Monday, May 8, 2017

"திங்க"க்கிழமை :: வாழைப்பூ ரசம் - ஏஞ்சல் ரெஸிப்பிவாழைப்பூ ரசம் .. 
================  


வாழைத்தண்டு சூப் வாழைப்பூ சூப் வகையில் இது வாழைப்பூ ரசம் ..  மற்ற ரசங்களுக்கும் இதற்கும் செய்முறையில் வித்தியாசமில்லை.   செய்முறை அதேதான்.   ஆனால் சுவை மிகவும் அருமையாக வந்தது ..


அப்புறம் இந்த ரசத்தில் நான் வெள்ளை மிளகு ப்ளஸ் கருப்பு மிளகு இரண்டையும்  சேர்த்து அரைத்து செய்தேன் ..


வெள்ளை மிளகு கருப்பு மிளகை விட கொஞ்சம் காரம் அதிகம் ..வெள்ளை மிளகு ஆன்டி பாக்டீரியல் குணமுள்ளது ..


யாரது அங்கே அப்போ கருப்பு மிளகுக்கு அங்கிள் பாக்டீரியா குணமான்னு கேட்பது :))) ..


எங்க வீட்ல ஒரு ரசப்பிரியை இருக்கா //பிறந்தநாளுக்கு கூட ரசம் ரைஸ் தாங்கம்மா// எனும் அளவுக்கு அவ்வளவு ஆசை மகளுக்கு ..


அதனாலேயே என்னவோ எங்க வீட்ல குழம்பு பொரியல் சாம்பார் குருமா என்ன செய்தாலும் தினமும் சுடசுட ரசமும் இருக்கும் ..


மேலும் நான் ரசப்பொடி அரைத்து வைத்து பயன்படுத்துவதில்லை அப்போவே தேவைக்கு சின்ன மிக்சி ஜாரில் அரைத்து தாளித்து சமைப்பேன் ..தேவையான பொருட்கள்
=========================

வேகவைக்க 
-------------------------
சுத்தம் செய்து நறுக்கிய  வாழைப்பூ  .....3 கைப்பிடி அளவு 

ஊறவைத்த துவரம்பருப்பு                     ......1 ஸ்பூன் 

துவரம்பருப்பு சேர்ப்பது அவரவர் விருப்பம் ..  பருப்பு சேர்க்காமலும் ரசம் மிக ருசியாக வந்தது 

வேகவைக்கும்போது சேர்க்க உப்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் ..தேவையான அளவு தண்ணீர் ...........  3 கோப்பைகள் 

ரசப்பொடி ..  இன்ஸ்டன்ட் பொடி  வீட்டில் வைத்திருப்போர் அதனை சேர்த்துக்கொள்ளலாம் ..

இல்லாவிடில் இதுதான் நான்  சேர்க்கும் அளவு ..
     
கொத்தமல்லி விதைகள் ---------------  2 தேக்கரண்டிகள் 
வெள்ளை மிளகு                ---------------  1 தேக்கரண்டி 
கருப்பு மிளகு                       ---------------  1 தேக்கரண்டி 
சீரகம்                                     ---------------- 1 1/2 தேக்கரண்டி 
வற்றல் மிளகாய்                 ---------------- 1/2 
தேங்காய்                              ----------------- 1 சிறு துண்டு 

இவற்றை லேசாக சட்டியிலோ வாணலியிலோ வறுத்து வைக்கவும் 

பூண்டு  ----- 3 பற்கள் 

தக்காளி ---- 1 

புளி --------------நெல்லிக்காயளவு ..நீரில் ஊறவைத்தது 

உப்பு ------------ தேவையான அளவு 

சாம்பார் பொடி ....1 தேக்கரண்டி (விரும்பினால் )
நான் சேர்க்கவில்லை 

பெருங்காயத்தூள் ......தேவையான அளவு 


தாளித்து சேர்க்க 
கடுகு ---------1 தேக்கரண்டி 
வற்றல் மிளகாய் ---1 
கொத்தமல்லி இலைகள் 
கறிவேப்பிலை இலைகள் 
வெல்லம் ..சிறு துண்டு 


முதலில் சுத்தம் செய்து நறுக்கிய வாழைப்பூக்களை ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு ,மஞ்சள்தூள் உப்பு 3 கோப்பை நீர்     சேர்த்து மூன்று விசில் வரும்வரை வேகவைக்கவும்..
விசில் அடங்கியதும் சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து உருளைக்கிழங்கு மசிக்க வைத்திருக்கும் உபகரணத்தால் நன்கு பருப்பையும் வெந்த வாழைப்பூக்களையும் மசிக்கவும் .இப்போ எல்லாம் கலந்து வந்திருக்கும் அதை அப்படியே வடிகட்டி வைக்கவும் ..விருப்பமானால் அதில் ஒரு ஸ்பூன் அளவு வெந்த கலவை மட்டும் வடிகட்டிய நீரில் சேர்த்துக்கொள்ளலாம் ..


இப்போ அடுத்தது வறுத்து  வைத்துள்ள மிளகு சீரக தனியாவை மிக்சியில் ஒரு சுற்று அரைத்து அத்துடன் தக்காளியில் பாதியையும் ஒரு சுற்று சுற்றவிட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும் .

இந்த தக்காளி அரைக்கிறது எதுக்கு என்றால் இங்கே நம்மூர் நாட்டு தக்காளி கிடைக்காது எல்லாமே ஜாம் செய்யும் வகை லேசில் அழுகாது ஆனால் கையால் நசுக்கி விடவும் முடியாது அதனாலேயே பலர் தோலை வெட்டி கூட்டு குழம்பு சட்னிகளுக்கு சேர்ப்பாங்க 

அடி  கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை மெதுவாக சிம் இல்  எரியவிட்டு   தாளிக்க எண்ணெய் ஊற்றி  கடுகு ,வற்றல் மிளகாய்  கறிவேப்பிலை தாளித்து அதில் அரைத்த ரசப்பொடியை சேர்த்து லேசாக வதக்கவும் ..மூன்று பற்கள் பூண்டையும் தட்டி சேர்க்கவும் ,பெருங்காயத்தூள் சேர்த்து மீதி வெட்டி வைத்த தக்காளியும் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கி அத்துடன் சாம்பார்பொடி வேகவைத்த வாழைப்பூ நீர் இந்த (வாழைப்பூ நீரே 3 கோப்பைகள் அளவுக்கு  வரும் அதனால் தனியாக நீர் சேர்க்க அவசியமில்லை ரொம்ப சுண்டிவிட்டது என்றால் ஒரு கோப்பை நீர் தனியாக புளிநீருடன் சேர்க்கலாம் ),பிறகு புளி தண்ணீர் எல்லாம் சேர்க்கவும் ..உப்பு சரி பார்க்கவும் .

எல்லாம் நுரை கட்டி  வரும் போது அந்த குட்டியூண்டு துண்டு வெல்லத்தையும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து இறக்கவும் ...அடுப்பை கண்டிப்பா அணைக்கணும் இது நியூ ஜெர்சிக்காரருக்கு மட்டுமே :) 

இந்த வெல்லம் சேர்க்கும் பழக்கம் ஒருமுறை  டிவி ப்ரோக்ராம் ஒன்றில் மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் சொன்னது ..அப்போதிலருந்து சேர்க்கிறேன் சுவையும் நல்லாவே இருக்கு ..

எல்லாருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருப்பதுபோல எனக்கு சுட சுட ரசத்தை காபி கோப்பையில் ஊற்றி அதில் பொரித்த அப்பளத்துண்டுகளை உடைத்து போட்டு சாப்பிட பிடிக்கும் :) 
114 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
செய்முறை விளக்கத்துடன்அசத்தல் சிறப்பு நிச்சயம் செய்து பார்க்கிறோம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Bagawanjee KA said...

#கருப்பு மிளகுக்கு அங்கிள் பாக்டீரியா குணமான்னு கேட்பது :))) .#
ஆஹா ,இத்தனை நாளா எனக்கு இது க்ளிக் ஆகாம போச்சே :)

நெல்லைத் தமிழன் said...

வாழைப்பூ ரசம் கேள்விப்பட்டதில்லை. பூண்டு இல்லாமல் செய்துபார்க்கிறேன்

Geetha Sambasivam said...

வாழைப்பூக்குழம்பு செய்வோம். கூட்டு, கறி, வடை, அடை, பருப்புசிலி போன்றவை செய்வோம். ரசம் இப்போத் தான் முதல்முறையாகக் கேள்விப் படறேன். வீட்டில் முன்கூட்டிச் சொன்னால் பயந்துடுவாங்களோனு நினைக்கிறேன். ஹிஹிஹி, ஏற்கெனவே சோதனை எலியானு பயப்பட்டுட்டு இருக்கார்.

KILLERGEE Devakottai said...

புகைப்படமே ஆவலைத் தூண்டுகிறது

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
கேள்விப்பட்டதே இல்லைம்மா. வாழைப்பூ ரசம்
உடம்புக்கும் நல்லது என்றே நினைக்கிறேன்.
அழகான விளக்கு முறை.
இங்கே பூ கிடைப்பதில்லை. ஊரில்
போய்ச் செய்யலாம்.

Avargal Unmaigal said...

///அடுப்பை கண்டிப்பா அணைக்கணும் இது நியூ ஜெர்சிக்காரருக்கு மட்டுமே :) ///

அடுப்பை எப்படி அணைக்கணும் என்று சரியான விளக்கம் இல்லை... தண்ணி தெளித்து அணைக்கணுமா? அல்லது பெட்சீட்டை பொட்டு அணைக்கணுமா?

Avargal Unmaigal said...

///எல்லாருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருப்பதுபோல எனக்கு சுட சுட ரசத்தை காபி கோப்பையில் ஊற்றி அதில் பொரித்த அப்பளத்துண்டுகளை உடைத்து போட்டு சாப்பிட பிடிக்கும் :) ///


@ஏஞ்சல் பொரித்த அப்பளத்தை உடைத்து அல்லது அப்பள துண்டுகளை போட்டு சாப்பிட பிடிக்கும் என்று சொல்ல வேண்டும் ஆனால் நீங்கள் துண்டுகளையே மேலும் உடைக்க சொல்ல்கீறீர்கள் என்றால் அப்பளத்தை மிகப் பொடியாக ஆக்குவது போல அல்லவா இருக்கிறது அது சரி என்றால் உங்கள் படத்தில் அப்பளம் துண்டுகளாகத்தான் இருக்கிறது அது பொடியா இல்லையே ஹீஹ்ஹீ நான் நக்கீரன் பரம்பரையை சேர்ந்தவன்

Avargal Unmaigal said...


நல்ல வேளை இணையம் பக்கம் எங்க ஆத்து மாமி வரதில்லை ஒரு வேளை அவர்கள் வந்து இந்த ரிசிப்பியை பார்த்து இருந்தால் என்ரு நினைக்கும் போதே என் மனம் நடுங்குகிறது நல்லவேளை கடவுள் என் பக்கம் இருக்கிறான்டா குமாரு

athira said...

காலையில நித்திரை கொள்ள முடியேல்லை ஒரே வாசம்... மணந்து கொண்டே வந்து சேர்ந்திட்டேன். அன்று தேம்ஸ் கரையில் வாசம் வந்தபோதே நினைச்சேன்... எங்கள் புளொக்குக்குத்தான் ஏதோ காலம் சரியில்லைப் போல என.. அது கரீட்டுத்தான்:).

athira said...

வாழைப்பூவும் துவரம்பருப்பும் சேர்ந்தாலே தடித்து விடாதோ ?கறிபோல ரசம், வறுத்துத்தான் அரைப்பீங்களோ, நான் பச்சையாகத்தான் அரைப்பேன். இதுக்கு சாம்பார்பொடியுமோ கர்ர்ர்ர்....

மகளிடமும் வேலை வாங்கித்தான் ரசம் செஞ்சிருக்கிறீங்க.

athira said...

////...அடுப்பை கண்டிப்பா அணைக்கணும் இது நியூ ஜெர்சிக்காரருக்கு மட்டுமே :) /// கடவுளே நியூஜெஸிலதான் இப்போ செல்லப்பா ஐயாவும் இருக்கிறார் ஜாக்ர்ர்ர்ர்தை:)....

ட்றுத்... நீங்க தண்ணியும் தெளிக்க வாணாம் பெட்சீட்டும் போட வாணாம் உங்கட ஜக்கெட்டைக் கழட்டி வச்சிட்டு நெருப்பை அணைக்கவும் பிளீஸ்ச்ச்... அப்போதான் பேப்பரில வருவீங்க படத்தோடு....:).

athira said...

பினிசிங் கலர் சூப்பரா வந்திருக்கு... நாமும் கப் லதான் ரசம் குடிப்போம்ம்ம்... அப்பளம் போட்டு குடிப்பது நல்ல ஐடியாவா இருக்கே .. றை பண்ணிடுவோம்.

athira said...

யாராவது முடிந்தால் இந்த வோட் லிங்கை இங்கு கொமெண்ட்டில் பேஸ்ட் பண்ணி விடவும் பிளீஸ்... நேரம் போதவில்லை...

G.M Balasubramaniam said...

செய்து பார்க்கலாம் என்றால் வாழைப்பூ கிடைப்பதில்லை. அவை கிடைக்கும் போது இந்தப் பதிவு நினைவுக்கு வரவேண்டுமே

Asokan Kuppusamy said...

ருசியான ரெசிபி

ராஜி said...

புதுசா இருக்கே

Angelin said...

@கவிஞர்.த.ரூபன் ..//

வாங்க முதல் கப் ரசத்தை ருசித்ததற்க்கு மிக்க நன்றி ..செய்து பார்த்து சொல்லவும் :)

Angelin said...

@பகவான்ஜீ ...ஹாஹா :) மிக்க நன்றி ரசித்ததற்க்கு .

Angelin said...

@நெல்லைத்தமிழன் ..தாராளமா பூண்டு சேர்க்காமலும் செய்யலாம் ..
இது நான் வீட்டில் 3 முறை செய்து பார்த்த பிறகே இங்கே எங்கள் பிளாக்குக்கு அனுப்பி வச்சேன் ..
முதல் முறை பூண்டு பருப்பு தண்ணீர் சேர்க்காமல் செய்தென் இரண்டாம் முறை செய்யும்போது பருப்பு வேகவைத்த நீர் சேர்த்தேன்
இப்படி நிறைய மாடிஃபிகேஷன் செய்யது பார்த்தே இங்கே வெளியாகிறது ..ஆனால் ஒவ்வொரு முறையும் சுவை நல்லாவே இருந்தது
பெருங்காயத்தூள் சேர்க்கும்போது பூண்டு அவசியமில்லை

Angelin said...

@நெல்லைத்தமிழன் .. ஒரு ப்லாகில் வாழைப்பூ சூப் பார்த்தேன் கொஞ்சம் ரசம் மாதிரி இருந்தது அதை நம்ம ஸ்டைலுக்கு மாத்தியாச்சு :)

Angelin said...

@கீதா சாம்பசிவம் ...அக்கா நான் வீட்ல என்ன சமைக்கிறேன்னு சொல்லவே மாட்டேன் ரெண்டு லாப் எலிகளுக்கும் தெரிஞ்சா அவ்ளோதான் :)
அதிலும் சின்ன எலி ரொம்ப கேள்வி கேக்கும் ..நாளைக்கு என்ன செய்யப்போறேன்னு இன்னிக்கு இரவே கேட்டு வச்சிக்கும் .அவளுக்கு பிடிச்ச ரசம் என்பதால் பிரச்சினையில்லை ..
வாழைப்பூ சூப்பைத்தான் கொஞ்சம் நம்ம ஸ்டைலுக்கு மாற்றி செய்தென் ரசம் நல்லாவே இருக்கு ..உசிலி கூட்டு செய்யும்போது கொஞ்சம் தனியா எடுத்து அதை ரசமா செய்யுங்க ..இங்கே பங்களாதேஷ் வெரைட்டி வாழைப்பூ பெரிசு அதனை மூணு வெரைட்டி செய்தென் ஒரே நாளில் ரசம் உசிலி அப்புறம் புளிக்குழம்பு

Angelin said...

@கில்லெர்ஜீ ..அது வெவ்வேறு கோணத்தில் படத்தை எடுத்து எது அட்ராக்டிவா இருக்கோ அதை போட்டுடுவேன் :) சும்மா சொல்லக்கூடாது படத்தில் இருப்பதற்கேற்ப சுவையும் அபாரம் கண்டிப்பா வீட்டில் செய்ய சொல்லி சாப்பிட்டு சொல்லுங்க

Angelin said...

@வல்லிம்மா ..வாழைப்பூ இங்கே இப்போ சம்மருக்கு நிறைய கிடைக்குதும்மா ..உடம்புக்கு நல்லதாம் வாரம் ஒருமுறை சாப்பிடறோம் நாங்க ..வாழைப்பூ சூப்பைத்தான் நான் கொஞ்சம் ரசம் ஸ்டைலுக்கு மாற்றி விட்டிருக்கேன் ..நம்ம மனோ அக்கா முருங்கை காய் ரசம் செய்திருந்தாங்க அதே போல பருப்பு அளவை மட்டும் குறைத்து செஞ்சேன் வாழைப்பூவில்

Angelin said...

கொஞ்சம் பிசி ஆப்டர் நூன் வந்து எல்லாருக்கும் நன்றி சொல்கிறேன் :))))))

காமாட்சி said...

வாழைப்பூ வேகவைத்து அரைத்ததை வடிக்கட்டி விட்டாய். தெளிவாக ரஸம் கிடைக்கும். சக்கை தங்காது. மாற்றி எழுதினாலும், ரஸம் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. ஸாமான்களும் ருசியாவதற்குச் சேர்த்திருக்கிறாய். புதுசாதான் வாழைப்பூ ரஸம் உள்ளது. படங்களெல்லாம் அருமை.ருசியும் நன்றாகவே இருக்கும். நன்றாகச் செய்துள்ளாய் பெண்ணே! அன்புடன்

Thulasidharan V Thillaiakathu said...

ஏஞ்சல் புது ரெசிப்பி....குறித்துக் கொண்டேன்....செய்ததில்லை....நானும் சிறிது வெள்ளம் சேர்ப்பேன்...

கை கொடுங்க...ரசம் கோப்பையில் வித் அப்பளம் துண்டு....நானும் குடிப்பேன்..ரொம்பப் பிடிக்கும்.....சூப்பில் பிரெட் துண்டு போடுவது போல...நான் சூப்பிலும் கூட அப்பளம் துண்டு போட்டு சாப்பிடுவேன்...சூப்பர் ரெசிப்பி...செஞ்சுட்டு சொல்றேன்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வெள்ளம்...அல்ல...வெல்லம் தவறாக அடித்துவிட்டது இந்த மொபைல்...ஹிஹி
மதுரை, அதிரா, ஸ்ரீராம் பார்த்தா. கலாய்ப்பங்களே...மீ..எஸ்கேப்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நன்றி க்கு பதிலா ரசத்தை பார்சல் அனுப்பங்கப்பூ....என்ன அதிரா பான் சொல்றது சரிதானே..

ஏஞ்சல் நீங்க ரசம் அனுப்புவீங்கன்னு அதிரா இன்னும் சாப்பிடாம தேம்ஸ் நதிக்கரைல விரதம் இருக்கங்கன்னு நியூஜெர்சி வழியா நியூஸ் வந்துச்சு....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா செல்லப்பா சார்..டெம்போரரி....மதுரை சகோ அங்கேதான்...ஸோ புரிஞ்சுரும். சார் கும்மிக்கு வர மாட்டார்னு நம்புறேன்...ஹாஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா அதான்...நீங்க தேம்ஸ்ல சாப்பிடாம விரதம் இல்லியா.. ரசம் வருமனு....கரிக்ட்டா??!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உங்காத்து மாமி இணையம் பக்கம் வரலைநா என்ன நியூஸ் போகாதுன்னு நினைச்சீங்களா...ஹாஹா அதெல்லாம் போயாச்சு....ஏஞ்சல் பார்சல் அனுப்பிட்டங்க....இந்தவாரம் உங்க வீட்டுல அதான் மெனு...
கடவுள் எங்க பக்கம் இருக்கிறேண்டா குமாரு...ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மதுரை சகோ...அப்பாளத்தை இரண்டாகவோ, நான்காகவோ உடைத்துப் பொறிக்கலாம்ல..அதுவும் துண்டுதானே...அந்தத் துண்டுகளை இன்னும் சின்ன துண்டுகளாகப் போட்டு சாப்பிடப் பிக்கும்னு சொல்லிருக்கங்க இல்லியா ஏஞ்சல்...ஸ்பா.ஆ . இந்த நக்கீரனுக்கு பதில் சொல்லியாச்சு...ஏஞ்சல்..கூட ஒரு பார்சல் எனக்கு....ஹிஹிஹி

கீதா

Henrymarker said...

அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
தமிழ் செய்திகள்

athira said...

Thanks Anju.. I voted:)🙏

athira said...

நோஒ கீதா... இந்த ரசம் பார்த்து ரசிக்க மட்டுமே:) நொட் 4 குடிக்க:)... ஹா ஹா ஹா.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான சமையல்
சுவைப்போம்
வாழைப்பூ இரசம்

Angelin said...

//Avargal Unmaigal said...
///அடுப்பை கண்டிப்பா அணைக்கணும் இது நியூ ஜெர்சிக்காரருக்கு மட்டுமே :) ///

அடுப்பை எப்படி அணைக்கணும் என்று சரியான விளக்கம் இல்லை... தண்ணி தெளித்து அணைக்கணுமா? அல்லது பெட்சீட்டை பொட்டு அணைக்கணுமா?//

வாங்க வாங்க உங்களுக்காகவே யோசிச்சி விளக்கியிருக்கேன் ..
உங்களுக்கு டைட்டானிக் படம் நினைவிருக்கும் அதுவும் ரோஸ் நிச்சயமா நினைவிருக்கும் இந்த ரோஸ் ஜாக் கூட கப்பல் மேலேறி நிக்கிற ஸீன் .இப்போ நீங்க என்ன செய்றீங்கனா நேரே உங்க கார்டன் போய்
Open fire place oven எரிஞ்சிட்டிருக்குமே அது முன்னாடி நிக்கறீங்க ரெண்டு கையையும் ரோஸ் மாதிரி விரிச்சிக்கிட்டே க்ளோசா போகணும் ..அவ்ளோதான் ..இது போதுமா இல்லை இன்னும் வேணுமா :)

Angelin said...

//அது பொடியா இல்லையே ஹீஹ்ஹீ நான் நக்கீரன் பரம்பரையை சேர்ந்தவன்//

ஹலோ நக்கீரரே :) தட்டு அளவு அப்பளத்தை நாலா உடைச்சி பொரிப்போம் அதையும் துண்டாக்கினாத்தான் கப்பில் போட்டு ரசம் குடிக்க முடியும் ஸ்ஸ்ஸ்ஸ் மாமி ..இவருக்கு மண்டே மட்டும் ஸ்பெஷலா நிறைய வேலை கொடுங்க ரொம்ப டவுட் கேக்கறார்

Angelin said...

@Avargal truthஹாஹாஆ :) ஒரு விஷயத்தை சொல்லணும் எங்க வீட்ல மகளுக்கும் கணவருக்கும் ட்ரெயினிங் கொடுத்திட்டேன் வாழைப்பூ உறிச்சி க்ளீன் செய்ய :) விரைவில் நீங்களும் செய்வீர்கள் என்று பட்சி சொல்கிறது ..

Angelin said...

athira said...
//காலையில நித்திரை கொள்ள முடியேல்லை ஒரே வாசம்... மணந்து கொண்டே வந்து சேர்ந்திட்டேன். அன்று தேம்ஸ் கரையில் வாசம் வந்தபோதே நினைச்சேன்... எங்கள் புளொக்குக்குத்தான் ஏதோ காலம் சரியில்லைப் போல என.. அது//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..ஒரு சக பிளாகர் அதுவும் அவ்வப்போ காலை வாரிவிட்டாலும் தாங்கி பிடிக்கும் நட்பு இந்த அன்பு பாசம்லாம் இருக்கா பாருங்க இந்த பூனைக்கு :)

இப்படியா உண்மையை பட்டுன்னு போட்டு உடைக்கிறது :)))

Angelin said...

athira said...
வாழைப்பூவும் துவரம்பருப்பும் சேர்ந்தாலே தடித்து விடாதோ ?கறிபோல ரசம், வறுத்துத்தான் அரைப்பீங்களோ, நான் பச்சையாகத்தான் அரைப்பேன். இதுக்கு சாம்பார்பொடியுமோ கர்ர்ர்ர்.... //வாங்க மியாவ் டவுட் கேக்கலைனா அது அதிரா மியாவ் இல்லவே இல்லை :)

துவரம் பருப்பு போடாமலும் செய்யலாம் ..சும்மா கொஞ்சூண்டு சேர்த்தா போதும் அடுத்தது நாம் அந்த நீரை வடிகட்டும்போது பருப்பு எல்லாம் மசியாது ..சாம்பார் பவுடர் குட்டி டீஸ்பூன் தானே அது கலருக்கு சேர்த்தேன் அவ்வளவே

Angelin said...

@அதிரா ..யெஸ் நான் ரெண்டு லாப் எலிகளுக்கும் ட்ரெயினிங் கொடுத்திருக்கேன் ..அந்த கள்ளனை எடுக்கறதில் ரெண்டு எலிங்களுக்கும் அவ்ளோ குஷி ..ஆ திருடன் ஆ திருடான்னு சொல்லிகிட்டே ஜாலியா க்ளீனா செய்து கொடுப்பாங்க :))

Angelin said...

ஹாஹா @அதிரா ..நான் விளக்கி சொல்லிட்டேன் ட்ரூத் இப்போ தோட்டத்தில் நிற்கிறார் இப்போதைக்கு ஐ அம் பிளையிங் கேக்கும் கொஞ்ச நேரத்தில் பிங்க் பாட்டு fire கேக்கபோது ஹாஆஹா

Angelin said...

@அதிரா .../பினிசிங் கலர் சூப்பரா வந்திருக்கு... //
டான்க்ஸ் :) உங்ககிட்டருந்து சமையலுக்கு பாராட்டு நௌ i am flying :)))

அந்த கலருக்கு காரணமே சாம்பார் பொடியும் துளி வெல்லமும் தக்காளியும்

Angelin said...

@ G.M Balasubramaniam said...
செய்து பார்க்கலாம் என்றால் வாழைப்பூ கிடைப்பதில்லை. அவை கிடைக்கும் போது இந்தப் பதிவு நினைவுக்கு வரவேண்டுமே//

வாங்க சார் ..நம்ம ஊரில் கிடைக்கலையா ??? ஹ்ம்ம் இங்கே எங்களுக்கு இலங்கை தமிழர் கடை அப்புறம் வங்காளியார் கடை இரண்டிலும் கிடைக்கும் இதில் இலங்கை தமிழர் கடையில் கிடைக்கும் வாழைப்பூ எனக்கு பிடிக்காது ஏன்னா அவங்க நம்ம மாதிரி பூக்களை எல்லா பார்ட்ஸும் சமையலுக்கு செய்ரத்தில்லை பெரும்பாலும் கருத்து போயிருக்கும் ..ஆனா வங்காளிகள் வாரம் மூன்று முறை அவங்க கடைக்கு கொண்டாறாங்க ..
கிடைக்கும்போது செய்து பாருங்க ஈசிதான்

Angelin said...

@Asokan Kuppusamy said...
//ருசியான ரெசிபி//

மிக்க நன்றிங்க

Angelin said...

@ராஜி ..வாங்க ராஜி எல்லாம் சூப்பைத்தான் நான் ரசமாக்கிட்டேன் .பேலியோவில் சூப் செய்றா ரெசிப்பி ஒன்று பார்த்தேன் அதை கொஞ்சம் நம்ம டிசைன்னு மாற்றி ரசமாக்கியாச்சு :)

Angelin said...

@காமாட்சி said...
//வாழைப்பூ வேகவைத்து அரைத்ததை வடிக்கட்டி விட்டாய். தெளிவாக ரஸம் கிடைக்கும். சக்கை தங்காது. மாற்றி எழுதினாலும், ரஸம் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. ஸாமான்களும் ருசியாவதற்குச் சேர்த்திருக்கிறாய். புதுசாதான் வாழைப்பூ ரஸம் உள்ளது. படங்களெல்லாம் அருமை.ருசியும் நன்றாகவே இருக்கும். நன்றாகச் செய்துள்ளாய் பெண்ணே! அன்புடன்///

வாங்க காமாட்சியம்மா எனக்கு பறக்கிற மாதிரி இருக்கு அவ்ளோ சந்தோசம் உங்க பாராட்டு கிடைச்சது ..மிக்க நன்றி

Angelin said...

@//Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
அருமையான சமையல்//

வாங்க சகோ மிக்க நன்றி

Angelin said...

@ Geethaa :))வெள்ளம் ரச வெள்ளம் அப்படின்னு படிச்சிப்போம் :)
வெல்லம் சேர்ப்பது ஒரு தனி சுவையை தருது ..சீக்கிரம் செய்து பார்த்து சொல்லுங்க ..

Angelin said...

@துளசி அண்ணா அன்ட் கீதா ,,இனிமே ட்ரூத்துக்கு சந்தேகம் வராது ஹி இஸ் flying now :)
என்னிக்காவது ஒரு நாள் எனக்கு மாமியோட மெயில் ஐடி கிடைச்சாலும் போதும் இவர் அவ்ளோதான் :)
thats the end of humpty dumpty

Angelin said...

@//Henrymarker said...
அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி//

மிக்க நன்றிங்க ஹென்றி

Angelin said...

@ athiraa jealous cat :))
எனக்குன்னு என்னை என் ரசத்தை நம்பி கீதா வாழ்த்திட்டாங்கனு உங்களுக்கு பொன் ப்ளஸ் ஆமை =பொறாமை ஹாங்

Angelin said...

தமிழ் மண வாக்களித்த அதிரா மற்றும் அனைவர்க்கும் நன்றி

Avargal Unmaigal said...

@ ஏஞ்சல்
///@Avargal truthஹாஹாஆ :) ஒரு விஷயத்தை சொல்லணும் எங்க வீட்ல மகளுக்கும் கணவருக்கும் ட்ரெயினிங் கொடுத்திட்டேன் வாழைப்பூ உறிச்சி க்ளீன் செய்ய :) விரைவில் நீங்களும் செய்வீர்கள் என்று பட்சி சொல்கிறது .. ///

புலி பசித்தாளும் புல்லை தின்னாது மாதிரி மதுரைத்தமிழன் உசிரே போனாலும் வாழைப்பூ உறிச்சி க்ளீன் செய்யமாட்டான்

Avargal Unmaigal said...


@ ஏஞ்சல்


உங்க விளக்கத்தை கேட்டு கையை விரிச்சு வைச்சுட்டு பின் பக்க தோட்டம் பக்கம் போனேன் அந்த சமயம் பார்த்து அங்கு நடந்து வந்த ஒரு தமிழ் பெண் ச்சீய் என்று காறி துப்பிட்டு போகிறாள் போயியும் போயும் உங்க பேச்சை கேட்டேன் பாருங்க ( மைண்ட் வாய்ஸ் இந்த தமிழ் பென் நடந்து வருவதற்கு பதிலாக ஒரு ஸ்பானிஸ் ஒரு அமெரிக்க பெண் வந்து இருந்தால் நமக்கு ஒரு ஹக் அண்ட் கிஸ் கொடுத்துட்டு தாங்க்யூ யூ ஆர் வெரி நைஸ் மேன் என்று சொல்லிட்டு போயிருப்பாங்க ஹும்ம் அதற்கு நமக்கு மச்சம் இல்லை )

Avargal Unmaigal said...

@Angelin

///தமிழ் மண வாக்களித்த அதிரா மற்றும் அனைவர்க்கும் நன்றி////


ஆஹா ஆஹா ஆஹா அரசியல் வாதியாக ஆகிவிட்டார் போல இந்த ஏஞ்சல் விட்ட நன்றி அறிவிப்பி பொது கூட்டம் நடத்தினாலும் நடத்துவாங்க போல இருக்கே

Avargal Unmaigal said...

@Angelin

///தமிழ் மண வாக்களித்த அதிரா மற்றும் அனைவர்க்கும் நன்றி////


அப்ப கருத்து சொன்னவ்ங்களுக்கு நன்றி இல்லையா....ஹும்ம்ம் இது ஒர வஞ்சனை கூடிய சிக்கிரம் கருத்து போட்டவங்களை மட்டும் ஒன்று சேர்த்து இவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியதுதான்

Angelin said...

@ அவர்கள் ட்ரூத் ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..
//அப்ப கருத்து சொன்னவ்ங்களுக்கு நன்றி இல்லையா....ஹும்ம்ம் இது ஒர வஞ்சனை கூடிய சிக்கிரம் கருத்து போட்டவங்களை மட்டும் ஒன்று சேர்த்து இவங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியதுதான் //

நாளை காலை வரை நேரம் இருக்கு அப்போதான் மொத்தமா நன்றி சொல்வேன் ..
எல்லாரும் வாக்களித்தாதானே எங்கள் பிளாக் கிரவுன் போட முடியும் :) இன்னிக்கு
முதல்ல நீங்க வாக்கு போட்டிங்களா ..??ஒழுங்கா போட்டிங்கனா தப்பிச்சீங்க இல்லைனா வாயில் நுழையதாக ரெசிபிலாம் போடுவேன் சொல்லிட்டேன்
/

Angelin said...

@அவர்கள் ட்ரூத் ../உங்க விளக்கத்தை கேட்டு கையை விரிச்சு வைச்சுட்டு பின் பக்க தோட்டம் பக்கம் போனேன் /
தப்பு நான் கண்ணை மூட சொன்னேன் ரோஸ் மாதிரியே போகலை நீங்க :)
கண்ணை திறந்து வச்சி போனதால் தான் டைரக்ஷன் மாறிருக்கு :)
இப்போ மறுபடியும் போங்க அந்த BBQ கிரில் பக்கமா

athira said...

///Thulasidharan V Thillaiakathu said...
அதிரா அதான்...நீங்க தேம்ஸ்ல சாப்பிடாம விரதம் இல்லியா.. ரசம் வருமனு....கரிக்ட்டா??!!

கீ///

அந்த “வெள்ளம்” போட்ட “விசம்”..[ ஹையோ எனக்கு இன்று அடிக்கடி டங்கு ஸ்லிப் ஆகுதே.. ஒரு வேளை இந்த ரசத்தை மணந்ததால இருக்குமோ?:)... ] அந்த வெல்லம் போட்ட ரசம் நான் செய்யப்போவதாக தீர்மானமெடுத்திட்டேன்:).. நீங்க எப்பூடி?:)...

அஞ்சு, கீதா..., ட்றுத்தை ஆரும் குறை சொன்னால் நேக்குப் பிடிக்காது:) கெட்ட கோபம் வந்திடும் சொல்லிட்டேன்:).. அவர் ரொம்ப நல்லவர் வள்ளவர்.. சோரி வல்லவர்.. அதிராவுக்கு மட்டும் வோட் போட்டவர்.. ஹையோ இனியும் தொடர்ந்து போடுவேன் என நயகராவில் அடிச்சு சட்தியம் பண்ணியிருக்கிறார்..[ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஅ ஒரு வோட்டுக்காக எப்பூடி எல்லாம் பாடுபடவேண்டிக்கிடக்கே வைரவா:)].

athira said...

///எல்லாரும் வாக்களித்தாதானே எங்கள் பிளாக் கிரவுன் போட முடியும் :) இன்னிக்கு
முதல்ல நீங்க வாக்கு போட்டிங்களா ..??ஒழுங்கா போட்டிங்கனா தப்பிச்சீங்க இல்லைனா வாயில் நுழையதாக ரெசிபிலாம் போடுவேன் சொல்லிட்டேன் ///

ஹா ஹா ஹா... அஞ்சூஊஊஊ வை திஸ் கொல வெறி?:).. ஏற்கனவே சப்பாத்திக் கட்டையால வாங்கி வோட் ல இருந்ததாக கேள்வி...:) இது பனையால விழுந்தவரை ஃபிஸ் ஏறி மிதிச்ச கதையாகிடப்போகுதே:).

athira said...

///Angelin said...
தமிழ் மண வாக்களித்த அதிரா மற்றும் அனைவர்க்கும் நன்றி///

ஆவ்வ்வ்வ்வ்வ்வ் ஐ லவ் யூ அஞ்சூஊஊஊஊ:).. ஹா ஹா ஹா.. எல்லோரும் வோட் போட்டிருந்தால் அஞ்சுவுக்கு டயமண்ட் மகுடம் கிடைச்சிருக்குமே:)

Angelin said...

@athiraaa :) மகுடம் இல்லைனாலும் பரவால்ல உங்க பச்சை கல் மோதிரம் எனக்கு போதும் மியாவ்

athira said...

யாருமே என் பேச்சைக் கேட்கவில்லை.. அதிரா சொல்லி நாம் கேட்பதா என நினைக்கினமோ என்னவோ கர்:).. பகவான் ஜீ மட்டும்தான் கேட்டார்ர்.. இப்போ கடைப்பிடிக்கிறார்ர்.

ஆனா முக்கியமா எங்கள் புளொக்கில் லிங் கொடுத்தே ஆகவேண்டும் தமிழ்மண வோட்டுக்கு... ஏனெனில் இங்குமட்டும் தான் வோட்டுப் பட்டையே தெரிவதில்லை... அபூர்வமாகத்தான் தெரிகிறது..

இப்போகூட இவ்ளோ நேரம் றீஃபிரெஸ் பண்றேன் வருகுதே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
போஸ்ட் இல் கொடுக்க விருப்பமில்லை எனில், லிங் ஐ கொப்பி பண்ணி முதல் கொமெண்ட்டாக எனினும் கொடுக்கலாமே.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

என் கொள்கை “செய் அல்லது செத்துப்போ” என்பது... அதாவது எதில் கால் வச்சாலும் அதில முழுமூச்சுடன் ஈடுபடோணும் என நினைப்பேன்ன்.. அதனால இதுக்கெல்லாம், நான் நோ வெய்க்கம் நோ ரோசம்:) ஹா ஹா ஹா:)

ஸ்ரீராம். said...

Here is the Tamilmanam Link..

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1458997

ஸ்ரீராம். said...

வாழைப்பூ ரசம் நானும் கேள்விப்பட்டதில்லை! இதை படித்த பிறகு எதை வேண்டுமானாலும் போட்டு ரசம் பண்ணி விடலாம் என்று ஒரு தைரியம், உத்வேகம் பிறக்கிறது.

ஸ்ரீராம். said...

ஆனால் கீதா ரெங்கன் வெள்ளத்தையே இதில் விட வேண்டும் என்று சொல்லியிருந்தார். அதற்கு காரணம் துப எல்லாம் போட்டு அரைத்தால் கெட்டியாக இருக்காதோ என்கிற அதிராவின் சந்தேகம் காரணமாக இருக்கலாம்!!!

Angelin said...

@ஸ்ரீராம் அது பருப்பு சேர்க்காமலும் செஞ்சாலும் நல்லாவே இருக்கு :) நான் த்ரீ டைம்ஸ் செஞ்சிட்டுதான் இங்கே கொடுத்தேன்

Angelin said...

@ஸ்ரீராம் உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ன்று ட்ரெய்லர் ஓட்டியிருக்கலாமோ :)
யாரும் செய்யாததை நான் ட்ரை செஞ்சி வெற்றி பெற்றிட்டேனே :)

athira said...

///Angelin said...
@athiraaa :) மகுடம் இல்லைனாலும் பரவால்ல உங்க பச்சை கல் மோதிரம் எனக்கு போதும் மியாவ்///

இதென்ன முருகா பிச்சை வாணாம் நாயைப் பிடிச்சாப் போதும் கதையாகிடப்போகுதே:).. இதுக்குத்தான் அம்மம்மா அடிக்கடி சொல்றவ.. யாரையும் நம்பி.. ரொம்ப நல்ல பிள்ளையா முன்னுக்குப் போய் பேசிடாதே என:)ஹையோ தலை தப்பினாலே போதும் வைரவா..:).. வால் போனாலும் வளர்த்திடலாம்ம்:)..

http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

athira said...

///Angelin said...
@ஸ்ரீராம் உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ன்று ட்ரெய்லர் ஓட்டியிருக்கலாமோ :)
யாரும் செய்யாததை நான் ட்ரை செஞ்சி வெற்றி பெற்றிட்டேனே :)///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ப ஓவராத் துள்ளப்பிடா.. இப்போ தியறிதான் முடிஞ்சிருக்கு:) யாருமே பிறக்டிக்கல் பண்ணல்ல:) அதுக்குள் வெற்றி பெற்றிட்டேன்ன்ன்ன்ன்ன் என தேம்ஸ் முழுக்க எதிரொலிக்குது கர்ர்ர்ர்ர்ர்:)... எங்கிட்டயேவா:).. விடமாட்டனில்ல:)..

Angelin said...

எனக்கு இந்த ரசத்தை படத்தில் பார்க்கும்போது முதன்முதலா கல்யாணத்துக்கு முந்தி நான் செய்த அந்த ரஸ(விஸ்ம் ) கண்முன் வருது :))
மம்மி ப்ளீஸ் forgive மீ

athira said...

ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தோம்ம்ம்:) ஹா ஹா ஹா பல வருடங்களுக்குப் பின் சகோ ஸ்ரீராமை இங்கே லாண்டட்ட்ட்ட் ஆக்கிட்டோம்ம்ம்.. ஹா ஹா ஹா அதனாலதான் சிட்டுவேசன் சோங் பிபிசில போகுது...

இப்போவெல்லாம் பின்னூட்டங்களை எல்லாம் பார்த்திட்டு காக்கா போயிடுறார் கர்ர்ர்:)...

Angelin said...

@அதிராவ் //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ப ஓவராத் துள்ளப்பிடா.. இப்போ தியறிதான் முடிஞ்சிருக்கு:) யாருமே பிறக்டிக்கல் பண்ணல்ல:) அதுக்குள் வெற்றி பெற்றிட்டேன்ன்ன்ன்ன்ன் என தேம்ஸ் முழுக்க எதிரொலிக்குது கர்ர்ர்ர்ர்ர்:)... எங்கிட்டயேவா:).. விடமாட்டனில்ல:).. //

ஆக்சுவலி :) இன்னிக்கு என் கணவர் சொன்னார் ..தானும் வந்து இங்கே கமெண்ட் போடறேன்னு ..நான்தான் ஓவர் பப்லிசிட்டி வேணாம்னு தடுத்திட்டேன் :)

athira said...

//Angelin said...
எனக்கு இந்த ரசத்தை படத்தில் பார்க்கும்போது முதன்முதலா கல்யாணத்துக்கு முந்தி நான் செய்த அந்த ரஸ(விஸ்ம் ) கண்முன் வருது :))
மம்மி ப்ளீஸ் forgive மீ//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதையா எங்களுக்கு போட்டீங்க செய்து:).. எனக்கு நாங்க வளர்த்த சீனிமாடெல்லாம்[ சீனி என்பது அவவுக்கு நாங்க வைச்ச பெயர்] நினைவுக்கு வருதே.. ஹா ஹா ஹா என்ன நினைவு எண்டு மட்டும் கேட்கப்பூடா கர்:) அடிச்சுக் கேட்டாலும் ஜொல்ல மாட்டேன்ன்:).

athira said...

////ஆக்சுவலி :) இன்னிக்கு என் கணவர் சொன்னார் ..தானும் வந்து இங்கே கமெண்ட் போடறேன்னு ..நான்தான் ஓவர் பப்லிசிட்டி வேணாம்னு தடுத்திட்டேன் :)///

ஹையோஓஓஒ அதிரா தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்.. இனியும் இந்த உசிர் இந்த உடம்பில இருக்காதூஊஊஊஉ... மச மச எனப் புறுணம் பார்க்காமல் ஃபயபிரிகேட்டருக்கு அடிங்கோஓஓஓஓஓஓஓஒ... மூச்சடக்கத் தெரியாதெனக்கு:)

Angelin said...

கர்ர்ர் இல்லை அப்போ அரைக்காம அளவுகள்தெரியாம போட்டேன் இது நிதானமா செஞ்சிருக்கேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரச வாசனை சுண்டி இழுத்ததால் இங்கு ஒரே ஓட்டமாக ஓடியாந்தேன்.

அப்படியும் 71-வது பந்தியிலே மட்டுமே எனக்கு இடம் கிடைத்துள்ளது.

ஒரே ஆசாமி திரும்பத்திரும்ப வந்து 11 பந்திகளில் குந்தி சாப்பிட்டுள்ளார்கள். சரி அது போகட்டும். விஷயத்திற்கு வருவோம்.

ஆஹா, வாழைப்பூ ரசமோ ! பெயரே புதுமையாக உள்ளது. கேள்விப்பட்டதே இல்லை.

ஆனாலும் படங்களெல்லாம் ஜோர் ஜோர் .... அமர்க்களமாக உள்ளன. மிகவும் ரசமான பதிவு. பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

ஏஞ்சலின்.. நீங்கள் உங்கள் ஆத்துக்காரரை இங்கு வந்து "கொமெண்ட்" போடவிடாமல் தடுத்ததில் சந்தேகம் வருகிறது! என்ன சொல்ல வந்தாரோ.. பாவம்!

ஸ்ரீராம். said...

ஜோக்ஸ் இருக்கட்டும்....ப்புறம் இன்னொரு விஷயம்.. நானும் சமையலில் புதுசு புதுசாகத்தான் முயற்சிப்பேன். எல்லோரும் எய்வதையே செய்ய நாம் எதற்கு? ஹா... ஹா... ஹா... நினைவிருக்கிறதா என் உருளைக்கிழங்கு சாக்லேட் எல்லாம்? எனவே புதிதாக முயற்சியுங்கள்... போட்டோ எடுங்கள் அனுப்புங்கள்.. பெறுக இவ்வையகம் சுவையனைத்தும்..

ஸ்ரீராம். said...

அதிரா.. ஏன் நீங்கள் இன்னும் ஒரு ரெஸிப்பி கூட அனுப்பவில்லை? எப்போது நான் அதிரா ரெஸிப்பி என்று தலைப்பிட்டு பப்ளிஷ் செய்வது?!!

Sharon said...

It was VERY tasty amma! I loved it so much. Love youuu x

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரே ஆசாமி திரும்பத்திரும்ப வந்து 11 பந்திகளில் குந்தி சாப்பிட்டுள்ளார்கள்.

Sorry எண்ணிக்கையில் ஏதோ தவறாகி விட்டது.

ஒரே ஆசாமி திரும்பத்திரும்ப வந்து 16 பந்திகளில் குந்தி சாப்பிட்டுள்ளார்கள்.

பதினாறு ..... பதினாறு ...... அதாவது ’சிக்ஸ்டீன்’ ..... மறக்காண்டாம்.

ஸ்ரீராம். said...

ஆஹா... மருமாள் வருகை! வெல்கம் ஷரோன்!

Angelin said...

@ஸ்ரீராம் ...:) குட்டி எலி கமெண்ட் போட்டாச்சு :)

athira said...

ஹா ஹா ஹா அதாரது நான் பந்தியில் சாப்பிடுவதை எண்ணி எண்ணிக் கண் போடுவதூஊஊஊஊஉ:)

ஸ்ரீராம். said...

//@ஸ்ரீராம் ...:) குட்டி எலி கமெண்ட் போட்டாச்சு :)//

வரவேற்புப் பத்திரம் வாசிச்சாச்சு! பார்க்கலையா?

Angelin said...

@கோபு அண்ணா ..வாங்க வாங்க ....ரசம் உங்களை அழைத்து வந்ததில் சந்தோஷம் :)


இப்போ பார்த்து அந்த பூனையை காணோம் :) ஒளிஞ்சி பார்க்கிறாங்க உங்க பாராட்டை பார்த்தா மயங்கி பூனை :) vizhuvaanaga

ஸ்ரீராம். said...

எங்கள் பிளாக் இதில் எதிலெல்லாம் முதல் பாருங்கள். வலையுலகில் ஷரோனின் முதல் கமெண்ட் எங்கள் தளத்தில்!

Angelin said...

ஹாஹா :) இப்போ தான் பார்க்கிறேன் ..மேடம் பிஸி ஷெட்யூலிலும் வந்து கமெண்ட் போட்டாங்க :)

Angelin said...

@sriram :)))))
//ஏஞ்சலின்.. நீங்கள் உங்கள் ஆத்துக்காரரை இங்கு வந்து "கொமெண்ட்" போடவிடாமல் தடுத்ததில் சந்தேகம் வருகிறது! என்ன சொல்ல வந்தாரோ.. பாவம்!//

சந்தேகமே வேண்டாம் அவர் நான் எழுதிக்கொடுத்ததை அப்படியே சொல்வார் :))))

athira said...

அன்பார்ந்த எங்கள் புளொக் ரசிகப் பெருமக்களேஏஏஎ... அடுத்த சண்டே... இது வேற சண்டே:) யாரும் நித்திரை கொள்ள வேண்டாம்ம்ம்:).. அதிராவின் ரெசிப்பி வெளிவர இருக்கிறதூஊஊஉ... எல்லோரும் ஓடிவந்து முதலில் செய்ய வேண்டியது கண்ணை மூடிக்கொண்டு வோட்ட்ட்ட்ட்:) பின்னர்தான் கண்ணைத் திறந்து படிக்கோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்... மகுடம் நான் சூடோணும்...
ஊசிக்குறிப்பு :- முக்கியமா டயமண்ட் பதிச்சிருக்கோணும்:)....
ஹையோ சகோ ஸ்ரீராம் ஏன் கொலை வெறியோடு கலைக்கிறார்ர்ர் அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன்ன்.. அஞ்சூ பிளீஸ் உங்கட ரசத்தை கண்ணை மூடிட்டு மடமட எனக் குடிப்பேன் , பீஸ்ஸ்ஸ் சேவ் மீஈஈஈ:).

Angelin said...

அடுத்த திங்கள் உங்க தலைல அந்த நவரத்தின கிரீடத்தை சூட்டறோம் ..வாங்க அதிரா சீக்கிரம் உங்கள் ரெசிபிக்களை இங்கே போடுங்க :)

Angelin said...

@ஸ்ரீராம் ..என் மகளின் quilling நம்ம ஏரியாவிலும் வந்திருக்கே :)
அப்போ 2012 இல் பிளாக் ஆரபிச்சு கொடுத்தேன் அப்படியே கைவிட்டுட்டா படிப்புக்கே நேரம் சரியா இருக்கு .விடுமுறையில் திரும்ப எழுத ஆரம்பிக்க வைக்கணும் அவளை

Angelin said...

@ கோபு அண்ணா :)) யெஸ் அதே அதே :) தட் சேம் குண்டு தைரியசாலி :)

ஸ்ரீராம். said...

ஏஞ்சல்... அது உங்கள் ப்ளாக்! வெளி வலைத்தளங்களில் எங்களில்தான் முதல்! (மீசைல மண் ஒட்டலையே...)

Angelin said...

அவ்வ்வ் :) ஓகே ஓகே ..முதல் முதலா உங்க ப்லாகில்தான் பின்னூட்டம் வந்திருக்கு :)

Avargal Unmaigal said...

அதிராவிற்கு ஒரு வோட்டு போட்டதால் ஏஞ்சலுக்கும் ஒரு வோட்டு போட்டுட்டேன் தம 6 .யானைக்கும் பானைக்கும் சரியா போச்சு இனிமேல் யாரவது வோட்டு என்று சொன்னால் அவர்களுக்கு வேட்டுதான்

Angelin said...

100 வது பின்னூட்டமிட்ட அவர்கள் ட்ரூத்துக்கு 10 வாழைப்பூக்கள் பார்செல் :)))))

athira said...

///ஸ்ரீராம். said...
ஏஞ்சல்... அது உங்கள் ப்ளாக்! வெளி வலைத்தளங்களில் எங்களில்தான் முதல்! (மீசைல மண் ஒட்டலையே...)///

ஆவ்வ்வ்வ்வ் என் பக்கம் ஒருக்கால் ஷரன் பேபி வந்ததா நினைவிருக்கே எனக்கு.. அப்போ.. இல்லயா அஞ்சு?..

ஆம் எனில் ஸ்ரீராம் மீசை எடுக்கோணும் டொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:).. ஹா ஹா ஹா:).

athira said...

//Avargal Unmaigal said...
அதிராவிற்கு ஒரு வோட்டு போட்டதால் ஏஞ்சலுக்கும் ஒரு வோட்டு போட்டுட்டேன் தம 6 .யானைக்கும் பானைக்கும் சரியா போச்சு இனிமேல் யாரவது வோட்டு என்று சொன்னால் அவர்களுக்கு வேட்டுதான்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்கு காரணமே இந்த அஞ்சுதான்.. பொறாமையில சொல்லிசொல்லியே இனி எனக்கு வோட் போடாமல் பண்ணிட்டா.. இருங்கோ.. சதி லீலாவதி படம்.. ஸ்ரீராம் சொன்னார்.. அப்பவே பார்க்கத் தொடங்கினோம்.. இப்போதான் முடிவுக்கு வந்திருக்கு... கோவை சரளா ஆன்ரி ட்ருத்.. ர(ஹையோ இது வேற ட்றுத்:)] தாண்டவம் ஆடுறா.. முடிவுக்கு வந்தாச்சூ.. என்னதான் நடக்குதெனப் பார்த்திட்டு வாறேன்ன்.. ச்சூப்பர் கொமெடி மூவி... பார்க்காதோர் பார்க்கலாம் .. வொரண்டி தாறேன்...

அதை முடிச்சிட்டு வந்து அஞ்சுவைத் தேம்ஸ்ல தள்ளி விழுத்திட்டுத்தான்.. நெஸ்டமோல்ட் ரீ குடிப்பேன்ன்.. இது அந்த ரசத்தில விட்ட கீதாட வெள்ளம்:)மேல் சத்தியம்:)..

athira said...

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்:).. ஹையோ இது நான் நெல்லைத் தமிழனுக்குச் சொல்லல்லே:).. இனி “கேளாமலே அனுப்பும் ரெசிப்பி”:---- ஆரம்பிக்கப்போறோம் எங்கள்புளொக்கில்:).. ஹா ஹா ஹா இத்தோடு இன்றைய பிரித்தானிய வானலை பூஸ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நிறைவுக்கு வருகிறது... உங்களிடம் இருந்து வணக்கம் கூறி விடைபெறுபவர்.. உங்கள் அன்பின்.. தேன்குரல்:) ஒலிபரப்பாளர்.. புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்... டொட் ட டொயிங்ங்ங்ங்ங்:).

Angelin said...

ஹா ஹா இல்ல அது விசிட் மட்டும் தான். Follower ஆனா. கமெண்ட் இங்கே தான் first

Angelin said...

எல்லாரும் ஒடுங்க .அடுத்த ரீவ்யூ நம்ம நோக்கி வருது ரன்ன்ன்ன்ன்ன்

Angelin said...

//உங்கள் அன்பின்.. தேன்குரல்:) ஒலிபரப்பாளர்.. புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்... டொட் ட டொயிங்ங்ங்ங்ங்:).//

செல்லாது செல்லாது லயன் டேட்ஸ் விளம்பரத்தோடதான் முடியும் இலங்கை ஒலிபரப்பு அது மாதிரி வல்லாரை ஜூஸ் அதான் லண்டன் புகழ் :) அந்த விளம்பரத்தோட முடிங்க :)

கோமதி அரசு said...

//உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ன்று ட்ரெய்லர் ஓட்டியிருக்கலாமோ :)
யாரும் செய்யாததை நான் ட்ரை செஞ்சி வெற்றி பெற்றிட்டேனே :)//

உண்மைதான் ஏஞ்சலின். புதுவகையான ரசம். செய்து பார்க்கிறேன். நானும் ரசபொடியை அவ்வப்போது பொடித்துக் கொள்வேன்., கருவேப்பிலையும் சேர்த்து பொடித்துக் கொள்வேன். படங்களுடன் ரசம் சுவையோ சுவை.

கோமதி அரசு said...

ஓட்டு அளித்து விட்டேன் ஏஞ்சலின்

Angelin said...

வாங்க கோமதி அக்கா :) மிக்க நன்றி பின்னூட்டத்திற்கும் தம வாக்கிற்கும் ரசத்தை ரசித்ததற்கும்

Bhanumathy Venkateswaran said...

வாழைப்பூ ரசம் கேள்விப்பட்டதே இல்லை. பருப்பு உசிலி, கூட்டு, துவையல் செய்வதுண்டு, ரசம் செய்து பார்த்து விடுகிறேன்.

Angelin said...

@ Bhanumathy venkateswaran .மிக்க நன்றி அக்கா ..வாழைத்தண்டு சூப் வாழைப்பூ சூப் ரெண்டும் அடிக்கடி செய்வேன் சம்மரில் மட்டுமே இங்கே கிடைக்கும் இவை ..அதில் மனோ அக்காவின் ரெசிபி ஒன்றை பார்த்து இதை செஞ்சேன்

வெங்கட் நாகராஜ் said...

வாழைப்பூ ரசம் இதுவரை கேள்விப்பட்டதில்லை. குறித்து வைத்துக் கொண்டேன். செய்து பார்க்க வேண்டும்!

Angelin said...

மிக்க நன்றி வெங்கட் ..செய்து பாருங்க

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!