Tuesday, June 7, 2016

கேட்டு வாங்கி போடும் கதை :: காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்.எங்களின் இந்த வார "கேட்டு வங்கிப் போடும் கதை" பகுதியில் நண்பர் ரிஷான் ஷெரீஃபின் படைப்பு.  

உதவிய திருமதி ராமலக்ஷ்மிக்கு எங்கள் நன்றி.

நண்பர் சொல்லியிருக்கும் வம்சி வெளியீடான "காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்" புத்தகம் என்னிடமும் இருக்கிறது.  எனக்கு அதை நண்பர் மூன்றாம் சுழி அப்பாதுரை பரிசாக அளித்தார்.  அந்தப் புத்தகத்தில் அவர் படைப்பும், இந்தத் தொடர் பகுதியில் ஏற்கெனவே தனது படைப்பைத் தந்திருக்கும் ஹேமா (HVL) படைப்பும் கூட இருக்கின்றன.


கீழே நண்பர் ரிஷான் ஷெரீபின் பக்கங்களின் சுட்டிகளைத் தொடர்ந்து அவர்  கருத்தும், அதைத் தொடர்ந்து அவர் படைப்பும்...======================================================--

            இந்தச்சிறுகதை 2011 ஆம்ஆண்டுஊரில்இருந்தபோதுஎழுதியதாகஞாபகம். அக்காலத்தில்நிறையஎழுதுவதற்கானவாய்ப்பும், நேரமும்கிடைத்துக்கொண்டேயிருந்தன. எழுதிஎங்காவதுசேமித்துவிட்டு, மறந்துவிட்டிருப்பேன். பின்னர்வேறாவதொன்றைத்தேடும்போதுகண்களில்சிக்கி, பயனுள்ளதாகும். 'காக்கைகள்துரத்திக்கொத்தும்தலைக்குரியவன்' எனும்இந்தச்சிறுகதையும்அவ்வாறுஒன்றுதான்.

            2012 ஆம்ஆண்டுஇந்தியா, வம்சிபதிப்பகம்சர்வதேசரீதியில்ஒருசிறுகதைப்போட்டியைஅறிவித்தது. அதில்கலந்துகொண்ட, வலைப்பதிவுலகில்2011 ஆம்ஆண்டுவெளிவந்த 373 சிறுகதைகளிடையேஎனது'காக்கைகள்துரத்திக்கொத்தும்தலைக்குரியவன்'ிறுகதைக்குமுதல்பரிசான 10000/= வழங்கி, அதேதலைப்பில்தொகுப்பாகவும்வெளியிட்டுகௌரவித்ததுவம்சிபதிப்பகம்.

இன்றுவரையில்இச்சிறுகதைசர்வதேசரீதியில்பலநாட்டுஇதழ்களிலும்பிரசுரம்கண்டிருப்பதோடு, சர்வதேசபல்கலைக்கழகசிறுகதைப்பயிற்சிப்பட்டறைகளில்இச்சிறுகதையைமுன்வைத்துபாடங்கள்நடத்தப்படுவதையும், கதைவிவாதங்களில்கலந்துரையாடப்படுவதையும்அறியத்தரும்போதுமகிழ்ச்சியடைகிறேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவின்சிறந்தஎழுத்தாளர்கள்இச்சிறுகதைகுறித்துதமதுதிறனாய்வுக்கட்டுரைகளைஎழுதியிருக்கிறார்கள்.

            சிறுகதைபற்றியஎனதுகுறிப்போடு, அவர்கள்சிலரதுகட்டுரைகளையும்இணைத்திருக்கிறேன். இச்சிறுகதைஏற்கெனவேகீழுள்ளஇதழ்களிலும், இன்னும்நானறியாதசிலஇதழ்களிலும்பிரசுரமானது.
பெருவெளி - இலக்கியஇதழ் - 07, ஜனவரி, 2011
# கலைமுகம்இலக்கியஇதழ் - 51, ஏப்ரல் - ஜூன், 2011
# எங்கள்தேசம் - 200 ஆவதுசிறப்பிதழ்
# வடக்குவாசல் - செப்டம்பர், 2011
# காற்றுவெளிஇலக்கியஇதழ்
# உயிர்மைகலைஇலக்கியஇதழ்
# நவீனவிருட்சம்கலைஇலக்கியஇதழ்
# திண்ணை இணையத்தளம்
# தமிழ்எழுத்தாளர்கள்இணையத்தளம்

            நீங்கள்இதைமீள்பிரசுரம்செய்யவிருப்பதில்மகிழ்ச்சியும், அன்பும், நன்றியும் !

என்றும்அன்புடன்,
எம்.ரிஷான்ஷெரீப்
06.05.2016


============================================================
எம்.ரிஷான்ஷெரீப்


 
            காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறிவைத்தன. அவன் பகல்வேளையில் வெளியே வந்தால் போதும்.     தெருவின் கரண்ட் கம்பிகள்தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன்வாடியிலெனக் காத்திருக்கும்காக்கைகள் அல்லது ஒற்றைக்காக்கையேனும் அவனதுதலையைக் குறி வைத்துப்பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒருமுறை கொத்திவிட்டுப் போன காக்கைதிரும்ப அவன் வெளியில் அலைந்து வீடுதிரும்பும்வரை கொத்துவதுமில்லைதுரத்துவதுமில்லைஅவன் வீட்டுக்குத் திரும்பி, மறுபடியும் வெளியே வரும் சமயம் வந்து கொத்திவிட்டுப் பறக்கும். அதை அவன் கவனித்திருக்கிறான். ஒருமுறை கழுத்துப் பகுதியில் சிறகுதிர்ந்தசற்று சாம்பல் நிறம் கலந்த காக்கைஇப்படித்தான் செய்ததுஎல்லாக் காக்கைகளும் இப்படித்தானென அதிலிருந்து அவன் புரிந்துகொண்டான். தங்களுக்குள் முறைவைத்துக்கொண்டு வந்து கொத்துகின்றனவோ என்று கூட ஐயப்பட்டான்.

          
காக்கை கொத்திவிட்டுப் பறக்கும்போதுதான் அவன்ஆதி முதல் கற்றறிந்த வசவுமொழிகளை வெளியில் உதிர்ப்பதைக் காணக் கிடைக்கும்.   ஓங்காரமான குரல், தெருவெல்லாம் அலறும். தலையைக் கொத்திப் போன வலி மறையும்வரை மிகக் கொச்சையான சொற்கள் எல்லாம் அவனிலிருந்து காக்கைகளுக்குப் பறந்து கொண்டே இருந்தன. தெருவின் பெரியவர்கள் தமக்கிடையே திட்டிக்கொண்டும், வீட்டுக் கதவு ஜன்னல்களை அடைத்தபடியும் தாங்கொணா அவனது வசவு மொழிகள் தமது வீடுகளுக்குள் நுழைந்திடாதபடி தடுத்துக்கொண்டனர்சிறுவர்களுக்கு அவனது தலையை காக்கைகள் கொத்தி விட்டுப் பறப்பது மிகப்பெரும் வேடிக்கையாயும்அவனுதிர்க்கும் சொற்கள் அவனை மீண்டும் மீண்டும் உசுப்பியும் குழப்பியும் விடப் போதுமானதாயும் இருந்தன. காக்கைகளெல்லாம் கொத்திவிட்டுப்பறந்த பின்னர் அவன் திட்டித் திட்டி ஓய்ந்துதலையைத் தடவியபடியும்தடவியவிரல்களில் இரத்தச் சிவப்புகளேதேனும் ஒட்டியிருக்கிறதா எனப்பார்த்தபடியும் வரும்போது சிறுவர்கள்  'கா..கா' எனக் காக்கையின் மொழியைக் கத்திவிட்டு ஓடுவார்கள்அவன் விந்தி விந்தி ஓடித் துரத்துவான். அவன் ஓடுவதைப் பார்க்கதவளையின் பாய்ச்சல் போலவும் நண்டின் நகர்வினைப் போலவும் இருக்கும்.

          
ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங்கால்கள் இரண்டும் பிறப்பிலேயே வளைந்திருந்தன. இன்னும் அவன் மிகவும்ஒல்லியானவன்அவனது முகம் போஷாக்கேதுமற்று மெலிந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்று சிறியது. நெடிய இமைகளைக் கொண்ட சிறிய விழிகளைப் பார்க்கப் பாவமாகவும் இருக்கும்.   கருத்த சருமம் உடையவனல்ல. அதற்காக சிவப்பானவனாகவும் இல்லை. ஒருமாதிரியாக வெள்ளைக் காகிதத்தில் செம்மண்தூசுஅப்பியதைப் போன்ற வெளிறிப் போனநிறம்நெற்றியிலிருக்கும் சுருக்கக் கோடுகளை வைத்து மட்டுமே அவனது வயது முப்பதுக்கும் நாற்பதுக்குமிடையிலிருக்குமென அனுமானிக்கலாம். குட்டையானவன்வளைந்த கால்கள் அவனை இன்னும் குட்டையாகக் காட்டினஒரு போதும் அச் சிறுவர்கள் எவரும்அவனிடம் அகப்பட்டதில்லை.

           
சாதாரணமாகவே அவன் யாரிடமும் பேசுவதில்லைஎந்தக் கொம்பனாலும் அவன துநாவசைய வைத்து, வாயிலிருந்து ஒற்றைச் சொல்லை உருவியெடுக்க முடியாதுஎல்லாக் கேள்விகளுக்கும் 'ஆம்,இல்லைஎன்ற ஆமோதிப்பு அல்லது மறுப்புக்களைக் குறிக்கும் தலையசைவுதான் அவனிடமிருந்து வெளிப்படும். மிகவும் முக்கியமென்றால் மட்டும் கைகளால் கூடச் செய்கை செய்வான். அவனுக்கு அவர்கள் புரட்டிப் புரட்டிப் பேசும் மொழிகளெல்லாம் நன்கு தெரிந்திருந்ததுஅவை அவனிடமிருந்து ஏதோ ஒன்றைக் காற்றுக்கு எடுத்துப் போவதாக நினைத்தானோ என்னவோ அவன் ஏனோ சொற்களை உதிர்க்கப் பயந்தான். ஒருவேளை அவனிடம் நிறைந்திருக்கும் சொற்களையெல்லாம் உதிர்க்க வைப்பதற்காகத்தான் காக்கைகளும் வந்து கொத்தி விட்டுப் பறக்கின்றனவோ என்னவோ? வானொலிப் பெட்டிக்கு அதன் தலையில் ஒரு அழுத்தி இருக்கும்அதை அழுத்தி விட்டால் பேசும். ஒலிக்கும்பாடும்.   அதுபோல அவனது பேச்சுப் பெட்டிக்கும் தலையில்தான்அ ழுத்தி இருப்பதாகவும் காக்கைகள் வந்து அழுத்திவிட்டுச் சென்றால்தான் அது பேசுமெனவும்குழந்தைகளுக்குக் கதை சொன்னபடி தாய்மார் உணவூட்டினர்.

           
அவன் ஒரு அநாதை என்றே ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டனர்எங்கிருந்தோ வந்து சேர்ந்தவன் அவ்வூரில் நீண்ட காலமாக வாழ்ந்துவந்தான். காக்கைகள் துரத்திக் கொத்துமெனக் கண்டறிந்த நாள் முதல் அவன் பகல்வேளைகளில் வெளியே வரத் தயங்கினான். மிக முக்கியமான தேவைகள் இருந்தால் மட்டுமே பகலில் வெளியே வருவான். அவன் அவ்வூரில் பெரிய ஹோட்டல் வைத்திருக்கும் பெரியவர் ஹோட்டலிலேயேவேலைக்கிருந்தான்அவனுக்கென்று சிறுகுடிசையொன்றை ஹோட்டலுக்கருகிலேயே கட்டிக்கொள்ளும் அனுமதியைப் பெரியவர் அவனுக்கு வழங்கியிருந்தார். அவன் அதில்தான் வசித்தான்ஒரு தண்ணீர்க் குடம், இரண்டு அலுமினியப் பீங்கான்கள்ஒரு கேத்தல்ஒரு சிறுகுவளைஒரு சாக்குக் கட்டில், ஒரு தலையணைஇரண்டு வெள்ளைச்சாரன்கள், முன் பக்கத்தில் இரண்டு பாக்கெட்டுக்கள் வைத்த இரண்டு வெள்ளை அரைக்கைச் சட்டைகள் அவனது உடைமைகளென அக்குடிசையை நிரப்பினஅடுத்த நாள் ஹோட்டலில் வழங்கும்ரொட்டிக்காக இரவில் மா பிசைந்து ரொட்டி தயாரிப்பது அவன் வேலைகாக்கைகளுக்குப் பயந்து அவையெல்லாம் கூடடைந்த பின்னரான முன்னிரவில்அவன் ஆற்றுக்குப் போய்க் குளித்து வருவான். பிறகு ஹோட்டலுக்குப் போய் பகல் சமைத்து மீதமிருக்கும் சோற்றை உண்டுவிட்டு ரொட்டி தயாரிக்கத் தொடங்குவான். வேலை முடிந்த விடிகாலையில் காலை மற்றும் பகலுணவுக்கென சில ரொட்டிகளைப் பார்சலாக எடுத்துக்கொண்டு அவன் குடிசைக்கு வந்தால் இனி அந்திசாயும்நேரம் வரை உறக்கம்தான்உணவுக்கும் தண்ணீருக்குமென மட்டும் எழும்புபவன் மீண்டும் உறங்கிப் போவான்.            எப்பொழுதாவது மிகவும் முக்கியமாகத் தேவைப்பட்டு, பெரியவர் உத்தரவிட்டால் மட்டுமேஅவன் பகல் வேளையில் வெளியே வருவான்.   ஒருமுறை இப்படித்தான் பெரியவர் வீட்டில் விறகு வெட்டித் தரும்படி அவனைக் கூப்பிட்டிருந்தார். வீதி தோறும் விரட்டிக் கொத்திய காக்கைகள்பெரியவர் வீட்டு முற்ற மாமரத்தில் வசித்த காக்கைகளெனப் பல காக்கைகள்கொத்தியதில்விறகுவெட்டும்போது அவனது வியர்வையோடு சொட்டு இரத்தமும் நெற்றியிலிருந்து கோடாய் வழியலாயிற்று. வசவுமொழிகள் வாயிலிருந்து பெருஞ்சத்தமாக உதிரலாயிற்று. வீட்டின் கன்னிப் பெண்கள் யன்னல் வழி விசித்திரமாகப் பார்த்திருந்தனர்பெரியவரின் தாய்க் கிழவி அவனை விறகுவெட்ட வேண்டாமெனச் சொல்லி அவனது வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்அவனது சிறு வயதில் குஞ்சுகளிருந்த காக்கைக் கூடொன்றைக் கைகளால் பிய்த்தெறிந்தாகவும் அதற்காகத்தான் காக்கைகள் எப்பொழுதும் அவனைப் பழி வாங்குவதாகவும், காக்கைகள் அவனைக் கொத்துவது குறித்து ஊருக்குள் நிலவி வந்த கதையைக் கிழவி அப் பெண்களோடுப கிர்ந்துகொண்டாள். வரும் வழியில் கொத்தி ஓய்ந்த எந்தக் காக்கையும் அவனைக் கொத்தவுமில்லை. துரத்தவுமில்லைஅவன் அமைதியாகக்  குடிசை வந்து சேர்ந்தான். தலையைத் தடவியபடியே உறங்கிப் போனான்.

          
ஹோட்டலில் வெளியே அனுப்ப ஆளில்லாச் சமயங்களில் பெரியவர்அவனை மீன் வாங்க அனுப்பி வைப்பார்அதுதான் அவனுக்கு அவனது வேலைகளிலேயே மிகவும் வெறுப்பான வேலை. மீன் வாடிக்கருகில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் காக்கைகள் குறித்துஅவன் பயந்தான்மீனின் உதிரிப் பாகங்களைக் கொத்தித் தின்று பழகிய அவைகளின் சொண்டுகள் மிகக் கூர்மையானவை என்பதனை அவன் உணர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் சொண்டிலிருக்கும் உணவுப் பாகத்தைத் துப்பிவிட்டு, அவை ஒரு கடமையை நிறைவேற்றுவது போல அவனது தலையைக் கொத்திவிட்டுப் பறந்தனசந்தைக்கு வந்திருக்கும் அவனையறியாத புதிய மனிதர்களெல்லாம் அவனை ஒருஅதிசயப் பிராணியாகப் பார்த்தனர்இடுப்பில் குழந்தைகளைச் செருகியிருக்கும் அம்மாக்கள், குழந்தைகளுக்கு அவனை வேடிக்கை காட்டினர்.   சந்தையிலிருக்கும் ஒரு விசித்திர, வேடிக்கைப் பொருள் என்பது போல அக்குழந்தைகளும் அவற்றின் கண்கள் மின்னவும்வாய் பிளந்தும், சிரித்தும் அவனைப் பார்த்து ரசித்தன.

          
இப்படித்தான் ஒருமுறை அவன் சந்தையிலிருந்து மீன் வாங்கி வரும் வேளை பள்ளிக்கூடச் சீருடையோடு ஒரு சிறுமி, புளியங்காட்டுக்குள் தனியாக அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தான்அவளது இதழ்கள் கோணி, எச்சிலும், மூக்குச் சளியும், கண்ணீரும் ஒருசேர வடிய கைகளில் இருபுளியம் பழங்களோடு அந்தஅத்துவானக் காட்டுக்குள் அவள் தனித்திருந்ததைப் பார்த்தான்நின்று அருகில் போய் என்னவென்று கைகளால் விசாரித்தான்யாருமற்ற காட்டுக்குள் வெண்ணிற ஆடையோடு கால்கள் வளைந்து குட்டையான இவனைப் பார்த்ததும் முதலில் அச்சமுற்ற சிறுமி பின்னர் தான் பழம் பறிக்க வந்து வழி தவறிப் போனதைச் சொல்லி விசித்தழுதாள். அவளை அழைத்துக் கொண்டு மீண்டும்சந்தைப் பகுதிக்கூடாக வந்து அடுத்த ஊருக்கான தெருவிலுள்ள அவளது வீட்டுக்கு அவளைக் கொண்டு சேர்த்தான். இடையில் புளிய மரக் காக்கையொன்றுஅவன் தலையைக் கொத்திவிட்டுப் பறந்ததுஅந்தத் தெருவிலுள்ள ஒன்றிரண்டு காக்கைகளும் அவனது தலையைக் கொத்திப் பறந்தன. காக்கை பறந்து வரும் 'விஸ்க்எனும் ஒலியைக் கேட்ட போதெல்லாம்சிறுமி விம்மியபடி திரும்பி காக்கையைப் பயத்தோடு பார்த்தவாறிருந்தாள்சில சிறுவர்கள் 'கா..கா' எனக் கத்தி விட்டுஓடினர்மிகவும் அதிசயப்படத்தக்கதாக அவன்அச் சிறுமி முன்னால் காக்கைக்கெதிரான வசவு வார்த்தைகள் எதையும் உதிர்க்கவில்லை.   அச் சிறுவர்களைத் துரத்தி ஓடத் துணியவில்லை. மௌனமாக, அத்தோடு அச் சிறுமியிடம் கேட்காமலேயே அவளது வீட்டுக்கு அவளை மிகச் சரியாகக் கொண்டு வந்து சேர்த்திருந்தான். அன்றிலிருந்துதான் ஊரில் எல்லோரையும் அவன் நன்றாகஅறிந்து வைத்திருக்கிறானென்ற செய்தி ஊருக்குள் பரவியது. காக்கையன் என ஊருக்குள் அழைக்கப் படுபவன் சிறுமியைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்த செய்தி அவன் பற்றிய நல்லெண்ணத்தை ஊருக்குள் விதைத்தது.

          
அன்றிலிருந்து ஊருக்குள் அவனைக் காணும் சிலர் அவனின் நலம் விசாரித்தனர்பதில்களெதுவும் வராது எனினும் அவனைக் காக்கைகள் கொத்தாமலிருக்க வெளியே வரும்போது தொப்பி அணிந்து கொள்ளும்படியும் அல்லது காக்கைகள் பார்த்து மிரளும் படியாக மினுங்கும் ஏதாவதொரு நாடாவைத் தலையைச் சுற்றிக்  கட்டியபடி வெளியே வரும்படியும் சிலர் ஆலோசனைகள் கூறினர். சிலர் பலாப் பழத்தோலைப் போல கூறுகூறாய் மேல் நோக்கி வளர்ந்திருந்த அவனது தலை முடியினை முழுவதுமாக அகற்றி மொட்டையடித்துக் கொள்ளும்படியும், அல்லது நீண்ட கூந்தல் வளர்க்கும் படியும் கூடச் சொல்லினர். இன்னும் சிலர் இது ஏதோ செய்வினைசூனியமெனச் சொல்லி அவர்களுக்குத்தெரிந்த மாந்திரீகர்களிடம் தாயத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும்படி கூறினர்அவன் எதுவும் பேசாமல் தலையை அசைத்துஏற்றுக் கொண்டதாகச் செய்கை செய்தான். அடுத்தமுறை பகலில் வெளியே வருகையில் அவர்கள் சொன்னவற்றை நடைமுறைப்படுத்தப் பார்த்தான்எதற்கும் அசையாக் காக்கைகள் அதன்பின்னால் தொப்பியைக் கொத்திப் பறந்தன. ஒருமுறை கொத்திய காக்கைகள் கூட மீண்டும் மீண்டும் சுற்றி வந்து திருப்பித் திருப்பிக் கொத்தினகூடி நின்று ஒருசேரக் கொத்தின. அவ்விடத்திலேயே பெருத்த ஓசையுடனான வசவு வார்த்தைகளோடு தொப்பியையும் நாடாவையும் கழுத்தில் ஏறியிருந்த கறுப்புத் தாயத்தையும் கழற்றி வீசியெறிந்தான்.

          
ஒரு இரவில் அவன் ஹோட்டலுக்கு ரொட்டிதயாரிக்க வராததைக் கண்டு பெரியவர் அனுப்பிய ஆள் அவனது குடிசை திறந்து தேடிப் பார்த்தான்தண்ணீர்குடத்தையும், இருந்த ஆடைகளையும் காணப் பெறாதவன்அவன் ஊரைவிட்டு எங்கோ போய் விட்டதாக வந்து சொன்னான். அவனைத் தேடிப் போக அலுத்தவர்கள் ஓரிரண்டு நாள் பொறுத்துப் பார்க்கலாம்என இருந்தனர்ரொட்டி தயாரிக்கும் பொறுப்பு நெடுங்காலமாக ஆவலாகக் காத்திருந்தவேலை தேடிப் போயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டதுமறுநாள் விடிகாலையில் குளிக்கப்போன அவ்வூர் மருத்துவச்சிக் கிழவிதான் கரையோரப் பாறையொன்றில் வழுக்கிவிழுந்து மண்டை உடைந்து பெரிய சிவப்பு எறும்புகள் மொய்க்ககுருதிகாயச் செத்துக் கிடந்தவனைக் கண்டு அலறினாள்ஆற்றங்கரையின் மருதமரத்தில், அயல் மரங்களிலென எல்லாவற்றிலும் கருப்புத் திட்டுக்களாய்க் காக்கைகள் அவனைச் சுற்றிலும் கரைந்தபடி இருந்தன. அவன் எழவில்லைஎனினும் அவ்வூர்க் காக்கைகளெல்லாம் ஒன்று சேர்ந்தாப் போலக் கூட்டமாக இருந்து அவனைப் பார்த்துக் கரைந்தனஇரைதேடி அலைதல் மறுத்து அப்பிணம்அகற்றப் படும்வரையில் அங்கேயே கிடந்தன. இனிமேல் அவனது தலை வானொலிப் பெட்டியை அழுத்தி, ஒலிக்க வைக்கச் செய்யமுடியாதென அறிந்தோ என்னமோ, அவை அவனைக் கொத்தவுமில்லை, துரத்தவுமில்லை
.

 

 -
எம்.ரிஷான்ஷெரீப்

21 comments:

Bagawanjee KA said...

நிதானமாய் படித்து கருத்து சொல்கிறேன் ,இப்போது வாக்கு மட்டும் :)

Geetha Sambasivam said...

சோகம்!:(

சாந்தி மாரியப்பன் said...

அருமையான எழுத்தில் சிறப்பான சிறுகதை.

கோமதி அரசு said...

கதை நன்றாக இருக்கிறது.
ஏன் அவனை காக்கைகள் கொத்தின?
அவன் இறந்தபின் காக்கைகள் கத்தியதை பார்க்கும் போது தன் இனம் என்று அவனை நினைத்து கொண்டதோ என்று தோன்றுகிறது.
ஒரு காக்கை இறந்தால் எல்லா காகைகளும் கரைந்து கொண்டே இருக்கும்.

எம்.ரிஷான்ஷெரீப் அவர்களுக்கு வழ்த்துக்கள்.
உங்களுக்கு நன்றி.

எம்.ரிஷான் ஷெரீப் said...

எனது சிறுகதையைப் பதிவிட்ட நண்பர் பாலு ஸ்ரீராம், பரிந்துரைத்த சகோதரி ராமலக்‌ஷ்மி மற்றும் இங்கு கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

வல்லிசிம்ஹன் said...

காகங்கள் கொத்தித் தலையும்மனமும் நோகிறது.
அடிமைக்குள்ளாக்கப் பட்ட மனித இனமும்
நினைவில் இருக்கிறது.

வலிப்போக்கன் said...

அருமை..

வலிப்போக்கன் said...

அருமை..

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையான கதை! பகிர்வுக்கு நன்றி!

G.M Balasubramaniam said...

இப்படியும் நடக்குமா. கற்பனைதான் என்றாலும் . ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் சொல்லப் படுவது போல் இருக்கிறது இருந்தால்தான் எஃபெக்ட் வருமா.? வாழ்த்துகள்

காமாட்சி said...

ஏதோ ஆகர்ஷண சக்தி அவன் தலையில் இருந்தது. அந்த காக்கைகளுக்கு அது ஒரு விளையாட்டாகப்போய் விட்டது. கடைசியில் அவைகள் துக்கம் கொண்டாடின போலும். வித்தியாஸமான கற்பனை. காக்கைகள் தலையில் அடிப்பதுபோல சில ஸமயம் பறப்பதுண்டு.இது அபசகுனமாகக் கருதப் பட்டது. பாவம் காக்கையன். அன்புடன்

Bagawanjee KA said...

செத்தாண்டா சேகரு என்று காக்கைகள் முடிவு செய்ததில் மிகவும் எனக்கு சந்தோஷம்:)

Angelin said...

காக்கைகள் /கவனம் //என்று எதையோ உணர்த்தத்தான் அவனை நித்தமும் கொத்தினவோ ..பொதுவா காகங்கள் தங்களுக்கோ தங்கள் கூட்டத்துக்கோ பிரச்சினை தந்தவர்களை மட்டுமே தாக்கும் ..முடிவு மனசுக்கு கஷ்டமா இருக்கு .

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான வித்யாசமானதொரு கதை. ஏற்கனவே படித்துள்ளேன். மீண்டும் இங்கு படிக்க வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி.

கதாசிரியர் அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

KILLERGEE Devakottai said...

கதையின் நகர்வு அருமை நன்றி நண்பரே...

Srimalaiyappanb sriram said...

அருமை

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...


அருமையான கதை

கீத மஞ்சரி said...

அருமையான சிறுகதை. பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம். முன்பே வாசித்துமிருக்கிறேன். ரிஷானின் பல கதைகளை வாசித்திருக்கிறேன். அற்புதமான படைப்பாளி. பாராட்டுகள் ரிஷான்.

இந்தக் கதையை வாசிக்கையில் ஆஸ்திரேலிய மேக்பை பற்றிய நினைவு வருகிறது. கூடுகட்டும் காலங்களில் மூர்க்கமாகும் அவை ஒருவரைக் குறிவைத்தால் தொடர்ந்து கொத்தும். வேறு வேறு உடைகளில் கூட அடையாளங்கண்டுகொண்டு மிகச்சரியாக அவரைக் கொத்தும். மேக்பையின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவென்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட தொப்பிகளும் தலைக்கவசங்களும் கடைகளில் கிடைக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான சிறுகதை. பாராட்டுகள்.

Umesh Srinivasan said...

எனக்குப் பின்னந்தலையில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நரைத்திருக்கும். வெளியில் செல்கையில் ஓரிரண்டு காக்கைகள் கொத்திய அனுபவமும் உண்டு. எதனால் அப்படிக் கொத்துகின்றன என்பது இன்றுவரையில் புரியாத புதிர். இந்தக் கதையைப் படிக்கையில் அதுதான் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல கதை அன்பர் ரிஷான் ஷெரீஃப்.

Thulasidharan V Thillaiakathu said...

மனதைக் கலக்கம் கொள்ளச் செய்தது. அருமையான கதை நடையும். பகிர்வுக்கு நன்றி ரிஷான் அவர்களுக்கும் பாராட்டுகள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!