14.7.19

நகரத்துக்கு நடுவே அடர்காடு




 மழை விட்டும் தூவானம் விடவில்லை....மியூசியம் தொடர்கிறது 
...

வண்டிக்குள் வந்த பின் ஒரு கடைசி பார்வை

டான் போஸ்கோ சர்ச்சுடன் இணைந்த கல்லூரி

சென்ற வாரம் புரியாத அறிவிப்பு  இ...போது  கொஞ்சம் தெளிவு


கொட்டப்பட்ட குப்பையா இடிக்கப்பட்ட வீடா?
கேள்வி அப்பொழுதே பிறந்திருந்தால் கொஞ்சம் zoom பண்ணியிருப்போம்

இந்த அடர்ந்த கட்டடங்களும் காடுகளும் மலைப் பிரதேசங்களின் இயல்பு?

பச்சை வர்ணம் அடித்த கட்டடத்தில் ஒரு .....இல்லை இல்லை
இரு விசேஷங்கள்




சாய்ந்ததா? சாய்க்கப்பட்டதா?


இந்தக் கட்டடத்தின் முன்னே இருக்கும் சாம்பல் கலர் பகுதி என்ன?


முன்னரே பார்த்தது வேறு கோணத்தில்


மொட்டை மாடியில் ஒரு சதுர ஓட்டை. பக்கத்தில் ஒரு வின்ச் ?

இன்னொரு பார்வையாளர் ஒரு கட்டடத்தை உள்ளே இழுத்திருக்கிறார்


காரை அவ்வளவு அருகே தூக்கி வச்சிருப்பாங்களோ?
முதல் தளத்து சாளரங்களுக்கு அருகே என்ன அது?

மழைக்குப் பின் கழுவிவிட்டு பளிச் ..

மியூசியம் இருக்கும் mawlai பகுதிக்கும் ஷில்லாங் நகரத்துக்கு நடுவே அடர்காடு

செல்ஃபீ எடுத்தால் உடனே பார்த்து விடவேண்டும்
ஆனால் பேட்டரி?

ஸ்கை வாக் ..


42 கருத்துகள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இனிய மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம், தொடரும் அனைவருக்கும்

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்களில் சர்ச் படம் கவர்ந்தது.

அடர் காடு கட்டிடங்களுக்கு நடுவில் பசுமையாக அழகாக இருக்கிறது.

கீதா

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அந்த சாம்பல் நிறைத்தில் உயரமாக இருப்பது புகை போக்கியோ? அல்லது கழிவறைகளில் இருந்து ஒரு எக்சிட் குழாய் இருக்குமே அதுவோ..அப்படித்தான் இருக்கிறது...

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம்... வாங்க... வாங்க...

ஸ்ரீராம். சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஸார். வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ அந்த பிரகதீஸ்வரனை வேண்டுகிறேன்,

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பு துரை செல்வராஜு, அன்பு கீதா ரங்கன்,அன்பு ஸ்ரீராம் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஓஹோ. இன்று துரைக்கு பிறந்த நாளா.
அமோகமாக, ஆனந்தமாக, ஆரோக்கியத்துடன் இருக்க
மன்ம் நிறை ஆசிகள் மா.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

துரை அண்ணாவுக்குப் பிறந்த நாளா!!

அண்ணாவுக்கு எங்கள் எல்லோரது பிரார்த்தனைகளும்! இனிய வாழ்த்துகளுடன்!

கீதா

வல்லிசிம்ஹன் சொன்னது…

வண்ணக் கட்டிடங்களும்,நகரின் நடுவே பச்சைக் காடும் மிக அழகு. சாம்பல் நிறத்தில் இருப்பது

புகை போக்கி என்றே நினைக்கிறேன்.
Fireplace and its chimney.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.

KILLERGEE Devakottai சொன்னது…

படங்கள் ரசிக்க வைத்தன ஜி

நெல்லைத்தமிழன் சொன்னது…

துரை செல்வராஜு சாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

அனைவருக்கும் காலை வணக்கம்.

படங்கள் எப்போதும் போல் அருமை

Bhanumathy Venkateswaran சொன்னது…

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். துரை சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

படங்கள் நன்றாக இருக்கின்றன. நிறைய கேள்விகள், பதில்கள் கிடைத்ததா?

ஏகாந்தன் ! சொன்னது…

துரை சாருக்கு பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

கோமதி அரசு சொன்னது…

அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

புகைப்படங்கள் அருமை. அழகான கலர் கலரான கட்டிடங்கள் கண்களை கவர்கிறது. அடர்ந்த காடுகளுக்கிடையே கலர் வீடுகள் பார்க்க நன்றாக உள்ளது. பச்சை நிற வீடு தனித்துவமான பார்வையை கட்டிப் போடுகிறது.

ஒவ்வொரு படங்களுக்கும் தங்களது வார்த்தை விபரங்கள் அருமை. ரசித்தேன்.

எந்த புகைப்படம் எடுத்தாலும் உடனே பார்க்க வேண்டுமென தோன்றுவது இயல்புதானே.!

ஸ்கை வாக் படம் மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு சொன்னது…

சகோ துரைசெல்வராஜூ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
இறைவன் எல்லா நலங்களையும், வளங்களையும் அருள வேண்டுகிறேன்.

மாதேவி சொன்னது…

துரை செல்வராஜு அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்துகள்.

KILLERGEE Devakottai சொன்னது…

அன்பின் ஜி
தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

கோமதி அரசு சொன்னது…

அனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது.

//இந்தக் கட்டடத்தின் முன்னே இருக்கும் சாம்பல் கலர் பகுதி என்ன//

புகை கூண்டா?

காரை அவ்வளவு அருகே தூக்கி வச்சிருப்பாங்களோ?//
முதல் தளத்து சாளரங்களுக்கு அருகே என்ன அது?//

கார் தரை தளத்தில் தான் இருக்கிறது.
முதல் சாளரங்களுக்கு அருகே லைட் இருக்கிறது.

ஸ்கை வாக் .. நன்றாக இருக்கிறது.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் ஸ்ரீராம்,வல்லியம்மா,
கீதா,நெல்லை த்தமிழன், ஏகாந்தன் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் மகிழ்ச்சியும் நன்றியும்...

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் மகிழ்ச்சியும் நன்றியும்....

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்...

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்...

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் ஜி..
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படங்கள் அருமை...

துரை செல்வராஜூ சொன்னது…

அழகான படங்கள்..
இயல்பான தலைப்புகள்...

நேரில் கண்டு மகிழ எத்தனைக் காலம் ஆகுமோ!..

ஏகாந்தன் ! சொன்னது…

நகருக்கு நடுவே வனம் என்பது நமது City Planners சிந்திக்கவேண்டிய விஷயம்.
கான்க்ரீட் மலைகளுக்கு நடுவே பச்சைத்திட்டுகள் பரவசமான விஷயம்.
நமது நகரங்களைத் திட்டமிட்டு வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் இருக்கிறார்களா என்பதே பெருங்கேள்வி..

Geetha Sambasivam சொன்னது…

வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

துரைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எங்கள் இருவரின் ஆசிகள். அவருடைய பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து மன மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் புரிவான்!

Geetha Sambasivam சொன்னது…

நகரத்துக்கு நடுவே அடர்காடு அங்கே ஏற்படுத்தாமல் தானாக அமைந்திருக்கிறது இல்லையா? ஆனால் அம்பேரிக்காவில் குடியிருப்பு வளாகங்கள் கட்டும்போதே திட்டமிட்டு ஏரி, ஏரிக்கரை, அதை ஒட்டிய சின்னஞ்சிறு சோலைகள், குடியிருப்புகளில் இருந்து கொஞ்சம் தள்ளிக் காடுகள் என இருக்குமாறு பார்த்துக்கொள்கின்றனர். இதில் ஏரிகள், ஏரிக்கரைகள், சோலைகள் எல்லாம் மனிதர்களுடைய கட்டுமானத்தின் போதே எற்படுத்தி விடுகின்றனர். இதை எல்லாம் செய்யாமல் வீடுகள் கட்டுவதில்லை. வீடுகளையும் தெருவிலிருந்து உயரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். வீட்டு வாசலில் இருந்து தெருவுக்கு வரும் பாதை சரிவாக வரும். அந்தச் சரிவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அது முற்றிலும் மூடப்பட்டு ஆங்காங்கே தண்ணீர் போவதற்கான ஓட்டைகள் மட்டுமே தெரியும்! தண்ணீர் தேங்காமல் போவதே தெரியாமல் ஓடி விடும். எல்லாம் ஏரியைச் சென்று அடையும்படி அமைத்திருப்பார்கள். ஆகவே வருஷம் 365 நாட்களும் ஏரி நிறையத் தண்ணீர் இருக்கும். காடுகளை அழிப்பதில்லை. மரங்களை வெட்டுவதில்லை! ஆனால் மரங்கள் இறக்குமதி செய்கின்றார்கள் என நினைக்கிறேன். மரத்தை வெட்டினால் அபராதம் போடுவார்கள். ஒரு மரக்கன்றை நட்டு அது பெரியதாக ஆகும்வரை பராமரிப்புச் செலவு மரத்தை வெட்டியவர் செய்ய வேண்டும்.

Geetha Sambasivam சொன்னது…

மொட்டைமாடியில் இருபக்கங்களிலும் கையால் சுற்றும் உருளைகளும் அதன் பிடியும் தெரிகின்றன. அது எதற்கு என்பது தான் புரியவில்லை. புகை போக்கிகளும் உள்ளன. அந்த முதல் தளத்திலிருந்து கீழே இறங்கி இருப்பது சார்ப்புக்குப் போடப்படும் ப்ளாஸ்டிக் ஷீட் (கூரை) மாதிரி இருக்கு.

Geetha Sambasivam சொன்னது…

சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் பானல்கள் இருக்கின்றன. அதான் சாம்பல் கலரில் தெரிகிறது என நினைக்கிறேன். அங்கெல்லாம் சூரிய ஒளி அவ்வளவு கிடைக்குமா? இங்கே திருச்சி எனில் தினம் தினம் பல மெகாவாட் மின்சாரம் எடுக்கலாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவ்வளவு சூரிய ஒளி!

Geetha Sambasivam சொன்னது…

இத்தனை அடர்ந்த காடு இருப்பதால் நல்ல மழையும் இருக்கும். காட்டின் அழகும், நகரத்தின் சுத்தமும் கண்களுக்கு நிறைவு.

ஜீவி சொன்னது…

ஷில்லாங் -- பெயர் கூட அழகாகத் தான் இருக்கிறது!

மரங்கள் நிரம்பிய வனத்திற்கு நடுவே நகரங்களை அமைப்பது அதற்கேற்பவான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது என்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. முதலில் இயற்கையை நேசிக்கும் மனப்பாங்கு நம்மில் வளர வேண்டும். அமெரிக்கர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது.

Geetha Sambasivam சொன்னது…

உண்மை! இங்கெல்லாம் அரை கிரவுண்ட் நிலம் கிடைச்சால் அதில் எட்டுக் குடி இருப்புக்கள் கட்டிக் காசு பண்ணுவதைத் தான் பார்ப்பார்கள். இதிலே காட்டுக்கு, சோலைகளுக்கு, ஏரிகளுக்குனு நிலம் விட முடியுமா என்ன? இருக்கிற ஏரிகளை இன்னும் அழிச்சாகணுமே!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

படங்கள் அழகு. மேகாலயா அழகான மாநிலம்.

வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துமே ஒரு வித அழகு தான். தற்போது தான் அதிகமாக சுற்றுலா பயணிகள் அங்கே வருகிறார்கள். நாங்கள் சென்ற போது இந்த மாநிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை! ஒரே நாள் தான். மீண்டும் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் நின்று நிதானித்துப் பார்க்க வேண்டும்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

தஞ்சையம்பதி துரை செல்வராஜூ சாருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் எபி நண்பர்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன்! வாழி நலம் சூழ!

துரை செல்வராஜூ சொன்னது…

தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும்...

வாழ்க நலம்...