என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பன், அவன் மனைவி (மாதமாயிருக்கா) முதன் முதலா செய்தது என்று சொல்லி ரெண்டு வாரத்துக்கு முன், ஒரு போளி தந்தான். பரவாயில்லாமல் இருந்தது. அன்றிலிருந்து எப்படியாவது போளி செய்து அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதுக்கு இந்த சனிக்கிழமை வாய்த்தது. நான் தேங்காய் போளி இரண்டொரு தடவை செய்திருக்கிறேன். பருப்புப்போளி செய்ததில்லை. ஹஸ்பண்ட், எதுக்கு இனிப்புல்லாம் அடிக்கடி பண்றேள்னு வேற கேட்டாள். நண்பனைச் சாக்கிட்டு இந்த சனிக்கிழமை ரெண்டு வகையாக பருப்புபோளி செய்தேன்.
பருப்புபோளி, நம்ம ஊர்ல வெல்லப்பாகில் கடலைப்பருப்பு அரைத்த மாவில் பூரணம் செய்து பண்ணுவார்கள். சில இடங்களில் (நான் பொதுவா பெங்களூரில் சாப்பிட்டிருக்கிறேன்) ஜீனி சேர்த்து அரைத்து பூரணம் செய்வார்கள். இதில் அடுப்பில் வைத்துக் கிளறும் வேலை இல்லை. எனக்கு இதுதான் பிடிக்கும். ஆனாலும் ரெண்டுவைகையிலும் செய்தேன்.
படம் ஜாஸ்தி கொடுத்திருக்கேன். பண்ணறது சுலபம்தான். ஆனால் மாவுலாம் பதத்துக்கு வர நேரம் எடுக்கும். பூரணத்துக்குத் தயார் பண்ணவும் நேரம் எடுக்கும். அப்புறம் நின்றுகொண்டே போளியை இடணும், அடுப்பில் வார்க்கணும். (கடைல வாங்கினா ரொம்ப சுலபம்தான். ஆனால் அவன் எப்படிச் செய்திருப்பானோ, சுத்தமா என்றெல்லாம் கவலைப்படணும்) இப்போ செய்முறையைப் பார்க்கலாமா?
போளி மாவுக்கு
மைதா மாவு 1 ½ கப். மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை (அப்படீன்னா என்னப்பா?), நல்லெண்ணெய் 3 மேசைக் கரண்டி (நெய் இல்லைனா ரிபைண்ட் ஆயில், கடலை எண்ணெய் இதெல்லாம் உபயோகப்படுத்தலாம். இப்போல்லாம் கடலை எண்ணெயை யாரேனும் உபயோகிக்கிறார்களா?. எங்க ஊர்ல - நெல்லைதான், வடி எண்ணெய்னு உண்டு. அது எல்லா எண்ணெயின் கலப்படமாயிருக்கும். அதாவது வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் கொடுக்கும்போது, வடிந்துவிடுகிற எண்ணெய். அது மாதத்துக்கு ஒருதடவை, சேர்ந்ததும் விற்பார்கள். ரொம்ப நல்லா இருக்கும்), உப்பு துளி, தண்ணீர் தேவையான அளவு.
பூரணம் தயாரிக்க
பேக்கரி போன்று: கடலைப் பருப்பு 1 கப், சர்க்கரை (ஜீனி) ½ கப்புக்கு கொஞ்சம் மேல், துருவின தேங்காய் ½ கப்புக்கும் குறைவாக, ஏலக்காய் தூள் கொஞ்சம், நெய் 1 ஸ்பூன்.
Traditional செய்முறை: கடலைப் பருப்பு 1 கப், மண்டை வெல்லம் ½ கப்புக்கு கொஞ்சம் மேல், ஏலக்காய் தூள் கொஞ்சம், நெய் 1 ஸ்பூன்.
போளி மாவுக்குக் கொடுத்துள்ளவைகளைச் சேர்ந்து நன்றாகப் பிசைந்து, கொஞ்சம் நெகிழ (சப்பாத்தியைவிட துளி நெகிழ இருக்கலாம்) பிசைந்து, மேலே துளி எண்ணெய் விட்டு (அல்லது துணியைப் பரத்தி) 4 மணி நேரத்திற்காவது மாவை மூடி வைத்துவிடவும். சிலர் மஞ்சள் பொடிக்குப் பதிலாக கேசரி பவுடரும் உபயோகிப்பார்கள். (சில கேசரிப் பவுடரில் உப்பு இருக்கும். அதனால் உப்பின் அளவில் கவனம் வேண்டும்)
பேக்கரி வகை பூரணம்: பூரணத்துக்கு, முதலில் கடலைப்பருப்பை வாணலியில் எண்ணெய்விடாமல் கொஞ்சம் வறுத்துக்கொண்டு (நிறம் மாறாதபடி), தேவையான தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும் (நான் ஊறவைத்துவிட்டு, 3 மணி நேரம் கழித்துத்தான் வேலையை ஆரம்பித்தேன்). அப்புறம் குக்கரில் 2 விசில் வைத்து வேகவைக்கவும். ரொம்ப மசியக்கூடாது. நீரை வடிகட்டி, வெந்த கடலைப்பருப்பை ஆறவைக்கவும். ஆறினபின், கடலைப்பருப்பையும் தேங்காய் துருவலையும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். கடைசியில் ஜீனியையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து அரைக்கவும். (நான் சுலபமாக இருப்பதற்காக, ஜீனியைத் தனியே அரைத்து அதை மிக்ஸியில் சேர்த்தேன்). இப்போ பூரணத்துக்குள்ள மாவு ரெடி. இதை, நெல்லிக்காய் அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
Traditional பூரணம் செய்முறை: ஆறின கடலைப்பருப்பை மிக்ஸியில் அரைத்து மாவாக்கிக்கொள்ளவும். வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து வெல்லப் பாகு செய்யவும். அதில் அரைத்த கடலைப்பருப்பு மாவு, ஏலக்காய் தூள், துளி நெய் சேர்த்து கிளறவும். நல்ல கிளறினபின், ஆறவைத்து, நெல்லிக்காய் அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிவைக்கவும். கடலைப்பருப்புக்குப் பதிலாக, தேங்காய்த்துருவலை இதுபோல் வெல்லத்தில் கிளறினால், தேங்காய் போளிக்கான பூரணம் தயாராகிவிடும். இப்போ, பருப்புப்போளிக்கான பூரணம்தான் தயார் செய்தேன்.
மேலே உள்ளது வழக்கமா செய்கிற பூரணம் கிளறுவது போன்று. வெல்லம் வெள்ளையா இருந்ததுனால ரெண்டு பூரணமும் ஒரேமாதிரி இருக்கு
கொஞ்சம் போளி மாவை எடுத்துக்கொண்டு, உருட்டி, அதில் பூரண உருண்டையை வைத்து மூடி, சப்பாத்திக்கு இடுவதுபோல் இடவேண்டியதுதான். இல்லாட்டா வாழை இலையில், கையினாலும், நெய்யை உபயோகப்படுத்தி பூரண உருண்டையை உள்ளே வைத்த மாவை, தட்டி போளி மாதிரி வட்டமாகச் செய்துவிடலாம். இதில் நிறைய எண்ணெயோ நெய்யோ உபயோகிக்கணும். உடம்புக்கு நல்லதில்லை என்பதால், நான் சப்பாத்தி செய்வதுபோல் செய்துவிட்டேன். 10 போளியை இட்டபின், குறைந்த தணலில், தோசைக்கல்லில் இட்டு போளி செய்யவேண்டியதுதான். இரண்டு பக்கமும் நெய் விட்டு வார்த்தால் வாசனையாக இருக்கும்.
போளியை சூடாக்கி, அதன்மேல் நெய் விட்டு சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும். நான், துளி நெய்தான் Traditional போளியில் சேர்த்தேன். இரண்டு வகையும் நன்றாக வந்திருந்தன. நான் உபயோகித்த வெல்லம் ரொம்ப வெள்ளை நிறத்தில் இருந்தது. அதனால்தான் பூரணம் கிளறிச் செய்யப்படும் வகையில் நிறம் ரொம்ப வெள்ளையாக வந்துவிட்டது. (அதனால்தான் படத்துல ரெண்டு பூரணத்துக்கும் நிற வித்தியாசம் தெரியலை) கொஞ்சம் டார்க்கான வெல்லம் உபயோகப்படுத்தினால் பார்க்க இன்னும் நல்லா இருக்கும், சுவையும் அட்டஹாசமாக இருக்கும். நல்லா நெய் விட்டு வார்த்த போளி, குளிர்சாதனத்தில் வைத்தால் ஒரு வாரமாவது இருக்கும்.
நீங்களும் செய்துபாருங்கள்.
அன்புடன்,
நெல்லைத்தமிழன்.
சுவையினால் ஒரு வாரம் என்பது சந்தேகம் தான்...
பதிலளிநீக்குசுவைக்கத் தூண்டுகிறது நண்பரே
பதிலளிநீக்குதம +1
விளக்கம் அருமை நண்பரே
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் கலக்குறீங்கப்பா...பேசாம ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சுருங்க...அமெரிக்காவுல ஆரம்பிக்க மதுரைத் தமிழன் கிட்ட டீல் போட்டுக்கங்க....ஸ்காட்லண்ட்ல இருக்கவே இருக்காங்க நம்ம அதிரா...லண்டன்ல ஏஞ்சல்!!!
பதிலளிநீக்குகீதா
இதே இரு முறைகளும் எங்கள் வீட்டில் செய்வார்கள். என் அம்மாவின் அம்மா கேரளத்து முறையில் அதாவது கர்நாடகானு சொல்லனும் பார்க்கப்போனா மங்களூர் போளி - சீனியில் செய்வது. டிட்டோ உங்கள் முறை. கேசரி பௌடர் சேர்ப்பார்கள். இந்தப் பாட்டி வெல்லத்தில் செய்து பார்த்ததில்லை. இந்த மங்களூர் போளியை சப்பாத்தி தேய்ப்பது போல மெலிதாகத் தேய்த்துச் செய்வார்கள்.மிகவும் மெலிதாக ஓரம் கூட கடினமாக ஆகாமல் செய்வார்கள். நானும் செய்வேன் ஆனால் ஓரம்/விளிம்பு மட்டும் கொஞ்சம் ட்ரையாகக் கடினமாக இருக்கும்...சில சமயம் சீனி சேர்த்து அரைக்கும் போது நீர்த்துப் போகும் அப்போது பாட்டி அதை வாணலியில் போட்டுக் கிளரிக் கொள்வார்கள். உருண்டை உருட்டும் வகையில்.
பதிலளிநீக்குஅப்பாவின் அம்மா மங்களூர்ப் போளி செய்யமாட்டார்கள். வெல்லப் போளிதான் செய்வார்கள். வாழை இலையில் போட்டுக் கையால் தட்டுவார்கள். இதுவும் உங்கள் முறைதான். கேசர்ப்பௌடர்தான் சேர்ப்பார்கள். அது இல்லை என்றால் மஞ்சள் பொடி.
இரு முறையிலுமே பாட்டிகள் மாவைப் பிசைந்து விட்டு நல்லெண்ணை விட்டு ஊற வைப்பார்கள்.
என் மாமியார் வீட்டிலும் வெல்லப் போளிதான் செய்வார்கள். கல்யாணத்திற்கு முன் நான் கேரளா/மங்களூர்ப் போளிதான் அதிகம் சுவைத்தது, செய்ததும் கூட. அங்கு கல்யாணத்தில் போளி, பால்பாயசத்துடன் விளம்பப்படும். போளி இல்லாஅக் கல்யாணம் வெரி ரேர். என் கல்யாணத்தின் போது இந்தப் போளிதான் போட்டார்கள். மாமியார் வீட்டினர் இந்தப் போளியைச் சாப்பிட்டது இல்லை போலும் அதற்கு முன். கல்யாணத்திற்குப் பின் நான் வீட்டில் வெல்லப் போளிதான் தட்டுறது. நல்லெண்ணைதான் மாவை ஊற வைக்க. சரி ஒரு சேஞ்ச் என்று கேரளத்துப் போளி செய்தால் எல்லோரும் ஏதோ ஒரு ஏலியனைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். தொட மாட்டார்கள். மகன் விரும்பிச் சாப்பிடுவான்.
என் வீட்டில் நான் செய்வதென்றால் உங்கள் ரெசிப்பிதான் சமையல் எண்ணைதான் மாவில் ஊற வைக்க...அப்புறம் போளியில் தடவ நெய்...வெல்லப் போளியை வாட்டுவதற்கு நெய்.
நான் சீனிப் போளி சாப்பிட்டு ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. ஹும் இப்படி எல்லாம் பிடித்த பண்டமா போட்டு என் நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள். நானே ஸ்வீட்டாச்சே! ம்ம்ம்ம் பரவால்ல உங்க படத்தைப் பார்த்துச் சாப்பிட்டது போல நினைச்சுக்கறேன்...
படத்துல பார்க்கும் போது ரொம்ப அழகா வந்துருக்கு போல...கலக்குறீங்க..எஞ்சாய்...
கீதா
மாவு நன்றாகப் பிசைந்தால், நன்றாக ஊறியிருந்தால், சரியான பக்குவத்தில் இருந்தால் சீனிப் போளி மிக மிக மெலிதாக இட வரும் இந்தப் போளி மட்டும் கையால் தட்டிப் பார்த்ததில்லை. சப்பாத்தி தேய்ப்பது போல்தான் தேய்ப்பார்கள். ருமாலி ரொட்டி போல மெலிதாக வரும். மிக மிக மெலிதாக...மங்களூர்ப் போளி என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கேன். மங்களூர் கேரளத்தை அடுத்து இருப்பதாலும், கேரளத்திலும் துளு பேசும் போத்திமார் இருப்பதாலும் இந்தப் போளி கேரளத்திலும் வந்திருக்குமாக இருக்கலாம்...என்று நினைக்கிறேன்...
பதிலளிநீக்குகீதா
தங்களின் இந்த
பதிலளிநீக்குபோளி தயாரிப்பு உள்பட எந்த சமையல் குறிப்புக்களும் மற்ற சில பதிவர்களைப் போல
போலியானவை அல்ல என்பது எனக்குத்தெரியும்.
நிறைய படங்களுடன் இந்தப் பதிவு மிகவும் அருமை.
கீழே வலதுபுறமாகக் காட்டியுள்ள கடைசி படத்தில் நல்ல பூர்ணத்துவம் உள்ளது. பார்த்ததும் மனஸு பூரித்துப்போனது.
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஸ்வாமீ.
அருமை..
பதிலளிநீக்குதளிரான வாழையிலையின் மணம் கமழ -
மிக மெல்லியதாக நாவில் இட்டதும் கரைந்து விடும்படியான போளி -
எங்கள் தஞ்சையில் பிரசித்தம்..
வாழ்க நலம்..
போளி எப்படி உருவானால் என்ன ,ருசியாய் இருந்தால் சரி,கோழி குருடானாலும் குழம்பு ருசியா இருக்கணும்னு சொல்ற மாதிரி :)
பதிலளிநீக்குSuperu!!
பதிலளிநீக்குநானும் வந்திட்டேன்ன்... தலைப்புப் பார்த்து ஓடிவந்தேன் போளி எப்படி இருக்கும் எனப் பார்க்க. படம் பார்த்தமையால் புரிஞ்சது, இது கடையில் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம், பெயர் தெரியல்ல சுவீட் சப்பாத்தி, சுவீட் ரொட்டி, சுவீட் பரோட்டா... இப்படிச் சொல்லியே சாப்பிட்டதா நினைவு.
பதிலளிநீக்குநெல்லைத் தமிழனுக்கு இனிப்புப் பிடிக்கும் என்பதற்காக இப்படி ஒரே இனிப்பாகவேயா செய்து அனுப்புவீங்க.. ?.. என் போன்றோர் பாவமில்லையா?.. இப்படியான உணவை.. ஒரு கடி கடிச்சு மட்டுமே பார்ப்பேன்ன்.. அது எப்படி இருக்குதென அறிய.. மற்றும்படி இப்படி எந்த இனிப்பு உணவும் பிடிக்காதெனக்கு.
காரபோளி என ஸ்ரீராம் சொல்லியிருக்கிறார்ர்.. விரைவில் அதையும் செய்து போட்டிடுங்கோ.
///இப்போல்லாம் கடலை எண்ணெயை யாரேனும் உபயோகிக்கிறார்களா?.//
பதிலளிநீக்குகடலை எண்ணெய் எனில் peanut oil தானே?... கத்தரிக்காய் தொக்கு செய்ய இந்த கடலை எண்ணெய் நல்லதெனப் படிச்சேன், நேற்று ஓடிப்போய் வாங்கி வந்தேன் பீநட் ஒயில்.. இன்று செய்திடலாமே என. அப்போ இது வேறயா?:).
//படம் ஜாஸ்தி கொடுத்திருக்கேன்.// ஹா ஹா ஹா உங்கள் எழுத்தைவிடப் படம்தான் சிம்பிளாகப் புரிய வைக்குது.
நீங்க எழுதியிருக்கும் விதம்தான் பயத்தை உண்டுபண்ணுது, மற்றும்படி இது கஸ்டமான வேலை இல்லை.. அல்வாமாதிரி.
பதிலளிநீக்குநாங்களும் இப்படி செய்வதுண்டு(நான் செய்யவிரும்புவதில்லை-வீட்டில் யாருக்கும் பிடிக்காது இப்படி இனிப்புவகை).. நாம் இப்படி பூரணத்துக்கு பாசிப்பருப்பை அவித்து, தேங்காய்ப்பூவும் சீனியும் கலந்து உள்ளே வைத்து, இதே முறையில் ரொட்டி போல சுட்டெடுக்கும் வழக்கம் உண்டு.
அதெப்படி மஞ்சள் கலராக ரொட்டி வருகிறது என நினைத்ததுண்டு... இப்போதான் புரியுது.. இப்படி ரொட்டி மாவுக்கும் மஞ்சள் தூள் சேர்ப்பார்கள் என.. அழகிய கலரில, அழகிய சேப் ல செய்து எடுத்திருக்கிறீங்க... இனி, கார ரெசிப்பிகள் போடக் கடவது:).
ஆவ்வ்வ்வ்வ் ஸ்ரீராம் தலையில் இன்று கிரீடம்:).. இறங்கி வச்சிடாதீங்க ஸ்ரீராம்:).. வரும் திங்கள் வரைக்குமாவது கிரீடத்தை லொக்கரில் பூட்டி வையுங்கோ:) நான் கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பு வழங்குகிறேன்:)... ஹையோ பகவான் ஜீ எதுக்கு அரிவாள் எடுக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா:).
பதிலளிநீக்கு//நெல்லைத் தமிழன் கலக்குறீங்கப்பா...பேசாம ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சுருங்க...அமெரிக்காவுல ஆரம்பிக்க மதுரைத் தமிழன் கிட்ட டீல் போட்டுக்கங்க....ஸ்காட்லண்ட்ல இருக்கவே இருக்காங்க நம்ம அதிரா...லண்டன்ல ஏஞ்சல்!!!
பதிலளிநீக்குகீதா///
கீதா முதல்ல சம்பளத்தைப் பேசித் தீர்த்திடலாம்:).
//வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்குதங்களின் இந்த
போளி தயாரிப்பு உள்பட எந்த சமையல் குறிப்புக்களும் மற்ற சில பதிவர்களைப் போல
போலியானவை அல்ல என்பது எனக்குத்தெரியும்///
ஆவ்வ்வ்வ்வ் போலிக்குறிப்பு என அஞ்சுவைத்தானே சொல்றீங்க கோபு அண்ணன்?:).. அபச்சாரம் அபச்சாரம்:)... அஞ்சூஊஉ மேடைக்கு வரவும் உங்கட வாழைப்பூ ரசம் குடிச்சுப் பார்த்தபின்பே சொல்றார்:) ... அந்த கிரெயினை எத்தனை ஆயிரம் பவுண்டுகள் எண்டாலும் கொடுத்து எடுத்து வாங்கஞ்சு... நேரே தெப்பங்குளம்தேன்ன்ன்:)...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா கோர்த்து விட்டாச்சு:) முளையிலயே கிள்ளிடோணும்:) இல்லாட்டில் ஆட்டைக் கடிச்சூஊஊஊஉ மாட்டைக் கடிச்சூஊஊஊஊஊ அதிராட ரெசிப்பியிலயும் கைவச்சிடப்போறாரே:).. அதிராவோ கொக்கோ விட்டிடுவேனா?:)...
கோபு அண்ணன், போன கிழமை எங்கட அம்மா, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு வந்திருந்தாவாம்.. தெரியாமல் போச்சே.. கோபு அண்ணனை அறிமுகம் செய்திருப்பேனே எனச் சொன்னேன்... சுற்றுலா முடிச்சு ஊருக்குத் திரும்பிட்டினம்.
asha bhosle athira said...
பதிலளிநீக்கு//கோபு அண்ணன், போன கிழமை எங்கட அம்மா, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு வந்திருந்தாவாம்..//
அடாடா, எனக்குத் தெரியாமல் போச்சே. உச்சிப்பிள்ளையாரை மட்டும் பார்த்துவிட்டு, கீழ்ப் பிள்ளையாரைப் பார்க்காமல் அநியாயமாகப் புறப்பட்டு போயிட்டாங்களே ...... கர்ர்ர்ர்ர் :(
போன கிழமை என்றால் என்னவோ? ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு கிழமைகள்தான் எனக்குத் தெரியும்.
//தெரியாமல் போச்சே.. கோபு அண்ணனை அறிமுகம் செய்திருப்பேனே எனச் சொன்னேன்...//
என்ன அம்மா .... என்ன பொண்ணு .... தினமும் அட்லீஸ்ட் தாயும் மகளும் ஒரு ஃபோன் டச்சிலாவது இருக்க வேண்டாமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//சுற்றுலா முடிச்சு ஊருக்குத் திரும்பிட்டினம். //
அச்சச்சோ ..... குருவம்மா, மயிலு இருவரையுமே இன்னும் பார்க்க முடியாமல் விதி சதி செய்து விட்டதே .......... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
”எல்லாம் நன்மைக்கே” >>>>> இது நான் சொல்லவில்லையாக்கும்.
எங்கட ஊர் உச்சிப்பிள்ளையார் மட்டுமே சொல்கிறாராக்கும்.:)
asha bhosle athira said...
பதிலளிநீக்கு//சுற்றுலா முடிச்சு ஊருக்குத் திரும்பிட்டினம். //
எங்கள் ஊர் பேப்பர்கள் + தொலைகாட்சியில் இதுபற்றி செய்தி ஒன்றும் வரவே இல்லையே.
’பிரிட்டிஷ் மஹாராணியார் குடும்பமாக்கும். நான் அதன் ஒரே வாரிசாக்கும்’ என்று சொன்னதெல்லாம் சுத்த ஹம்பக் போலிருக்குதே ......... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
///’பிரிட்டிஷ் மஹாராணியார் குடும்பமாக்கும். நான் அதன் ஒரே வாரிசாக்கும்’ என்று சொன்னதெல்லாம் சுத்த ஹம்பக் போலிருக்குதே ......... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.///
பதிலளிநீக்குஅதுதான் நான் அடிக்கடி சொல்லுவேனோ:) எனக்கு தற்புகழ்ச்சி புய்க்காது:).. அதனால சுற்றுலா முடியும்வரை செய்தித்தணிக்கை:).
///”எல்லாம் நன்மைக்கே” >>>>> இது நான் சொல்லவில்லையாக்கும். //
ஹா ஹா ஹா அதே அதே அதிரபதே:).. யாருடைய நன்மைக்கே என நான் சொல்லவே மாட்டேன்ன்:).. இருங்கோ ஏதும் நியூஸ் கிடைச்சால் சொல்றேன்.. உச்சிப்பிள்ளையார்பற்றி:).. ஸ்ரீரங்கம் போய்.. உச்சிப் பிள்ளையார் வந்ததா கேய்ள்வி:)..
டெய்லி .. குறைஞ்சது வன் அவராவது அம்மாவுடன் ரச்ல தான் இருப்பேன்.. இது அங்கு உங்கள் நாட்டில் ஊருக்கு ஒரு சிம் போடவேண்டுமாமே கர்:) அதனால பலதடவைகள் தொடர்பு விட்டுப்போச்ச்ச்ச்:).. மோடி அங்கிளோடு இதுபற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வரப்பிடாதோ நீங்களாவது?:).. வேணுமெண்டால் சந்திக்கப்போகும்போது “ஒரு கோர்ட்” கடனா வாங்கித்தாறேன்ன்.. இங்குள்ள பிரபல்யம் ஒருவரிடமிருந்து:).
asha bhosle athira said...
பதிலளிநீக்கு//இருங்கோ ஏதும் நியூஸ் கிடைச்சால் சொல்றேன்.. உச்சிப்பிள்ளையார்பற்றி:).. ஸ்ரீரங்கம் போய்.. உச்சிப் பிள்ளையார் வந்ததா கேய்ள்வி:)..//
இராமாயணத்தில் இலங்கையில் ராவணனை வதம் செய்த ஸ்ரீராமர், அவன் தம்பி விபீஷணனுக்குப் பட்டமளித்து அரசராக்கி வைக்கிறார்.
அயோத்தியில் ஸ்ரீராம பட்டாபிஷேகம் முடிந்து அதில் கலந்துகொண்டு இலங்கைக்குத் திரும்பும் விபீஷணனுக்கு ஸ்ரீராமரால், பள்ளிகொண்ட பெருமாளான ரெங்கநாதர் விக்ரஹம் ஒன்று அன்புப்பரிசாக அளிக்கப்படுகிறது.
அதை இலங்கை திரும்பும் வரை கீழே எங்கும் தரையில் வைத்து விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அளிக்கப்பட்டுள்ளது அந்த விக்ரஹம்.
அதை தினமும் பூஜித்து வர எண்ணி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆசையுடன் ஆகாய மார்க்கமாகப் புறப்படுகிறார் விபீஷணன்.
வரும் வழியில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலைத் தாண்டியதும், மாலை வேளையில் திருச்சி காவிரி நதி அவரின் கண்களுக்கு ரம்யமாகத் தெரிகிறது. சிறுநீர் கழிக்க வேண்டும் போல ஓர் உணர்வும் விபீஷணருக்கு ஏற்படுகிறது.
உடனே வயிற்று பாரத்தையும் குறைத்துக்கொண்டு, ஸ்நானம் செய்துவிட்டு, சாயங்கால சந்தியாவந்தனம் போன்ற தன் நித்யப்படி அனுஷ்டானங்களை முடித்துக்கொள்ள நினைத்து, கையில் ரெங்கநாதர் விக்ரஹத்துடன் கீழே இறங்குகிறார் .... விபீஷணன்.
அங்கு கட்டை குட்டையான உருவத்துடனும், மிகப்பெரிய தொந்தியுடனும், குடுமியுடனும், உடம்பெல்லாம் விபூதிப்பட்டைகளுடன், ஒரு பிரும்மச்சாரி பையன் அவரின் கண்களுக்குக் காட்சியளிக்கிறான்.
தான் காவிரி நதியில் ஸ்நானம் + சந்தியாவந்தன ஜபம் முதலியன செய்துவிட்டு திரும்ப வரும் வரை இந்த ரெங்கநாதர் விக்ரஹத்தைக் கீழே வைக்காமல் கையில் பத்திரமாக வைத்திருக்குமாறு, அந்த ஜொலிக்கும் பிரும்மச்சாரிப் பையனிடம் கேட்டுக்கொள்கிறார் விபீஷணன்.
“நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். அதற்குள் நீ சீக்கரமாக வந்துவிடணும், இல்லாவிட்டால், வெயிட் தாங்காமல் அதனை நான் கீழே வைத்துவிட நேரிடும்” என்கிறார் அந்த பிரும்மச்சாரி பையன்.
சரி என்று சொல்லி அவனிடம் அதனைக் கொடுத்துவிட்டு, காவிரியில் மூழ்கிக் குளிக்கிறார் விபீஷணன். அதற்குள் அவரை மூன்று முறை மெல்லிய குரலில் அழைத்து விட்டு, அங்கேயே காவிரிக்கரையிலேயே அந்த விக்ரஹத்தைத் தரையில் வைத்து விடுகிறார் அந்த பிரும்மாச்சாரி பையன்.
தரையில் வைத்துவிட்ட அந்த விக்ரஹத்தை, எவ்வளவு முயன்றும் விபீஷணரால் தூக்கி எடுக்கவே முடியவில்லை. இதனைக் கண்ட விபீஷணர் கடும் கோபம் கொள்கிறார். அங்கு சிரித்துக்கொண்டு நிற்கும், அந்தப்பையனை அடிக்கத் துரத்துகிறார்.
அந்தப்பையன் ஒரே ஓட்டமாக ஓடி திருச்சி உச்சிப்பிள்ளையார் மலை மீது ஏறி கோயிலுக்குள் ஒளிந்துகொண்டு அமர்கிறார். துரத்திச்சென்ற விபீஷணர் அந்தச் சிறுவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைக்கிறார்.
உடனே அந்தப் பையன் மறைந்து அங்கு உச்சிப் பிள்ளையாராகக் காட்சியளிக்கிறார். இன்றும் உச்சிப்பிள்ளையார் சிலையின் தலையில் விபீஷணரால் குட்டிய குட்டு ஒரு சிறிய பள்ளமாக உள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் மூலவர் தெற்கு நோக்கி (இலங்கையை நோக்கி) அமைந்துள்ளதாகவும், தினமும் விபீஷணர் இலங்கையில் இருந்துகொண்டே ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டு வருவதாகவும் புராணக்கதைகள் சொல்லுகின்றன.
படங்களோடு சூப்பரா போளி வந்திருக்கு...
பதிலளிநீக்குவெல்லம் போட்டு செய்ற வகை தான் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..நானும் இரு நாள் முன் தான் செய்தேன்...விரைவில் என் தளத்திலும் அந்த போளிய பார்க்கலாம்...
asha bhosle athira
பதிலளிநீக்குபோளிப் பதிவுக்கு வந்துவிட்டு, பதிவுக்கே சம்பந்தா சம்பந்தம் இல்லாத
போலிப் பின்னூட்டங்கள் ஏராளமாக வந்து குவிந்துள்ளன என நெ.த. ஸ்வாமீ
கடுப்பாகிப்போய்விடப் போகிறார்.
எனக்கு ஒரே பயமாக்கீதூஊஊஊஊஊஊ.
///ஸ்ரீரங்கம் கோயில் மூலவர் தெற்கு நோக்கி (இலங்கையை நோக்கி) அமைந்துள்ளதாகவும், தினமும் விபீஷணர் இலங்கையில் இருந்துகொண்டே ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட்டு வருவதாகவும் புராணக்கதைகள் சொல்லுகின்றன.///
பதிலளிநீக்குஇவ்ளோ விசயமா இதில்.. அருமையான தகவல்... இப்படி தகவல் தெரிந்த பின் சென்று பார்ப்பது இன்னும் விசேசம்.. தெரிஞ்சிருந்தால்.. உச்சிப்பிள்ளையாரின் உச்சியை ஒருக்கால் தொட்டுப்பார்த்து விட்டு வரச் சொல்லியிருப்பேனே அம்மாவிடம்:).
///எனக்கு ஒரே பயமாக்கீதூஊஊஊஊஊஊ.///
பதிலளிநீக்குநீங்க செய்யுறதையும் செய்து போட்டு பயமாக்குதூஊஊஊஉ எனும் நடிப்பு வேற கர்:)... என்னைப்போல ஸ்ரெடியா இருங்கோ எப்பவும்:)...
இந்தப் போளி.. இனிப்பெல்லோ.. இனிப்பு அதிகம் சாப்பிட்டால் இப்பூடித்தான் ஓவர் ஆக்டிவ்வாகிடுவோமாம்:).. நித்திரைகூட வராதாமே... என்னோடு வேர்க் பண்ணும் ரீச்சர் ஒருவர் சொன்னா... நேற்று அதிகம் சுவீட்ஸ் சாப்பிட்டு விட்டேன் அதனால நைட் ஸ்லீப் பண்ண முடியல்ல என... அப்போதான் இனிப்பு இப்பூடியெல்லாம் படுத்துமா எனத் தெரிந்துகொண்டேன்:).
அதனால இதுக்கு நெல்லைத்தமிழன் தான் பயப்பூடப்போறார்:) ஹையோ மீ எஸ்கேப்ப்ப் ரைம் ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:).
asha bhosle athira
பதிலளிநீக்கு//இவ்ளோ விசயமா இதில்.. அருமையான தகவல்... இப்படி தகவல் தெரிந்த பின் சென்று பார்ப்பது இன்னும் விசேசம்.. தெரிஞ்சிருந்தால்.. உச்சிப்பிள்ளையாரின் உச்சியை ஒருக்கால் தொட்டுப்பார்த்து விட்டு வரச் சொல்லியிருப்பேனே அம்மாவிடம்:). //
அதனால் என்ன ...... தலையைத்தடவ ....... நீங்க புறப்பட்டு திருச்சிக்கு உடனே வாங்கோ.
என் தலையை அல்ல. :)
உச்சிப்பிள்ளையாரின் தலையை.
உச்சிப்பிள்ளையாரே ! இனி நம் இருவர் தலையும் சுத்தமா மொட்டைதானப்பா ......... ஜாக்கிரதை.
@@ நெல்லைத்தமிழன் !! அப்படியே ஒரு பொக்கே போடறேன் காட்ச் இட் :)..எதுக்குன்னா என் கணவர் கேட்டார் நேற்று போளி செய்ய தெரியுமான்னு :) தாங்க்ஸ்ப்ரெசிப்பிக்கு :)
பதிலளிநீக்குஎங்கப்பா அடிக்கடி செய்வார் ஆனா நான் சாப்பிட்டதே இல்லை ..எங்க வீட்ல அப்பா செய்ற சப்பாத்தி நல்லா மெத்து மெத்துன்னு இருக்கும் நானா நினைக்கிறேன் அவர் நெய்ய கொட்டி பிசைவார்னு அப்படியே லேயர் உறிச்சி எடுக்கலாம் ..
அந்த இனிப்பு போளியை அம்மா பாலில் ஊற வைச்சி சாப்பிடுவாங்க ..நன் அவங்கள வித்யாசமா பார்ப்பேன் :)
எனக்கு கார போளி பிடிக்கும் :)
நான் வெங்காயத்தை சமோசா மிக்சிங்குக்கு செய்வோமே அதே மாதிரி செய்து போளி போல தட்டி செய்வேன் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் . கடலை எண்ணெய் இங்கே கூட விக்கிறாங்க சைனீஸ் உணவுகளுக்கு பயன்படுத்துவாங்க ..
அது நல்ல வாசனை வருமில்ல ..
ஒரு முறை ஊருக்கு போனப்போ அப்பா தேங்காய் போளி வாங்கிட்டு வந்தார் அய்யங்கார் பேக்கரி அல்லது ரெஸ்டாரண்ட் .இவருக்கு ரொம்ப பிடிச்சதாம் சொன்னார் .அதையும் நான் சாப்பிடலை ..இப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு ..கட்டாயம் செய்யணும் விரைவில் இந்த போளி என் பக்கம் வரும்
பதிலளிநீக்கு@angelin..
பதிலளிநீக்குஅட இது போளி வாரம் போல...
ஸ்ரீராம் காரப் போளி சூப்பரா இருக்கும்..எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...முன்னாடி எல்லாம் அடிக்கடி செய்வதுண்டு. இப்போ கொஞ்சம் குறைஞ்சு போச்சு...யாராவது வீட்டுக்கு வந்தால் செய்யறது...உண்டு..
பதிலளிநீக்குகீதா
அதிரா என்ன பேர் மாறிப் போயிருக்கு ஆஷா போன்ஸ்லே அதிரானு. இதுதான் உங்கள் ஃபுல் பெயரோ...?
பதிலளிநீக்குகீதா
ஏஞ்சல் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க நல்லாருக்கும்...ஆனா உங்களுக்கு இனிப்பு பிடிக்காதுல்ல...பட் இது செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க ரொம்ப நல்லாருக்கும்..
பதிலளிநீக்குகீதா
போளி அருமை/
பதிலளிநீக்குஎன் அம்மா அடிக்கடி செய்வார்கள்.
எனக்கு சாப்பிட பிடிக்கும், செய்து சாப்பிட சோம்பல்.
போளி செய்து நண்பருக்கு கொடுத்தீர்களா? அன்போடு செய்து கொடுத்த போளி மேலும் கூடுதலாய் சுவை இருக்குமே!
பாராட்டுக்கள்.
போளி சாப்பிட ஆசை வந்ததே..
பதிலளிநீக்குசீனி சேர்த்து செய்ததில்லை. அருமையான குறிப்புகள்.. படங்கள்..!
பதிலளிநீக்குபோளிகளாகப்போட்டு எல்லோரையும் இனிக்க வைத்துவிட்டீர்களா. நான் வெல்லப்போளியானாலும், சர்க்கரை போளியானாலும் பூரணம் கிளறிவிட்டுத்தான் செய்வேன். கடலைப்பருப்பையும் வேகவைத்து வடிக்கட்டி அரைப்பதுதான் வழக்கம். நானும் பதிவுகள் போட்டு இருக்கிறேன். மைதாமாவு ஊறவைப்பது,பிசைவது எல்லாம் ஒரே மாதிரிதான். இடுபோளிதான்.இலையில் தட்டுவது கிடையாது.
பதிலளிநீக்குகடலைப்பருப்பை வறுத்து,மாவாக்கி பூரணம் தயாரித்தால் அதுவும் தேங்காய்,ஜீனியுடன் சேரும்போது சற்று கிளறும்படி இல்லையா? என்கணக்கில் ஜீனி அதிகம்இருக்கும். அதனால் அப்படி இருக்கும். போளிகள் மெல்லியதாக இடவரும். மற்றது எல்லாம் ஒன்றேதான். கோதுமைமாவிலும் செய்யலாம். சொல்லுகிறேன் வலைப்பதிவில் இனிப்பு வகையில் எழுதியிருக்கிறேன். படங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி. பக்குவம் மிக அழகாகச் சொல்லுகிறீர்கள். எல்லோருக்கும் உதவியாக இருக்கும். போளியை எடுக்கும்போதே மடித்து எடுத்தால் தட்டில் அடுக்கவும் அழகாக வரும். அன்புடன்
////PM
பதிலளிநீக்குஅதிரா என்ன பேர் மாறிப் போயிருக்கு ஆஷா போன்ஸ்லே அதிரானு. இதுதான் உங்கள் ஃபுல் பெயரோ...?
கீதா///
அது புல்லும் இல்ல காவ் உம் இல்ல கீதா:)... வெளியே வரவே பயம்ம்ம்ம்மாக்கிடக்கூஊ அதுதான் கொஞ்ச நாளைக்கு மாறு வேடம்:)... எதுக்குமே யாருமே பயப்புடுறாங்க இல்ல:) இனிப் பாடியே மிரட்டப்போறேன்ன்ன் எல்லோரையும்:).... அஞ்சு சமையல் குறிப்பு போட்டு மிரட்டுவதைப்போல:)
போளிக்கு ஜீனி சேர்த்த பூரணம் , செய்து ஃபிரிஜ்ஜில் வைத்து விட்டால் போளி எப்போது வேண்டுமாளாலும்செய்து கொள்ளலாம். ஏலக்காய்,தேங்காய் எல்லாமும் சேர்த்துதான் செய்வது. அன்புடன்
பதிலளிநீக்குநாக்குக்குருசியானதானது
பதிலளிநீக்குநாக்குக்குருசியானதானது
பதிலளிநீக்குநெல்லை தமிழருக்கு முதலில் என் பாராட்டுக்கள் வர வர திங்கள் கிழமை பதிவுகள் மிகவும் மெருகேறிக் கொண்டிருக்கிறது. பேசாமல் நீங்களும் ஸ்ரீராம் மற்றும் எங்கள் ப்ளாக் டீமில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய சமையலுக்கான வெப்சைட் உருவாக்க்கி அதில் படங்கள் மற்றும் வீடியோ மூலம் விளக்கமாக புதிய புதிய உணவு குறிப்புகளை தரலாம் அதன் மூலம் வருமானத்திற்கான வழிகள் உண்டு... நீங்கள் குருப்பாக இருப்பதால் இதை எளிதில் உங்களால் செய்ய முடியும், உங்கள் குருப் மெம்பர்களுடன் கலந்து ஆலோசியுங்கள். பொழுது போக்காக நீங்கள் எழுதும் இந்த உணவு குறிப்புகளை பணமாக மாற்றுங்கள்..... மீண்டும் ஒரு முறை உங்களுக்கும்,ஸ்ரீராம் மற்றும் குழுவினருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குபோளி என்றதும் என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. சிறு வயதில் மதுரையில் இருந்து சொந்த ஊரான செங்கோட்டைக்கு ரயிலில் போகும் போது விருதுநகர் ரயில்வே நிலையத்தில் ஒரு வயதான் முதியவர் போளி செய்து விற்பனை செய்வார். ரயில் அந்த ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும் நாங்கள் இருக்கும் பெட்டி பக்கம் அவர் விற்பனை செய்ய வர வேண்டும் என மனம் பிராத்தனை செய்யும் ஒரு சில தடவை மிஸ் பண்ணி இருக்கிறோம்........இப்போது கடையில்தான் போளி வாங்கி சாப்பிடுவோம் நீயூயார்க்கில் உள்ள கணபதி கோயிலில் சுவையான போளி கிடைக்கும்
பதிலளிநீக்குயெஸ் மதுரை....திருநெல்வேலி ரூட்ல...போளி... கிடைக்கும் சூப்பரா இருக்கும்...கடம்பூர் போளி.....
நீக்குகீதா
//நெல்லைத் தமிழன் கலக்குறீங்கப்பா...பேசாம ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சுருங்க...அமெரிக்காவுல ஆரம்பிக்க மதுரைத் தமிழன் கிட்ட டீல் போட்டுக்கங்க....ஸ்காட்லண்ட்ல இருக்கவே இருக்காங்க நம்ம அதிரா...லண்டன்ல ஏஞ்சல்!!! ///
பதிலளிநீக்குஆமாம் நெல்லைதமிழன் நீங்க ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சுருங்க. அதன் பின் கீதா இந்தியாவில் இருந்து மேலே சொன்ன அமெரிக்க லண்டன் ஸ்காட்லண்ட் சுவிஸ் போன்ற நாடுகளுக்கு டோர் டெலிவரி வார வாரம் நேரில் செய்துடுவாங்க.....டீல் சரிதானே கீதா
ஹஹஹஹஹஹ...ஐயோ. இந்த மதுரை...இருக்காரே...ஹாலோ...நீங்க தான் நடத்தனும்....மீ ஒன்லி....டிப்ஸ்.....
நீக்குஅடா ஆமாம் ஸ்விஸ்ல அல்ரெடி நிஷா இருக்காங்களே..அவங்க கூடவும் டீல் போடலாம்
கீதா
அமெரிக்காவுக்கு பொறாமை :) நாங்கல்லாம் famous entrepreneurs ஆகப்போறதை நினைச்சி :))
பதிலளிநீக்குஅப்படி போடு ங்க.ஏஞ்சல்..
நீக்குகீதா
@கீதா :) மைதா கோதுமை எனக்காகாதே :) மகளுக்கும் கணவருக்கும்தான் செய்யணும்
பதிலளிநீக்குஆசையாயிருக்குன்னு சாப்பிட்டு கஷ்டமாகிடும் எனக்கு
ஆமாம் பேலியோ....காட் இட்...நினைச்சேன் கேக்கணும்னு....அப்புறம் ...சே பாவம்னு விட்டுட்டேன்
நீக்குகீதா
@கீதா அந்த ஆஷா போஸ்லே ரகசியம் என்னான்னு சொல்லட்டா :) நேற்று நம்ம ஏரியாவில் //உன்னை காணாது பாட்டு கேட்டதில் இருந்து அதிராவுக்குள்ள இருக்கற அந்த ஆஷா ,லதா ,சுசீலா ஜானகிம்மா எல்லாரும் விஸ்வரூபம் எடுத்திட்டாங்க :) அந்த ஆர்வத்தில் பேரையே மாத்தியாச்சு
பதிலளிநீக்குமியாவ் பாட்டுதான் நெக்ஸ்ட் :)
ஹஹஹ...ஏஞ்சல்..ஓ அப்படியா.. அவங்க ஏதோ மாறுவேஷம் போட்டு இருக்கங்களாம்....அவங்க எழுதருத்துலருந்ததே கண்டு பிடிச்சிறலாம் அது அதிரா னு.....தமிழ் சினிமாவுல மச்சம் மட்டும் வைச்சுகிட்டிட்டு... மாறுவேஷம்னு சொல்லுவங்கள்ல. அது போல இது டுபாக்கூர் வேலை....ஹிஹிஹி
நீக்குகீதா
ஹலோவ் :)
பதிலளிநீக்கு@அதிராவ் மியாவ்வ்வ்வ்
//ஆவ்வ்வ்வ்வ் போலிக்குறிப்பு என அஞ்சுவைத்தானே சொல்றீங்க கோபு அண்ணன்?:).. //
கோபு அண்ணா எதையும் நேர்மையா நேராவே சொல்வார் ..இதில் சொன்ன போலி நீங்கதான் :)
கேசரியை கேக் ஆக்கி வச்சது பட்டாணி சுண்டல் போட்டுதோசை சுட்டது cous cous ல பொங்கல் செஞ்சது எல்லாம் நீங்கதான் :)wok ல ஆப்பம் செஞ்சது அப்புறம் ..கேக் மேக்கர்ல இட்லி பொரிச்சது ,நீங்கதானே :)
@அனு ..இங்கே பார்த்ததும் செய்ய நினைச்சேன்ப்பா :) அதுக்கேற்ற மாதிரி நேற்று கணவரும் கேட்டார்
பதிலளிநீக்குநன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம் வெளியிட்டமைக்கு. வெயில் அங்க கடுமையா இருக்குன்னு நினைக்கிறேன். அதுனாலதான் பண்ணறதுக்கு கொஞ்சம் சோம்பலா இருக்கா? ஜூன் மழைக்காலம் வந்த உடனே நிறைய ஸ்நாக்ஸ் உங்கள்ட இருந்து எதிர்பார்க்கிறேன் (இடுகைதான்)
பதிலளிநீக்குநன்றி திண்டுக்கல் தனபாலன், முதல் வருகைக்கு.
பதிலளிநீக்குநன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி கில்லர்ஜி.
நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். மங்களூர் போளிதான் எனக்குப் பிடித்தது. பெங்களூர் செல்லும்போதெல்லாம் அங்கிருந்து வாங்கிவருவேன். வெல்லப் போளியில் எண்ணெய் ஜாஸ்தி. அதனால் இப்போதெல்லாம் அவ்வளவு பிடிப்பதில்லை. பெங்களூர் ஜெ.பி. நகரில், (9th Block) போளி கடை இருக்கிறது. அதில் வெல்லப் போளி, ஆனால் வித விதமாக உள்ளே வைத்துத் தருவார்கள், டூட்டி ஃப்ரூட்டி, தேங்காய், நட்ஸ் என்று பலவிதம். ஆனால் எனக்கு மங்களூர் போளிதான் பிடித்தமானது.
பதிலளிநீக்குசும்மா இருக்காம, பால் பாயசத்தை ஞாபகப்படுத்திட்டீங்க. பாயச வகைகள் செய்து எழுதணும்னு ரொம்ப நாளாவே என் மனசுல இருக்கு. ஒரு பிரச்சனை என்னன்னா, ஒரு நாளைக்கு ரெண்டுவிதம் செய்யணும். ரொம்ப ஸ்வீட் ஆகிவிடுமே என்ற தயக்கம்தான்.
மங்களூர் போளி, ரொம்ப ரொம்ப மெலிதாக இருக்கும். அதனால்தான் எனக்கு அவைகளை ரொம்பப் பிடிக்கும். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
ஹைfive. மீ டூ லவ் மங்களுர் போளி....ஆமாம் இப்பல்லாம் போளி பூரணம் விதம் விதமா....நான் ட்யூட்டி பிரூட்டி வைச்சதில்லை...அது பன் மாதிரி...
நீக்குஹஹஹ. பாயாசம் நினைவு படுத்திட்டேனா..வாரத்துல ஒன்னுதானேனே போடுங்க ......வெயிட்டிங்
கீதா
வாங்க கோபு சார். பெருமாள் சன்னிதியில் போளி செய்து வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, நானேதான், நானேதான் செய்திருப்பேன் என்று நம்பிக்கை வந்திருக்கும். 'போளி','போலி' சொல்லாடல் நல்லா இருந்தது. ஆனா, எல்லாரும் தாங்களே செய்துதான் போட்டோவோட போடறாங்க. ஆனா, செய்யும்போதே புகைப்படம் எடுப்பது ஒரு வேலைதான். ஞாபகமா ஒவ்வொரு ஸ்டேஜுலயும் படம் எடுக்கணும்.
பதிலளிநீக்குஉங்களுக்கு போளி பிடிக்குமா, என்ன போளி பிடிக்கும்னு சொல்லாமல் கிளம்பிவிட்டீர்களே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றி துரை செல்வராஜு. 'இலை அடை'லனா, வாழையிலையின் நறுமணம் இருக்கும். போளில அந்த மணம் வராதே (சாப்பிடற இலைல சுடச் சுட போளி போட்டாலொழிய).
பதிலளிநீக்குதஞ்சையில் சாப்பாடு பிரசித்தம்தான். ஆனா எந்தக் கடைல போளி நல்லாருக்கும், எங்க 'தாட்டெலை' சாப்பாடு கிடைக்கும்னெல்லாம் சொல்லலியே. (தாட்டெலைனா தெரியுமா?)
நன்றி பகவான்ஜி. நானும் அடுக்களை விஷயம் தெரிஞ்சுக்காமல்தான் இருந்தேன். ஆனா நாம செய்துபார்க்கும்போதுதான் கஷ்டம்லாம் தெரியும்.
பதிலளிநீக்குநன்றி மிடில் கிளாஸ் மாதவி உங்கள் வருகைக்கு. வெண்டைக்காய் புளி குத்தின கறிக்கு அடுத்து இன்னும் எழுதலை நீங்க.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ரஜினி முருகன்... சாரி.. ஆஷா போஸ்லே அதிரா. உங்களுக்கும் ஏஞ்சலின் மாதிரி இனிப்பு பிடிக்காதா? அடக் கடவுளே... உங்கள் கணவர், பாவம்தான். (ஏஞ்சலின்... சும்மா இருங்க. அதிரா இனிப்பு செய்தால்தான் அவர் கணவர் பாவம் என்று சொல்வது கேட்கிறது. அது சரியில்லை)
பதிலளிநீக்குகார போளி நான் பண்ணினதில்லை. எனக்கு எப்போதுமே இனிப்பில்தான் விருப்பம் அதிகம்.
கடலெண்ணெய் என்பது Peanut oilதான். அதைத்தான் எல்லா கார, இனிப்பு வகைகளைச் செய்ய 40 வருடங்கள் முன்பு (எனக்கு முந்தைய தலைமுறை அல்லது நிச்சயமாக அதற்கு முந்தைய தலைமுறை) உபயோகப்படுத்துவார்கள். சில சமயம், இனிப்புக்கு டால்டா, அல்லது விசேஷத்துக்கு நெய். கத்திரிக்காய் தொக்குக்கு நல்லெண்ணெய்தான் நல்லா இருக்கும்.
இது வரைல ஸ்வீட் 16னு சொல்லிக்கிட்டிருந்தீங்க. நாங்களும் பேசாம ஏத்துக்கிட்டோம். இப்போ படம் பார்த்தால்தான் புரியுது, எழுதினது புரியலைனு சொல்றதைப் பார்த்தா, வயது 8ஐத் தாண்டலையோ? வருகைக்கு மியாவும் நன்றி.
நன்றி அனுராதா ப்ரேம்குமார். நாம செய்து அதைப் பதிவிடறதுல உள்ள மகிழ்ச்சியே தனி. பதிவிடுங்கள். வாசிக்கிறோம்.
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சலின். உங்களுக்கு 'உள்ளுணர்வு' அதிகம் என்று நீங்கள் எழுதியதைப் படித்திருக்கிறேன். அதுக்காக இவ்வளவு வேலைசெய்யுமா? அப்பா போளி செய்வார்னு எழுதியிருக்கீங்க. அவருக்கு இப்படிப் பண்ணுவதில் இஷ்டமா?
பதிலளிநீக்கு"இனிப்பு போளியை அம்மா பாலில் ஊற வைச்சி சாப்பிடுவாங்க" - பால் போளின்னு அது வேற. அதையும் விரைவில் செய்யும் ஆசை வந்துவிட்டது. பால்போளி எனக்கு ரொம்பப் பிடித்தமானது (சரி. சரி... இனிப்பில் எல்லாமே எனக்குப் பிடிக்கும். ரொம்ப எண்ணெய் இருக்கக்கூடாது. அதாவது ஸ்ரீகிருஷ்ணா மைசூர்பாக்கைக் கையில் எடுத்தால் நெய் விரலில் வழியும். அப்படி இருந்தால், உடலுக்குக் கேடு என்று மனதில் சமீப சில வருடங்களாகவே பதிந்துவிட்டதால், தவிர்த்துவிடுவேன்)
ஆஹா. நெல்லை பால் போளி... நல்லாருக்கும்....அப்புறம் சிரோட்டி....பதற்பெணி சாப்டுருப்பீங்களே.......பண்ணவும் தெரிஞ்சுருக்கும்....அதுவும் போடுங்க....
நீக்குகீதா
நன்றி கோமதி அரசு மேடம். நான் ஆசையோடு செய்வேன். பெரும்பாலும் நல்லா வரும். ஆபீஸ் நண்பர்களுக்குக் கொடுத்துவிடுவேன் (அது மோர்க்குழம்பானாலும், இனிப்பு வகைகளானாலும்). என்னுடன் வேலைபார்க்கும் சிலருடைய குடும்பமும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதனால் என்னைக்காவது இப்படி செய்துகொடுப்பது அவர்களுக்கும் பிடிக்கும்.
பதிலளிநீக்குநன்றி சென்னைப் பித்தன் சார். ரொம்ப நாளைக்கு அப்புறம் கல்யாணராமன் படத்தை நினைவுகூற வைத்துவிட்டீர்கள் (அதுலதானே... காதல் வந்திருச்சு ஆசையால் ஓடி வந்தேன் பாடல்?)
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி அவர்களுக்கு. ஜீனி சேர்த்துச் செய்வது ரொம்ப சுவையா இருக்கும்.
பதிலளிநீக்குநன்றி காமாட்சி அம்மா. நீங்கள் இடுகையைப் படித்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்புகள் சரிதான். உங்கள் பதிவில், போளிகளை மடித்து இன்னும் அழகாகப் படம் போட்டிருந்தமாதிரி ஞாபகம்.
பதிலளிநீக்குகடலைப் பருப்பு, ஜீனியை அரைத்துச் செய்யும்போது, நெருடல் இல்லாததால், அதாவது ரொம்ப நைஸாக இருப்பதால் போளி ரொம்ப மெல்லிசாக வரும்.
உங்கள் மீள் வருகைக்கும் நன்றி. என்னைக்கேட்டால், உங்களைப்போல், கீதா சாம்பசிவம் போன்றவர்களைப்போல் நன்றாக சமையல் தெரிந்தவர்கள், அவ்வப்போது அவர்கள் செய்யும் ஸ்பெஷல் சமையல் குறிப்புகளை எழுதவேண்டும். நீங்களும் நிறைய எழுதியிருக்கிறீர்கள். அவ்வப்போது படிப்பேன்.
நன்றி அசோகன் குப்புசாமி.
பதிலளிநீக்குநன்றி அவர்கள் உண்மைகள் துரை. உங்கள் கருத்துக்கு நன்றி. செங்கோட்டை.... ம்ம்ம் திருநெவேலி ஞாபகம் வந்துவிட்டது. (ஆனா... பிறந்த ஊரை மறந்துவிட்டு மதுரைத்தமிழன் என்று பேர் போட்டுக்கிட்டீங்க. அதுவும் நல்லதுக்குத்தான். இல்லைனா எனக்கில்ல வேற பேரைத் தேடவேண்டிவந்திருக்கும்)
பதிலளிநீக்குஎத்தனை இரயில் வண்டி நிலையங்களில் சிறு வயதில் ஆசையோடு சாப்பிட்டிருப்போம் (எதைப் பற்றியும் கவலைப்படாமல்). இப்போது அந்த விகல்பமில்லாத மனநிலையோடு சாப்பிடமுடியுமா? சுத்தமாயில்லை, இடம் சரியில்லை என்று மனதில் தோன்றும்தானே.
@நெல்லை தமிழன் :))))))))
பதிலளிநீக்கு//சும்மா இருங்க. அதிரா இனிப்பு செய்தால்தான் அவர் கணவர் பாவம் என்று சொல்வது கேட்கிறது. அது சரியில்லை)//
ஹாஆஹா உண்மையைத்தான் நான் சொல்றேன் ..பூஸார் கிச்சனுக்குள்ள போய் கபேர்டை திறந்து இதெல்லாம் கண்ணில் படுதோ கைக்கு எட்டுதோ அதெல்லாம் சமையலில் சேர்ப்பாராம் :)) கொஞ்ச நஞ்ச பாவமில்லை அவங்க குடும்பம் பாடு :)
@நெல்லை தமிழன் .
பதிலளிநீக்கு//
நாங்களும் பேசாம ஏத்துக்கிட்டோம். இப்போ படம் பார்த்தால்தான் புரியுது, எழுதினது புரியலைனு சொல்றதைப் பார்த்தா, வயது 8ஐத் தாண்டலையோ? //
ஹா ஹா டைப்பிங் எரர்ல 8 பக்கத்தில் ஜீரோவை விட்டுட்டிங்க ..எண்பது ,80 ,achtzig
இது செகண்ட் infancy பூனைக்கு
மதுரைத்தமிழன், தில்லையகத்து கீதா ரங்கன், ஏஞ்சலின் மற்றவர்கள் - ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கறது என்ன அவ்வளவு சுலபமா? ஆனா, நல்ல காசு பார்க்கணும்னா, சொந்தத் தொழில் செய்தால்தான் நல்லது, முன்னுக்கும் வரமுடியும். மசால்வடை, போண்டா வகைகள், டீ முதலானவைகளையே கான்செப்ட் ஆக வைத்து பெங்களூரில் 3 கடைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவே இப்போ ஃப்ரான்சைசீக்களைத் தேடி பிசினஸை விரிவுபடுத்தும்படியாக வளர்ந்திருக்கிறது. வெறும்ன ஒரு கடை போடறதைவிட, ஒரு கான்செப்ட் தேடி அதுக்கேத்தமாதிரி ரெஸ்டாரென்ட் அல்லது கடை ஆரம்பித்தால், நல்ல வளர்ச்சி உண்டு. (எங்கிட்ட அறிவுரைதான் உண்டு)
பதிலளிநீக்குஇப்போதான் சமீபத்தில் படித்தேன். (சும்மா தளத்தில், http://honeylaksh.blogspot.com/) திருமதி சீதா தேனப்பன் பிரிட்டனில், மசாலா விற்க ஆரம்பித்து பெரிய பிசினஸாக உருவாக்கியவிதத்தை)
ஆமாம் பண்ணும் அங்கு வாசித்தேன்....
நீக்குகான்செப்ட் பிசினஸ்... ஆம் நல்லா போகும்..பெங்களூர் தகவலுக்கு நன்றி....
கீதா
@நெல்லை தமிழன் ..
பதிலளிநீக்கு//அப்பா போளி செய்வார்னு எழுதியிருக்கீங்க. அவருக்கு இப்படிப் பண்ணுவதில் இஷ்டமா?//
ஆமாம் ..எங்க வீட்ல அப்பா வெளியூரில் வேலை செய்தார் மாத மாதம் வரும்போது எங்களுக்கு வடை பஜ்ஜி நெய் கொட்ட கொட்ட கேசரி பால்கோவா எல்லாம் செய்வார் ..களாக்காய் நார்த்தங்காய் கிச்சிலி ஊறுகாய் போடறதில் ஸ்பெஷலிஸ்ட் ..அவ்ளோ ஆசை சமையல் செய்ய அவருக்கு ..அவசர மட்டுமில்ல அவரது சகோதரர்களுக்கும் சமைப்பது விருப்பம் :)
நள பாகம் ஆண்களுக்குரியது என்பது உண்மைதான் போல :)
எனக்கு இனிப்பு போளி ரொம்ப பிடிக்கும்.கொஞ்சம் வேலை எடுக்கும். அதான் செய்யுறதில்லை. உங்க பதிவு செய்ய தூண்டிடுச்சு
பதிலளிநீக்கு@ geetha .not only paleo .gluten sensitive..
பதிலளிநீக்குAngelin
ஓ ஓகே....
நீக்குகீதா
ஹா ஹா ஹா இது மச்சம் இல்லை அதுக்கும் மேலே.. அம்ப்ரெல்லா பிடிசிட்டு போகுர மாதிரி ஹா
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@Angelin said...
///@கீதா :) மைதா கோதுமை எனக்காகாதே :) ///
மனுஷங்க சாப்பிடுற ஒரு ஐட்டமும் உங்களுக்கும் எங்காத்து மாமிக்கும் புடிக்காதே.....பேசாமல் உங்கள் இருவரையும் மாட்டு தொழுவத்தில்தான் கொண்டு போய்விடனும்
@கீதா
பதிலளிநீக்கு///ஹஹஹஹஹஹ...ஐயோ. இந்த மதுரை...இருக்காரே...ஹாலோ...நீங்க தான் நடத்தனும்....மீ ஒன்லி....டிப்ஸ்.....///
ஹலோ கீதா நீங்க டிப்ஸ் கொடுக்கும் போது ஒரு பெரிய தொகையாக கொடுத்திட்டால் அமெரிக்கவில் என்ன உலகமெங்கும் உங்கள் பெயரில் ரெஸ்டாரண்ட் ஆர்ம்பித்து நான் நடத்த தயார்...
நிச்சய்ம் இதை படித்தவுடன் கீதா யாருக்கும் இனிமேல் டிப்ஸ் தரவே மாட்டாங்க ஹீஹீஹீ
/// நல்ல காசு பார்க்கணும்னா, சொந்தத் தொழில் செய்தால்தான் நல்லது, முன்னுக்கும் வரமுடியும். மசால்வடை, போண்டா வகைகள், டீ முதலானவைகளையே கான்செப்ட் ஆக வைத்து பெங்களூரில் 3 கடைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவே இப்போ ஃப்ரான்சைசீக்களைத் தேடி பிசினஸை விரிவுபடுத்தும்படியாக வளர்ந்திருக்கிறது. வெறும்ன ஒரு கடை போடறதைவிட, ஒரு கான்செப்ட் தேடி அதுக்கேத்தமாதிரி ரெஸ்டாரென்ட் அல்லது கடை ஆரம்பித்தால், நல்ல வளர்ச்சி உண்டு. (எங்கிட்ட அறிவுரைதான் உண்டு)///
பதிலளிநீக்குநெல்லைதமிழன் உங்கள் பார்வை கழுகுபார்வையாக இருக்கிறது நிறைய விஷ்யங்களை பார்த்து படித்து தெரிந்து வைத்திருக்கிறீர்கள் குட்
///எத்தனை இரயில் வண்டி நிலையங்களில் சிறு வயதில் ஆசையோடு சாப்பிட்டிருப்போம் (எதைப் பற்றியும் கவலைப்படாமல்). இப்போது அந்த விகல்பமில்லாத மனநிலையோடு சாப்பிடமுடியுமா? சுத்தமாயில்லை, இடம் சரியில்லை என்று மனதில் தோன்றும்தானே. ///
பதிலளிநீக்குமிக மிக சரி ஆனால் நாம் சிறுவயதில் விகல்பமில்லாத மனநிலையில் இருந்த மாதிரி இன்றைய சிறு குழந்தைகள் இல்லை
///Angelin said...
பதிலளிநீக்கு@நெல்லை தமிழன் .
//
நாங்களும் பேசாம ஏத்துக்கிட்டோம். இப்போ படம் பார்த்தால்தான் புரியுது, எழுதினது புரியலைனு சொல்றதைப் பார்த்தா, வயது 8ஐத் தாண்டலையோ? //
ஹா ஹா டைப்பிங் எரர்ல 8 பக்கத்தில் ஜீரோவை விட்டுட்டிங்க ..எண்பது ,80 ,achtzig
இது செகண்ட் infancy பூனைக்கு//
ஹா ஹா ஹா என்னா புகைப்போகுது இங்கின:).. நான் நெஞ்சு பக்கூஊஊஊப் பக்கெனப் படிச்சிட்டு வந்தேன்ன் 80 எனத்தான் சொல்லப்போறாரோ என:) 8 உடனே நிறுத்திட்டார்ர்:).. அதாவது ஹால்ஃப் ஒஃப் சுவீட் 16 ஆம்:)...
இப்போதான் பாடலாம் எனும் தெகிறியம் வந்திருக்குது நேக்கு:)...
Angelin said...
பதிலளிநீக்குஹலோவ் :)
@அதிராவ் மியாவ்வ்வ்வ்
//ஆவ்வ்வ்வ்வ் போலிக்குறிப்பு என அஞ்சுவைத்தானே சொல்றீங்க கோபு அண்ணன்?:).. //
கோபு அண்ணா எதையும் நேர்மையா நேராவே சொல்வார் ..இதில் சொன்ன போலி நீங்கதான் :)
கேசரியை கேக் ஆக்கி வச்சது பட்டாணி சுண்டல் போட்டுதோசை சுட்டது cous cous ல பொங்கல் செஞ்சது எல்லாம் நீங்கதான் :)wok ல ஆப்பம் செஞ்சது அப்புறம் ..கேக் மேக்கர்ல இட்லி பொரிச்சது ,நீங்கதானே :)///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பாஆஆ.. வல்லாரை நல்லாத்தான் வேலை செய்யுது:)..
அஞ்சூஊஊஊ அந்த அறுகூட்டுத் தோசை ரெஇப்பி அனுப்பட்டோ அடுத்த மண்டேக்கு:)...
நன்றி ராஜி. இது கொஞ்சம் வேலை எடுக்கும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. பூரணம் கொஞ்சம் அதிகமாகக் கிளறி குளிர்சாதனத்தில் வைத்துக்கொண்டால், ஒரு தடவை செய்யும்போது 5-6 சுலபமாகப் பண்ணலாம். அப்படி 10 நாட்களுக்குள் 3 தடவை செய்துவிடலாம். ஒரேயடியாக 30 பண்ணறதுனாத்தான் கொஞ்சம் கஷ்டம்போல் தெரியும்.
பதிலளிநீக்கு"நள பாகம் ஆண்களுக்குரியது என்பது உண்மைதான் போல" - இதுல சந்தேகம் வேண்டாம். அதுக்கு சில காரணம் ஏஞ்சலின். (1) அப்போ, ஆண்கள்தான் எல்லா இடங்களிலும் சாப்பிட வாய்ப்பு உள்ளவர்கள். அவங்களுக்கு ருசி அதிகமாகத் தெரியும் (2) ஒரு அளவுக்கு மேல உணவு செய்யணும்னா, கல்யாணம், விழா போன்று, அதற்கு physical abilityயும், இயல்பாக உணவை ருசிக்கும் தன்மையும் இருக்கணும். (3) ஆண்கள் சொன்ன தேதில வந்து சமையல் நடத்திக்கொடுத்துட முடியும். பெண்களால, அந்தக் கால முறைக்கு, அது இயலாது. அதுனாலதான் ஆண்கள், சமையல் பண்ணறதுல புகழோட இருக்காங்க. (அந்தக் காலத்துல பெண்கள் வெளியே சென்று சமைக்காததினாலும் இருக்கலாம்).
பதிலளிநீக்குஉங்க கணவரும் நிச்சயமா நல்லா சமைக்கக்கூடியவராத்தான் இருக்கணும். என்ன.. நல்லா சமைச்சாங்கன்னா, மொத்த வேலையையும் அவர் தலைல கட்டிட்டீங்கன்னா? அதுனாலதான் தயங்குவாராயிருக்கும்.
மீள்வருகைக்கு கீதா ரங்கன், அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன், அதிரா அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குகீதா ரங்கன், இப்போ எப்படின்னு தெரியாது. அப்போ, கடம்பூர் போளி, மணப்பாரை முருக்கு, கோவில்பட்டி கடலைமிட்டாய் என்று ஊர் பேரை வைத்து அங்கு உள்ள ஸ்பெஷல் ஐட்டங்களைச் சொல்வார்கள். அதுக்கேத்தவாறு, அந்த ஸ்டேஷங்களில் இரயில் நிற்கும்போது, வாங்குவார்கள். இப்போது எல்லாம் எல்லா இடத்திலும் கிடைக்குது. போதாக்குறைக்கு, அந்த ஊர் பேரைப்போட்டே பல போலி/நிஜ ஐட்டங்கள் வந்துவிட்டது (கும்பகோணம் ஸ்டேஷனில் இருட்டுக்கடை அல்வா பாக்கெட் நிறையக் கிடைக்கிறது. 86-90கள்ல, நெல்லை லக்ஷ்மி விலாஸிலிருந்து நெல்லை எக்ஸ்ப்ரசில் 10 கிலோ (அல்லது அதிகமோ) தினமும் சென்னைக்கு வரும். அதை மாருதி வேனில் பனகல் பார்க் அருகில் விற்றுக்கொண்டிருப்பார்கள். கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பிராண்டுகள் சென்னையில் உலா வருகின்றன. அதில் பல, கோவில்பட்டியில் செய்யும் முறையில் செய்வதில்லை. ஜீனி, கோந்து போட்டுச் செய்கிறார்கள். நிறைய ஆன்லைன் சைட்டுகளில், நெல்லை அல்வா போன்று பல பாரம்பரிய உணவு வகைகள் (தூத்துக்குடி மக்ரோன், நாகர்கோவில் சிப்ஸ் இப்படி நிறையச் சொல்லலாம்) விற்கிறார்கள். நான்கூட இவைகளை அந்த அந்த ஊரில் கொள்முதல் செய்து கொரியர் செய்கிறார்கள் என்று நினைத்தான். அப்புறம் பார்த்தால், இவங்களே அவைகளைத் தயாரித்து பேர் மட்டும் அந்த அந்த ஊர் என்று சொல்லுகிறார்கள். இதுல வேற, ஜென்மத்துல இந்த ஒரிஜினல் உணவு வகைகளைச் சாப்பிடாதவர்கள், இவங்ககிட்ட இருந்து வாங்கும் ஐட்டத்துக்கு டெஸ்டிமோனி வேற கொடுக்கறாங்க... சரி எங்கயோ ஆரம்பித்து எங்கயோ போயிடுத்து.
நான் விரும்பி உண்ணும் உணவு
பதிலளிநீக்குபோளி தான் - தங்கள்
செய்முறை வழிகாட்டல் அருமை!
ஒரு காலத்தில் எல்லாப் பண்டிகைக்கும் போளிசெய்து கொண்டு இருந்தேன். இப்போல்லாம் செய்ய முடியறதில்லை. ஜீரா போளியைச் செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது பாலைக்காய்ச்சி அதில் ஊற்றிக் கொண்டு சாப்பிடலாம். தேங்காய் போளி இங்கே என் மாமியார் வீட்டில் பழக்கம் இல்லை, பிடிக்கிறதில்லை என்பதால் அதிகம் செய்ததில்லை.
பதிலளிநீக்குநன்றி ஜீவலிங்கம்.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம்.. ஸ்ரீரங்கத்திலேர்ந்து போடற பதில்மாதிரி தெரியுதே. ஜீரா போளி? பால்போளி கேள்விப்பட்டிருக்கேன். ஒருவேளை, மைதாமாவில் பூரி மாதிரி பொரிச்சு, அதன் மேல் ஜீனி பாகை விட்டுவிடுவீர்களோ? (பூரி மாதிரி உப்பியிருக்காம தட்டையா).
ஆஹா, நெ.த. ஶ்ரீரங்கத்திலே இருந்து தான் பதில் போட்டிருக்கேன். ஹிஹிஹி! ஒரு வாரமா இணையத்துக்கு ஜாஸ்தி வர முடியலை. இப்போத் தான் ஒவ்வொரு பதிவாப் படிச்சுட்டு வரேன்.
பதிலளிநீக்குஜீரா போளி மைதாவில் செய்யறது இல்லை. ஒரு மாசம் கெடாது! கிட்டத்தட்ட சிரோட்டி மாதிரித் தான் என்றாலும் இங்கே ஜீராவில் நனைத்து எடுத்து வைத்து மேலே மு.ப.குங்குமப்பூ(வசதி இருந்தால்) போடலாம். மடித்து மடித்துப் போட்டு இட்டுப் பொரிப்பதால் உள்ளே லேயர் லேயராக ஜீராவில் ஊறிக்கொண்டு நன்றாக இருக்கும். அதைத் தேவைப்படும்போது பாலைச் சுண்டக்காய்ச்சி மேலே ஊற்றிக் கொண்டு சாப்பிடலாம். சாதாரணமாகப் பால் போளி மைதாவில் பூரி பொரித்துச் செய்து அன்றே சாப்பிடும்படி பாலைக்காய்ச்சிச் சர்க்கரை சேர்த்து நனைத்துச் சாப்பிடுவார்கள். இது அப்படி இல்லை. என் புக்ககத்துச் சிறப்பு போளி இது!
கீதா சாம்பசிவம் மேடம்.. உங்க பிளாக்ல ஜீராபோளி செய்முறை இருக்கா? இல்லைனா இங்க குறிப்பு கொடுங்க. செய்து எங்கள் பிளாக்குக்கு அனுப்பறேன் எனக்கும் ஏதாவது ஸ்வீட் செய்துபார்த்து சாப்பிடணும்
பதிலளிநீக்கு