வியாழன், 27 ஜனவரி, 2011

உள் பெட்டியிலிருந்து ..2011 01

எதிர் எதிரே...


1) பொறுமை கடலினும் பெரிது.. (All good things come to those who wait)

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை! (Time and tide wait for none)

2) வாளின் முனையை விட பேனா முனை கூரானது. (The pen is mightier than the sword) 

பேசிக் கொண்டிருப்பதை விட செயல்படுவது நல்லது. (Action speak louder than words)

3) பல கைகள் சேர்ந்தால் வேலை எளிது. Many hands make the work lighter 
பலர் சேர்ந்து சமைக்க, பாழாகும் பண்டம். Too many cooks spoil the broth!

ஒரே வாய்ப்பு...இயற்கையாக நடி... இரண்டு வாக்கியங்களிலும் என்ன முரண்!
   
கிரிக்கெட் ஒரு ஃபிராடு கேம்தானே...!

** நோ பால் னு சொல்வாங்க... ஆனா கைல பால் வச்சிருப்பாங்க...!

**ஓவர்னு சொல்வாங்க...ஆனா திருப்பித் திருப்பிப் போட்டுகிட்டே இருப்பாங்க..

** பதினோரு பேர் விளையாடற ஆட்டத்துல ஆல் அவுட்னு சொல்வாங்க, ஆனா பத்து பேர்தான் அவுட் ஆகியிருப்பாங்க..

** ஒரு ஓவருக்கு ஆறு பாலும்பாங்க...ஆனால் ஒரே ஒரு பால்தான் வச்சிருப்பாங்க..!

** ஒரு பேட்ஸ்மேன் அவுட்டுன்னா அம்பையர் ஒரு கையைத் தூக்குவார்...சரி, ரெண்டு கையையும் தூக்கறாரே, ரெண்டு பேட்ஸ்மேனும் வெளியே போயிடுவாங்கன்னு பார்த்தா 'ஆறு ரன்னுடா'ங்கறாங்க...!  
              
 'ஷா' சொன்னது சரிதான் போல..!


மூன்று கட்டளைகள்...
(அ) சந்தோஷமா இருக்கும்போது சத்தியம் பண்ணாதீங்க...!

(ஆ) சோகமா வருத்தமா இருக்கும்போது பதில் சொல்லாதீங்க...!

(இ) கோவமா இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீங்க..!

20 கருத்துகள்:

 1. //ஒரு பேட்ஸ்மேன் அவுட்டுன்னா அம்பையர் ஒரு கையைத் தூக்குவார்...சரி, ரெண்டு கையையும் தூக்கறாரே, ரெண்டு பேட்ஸ்மேனும் வெளியே போயிடுவாங்கன்னு பார்த்தா 'ஆறு ரன்னுடா'ங்கறாங்க...!
  ///

  சரியாப் பார்க்கலை .. ஒரு கையில் ஐந்து விரல்கள் திறந்திருக்கும் .மற்றொன்றில் ஒரு விரல் மட்டுமே .

  பதிலளிநீக்கு
 2. கிரிக்கெட் சந்தேகம் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு

  பதிலளிநீக்கு
 3. Good.

  Whenever you have time:

  http://konjamvettipechu.blogspot.com/2010/08/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 4. ஐயயோ தெரியாம வந்துட்டேன்.. எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச கிரிக்கட்டும் மறந்து போச்சு..:))

  பதிலளிநீக்கு
 5. அப்ப ஒரு கை/விரல் உயர்த்தினா ஒரு ரன்னு அர்த்தமோ? ஹி ஹி.

  பதிலளிநீக்கு
 6. சைனாமென்னு சொல்வாங்க ஆனா இந்தியா பௌலர் பௌலிங் போடுவாரு !!!!!

  விஜய்

  பதிலளிநீக்கு
 7. உள்பெட்டியில் மூன்று கட்டளைகள் சரிதான் !

  பதிலளிநீக்கு
 8. எல்லாம் நல்லாயிருக்கு. ஆனா மூன்று கட்டளைகள் ரொம்ப பிடிச்சிருக்கு.

  பதிலளிநீக்கு
 9. இதுக்கு தான் எங்கம்மா ஜாஸ்தி படிக்காதே மூளை வழிஞ்சுரும்னு சொல்வாங்க.

  பதிலளிநீக்கு
 10. ஹி.. ஹி.. நாகூட இதுல ரெண்டு மூனு யோசிச்சு இருக்கேன்.. ஒங்களப் போலவே..
  விட்டுப் போனது
  கிரிக்கெட்டுலே : பேருதான் French கட், ஆனா அடிச்சது பிரெஞ்ச் மென் இல்லை.

  எதிரும் புதிரும் :
  ௧) கிட்டாதாயின் வெட்டென மற
  ௨) முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்..

  பதிலளிநீக்கு
 11. பயனுள்ளதாகவும், சிந்திக்கவும் வைக்கிறது

  பதிலளிநீக்கு
 12. கோபம் மட்டுமில்லை, எந்த உணர்வின் தாக்கத்தில் இருந்தாலும், சந்தோஷம் உட்பட, எடுக்கிற முடிவு சரியாக இருக்காது. முடிவெடுக்கும் போது அஸெர்ட்டிவாக இருந்தால் மட்டுமே, அதாவது அடல்ட் ஈகோவில் இருந்தால் மட்டுமே சரியான முடிவுகளை எடுக்க முடியும்.

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 13. குரோம்பேட்டைக் குறும்பன்28 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:49

  // எல் கே said...
  /.....ரெண்டு பேட்ஸ்மேனும் வெளியே போயிடுவாங்கன்னு பார்த்தா 'ஆறு ரன்னுடா'ங்கறாங்க...! /

  சரியாப் பார்க்கலை .. ஒரு கையில் ஐந்து விரல்கள் திறந்திருக்கும் .மற்றொன்றில் ஒரு விரல் மட்டுமே .

  அம்பயர் கையில் ஆறு விரல்கள் இருந்தால் - மட்டை வீசும் அணிக்கு ஏழு ரன்கள கொடுக்கப்படுமா?

  பதிலளிநீக்கு
 14. குரோம்பேட்டைக் குறும்பன்28 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:59

  // மூன்று கட்டளைகள்...

  (அ) சந்தோஷமா இருக்கும்போது சத்தியம் பண்ணாதீங்க...!


  (ஆ) சோகமா வருத்தமா இருக்கும்போது பதில் சொல்லாதீங்க...!


  (இ) கோவமா இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீங்க..! //

  சரி

  (அ) ரொம்ப வயித்தெரிச்சலோட சொல்றேங்க : " சத்தியமா நீங்க நல்லா எழுதறீங்க!"

  (ஆ) கோவமா பதில் சொல்றேங்க "*சரி!*"

  (இ) கோவமா இருக்கும்போது மட்டும் இல்லைங்க நான் எந்த நேரத்திலும் முடிவு எடுப்பதில்லை. திருமதிதான் எல்லா முடிவும் எடுப்பார்.

  பதிலளிநீக்கு
 15. //குரோம்பேட்டைக் குறும்பன் said...
  " அம்பயர் கையில் ஆறு விரல்கள் இருந்தால் - மட்டை வீசும் அணிக்கு ஏழு ரன்கள கொடுக்கப்படுமா? " //

  ஒங்களுக்கு ரூல்ஸ் தெரியாதா?
  அம்பயர் ஆகணும்னா ஒவ்வொரு கைகளிலும் கண்டிப்பாக ஐந்து விரல்கள் இருக்க வேண்டும்.. ஐந்து விரல்கள் மட்டுமே இருக்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
 16. ’ஷா’ சொன்னது ரொம்பச் சரி!! கிரிக்கெட்டின் விதிகளைப் புரிந்துகொள்வதற்குள் வெறுத்துடும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!