திரைமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.6.18

வெள்ளி வீடியோ 180629 : நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ..


 
வேலை இல்லா திண்டாட்டத்தை வைத்து 1980 நவம்பரில் இரண்டு படங்கள் வெளிவந்தன.  ஒன்றுக்கு இளையராஜா இசை.  நிழல்கள் திரைப்படம். திராபை படம்.  இன்னொன்று மெல்லிசை மன்னர்.  படம் வறுமையின் நிறம் சிவப்பு. 

22.6.18

வெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... என்ன வேகமோ... தன்னை மீறுமோ


1983 இல் அல்லது 1979 இல் உருவான பாடலாய் இருக்கவேண்டும்.   வெளி வராத  திரைப்படம் மலர்களிலே அவள் மல்லிகை.  இசை கங்கை அமரன் என்கிறது இணையம். பாடல் எழுதியது யார் என்று தெரியவில்லை.​  

8.6.18

வெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ஆ ஹ ஹா ஹா... ஏ ஹே ஹா ஹ ஹா ஹா...


ஏகாந்தன் ஸார் எந்தப்பாடல் போட்டாலும் வரிகள் சுமார்...  வரிகள் சுமார் என்கிறார்.  எனவே இந்த வாரம் வரிகளே / வார்த்தைகளே இல்லாமல் ஒரு பாடல்! 

1.6.18

வெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது


   நடிகை ராதிகா தயாரிப்பில், பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1985 இல் வெளிவந்த படம்.  PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு, இளையராஜா இசை, லெனின் எடிட்டிங் என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.   PC க்கு இதன் பின்னர்தான் நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்தனவாம். 

11.5.18

வெள்ளி வீடியோ 180511 : தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்



     'ஒரு பாடலைப் பல ராகத்தில் உனைப்பார்த்துப் பாடினேன்' என்றொரு எஸ் பி பி பாடல் உண்டு.  அதையும் ஒருநாள் பகிர்கிறேன்!  ஆனால் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு பாடலை வெவ்வேறு ராகங்களில் கேட்கப் போகிறோம்!  வெவ்வேறு திரைப்படங்களில் அதே பாடல்!

16.2.18

வெள்ளி வீடியோ 180216 : ஒன்றை விட்டு ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே


   சச்சின் டெண்டுல்கர் விளையாடும் புயல் விளையாட்டில் அவருடன் விளையாடிய கங்குலியின் ஆட்டமோ, டிராவிடின் ஆட்டமோ கண்ணில், கவனத்தில் படாமல் சென்றுவிடும் பார்த்திருக்கிறீர்களா?  உண்மையில் அதுவும் சிறப்பான விளையாட்டாய்த்தான் இருக்கும்.  ஆனால் இந்தப் புயலில் அது காணாமல் போயிருக்கும்.  

2.2.18

வெள்ளி வீடியோ 18022018 : விரியும் பூக்கள் பாணங்கள் ; விசிறி ஆகும் நாணல்கள்


​     பாடலுக்கேற்ற சூழலை இசையிலேயே கொண்டு வர முடியுமா?  முடியும் என்று பலமுறை நிரூபித்தவர் இளையராஜா.  இந்தப் பாடலும் அதில் ஒன்று.   இசையிலேயே காட்சிகளை உணர வைக்கிறார் இசைஞானி.