சேனைவறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேனைவறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.11.15

"திங்கக்கிழமை 151123 :: சேனையை வறுப்போம்!

           
முதலிலேயே சொல்லி விடுகிறேன்.  இது யாரும் செய்திராத பண்டம் அல்ல.  இந்த வாரம் நாங்கள் இதைச் செய்தோம்! அவ்வளவுதான்!  




ஹிஹிஹிஹி...  
    

   
முக்கால் கிலோ அளவிருக்கும்.  உருண்டையாக, வெட்டாமல் முழு சேனைக் கிழங்கு வாங்கி வந்திருந்தோம்.  


  
தோல் சீவிய பிறகு, அதை ஒரே அளவினதாய் படல் படலாய் நறுக்கி எடுத்துக் கொண்டோம்.  இவ்வளவு பெரிதாக இருந்தால் எங்களுக்குப் பிடிக்காது என்பவர்கள் சிறிது சிறிதாகவும் அரிந்து கொள்ளலாம்!  
    
சேனையின் அளவைப் பொறுத்து கொஞ்சம் புளி எடுத்து, கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொண்டோம்.  அதில் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், காரப்பொடி சேர்த்து கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொண்டோம்.  

நறுக்கிய சேனைத் துண்டுகளை அதில் ஊரப் போட்டு, தடவி, அரை மணி நேரம் வைத்திருந்தோம்.  பின்னர் மைக்ரோவேவ் அவனில் ஐந்து நிமிடம் வைத்து எடுத்தோம்.

சோளமாவு போன்றவை இல்லாததால் ரவா, அரிசி மாவு கொஞ்சமாய்த் தூவி,

  
     
தோசைக்கல்லில் போட்டு எடுக்கலாமா என்று யோசித்து, வேண்டாம் என்று வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் இதைப் போட்டுப் பொரித்து எடுத்துச்.........






சாப்பிட்டு விட்டோம்!