புதன், 19 ஜனவரி, 2011

ஜே கே 11 (ஜே கே மீண்டும்!)


விழிப்புணர்வு அடைதல் ஒரு மிக மெதுவான முறைபாடாக இருப்பது ஏன்?
   
(மன) வேதனை என்பது எண்ணம் / ஆசை ஆகியவற்றின் தொகுப்பின் இருப்புக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.  வெவ்வேறு நடைமுறைகள், பலவாறான கற்பனைகள் வாயிலாக மறத்துப் போகச் செய்து இந்த வேதனைகளை வெற்றி கொள்ள மனம் முற்படுகிறது. தானே ஏற்படுத்திக் கொண்ட இந்த குறுகிய எல்லைகளால் மனம் மீண்டும் மீண்டும் தடுமாற்றம் அடைந்து மேலும் மேலும் வித்தியாசமான வழிமுறைகளை பரீட்சை பார்த்து விளக்கத்தை இழந்து  ஏதோ ஒரு பாதையில் அல்லது நம்பிக்கையில் தன்னை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொண்டு விடுகிறது. இந்த மாதிரியான ஒரு நிலையை பலரும் தம் மிகப் பெரிய சாதனையாக எண்ணிக்கொண்டு விடுகிறார்கள். பழக்க வழக்கங்களை வெற்றி கொள்கிற  உறுதியை மட்டுமே வளர்த்துக் கொண்டோமானால் அந்த உறுதி நிதானமற்றதாகவும் மீண்டும் மீண்டும் செயல்படுவதாகவும் ஆகிவிடுகிறது. பிரமைகளைத்  தாண்டிய  செயல்பாட்டை அறிவதற்கு முன்னால் பழக்கத்தின் காரணமாய் வரும் செயல்பாடு அல்லது லட்சியங்களை முன்வைத்துச் செய்யும்  செயல்பாடு  இவற்றை  நன்கு  அறிந்து கொண்டாக வேண்டும்.  ஏனென்றால் உண்மை என்பது நிதரிசனாக என்ன இருக்கிறது என்பதை அறிவதில் உறைகிறது.  விழிப்புணர்வு என்பது எந்த ஒன்றையும் குறித்து ஆழமாக எண்ணமிடுவதில் இல்லை.  ஆசையின் பல்வேறு பிளவுபடுத்தும்   சக்திகளையும் ஒருமுனைப்படுத்தி அறிவதில் மட்டுமே இருக்கிறது.

 (கூட்டத்திலிருந்து ஒரு வினா:)
விழிப்புணர்வு பெறுவதென்பது  ஒரு மெதுவான நிதானமான விஷயமா? 
ஆர்வம் தீவிரமாக இருக்கும்போது விழிப்புணர்வு முழுமையாக இருக்கிறது.  மனம் என்பது சோம்பேறியாகவும் அச்சம் காரணமாக ஊனமடைந்தும் இருந்தால் விழிப்புணர்வு முனைப்பு குறைந்து மெதுவாக வளர்ச்சி பெறுவதாக ஆகிவிடுகிறது. அப்படியான மனம் இருக்கும்போது அங்கே விழிப்புணர்வு ஏற்படுவதில்லை.  அதற்கு பதிலாக தடுப்புச் சுவர்களை கட்டிக் கொள்ளும் ஒரு மனப் பழக்கம் ஆகிவிடுகிறது.  நம்மில் பலரும் இப்படியான தடுப்புச் சுவர்களைக் கட்டி வைத்துக்  கொண்டு இருப்பதால் விழிப்புணர்வு என்பது ஒரு மெதுவான இயக்கம் ஆகவும் ஒரு படிப் படியான வளர்ச்சியாகவும் நம் சோம்பேறித் தனத்துக்கு திருப்தி அளிப்பதாகவும் இருக்கிறது.  இந்த சோம்பல் நிலையில் இருந்து கொண்டு நாம் ஒத்தி வைப்பு கொள்கைகளை வகுத்துக் கொள்கிறோம் -- இப்போது இல்லை, காலக்கிரமத்தில்./.  ஞானம் என்பது படிப் படியாகத்தான் வரும் / பல ஜன்மங்கள் எடுத்தாக வேண்டி இருக்கும் இப்படியாக பலவும்.  இப்படியெல்லாம் நாம் நமது சோம்பேறித் தனத்தை நியாயப் படுத்திக் கொண்டும் நம் வாழ்வு முறையை அதற்கொப்ப சரி செய்து கொண்டும் காலம் கழிக்கிறோம்.
                                     

8 கருத்துகள்:

 1. ஒவ்வொரு வரிகளையும் ரசித்து வாசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. 'சோம்பேறித்தனத்தை நியாயப்படுத்தும்' நம் வழக்கத்தைப் பற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. இந்த கமென்ட் போடலாமா என்று பத்து நிமிடத்துக்கு முன்னால் யோசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. மனம் ஊனமடைந்த நிலையிலிருந்து விழிப்புணர்வு நிலைக்கு வந்து ஞான நிலை அடைவதற்கு ஜென்ம ஜென்மமாக காத்திருக்க வேண்டியதுதான் சோம்பல் கதவு வழி விடும் வரை.. ஜே. கே யின் குறிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
 4. மனம் என்பது சோம்பேறியாகவும் அச்சம் காரணமாக ஊனமடைந்தும் இருந்தால் விழிப்புணர்வு முனைப்பு குறைந்து மெதுவாக வளர்ச்சி பெறுவதாக ஆகிவிடுகிறது.

  .....rightly said. nice post. :-)

  பதிலளிநீக்கு
 5. விழிப்புணர்வுக்கு முதலில் மனதில் அந்த விஷயம் பற்றிய அக்கறையும் வேணும்.உங்கள் தளத்தில் வித்தியாசமான பதிவு !

  பதிலளிநீக்கு
 6. நீண்ட நாட்கள் ஆனாலும் மீண்டும் தொடர்ந்ததற்கு நன்றி!
  // விழிப்புணர்வு என்பது எந்த ஒன்றையும் குறித்து ஆழமாக எண்ணமிடுவதில் இல்லை. ஆசையின் பல்வேறு பிளவுபடுத்தும் சக்திகளையும் ஒருமுனைப்படுத்தி அறிவதில் மட்டுமே இருக்கிறது.//

  உண்மை!

  பதிலளிநீக்கு
 7. நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு தான். பாரட்டுக்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!