2) இவரல்லவோ தாய். இதுவரை 33 குழந்தைகளுக்கு வழி காட்டியிருக்கும் துள்சி பரிஹர்.
3)
நம்மால் இப்படிச் செய்ய முடியுமா? இந்த காவல்துறைத் தம்பதிகள் தங்கள்
திருமணத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். அனாவசியமாக செலவு செய்ய
வேண்டாம் என்று முடிவு செய்து இரண்டு லட்ச ரூபாயை உதவும் நிறுவனத்துக்குக்
கொடுத்த மனோஜ் பாட்டில் - சரிதா லேகர்.
4) அரசுப் பணியில் சேர விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்காக கும்மிடிப்பூண்டியில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தை இலவசமாக நடத்திவருகிறார் மர வியாபாரி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சேகர். இந்த மையத்தில் இருந்து இதுவரை 200 பேர் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.
5) சட்டீஸ்கரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை, கடும் முயற்சிகளுக்குப் பிறகு அவரின் சகோதரரிடம் சேர்த்திருக்கிறது கர்நாடகக் காவல்துறை.
6) மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி எஸ் என் எல் அதிகாரி குணசீலன். தனது வீட்டில் மழைநீரைச் சேமித்து குடிநீராக பயன்படுத்தி வருகிறார். மழைநீரைக் குடிநீராக சேகரிக்க விரும்புவோருக்கு ஆலோசனை தந்து அமைத்துத் தர ஏற்பாடு செய்ய தயார் என்று கூறுகிறார்.
7) "என் கணவர் ஏழையல்ல.. அவருக்கு மலிவு விலை உணவு கொடுக்காதீர்கள்" என்று கடிதம் கொடுத்திருக்கும் இப்படியும் ஒரு பெண்!
8) செயல் அறக்கட்டளை.
அவசரத்தில் செய்த குற்றங்களால் புரவலர் இன்றி அனாதையாக விடப்படும்
குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்று அவர்கள் வாழ்வை வளமாக்கும் ஆனந்தன்,
அஷ்வின், ஜெகன், கார்த்திக்,உமர், சையத்,பிரகாஷ்
மற்றும் ஆபிரகாம்.
9) மேலுார் அருகே குடிநீர் பஞ்சத்தை போக்க ஊரணியைச் சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் முன்வராததால் கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து சுத்தம் செய்தனர்...
தம வாக்களிக்க லிங்க்..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460562
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
தம +1
சேகர் அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்...
பதிலளிநீக்குஊரணியை சுத்தம் செய்ய எல்லா ஊர் மக்களும் முன்வரவேண்டும்.
பதிலளிநீக்குஇவர்களைப் போல
பதிலளிநீக்குஎல்லோரும் முன்வரலாம்
நாடு முன்னேற...
நாமும் பாராட்டுவோம்!
# மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி எஸ் என் எல் அதிகாரி குணசீலன்#
பதிலளிநீக்குஇதே ஏரியாவில் தான் நானும் இருக்கிறேன் ,ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை ,அவர் செல் நம்பரைக் குறிப்பிட்டு இருந்தால் தொடர்பு கொள்ள ஏதுவாய் இருக்கும் :)
எங்க ஊர்லயும் கம்மாய் ஆகாயத்தாமரையாலும், வாய்க்கா சப்பாத்திக்கள்ளியாலும் நிறைஞ்சிருக்கு.
பதிலளிநீக்குஎல்லோரும் போற்றுதலுக்குரிவவரே
பதிலளிநீக்குநானிலத்தில் நல்லோர் உண்டு என்றும். நல்ல காரியமும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. கவனிப்போர் இல்லை. கவனித்தாலும் பாராட்டுவோர் இல்லை. அப்படியே பாராட்டிவிட்டாலும் வெளிச்சத்துக்கு இந்த நல்ல உள்ளங்களைக் கொண்டுவருவோர் அரிதிலும் அரிது.
பதிலளிநீக்குபாராட்டப்பட வேண்டியவர்கள்
பதிலளிநீக்குபாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குமொபைலில் இருந்து அடிப்பதால். விரிவாக அடிக்க முடியவில்லை ....7 வது செய்தி. அட போட வைத்தது......அனைத்தும் வாசித்தோம்.....அருமை
பதிலளிநீக்குஅனைத்துமே அருமையான தகவல் செய்திகள் ..பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஅனைத்தும் மிக அருமையாக உள்ளது
பதிலளிநீக்குஎல்லோரும் போற்றுதலுக்கு உரியவர்கள்!
பதிலளிநீக்குகாவல்துறை தம்பதிகள் பற்றியும், மத்தியப்பிரதேச அம்மா/அப்பா உணவகத்தில் நடந்ததும் ஏற்கெனவே தெரியும். மற்றவை புதிது. இதற்கு நான் ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருக்கேன் போல!
பதிலளிநீக்கு