வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

வெள்ளி வீடியோ :180209 : அர்த்தம் தெரியாமல் மொழியும் புரியாமல் இசைக்கும் பாடல் எதற்கு?


     பரதம் மலையாளப்படத்தின் தமிழ்த்தழுவல் சீனு என்கிற தமிழ்ப்படம். 

     கார்த்திக் மாளவிகா நடித்தது.  பி வாசு இயக்கத்தில், அவரே ஒரு முக்கிய வேடத்திலும் முதல் முறையாக நடித்த படம்.  இசை தேவா.

     தேவா என்றதும் ஆர்வம் புஸ் என்று அடங்குகிறதா?  இல்லை.  இந்தப் படத்தில் ஹரிஹரன் குரலில் இரண்டு மிக நல்ல பாடல்கள் உண்டு.  ஒன்று "வணக்கம் வணக்கம் வணக்கம்"  பாடல்.  இரண்டாவது "மாதவா...  சேது மாதவா...."    

     வாலியின் பாடல்கள்.

     நான் முதலில் பகிர நினைத்தது "மாதவா... சேது மாதவா" பாடலைத்தான்.  ஆனால் காட்சியும் கிடைக்கவில்லை.  சரி விடு,  சந்தோஷம் என்று பாடலைக் கேட்டால் ஸ்லோ டெம்போவில் கிணற்றுக்குள் கேட்கிறது.  எனவே முதல் பாடலான "வணக்கம் வணக்கம் வணக்கம் "  பாடலைப் பகிர்கிறேன்.  மளவிகாவை ரசிக்கலாம்.  காட்சியை, கார்த்திக்கையும் ரசிக்கலாம்!

     மாதவா பாடல் என்ன ராகம் என்று கீதா ரெங்கன் சொல்வார்.  ஏன், வணக்கம் வணக்கம் வணக்கம் பாடலையும் என்ன ராகம் என்று சொல்லுங்கள் கீதா.

     பொறாமைக்கார அண்ணன் வாசுவுக்காக தனது இசைத்திறமையை மறைத்து வைத்து விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார் கார்த்திக்.  குடியால் ஒருநாள் வாசுவால் பாடமுடியாமல் போக, அந்நாளில் வெளிப்படுகிறது கார்த்திக்கின் இசைத்திறமை.  இந்தக் காட்சியில் வரும் பாடலை இன்று பகிர்கிறேன்.  உணர்ச்சிகரமான படம்.  

என்றும் பா(டு)யும் நதி கொஞ்சம் ஓய்வெடுத்து இருக்கு ஒரு ஓரமா..
இரு கண்கள் என நினைத்து எங்கள் குலம் வளர்க்கும் இசையும் தடம் மாறுமா? (தடுமாறுமா?)

"அந்த எந்தக் கீர்த்தனமும் எந்தக் கண்ணிகளும் தமிழில் இல்லாததா?  
அந்த  எந்த தாளங்களும் எந்த ராகங்களும் தமிழன் சொல்லாததா?
அர்த்தம் புரியாமல் மொழியும் புரியாமல் இசைக்கும் பாடல் எதற்கு?
சொந்த மொழியென்றும் சொந்த இசையென்றும் இருக்கும்போது நமக்கு?
பூந்தமிழே தேன் தமிழே என் உயிரும் நீதானம்மா....."








பின்குறிப்பு :  வாலியின்  இந்த வரியில் எனக்கு சம்மதமில்லை!

//அர்த்தம் புரியாமல் மொழியும் புரியாமல் இசைக்கும் பாடல் எதற்கு?//


77 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரைசெல்வராஜு சகோ! அண்ட் அனைவருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீராம்....பரதம் படம் பார்க்கணும் நெஞ்சை உலுக்கும் படம்...பாடல்கள் அத்தனையும் அப்படி இருக்கும்....அதுவும் ராமகதா..சுபபந்துவராளி ராகப்பாடல் உருக்கிடும்....அந்தக் க்ளைமாக்ஸ் பாடல் வாவ்...செமையா இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது பதிவில்!

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம் உங்கள் பின் குறிப்பு எனக்கும் அதே கருத்து!!!!! ஹைஃபைவ்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அதற்கு அழகான ஒரு பாடல் மொழி படத்தில் உண்டே!!!!!

    ராகம் சொல்கிறேன்...பாடல் கேட்டுவிட்டு...தமிழில் பாடல்கள் கேட்டதில்லை..கேட்கிறேன்...வழக்கமாக 4- 4.30 க்குள் எழுந்துவிடுவேன்...இன்று 5.30 ஆகிவிட்டது..ஸோ கிச்சன் வேலை கடமை....அப்பால வந்து ராகம் சொல்லறேன்

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வாங்க கீதா... மெதுவா வாங்க... என்ன அவசரம்? இன்று முழுவதும் நேரம் இருக்கிறது. அப்புறம் தனியா கம்பி மேல நிக்க ஒரு ஆள் வந்து புலம்பல்ஸ் விடுவார். அப்போ துணை வேணுமில்ல...!!

    பதிலளிநீக்கு
  9. ஆமாம், அதிராவோட அருமை செக்ரட்டரி அஞ்சுவை கொஞ்ச நாட்களாய் எங்கே காணோம்? சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுக்கலாமா?

    பதிலளிநீக்கு
  10. நான் வழக்கம் போல் எழுந்தாலும் நம்ம ரங்க்ஸ் லேட்! ஐந்தரைக்குத் தான் எழுந்தார். ஆகவே காஃபிக் கடமையை ஆற்றவே ஆறு மணி ஆகிவிட்டது. அதான் கணினியைத் திறக்கலை! :))))

    பதிலளிநீக்கு
  11. வாங்க கீதா அக்கா... காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. கடமையையும், காஃபியையும் சேர்த்து ஆற்றினதில் காஃபி ஆறிப் போச்சு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))
    நம்ம தமிழ்நாட்டில் தமிழிசைக்காகக் கல்கி அவர்கள் இருந்த காலத்திலேயே குரல் கொடுத்திருக்காங்க! அந்தக் காலத்து விகடன், கல்கி இருந்தால்/கிடைத்தால் படிச்சுப் பாருங்க! ராஜா அண்ணாமலை மன்றம் எப்போதுமே தமிழிசைக்குத் தான் குரல் கொடுக்கும். பாடகி சௌம்யா கூட திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் தேவாரப் பாடல்களின் பழைய பண்களை ஆய்வு செய்து இப்போதைய ராகங்களோடு ஒப்பிட்டு முன்னர் இருந்த பெயரையும், இப்போது வழங்கப்படும் பெயரையும் குறிப்பிட்டுப் பல ஆய்வுகள் செய்திருக்கார். ராகங்களின் பெயர் தான் வேறேயே தவிர்த்து அந்தப் பண்களில் சில இப்போது இசைக்கப்பட்டாலும் பல பண்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் அவர் கருத்து! முன்னெல்லாம் மார்கழி மஹோற்சவம் என்னும் ஒரு நிகழ்ச்சி ஏதோ ஒரு தொலைக்காட்சியில் நடக்கும். அப்போ இதெல்லாம் அவர் பகிர்ந்திருக்கிறார். சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல்!

    பதிலளிநீக்கு
  13. வாலி அந்தத் தயாரிப்பாளர் அல்லது இயக்குநருக்காக இப்படிப் பாடல் எழுதி இருக்கலாம். மற்றபடி கர்நாடக சங்கீதம் என்றாலே என்னமோ கர்நாடக மாநிலத்துக்குத் தான் சொந்தம் என்றெல்லாம் நினைப்பது நம்ம தமிழ்நாட்டில் தான். மற்ற மாநிலங்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திராவில் இந்த பேதமெல்லாம் இல்லை.

    பதிலளிநீக்கு
  14. //மாளவிக்காவை ரசிக்கலாம்//

    இசையைப்பற்றி பேசும் இடத்தில் மாளவிக்காவின் ரசிப்பு எதற்கு ?

    நல்ல பாடல்.

    பதிலளிநீக்கு
  15. வாங்க கீதா அக்கா... வாலியின் கருத்தாக இருக்காது அது. தயாரிப்பாளரின் கருத்தும் அல்ல. அந்தக் கதையின் தேவை அது என்று தெரியும். இசைக்கு மொழி கிடையாது என்கிற என் கருத்தைச் சொன்னேன் அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  16. வாங்க கில்லர்ஜி... ரசிப்பதைச் சொல்லக் கூடாதா? அநியாயமா இருக்கே...

    பதிலளிநீக்கு
  17. >>> ரசிப்பதைச் சொல்லக் கூடாதா?.. அநியாயமா இருக்கே!.. <<<

    அதானே... நீங்க தாராளமா சொல்லுங்கே... ஸ்ரீராம்... எங்களுக்கும் பொழுது போவணுமில்லே...

    ஓய் ... கிழம்!... உமக்கு இதெல்லாம் தேவையா?...

    பழய நெனப்புடா.. பேராண்டி..
    பழய நெனப்புடா!...

    பக்தானந்தஜி அருள்வாக்கு..

    பழய நெனப்பு இல்லேன்னா
    உலகம் பூரா கலகம் ஆயிடும்!..

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம் நேற்றே அதிராவுக்குக் கை கொடுக்கக் கம்பியில் நடந்தேன்...ஆனால் நான் விழு இருந்தால் அவர் பிடிக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன் கம்பி வெயிட் தாங்காதே ஹிஹிஹிஹி..காலையில்..அவரையும் வம்புக்கு இழுத்திருந்தேன்...அவர் கவனிக்கவில்லை...அதைச் சொல்லிவிட்டு அவர் எங்கள் வீட்டு நெட் பற்றிச் சொல்லியதற்குப் பதிலும் கொடுத்துவிட்டு நகர்ந்தால்....ஆ!!! மீண்டும் நெட் போய்டுச்....அப்புறம் பேய் உலவும் நேரத்தில் வந்திருந்தது....அதிராவுக்குப் பேய் என்றால் பயமாச்சேனுன் கம்பியில் நடக்காமல் போய்ட்டேன்...இப்போதும் வருது கட் ஆகுது இப்படி வரும் வராதுனு...இன்றைக்கு எங்கள் ஏரியா பிஎஸ் என் எல் அதிகாரியேவந்து பார்க்கிறேன் என்று சொல்லியிருக்கார்...பார்ப்போம்...இப்போது வருகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. கீதாக்கா தமிழ் இசை பற்றிச் சொல்லியிருப்பதை அப்படியெ வழி மொழிகிறேன். ஆம் கல்கி காலத்திலேயே...அந்த மன்றம் எட்ஸெற்றா...சௌம்யா மட்டுமில்ல....நம்ம லேட் பட்டம்மாள், அவரது தம்பி டிகேஜெ, இப்போது நம்ம நித்யஸ்ரீ இவர்கள் தமிழ்ப்பாட்டுகள் நிறைய பாடியிருக்கிறார்கள். ஆல்பமும் தான். பலரும் தமிழ் கீர்த்தனைகளைப் பாடி ஆல்பமாகவும், கச்சேரிகளிலும் கூடப் பாடுகிறார்கள் சீர்காழி, அவரது மகன் சீர்காழி சிவசிதம்பரம் இருவருமே ரெகுலர் தமிழ்ப்பாடல் கச்சேரிக்கு ராஜா அண்ணாமலைமன்றத்தில்...

    கர்நாடக சங்கீதத்தின் ராகங்களுக்கு இணையான தமிழ்ப்பண் இப்போது இங்கு கொடுத்துப் பேசினால் கருத்து நீண்டு விடும்.

    கீதாக்கா கர்நாடக இசையை கர்நாடகத்திற்குச் சொந்தமானது என்ற கருத்தை விட எனக்குத் தெரிந்து அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த இசை என்ற கருத்துதான் நிலவுகிறது. ஏன் இப்படி என்று தெரியவில்லை. அப்படிப் பார்த்தால் நாதஸ்வரக் கலைஞர்கள் எல்லோரும் எவ்வளவு அழகாக வாசிக்கின்றனர்...நாதஸ்வர கலைஞரில் மிகப் பெரிய கலைஞர்கள்...ஷேக் சின்ன மௌலானா, காசிம் சகோதரர்கள்...இன்னும் பலர்...இவர்கள் எல்லாம் ஏனோ அப்படிச் சொல்பவர்களின் கண்ணில் படவில்லை...அவர்களது பார்வை அவ்வளவுதான்...பல வாய்பாட்டுக் கலைஞர்களும் நாதஸ்வரக் கலைஞர்களிடம் போய் நாதஸ்வர பாணி ஸரங்களைக் கற்கிறார்களே...

    கீதா

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம் பாடல் இப்போதுதான் முதல்தடவையாகக் கேட்டேன்....ரொம்ப அழகா போட்டுருக்கார் வணக்கம் வணக்கம்...ராகம் என் சிற்றறிவிற்கு எட்டியவரையில் மிகவும் அரியதோர் ராகத்தில் அவ்வளவாகப் பரவலாக இல்லாத ராகமான வீணவாதினியைத் தழுவிப் போட்டிருக்கார்.

    ஹம்மிங்க் தேஷில் தொடங்கினாலும் பாடல் வீணவாதினி பேஸ்ட். இடையில் சரணத்தில் தொடக்கத்தில் கொஞ்சம் டிவியேட் ஆகிறார். அது இராவின் ஏதோ ஒரு பாடலை நினைவு படுத்துகிறது...அதை விடுங்கள் எந்த ஒரு ராகமும் ஏதோ ஒரு வகையில் ஏதையாவது போல் தான் இருக்கும்...7 ஸ்வரங்களுக்குள்தானே அத்தனையும்...அதன் பின் பேஸ் மற்றும் ஹை போகும் போது வீணவாதினியைத்தான் டச் செய்கிறது...

    வீணாவாதினியில் அமைந்த ஒரு பாடல் கே ஜே ஜே பாடியிருக்கும் கர்நாடக சங்கீதப்பாடல் ஸ்ரீ கணேசாத்பரம் https://www.youtube.com/watch?v=af6bnkAmfvY

    என் சிறிய அறிவிற்குத் தோன்றியது இதுதான்

    மனோ அக்கா வந்தால் சொல்லலாம். இன்னும் இசையில் விற்பன்னர்கள் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்வேன். வேறு யாரும் இந்த ராகத்தில் கர்நாடக இசைப் பாடல்கள் கூடப் பாடியிருப்பதாகத் தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீணாவாதினி! ராகம் பெயரே இப்பதான் கேள்விப்படறேன்.

      நீக்கு
  21. பாட்டு பரவாயில்லை. பரதம் படம் பார்த்த மாதிரியும் இருக்கு, இல்லாதமாதிரியும் இருக்கு.

    பதிலளிநீக்கு
  22. என் ஆசை மச்சான் படத்தின் ராசி தான் கைராசி தான்.. பாடலின் சாயல் வருகிறதா.. இல்லையா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராசிதான் கை ராசிதான் பாடல் எனக்கும் பிடிக்கும். அது கூட தேவாதான் இசை என்று நினைக்கிறேன். ஆனால் அந்த வாசனை இந்தப்பாட்டுல வருதா என்ன?

      நீக்கு
    2. அந்தப் பாடலைக் கொஞ்சம் அப்படி இப்படி தட்டி அமுக்கினால் இந்தப் பாடல் தான்.. சரணங்களே சரணம்!..

      நீக்கு
  23. கர்நாடக இசையை கர்நாடகத்திற்குச் - இந்தப் புரிதலே தவறு. 'கர்னாடகம்' என்பது 'பழமை' என்பதைக் குறிக்கும். 'பழைய இசை' என்பதைத்தான் 'கர்னாடக இசை' என்று சொல்கிறோம். கல்கி கூட 'கர்னாடகம்' என்ற புனைப் பெயரை வைத்துக்கொண்டிருந்தாரோ? இதனை அவருடைய எழுத்தில் படித்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம் மாதவா சேது மாதவா பாடல் லிங்க் இருக்கா உங்களிடம்....அதை இங்குக் கொடுக்க முடியுமா நான் தேடினேன்..ஆனால் அந்தப் பாடலா என்று தெரியவில்லை ஏனென்றால் அதில் கிருஷ்ணர் படம் எல்லாம் வருது..ஹா ஹா ஹா

    ம்ம்ம்ம் அப்புறம் ஸ்ரீராம் படத்தின் பாடல் காட்சிகளைப் பார்க்கும் போதும் மற்ற பாடல்களைப் பார்த்த போதும் ஹையோ கொடுமை....கொடுமை....பரதம் ஒருஜினல் படத்தைப் பார்த்திருந்ததால் இதைப் பார்க்கணும்னு தோணலை அப்படி இருக்குக் காட்சிகள்...இப்படி வாசு அநீதி இழைக்க வேண்டாமாக இருக்கு.....பாடல் காட்சிகளும் ஹையோ....கொடுமை....படத்தின் கதைக்கும் பாடல்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. லோஹிதார் அவர்களின் கதை அருமை...பரதத்தில் ஸ்க்ரீன் ப்ளே மற்றும் பாடல்கள் அவ்வளவு அழகாக அமைத்திருப்பார் டைரக்டர் சிபிமலையில் .....அந்த லோகிதாஸின் கதையைத் தமிழில் இப்படிக் கொடுமையாக்கி இருப்பது என்னைப் பொருத்தவரை அந்த எழுத்தாளருக்கு அநீதி என்று தோன்றுகிறது. சரி லோகிதாஸே இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கார் என்று தெரியவில்லை.....லோகிதாஸின் கதைகள் தான் கிரீடம், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா, கமலதளம், இன்னும் சில....அத்தனையும் சிறந்த படங்கள் அதுவும் லோகிதாஸும் டைரக்டர் சிபிமலையிலும் சேர்ந்து அவ்வளவு அழகாகக் கதகளி ஆடியிருப்பார்கள்.... கொண்டு வந்திருப்பார்கள்..தமிழ்நாட்டில் பொதுவாக டைரக்டர்கள் பலரும் ஷூட்டிங்க் தளத்தில் கதை எழுதுவார்கள் அல்லது ஸீன் மாற்றுவார்கள் அப்போதைக்கு ஏற்றபடி கதை அமைப்பார்கள் என்று எங்கோ வாசித்த நினைவு...

    ஆனால் .சேரநாட்டில் பொதுவாகக் கதை அடிப்படையில் தான் திரைப்படங்கள். எழுத்தாளர் ஒருவராக இருப்பார்..டைரக்டர் வேறு....ஸ்க்ரீன் ப்ளே எழுத்தாளர் அல்லது தனி பிரிவாகக் கொள்ளப்படும்...இப்படி ஒவ்வொன்றும் துறைவாரியாக....அங்கு நல்ல எழுத்தாளர்களும், சிறந்த டைரக்டர்களும் இணைந்து செதுக்குவார்கள்...தமிழ்ப்படங்கள் இன்னும் அந்த நிலையை எட்ட வில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தமிழ்ப் படங்கள் அந்த நிலையை..///

      ஒரு போதும் எட்டப்போவதில்லை...

      நீக்கு
  25. ஆனால் அந்தப் பாடலா என்று தெரியவில்லை ஏனென்றால் அதில் கிருஷ்ணர் படம் எல்லாம் வருது..ஹா ஹா ஹா//

    நான் பதிவிவிலேயே லிங்க் கொடுத்திருக்கேன் பாருங்க கீதா... மாதவா சேது மாதவா என்னும் வரிகளைத் தொடுங்கள்.

    பதிலளிநீக்கு
  26. ஸ்ரீராம் மாதவா சேது மாதவா பாடல் எம்பி3 வடிவில் கேட்டேன்....மதியமாவதி ராகம் தான் மெயினாக அமைந்துள்ளது..

    கீதா

    பதிலளிநீக்கு
  27. எஸ் நெல்லை...கர்நாடகம் என்றால் பழமை....அதைச் சொல்ல நினைத்தேன் உங்கள் வரிகளை வழி மொழிகிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஸ்ரீராம் நெட் இடையில் போய்விட்டதால் உங்களின் லிங்கை இப்போதுதான் கவனித்தேன்....அதற்கு முன் எம் பி 3யில் கேட்டேன்...இதோ வீடியோ பார்க்கிறேன்...ஆஹா இதே லிங்க் தான் நான் மொபைலில் தேடும், போது கிடைத்தது...கிருஷ்ணர் படமா வருதேனு இந்தப் பாட்டுத்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது...இப்போது தெரிஞ்சுருச்சு அதே என்று...

    ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம் நீங்கள் சரியாத்தான் சொல்லிருக்கீங்க...ராசிதான் கை ராசிதான் இப்பத்தான் கேட்டேன்....வணக்கம் வணக்கம் சாயல் உள்ளது.

    ராகம் வீணவாதினி முழுவதும் என்று சொல்வதற்கில்லை வணக்கம் வணக்கமில் என்றாலும் அதைத் தழுவியது என்று சொல்லலாம்...அதன் ஆரோகணம் அவரோகணம் பொருந்துகிறது....இடையில் பாடல் கொஞ்சம் டிவியேட் ஆகுது..

    சீனுவில் மத்த பாடல்கள் கொஞ்சம் கேட்டேன்..ஒரு பேக்க்ரவுன்ட் இசையில் பல பாடல்கள் வந்திருப்பதாகத் தெரியுது.....ஏதோ ஒரு பாட்டு நு ஒரு பாட்டு வருமே அப்புறம் அதே ட்யூனில் இன்னும் நிறைய...எஸ் ஏ ராஜ்குமாரின் இசை என்று நினைக்கிறேன்...

    எனக்குத் தெரிந்து தேவாவின் வித்தியாசமான பாடல்கள் என்றால் ஆசையில் வரும் பாடல்க நல்லாருக்கும்...கொஞ்ச நாள் பொறு தலைவா...ஆனந்தபைரவியில்.....
    புல்வெளி புல்வெளி, மீனம்மா பாடல்கள் நல்லாருக்கும்....
    மேகம் கருக்குது - குஷி பாடல்...வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா செம பாடல்...மனம் விரும்புதே பாடல் ஆரம்பம் மன்வியளகிம் போல இருந்தாலும் அப்புறம் நன்றாக இருக்கும்.....இன்னும் இருக்கலாம் டக்கென்று நினைவுக்கு வந்தவை இவைதான்...அப்புறம் எல்லாமே ஒரே போல் தான் இருந்தது...

    கீதா

    பதிலளிநீக்கு
  30. பாடல் கேட்டது இல்லை இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன்.
    மனத்தில் நிற்க வில்லை.சில பாடல்களை கேட்டால் அன்று முழுவதும் அது காதில் ஒலித்து நம்மை பாட சொல்லும்.
    இசை அலசல் அருமை.
    தொடர்ந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  31. /// தமிழ்ப் படங்கள் அந்த நிலையை..///

    ஒரு போதும் எட்டப்போவதில்லை...//

    துரை செல்வராஜு அண்ணா ரொம்பக் கரெக்டாகச் சொன்னீங்க..

    நானும் ஏஞ்சலைத் தேடுகிறேன்...ஏன் காணவில்லை...அதானே ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் லீவு லெட்டர் கொடுக்காமல் போகலாமோ....அதிரா என்ன நீங்க உங்க செக்கரெட்டரியை இப்படியா கேய்வி கேய்க்காம இருப்பீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  32. >>> ரசிப்பதைச் சொல்லக் கூடாதா? அநியாயமா இருக்கே..<<<

    அதானே!...
    ரசிப்பதைக் கூட சொல்லக் கூடாதா?..
    ரசிப்பது ஒரு குத்தமா.. ஐயா!..
    = = = = = = = = = = = = = = = = =

    ஓய் கிழம்... ராமு தான் சின்ன பையன்!..
    உனக்கு இந்த வயசில ரசிப்பு என்ன வேண்டிக் கிடக்கு?..

    பழய நெனப்புடா பேராண்டி..
    பழய நெனப்புடா!...
    = = = = = = = = = = =

    பக்தானந்த ஜி ஸ்வாமி என்ன சொல்றாரு..ன்னா -

    பழய நெனப்பு மட்டும் இல்லேன்னா
    உலகம் பூரா கலகம் ஆயிடும்!..

    பதிலளிநீக்கு
  33. >>> அதானே ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் லீவு லெட்டர் கொடுக்காமல் போகலாமோ!..
    அதிரா என்ன நீங்க உங்க செக்கரெட்டரியை இப்படியா கேய்வி கேய்க்காம இருப்பீங்க?..<<<

    அதானே!.. எதுக்கும் ஒரு ஞாயம் நீதி வேணுமுங்க!..

    பதிலளிநீக்கு
  34. அருமை
    மாளவிகாவை ரசிக்கலாம் - ஆமாம் ;)
    கார்த்திக் பின்னால் ஒருவர் உட்கார்ந்து 'என்னத்த' என்கிறார் :) :)

    பதிலளிநீக்கு
  35. அருமை
    மாளவிகாவை ரசிக்கலாம் - ஆமாம் ;)
    கார்த்திக் பின்னால் ஒருவர் உட்கார்ந்து 'என்னத்த' என்கிறார் :) :)

    பதிலளிநீக்கு
  36. பாட்டு செம... எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. இசையும் அருமை. கூடவே பிடிச்ச கார்த்திக் இருப்பதால் ஃபேவரிட் லிஸ்ட்ல இணைஞ்சிடுச்சு

    பதிலளிநீக்கு
  37. //.சௌம்யா மட்டுமில்ல....நம்ம லேட் பட்டம்மாள், அவரது தம்பி டிகேஜெ, இப்போது நம்ம நித்யஸ்ரீ இவர்கள் தமிழ்ப்பாட்டுகள் நிறைய பாடியிருக்கிறார்கள்/கீதா, நான் தமிழ்ப்பாடல்கள் பாடி இருப்பதை மட்டும் சொல்லவில்லை! :) சௌம்யாவின் ஆய்வு குறித்துச் சொன்னேன்.ரவிகிரணும் அவரும் சேர்ந்து அருமையாக ஆய்வு செய்திருக்கிறார்கள்; செய்தும் வருகின்றனர்.:))))

    பதிலளிநீக்கு
  38. //கர்நாடக இசையை கர்நாடகத்திற்குச் - இந்தப் புரிதலே தவறு. 'கர்னாடகம்' என்பது 'பழமை' என்பதைக் குறிக்கும். // தெரியும். நெ.த. ஆனால் பெரும்பான்மையினர் அது கர்நாடகத்திலிருந்து வந்தது என்ற புரிதலுடனேயே இருக்கிறார்கள். அதோடு இல்லாமல் இது பார்ப்பனர்களின் இசை என்ற பெயரையும் பெற்றுள்ளது! :))))

    ஆமாம், கல்கி அவர்கள் "கர்னாடகம்" என்னும் புனைப்பெயரிலே தான் இசை விமரிசனங்கள் எழுதுவார். பின்னால் வந்த சுப்புடுவெல்லாம் அவர் பாணி தான் என்றாலும் கல்கிக்கு ஈடு இல்லை! :))

    பதிலளிநீக்கு
  39. //பரதத்தில் ஸ்க்ரீன் ப்ளே மற்றும் பாடல்கள் அவ்வளவு அழகாக அமைத்திருப்பார் டைரக்டர் சிபிமலையில் .....அந்த லோகிதாஸின் கதையைத் தமிழில் இப்படிக் கொடுமையாக்கி இருப்பது என்னைப் பொருத்தவரை அந்த எழுத்தாளருக்கு அநீதி என்று தோன்றுகிறது. // இது ஒண்ணை மட்டும் சொன்னால் எப்பூடி? மோகன்லால், கலாபவன் மணி(?) நடிச்ச காக்கை, குயில் படத்தைத் தமிழில் வேறு ஏதோ பெயரில் எடுத்து அதைப் பார்த்த எனக்குத் தற்கொலை பண்ணிக்கலாமானு தோணிடுச்சு! அதே போல் மணிச்சித்ர தாழ் படம்! அது எங்கே! சந்திரமுகி எங்கே! ஷோபனா நடிப்பு எங்கே! ஜோதிகா நடிப்புஎங்கே!ஹூம்! கொலை! அதே போல் தான் இப்போப் புதுசா வந்த பாபநாசம் படமும்! என்ன தான் இயல்பாக நடிச்சிருக்காங்க என்றாலும் நான் மலையாள மூலத்தைப் பார்த்தப்புறம் தமிழ்ப்படத்தைக் கிழிச்சுடலாமானு வெறியே வந்துடுச்சு! :( என்றாலும் பாபநாசம் கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான். அந்த மூத்த பெண் கதாநாயகன் வளர்த்து வரும் பெண் என்பதை மலையாளத்தில் பார்க்கலாம். ஆனால் தமிழில் இரண்டுமே சொந்தப் பெண்களாகக் காட்டுவாங்க!

    பதிலளிநீக்கு
  40. இன்னைக்கு பதிவு தூங்கி வழியாம கலகலப்பா இருக்கு..
    எவ்வளவு தகவல்கள்.. ஆகா.. ஆகா!..

    அதிராமிய்யாவ் வந்தா இன்னும் கட..முடா...ன்னு ஆயிடும்!..

    இதில மாளவிகாவுக்கும் ஓரளவு பங்கு இருக்கு..ன்னு நெனைக்கிறேன்!..

    (ஏதோ நாமும் கொஞ்சம் புகைச்சலைப் போட்டு வைப்போமே!..)

    பதிலளிநீக்கு
  41. >>> அதே போல் மணிச்சித்ர தாழ்! அது எங்கே!..
    சந்திரமுகி எங்கே!.. ஷோபனா நடிப்பு எங்கே!.. <<<

    ஆகா!... அந்த தஞ்சாவூர் நாகவல்லியும் ராமநாதனும்... இன்னும் நெஞ்சுக்குள்ளே...

    பதிலளிநீக்கு
  42. தஞ்சாவூர்..ல இருந்து நாகவல்லிய புடிச்சிக்கிட்டுப் போயிருக்காங்கே!...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... ( இது புலி...ன்னு நெனைச்சுக்கோங்க!...)

    பதிலளிநீக்கு
  43. தில்லையகத்து கீதா ரங்கன் - இவர் லோகிததாஸ் இல்லையோ? அரிச்சந்திரன் லோகிதாஸ் ஞாபகமா? இந்த லோகிததாஸ்தானே மீரா ஜாஸ்மினை........................ அறிமுகப்படுத்தியவர்?

    பதிலளிநீக்கு
  44. தில்லையகத்து கீதா ரங்கன் - இவர் லோகிததாஸ் இல்லையோ? அரிச்சந்திரன் லோகிதாஸ் ஞாபகமா? இந்த லோகிததாஸ்தானே மீரா ஜாஸ்மினை........................ அறிமுகப்படுத்தியவர்?

    பதிலளிநீக்கு
  45. கீசா மேடம்... கர்நாடக இசையில் ஜாம்பவான்கள் எல்லா சமூகத்திலும் இருந்தனர். வாத்திய இசையில் நிச்சயம் பலப் பல திறமைசாலிகள் இருந்தனர். நிறைய பெயர்கள் என் ஞாபகத்தில் வருகிறது. குருகுலம் போன்றவற்றில் படித்தவர்களே அதிக எண்ணிக்கையில் இல்லை. அதுவும் இசைக்கு அசுர சாதகமும் குருவோடவே இருக்கும் தன்மையும் (எடுபிடி மாதிரி) வேண்டும்.

    பதிலளிநீக்கு
  46. கீசா மேடம்... கர்நாடக இசையில் ஜாம்பவான்கள் எல்லா சமூகத்திலும் இருந்தனர். வாத்திய இசையில் நிச்சயம் பலப் பல திறமைசாலிகள் இருந்தனர். நிறைய பெயர்கள் என் ஞாபகத்தில் வருகிறது. குருகுலம் போன்றவற்றில் படித்தவர்களே அதிக எண்ணிக்கையில் இல்லை. அதுவும் இசைக்கு அசுர சாதகமும் குருவோடவே இருக்கும் தன்மையும் (எடுபிடி மாதிரி) வேண்டும்.

    பதிலளிநீக்கு
  47. பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக் கூடம்நானறியேன் ..........

    பதிலளிநீக்கு
  48. சௌம்யாவின் ஆய்வு குறித்துச் சொன்னேன்.ரவிகிரணும் அவரும் சேர்ந்து அருமையாக ஆய்வு செய்திருக்கிறார்கள்; செய்தும் வருகின்றனர்.:))))//
    ஆமாம் கீதாக்கா புரிந்து கொண்டேன்...நான் தமிழ்ப்பாடல்கள் பாடியதைச் சொன்னேன் தெரியாமல் இரண்டையும் பிரித்துச் சொல்லாமல் சேர்த்துச் சொல்லிட்டேன் ஹிஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
  49. அதானே!.. எதுக்கும் ஒரு ஞாயம் நீதி வேணுமுங்க!..//

    துரை அண்ணா இதை எப்படிச் சொல்லோனும் தெரியுமா..."எனக்கு நீதி நியாயம் நேர்மை எருமை எல்லாம் வேணும் இங்கன...மீ ரொம்ப ஸ்ரிக்ட்டாக்கும்...எல்லாரும் தள்ளுங்கோ..வழி விடுங்கோ மீ தேம்ஸில் குதிக்கப் போறேன்..என்னை யாரும் தடுக்காதீங்கோ.." ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
  50. இது ஒண்ணை மட்டும் சொன்னால் எப்பூடி? //

    கரீக்டுதான் கீதாக்காவ்....பின்னூட்டம் பெரிசா போனதுல விட்டுப் போச்சு...அப்புறம் நெட் கட் வெளியில் போய்ட்டேன்...

    கீதாக்கா ஹைஃபைவ்!!!!!! மணிச்சித்ரத்தாழ் படு கொலை தமிழில்...அதுல நீங்க வாசிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன்...வாசு மேல ஃபாஸில் வழக்கே தொடர்ந்தார். ஏன்னு கேட்டா மணிச்சித்ரத்தாழ் கதையை வாசு தன் கதை என்று போட்டுக் கொண்டதால். நான் அப்படியே வியந்து போனேன்...இப்படியும் அட்ராசிட்டிஸ் நடக்குமா என்று......காக்கைகுயில் மோஹன்லால், முகேஷ்....காமெடி படம் மோஹன்லாலின் நெருங்கிய நண்பர் டைரக்டர் பிரியதர்ஷனின் டைரக்ஷன்.....ஹையோ அக்கா தமிழ்ல லண்டன் அப்படினு எடுத்துக் கொலை பண்ணிட்டாங்க..நீங்க சொல்லிருக்கற பாபநாசமும் அப்படித்தான்...கொஞ்சம் தேவலாம்..எனக்கும் மலையாளம் தான் பிடித்தது...இன்னும் நிறைய இருக்கு அக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  51. அதுவும் இசைக்கு அசுர சாதகமும் குருவோடவே இருக்கும் தன்மையும் (எடுபிடி மாதிரி) வேண்டும்//

    நெல்லை ஜேசுதாசை செம்மங்குடி முதலில் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அவரது காரைத் துடைத்து வெளியில்தான் இருந்தார். ஜேசுதாசை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு கற்பித்தவர் செம்பை வைத்தியநாத பாகவதர்....அதனாலேயே பெரும்பாலும் கச்சேரிகளில் அவர் பாவனகுரு பாடலைப் பாடாமல் இருக்கமாட்டார்.

    ஒரு முறை செம்மங்குடி கேரளத்திற்குச்சென்றுவிட்டு கொச்சியில் ஃப்ளைட்ட்டில் இருக்கும் போது ஃப்ளைட் நேரத்தில் கிளம்பவில்லையாம்/ யாரோ வி ஐ பி வருகிறார் என்று காத்திருந்ததாம். (எனக்குத் தனிப்பட்ட முறையில் இதில் உடன்பாடு கிடையாது!!!)...அந்த விஐ பி வேறு யாருமல்ல தாஸேட்டன் என்று தெரிந்ததும் செம்மங்குடி வியந்து போனாதாகச் சொல்லியிருந்தார். ஆனால் தாஸ் அப்போதும் செம்மங்குடியைக் கண்டதும் மரியாதை செலுத்தியது வேறு விஷயம்...

    அதே செம்மங்குடியின் பிரதான சிஷ்யனான டி எம் கிருஷ்ணா இப்போது புரட்சிகரமாகப் பேசிவருகிறார். சிலவற்றை முன்னெடுத்தும் செய்து வருகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  52. துரை அண்ணா நீங்க மாளவிகாவை ரசித்ததை நானும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  53. கீதா ரங்கன் - அது ஏர் இந்தியா விமானம். திரைப்பாடல்களைப் பாட அடிக்கடி விமானத்தில் பயணித்து, ஏசுதாஸ் மோஸ்ட் இம்பார்ட்டன்ட் கஸ்டமர் என்ற நிலையை அடைந்த சமயம். அவருக்காக விமானம் காத்திருந்ததில் (அந்தக் காலத்தில்) ஆச்சர்யம் இல்லை.

    பதிலளிநீக்கு
  54. கீதா ரங்கன் - அது ஏர் இந்தியா விமானம். திரைப்பாடல்களைப் பாட அடிக்கடி விமானத்தில் பயணித்து, ஏசுதாஸ் மோஸ்ட் இம்பார்ட்டன்ட் கஸ்டமர் என்ற நிலையை அடைந்த சமயம். அவருக்காக விமானம் காத்திருந்ததில் (அந்தக் காலத்தில்) ஆச்சர்யம் இல்லை.

    பதிலளிநீக்கு
  55. எல்லாரும் மாளவிகா மாளவிகான்னு எழுதி, ஶ்ரீராம், அனுஷ்காவுக்கு முன்பு மாளவிகா ரசிகரோன்னு நினைக்க வச்சுட்டீங்க

    பதிலளிநீக்கு
  56. //அதே செம்மங்குடியின் பிரதான சிஷ்யனான டி எம் கிருஷ்ணா இப்போது புரட்சிகரமாகப் பேசிவருகிறார். சிலவற்றை முன்னெடுத்தும் செய்து வருகிறார்.//

    முன்னெடுத்துச் செய்கிறாரோ இல்லையோ, அவர் பாடும்போது பக்கவாத்தியக்காரர்கள் தனி மேடையில் தான் உட்காரணும்! :)

    பதிலளிநீக்கு
  57. அது என்னமோ தெரியாது, டி.எம்.கிருஷ்ணாவின் புரட்சி எனக்கு ரசிக்கவில்லை கீதா/தில்லையகத்து! :)

    பதிலளிநீக்கு
  58. ஓஹோ, காக்கை, குயிலில் மோகன்லாலுடன் அது முகேஷ் என்பவரா? எனக்கு நினைவில் இல்லை. தெரிந்த நடிகர்களில் கலாபவன் மணியும் ஒருத்தர். அதான் அவரோனு நினைச்சேன். :)

    பதிலளிநீக்கு
  59. எப்படியோ நம்மளை ஏமாத்தறாங்கப்பா! :)))

    பதிலளிநீக்கு
  60. எல்லாரும் மாளவிகா மாளவிகான்னு எழுதி, ஶ்ரீராம், அனுஷ்காவுக்கு முன்பு மாளவிகா ரசிகரோன்னு நினைக்க வச்சுட்டீங்க// ஹா ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
  61. கீதா ரங்கன் - அது ஏர் இந்தியா விமானம். திரைப்பாடல்களைப் பாட அடிக்கடி விமானத்தில் பயணித்து, ஏசுதாஸ் மோஸ்ட் இம்பார்ட்டன்ட் கஸ்டமர் என்ற நிலையை அடைந்த சமயம். அவருக்காக விமானம் காத்திருந்ததில் (அந்தக் காலத்தில்) ஆச்சர்யம் இல்லை.//

    ஓ!!! ம்ம்ம் காட் இட்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  62. தில்லையகத்து கீதா ரங்கன் - இவர் லோகிததாஸ் இல்லையோ? அரிச்சந்திரன் லோகிதாஸ் ஞாபகமா? இந்த லோகிததாஸ்தானே மீரா ஜாஸ்மினை........................ அறிமுகப்படுத்தியவர்?//

    ஓ!!! நெல்லை நீங்கள் சொன்னதை இப்பத்தான் பார்த்தேன்...இதைப் பார்த்தப்புறம் தான் என் கமென்டை போய்ப்பார்த்தேன்...ஹிஹிஹி த ரைப்பும் போது வராமல் போச்....சில சமயம் வேண்டாத இடத்தில் டபுள் ஆகும் எழுத்து...சில சமயம் விடுபடுது...கீ போர்டு கீஸ் லூசா இருக்கு..

    லோகிததாஸ் தான் மீராவை அறிமுகப்படுத்தினாரா ஓ!! நியூஸ்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  63. பாட்டை நேற்று இரவுதான் கேட்க முடிந்தது. நன்றாக இருக்கிறது. கேட்டதில்லை. படம் அப்போது இங்கு வரவில்லை. தமிழில் இந்தப் படத்தைப் பார்க்கவும் இல்லை. இது பரதத்தின் ரீமேக் என்பதே இப்போதுதான் தெரிந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  64. கீதா அக்காவும், கீதா.தி.யும் சொல்லியிருப்பதைப் போல மலையாளப் படங்கள் தமிழில் ரீ மேக் செய்யப்படும் பொழுது, ஒரிஜினலைப் போல இருப்பது இல்லை, மலையாள படங்களின் சிறப்பே இயல்பான பாத்திரங்கள், யதார்த்தமான காட்சிகள். ஹீரோயிசத்தை கொண்டாடும் தமிழ் சினிமாவுக்கு அது சரி படுமா?

    'பாவம் பாவம் ராஜகுமாரன்' என்னும் அருமையான படம்தான், 'கோபுர வாசலிலே' என்று கொடுமையாக மொழி மாற்றம் செய்யப்பட்டது. சத்தியராஜ் நடித்த சில படங்கள், 36 வயதினிலே போன்றவை விதி விலக்குகள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  65. கார்த்திக்கின் இப்படம் ஒரு முறை தொலைக்காட்சியில் போட்ட போது கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன். பாடல் கொஞ்சம் நினைவிருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!