலும் செல்வாக்குள்ள அரசியல் புள்ளிக்கு அடியாளாக பணி புரிய வேண்டிய நிர்ப்பந்தம்.  உடுப்பு போடாத சமயத்தில் துணிச்சல் சற்றுக் குறைவாகத் தான் இருக்கும் இல்லையா!  

 சிவாவும் காமினியும் பரந்தாமனை சந்தித்து பாக்கெட்டைக் கொடுத்து கமிஷனைப் பெற்றுக் கொண்டனர்.  


"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன். 


"சார் போலீஸ் வேறு, இந்த மாதிரி கைக்கூலிகள் வேறு.  இதுங்களுக்கு வேறே பேர் வச்சுக் கூப்பிடறதுதான் சரி." என்றாள் காமினி.    


 அதன் பிறகு எல்லாரும் பார்க்கும்படியாக அதே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாள் காமினி.  


துப்புத் துலக்கிக் கொண்டு வந்த இரண்டு அதிகாரிகள், ஆசுபத்திரியில் வந்து விசாரிக்கும் போது அவர்களுக்கு பதில் தயாராக இருந்தது. 


" சார் அந்தப் பெண் வயித்துவலி என்று பொய் சொல்லி அட்மிட் ஆனாள்.  பிறகு சோதனை செய்து முடிவெடுக்கப் போகும் தருணத்தில் தப்பி ஓடி விட்டாள் " என்று சொல்லி டாக்டர் ஒத்துழைத்தார்.  

             

நீங்களே சொல்லுங்கள் டாக்டர் நல்லவரா?  பரந்தாமன் கெட்டவரா? காமினி யோக்கியமான பெண்ணா இல்லையா?  

                       

16 comments:

LK said...

rules follow panna maathiri terhiyalayee??

எங்கள் said...

எல் கே சார்.
ரூல்சை ஃபாலோ செய்துள்ளோம். இப்போதைக்கு நாங்க வேறு ஒன்றும் சொல்ல மாட்டோம்!

LK said...

hmm sari sari

RVS said...

ரொம்ப சீக்கிரம் அவசரம் அவசரமா முடிச்சா மாதிரி இருக்கே.. சிறுகதை தானே எழுதச் சொன்னாங்க... சின்னூண்டு கதையா எழுதச் சொன்னாங்க? ஆனா நல்லா வந்திருக்கு...

சைவகொத்துப்பரோட்டா said...

கடைசில ஏன் இம்பூட்டு கேள்விகள்.

Chitra said...

கேள்வி கணை தொடுத்து இருக்கும் நீங்கள், நல்லவரா? கெட்டவரா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

Madhavan said...

//"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.//

I feel above sentence appears just after the following.

//"ஏய், யார் நீ? இங்கே என்ன செய்யறே? இந்த அறையைத்தான் காலையிலேயே கிளீன் செய்தாகிவிட்டதே? இங்கே உனக்கு என்ன வேலை? எங்கே உன் அடையாள கார்டு?" பட பட வென்று பொரிந்த படி வந்த சிவா " கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. //

good concept..
I also think of sending a small story for the same competition..

So.. I am your competitor..
:-)

தமிழ் உதயம் said...

கதை நன்று. கேள்விகள் கேட்பது சிறுகதைக்கு உகந்த விஷயமா.

அஹமது இர்ஷாத் said...

umm..

அப்பாதுரை said...

வித்தியாசமான சுருக் கதை. வாழ்த்துக்கள்.

Madhavan said...

please read my story for the same competition..

madhavan73.blogspot.com

thanks (for free advertisement space)

எங்கள் said...

மாதவன்.
படித்துவிட்டோம். வலையுலகில் இரண்டாம் ஆண்டு காலடி எடுத்துவைக்கபோகும் உங்களுக்கு, எங்கள் வாழ்த்துக்கள்.

மோ.சி. பாலன் said...

மூன்று இழைகள் வைத்து அழகாக ஜடை பின்னியுள்ளீர்கள். ரசித்தேன். ஆயிரம் ரூபாய் பரிசை எம்போன்ற ரசிகர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுகிறேன்!

meenakshi said...

கதை பரவாயில்லை.

Madhavan said...

//மாதவன்.
படித்துவிட்டோம். வலையுலகில் இரண்டாம் ஆண்டு காலடி எடுத்துவைக்கபோகும் உங்களுக்கு, எங்கள் வாழ்த்துக்கள். //

Thanks Engal..

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!