சென்ற வார பதிவில், பேயாரின் பதில்கள் மற்றும் PAC analysis பற்றிய கருத்துகள் பெரும்பான்மையாக இடம் பெற்றிருந்தன. பேயார் பதில்களை ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இரசிக்கவில்லை என்று தோன்றுகிறது. மேலும் பேய்கள் பௌர்ணமி, கிரகணம் போன்ற நாட்களிலும், ஆடி மாதம் + அம்மன் திருவிழா காலங்களிலும் உலக சஞ்சாரம் செய்வதில்லை. சென்ற பதிவில் கீதா ரெங்கன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பேய் திரும்ப சஞ்சாரம் பண்ண வரும்போது பதில்கள் அளிக்கிறதா என்று பார்ப்போம்.
இப்போதைக்குத் தொங்கலில் சில கேள்விகள்!
கீதா ரெங்கன் :
அடர்த்தியான மரம் ஒன்னு ஃபிக்ஸ் பண்ணி வைச்சுட வேண்டியதுதான். பேயாரே ரொம்பப காஸ்ட்லியோ?!!!! ரியல் மர்ரேட் எப்படி அங்கு?
அது சரி மரம் எல்லாம் பூமியிலதானே? அங்கு எப்படி மரம் எல்லாம்???!!
பேயாரே உங்களுக்கும் சாமி எல்லாம் உண்டா?! உங்க சாமி பெயர் என்னவோ? இங்கு மாதிரி எக்கச்சக்க சாமிகள் எல்லாம் உண்டா?
& பேயாரே பதில்கள் எப்போது வருவீரோ அப்போது அளியுங்கள்.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
பெர்ஃபெக்ஷனிஸ்ட்களிடம் அல்லது அப்படி நினைத்துக் கொள்கிறவர்களிடம் மாட்டிக்கொண்டு முழித்திருக்கிறீர்களா?
# இல்லை. ஆனால் மெட்டிக்குலஸ் பிளான்னர்ஸ் தயவில் சௌகரியங்களை அனுபவித்திருக்கிறேன்.
& பெர்ஃபெக்ஷனிஸ்ட்கள் கிட்டத்தட்ட வாட்டர் ஃபில்டரின் ஃபில்டர் யூனிட் போன்றவர்கள். தமிழில் சொன்னால், 'எல்லாவற்றிலும் கச்சிதம் வலியுறுத்துபவர்கள்' நீர் வடிகட்டியின் வடிகட்டி பாகத்தினைப் போன்றவர்கள். குடிக்கின்ற தண்ணீருக்கும், தொழிற்சாலைகளில் சில முக்கியமான செயல் முறைகளுக்கும் நல்ல வடிகட்டி தேவை.
ஆனால், தீயணைப்பு, வயலுக்கு செலுத்தவேண்டிய நீர் போன்ற தேவைகளுக்கு வடிகட்டி தேவை இல்லை.
நான் ஒரு perfectionist என்று சொல்லிக்கொள்பவர்களை இந்த வேகமான உலகில் சில இடங்களில், ஒரு கட்டத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதிக அளவில் அவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்தால் வேலைக்கு ஆகாது. ஒரு குழுவில் எல்லோரும் P_nist என்று இருந்தால், அந்தக் குழுவிலிருந்து output சைபர்தான்.
வாட்ஸ் அப் :
நெல்லைத்தமிழன்:
1. கனவுகளில் கலரில் கனவுகள் வந்துள்ளதா?
# கனவுகளில் வண்ணங்கள் காண முடியாது என்று அறிவியல் சொன்னாலும் நான் கனவில் பல வண்ணங்களைக் கண்டதாக எண்ணுகிறேன்.
& எனக்குக் கலர் கனவுகள் வருவதுண்டு. என் அப்பா கடைசி காலங்களில் நீலக் கலர் சட்டைதான் பெரும்பாலும் அணிந்திருந்தார். அடிக்கடி என் கனவில் வரும்பொழுது நீலக்கலர் சட்டையோடுதான் காணப்படுகிறார்.
2. சாப்பாட்டைப் பற்றியே பேசுபவர்கள், எழுதுபவர்கள், உண்ட உணவினால் திருப்தி அடையாதவர்களா?
# சாப்பாட்டைப் பற்றி என் உறவினர் நிறையப் பேசுவார் ஆனால் அளவாகத்தான் சாப்பிடுவார். எனவே திருப்தி அடையாததால்தான் அதிகம் பேச்சு எழுத்து என்பது சரியல்ல. பேச்சு ரசனையின் வெளிப்பாடு.
$ சாப்பாட்டைப் பற்றி அதிகம் பேசுவோர் சாப்பாட்டுக்கு முதலிடம் கொடுப்பவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
& உண்ட உணவினால் திருப்தி அடைந்தவர்களே, 'யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் ' எனும் உயர்ந்த நோக்கில் சாப்பாட்டைப் பற்றி பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் என்பதை உணர்ந்தவர்கள் ஊருக்கு உரைக்கும்போது அவரோடு சேர்ந்து நாமும் அனுபவிப்போமே!
எங்கள் திங்கக் கிழமைப் பதிவுகள், TOP 10 பதிவுகளில் அதிக இடத்தைப் பெற்றுள்ளன.
& உண்ட உணவினால் திருப்தி அடைந்தவர்களே, 'யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் ' எனும் உயர்ந்த நோக்கில் சாப்பாட்டைப் பற்றி பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம் என்பதை உணர்ந்தவர்கள் ஊருக்கு உரைக்கும்போது அவரோடு சேர்ந்து நாமும் அனுபவிப்போமே!
எங்கள் திங்கக் கிழமைப் பதிவுகள், TOP 10 பதிவுகளில் அதிக இடத்தைப் பெற்றுள்ளன.
3. சீரியல்கள் தொடர்ந்து பார்க்கும் வழக்கம் உள்ளவரா? அதனால் உங்கள் தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கா?
# சீரியல் பார்ப்பதில்லை.
& அதே, அதே !
$ நான் சீரியல் பார்ப்பதுண்டு, பார்க்கிறேன். ஆனால் சீரியலுக்கு முதலிடம் கொடுத்து மற்ற வேலைகளை தள்ளிப் போடுவதில்லை.
4. திருமணச் சடங்குகள் ஏட்டளவில் அர்த்தமில்லாமல் பின்பற்றுகிறோமா? திருமணத்தில் பெண்ணின் கையை பையனிடம் கொடுத்து, தாலி கட்டி, சப்தபதி செய்வதுதான் சடங்கு. அதற்கு முன்பு பெண்ணின் கையை, பையன் தொடக்கூடாது என்பது அர்த்தம். ஆனால் இப்போலாம் முந்திய நாள் ரிசப்ஷன் என்று எல்லாவற்றையும் கந்தர்கோளமாக்கிவிட்டு, சடங்கையும் பின்பற்றுவதில் அர்த்தம் இருக்கா?
$ திருமண சடங்குகள் முடிவில் வந்த முக்கியஸ்தர்களிடம் கையொப்பம் பெற்று முடிவில் registration உம் செய்தால் நன்று.
& சில மாற்றங்கள் காலத்திற்கு ஏற்ப மாறுபடத்தான் செய்யும். அதை ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவது நல்லது.
& சில மாற்றங்கள் காலத்திற்கு ஏற்ப மாறுபடத்தான் செய்யும். அதை ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவது நல்லது.
5. சமீபத்தில் பேய்க்கதைகள் பற்றி எழுதியிருந்தீர்கள். பிடி. சாமி போன்றவர்கள் எழுத்து. உங்களுக்குப் பிடித்த பேய்க்கதை மன்னர் தமிழில் யார்? உடனே பெண்கள் படத்தையே போடுவதால், சரோஜாதேவி என்று சொல்லிடாதீங்க.
ஆனை ஸு. குஞ்சிதபாதம் எழுதிய "நல்ல பிசாசு" (கலைமகள்) ரசித்துப் படித்தது.
& தமிழ்வாணன் எழுதிய சில மருமக்கதைகளை பதின்ம வயதுகளில் படித்து ரசித்துள்ளேன். பேய்க்கதை மன்னன் என்று சொல்லமுடியாது. ஆனால் அந்த சப்ஜெக்டில் ஓரளவு விஷயஞானத்துடன் எழுதியவர் அவர்தான் என்று நினைக்கிறேன். 'பேய் பேய்தான்' என்ற அவர் எழுதிய கதை கல்கண்டில் வெளியான நாட்களில் தொடர்ந்து படித்திருக்கிறேன்.
(+ பேய்க்கதை எல்லாம் சரோஜாதேவிக்குத் தெரியாது. இன்னும் பார்க்கப்போனால் அவருக்குத் தமிழே எழுதப் படிக்கத் தெரியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! அவர் பெயரில் வேறு யாரோ புத்தக உலகில் 'வாழ்'ந்திருக்கிறார்கள் என்று கேள்வி. )
பானுமதி வெங்கடேஸ்வரன் :
உங்களின் சின்ன சின்ன ஆசைகள் என்னென்ன? எல்லாமே நிறைவேறி விட்டனவா?
# யாராயினும் பல ஆசைகள் ( சின்னதும் பெரியதும் ) நிறைவேறியிருக்கும். நிறைவேறிய ஆசைகள் எளிதில் மறக்கப்படும். நிறைவேறாத ஆசைகள் உறுத்திக் கொண்டே இருக்கும்.
& எழுத்தாளர் ஆகவேண்டும், கதை, கவிதை, கட்டுரைகள் நிறைய எழுதி பெயர் வாங்கவேண்டும் என்பது பதின்ம வயதிலிருந்தே எனக்குள் வளர்ந்து வந்துகொண்டிருக்கும் ஆசை. எங்கள் ப்ளாக் மூலமாக அது கொஞ்சம் கொஞ்சம் நிறைவேறி வருகிறது.
மற்ற சின்னச்சின்ன ஆசைகள் நிறைவேறியவுடனேயே மறந்துபோயவிட்டன!
எங்கள் கேள்வி :
இவர்கள் யார்?
எங்கள் கேள்வி :
இவர்கள் யார்?
=======================================
இப்போ நம்முடைய PAC பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.
குழந்தை பிறந்து, வளரும்போது வீட்டிற்குள் வளர்கின்ற நாட்களில், அதன் உள்மனதில் குடிகொள்வது பெற்றோர் மனநிலை மட்டும் அல்ல, குழந்தை மனநிலையும்தான்.
பெற்றோரைப் பார்த்து, அவர்களின் சொற்கள், செயல்களைப் பார்த்து பெற்றோர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று ஆழ்மனதில் விவரங்கள் படிகின்றன. அதே நேரத்தில், தனக்கு என்ன நிகழ்கிறது, தான் உணரும் விஷயங்கள், தான் அடையும் மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம் போன்ற விஷயங்களை குழந்தையின் ஆழ்மனது குழந்தை மனநிலையாகப் படம்பிடித்து, உள்ளே வைத்துக்கொள்கின்றது.
முன் காலத்தில் வாழ்ந்த நம் மக்கள், சில கருத்துகளைக் கூறி, எழுதி வைத்திருக்கிறார்கள்.
a) குழந்தை வளர்ப்பில், பையனை அல்லது மகளை ஐந்து வயது வரை ராஜா அல்லது ராணியைப் போல வளர்க்கவேண்டும்.
b) பள்ளிக்கூடம் செல்லும் வயதுகளில் அவர்களைக் கண்டிப்போடு நடத்தவேண்டும். (கண்டிப்பது என்றால் அடிப்பது, உதைப்பது, கிள்ளுவது / குட்டுவது எல்லாம் இல்லை. நல்ல வழி எது என்பதை அவர்களுக்கு உறுதியாக நயமாக எடுத்துச் சொல்லி அவர்களை சரியான பாதையில் பயனிக்கச்சொல்வது)
c) தோளுக்கு மிஞ்சினால் தோழன். அதாவது மகனோ மகளோ நம்முடைய தோள் உயரத்திற்கு வளர்ந்துவிட்டார்கள் என்றால், அதற்குப்பின் அவர்களை நண்பனாக அல்லது நண்பியாக மட்டுமே நடத்தவேண்டும்.
a) இதில் முதல் விஷயமாகிய 0 to 5 வருடங்கள் ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலம் அடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில், ஒரு குழந்தை அதன் எதிர்காலத்தில் அது எப்படி இருக்கப்போகின்றதோ அந்த மனநிலைகள் (பெற்றோர் மனநிலை + குழந்தை மனநிலை) உருவாகும். அந்தக் காலகட்டத்தில், பெற்றோர் பொய் சொல்பவர்கள், குடிகாரர்கள், குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பவர்கள் என்றெல்லாம் குழந்தை முன்பு நடந்துகொண்டால், அந்தக் குழந்தை எதிர்காலத்தில் பொய் சொல்வது, மற்றவரைத் துன்புறுத்துவது எல்லாம் பெரியவர்கள் ஆனால் செய்வதில் தப்பு இல்லை என்று நம்புவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம். அந்தக் குழந்தைக்கு நல்ல ஆசிரியர் அல்லது நல்ல நண்பர்கள் அமைந்து, அவர்களை நல்ல வழியில் திருப்பினால்தான் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
வீட்டுக்குள் வளர்கின்ற காலகட்டத்தில், வீட்டுச் சூழ்நிலை கூட்டுக் குடும்பமாகவோ அல்லது, அப்பா அம்மா குழந்தையின் தேவைகளைக் கண்டு, அதற்கு அனுகூலமாகவோ அதன் சின்னச் சின்ன சந்தோஷங்களில் பங்கேற்று தானும் மகிழ்பவர்களாகவோ இருந்தால், அந்தக் குழந்தை எதிர்காலத்தில் சமூகத்தில் நல்ல மனிதனாக உருவாக சந்தர்ப்பங்கள் அதிகம்.
மீதியை அடுத்த வாரம் பார்ப்போம்.
========================================
இன்று நான் முதலில் வந்துவிட்டேன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
முதலில் வர நினைத்திருந்த தில்லையகத்து கீதா ரங்கன் - நான் முந்திக்கிட்டேனே
காலை வணக்கம் நெல்லை. கிரஹண உபயம்!!
நீக்குநான் கருத்து அடிச்சுட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருந்தேனாக்கும் அதான்
நீக்குகிரஹண உபயம்// ஹா ஹா ஹாஹ அ
கீதா
அனைவருக்கும் காலை வணக்கம்.
நீக்கு//ஒரு குழுவில் எல்லோரும் P_nist என்று இருந்தால், அந்தக் குழுவிலிருந்து output சைபர்தான். // - இந்த பதிலைத் தந்தவர் மிக அனுபவசாலியா இருக்கணும். ஒரு குழுவில் ஒருத்தர் (லீடிங்ல அல்லது சீனியர்ல) பெர்ஃபக்ஷனிஸ்டாக இருந்தால் போதும். ப்ராஜக்ட் நல்லாப் போகும். நல்ல பதில்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநெல்லை தமிழனோடு நானும் ஒத்துப்போகிறேன்.
நீக்குஇனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், தொடரும் அனைவருக்கும்
பதிலளிநீக்குஅது சரி பேயார் இன்று இல்லையா...ஹூம் பரவால்ல அவருக்கும் ரெஸ்ட் வேண்டுமே!
தொங்கறதே புளியமரத்துல இதுல மரம் எல்லாம் இல்லைனு வேற!!ஹா ஹா ஹாஹ் ஆஹ் ஆ..பேயாருக்கு அவர் மரம் எங்கேனும் பறி போய்டுமோனு பயம் ஏற்கனவே இந்த மனுஷங்க மரம் எல்லாம் வெட்டித் தள்ளுறாங்கன்னு...மனுஷனுக்குச் சொன்னா விட மாட்டானே
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குகேள்வி பதில்கள் ரசிக்கும்படி இருந்தன. பாராட்டுகள்.
பதிலளிநீக்குபெண்கள் படத்தைப் போட்டு இது யார்னு கேட்கறீங்க. என் அம்மா சொல்லியிருப்பது, அடுத்த பெண்களைத் தொட்டுப் பேசினாலோ இல்லை கூர்ந்து பார்த்தாலோ காது அறுந்துவிடும் என்று. அதனால் நான் இந்த விளையாட்டுக்கு வரலை.
குழந்தை வளர்ப்பு - ஏதோ தியரியை ஈஸியாக எழுதிடறீங்க. இது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதன்படி நடப்பது ரொம்ப ரொம்பக் கடினம். தோளுக்கு மிஞ்சினால் தோழன் - அது சரி..இருந்தாலும் அவங்களுக்கு நம்ம கான்ஸ்டண்ட் கைடன்ஸ் தேவைப்படுதே. வேலைக்குப் போக ஆரம்பிச்சாத்தான் அவங்க 'வளந்துட்டாங்க' என்பதை ஏற்றுக்கொள்ளத் தோணும். ஆனால் அப்போவுமே, செலவுல கவனமா இருக்கணும், காசு ஏன் முக்கியம் என்றெல்லாம் சொல்லத் தோன்றுமே.
என் அம்மா சொல்லியிருப்பது, அடுத்த பெண்களைத் தொட்டுப் பேசினாலோ இல்லை கூர்ந்து பார்த்தாலோ காது அறுந்துவிடும் என்று. அதனால் நான் இந்த விளையாட்டுக்கு வரலை.//
நீக்குஹா ஹா ஹா தமனாக்காவைத் தவிரனு சொல்லுங்க!! நெல்லை
கீதா
தமனாக்காவிய ரசித்துப் படம் போடுவதற்குச் சொன்னேன்
நீக்குகீதா
//தமனாக்காவைத் தவிரனு// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அக்காவாமே.... இது அநியாயமில்லையோ?
நீக்குஎன் சப்போர்ட்டுக்கு 'கஞ்சி குடித்த பிறகு வரும்' ஆட்கள் வருவாங்களா? தெரியலையே. கேஜிஜி சார் சப்போர்ட் பண்ணுவார்னு நம்பமுடியாது.
நான் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கிறேன் நெ த வுக்கு!
நீக்குகௌ அண்ணா ஹா ஹா ஹா ஆமா உள்ள வந்தா அம்புட்டுத்தான் நெல்லைகிட்ட மாட்டிக்குவீங்க!!! உண்மைய சொல்லிட்டு போக வேண்டியதுதானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குகீதா
நெல்லை தமனாக்கா தான் அதுல இன்னா டவுட்டு!!
நீக்குகீதா
பானுக்காவின் கேள்வி பெர்ஃபெக்ஷனிஸ் பதில் சூப்பர்.
பதிலளிநீக்குமெட்டிகுலஸ் ப்ளானர்ஸ் அதற்கு அடுத்த பதிலும். கௌ அண்ணாவின் அல்லேக் பதிவு நினைவுக்கு வந்தது.
கீதா
நன்றி!
நீக்குகுழந்திய வளர்ப்பு பற்றியவை அருமை. ஆனால் யதார்த்தம் வேறு.
பதிலளிநீக்குபல சிக்கல்கள் எழும். இதில் சொல்லப்பட்டிருப்பது போல் செய்தாலுமே எல்லாக் குழந்தைகளும் ஒரே போல் வளர்வதில்லையே. ஒரே வீட்டில் வளரும் குழந்தைகள் கூட.
ஆனால் கருத்துகள் அனைத்தும் நல்ல கருத்துகள்.
கீதா
உண்மையில் பார்க்கப்போனால், இது குழந்தை வளர்ப்புப் பற்றிய பதிவு இல்லை. வளர்ந்த மனிதர்கள் மற்றவர்களுடன் சமூகத்தில் பழகும்போது, சுமுகமான transactions செய்து பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை வாழ சில அணுகுமுறைகள்.
நீக்குகௌ அண்ணா புரியுது நீங்க சொல்வது. இங்கு சொல்லப்பட்டிருக்கும் பாயின்ட்ஸ் (நான் வாசித்திருக்கிறேன். மீண்டும் வாசிக்க வேண்டும்..) அக்குழந்தைகள் வளர்வது வளரும் சூழ்நிலை என்றும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா..இச்சமூகத்தில் மனிதர்களாகும் போது....
நீக்குநான் வாசித்த போது அப்படியும் யோசித்ததுண்டு...
கீதா
அதேதான்.
நீக்குபடங்களைப் போட்டு இவர்கள் யார் என்கிறீர்கள் காலைவேளையில். இந்தக் குழந்தைகளெல்லாம் பிற்காலத்தில் நடிக, நடிகைகளாக எப்படி வந்தார்கள் பார்த்தீர்களா என்று அவர்களின் ‘வளர்ச்சிப் பாதையை’ எண்ணி வியக்கச் சொல்கிறீர்களாக்கும்? இதுதான் குழந்தை வளர்ப்பு அல்லது upbringing-ற்கு உதாரணங்களாகப் படுகிறதா இல்லை, தமிழர்களின் போதைகளில் ஒன்றான சினிமாவில் ஆழ்ந்திருப்பதில் சும்மா ஒரு ஆனந்தமா! (இவ்வளவு காலையில் நான் நுழைந்திருக்கக்கூடாதோ..)
பதிலளிநீக்குவாங்க... வாங்க...
நீக்குGood morning Friends. second picture Vaijayanthimala. other one with two plaids Latha MangEshkar.will come back.
நீக்குவாங்க வாங்க வல்லிம்மா...
நீக்குஇனிய காலை வணக்கம்.
ஏகாந்தன் சார்! ஆக அவர்கள் எல்லோரும் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் என்று கண்டுபிடித்துவிட்டீர்கள்!
நீக்கு// second picture Vaijayanthimala. other one with two plaids Latha MangEshkar.// வல்லிம்மா, சரியான பதில்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா..
நீக்குகாலை வணக்கம்!
நீக்குகாலங்கார்த்தாலே எழுந்துட்டாலும் இணையத்துக்கு வர முடியவில்லை! வந்திருக்கும் அனைவருக்கும், இனி வரப்போகும் நண்பர்களுக்கும் தினம் என்னை வரவேற்கும் துரைக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா... நல்வரவும், வணக்கமும்.
நீக்குநல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
நீக்குஇன்னிக்கு "நட்பேய்" வரும்னு எதிர்பார்த்து ஏமாந்துட்டேன்.
பதிலளிநீக்குபௌர்ணமைச்யாம் சுபதிதவ் ஏவங்குன விஷேஷான ..... என்று சொல்லிக்கொண்டே எல்லாம் ஓடிப்போயிடுச்சு போலிருக்கு. இன்று பேயார் யாராவது வந்திருந்தால் நெல்லைத்தமிழன் அவைகளை 'உண்டு/இல்லை' என்று பண்ணிவிடுவார் என்று தெரிந்து ஓடிவிட்டன.
நீக்குஎன்ன போங்க! பேயாரை நான் மட்டும் தான் எதிர்பார்க்கிறேன், வரவேற்கிறேன். அதனால் அதுக்குக் கொஞ்சம் வருத்தமாய் இருந்திருக்குமோ? பாவம்!
நீக்குஇரண்டு கீதாக்களும் பேயார் ரசிகைகள்தாம். ஆனால், எதிர்ப்பாளர்கள் அதிகம் பேர் உள்ளனரே! என்ன செய்வது! பார்ப்போம். பிறகு யாராவது மனம் மாறி அவைகளை வரவேற்கிறார்களா என்று.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குஆடி மாதம் அம்மன் உலா வரும் காலம் என்பதால் பேயார் எல்லாம் உலா வரமாட்டார்கள் சரிதான்.
பதிலளிநீக்குகேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது. கனவு கலரில் வருமே எனக்கும்.
குழந்தை வளர்ப்பு பற்றி சொன்னது அருமை.
அதுவும் கடைசி பாரா மிகவும் அருமை.
இரண்டாவது படம் வல்லி அக்கா சொல்லி விட்டார்கள்.
கடைசி படம் லதாமங்கேஸ்வர்
வணக்கம் வாழ்க வளமுடன்!
நீக்கு// இரண்டாவது படம் வல்லி அக்கா சொல்லி விட்டார்கள்.
நீக்குகடைசி படம் லதாமங்கேஸ்வர்//
சரிதான்.
நீக்கு/// ஆடி மாதம் அம்மன் உலா வரும் காலம் என்பதால் பேயார் எல்லாம் வரமாட்டார்கள்...///
நீக்குஅப்படியா!?...
ஸ்ரீ பத்ரகாளி அம்மனின் பரிவாரங்கள் யார் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்!?...
ஆ ! இப்படி எல்லாம் ஏதாவது சொல்லி என்னை பயமுறுத்தாதீர்கள்!
நீக்குமுதல் படம் காஜல் அகர்வால். கடைசி படம் லதா மங்கேஷ்கர்.
பதிலளிநீக்குமுதல் படத்தை முதலாக சரியாகச் சொல்லியிருப்பவர் நீங்கள்தான்.
நீக்குஅந்த ஆண் குழந்தை உன்னி கிருஷ்ணனா? அதற்கு கீழே ஹன்சிகா மோத்வானி?
பதிலளிநீக்குஉங்கள் யூகங்களில் இரண்டு சரி. இரண்டு தவறு.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம்...து செ சார்!
நீக்குபேய்க்கு நிறைய விசயங்கள் தெரியும் போலும்...
பதிலளிநீக்குஅதுதான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஞானப்பேய் போலிருக்கு!
நீக்குமுதல் படம் காஜல் அகர்வால்.
பதிலளிநீக்குமத்ததுக்கு எல்லாம் அப்புறம் வரேன்.
கீதா
கா அ சரி .
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் வழக்கம் போல அனைத்தும் அருமையாக உள்ளது. குழந்தைகள் வளர்ப்பு முறை பாடம் சிறப்பு. குழந்தைகளின் சின்ன வயது போட்டோக்கள் பிரபலமானவர்கள் என்ற ரீதியில் தெரிகிறது. ஆனால் நட்புகள் சொல்லி, நன்கு கவனித்து பார்க்கும் போது ஜாடை ஒரளவுக்கு அடையாளம் காட்டுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் மாலை வணக்கம்.
பதிலளிநீக்குபேயார் வந்து பதில் சொல்லாமலிருந்து விட்டாரே.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது,
பெற்றோரின் நடவடிக்கைகள் அவர்களிடம் பிரதிபலிப்பது கண்கூடான
விஷயம். மெச்சப்படுவதும் தெரியும், அவஸ்தைப் பட்டதும் தெரியும்.
பெண்குழந்தைகள் மிகப் பாதிக்கப் படுவார்கள். ஆண்
பிள்ளைகள். சமாளித்து வளர்வதையும் பார்த்திருக்கிறேன்.
இந்த மாறுபாடுகள் பாதிப்புகள் அவர்கள் குடும்பம் நடத்தும்போது வேறு மாதிரி வெளிப்படும்.
ஆம். உண்மைதான். குழந்தைப்பருவ ஆழ்மனப் பதிவுகள் சில அவர்களின் பிற்கால மாணவப் பருவத்தில் அவர்களின் சொந்த அனுபவங்கள் கற்றல் ஆகியவற்றால், மாறும். பூச்சாண்டி, சாமி கண்ணைக் குத்திடும் போன்ற சில நம்பிக்கைகள் பிற்பாடு மாறிவிடும். ஆனால் பல நம்பிக்கைகள் மாறுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்காமல் அப்படியே தங்கிவிடும். என் அப்பா தினப்படி பூஜை செய்துவந்தார். எங்களுக்கு சுலோகம் எல்லாம் சொல்லிக்கொடுத்தார். இன்றளவில் அவருடைய தெய்வநம்பிக்கை எனக்குள்ளும் வேரூன்றி உள்ளது. மாற்றுக் கருத்துகளை எங்கே படித்தாலும் கேட்டுக்கொள்வேன். ஆனால் உள்ளே இருக்கும் நம்பிக்கை எப்பொழுதும் அப்படியே மாறாமல் இருக்கின்றது.
நீக்குமாற்றுக் கருத்துக்களை எங்கே படித்திருக்கிறேன்..கேட்டிருக்கிறேன்..
நீக்குமதம் மாறும்படிக்கு வற்புறுத்தப்பட்டிருக்கிறேன்...
இதனாலெல்லாம் என்னுள்ளிருக்கும் சுடர் ஒளிகொண்டு பிரகாசிக்கிறது என்பதே உண்மை ..
ஆம், சரிதான். ஐந்து வயதுக்கு மேல், பதினெட்டு வயதுவரை நாம் நம்முடைய அனுபவங்களிலிருந்தும், கற்றுக்கொள்வதிலிருந்தும், பார்ப்பதையும், கேட்பதையும் இணைத்து அறிவுபூர்வமாக (உணர்வுபூர்வமாக அல்ல) சிந்தித்தும் நம்மை உருவாக்கிக்கொள்கிறோம்.
நீக்குஅனுபவங்கள், கற்றுக்கொண்டவை, பார்த்தவை, கேட்டவை என்றெல்லாம் external factorsகளை குறிப்பிடலாம்தான். ஆனால் சில in-built ஆகி கூடவே நம்மோடு இறங்கிவந்திருக்கின்றன, என்பதை கவனிக்காதிருக்கமுடியாது..
நீக்குஆம், உண்மைதான். ஜீன்ஸ் + DNA ?
நீக்குஇரண்டாவது வைஜயந்தி மாலா.
பதிலளிநீக்குகடைசி லதா மங்கேஷ்கர்.
ஆம். நீங்கள் சரியான பதிலை முன்பே பதிந்திருந்தீர்கள். அதற்கு பதில் அளித்ததாக நினைத்துக்கொண்டு, பதில் அளிக்காமல் விட்டுவிட்டேன் என்பதை இப்பொழுதுதான் உணர்ந்தேன். சாரி.
நீக்குகுழந்தை வளர்பு பற்றியது அருமை.
பதிலளிநீக்குநன்றி
நீக்கு