வியாழன், 30 ஜூன், 2016

160630 :: எப்படி ..... எப்புடி ..... எப்பூடி!

 

நேற்றைய பதிவின் மூன்று கேள்விகளுக்கு பதில்களை இங்கே பார்ப்போம்.

வினா ஒன்று :

இதைக்  கொஞ்சம் கஷ்டமாகவே தேர்ந்தெடுத்தேன்.
முதல் கேள்வியிலேயே சிந்தனை செலுத்தி, அடுத்ததற்குப் போகாமல் இருக்கின்றார்களா அல்லது தெரியாததை விட்டு, தெரிந்த கேள்விகள் பக்கம் நகர்கிறார்களா என்று  தெரிந்துகொள்ள ஆவல்.

பெரும்பான்மை வாசகர்கள் மூன்றையும் முயன்றிருக்கிறார்கள்.

முதல் கருத்து உரைத்த ... ஸ்ரீமலையப்பன் போற்றுதலுக்கு உரியவர். மூன்றையும் முயன்று, முதல் ஆளாக தன கருத்தை கூறியிருக்கிறார்.

அவர் கூறிய இரண்டாம் புதிரின் விடை சரியான விடைக்கு மிக அருகாமையில் .

மாதவன் கூறிய 'அனதர் ' பதில் மிகவும் சரி.

அதற்குப் பின்  ஆனந்தராஜா விஜயராகவன் (அதாங்க நம்ம ஆவி!) மாதவன் இருவரும் கலக்குக் கலக்கென்று கலக்கியிருக்கிறார்கள். இருவரின் விடாமுயற்சியையும் மனமாரப் பாராட்டுகின்றோம்.

கீதாசா  லேட் ஆக வந்ததால் இரண்டாம் புதிரின் சரியான விடையை முதலில் கூறுகின்ற வாய்ப்பை தவறவிட்டார்.
கமெண்ட் மாடரேஷன் இந்தப் புதிர்களுக்கு தேவையில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இது பரிசுப்போட்டி அல்ல.

நெல்லைத்தமிழன், ஹுஸைனம்மா, மாடிப்படி மாது எல்லோரும் முயற்சி செய்துள்ளனர். அவர்களின் ஊக்கத்திற்கு எங்கள் பாராட்டுகள்.

 பல கோணங்களிலும் முயன்று பலவகை பதில்களையும் பொருத்திப் பார்த்த எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு.

வாழ்க வளமுடன்!

சரி சரி  இப்போ எங்கள் பதில்கள்.

எப்படி !
1) A I J Q Y 
விளக்கம் : நியூமராலஜி. மேற்கண்ட எல்லா எழுத்துகளுக்கும் , உரிய எண் ஒன்றேதான். (ஒன்று)

எப்புடி !
2) TODAY IS TODAY; TOMORROW IS ANOTHER DAY. 
விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கின்றேன். எல்லோரும் ஏற்கெனவே கூறிவிட்டீர்கள்.

எப்பூடி !
3)    K  Z  R  E D. 
அட என்னங்க நீங்க எல்லாம்! இவ்வளவு டீ வி விளம்பரங்கள் பார்க்கறீங்க,
Dக்கு முன்னாடி  Eவரும் என்று கூடவா தெரியலை?

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!
       

18 கருத்துகள்:

 1. Dக்கு முன்னாடி Eவரும் என்று 'டீவி விளம்பரங்கள்' சொல்லியதென்னவோ உண்மைதான்,
  ஆனால்
  Z க்கு முன்னாள் K வரும்,
  R க்கு முன்னாள் Z வரும்,
  E க்கு முன்னாள் R வரும்
  எனச் சொல்லவே இல்லையே, அய்யஹோ என் செய்வேன் ?

  பதிலளிநீக்கு
 2. சரி பரவால்ல. மீள் பதிவு வரும்போது, அடிச்சி தூள் கெளப்பிடலாம்

  பதிலளிநீக்கு
 3. அட? கடைசிப் புதிருக்கு இந்த விடையைத் தான் எழுத நினைச்சேன். சிரிக்கப் போறாங்க எல்லோரும்னு நினைச்சுட்டுச் சொல்லலை! பல்பு! :(

  பதிலளிநீக்கு
 4. நியூமராலஜி பத்தியே தோணாததாலே முதல் புதிரின் விடையை யூகிக்கவில்லை!

  பதிலளிநீக்கு
 5. ஓ அந்தக் கடைசி விளம்பரமா....ஹும் டி வி பார்த்தாதானே தெரியும்...இதுக்காச்சும் கேஜி சாரோட புதிருக்காகவேனும் இனி டி வி பார்க்கணும் போல ...ஹஹஹ் .

  முதல் விடை நாங்கள் Q என்று தான் கொடுத்திருக்கிறோம்.....ஆனால் பாருங்கள் லேட்டா வந்ததுதானல வடை போச்சு....ஹிஹிஹி அது கண்டுபிடிச்சது நியுமராலஜி எல்லாம் இல்லை...பேங்க் எக்சாம் எல்லாம் எழுதின ஒரு சின்ன கெஸ் ல ஹிஹிஹி ஓ அது நியூமராலஜிப்படியா...ஹும் அதெல்லாம் எமக்குத் தெரியாதே... அப்படினா நியூமராலஜிப்படி இன்றுதான் எங்களுக்கு அந்த முதல் புதிருக்கு விடை சரியாகக் கண்டு பிடிக்க ஏற்ற நாள் இது எப்புடி..

  பதிலளிநீக்கு
 6. எப்புடி எல்லாம் சமாளிக்கறாங்க பாருடா!
  அடுத்த வாரம் புதிர்ல யாரு என்ன சொல்றாங்கன்னு பாத்துடுவோம்ல!

  பதிலளிநீக்கு
 7. நல்லவேளை...விடைகளைத் தேடி மேற்கொண்டு முயற்சிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை..!!!!

  பதிலளிநீக்கு
 8. கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று உணர்ந்தேன்! அருமையான புதிர்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. மூன்றுக்கும் வித்தியாசமான அணுகுமுறை தேவை வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. நான் மற்றவங்களுக்காக விட்டுக்கொடுத்தேன்.

  பதிலளிநீக்கு
 11. எனக்கு ரெண்டாவது மட்டுமே தெரிஞ்சது .அதான் ஒளிஞ்சிருந்து வேடிக்கை பார்த்தேன் :)

  பதிலளிநீக்கு
 12. டி க்கு முன்னாடி ஈஈஈ யா /// இந்த பொது அறிவு கூட இல்லாம போச்சே ஆண்டவனே

  பதிலளிநீக்கு
 13. அருமையான பதிவு

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  பதிலளிநீக்கு
 14. வேலைப் பளுவினால் வலைப்பக்கம் ஒதுங்க முடியவில்லை. அடுத்த முறை பார்க்கலாம்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!