சனி, 1 ஜனவரி, 2011

வாழ்த்துக் கூறுங்கள்!

இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு நேற்றோடு விடை பெற்றுவிட்டது. புதிய  ஆண்டுக்கான வாழ்த்துக்கள், தீர்மானங்கள், இலவசங்கள், இனிய கற்பனைகள் என்று மனம் கணக்குப் பண்ணுவதற்கு ஆரம்பிக்கின்ற நாள்

எங்கள் வாசகர்கள் எல்லோரும் அலைபேசி மூலமாக, எங்களிடம் தங்கள் கருத்துக்களைக் கூற, இங்கே, இடது பக்கத்தில், ஓர் அலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. (மன்னிக்கவும். கொடுக்கப் பட்டிருந்தது. ஓர் அவசரக் குடுக்கை ஆசிரியர் அதற்கு சரியாக பத்தரை மணிக்கு கற்பூர ஆரத்தி காட்டி, 'நீ நாம ரூபமுலகு' பாடிவிட்டார்.) எங்கள் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்தது என்ன பிடிக்காதது என்ன, எந்த சப்ஜெக்டில் பதிவுகள் எதிர்பார்க்கின்றீர்கள் என்பது போன்ற விவரங்களை, வாசகர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த முயற்சி. கருத்துக் கூறுபவர்கள், தங்கள் பெயர், (எங்கள் ப்ளாக் வலைப்பூவில்) தங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது, எதிர் பார்ப்பது போன்ற விவரங்களை சுருக்கமாக கூறலாம். பேசுபவர்களின் பேச்சுக்களை, ஒலிப்பதிவு செய்துஅதை இது நம்ம ஏரியா  பதிவில் வெளியிட முயற்சிக்கின்றோம்

இந்தப் பதிவு, எங்களை அலைபேசியில் தொடர்புகொள்ள இயலாதவர்களுக்காக. இந்தப் பதிவிற்கு பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். அதுமட்டும் அல்ல
நாம் சாதாரணமாக ஒருவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, விடைபெறுகின்ற பொழுது, 'நன்றி வண்க்கம்' கூறுகின்றோம் அல்லவா? அதுபோல, இந்த ஆண்டிற்கு வண்க்கம் கூறுவதற்கு முன்பாக,  'நன்றி' சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். எனவே
இன்றோடு முடியும் இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டில் உங்களுக்கு நடந்த, கடந்த நிகழ்வுகளை, சற்று அசை போட்டுப் பாருங்கள். நீங்கள் யாருக்காவது எதற்காவது நன்றி சொல்ல விரும்பி சொல்லாமல் / சொல்லமுடியாமல் போயிருக்கலாம்; அல்லது சரியாகச் சொல்லாமல் போயிருக்கலாம். மொத்தத்தில், இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டிற்கு நன்றி. ஏன் என்றால், " ................................. ----------------- ............................." என்ற வகையில், இங்கு பின்னூட்டம் பதியுங்கள்.

பின்னூட்ட நண்பர்களுக்கு, வாசகர்களுக்கு எங்கள் ஆதரவாளர்களுக்கு, எங்கள் நன்றி,
வண்க்கம்!

உங்கள் எல்லோருக்கும் இரண்டாயிரத்துப் பதினொன்றாம் ஆண்டு மிகவும் பயனுள்ளதாக, சுவையுள்ளதாக, இனிமையானதாக, வளமானதாக, உங்கள் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுவதாக அமைய எங்கள் நல்வாழ்த்துகள்.
                          

10 கருத்துகள்:

 1. உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி! உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. எங்களில் சிதறிகிடக்கும் ஆற்றலை ஒருங்கிணைக்கும் "எங்களுக்கு" நன்றி

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 3. ஒரு 'test'க்காக, அந்த 'சோதனை'யில் பின்னூட்டமிட்டேன்.. அதுவும் சோதனையாகிப் போனது.

  அந்த ஆக்கம் நன்றாக இருந்தது.
  ஒரு வினோதம் பார்த்தீர்களா?..

  ஆங்கிலப் புத்தாண்டு!
  ஹிந்தியில் பாடல்!
  தமிழ் எழுத்துக்களில் வாழ்த்து!

  இந்த காம்பினேஷக் கலவை
  எடுப்பாகத் தெரிந்தது..

  'எங்கள் Blog'க்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. மிண்டும் நல் வாழ்த்துக்கள் ... நன்றி சொல்வதென்றால் ... தமிழ் வலையுலகத்திற்குத்தான் மிக்க நன்றி ..வாசிக்கும் ஆர்வம் கொண்ட என் போன்றோருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ..
  கனியிருப்பக்காய் கவர்ந்தற்று எனும் வகையில் அல்லவை தவிர்த்து நல்லவை ரசிக்கும் வகையில் நிறைய பதிவுகள் உள்ளது பாராட்டப்படவேண்டும்
  இதில் எங்கள் பிளாக்கான எங்கள்ப்ளாக் கிற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 5. பத்தாண்டு வாழ்த்துக்கள்..!

  அட. ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை..
  நா சொன்னது புதிய பத்தாண்டுகள் -- 2011 முதல் 2020 வரையிலான டிகேட்(decade)..

  பதிலளிநீக்கு
 6. எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் , வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். பத்மநாபன் அவர்கள் சொன்னது போல் இந்த ஆண்டில் இணையம் மூலம் படிக்கக் கிடைத்த பதிவுகளுக்காகவும், பதிவுலக நண்பர்கள் கிடைத்ததற்காகவும் 2010 -க்கு நன்றி

  பதிலளிநீக்கு
 7. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய்
  மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீராம் அண்ட் "எங்கள் ப்ளாக்" டீமுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கு நன்றி! உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

  சென்ற ஆண்டு ,'என் கையே எனக்குதவி' என்று எனக்கு உணர்த்தி, என் தன்னம்பிக்கையை மேம்படுத்திய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!