எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1) கடலூர் மாவட்டம், நெய்வேலியை அடுத்த சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த
தேவதாஸ்-ராஜேஸ்வரி தம்பதியரின் மகள் தேன்மொழி தஞ்சை தனியார் பல்கலைக்
கழகத்தில் மின்னியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் பிரமோஸ் ஏவுகணைத்
திட்ட விஞ்ஞானியாக கேம்பஸ் இன்டர்வியூவில் தெரிவு செய்யப் பட்டிருப்பதை
அவர் கிராம மக்கள் சந்தோஷமாகக் கொண்டாடி உள்ளனர்.
2) கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சிவில் எஞ்சினீர் டிப்ளமா முடித்த ரவிச்சந்திரன் புதிய தொழில் நுட்பத்தில் 25 நாட்களில் வீடு கட்டித் தருகிறார். மழைக்காலம் ஆரம்பித்தால் வெல்லச் சேதம் அதிகமாகி குடிசைகள் நாசமாகி ஏழைகள் கஷ்டப் படுவதைத் தவிர்க்க, குறைந்த நாட்களில், குறைந்த செலவில் அஸ்திவாரத்தில் கம்பி இல்லாமல் புதிய தொழில் நுட்பத்தில் வீடுகளைக் கட்டி வருகிறாராம். 'லோகாஸ்ட் பில்டிங் டெக்னாலஜி'க்காக தமிழ்நாடு அறிவுசார்ந்த பொருட்கள் கழகத்திடம் காப்புரிமையுய்ம் பெற்றுள்ளாராம். 220 சதுர அடியில் 11 அடி உயரத்தில் 1.20 லட்ச ரூபாய் செலவில், வீட்டின் அடிப்பகுதிக்கு 'பிளிந்த் பீம்' காலம் என ஒரு 'மோல்டும்', வீட்டின் மேற்கூரைக்கு ரூப் ஸ்லாப், காலம் லிண்டேளுக்கு ஒரு மோல்டும் பயன்படுத்தி, 25 நாட்களில் கட்டி முடிக்கப் படும் இவ்வீடுகள் தரமானதாகவும், 75 வருடங்களுக்கு உறுதியாகவும் இருக்கும் என்று கூறுகிறார். இவர் கட்டும் வீடுகளில் ஒரு ஹால், கிச்சன், டாய்லெட், செப்டிக் டேங்க், மழைநீர் சேகரிப்புத் தொட்டி என்று எல்லாம் இருக்குமாம்.
3) பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக் கழகத்தில் செய்த ஆராய்ச்சிகளின்படி தண்ணீர்விட்டான் கிழங்கு நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்துவதைக் கண்டு பிடித்திருக்கிறார்களாம். எலிகளின் உடலில் குளுகோஸ் அளவு அதிகப் படுத்தும் மருந்து செலுத்தப்பட்டு, அப்புறம் தண்ணீர் விட்டான் கிழங்கு சாறும் செலுத்தப்பட்டு 28 நாட்கள் சோதனை நடத்தப்பட்டதாம். எலிகளின் உடலில் இன்சுலின் அதிகமாகச் சுரந்து சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டதைக் கண்டறிந்துள்ளார்களாம்.
4) மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி இயக்குனர் பிரவீணா கார்மல்: வகுப்பறையில், 10 நிமிடம் கூட அமர முடியாதவர்கள், உடல், மன வளர்ச்சி தேங்கியவர்கள் ஆகியோருக்கு, சிறப்புப் பள்ளி தான் சிறந்தது. இங்கு தான், ஒவ்வொரு சிறப்புக் குழந்தைக்குமான, தனிப் பாடத் திட்டம், கவனிப்பு எல்லாம் கிடைக்கும். சிறப்புக் கல்வி மட்டுமல்ல, மொழி வளர்ச்சிக்கான தெரபி, மூளை நரம்புகளையும், உடலியக்க நரம்புகளையும் ஒருங்கிணைக்கும் தெரபி, நடத்தை சரியாக்கல் பயிற்சி, விளையாட்டு, உணவு, இசை, நடனம், கலை என, ஒவ்வொன்றின் மூலமும், மாணவனின் வளர்ச்சியை, வயதிற்கேற்றவாறு மீட்க, சிறப்புப் பள்ளிகளால் மட்டுமே இயலும். இந்தப் பள்ளியில் சேர்ந்தால், காலத்திற்கும் அங்கேயே இருக்க வேண்டி வருமோ என்ற பயம், சில பெற்றோருக்கு உண்டு. ஆனால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியைப் பொறுத்து, ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகளில் குழந்தைகளை, "நார்மல்' பள்ளிக்கே அனுப்பி விடலாம். தற்போதைய கல்வித் திட்டத்தின் படி, ஒரே இடத்தில் அமைந்திருக்கும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, "அனைவருக்கும் கல்வி திட்டத்தின்' கீழ், சிறப்பு ஆசிரியர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இவர், வழக்கமான ஆசிரியர்களைத் தவிர்த்து, பிரத்யேகமாக ஒவ்வொரு குழந்தைகளுக்குமான, மன, உடல் வளர்ச்சியை பதிவேடாக பராமரித்து, கவனித்துக் கொள்வார்.

அரசோ, தனியாரோ பொதுவாக நார்மல் பள்ளிகளில் சக மாணவர்களுடன் சேர்ந்து
படிப்பது, ஒரு சிறப்பு மாணவனை, அவனை தேங்கிய நிலையிலிருந்து மீட்க,
பெருமளவு உதவுகிறது. பலரோடு ஒன்றாக வளர்வதால், ஒளிந்திருக்கும் தனித்
திறமைகள் வெளிப்படும். பெற்றோருக்கும், தங்கள் மகன் நார்மல் பள்ளியில்
படிப்பதில் ஒரு நிம்மதி.
5) லண்டன்: நான்கு ஆண்டுகளில் விமானத்தில் பறக்காமல் கடல் மற்றும் தரைவழி என பஸ், ரயில் ஆகியவற்றின் மூலம் 201 நாடுகளுக்கு பயணித்து
5) லண்டன்: நான்கு ஆண்டுகளில் விமானத்தில் பறக்காமல் கடல் மற்றும் தரைவழி என பஸ், ரயில் ஆகியவற்றின் மூலம் 201 நாடுகளுக்கு பயணித்து
பிரிட்டனைச்சேர்ந்த வாலிபர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து உலகை சுற்றி வந்த முதல் வாலிபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார் பிரி்ட்டனைச் சேர்ந்தவர் கிராஹம் ஹக்கிஸ் (33). இவர் பிரிட்டனின் லிவர்பூல் மாகாணத்தைச் சேர்ந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியன்று தனது பயணத்தை துவக்கினார். மொத்தம் 201 நாடுகளுக்கு இவர் சுற்றுப்பயணம் செய்தார்.
எந்த சூழ்நிலையிலும் வேறு நாட்டிற்கு செல்ல இவர் விமானத்தை
பயன்படுத்தவே இல்லை. கடந்த 2009-ம் ஆண்டு புத்தாண்டு அன்று (ஜனவரி 1-ம் தேதி) தனது பயணத்தை துவக்கி மொத்தம் 1,426 நாட்களில் 1லட்சத்து 60 ஆயிரம் மைல்கள் ( 2 லட்சத்து 46 ஆயிரம் கிலோ மீட்டர்கள்) பயணித்துள்ளர். இவற்றில் சில நாடுகளுக்கு கடலில் படகு மூலமாகவும், பக்கத்து நாடுகளுக்கு ரயில், பஸ், டாக்ஸி போன்ற வாகனங்கள் வாயிலாகவும் மொத்தம் 201 நாடுகளுக்கு சென்றார். இறுதியில் ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானை நேற்று சென்றடைந்தார். தற்போது அந்நாட்டின் தலைவர் ஜூபாவில் தங்கியுள்ளார்.வரும் ஜனவரி மாதம் அதே புத்தாண்டு அன்று தாய்நாடு திரும்ப உள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோமீட்டர் பயணித்து உலகம் சுற்றிய முதல் வாலிபன் என்ற சாதனையையும், விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற உள்ளதாக டெய்லிமெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தனது செலவிற்காக வாரத்திற்கு 100 டாலர் செலவிட்டுள்ளார். தவிர பயணத்தின் போது ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டிற்கு சென்ற போது அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அநாட்டின் கேப்வெர்தே நகர் சிறையில் ஒரு வாரம் வைக்கப்பட்டதாகவும், பின்னர் ரஷ்யாவிற்குள் நுழைந்த போது இவரை உளவாளி என நினைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் தனது பயண அனுபவங்களை தெரிவித்துள்ளார்.தாம் மேற்கொண்ட இந்த மெகா பயணத்தை ஆவணப்படமாக தயாரித்துள்ளார். இவற்றை வெளியிட்டு அதன் வாயிலாக அறக்கட்டளை ஒன்றிற்கு நிதி திரட்ட உள்ளார்.
6) புத்தகத் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் முருகேசன் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், மளிகைக் கடையில் வேலை செய்து, பிறகு அவர் மகன் இறைமணி (இவர் மக்களின் பெயர் இரமணி, இறைதாசன், இறைமலர்) பெயரில் ஒரு கடை போட்டு, அப்போது அங்கு எடைக்கு வரும் துண்டு பேப்பர்கள் முதல் பழைய புத்தகங்கள் வரை சேகரிக்கத் தொடங்கியவர் அவற்றை என்ன செய்வது என்று தெரியாமலேயே வைத்திருக்கும்போது அறிமுகமான திண்டுக்கல்லைச் சேர்ந்த ஃபாதர் ஞானப்ப்ரகாசம் நிறைய கல்லூரிகளுக்கு மாணவர்களுக்கு புத்தகங்களைக் கொடுத்து விடச் சொல்வாராம்.

அப்படித் தொடங்கிய
சேவை இதுவரை மதுரைக் கல்லூரிகள் முதல் சென்னைக் கல்லூரிகள் வரை பல
மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இவரது புத்தகங்கள் உதவி பி ஹெச் டி
வாங்கியுள்ளனராம். அவர்களாக ஏதாவது தொகை கொடுத்தால் வாங்கிக் கொள்வாரே
தவிர, பேருந்துக் கட்டணம் தவிர வேறு எந்தத் தொகையும் கேட்பதில்லையாம்.
கொடுத்த புத்தகங்களை அவர்களது வேலை முடிந்தவுடன் அந்தப் புத்தகங்களை
எப்படியும் வாங்கி விடுவாராம், அடுத்தவர்களுக்கு உதவ. இவரது பெயரை, தனது
ஆராய்ச்சிக் கட்டுரையில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளவர்களை நினைவு
கூருகிறார். இவரை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது ஆனந்த
விகடனில் பாரதி தம்பி எழுதியுள்ள தெருவிளக்குப் பகுதி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செய்திக்கொத்த் அருமை! நல்ல பணி ! தொடர வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள். முதல் செய்தியே எங்கள் ஊர் செய்தி - நெய்வேலி... :)
பதிலளிநீக்குசிவில் என்ஜினியர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தகவலுக்கு நன்றி....
பதிலளிநீக்குஉங்கள் பாசிடிவ் செய்திகள் அனைத்தும் மன நிறைவைக் கொடுக்கின்றன.
பதிலளிநீக்குசெல்வி தேன்மொழி, திருமதி பிரவீனா, குறைந்த செலவில் வீடு கட்டும் தொழில் நுட்பம் கண்டறிந்த திரு ரவிச்சந்திரன், லண்டன் வாலிபர் ஹக்கீஸ் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
திண்டுக்கல் என்றாலே படிப்பாளிகளோ?
நம்ம திண்டுக்கல் அண்ணாச்சி போல!இவரைப் போல இன்னும் நிறைய புத்தகத் தாத்தாக்கள் வரட்டும்!
கல்விக் கண் திறக்க உதவும் இவருக்கு சிறப்புப் பாராட்டுக்கள்!
பாஸிடிவ் செய்திகளில் தினமும்
பதிலளிநீக்குஎந்தெந்த ஊரில் இன்று கரெண்ட் இருக்கிறது
என்பதை போடலாம்.
இனி கடிதங்களில் துவக்கம் இப்படி இருக்கும் :
கரண்ட் இருக்கிறது. அங்கே கரண்ட் இருக்கிறதா என அறிய ஆவல்.
இந்த வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புக்கல்வி பற்றி எழுதியிருப்பது மகிழ்ச்சி.
இவர் எந்த ஊர், பள்ளியின் பெயர், அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,
தெரிந்தால் நல்லது.
சுப்பு ரத்தினம்.
meenasury@gmail.com
5ல் என்ன பாசிடிவ்?
பதிலளிநீக்கு2 சுவாரசியம். இந்த நுட்பத்தின் சாத்தியப் பயன்பாடுகள் பிரமிக்க வைக்கிறது.
பதிலளிநீக்கு2: ஏழைகளுக்கு பயனாகக் கூடிய முறை. ஊக்கம், உதவி தரப்பட வேண்டும் இவருக்கு.
பதிலளிநீக்கு4: பாராட்டுக்குரியவர் பிரவீணா.
6. வித்தியாசமான தொண்டு.
தொகுப்புக்கு நன்றி.
அனைத்துமே அருமையான செய்திகள்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தொகுப்பு. புத்தகத்தாத்தாவை நானும் வாசிச்சேன். அற்புதமானதொரு பணியை இவர் செஞ்சுட்டு வரார். இவர் செஞ்சுட்டு வரும் புத்தக உதவியால் நிறையப்பேர் டாக்டர் பட்டம் வாங்கியிருப்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.
பதிலளிநீக்குஎல்லா செய்திகளுமே சுவாரசியம்
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு.திண்டுக்கல்லைப் பற்றிச் சந்தேகMமே படவேண்டாம். எல்லாம் முத்துகள்.
பதிலளிநீக்குஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் இவர்
போற்றப் பட வேண்டியவர்.
அனைத்தும் அருமை... முக்கியமாக கடைசி செய்தி சூப்பர்-ஹிஹி...
பதிலளிநீக்குநன்றி...
மீண்டும் திண்டுக்கல் ! அங்கு போனால் புத்தக தாத்தாவை பாக்கணும் !
பதிலளிநீக்கு