புதன், 22 ஆகஸ்ட், 2012

உள் பெட்டியிலிருந்து - 8 2012

நன்றி சொல்லும் நேரம் 


உங்களைப் புண்படுத்தியவர்களுக்காகக் கண்ணீர் சிந்தாதீர்கள். அவரை விட சிறந்த நண்பனைத் தேடும் வாய்ப்பு தந்ததற்காக நன்றி சொல்லுங்கள்.

===========================

பழசுதானோ..
 

நின்றால் மரமாக நில்லுங்கள். விழுந்தால் விதையாக விழுங்கள்.

=============================
புரிகிறதா... 
 

மகன்...திருமணமாகும் வரை.
மகள் கடைசி வரை.

=========================

பாடம்
 

தவறான மனிதர்கள்தான் சரியான பாடத்தை புரிய வைக்கிறார்கள்.

===========================

ஸோ பொசசிவ்...
 

அவன் அன்பு 
என்னைக் கொல்கிறது...
குறிப்பாக அது 
மற்றவர்கள் மேல் 
எனும்போது.

=========================
 

LKG பொண்ணு.: "டாய்...! எங்க அப்பாவுக்கு IG வரைக்கும் தெரியும்...என் கிட்ட வாலாட்டதே..."
 
UKG பையன் : "எங்கப்பாவுக்கு Z வரைக்கும் தெரியும்..... போடி..."

========================
 
 
இங்க்லீஷ் டீச்சர் : "ஒரு காம்பவுண்ட் செண்டன்ஸ் சொல்லு"
 
மாணவன் : "இங்கு சுவரில் நோட்டிஸ் ஒட்டக் கூடாது"
 
=======================

ஒரு குழந்தையின் டைரி...
 
 
ஜூலை 15 ; ஓவரியுடன் இணைந்தேன்.
ஜூலை 17  நான் இப்போது ஒரு திசு.
ஜூலை 30  அம்மா அப்பாவிடம் சொன்னால் சந்தோஷமாக "நீங்க அப்பாவாகப் போறீங்க" 
அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாக இருந்தார்கள்.
ஆகஸ்ட் 30 : அம்மா சாப்பிடுவதுதான் எனக்கும் உணவு.
செப்டம்பர் 15 : என் இதயத் துடிப்பை என்னால் உணர முடிகிறது.
நவம்பர் 16 : இப்போது எனக்கு சின்னச் சின்னதாக கைகள், கால்கள், மற்றும் வயிறு.
டிசம்பர் 15 : இன்று எனக்கு அல்டிராஸ்கேன்.அய்யா நான் ஒரு பொண்ணு.
ஜனவரி 1 : நான் செத்துப் போனேன். அப்பாவும் அம்மாவுமே என்னைக் கொன்று விட்டார்கள். நான் பெண் குழந்தை என்பதால்... நான் என்ன தவறு செய்தேன்? தாயை, மனைவியை, சகோதரியை ஏன் பெண் நண்பியைக் கூட நேசிக்கும் மனிதன் ஏன் மகளைக் கொல்கிறான்.... சொல்லுங்கள்...
 
 

==================================

படங்கள் : நன்றி இணையம்.
 

16 கருத்துகள்:

  1. அருமையான சொல்லோவியங்கள்
    வாழ்த்துக்கள் குறிப்பாக இஜட் வரைத் தெரிவது
    கருக் குழந்தையின் கேள்வி
    மனம் அறுத்துப்போகிறது
    மனம் கவர்ந்த பதிவு

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சிரிச்சுடப்போறோமுன்னு கடைசியா சேத்துட்டீங்க போல..

    பதிலளிநீக்கு
  3. உங்களைப் புண்படுத்தியவர்களுக்காகக் கண்ணீர் சிந்தாதீர்கள். அவரை விட சிறந்த நண்பனைத் தேடும் வாய்ப்பு தந்ததற்காக நன்றி சொல்லுங்கள்.//

    மனவேதனைக்கு மருந்தானது. கடைசிக் குறிப்பு அழ வைத்துவிட்டது. ஆறுதலாக நேற்று ஒரு இளைய சிநேகிதி தனக்கு இரண்டாவது குழந்தையும் பெண்ணாகவே பிறக்க வேண்டும் என நினைப்பதை எண்ணிக் கொண்டேன். வீட்டில் எல்லாரும் ஆண் குழந்தை என எதிர்பார்க்கிறார்களாம்.

    பதிலளிநீக்கு
  4. ஆங்கில ஆசிரியைக்குத் தான் கணக்கு தெரியாது என்றால், குட்டி பையனுக்கும் கூடவா? பன்னிரண்டு ஆருக்குப் பின் பதிமூன்று ஏழு !!

    கீதா மேடம், எனக்கு நல்லா சிவக்கப் பொரிந்த அப்பளம் தான் பிடிக்கும் என்கிற அம்மாக்களையும், "கருப்பு ஒரு நிறம் - காந்தல் ஒரு ருசி" என்னும் பாட்டிக்களையும் பார்த்திருக்கிறீர்கள் தானே ?

    பதிலளிநீக்கு
  5. நாட்டில் நடக்கும் உண்மையை நினைத்து வருத்தப்பட வைத்தது...

    அனைவருக்கும் கல்வி எப்போது வருமோ...?
    (அப்போதாவது கொஞ்சம் குறையலாம்) இந்நிலை மாறும் காலம் எப்போது வருமோ...?

    நன்றி...

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொகுப்பு.

    UKG பையனும், ஆங்கில வகுப்பு மாணவனும் கலக்குகிறார்கள்!

    குழந்தையின் டைரி உருக்கம்.

    பதிலளிநீக்கு
  7. // அவரை விட சிறந்த நண்பனைத் தேடும் வாய்ப்பு தந்ததற்காக நன்றி சொல்லுங்கள். // அட இது அருமை

    //மகன்...திருமணமாகும் வரை.
    மகள் கடைசி வரை.// இது என்ன ஆப்போசிட்டா இருக்கு

    //ஒரு குழந்தையின் டைரி...// விழிப்புணர்வு... அருமை

    பதிலளிநீக்கு
  8. //மகன்...திருமணமாகும் வரை.
    மகள் கடைசி வரை.//

    இதை இப்படிப் புரிந்துகொள்ளலாமா...

    பெற்றோரைச் சார்ந்திருப்பது....
    மகன்...திருமணமாகும் வரை.
    மகள் கடைசி வரை.


    :-))))))

    (ரெண்டும் பையனாப் பெத்து வச்சிருக்க என் வயத்துல புளியக் கரைக்கிறீங்களே... :-)))))) )

    டைரிக்குறிப்பு....
    ஹும்ம்... என்னைமாதிரி பொண்ணுக்கு ஏங்குறவங்களும் இருக்காங்க.....

    எல்கேஜி பொண்ணுக்குக்கூட இப்பல்லாம் அப்பாவின் ”பவர்” ரேஞ்ச் என்னன்னு தெரிஞ்சுருக்கு!! ஆமா, அப்பாவுக்கு ஐஜியைத் தெர்யும்; ஐஜிக்கு அப்பாவைத் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  9. முதல்ல நல்லா ஆரம்பிச்சு கடைசியில கஷ்டபடுத்திட்டீங்க!

    பதிலளிநீக்கு
  10. அந்த கடைசி குழந்தையின் டைரி! கலங்க வைத்தது! சிறப்பான பகிர்வு!
    இன்று என் தளத்தில்
    கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

    பதிலளிநீக்கு
  11. இன்னைக்குத்தான் ஒரு இணைய நண்பரை உதறினேன். அது உங்களூடைய முதல் கருத்து

    பதிலளிநீக்கு
  12. கவித்துளி மனதில் விழுந்தது.டைரி...ஏன் இப்பிடி ?

    பதிலளிநீக்கு
  13. காம்பவுண்ட் செண்டன்ஸ்... சூப்பர்!

    ஒரு பெண் குழந்தையை பெத்து வளக்கறவங்களுக்கு மட்டும்தான் பெண்ணோட அருமை புரியும்.
    கண்கலங்க வெச்சுடீங்க.

    பதிலளிநீக்கு
  14. எங்கள் ப்ளாக்25 ஆகஸ்ட், 2012 அன்று 12:31 PM

    ரமணி சார், அப்பாஜி, கீதா மேடம், Baskaran, திண்டுக்கல் தனபாலன், அமைதிச்சாரல், ராமலக்ஷ்மி, சீனு, ஹுஸைனம்மா, ஹேமா(HVL), s. suresh, சே. குமார், ஜெய்சங்கர் ஜெகன்னாதன், ஹேமா, மீனாக்ஷி...

    வருகைக்கும், ரசித்தமைக்கும், ஆதரவு தந்த பின்னூட்டங்களுக்கும் எங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!