ஞாயிறு, 7 மே, 2017

ஞாயிறு 170507 :: ஞாயிறு படங்கள்மேலே உணவகம் ; கீழே வீடோ?  


காற்றில் அடித்துக்கொண்டு வந்து விழுந்த மாதிரி இல்லை?"இங்கதான் எங்கியோ என்ர மோதிரம் வுழுந்துடுச்சி... கண்டுபிடிச்சுக் குடேன்..."மழையும் இல்லை ;  வெய்யிலும் தெரியவில்லை!  எதற்குக் குடை?!


அங்கே வருவது யாரோ....!அதான் சொன்னேனே...  யாரோ...!

27 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறது பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. படங்களுக்கேற்ற வார்த்தைகள் ஸூப்பர்

  பதிலளிநீக்கு
 3. முதலிரண்டு படங்களில்,
  அவ்விடங்களில் வாழ்பவர்கள் பற்றி நினைத்துப் பார்த்தேன்
  வியப்பாக இருக்கிறது நண்பரே
  படங்கள் அழகு
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 4. அழகான ஞாயிறு. அருமையான படங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 5. படங்கள் போதாது இன்னும் நிறைய வேண்டும் தம்பிகளா!

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
 6. டார்ஜிலிங் ,கொள்ளை அழகு :)

  பதிலளிநீக்கு
 7. குளிரக் குளிர அழகான படங்கள்..
  அதிலும் வர்ணனைகள் அபாரம்..

  அப்புறம் அந்த மோதிரம் கிடைத்ததா!..

  பதிலளிநீக்கு
 8. டார்ஜிலிங் படங்கள் நல்லா இருக்கு. இந்த மாதிரி இடங்களுக்குப் போகும்போது, அங்கேயே தங்கிவிடலாம், செட்டில் ஆகிவிடலாம் என்று தோன்றியதா? (எனக்க் அந்த மாதிரி தோன்றும்). டீ எஸ்டேட் படங்கள் நல்லா இருந்தாலும், அங்க வேலை செய்பவர்கள் வாழ்க்கை மாற்றமில்லாமல்தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 9. விடுமுறை நாளில் கண்களுக்கு விருந்து படைக்கும் இப்பதிவுக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 10. ஆவ்வ்வ்வ்வ்வ் மீ வந்துட்டேன்ன்ன்.. இந்த டார்லிங் உடன் டார்லிங்ஜி போன விசயம் முடிஞ்சுதாக்கும் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்ன்ன்:).. 2017 முடிஞ்சாலும் இந்தத் தொடர் முடியாது போல இருக்கே ஜாமீஈஈஈ:)..

  //காற்றில் அடித்துக்கொண்டு வந்து விழுந்த மாதிரி இல்லை?/// விழுந்த மாதிரி இல்ல.. விழுந்தே விட்டது.. சூறாவளியாக இருக்குமோ?:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..

  பதிலளிநீக்கு
 11. //"இங்கதான் எங்கியோ என்ர மோதிரம் வுழுந்துடுச்சி... கண்டுபிடிச்சுக் குடேன்..."///
  ஹா ஹா ஹா அந்தக்கா டமில்:) பறைஞ்சோ?:)..

  அதுசரி சகோ ஸ்ரீராம் மோதிரத்தைத் தொலைச்சிட்டாஆஆராஆஆஆஆ???:) கல்யாண மோதிரத்தையாஆஆஆஆ?:).. இது தொலைச்ச மாதிரித் தெரியல்லே.. வேணுமெண்டே கழட்டிப் போட்ட மாதிரியெல்லோ இருக்கெனக்கு:)..


  ///நெல்லைத் தமிழன் said...
  . இந்த மாதிரி இடங்களுக்குப் போகும்போது, அங்கேயே தங்கிவிடலாம், செட்டில் ஆகிவிடலாம் என்று தோன்றியதா?/////
  அபச்சாரம் அபச்சாரம்... இந்தக் கொமெண்டும்.. அந்த மோதிரக் கதையையும் பார்த்ததும் நேக்கு லெக்ஸும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல:)... ஹையோ இந்த நேரம் பார்த்து அஞ்சுவும் இங்கின இல்லையே.. ஊர் சுத்தப் போயிட்டாபோல கர்ர்ர்ர்ர்:)..

  பதிலளிநீக்கு
 12. நெல்லைத் தமிழன் said...
  டார்ஜிலிங் படங்கள் நல்லா இருக்கு. இந்த மாதிரி இடங்களுக்குப் போகும்போது, அங்கேயே தங்கிவிடலாம், செட்டில் ஆகிவிடலாம் என்று தோன்றியதா? (எனக்க் அந்த மாதிரி தோன்றும்)////
  ஹையோ திருப்பரங் குன்றத்து முருகாஆஆஆஆ என்னா நடக்குது இங்கின.. ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா என் நிம்மதி போச்சேஏஏஏஎ..

  நெல்லைத் தமிழன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் உங்க ஹஸ்பண்டின் நம்பரை அனுப்ப முடியுமோ நேக்கு?:)

  பதிலளிநீக்கு
 13. ///அங்கே வருவது யாரோ....!//
  ஹா ஹா ஹா சுற்றுலாப் போன இடத்திலயும் விடுப்ஸ் ஐக் கைவிடல்லே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..


  ///அதான் சொன்னேனே... யாரோ...!//
  தூரத்தில் கேபிள் காரைப் பார்த்தபோது... என்னமோ உலக அழகிபோல தெரிஞ்சிருக்கு:).. கிட்ட வந்ததும் உள்ளே அந்தக் குண்டரைப்:) பார்த்ததும் பயந்திட்டார்ர்:).. உடனே சப்டரையே மாத்துட்டார்ர்ர்:)...

  ஆவ்வ்வ்வ்வ் இண்டைக்கு எனக்கு சனி வந்து சந்தியில் நிக்குதாம், ராகு வந்து வாசல்லயே ஈசிச் செயாரில இருக்குதாம்ம்.. பிள்ள வலு கவனமா இரு என இ”இன்று உங்களுக்கு எப்பூடி”.. ல சொல்லிட்டார்ர்:) அதையும் மீறி என் வாய் அடங்காதாமே.. இருந்தாலும் நேக்கு ஊர் வம்ஸ் பிடிக்காது என்பதால:) இத்தோடு எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:).

  பதிலளிநீக்கு
 14. படங்களையும் பொருத்தமான தலைப்புகளையும் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 15. படங்களெல்லாம் அழகாயிருக்க பார்க்க அழகு ஊர். குளிரு வாட்டி எடுத்துவிடும் இவ்வளவு நாள் இல்லாமல் இந்த இடம் பார்த்து மோதிரம் விழுமா/?
  எது அதிகமானாலும் தற்காப்பிற்கு குடை அவசியமில்லையா?
  அழகான ஊர்தான் டார்ஜீலிங். அன்புடன்

  பதிலளிநீக்கு
 16. @அதிரா... நான் சொன்னது, நாங்க போற இடம் நல்லா இருந்தால், இங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆகலாமே என்று தோன்றும். பாலக்காடு சென்றபோது எங்களிருவருக்கும் தோன்றியது. எனக்கு ஸ்ரீரங்கம், மாயவரம் போன்ற இடங்களில் செட்டில் ஆகலாம் என்று தோன்றும். இதுல என்ன தவறு? ஆனா, என் ஹஸ்பண்டு, மனசுல அப்படித்தான் தோணும், ஆனால் அங்க இருந்துபார்த்தாத்தான் அங்க உள்ள கஷ்டம் (மின்சாரம், தண்ணீர், ஆஸ்பத்திரி போன்ற பிரச்சனை) தெரியும் என்று சொல்றா. பெங்களூர் மட்டும் எனக்கு அவ்வளவா பிடிக்கலை (தமிழ்னாடு சாம்பார் கிடைக்காது, தமிழ் நாட்டு உணவு வகைகள் கிடைக்காதுன்னு).

  பதிலளிநீக்கு
 17. அழகான படங்கள். அருமையான ஃபோட்டோகிராஃபர்! யாராக்கும் அது? எனக்கு இந்தப் படங்களைப் பார்க்கையில் ஊட்டி நினைவுகள் வந்து மோதின. ஊட்டியிலேயே வீடு வாங்கலாம்னு ஆசை இருக்கத் தான் செய்தது. ஆனால் ரங்க்ஸுக்கு இஷ்டமில்லை! :( போகட்டும். நெ.த. சொல்வது போல் எனக்கும் பெண்களூரில் வீடு வாங்கப் பிடிக்கலை. காரணம் உணவு வகைகள் இல்லை! :)))) மற்றபடி பாலக்காடு தான் போய்ப் பார்க்கலை! ஶ்ரீரங்கம், மாயவரம், கும்பகோணம், பெரியகுளம், தேனி, சின்னமனூர், திருநெல்வேலி, பெங்களூர், மைசூர் போன்ற பல இடங்களைக் கிட்டத்தட்ட ஐந்து வருஷங்களுக்கு மேலாக அலசி ஆராய்ந்து விட்டுப் பின்னர் ஶ்ரீரங்கத்தைத் தேர்ந்தெடுத்தோம். மதுரை வேண்டாம்னூ நான் ஏற்கெனவே முடிவெடுத்து விட்டேன். நம்ம ரங்க்ஸுக்குத் தான் பிறந்த ஊர்ப்பாசம் கும்பகோணத்திலே இருக்கணும்னு! அப்புறமா வேண்டாம்னு விட்டுட்டார். :) இப்போ எங்க தேர்வு சரியானதே என்றே எங்கள் குடும்ப மருத்துவர் உட்படப் பலரும் சொல்கின்றனர். :)

  பதிலளிநீக்கு
 18. பசுமையா இருக்கு ..எனக்கும் இப்படி பசுமையான இடங்களில் இருக்க ஆசை ..வயசானதும் நாங்க தர்மபுரிக்கே போய் செட்டில் ஆகணும்னு ஆசை ஆனா அந்த இடம் எப்படி மாறியிருக்குமோ :( இங்கேயும் இப்படி இடங்கள் இருக்கு ஆனா ஒரு ஆத்திர அவசரத்துக்கு பொருள் வாங்க கூட காரெடுத்து மலையோரம் 1/2 மணி நேரம் டிராவல் செஞ்சு வரணும் ..

  அந்த இடத்தில மோதிரத்தை தொலைச்சா தேநீர் பாக்கெட்டில் கிடைக்கலாம் :)
  நெல்லைத்தமிழன் சொல்வது போல அந்த தொழிலாளர் நிலை பாவமே ..ஒரு பிபிசி ப்ரோக்ராம் பார்த்து அழுகையே வந்தது நாமருந்தும் தேநீரின் பின்னால் இவ்வளவு வலிகளானுஅந்த ப்ரோக்ராம் பார்த்து அப்புறம் குடிச்ச தேநீர் கசந்தது

  பதிலளிநீக்கு
 19. காற்றில் அடித்த வீடுகள் குட்டியா இருக்கே ..இடம் வசிக்க போதுமானதா இருக்குமா

  பதிலளிநீக்கு
 20. அதிரா எனக்கு ஹைடி சினிமா அப்புறம் சவுண்ட் ஒப் ம்யூசிக் பார்த்து சுவிஸ்ஸில் மலைப்பக்கம் ஆடு மாடோட வசிக்க ஆசை வந்ததே

  பதிலளிநீக்கு
 21. ///நெல்லைத் தமிழன் said...
  @அதிரா... நான் சொன்னது, நாங்க போற இடம் நல்லா இருந்தால், இங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆகலாமே என்று தோன்றும். பாலக்காடு சென்றபோது எங்களிருவருக்கும் தோன்றியது. எனக்கு ஸ்ரீரங்கம், மாயவரம் போன்ற இடங்களில் செட்டில் ஆகலாம் என்று தோன்றும். இதுல என்ன தவறு?///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது எனக்குத் தெரியாதா??? நான் ச்ச்சும்மா கலாய்ச்சேன்ன்.. அது புரியல்லப்போல உங்களுக்கு.. சரி விடுங்கோ.. இங்கு எங்கள் இடம் வருவோரும் அப்படித்தான் சொல்லுவாங்க... இங்கயே வந்து செட்டில் ஆகிட யோசிக்கிறோம் என..:)

  பதிலளிநீக்கு
 22. நான் இட்ட கருத்து எங்கே.....மீண்டும் மொபைலில் அடிக்கணுமா....ஆ..ஆ..

  கீதா

  பதிலளிநீக்கு
 23. படங்கள் செம....எனக்கு அங்கேயே இருந்துடலாம்னு தோணும்....அழகான இடம்...சிக்கிம் கேங்டாக் போநீங்களா....

  கீதா

  பதிலளிநீக்கு
 24. படங்கள் அழகு.

  மாயவரத்தை விட்டு வந்து புலப்பும் ஆள் நான்.
  இப்போது மீனாட்சி ஊருக்கு வந்துவிட்டேன். ஏன் மதுரை வேண்டாம் என்று முடிவு எடுத்தீர்கள் கீதா?

  பதிலளிநீக்கு
 25. மதுரை நான் இருந்த மதுரை இல்லையே! அதோடு முக்கிய நகருக்குள் இப்போதெல்லாம் இருக்க இடம் இல்லை! நகருக்கு வெளியே இருக்கணும். :( மதுரையின் அழகே போய் விட்டது! மனசை என்னவோ பண்ணும்! :(

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!