வியாழன், 18 ஜூலை, 2019

அட, போப்பா.. உனக்கு போட்டோ எடுக்கத் தெரியல ...காசியில் உத்தரவாகினியாகச் செல்லும் கங்கையில் நீராடினால் அதுவரை செய்த பாவங்கள் போய்விடுமாம்.  நான் ஏப்ரல் பதினொன்று, பனிரெண்டாம் தேதி வரை செய்த பாவங்களை கங்கையில் நீராடிக் கழுவிக்கொண்டேன்!  அப்புறம் செய்த பாவங்கள்தான் இனி கணக்கில்!!

கோமதி நதி - தாண்டிச் செல்லும் வழியில் 


காசி செல்லும் முன் இரவு உணவு சாப்பிட்ட இடம்...

தக்காளி சாதமும் (அதை அவர்கள் அப்படிதான் சொன்னார்கள்- சிவப்பு நிறமாயும் இருந்தது!) தயிர் சாதமும் சாப்பிட்டோம்.


கங்கையில் மரணமடைந்தால் நேரடியாக மோட்சம்தான் என்று நம்பப்படுவதால் இங்கு மரணமடைவதை மக்கள் விரும்புகிறார்கள்.  விஸ்வநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ள மணிகர்ணிகா 'காட்'டில்தான்  உடல்கள் எரிக்கப்படுகின்றன.  காசியைப் பொறுத்தவரை தீட்டு என்பது கிடையாது.  இங்கு இறந்தவர் உடலைப் பார்ப்பது கூட புண்ணியம் என்கிற கருத்து நிலவுகிறது.  இங்கிருந்து சாம்பல் எடுத்து சிவனுக்கு விடியற்காலை அபிஷேகம் நடக்குமாம்.  

எங்கள் வழிகாட்டி ராமு, அவரது தாயார் மரணம் அடைந்ததால் பாதியிலேயே சென்றபின் எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் காசி செல்லும் வழியில் எங்களுடன் இணைந்து கொண்டார்.  அறிமுகம் செய்துகொண்டார்.  பெயர் ரமேஷ் ஜம்புநாதன்.  தஞ்சாவூர்க்காரர்.


காசியின் கற்கள் எல்லாம் சிவலிங்கங்கள் என்று நம்பப்படுகிறது.  வருணை, அசி என்கிற இரண்டு நதிகள் இணையும் இடம் என்பதால் வாரணாசி என்று சொல்லப்படுகிறதாம்.  காசி என்று சொல்லபப்டுவதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.

காசியில் இறங்கிய உடனே எங்களை வரவேற்ற செல்லம்!

காசியில் நாங்கள் முதலில் தங்கிய இடம்.


இரவு தூங்கி காலை கங்கை நீராடலுக்கு கிளம்பியபோது தெருவில் இருந்த இன்னொரு செல்லம்.

காசியில் நான் இறங்கிய நாளிலும், அடுத்த நாளும் சென்னையில் ஒரு முக்கியமான அனுபவம் ஏற்பட்டது.  அது இன்னும் எங்களை பாதித்துக்கொண்டிருக்கிறது.  

நாங்கள் இங்கு துண்டி விநாயகர் ஆலயம், காலபைரவர் ஆலயம், விஸ்வநாதர் ஆலயம், அன்னபூரணி ஆலயம், பிந்து மாதவர் ஆலயம், துளசி மானஸ மந்திர்,  ஆஞ்சநேயர் ஆலயம், பிர்லா மந்திர் (இவற்றில் சில கயா சென்று வந்த பின் பார்த்தோம்) கௌடியம்மன் ஆலயம் போன்றவை பார்த்தோம்.  சாரநாத் பார்க்கவில்லை.  கயாவில் கூட புத்தர் சம்பந்தப்பட்ட எதையும் பார்க்கவில்லை.  ஸ்ராத்தம் செய்வதிலேயே நாள் சென்று விட்டது.

ஷிவாலா காட்டுக்கு நீராடச் சென்றோம்.  

கங்கை கண்ணில் தெரிகிறாள்.


இடப்புறமும் 


எதிரேயும் 

வலப்புறமுமாக ஆசை தீர ஃபோட்டோஸ்...


தனிச் சவாரியாகச் செல்ல எவ்வளவு ஆகும் என்று கேட்டபோது 4,500 ரூபாய் என்றார் அந்த படகுக்காரர்.  முப்பத்தைந்து பேர்கள் வரை ஏறிக் கொள்ளலாம்.


மேலே ஏறி செல்லும் படிக்கட்டுகள் 


காசியில் கோவில்களுக்குச் சென்றபோது அலைபேசி, கேமிராவுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி எடுத்து வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.  இத்தனைக்கும் காசி விஸ்வநாதர் கோவில், அன்னபூரணி கோவில் ஆகியவற்றில்தான் அனுமதி கிடையாது.  எப்படியோ பல இடங்களில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு பறிபோனது. 

கங்கையை கண்களுக்குள் நிறைத்துக் கொள்ளும் முயற்சி...


இங்குதான் நீராடினோம்.  கரையிலிருந்து கயிறு ஒரு ரவுண்ட் கட்டி வைத்திருக்கிறார்கள். அதைப்பிடித்துக்கொண்டு நீராடலாம்.  கயிறைப் பிடித்துக்கொண்டாலும் தண்ணீர் உள்ளே இழுத்தது.  முப்பதுரூபாய் போட்டோக்காரர்களிடம் சொல்லிப்போட்டோ எடுக்கச் சொல்லி விட்டு அவர்கள் சொன்னபடி கைகளைக்கூப்பி போஸ்கொடுத்ததும் அப்படியே முன்னால் கவிழ்ந்து மூழ்கப் பார்த்து, அப்புறம் சுதாரித்து நின்று போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டோம்!!


யாசகர்கள் நீக்கமற நிறைந்திருந்தார்கள்.


கங்கைக்கரைச் செல்லங்கள்!


அன்னபூரணி கோவிலில் தங்க கோபுரத்தையும், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கோவிலையும் பார்த்து பிரமித்தோம்.    காலபைரவர் கோவிலில் நைஸாக படம் எடுத்த நினைவு.    ஒரு இடத்தில் கல்கத்தா காளி என்றொரு சன்னதி இருந்தது.  அதை நெருங்கும்போதே அங்கிருந்தவர்களில் ஒருவர் என்னைநோக்கி வந்தார்.


கங்கைக் கரையில் நிற்கும் பரவச உணர்வு இன்னும் இன்னும் படம் எடுக்கத் தூண்டுகிறது.

அதுதான் மணிகர்ணிகா காட் என்று நினைவு 

செல்லம் ரெஸ்ட் எடுக்க தெரிவு செய்திருக்கும் இடம்!


எப்படி அங்கு ஏறினாயோ...  எப்படி இறங்குவாயோ!


கரையில் ஒன்று பத்து ரூபாய் என்று விற்கப்பட்டுக்கொண்டிருந்த சாவிக்கொத்துகள்...


கையில் ஏதோ பிரசாதம் தரப்போகிறார் என்று பார்த்தால் ஒரு சிறு துணியை என் மணிக்கட்டோடு சுற்றி  சில மந்திரங்கள் சொன்ன வண்ணம் என்னை சற்று உள்நோக்கி இழுத்தார்.  ஒன்றுமில்லை பயப்படாதீர்கள் என்றபடியே உள்ளே அழைத்துச் சென்று ஒரு காட்டன் புடைவை ஒன்றை எடுத்து (யார் வாங்கித் தந்ததோ) என் தோளைச் சுற்றிப் போர்த்தி,  'ஊர் சென்றதும் அதை மனைவிக்குக்கொடு'க்கச் சொன்னார். வேண்டாம் என்றாலும் விடவில்லை.  


அறைக்குத் திரும்பியதும் காலை உணவு 


இடையில் டீ குடித்த கடையில் விடாது வீணாகிக்கொண்டிருந்த தண்ணீர்...  எங்கள் பதற்றம் கடைக்காரரை அசைக்கவில்லை. சாதாரண வழிப்போக்கர்கள் சிலர் இந்தக் குழாயை எடுத்து அப்படியே வாய்க்கு நேராக நீட்டிப்பிடித்து தாகம் தனித்துச் சென்றதும் ஆச்சர்யம்.


காலையும் மதியமும் உள்ளூர்க்கோவில்களைச் சுற்றினோம். எந்தக்கோவில் எந்த விவரம் என்று நினைவுமில்லை, குறித்து வைத்துக்கொள்ளவும் நேரமில்லை. 


ஜீவி ஸார் முதலிலேயே அங்கு பாரதியார் வாழ்ந்த வீட்டுக்குப் போய்வரச் சொல்லி சொல்லியிருந்தார்.  போக முடியவில்லை.  அங்கு வழியில் பார்த்த பாரதியார் சிலை...
என் கை துணிச்சுருளோடு அவரிடம் மாட்டிக்கொண்டிருந்தது.  சில பல மந்திரங்களை உச்சரித்தபின் "எனக்குக் காசு வேண்டாம்... காளிக்கு காசு கொடு என்றர்.  பையில் கைவிட்டால் நூறு ரூபாயாக வந்தது.  அட, ஒரு பத்து, இருபது, என்று வராதோ என்று நினைத்தபோது அவர் உக்ரமானார்.  "இந்த மாதிரி சிறுதொகை எல்லாம் கொடுத்து காளியைக் கோபப்படுத்தக் கூடாது" என்றார்.  காளிக்கு வராத கோபம் எனக்கு வரத்தொடங்கியது.  அவர் கையை லேசாக முறுக்கி விடுவித்துக் கொண்டபோது அவர் என் தோளில் கை போடுவது போல வந்தார்.  என் கூட வந்த குழுவினர் இதுகாறும் நடந்தவைகளை வேடிக்கை பார்த்தபடி இருந்தவர்கள் சற்றே முன்னேறி, "ஸ்ரீராம்.." என்று உரத்துக்கு குரல் கொடுத்து கைகாட்டியபடி முன்னேவர, இவர் என்னை விடுவித்தார்.  "முதலில் காட்டினாயே, அதைக்கொடு" என்றார்.   காளியை நினைத்தபடி அந்த நூறு ரூபாயை அவரிடம் தந்து விட்டு தோளில் போர்த்தியிருந்த புடைவையை எடுத்து அங்கேயே வைத்து விட்டு வெளியே வந்தேன்!


இது மாலை கங்கைக் காட்சி!


கீழிருந்து மேலும்....


மேலிருந்து (பாதிப்படியில்) கீழும்...


"இப்படியா போய் மாட்டுவே" என்று ஒரு மாமா சிரித்தார்.    இந்த அனுபவத்தால் பிந்து மாதவர் கோவில் சென்றபோது இரண்டாம் சன்னதியில் இருந்தவர் ஒரு சொம்பை எடுத்து என் கையில் கொடுத்து என்னையே அபிஷேகம் செய்யச் சொன்னபோது தயங்கிப் பின்வாங்கினேன்.  "ஆஹா...   நம்ம முகத்திலேயே இவர்களுக்கெல்லாம் தெரிகிறதுடா"  அவர் பார்வையாலேயே மிரட்டியதோடு வலுக்கட்டாயமாக என் கையில் சொம்பைத் திணித்து அருகிலிருந்த அண்டாவிலிருந்து நீர் மொள்ள சொன்னார்.  எடுத்ததும் கோத்ரம் சொல்லி, என் பெயர் சொல்லி ஸ்வாமி மேல் அபிஷேகம் செய்யச் சொன்னார்.  செய்துவிட்டு உடனே சொம்பை அவர் கையில் கொடுத்தேன்.  வாங்க மாட்டேன் என்றவர் மறுபடியும் நீர் எடுக்கச் சொன்னார்.  சொம்பைக் கீழே வைக்கப் போனேன்.  மறுபடியும் சொம்பு வலுக்கட்டாயமாக என் கையில் தரப்பட்டது.  என் மனைவி பெயர், மகன்கள் பெயர் எல்லாம் சொல்லக் சொல்லி அபிஷேகம் செய்யச் சொன்னார்.  அது முடிந்ததும் அவசரமாக அடுத்து நின்றவர் கையில் சொம்பைக் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனேன்.  என்னிடம் அவர் பணம் ஒன்றும் கேட்கவில்லை என்றாலும் அடுத்து அடுத்து செய்தவர்களிடம் பணம் கேட்டு அவர்களும் கொடுத்தார்கள்.

இந்த இடங்களுக்கு எல்லாம் கங்கையில் நீராடியதும் அங்கிருந்து உயரமான படிக்கட்டுகள் ஏறி சென்றோம்.  அவ்வளவு உயரமான படிகள் ஏறுவதும், இறங்குவதும் சற்று சிரமமாகவே இருந்தன.  இங்கு ஒன்றைச் சொல்லவேண்டும்.  சுமார் 90 வயது சொல்லக் கூடிய ஒரு பெண்மணி இத்தனை படிகளையும் மிகவும் சிரமப்பட்டு உட்கார்ந்தவாறாவது ஏறி இறங்கி வந்து கொண்டிருந்தது  நெகிழ்ச்சியாகவும்,எனக்கெல்லாம் உத்வேகம் தெரிவதாகவும் இருந்தது.  மேலே சென்றதும் வரிசையாக கோவில்கள் விஜயம்.  அங்கு மிகவும் குறுகலான தெருக்கள் என்று சொல்ல முடியாதவாறு சந்துகள் வழியே ஒவ்வொரு கோவிலாய் சென்றோம்.  வழியில் பெரிய பெரிய மாடுகள் வழிமறித்தவாறு மிரட்டும் வகையில் நின்றுகொண்டிருந்தாலும் ஒன்றும் செய்யவில்லை.  கங்கையில் நீராடியதும் மேலே ஏறும்போது வலது கால் விரல் கல் மோதி பெரிதாக வீங்கிக்கொண்டு நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன்.  அது இரண்டு நாட்களுக்கு நீடித்தது.  கொண்டுசென்ற வலிநிவாரணி சாப்பிட்டும் சிறிதளவே குணம் தெரிந்தது.

மலைக்கோவில் சுற்று முடித்துக்கொண்டு கங்கா ஆரத்தி நடக்கும் இடத்துக்கு வந்தோம். மறக்க முடியாத அற்புதக் காட்சி. நின்று( படகில் உட்கார்ந்து)   அப்புறம் அறைக்குத் திரும்பினோம்.  இரவே கிளம்பி விட்டோம் என்று தெரிகிறது.  ஆதாரம் கீழேயுள்ள புகைப்படம்.  இரவு உணவு முடித்த கடையில் கட்டப்பட்டிருந்த கோப நண்பன்.
கயா நோக்கிய பயணத்தில் சாப்பிட்ட இடம்.  இடம்தான் பிடிப்போமே தவிர, உணவு இவர்கள் தயார் செய்து கையில் கொண்டு வந்திருப்பதுதான்.  சிலர் அந்தக் கடையில் போடப்பட்டுக் கொண்டிருந்த ரோட்டி சப்ஜி சாப்பிட்டார்கள்!

இந்த வாரமே முடித்து விடுவோம் ன்று நினைத்திருந்தேன்.  இதுவே நீண்டு விட்டது.  அடுத்த இதழில்...   ச்ச்ச்சே...  அடுத்த வாரம் முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்.  எனக்கே போர் அடித்து விட்டது.  பாவம் நீங்கள்.


============================================================================================================

இந்த வாரத்தோடு சுகி சிவம் பகுதியும் முடிவுக்கு வருகிறது.  இவ்வளவுதான் எடுத்து வைத்திருந்தேன்!  இவர் சொல்லியிருக்கும் இந்தக் கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை!=====================================================================================================2014 இல் தாராசுரம், தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் என்று சுற்றி, க மா தேவி சென்றுவதபோது எடுத்த படம்.தாண்டிச் சென்றவரை போட்டோ எடுத்துக்கொண்டு இப்படி எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.  நான் ஆங்காங்கே நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தது அவருக்கு அப்போது சற்றே பொறுமை போயிருந்தது!


===================================================================================================

சில சமயங்களில் இயற்கையான நம் சில இயல்புகளால் அடுத்தவர்களை நாம் கவர்கிறோம்...!


=================================================================================================

157 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாழ்க நலம். வாங்க... வாங்க...

   நீக்கு
  2. அன்பு ஸ்ரீராம், அன்பு துரை இருவருக்கும் இனிய காலை வணக்கம். இனி வரப் போகிறவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸோஓஓஓஓஓஓஓஓலாங்க். ஸ்ரீராம் படித்து விட்டு வருகிறேன்.படங்கள் இனிமை.

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா.... இனிய காலை வணக்கம்.

   அம்புட்டு நீளமா? O M G...

   நீக்கு
  4. வல்லிம்மா வாங்க இனிய மாலை வணக்கம்.

   அம்மா படங்கள் தான் நிறைத்திருக்கிறது!

   எழுத்துகள் குறைவாகத்தானே இருக்கிறது!!!!!!!!!!!!!!!!! (ஓ அது கீதாவுக்கு அப்படித்தான் தெரியுமோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹிஹிஹிஹி)

   கீதா

   நீக்கு
  5. ஹா... ஹா... ஹா...

   அப்படியொண்ணு இருக்கோ!

   நீக்கு
 2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

  மகன் சொன்னதோ ? தலைப்பு!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொன்னவர் ஒரு மகன்தான்... எனக்கல்ல...!!! அவர் தந்தைக்கு.. ஆனால் அவர் சொல்வதாக நான் கற்பனைதான் செய்திருக்கிறேன்...

   இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   நீக்கு
 3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 4. அன்பின் ஸ்ரீராம்..
  கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களையும் வரவேற்று, நீங்கள் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்.

   நீக்கு
  2. காந்திஜி,
   பஞ்சை எடுத்து நூற்ற கதை தெரியாது. குண்டூசி எடுத்துச் சட்டையில் குத்திக் கொண்ட சிறுவன். ஆமாம் அப்போதெல்லாம் எல்லாமே உதவும். நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. ஆமாம் வல்லிம்மா... அது சரி... ரொம்ப நீளம் என்று ப க இப்போது வாசிக்கவில்லையா?

   நீக்கு
  4. வாசிக்காமல் இருப்பேனா மா. தமாஷுக்கு சொன்னேன்.
   நல்ல பதிவு. இன்னும் நாலு வாரமாவது எழுதுங்கள் . உங்கள்
   வழிதான் இவ்வளவு விவரமாகப் படிக்கிறேன் மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

   நீக்கு
  5. நன்றி அம்மா. முடிந்தவரை எழுதுகிறேன்.

   நீக்கு
 5. நானுந்தான் பயனுள்ள பொருள் எதுவும் கீழே கிடந்தால் எடுப்பேன் - சிறு வயதில்..

  உனக்குச் சொந்தமல்லாத எதையும் கீழே கிடந்து எடுக்காதே... - என்று சொல்லப்பட்டது...

  இதெல்லாம் பத்திரிக்கையில் வராதே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா.. ஹா... அதிர்ஷ்டங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதல்ல துரை செல்வராஜூ ஸார்...!!

   நீக்கு
  2. படுத்தால் தூக்கம் வருகின்றது..
   நினைத்தால் நலம் கூடுகின்றது...

   இதல்லவோ அதிர்ஷ்டம்!...

   நீக்கு
  3. சமீப காலமாக இதில் எனக்கு தடங்கல் இருக்கிறது துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
 6. நான் ஏப்ரல் பதினொன்று, பனிரெண்டாம் தேதி வரை செய்த பாவங்களை கங்கையில் நீராடிக் கழுவிக்கொண்டேன்! அப்புறம் செய்த பாவங்கள்தான் இனி கணக்கில்!!//

  ஹா ஹா ஹாஹ் ஆ...ரசித்த வரி...அதாவது பாவங்களைப் பற்றி அல்ல நீங்கள் சொன்ன விதத்தை!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னே போனவர் சற்றே திரும்பி உங்களைக் கேள்வி கேட்டிருந்தால்
   என்ன சொல்லி இருப்பீர்கள்.யோசிக்கிறேன். சுவையான கற்பனை.

   நீக்கு
  2. அவர் எனக்காகக் காத்திருந்து பார்த்து விட்டு பொறுமையில்லாமல் செல்கிறார் மா... அவர் என் மாமா!

   நீக்கு
  3. காளி பக்தர் இப்படி மிரட்டி இருக்கிறாரே.
   அனியாயமாக இருக்கிறதே. பார்த்த இடமெல்லாம் பைரவரைத் தரிசித்திருக்கிறீர்கள்.
   அதுவும் மாடியில் சிங்கம் போல பைரவர் படுத்திருப்பது
   வேடிக்கை.

   நீக்கு
  4. காலி ச்சே... காளி பக்தர் அல்ல அவர்.. அங்கிருந்த பண்டிட் எனப்படும் அர்ச்சகர்... அது காசி மண் செய்யும் மாயம்!

   நீக்கு
 7. கோமதி அழகுதான்! எந்த நேரத்திலும்!

  காசியில் உங்களை வரவேற்ற அந்தச் செல்லம் மனதைக் கவர்ந்தது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீருள்ள ஆறுகள் எதுவுமே, எப்பவுமே அழகு! இல்லையா கீதா?

   செல்லங்களுக்கு எப்பவுமே அழகு ஜாஸ்தி!

   நீக்கு
  2. ஆமாம் ஆமாம் ஆமாம் ஸ்ரீராம் ஆறுகள் அனைத்துமே (நீருடன்) அழகோ அழகுதான்! எந்த நேரத்திலும் அழகாக இருப்பார்கள் பொறாமைப்பட வைப்பார்கள்!

   கீதா

   நீக்கு
 8. >>> நான் ஏப்ரல் பதினொன்று, பனிரெண்டாம் தேதி வரை செய்த பாவங்களை கங்கையில் நீராடிக் கழுவிக்கொண்டேன்! அப்புறம் செய்த பாவங்கள்தான் இனி கணக்கில்!!..<<<

  முதல் முறை முங்கி எழுந்ததும் தான்
  கங்கை எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விடுகின்றாளே - பாவ செய்யத் தூண்டும் மூலகாரணிகள் உள்பட!..

  அப்புறம் எங்கிருந்து மீண்டும் பாவம் செய்யத் தோன்றும்!..

  நம்முடையது என்று மனம் மீண்டும் அதைத் தேடி எடுத்துக் கொள்ளுமோ!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிந்து செய்யும் பாவம், அறியாமல் செய்யும் பாவம்...

   புழு பூச்சிகளைக் கூட மிதிக்கக் கூடாது என்று மயிலிறகால் தாங்கள் நடக்கும் பாதையைஒதுக்கிக்கொண்டே போகும் ஜைனத் துறவிகள் நினைவுக்கு வருகிறார்கள் துரை ஸார்.

   நீக்கு
  2. >>> புழு பூச்சிகளைக் கூட மிதிக்கக் கூடாது..<<<

   நம்முடைய தர்மம் வேறாயிற்றே!...

   மனதைக் கடக்க இயலாதா!..

   இதெல்லாம் அப்புறமாக வைத்துக் கொள்ளலாம்.. இங்கு மணி நான்காயிற்று..
   குளித்து விட்டு வேலைக்குக் கிளம்ப வேண்டும்!..

   நீக்கு
  3. //மனதைக் கடக்க இயலாதா!..//

   முடியுமா? இன்னும் பிறக்காதவர்களாலும், இறப்படைந்தவர்களாலும் முடியலாம்.

   கடந்தவர் யார்? அதை எப்படி அறிவது? உண்மையறியும் சோதனைகள் கூட சொல்லாதே...

   நீக்கு
 9. கங்கையில் மூழ்கிக் கரையேறினால்
  மீண்டும் ஒரு புதிய பிறப்பு என்கிறார்கள்...

  புதிய பிறப்பிலும் கர்மாக்கள் தொடர்கின்றன போலும்!..

  வந்த வினையும் வருகின்ற வல்வினையும்!.. - இது சிந்திக்கத் தக்கது..

  முருகா எல்லாரையும் காப்பாற்றி வையப்பா!..

  இருள் சேர் இருவினையும் சேராதிருக்கும்படிக்கு என்றைக்குப் பொருள் புரியுமோ?.. தெரியலை...

  இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவங்கள் செய்யத்தூண்டும் நினைவுகளையும் கங்கை அடித்துக்கொண்டு போய்விட்டால்? சுகமான கற்பனை.

   ஆனால் போர் அடித்து விடுமோ?!! கொஞ்சம் பாவங்களும் தேவைதானோ?!!

   நீக்கு
 10. புழு பூச்சிகளைக் கூட மிதிக்கக் கூடாது.. என்றாலும்
  பாதையில் மண்டிக் கிடக்கும் முள் செடிகளைக் களைவதும் பாவம் தானே...
  அப்படியானால் அப்பர் ஸ்வாமிகளை என்னென்று சொல்வது?..

  அடேங்கப்பா!... இந்த விஷயத்தில் ரொம்பவும் ஆழத்துக்குப் போனால்
  மீண்டு வருவது கடினம்.. நாம ஓர் ஓரமாக உட்கார்ந்து நீராடி விட்டு ஓடி விடுவோம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நாம ஓர் ஓரமாக உட்கார்ந்து நீராடி விட்டு ஓடி விடுவோம்!... //

   ஹா... ஹா.. ஹா... அதைத்தான் நான் செய்தேன்!

   நீக்கு
  2. /பாதையில் மண்டிக் கிடக்கும் முள் செடிகளைக் களைவதும் பாவம் தானே.// - தர்மம் மிக சூட்சுமமானது. அதனை விளக்குவது கடினம். எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டால், அந்த ஆத்மாவுக்கு மறு பிறப்புக்குக் காரணம் குறைவு.

   ஆனால் எதையும் கடமையாகக் கருதிச் செய்து, அதன் நல்லது கெட்டதுகளில் தனக்குப் பங்கில்லை என்று உறுதியான மனத்துடன் இருந்தால் (இருந்தால்), எந்தப் பாவமும் புண்ணியமும் நம்மை அண்டாது. மானைத் துரத்திவரும் பசிமிகுந்த வேடன். மான் எந்தத் திசையில் சென்றது என்று வழியில் இருந்த முனிவனிடம் கேட்டால், முனிவன் என்ன பதில் சொல்லணும்? இதை வைத்து ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன் எ.பிக்கு.

   நீக்கு
 11. >>> ஆனால் போர் அடித்து விடுமோ?!! கொஞ்சம் பாவங்களும் தேவைதானோ?!!..<<<

  ஆகா.. இது தான் சரி!..

  அதனால் தானே விஸ்வாமித்ரரின் முன்பாக மேனகை ஆடியது!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... அவ்வப்போது கொஞ்சம் பாவங்கள் செய்து அவ்வப்போது போய் நீராடி நீக்கிக்கொண்டால் ஆச்சு!பாருங்கள் இப்படிச் சொல்வதிலேயே நான் ஒரு மைக்ரான் பாவம் சேர்த்து விட்டேன்!!!

   நீக்கு
  2. கங்கையின் படங்கள் அத்தனையும் அழகு. ஒரு நூறு படிகள் இருக்குமா.
   90 வயதுக் கிழவி இறங்கி ஏறினாரா. எத்தனை பக்தி.

   படிகளைப் பார்க்கும் போதே மலைப்பாக இருக்கிறது.
   கங்கையில் மூழ்க வேண்டுமானால் போய்த்தான் ஆக வேண்டும் .உங்கள் தயவால்,பல விதமாகக் கங்கையைப் பார்த்தாச்சு.
   அடுத்த ஜன்மத்திலாவது நிறைவேறுகிறதா என்று பார்க்கலாம்.

   நீக்கு
  3. அம்மா... நீங்கள் இங்கு சென்றதில்லையா? என்ன ஆச்சர்யம்? சீக்கிரம் அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைக்கட்டும் அம்மா.

   நீக்கு
  4. //நான் ஒரு மைக்ரான் பாவம் சேர்த்து விட்டேன்// - ஒரு மைக்ரான் இல்லை. ஸ்ரீராம் போன்ற, காசி யாத்திரை செய்தவர்களே சொல்லிவிட்டார்கள். அதனால் பாவங்கள் நிறையச் செய்து கடைசியில் கங்கைக்குப் போய் நீராடி பாவத்தைத் தொலைக்கலாம் என்று நினைத்துப் பாவம் செய்பவர்களின் பாவத்தில் பங்கு வராதா? ஹா ஹா

   நீக்கு
  5. அதுவும் வரலாம்! ஆனால் அதை நம்பி நிறைய பாவம் செய்துவிட்டு கங்கைக்கு போகமுடியாமல் போனால்? :))

   நீக்கு
 12. பாவங்கள் எல்லாம் தீரும். பரமனடி காட்டும் பாவன கங்கை.
  ஆரத்தியின் அழகு தொலைக் காட்சியில் பார்த்தது.
  அந்த ஜோதி வெளிச்சத்தில் அப்படியே கரைந்து விடமாட்டோமா என்று தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேனகா ஆடினதால் நம் இந்தியாவுக்கு பரதன் கிடைத்தான்.
   பாவங்கள் சிலசமயம் பரிசும் தரும்.

   நீக்கு
  2. இப்படி உற்சாகப்படுத்தினால்தான் நல்ல இருக்கு. இயல்பா வாழமுடியும் பாருங்க!

   நீக்கு
  3. அம்மா அவர்களின் கருத்து ஏற்புடையது...

   நீக்கு
  4. //..பாவங்கள் சிலசமயம் பரிசும் தரும்//

   இது படுபாவிகளுக்குப் படுசுகத்தைத் தரும் !

   நீக்கு
  5. ஆம். அந்தக் கேள்வி எனக்குள் உண்டு ஏகாந்தன் ஸார்.

   நீக்கு
 13. காசி பயண அனுபவம் கண்டேன். எங்களது வட இந்தியப் பயணத்தை நினைவுபடுத்தியது இந்த பயணம்.

  பதிலளிநீக்கு
 14. இந்த வாரமே முடித்து விடுவோம் ன்று நினைத்திருந்தேன். இதுவே நீண்டு விட்டது. அடுத்த இதழில்... ச்ச்ச்சே... அடுத்த வாரம் முடித்து விடுவேன் என்று நம்புகிறேன். எனக்கே போர் அடித்து விட்டது. பாவம் நீங்கள்.//Please do not stop writing PAYANAK KATTURAI.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிம்மா...

   உங்கள் ஆதரவு என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனாலும் (இந்தப்) பயணம் முடிந்து விடுமே...!!

   நீக்கு
  2. பயணம் தொடர்ந்தால்.. கதவு திறக்கும்
   கதவு திறந்தால்.. காட்சி கிடைக்கும் !

   - உங்களுக்காகத்தான் சொல்லிட்டுப் போனாரோ ஒருத்தர் !

   நீக்கு
  3. கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும் ஏகாந்தன் ஸார்...

   நீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 16. அனைத்து படங்களும், விவரங்களும் நன்றாக இருக்கிறது. சில படங்கள் முகநூலில் பார்த்தேன் என்று நினைக்கிறேன்.

  1.வழிப்போக்கர்கள் சிலர் இந்தக் குழாயை எடுத்து அப்படியே வாய்க்கு நேராக நீட்டிப்பிடித்து தாகம் தனித்துச் சென்றதும் ஆச்சர்யம்.
  2.எப்படி அங்கு ஏறினாயோ... எப்படி இறங்குவாயோ!

  3.உணவு முடித்த கடையில் கட்டப்பட்டிருந்த கோப நண்பன்.

  இவர்களை அங்கும் , இங்கும் பார்த்தேன்.
  காசி அனுபவங்கள் மகிழ்ச்சி, வேதனை எல்லாம் கொடுத்து இருக்கிறது.விஸ்வநாதன் தரிசனம் மகிழ்ச்சி, வலது கால்விரல் அடிபட்டு வீக்கம் வலி என்று வேதனை.

  காளி கோவில் பண்டாவிடம் மாட்டிக் கொண்டது. தோளில் சேலையை போட்டு பணம் பறிக்கும் தந்திரம். எத்தனை எத்தனை அனுபவங்கள் காசி பயணம் மறக்காது.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதி அக்கா... நினைவில் இருப்பதை எழுதி விட்டேன். அப்புறம் ஞாபகம் வந்தால் அதையும் பிறகு எழுதுகிறேன். ஆமாம், இவற்றை எல்லாம் பேஸ்புக்கிலும் அப்போது கொஞ்சம் ஷேர் செய்திருந்தேன்.

   நீக்கு
 17. காசி அனுபவங்கள் - நன்று. அங்கே கொஞ்சம் ஏமாந்தால் போதும் காசு பிடுங்குவார்கள். நான் ஒவ்வொரு முறை செல்லும் போதும் ரொம்பவே ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் என்னுடன் வந்த கேரள நண்பர் ஒருவரிடம் 500 ரூபாய் வாங்கி விட்டார் ஒருவர்!

  படங்கள் - நன்று. அங்கே இரண்டு மூன்று நாட்கள் தங்கி எல்லா இடங்களிலும் காலாற நடக்க ஆசை உண்டு. ஆனால் ஒவ்வொரு பயணத்திலும் ஒரு சில மணி நேரங்கள் தான் அங்கே இருக்க முடிகிறது.

  பயணம் பற்றிய அடுத்த பகுதிக்கான காத்திருப்பில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வெங்கட். படங்கள் நன்று என்று சொல்லியிருப்பதற்கு நன்றி.

   நீக்கு
 18. பாரதியை பார்த்து விட்டீர்கள்.

  அந்த ஊரில் உள்ளவர்கள் எல்லாம் கங்கையில் குளித்துவிட்டு செம்பில் தண்ணீர் எடுத்து செல்வார்கள், மரத்தடி சாமிகளுக்கும், அவர்கள் வீட்டு முன் இருக்கும் சாமி சிலைகளுக்கும் அந்த நீரை விட்டு காதில் கை வைத்து சத்தம் கொடுப்பார்கள். பார்த்தீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லி இருப்பது போல காட்சி என் கண்ணில் படவில்லை அக்கா.

   நீக்கு
 19. //காளிக்கு வராத கோபம் எனக்கு வரத் தொடங்கியது//

  ஹா.. ஹா.. ஸூப்பர் ஜி

  காசியில் செத்தால் நேரடி மோட்சம்...

  இந்த பிராடுகளுக்குமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி.... எல்லோருக்கும்தான் போல! அல்லது அவர்கள் இன்னும் பிறந்து கர்மா கழிப்பார்களாயிருக்கும்!!!

   நீக்கு
 20. அந்த இன்னொரு செல்லம் யாரடா இது நம்மைப் படம் எடுக்கறது என்று திரும்பிப் பார்க்க முயற்சி?

  கங்கை என்ன அழகு!! பிரமிப்புதான் அதன் அளவைப் பார்த்தால்.

  ஸ்ரீராம் கயிறு பிடித்து இறங்கினாலும் உள்ளே இழுக்கும் தான் தண்ணீர் ஓட்டத்தின் கரன்ட் இல்லையா? அப்ப என்ன ஓட்டம் ஓடுகிறது கங்கை. பிரம்மபுத்திராவும் அப்படித்தான் இருக்குமாம்..
  கங்கை என்றாலே எனக்கு முதலில் முதலை நினைவுக்கு வரும். gharial இன முதலைகள்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ.... முதலையா? பிழைத்தேன்! சிப்ஸ் சாப்பிடுவது போல சாப்பிட்டிருக்கும்!

   பிணங்கள் மிதக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவை கண்ணில் படாதது ஆறுதல்.

   நீக்கு
 21. அவர்கள் சொன்னபடி கைகளைக்கூப்பி போஸ்கொடுத்ததும் அப்படியே முன்னால் கவிழ்ந்து மூழ்கப் பார்த்து அப்புறம் சுதாரித்து நின்று போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டோம்!!//

  ஆ!!!!!!!! ஹப்பா...அத்தனை வேகம் இல்லையா நீரின் ஆழம் அதிகமாயிற்றே. கம்பித் தடுப்பு எதுவும் இல்லை போல!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கம்பித்தடுப்பு இல்லை, கயிறு மட்டும்தான். மேலும் கீழே கால் வைக்கும் இடங்கள் சமதரை இல்லாமல் கூரான பாறைகள், கற்களாய் இருந்தது ஒரு கஷ்டம்.

   நீக்கு
 22. அடுத்த படத்துல யாரோ நீந்துவது போல இருக்கிறதே. நல்லா நீச்சல் தெரிந்தவர் போல!!!!

  கங்கைக்கரைச் செல்லங்கள் க்யூட்! முந்தைய படம் ஒன்றிலும் மேலே படிகளில் நிற்பது தெரிந்தது..லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅங்க் ஷாட்டில் செல்லங்கள்...

  இப்படி செல்லங்கள் மேலே மதில் மேலே ஏறி உட்காருவதை சமீபத்தில் பார்க்கிறேன் ஸ்ரீராம். நான் கூட இங்கு ஒன்று எடுத்து வைத்திருக்கிறேன்.

  இது ரொம்பவே உயரம் நீங்க போட்டிருப்பது. எப்படிப் பயமில்லாமல் உட்கார்கிறது. பொதுவா பூஸார்கள் உட்கார்வார்கள் அவர்களுக்கு அந்தப் பயம் கிடையாதே...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், பூனை போல மேலே உட்கார்ந்திருக்கிறதே என்று எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

   நீக்கு
 23. ஸ்ரீராம் நான் கேட்க நினைத்ததிய நீங்க அடுத்த படத்துல கேட்டிருக்கீங்க. எப்படி ஏறிச்சோ எப்படி இறங்கும்? அதைப் பார்த்ததும் கொஞ்சம் கவலை தொற்றிக் கொண்டது...

  அவர் எதற்கு உங்களை நோக்கி வந்தார் என்று கீழே வந்தால் கையில் துணி கட்டி...புடவை...அப்புறம் என்ன என்று கீழே போய்ப்ப் பார்ப்பதற்குள் பொங்கல்!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சம்பவத்துக்கு அப்புறம் ஒவ்வொரு சன்னதியிலிருந்தும் எங்களை நோக்கி பாசமாக வரும் யாரையும் நம்பவில்லை. எங்களைக்கண்டு அங்கு வந்திருந்த உள்ளூர் (?) பக்தர்கள் சிலர் 'சவுத் இந்தியன்ஸ்' என்றார்கள்!

   நீக்கு
 24. டீக்கடை என்று போட்டிருக்கும் படத்தில் குப்பை குப்பையாக இருக்கிறதே...

  என் கை துணிச்சுருளோடு அவரிடம் மாட்டிக்கொண்டிருந்தது. சில பல மந்திரங்களை உச்சரித்தபின் "எனக்குக் காசு வேண்டாம்... காளிக்கு காசு கொடு என்றர். பையில் கைவிட்டால் நூறு ரூபாயாக வந்தது. அட, ஒரு பத்து, இருபது, என்று வராதோ என்று நினைத்தபோது அவர் உக்ரமானார். "இந்த மாதிரி சிறுதொகை எல்லாம் கொடுத்து காளியைக் கோபப்படுத்தக் கூடாது" என்றார். காளிக்கு வராத கோபம் எனக்கு வரத்தொடங்கியது. //

  பின்னே வராதோ? இப்படி அடாவடியாகக் கையைப் பிடித்து இழுத்துச் சென்று புடவை அது இது என்று செய்து காளியின் மேல் பழியைப் போடும் மனிதர்கள்...

  என்ன இது இப்படி அவர் செய்கிறார். முதலிலேயே கூட வந்தவர்கள் உங்களை விடுவித்திருக்கலாம்...அருகில் வந்து என்ன என்று கேட்டு. சரி எப்படியோ கடைசியில் செஞ்சாங்களே...

  இதுவும் ப்ளாக்மெயில் கொள்ளை!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என்ன இது இப்படி அவர் செய்கிறார்.// - கயா ச்ராத்தத்தைப் பற்றி 1930களில் ஒருவர் எழுதியிருந்தார். பண்டாக்கள் செய்யும் அடாவடியும் அவர்களின் பேராசையையும், நமது செண்டிமெண்டை அவர்கள் உபயோகப்படுத்தி, தட்சணை தரவில்லை என்றால் யாத்திரை வீண் எனவும் பாவம் வந்து சேரும் எனவும் அடாவடி செய்கிறார்கள் என்று விளக்கமாக எழுதியிருந்தார்.

   நீக்கு
  2. //..பண்டாக்கள் செய்யும் அடாவடியும்..//

   பண்டத்தை அடைவதென்ன எளிதா? முதலில் பண்டாக்களைத் தாண்டவேண்டுமே..

   நீக்கு
  3. அது கைகழுவும் இடம் கீதா. அதுதான் குப்பை.

   வரும் பக்தர்களின் பக்தியை காசாக்குகிறார்கள்.

   நீக்கு
 25. கங்கை அழகி! புனிதம்! ஆனால் அவளைச் சுற்றி என்ன அக்கிரமங்கள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கையே புனிதம்தான். அதனைச் சுற்றி, அதற்குள் எத்தனை அக்கிரமங்கள் செய்கிறோம்.

   நீக்கு
  2. நெல்லை சொல்லியிருப்பதுவும் சரிதானே? அக்கிரமம் செய்ய தனி இடம் தேவையா என்ன?!!​

   நீக்கு
  3. சரிதான் நெல்லை அண்ட் ஸ்ரீராம் அக்கிரம் செய்ய தனி இடம் தேவை இல்லைதான். ஆனால் இந்த இடம் இத்தனை புனிதம் என்று போற்றப்படுவதால் சொன்னேன். பல கோயில்களில் மட்டும் என்னவா? அங்கும் கொள்ளைதானே! அதாவது புனிதம் என்று சொல்லப்படும் இடங்களிலும்!!

   கீதா

   நீக்கு
 26. கீழிருந்து மேலே மேலிருந்து கீழே படங்கள் அழகாக இருக்கின்றன. கங்கை படங்களும் சூப்பர் ஸ்ரீராம்

  மீதிக்கு அப்புறமா வருகிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலில் இருந்த வலிக்கு அந்த படிகள் பயத்தைக் கொடுத்தன. உட்கார்ந்து உட்கார்ந்து ஏறிக்கொண்டிருந்த அந்த பாட்டிதான் என் இன்ஸ்பிரேஷன்.

   நீக்கு
 27. ஸ்ரீராம் - படங்கள் அருமை. விவரமும் அருமை. 'வார விமர்சன'த்தில் வைத்துக்கொள்கிறேன் உங்க பயணக் கட்டுரைக்கான விமர்சனத்தை.

  1. குறிப்புகள் முழுவதும் வைத்திருக்கணும். நான் அப்படிச் செய்யாத போது, முதலில் கோவில் பெயரோ, இடத்தின் பெயரோ, தெருவின் பெயரோ..அதனை ஒரு படம் எடுத்து வைத்துக்கொள்வேன். எல்லாச் சாப்பாட்டையும் குறித்துக்கொள்வேன். இடத்தைப் பற்றி என் எண்ணத்தையும் குறித்துக்கொள்வேன்.
  2. பயணக் கட்டுரை முழுவது எழுதுவேன். பிறகுதான் பப்ளிஷ் பண்ண ஆரம்பிக்கணும். ஒரு வாரத்தில் இருக்கும் மூடு அடுத்த வாரத்தில் இருக்காது. பிஸியாயிட்டால் அந்த வாரம் ஒப்பேற்றுவோம். படங்களைப் பார்த்து நினைவுக்குக் கொண்டுவர மூடு இருக்காது. இது எல்லாம் மொத்தமாக அந்தப் பயணக் கட்டுரையைப் படிக்கும்போது தெரியும்.
  3. ஒவ்வொரு இடத்திலும் உங்கள் மனதில் உதித்தவற்றை எழுதலை. எழுதத் தெரிந்தவர்கள், விளக்கமா எழுதலையே என்று இருக்கு.
  4. டக் என்று (உங்களுக்கு) போரடித்து 'இன்றே கடைசி' நோட்டீஸ் கொடுக்காறீங்க. திருப்தி இல்லைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​வாங்க நெல்லை. பாராட்டுக்கு நன்றி.

   எல்லாம் செய்வதுதான் நெல்லை. ஆனாலும் சில படங்கள் எப்படி மறைந்தன என்று தெரியாமல் மறைந்தன. காசி சென்றபின் குறிப்புகள் எழுதக்கூட நேரமில்லை. சிலசமயம் பாசுக்கு வாட்ஸாப்பில் செய்திகளாக அனுப்பி சேமித்துக் கொண்டிருந்தேன். அதுவும் முடியாமல் போனது.

   /ஒவ்வொரு இடத்திலும் உங்கள் மனதில் உதித்தவற்றை எழுதலை. எழுதத் தெரிந்தவர்கள், விளக்கமா எழுதலையே என்று இருக்கு.//

   எழுதி இருக்கேனே நெல்லை.. மனதில் இருந்தவற்றைக் கூட குறித்து வைத்துக்கொண்டிருந்தால்தான் உண்டு.

   நீக்கு
 28. //அங்கு பாரதியார் வாழ்ந்த வீட்டுக்குப் போய்வரச் சொல்லி சொல்லியிருந்தார்// - குழுவோடு பயணம் மேற்கொள்ளும்போது, அதிலும் அந்த அந்த இடங்கள் முழுமையாகத் தெரியாதபோது, இது சாத்தியமே இல்லை. கோவிலுக்குச் செல்லும் வழி என்றாலும், இடையில் பிச்சுக்கிட்டு போக முடியாது. கோவில் தரிசனம் முடிந்தவுடன் சாப்பாடு அல்லது வேறு இடம் என்று இருந்தால், நம்மால் எங்கேயும் போக முடியாது.

  நானும் கரந்தை பள்ளியின் முகப்பு, அங்கிருந்த சிலை ஆகியவற்றை இரு முறை பார்த்துவிட்டேன். இறங்கி கரந்தை ஜெயக்குமார் சாரைப் பார்க்க வாய்ப்பு வரலை (ஏன்னா..ஷெடியூல் அப்படி)

  ஆகஸ்டில்கூட, கும்பகோணம் பகுதிக்குச் செல்றேன் (குழுவோட). அங்க பெரியகடை வீதியின் அருகில் இருக்கும் ஒரு சிறிய ஸ்வீட் ஸ்டாலுக்குச் சென்று ஜாங்கிரி வாங்கணும்னு ஆசை... சாத்தியப்படுமான்னு தெரியலை. ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். ஒரு குழுவாகச் செல்லும்போது இது மாதிரிச் சங்கடங்கள் உண்டுதான். கரந்தை போனீர்களா? அடடே.... எங்க ஊராச்சே!

   நீக்கு
  2. என்னாது..உங்க ஊரா?

   கும்பகோணத்திலிருந்து திவ்யதேசக் கோவில்களைப் பார்த்துவிட்டு மதியம் தஞ்சை பெரியகோவில். பிறகு அங்கிருந்து திரும்ப கும்பகோணம் நகர முற்படும்போது, திடுக் என்று கரந்தை ஸ்கூல் கண்ணில் பட்டது போகும் வழியில். கரந்தை என்பது தனி ஊரா, தஞ்சையில்?

   நீக்கு
  3. இல்லை...தனி ஊரான்னு கேட்கக்கூடாது. காஞ்சியில் எல்லா திவ்யதேசக் கோவில்களும் 1/2 கிலோமீட்டரிலிருந்து 2-3 கிலோமீட்டருக்குள். ஆனால் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஊர் பேர் சொல்றாங்க.

   நீக்கு
  4. ஆம்...
   கரந்தை என்பது தனி ஊர்ப்பகுதி..
   இங்கு ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது...

   அப்பர் ஸ்வாமிகள் திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுப் பாடுகின்றார்....

   நீக்கு
 29. படிகளைப் பார்த்தால் எனக்கு எவ்வளவு Gகாட்டுகளுக்குச் செல்லமுடியும்னு யோசனையா இருக்கு. ஒரு தடவை கங்கையில் முழுகி எழுந்தாலே பாவம் போயிட்டுது, இனி எதுக்கு இறங்கி மூழ்கி, திரும்ப ஏறி என்று தோணிடும்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி இல்லை நெல்லை... போக வேண்டிய கோவில்களுக்கு ஆட்டோவில் கூட மேல்வழியாகவே வந்து செல்லலாம். கங்கையிலிருந்து ஏறி இறங்கினால்தான் இவ்வளவு படிகள்.

   நீக்கு
 30. //நாம் நம் பெற்றோர் பேச்சைக் கேட்டது போல// - இது உண்மையா? நாம அப்படியா பெற்றோர் சொல்வதை அப்படியே கடைபிடித்தோம்? சான்சே இல்லை. எத்தனை முறை ஏய்த்திருப்போம். சொன்ன நல்லனவற்றை இந்தக் காதில் வாங்கி, உடனேயே அடுத்த காதில் விட்டிருப்போம்? நாம் இப்போது செய்வது எல்லாம், அவர்கள் செய்ததைப் பார்த்து (நடந்துகொண்டதைப் பார்த்து) நாம் கற்றுக்கொண்டதை மட்டும்தான், அவர்கள் சொல்வதை ஞாபகம் வைத்தல்ல.

  அப்போ இந்த ஜெனெரேஷனை மட்டும் எப்படி குறை சொல்வது?

  நாம ஒழுங்கா நடந்துகொண்டால், இன்றைக்கு அதை காப்பி அடிக்காட்டாலும், பசங்க மனதில் பதிந்து நாளை அவங்க பெரியவங்களா ஆகும்போது அந்த நல்லதுகளை ஃபாலோ செய்வார்கள் (நாம் வாழ்க்கையில் ரொம்ப லேட்டாக ஃபாலோ பண்ண ஆரம்பித்ததுபோல)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே... நாம் நம் பெற்றோர் பேச்சைக் கேட்டோம் என்பதே பொய்! நம் பெற்றோர்கள் நேர்மையாக இருந்தார்களா என்று தெரியாது! எந்த ஜெனெரேஷனாய் இருந்தால் என்ன... நல்லது சொன்னால் நல்லதுதானே?

   உங்கள் கடைசி பாரா எனக்கும் அடிக்கடி தோன்றுவது.

   நீக்கு
 31. //நேரடியாக மோட்சம்தான் என்று நம்பப்படுவதால் இங்கு மரணமடைவதை மக்கள் விரும்புகிறார்கள். // - இதன் பின்னுள்ள சோகக் கதைகள் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். சில பல பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். மனிதர்களுக்கு ஏதாவது சாக்கு வேணும்...பெற்றோர்களை எங்கேயாவது தள்ளிவிட்டுவிட்டு, அவர்களைத் தங்கள் வாழ்விலிருந்து ஒதுக்கிவிட.

  பதிலளிநீக்கு
 32. //..மணிகர்ணிகா 'கட்'டில்தான் உடல்கள் எரிக்கப்படுகின்றன.//


  மணிகர்ணிகா ’காட்’ (ghat) . Pronounced in Hindi as 'ghaat'.
  {தமிழ் சேனல்களில் கேட்காதீர்கள் - அந்த அரைகுறைகள் ‘கட்' (cut) என்றே உச்சரிப்பார்கள். மகாத்மா காந்தியின் பெயரை, மகாத்மா ‘கந்தி’ என்று அவர்கள் உச்சரிக்காமலிருப்பதற்கே அவர்களுக்கு பாரத ரத்னா கொடுக்கலாம். ’காந்தி’, ‘கந்தி’ யானால், அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும்!}

  டெல்லியில் ’ராஜ் காட்’ (மஹாத்மா காந்தியின் பூத உடலை தகனம் செய்த இடம்), ’விஜய் காட்’ (இது லால் பகதூர் சாஸ்திரிக்கானது) என்று சில ’காட்’கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னொரு இடத்தில் ‘காட்’ என சரியாகவே எழுதியிருக்கிறீகள். அப்படியென்றால் மேலே குறிப்பிட்டது ‘டைப்போ’-வாக இருக்கலாம். அதுதான் எனில், நான் எழுதியிருப்பதை அலட்சியப்படுத்திவிடலாம்!

   நீக்கு
  2. காட் என்றுதான் எழுதி இருந்தேன். அங்கு கால் கட் ஆகிவிட்டது மற்ற இடங்களில் பாருங்கள். சரியாய்தான் எழுதியிருந்தேன். இப்போது இங்கும் மாற்றிவிட்டேன்.

   நீக்கு
 33. காசி என்றாலே சுவாரஸ்யம் தான். நான் இங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். பெரும்பாலும் பித்ரு தர்ப்பண காரியங்களிலேயே நேரம் போய்விட்டது.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் சகோதரரே

  காசி படங்களும், அதை குறித்த விளக்கங்களும் மிக அருமை. ஒவ்வொரு படங்களும், அந்த இடத்தைபற்றி அறிந்து கொண்ட செய்திகளும் மனம் முழுக்க நிறைவை தருகிறது. அங்கு போக இயலாதவர்கள் (என்னைப்போல) கங்கையின் அழகை தரிசித்து,நமஸ்கரித்து மானசீகமாக நீராடி கொண்டோம். கங்கைதான் என்ன அழகு.! பிரவாகமாக அங்கே, இங்கே என எங்கு நோக்கினும் கங்கையின் ஓட்டமிகுந்த படங்கள் நன்றாக உள்ளன. மாலை வெய்யிலில் கங்கை தேவி பிரகாசிக்கிறாள்.

  அங்கு நிறைய தெய்வங்களின் பேர் சொல்லி ஏமாற்றும் வித்தைகள் இருக்கிறது போலும். புனிதமான இடத்தில் இருந்து கொண்டு இப்படிச் செய்தால் தெய்வம் ஏற்றுக்கொள்ளுமா என்ற எண்ணம் நமக்குள் வருவதைப் போன்று அவர்கள் எண்ணத்திலும் சற்று பயத்துடன் எழாதோ?
  என்னவோ.! விந்தையான மனிதர்களை இந்த பூமித்தாய் பொறுமையெனும் மனம் கொண்டபடி பொறுத்தபடிதான் காத்து வருகிறாள்.

  படிகள் ஏறி இறங்கி நமக்குத்தான் சிரமம் போலிருக்கிறது. செல்லங்கள் நிம்மதியான இடம் தேடி அங்கெல்லாம் ஏறி அமர்ந்து தியானம் செய்கிறதோ? (அடுத்த பிறவி இப்படிபட்ட மானுடமாக மட்டும் இருக்க கூடாதென பிரார்த்தனை செய்கிறதோ? ) அத்தனை படங்களும் மிகவும் நன்றாக உள்ளது.

  /இந்த வாரமே முடித்து விடுவோம் ன்று நினைத்திருந்தேன். இதுவே நீண்டு விட்டது. அடுத்த இதழில்... ச்ச்ச்சே... அடுத்த வாரம் முடித்து விடுவேன் என்று நம்புகிறேன். எனக்கே போர் அடித்து விட்டது. பாவம் நீங்கள்./

  உண்மையிலேயே தங்கள் பயணக்கட்டுரை மிகவும் நன்றாக போய்க் கொண்டுள்ளது. முகஸ்துதிகாக சொல்லவில்லை. தங்களின் இந்த பதிவினால் நிறைய இடங்களைப் பற்றி விவரமாக தெரிந்து கொண்டேன். இங்கெல்லாம் எப்போது போய் தரிசிப்பது என்ற எண்ணத்தை இத்தனை நாள் இந்த கட்டுரை விவரங்கள் போக்கி வந்தன. அவ்வளவு அழகான படங்களும், சென்ற விடத்தின் விபரங்களும் பகிர்ந்திருந்தீர்கள். தங்களின் பகிர்வினுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...

   உங்களால் போகமுடியாமல் என்ன? வாய்ப்பு அமையும். சென்று வரலாம். நானே சென்று வந்து விட்டேன்!!!!

   ஸ்வாமி பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் எங்குதான் இல்லை அக்கா? கங்கையின் அழகு காண இரு கண்கள் போதவில்லை.

   என் பயணக்கட்டுரை நன்றாய் இருப்பதாய் சொல்லியிருப்பதற்கு நன்றிகள். முடிந்தவரை நிறைய எழுத முயற்சிக்கிறேன்.

   நன்றி அக்கா.

   நீக்கு
 35. படங்களைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்தன. நான் சொன்ன இடத்திலும் பாரதியார் இப்படி மார்பளவு சிலையாய் தான் இருப்பார்.
  ஆனால் அவர் வாழ்ந்த இடம் அது. ஹனுமான் காட் சங்கர மடத்திற்கு நேர் எதிர் சத்திரத்தில் இருக்கிறது. பரவாயில்லை. நகரத்தார் சத்திரத்தில் தான் பார்தியைப் பார்த்து விட்டீர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸார்... மக்கள் புடைவை எடுக்க ஒரு தெரிந்த கடையில் செட்டிலாக, அந்த நேரம் அறைக்குத் திரும்பினோம் நானும் மாமாக்களில் ஒருவரும். அப்போது சட்டென கண்ணில் பட்டார் பாரதியார். அருகே ஐம்பது ரூபாய்க்கு இளநீர் குடித்தோம்!

   நீக்கு
 36. // என் கை துணிச் சுருளோடு அவரிடம்.....//

  காசியில் விஸ்வநாதர் கோயிலுக்குப் பின்பக்கத்தில் எனக்கும் இப்படியான ஒரு அனுபவம் ஏற்பட இருந்து ஷண நேரத்தில் நழுவிப் போனது.

  பதிலளிநீக்கு
 37. சிவத்தின் அப்பா சுகி சுப்ரமணியன் ரஸ்னையில் எனது ரேடியோ நாடகங்கள் பல அரங்கேறியிருக்கின்றன. ஒரு தீபாவளி அன்று சிறப்பு நிகழ்வாக ஒலிபரப்பானது பின்னர் போர்ட் பிளேயர் ரேடியோ ஸ்டேஷலிலும் ஒலிபரப்பான போது தவறாமல் தன் கைப்பட எனக்கு கடிதமெழுதி முங்கூட்டியே தெரிவித்திருந்த அன்பு அவரது.
  அந்த நாடகம் கைவசம் தான் பழைய 'தஸ்தாவேஜூகள்' இடுக்கில் சிக்கிக் கொண்டிருப்பதாக நினைவு. தேடி எடுத்து பூவனத்தில் அவர் நினைவாக பிரசுரிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... வசந்தகால நினைவுகளில் வருமா?

   நீக்கு
  2. வசந்த கால நினைவுகளில் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்லாமல் சின்னச் சின்ன மாறுதல்களுடன் தொடரலாம் என்றிருக்கிறேன், ஸ்ரீராம்.

   நீக்கு
 38. படங்கள் பிரமாதம். சரியாக தீபாவளி அன்று அதிகாலை 4.30-க்கு அரை குறை தெரு ட்யூப் அரை குறை வெளிச்சத்தில் தட்டித் தடுமாறி கங்கைக் கரை படிகள் ஏறி இறங்கி புனித கங்கையில் காங்காஸ்தானம்
  செய்தது மறக்க முடியாத நினைவாய் மனத்தில் படிந்திருக்கிறது.
  உங்கள் படங்கள் பார்த்த இடங்களைப் பசுமையாய் நினைவில் மீட்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி ஜீவி ஸார். உங்கள் நினைவுகளில் மீண்டும் கங்கையில் நீராடி விட்டீர்கள்!

   நீக்கு
 39. வாரணாசி பெயர் விளக்கம் முதல்முறையாகக் கேள்விப்படுகிறேன். நதிக்க்கரைப் படங்கள் நன்றாக இருக்கின்றன. உச்சியிலேபோய் பிடித்திருக்கிறீர்களே ‘செல்ல’த்தை!

  அந்த காளி கோவில் ‘பண்டா’விற்கு அந்த பத்து ரூ. சாவிகொத்தை வாங்கிக்கொடுத்திருக்கலாம்.

  கங்கை நதியைப் பார்த்துக்கொண்டு ’கடமை உணர்வோ’, வேறு நினைவோ இல்லாது கொஞ்சநேரம் உட்கார நேர்ந்தால் அது பாக்யம். அதற்குத் தனியாகப் போய், ஓரிரு நாட்கள் அங்கே தங்கவேண்டியிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாரணாசி, காசி பெயர்களுக்கு பல்வேறு விளக்கங்கள் சொல்கிறார்கள் ஏகாந்தன் ஸார். எல்லாவற்றையும் நான் இங்கு எழுதவில்லை.

   காளிகோயில் பண்டாதான் நூறு ரூபாய் பிடுங்கி கொண்டானே.. சாவிக்கொத்து ஆறேழு வாங்கியிருந்தேன். சென்னை வந்ததும் நண்பர்களுக்கு கொடுத்தேன்.

   கங்கைக்கரை என்றில்லை, நான் சென்று வந்த இடங்கள் எல்லாவற்றுக்குமே அவதி அவதி என்று கடமை முடிப்பது போல பார்த்து ஓடி வராமல் அங்கங்கே சில நாட்கள் தங்கி நிதானமாகப் பார்த்து வந்தால் நன்றாயிருக்கும்தான்.

   நீக்கு
 40. ஜூலை 6, 2014?
  ஓ! பழைய பதிவின் மீள் சுழற்சியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜீவி ஸார்.. கதம்பம் போல இருப்பதை நண்பர்கள் விரும்புவதால் பேஸ்புக்கில் பழையதை பகிர்ந்ததை எல்லாம் இங்கே எடுத்துப் பகிர்ந்து விடுகிறேன்.

   நீக்கு
 41. காசியில் அருமையான காட்சிகளைப் படமாக்கி விட்டு இப்படியொரு தலைப்பா என யோசித்தால் அது தஞ்சை அருகே எடுத்த படத்திற்கு:)! கங்கா ஆரத்தி படங்களை சமீபத்தில் ஒருவர் ஃப்ளிக்கரில் பகிர்ந்திருந்ததைப் பார்த்தேன். நேரில் பார்க்க அருமையாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ராமலக்ஷ்மி. கங்காஆரத்தி படங்களை எடுக்க என் செல் போதாது. என் திறமையும் போறாது. படங்களில் நானும் பார்த்தேன். ஆனால் நேரில் பார்க்கும் அந்த உணர்வு எந்தப் படங்களிலும் வராது என்று அந்த நேரம் தோன்றியது. அது ஒரு பரவச உணர்வு. பிரம்மாண்டம்.

   நீக்கு
  2. சங்கரா டிவியில் இந்த கங்கா ஆரத்தி பூஜையை தினமும் ஒளிபரப்புகிறார்கள். காலை 7 மணி வாக்கிலும் மாலை 6 மணி சுமாருக்கும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  3. ஆம் ஜீவி ஸார்... கேள்விப்பட்டிருக்கிறேன்.

   நீக்கு
  4. நான் அதிகம் பார்ப்பது ஸன்ஸ்கார் தொலைக்காட்சியில் பரமார்த்த நிகேதனில் நடக்கும் கங்கை ஆரத்தி! திருக்கயிலை யாத்திரையில் மானசரோவரிலும் தார்ச்சனிலும் இவர்களுடைய ஆசிரமத்தில் தான் தங்கி இருந்தோம்.

   நீக்கு
 42. பைடக் பைரவ் கோவிலை பார்த்தீர்களா அந்த கோவிலில் சிவனாரை சுற்றி செல்லங்கள்தான் ஆனால் ஒன்றும் செய்வதில்லை

  விஸ்வநாதன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசர அவசரமாக காட்டிச் சென்ற கோவில்களில் அதுவும் ஒன்றாக இருக்கலாம் நண்பர் விஸ்வா... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 43. ஒரு இடத்துக்கு சென்று வந்தடதை நினைவில் கொண்டுவந்துஎழுதுவது சிரமம் நான்பெரும்பாலும் எடுத்த புகைப் படங்களை நினைவில் இருந்து மீட்டெடுக்க நாடுவேன் ஏனோ கோர்வையாகவும் படங்களூம்கோர்வையாக இல்லாமல் ஏனோ குறையாய்த்தோன்றியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அப்படிதான் ஜி எம் பி ஸார். ஆனால் எடுத்த புகைப்படங்களையும் பகிரவேண்டும். பயண விவரங்களையும் சொல்லவேண்டும். என்ன செய்ய? புகைப்பட விவரங்களை கருப்பு நிறத்தில் விவரம் சொல்லி வெளியிட்டுள்ளேன். தொடர் கட்டுரை நீல நிறத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும்.

   நீக்கு
 44. ஸ்ரீராம் சாவிக் கொத்து ரொம்ப அழகா இருக்கு.

  எப்படியே பாரதியார் வாழ்ந்த இடம் செல்ல முடியவில்லை என்றாலும் பாரதியாரைப் பார்த்துட்டீங்க!

  மாலை கங்கைக் காட்சி வெகு வெகு அற்புதம்!! க்ளிட்டரிங்க் வாட்டர்! தக தகன்னு!! பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு ஸ்ரீராம். அதுவும் அந்த போட்!! வாவ்! அழகு!

  கீதா

  பதிலளிநீக்கு
 45. "ஆஹா... நம்ம முகத்திலேயே இவர்களுக்கெல்லாம் தெரிகிறதுடா"//

  ஹா ஹா ஹா நல்ல காலம் சொம்புக்குள் நுழையாமல் தப்பித்துவிட்டீங்க! என்ன அக்கிரமம்..இது.

  கீதா

  பதிலளிநீக்கு
 46. 90 வயது பாட்டி வாவ்! நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. மனோதைரியம்..

  கங்கையில் நீராடியதும் மேலே ஏறும்போது வலது கால் விரல் கல் மோதி பெரிதாக வீங்கிக்கொண்டு நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். //

  கஷ்டப்பட்டிருப்பீங்களே ஸ்ரீராம் அதுவும் விரைவாக எல்லா இடங்களுக்கும் சென்று வர வேண்டுமே.
  இதைத்தான் பட்ட இடத்தில் அடி நு அப்புறம் சொன்னீங்களா!!

  கங்கைக்குள் பாறைகளும் கற்களுமா அப்போ படித்துறை போல இல்லையா தண்ணீருக்குள்? அதற்கும் கீழேயோ...அப்போ நின்று குளிப்பது கடினமாகத்தான் இருந்திருக்கும். பாலன்ஸ் கிடைக்க...(மேலே சொல்லிருந்தீங்களே அதுதான்...)

  கங்கை ஆரத்தி நான் யுட்யூபில் பார்த்திருக்கிறேன். அருமையா இருக்கும்

  நீங்க படம் எடுக்கலையா ஸ்ரீராம்?!

  கோபநண்பர் இருட்டிலும் இருட்டாகத் தெரிகிறார்!! கட்டிப் போட்டாதனால கோபமோ?!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பட்ட காலிலே படும் என்பது மிக மிக உண்மை. அந்த விரலில் மறுபடி மறுபடி அடிபட்டுக்கொண்டே இருந்தேன்.

   கங்கை ஆரத்தி படம் எடுத்தால் நினைவாக இருக்காது கீதா. ஏழு மணி இருள். படகிலிருந்து எடுக்க வேண்டும்...

   நீக்கு
 47. சுகி சிவம்! சாரி ஸ்ரீராம் அக்கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. அதற்கு மேல் இதற்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை.

  ஓ அந்த ஃபோட்டோதானா அட போப்பா உனக்கு ஃபோட்டோ எடுக்கத் தெரியவில்லை// ஹா ஹா ஹா பின்னே அவரை இப்படிப் பின்பக்கம் எடுத்தால்!! ஹிஹிஹிஹி...

  முதலில் அது நீங்கதானோ என்று நினைத்தேன்...பூஸார் இருந்திருந்தால் கொஞ்சம் அவரிடம் கோள் மூட்டி கும்மி அடித்திருக்கலாம்..நான் அது நீங்கதான் என்று சும்மானாலும் அடித்து விட்டிருக்கலாம்!!! ஹா ஹா ஹா மிஸ்ஸிங்க்

  கீதா

  பதிலளிநீக்கு
 48. விஸ்வநாதர் கோயில், விசாலாக்ஷி கோயில் போன அனுபவங்களைச் சொல்லவில்லை! விசாலாக்ஷி கோயிலுக்குப் போனதாகவும் தெரியலை! அவசரம் அவசரமாகப் பயணக்கட்டுரை எழுதி இருப்பது போல் அவசரம் அவசரமாகச் சென்று வந்திருக்கிறீர்கள். காசியிலும் பித்ரு காரியம் செய்யணும்! நீங்க செய்யலை. உங்க பயண ஒருங்கிணைப்பாளர் அதைச் சொல்லலை/அல்லது அதற்கான ஏற்பாடுகள் பண்ணலை! படகில் போய் எல்லாத் தீர்த்தக் கட்டங்களிலும் பிண்டம் வைக்கணும். படகிலேயே குமுட்டி அடுப்பில் பிண்டம் வைப்பதற்கான சாதம் சமைத்துக் கொண்டே சென்றதும், ஒரு சில முக்கியமான தீர்த்தக்கட்டங்களில் இறங்கி ஸ்நானம் பண்ணியதும் அருமையான அனுபவங்கள். அஷ்வமேத GHகாட்டில் இறங்கிக் குளிக்கையில் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென நீர் கீழ் நோக்கி இழுத்தது. அதுவும் நாங்க போனது ஆகஸ்ட் மாதம். கங்கை நீங்க இதில் காட்டிய படிகளில் எல்லாம் நிறைந்து இருந்தாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்று வந்தேன் கீதா அக்கா. சட்சட்டென ஒவ்வொரு கோவிலாக சென்றதில் நினைவில் வைத்துக்கொள்வதும் சிரமம்.

   காசியில் பித்ரு காரியம் செய்யவேண்டும் என்று தெரியும். அவரும் சொன்னார். ஆனால் அவர் போட்ட எஸ்டிமேட் பதினாறாயிரத்தைத் தாண்டவே விட்டு விட்டோம். காசைப்பார்த்தீர்களா என்றால் ஒருவகையில் ஆம்! இன்னொரு வகையில் எதுவும் சரியான வகையில் செய்ததாகத் தோன்றவில்லை.

   நீக்கு
  2. இப்போப் போவதற்கு சங்கர மடத்தில் கேட்டதற்கே ஒரு வாரத்திற்கு தம்பதி பூஜை, கயா ஸ்ராத்தம் உட்பட 22,000 தான் கேட்டிருந்தார். தங்குமிடம், சாப்பாடு தனிச் செலவு. ஆகவே உங்கள் ஒருங்கிணைப்பாளர் அதிகம் தான் கேட்டிருக்கார்.

   நீக்கு
 49. எல்லோரும் சொல்கிறாப்போல் பிணம் எல்லாம் மிதந்து கொண்டும் இருக்காது. எரியும் பிணங்களைத் தள்ளியும் விட மாட்டார்கள். நாங்கள் நின்று நிதானமாகவே பார்த்தோம். மொத்தமாக சுமார் ஒரு வாரம் தங்கினோம். காலை காரியங்கள் முடிந்ததும் மாலை ஒவ்வொரு இடமாகச் சென்று அங்குள்ள கோயில்களைப் பார்த்தோம். கடைத்தெருக்களில் சுற்றினோம். பாதாம் பால் சாப்பிட்டோம். தினம் தினம் அங்குத் தெரு முனையில் இருந்த பால்கடையில் இருந்து பால் காய்ச்சி வாங்கி வந்து அறையிலேயே காஃபி கலந்து கொள்வோம். இப்போ அடுத்த மாசம் போக நினைச்சுப் போக முடியலை! இப்போ வர வேண்டாம் என்பது விஸ்வநாதரின் எண்ணம் போல! இம்முறை போத்கயா, சாரநாத், காசிராஜா அரண்மனை மூன்றையும் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தோம். கொடுத்து வைக்கலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு வார காலம் தனி இருந்திருந்தால் நான் இன்னமும் அதிக இடங்களைக் கவர் செய்து, இன்னம் நிறைய விவரங்கள் சொல்லியிருப்பேன். கயா செல்லும் முன் ஒன்றரை நாள். அவ்வளவே.

   நீக்கு
 50. பைரவர் கோயிலில் காசிக்கயிறுகளை வைத்து வாங்கினீர்களா? சோழி அம்மன் கோயிலுக்குப் போனீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், வாங்கினேன். பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன் என்று நினைவு. சோழி அம்மன் கோவில் கடைசியாக சென்னை திரும்பும் முன்.

   நீக்கு
 51. சிறிய குண்டூசியும் வேலை வாங்க உதவும்//

  அருமையான ஒரு விஷயம் பகிர்ந்திருக்கீங்க ஸ்ரீராம். இதை வேறு வகையிலும் சொல்லலாம் ஒரு சிறிய விஷயத்தை/திறமையைக் கூட நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம் என்ற ஒரு விஷயத்தை நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

  சமீபத்தில் வந்த வாட்சப் வீடியோ ஒன்று ஒரு இளைஞர் நாம் நமது சின்ன சின்ன ஆர்வங்களைக் கூட முதலீடாக வைத்து வருமானம் ஈட்டலாம் என்று ஊக்கமாகப் பேசி அவர் கொடுத்த ஐடியா ஒரு சிலரை எப்படி முன்னேற வைத்தது என்று உதாரணங்களும் சொன்னார்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உத்வேகம் இருந்தாலும் அப்படி முதலீடாக மாற்றுவது என்பது தனிக்கலை! அதற்குச் சில திறமைகளும் வேண்டும்தான்.

   கீதா

   நீக்கு
 52. முகநூல் பகிர்வுகள் படித்த நினைவு இல்லை. அதே போல் காசிப் பயணப்படங்கள் போட்டிருக்கும் முகநூல் பதிவுகளும் பார்த்த நினைவு இல்லை.

  பதிலளிநீக்கு
 53. ஓ... எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பகிரவில்லை. சில படங்களை பகிர்ந்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
 54. புனித தலங்களில் ஏமாற்றும் பேர்வழிகள்.இவர்களுக்கும் காசியில் இருப்பதால் மோட்சம் உண்டு.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் மோட்சம் உண்டு என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்!!! நன்றி சகோதரி!

   நீக்கு
 55. படங்களும் நினைவூட்டலும் அருமை
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 56. வணக்கம்
  பயணத்தை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன்... நலமா? நீண்ட நெடும் நாட்களாச்சு...

   நன்றி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!