சென்ற வாரத்தில் வெளியான ஐந்து படங்களில், மூன்றுக்கு மட்டும் சரியான விடைகளை
வல்லிசிம்ஹன் (வைஜயந்திமாலா, லதாமங்கேஷ்கர் )
கோமதி அரசு '' ''
பானுமதி வெங்கடேஸ்வரன் (காஜல் அகர்வால்)
கீதா ரெங்கன் ''
ஆகியோர் எழுதியிருந்தார்கள்.
யாரும் கண்டுபிடிக்காமல் விடப்பட்ட இருவர் :
1) ஜாக்கி செராஃப்
2) ஆஷா கேளுண்ணி (aka ரேவதி)
நெல்லைத்தமிழன்:
1. அதிக இனிப்பு தொடர்ந்து சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது எப்படி? உங்கள் யாருக்கும் அந்த அனுபவம் உண்டா?
$ சமையலறைக்குள் நுழைந்தால் ஒரு ஸ்பூன் சர்க்கரை. ஒரு புத்தகம் படிக்க உட்கார்ந்தால் ஒரு பாக்கெட் சாக்கலேட்டு. இவற்றிலிருந்து
தப்பி சர்க்கரை குறைவாகப் போட்ட காப்பி என்று முடிகிறது.
& என்னுடைய அம்மாவும் நானும் இனிப்புப் பிரியர்கள். இனிப்புப் பதார்த்தங்களை எங்கே பார்த்தாலும் சாப்பிடாமல் இருக்கமாட்டேன். இப்போ எல்லாம் ரொம்பக் குறைத்துக்கொண்டுவிட்டேன். ஒரு நாளைக்கு நூறு கிராம்தான் சாப்பிடுகிறேன்.
2. காலையில் படுக்கையை விட்டு எழுந்தால் கால்களை வெறும் தரையில் வைக்கமுடியாதபடி வலி இருந்ததால் எப்போதும் எம் சி ஆர்/எம் சி பி செருப்பு அணிந்திருக்கணும்னு சொல்றாங்க (பாத வலி). இது யாருக்கேனும் வந்துள்ளதா?
$ யூரிக் அமிலம் நிறைய சேரும்போது காலையில் 10 நிமிடத்துக்கு நடப்பது கஷ்டமாக இருந்தது பிறகு சரியாகி விடும். வீட்டில் செருப்பு அணியும் பழக்கமில்லை. இப்போது பாத வலி இல்லை.
& ஊட்டி பக்கத்தில் இருந்த நாட்களில், மார்கழி மாத அனுபவங்கள் வெறும் தரையில் கால் வைத்தால் ஊசி குத்துவதுபோல சுருக் சுருக் என்று இருக்கும். (வலிக்கும் என்று சொல்ல முடியாது.) அப்போ செருப்பும் குளிர்ச்சியாகத்தான் இருக்கும். கொஞ்சம் போகப்போகத்தான் செருப்பு உடல் சூட்டிற்கு வந்து கொஞ்சம் இயல்பாக நடக்க முடியும்.
நிற்க.
நான் காலை நேரத்தில் எம் சி ஆர் / எம் சி பி அனுபவத்திற்காக என் வீட்டில் இருக்கின்ற anti skid rubber foot mate ன் முள்ளுப் பகுதியின் மீது ஜாகிங் செய்வது உண்டு!
3. சமைத்து எவ்வளவு நேரம் வரை உணவை சாப்பிடலாம்? குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பிறகு சூடுபடுத்திச் சாப்பிடும் வழக்கம் உண்டா?
$ நம் வீட்டு சமையலறை சுத்தம் பொறுத்து 2 முதல் 9 மணி நேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
குளிர் பதனம் செய்து சூடு படுத்தல் உண்டு. சாதம் வைப்பதில்லை.
& எந்த வகை உணவு என்பதைப் பொறுத்த விஷயம். எனக்குத் தெரிந்து ரசம் போன்றவற்றை மூன்று நாட்கள் வரை குளிர் பதனப் பெட்டியில் வைத்து உபயோகித்தது உண்டு. ஒவ்வொரு முறையும் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளும் பொழுது ஒரு ரீ ஹீட்டிங் - என்பது டிகிரி சென்டிகிரேட் செட்டிங் மூன்று நிமிடங்கள் (இன்டக்ஷன் குக் டாப்) வைத்து எடுப்பேன். பெங்களூரில் உணவுகள் கெடுவதில்லை. சென்னையில் சுலபமாகக் கெட்டுவிடும். வெளியில் வைத்திருந்தால், பெங்களூரில் பத்துப் பன்னிரண்டு மணி நேரம் வரை கெடுவதில்லை. இப்போ இங்கே குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. (min 20 deg C, max 27 deg C)
4. இப்போதும் தமிழ் நாவல்கள் படிக்கும் வழக்கம் உண்டா?
$ உண்டு.
& படிக்க ஆசைதான். ஆனால், இங்கே,
நேரம் கிடைப்பதில்லை,
தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதில்லை,
பெரிய புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு பொறுமையும் இல்லாமல் போய்விட்டது.
மேலும் எனக்கு Fiction படிப்பதைவிட Non fiction புத்தகங்கள் படிப்பதுதான் பிடிக்கும்.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நம் நாட்டில் அவர்களால் கட்டப்பட்ட அரசாங்க கட்டிடங்கள் எல்லாம் அடர்ந்த சிவப்பு நிறத்திலேயே வண்ணம் பூசப்பட்டிருப்பதற்கு ஏதாவது பிரத்தியேக காரணம் உண்டா?
$ Emissivity 15% க்கும் குறைவு என்பதால் கட்டடங்களிலிருந்து வெப்பம் வெளியேறுவது குறைவு. இதற்காக ஆரம்பித்த terracota பூச்சு இன்றளவும் இருக்கிறது.
& எனக்கு அந்த சிவப்பு நிறத்தைப் பார்த்தாலே போலீஸ் ஸ்டேஷன் ஞாபகம் மட்டும்தான் வருகிறது. $ ஆசிரியர் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது, இந்த வர்ணம் UK போன்ற குளிர் பிரதேசத்திற்கு வேண்டியதிருக்கலாம் - ஆனால் பூமத்திய ரேகை அருகில் உள்ள வெப்ப நாடுகளுக்குத் தேவையா என்றும் சந்தேகம் எழுகிறது.
எங்கள் தொழிலகத்தில் ஓடிக்கொண்டிருந்த பேருந்துகள் (எக்சிகியுடிவ்கள் மற்றும் சூப்பர்வைசர், ஃபோர்மன் ஆகியோரை ஏற்றிச்செல்லும் வண்டிகள்) நான் தொழிலகத்தில் வேலையில் சேரும்போது பலப்பல வண்ணங்களில் வெளியே வர்ணப்பூச்சுடன் காணப்பட்டன. Standards departmentல் நான் பணி செய்யத் துவங்கியபோது, என்னுடைய பிரிவில் எனக்கு அளிக்கப்பட்ட முதல் வேலை இந்த பேருந்துகள் எல்லாவற்றிற்கும் ஒரே நிற வர்ணம் பரிந்துரை செய்வது. பிரிவின் தலைவர் திரு டி வி என் கிடாவ் என்பவர் சொன்ன வழிகாட்டுதல்படி, நான் தயார் செய்த முதல் ஸ்டாண்டர்ட் - painting of staff buses.
அதே போல, பிரிட்டிஷ் அரசாங்கம், அரசாங்கக் கட்டிடங்களுக்கு என்று அடர் சிவப்பு நிறத்தை standardize செய்திருப்பார்களோ?
=========================================
பி ஏ சி :
பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரை நமக்கு பெற்றோர் மனநிலையும் குழந்தை மன நிலையும் ஆழ் மனதில் பதிவாகிறது என்று பார்த்தோம்.
அதன் பின் ஐந்திலிருந்து பதினெட்டு வயதுவரை நமக்குள் பதிவு செய்யப்படுபவை யாவுமே வயதுவந்தோர் மனநிலை. விவரம் அறிந்துகொள்வதற்காக கேள்விகள் கேட்பது, படித்து அறிந்துகொள்ளுதல், பார்த்துத் தெரிந்துகொள்ளுதல், நண்பர்களிடமிருந்து தெரிந்துகொள்ளுதல், பள்ளி, கல்லூரிகளில் கற்று உணர்தல் எல்லாமே நம்முள் adult மனநிலை உருவாக்கும். இவ்வாறு கற்றுக்கொள்ளப்படும் சில விஷயங்கள் ஆழ் மனதில் பதிவாகியுள்ள parent , child மனநிலைகளை சில சமயம் மாற்றம் செய்ய வாய்ப்புகள் உண்டு.
மொத்தத்தில் ஒரு மனிதன், பதினெட்டு வயதுக்குள் வாழ்க்கையில் எது எல்லாம் value உள்ளவை என்று நினைக்கின்றானோ, அது பெரும்பாலும் அதற்குப் பிறகு அவன் வாழ்க்கையில் மாறுவதற்கு சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு.
ஒரு சாதாரண மனிதனின் மனதுக்குள் parent, adult and child என்று மூவர் எப்பொழுதும் குடியிருப்பார்கள்.
ஒவ்வொரு சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலையில் அந்த மனிதனுக்குள் இருக்கும் மூவரில் யாரேனும் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் !
ஆனால், தொடர்ந்து அவரே தலைமை தாங்கமாட்டார். சூழ்நிலை மாறும்போது, தலைமைப் பொறுப்பும் அவருக்குள் இருக்கும் மற்றவருக்கு சென்றுவிடும்.
முன் காலத்தில் பலர் (தற்காலத்தில் சிலர் ) உறவினர் / நண்பர்கள் போன்ற மற்றவர்களின் இருப்பிடத்திற்கு சென்றால், ஸ்வீட் / இதர தின்பண்டங்கள் / பூ / பழம் அல்லது அவர்கள் ஊரில் கிடைக்கின்ற சிறப்புப் பொருட்கள் என்று ஏதாவது வாங்கிச் சென்று, தான் செல்லும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ கொடுப்பார்கள்.
ஏன் தெரியுமா?
அடுத்த வாரம் பார்ப்போம்.
=================================
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குசிகப்பு நிறம் - வடக்கில் பல இடங்களீல் வெளியே நிறமே கிடையாது.... சிமெண்ட் பூச்சு இருந்தால் தானே நிறம் தேவை! செங்கல்களாகவே தெரியும் படி தான் நிறைய வீடுகள் கட்டுவார்கள் - அடுத்த கட்டிடம் கட்டும்போது ஒட்டிக் கட்டி விடுவதால் இப்படி!
வாங்க, வாங்க ! வணக்கம். தகவலுக்கு நன்றி!
நீக்குஅட.... இன்னிக்கு இன்னும் யாரும் இங்கே வரல! எல்லாரும் பிசி போல இருக்கு!
பதிலளிநீக்குஆம்! இன்றைக்கு மழைதான். நீங்களும் நானும் முதல் ஆளாக வந்திருக்கோம்!
நீக்குஅன்பு வெங்கட் , ஸ்ரீராம், துரைசெல்வராஜு,கீதா ரங்கன அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குகேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம்.
நம் நாட்டிற்கு சிவப்புக் கட்டிடக் கலர் அவசியம் இல்லை. வெள்ளை வர்ணம்
அடித்தால் நன்றக இருக்கும்.
லண்டனி எங்கு பார்த்தாலும் சிகப்பு வர்ணக்கட்டிடங்கள்.
கொஞ்சம் தள்ளிப் போனால மக்கள் வசிக்கும் இடங்கள் கூட செங்கல் அடுக்கப்
பட்ட வீடுகள்.
நம் ஊர்தான் சிறப்பு .எல்லாவண்ணத்திலும் பார்க்கலாம்.
.
குழந்தை மனது எத்தனை விஷயங்களை உள்வாங்குகிறது
இந்த Parent adult children குறிப்புகள்
வெகு அவசியமானவை . வாழ்த்துகள்.
நன்றி வல்லிசிம்ஹன்.
நீக்குஇனிய காலை வணக்கம் கௌ அண்ணா ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஒவ்வொரு சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலையில் அந்த மனிதனுக்குள் இருக்கும் மூவரில் யாரேனும் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் ! //
இது அனுபவத்திலும் கூடப் பார்க்க முடியும்...
விட்ட பதிவுகளில் இருக்கிறேன் வருகிறேன் பின்னர்.
கீதா
காலை வணக்கம். மீண்டும் வருக!
நீக்குவந்திருக்கும் நண்பர்களுக்கும், வரப்போகும் நண்பர்களுக்கும், துரைக்கும் வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நல்வரவு.
பதிலளிநீக்குகாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நல்வரவு.
நீக்குநல்ல சுவாரசியமான அலசல் பி.ஏ.சி. பற்றி. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கேன். இந்த வாரம் கேள்வி, பதிலும் என்னை மாதிரிக் குழந்தைகள் கேட்காததால் :) கொஞ்சம் மனமுதிர்ச்சியுடன் காணப்படுகின்றன. ஆசிரியர்களில் # இந்த வாரம் காணோம். மாறாக $காரர் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கொடுத்திருக்கார்
பதிலளிநீக்குஆம். # அவர் ஃபோன் மாற்றியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால் வாட்ஸ் அப் மூலமாக பதில்கள் அனுப்பவில்லை!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம் வாழ்க வளமுடன்!
நீக்குசொல்லவே பயம்ம்ம்ம்மா இருக்கு! யாரானும் கோவிச்சுண்டா? நான் "நட்பேயார்" வருவாராக்கும்னு நினைச்சேன். ஆனால் இங்கே தான் என்னைத் தவிர்த்து யாருக்கும் பிடிக்கலையே! :( ம்ம்ம்ம்ம் இப்போ ஒரு நெடுந்தொடர் அது பாட்டுக்குக் குடும்பத் தொடராப் போயிட்டிருந்ததை நீட்டி முழக்க வேண்டிப் பேய், பிசாசைக் கொண்டு வந்து கெடுத்துட்டு இருக்காங்க! :( என்னதான் பேய், பிசாசு வந்தாலும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதைப் பார்க்கச் சகிக்கலை!
பதிலளிநீக்குஅடுத்த அமாவாசை நேரத்தில் வருகிறாரா பார்ப்போம். எனக்கும் பேயாரிடம் ஒரு குழந்தைத் தனமான எதிர்பார்ப்பு உள்ளது! அவர் வழி, தனீ வழி ! நம்ம சீண்டக்கூடாது!
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதாக்கா எனக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. நானும் கேட்டிருந்தேனே போன முறை.
நீக்குயாருக்குப் பிடிக்கலை??!!!!!!!!!!!!!!!!!
கீதா
குளிர்சாதனப் பெட்டியில் எங்க வீட்டில் உணவு வகைகளே வைப்பதில்லை. பெரும்பாலும் அன்றாடம் சமைப்பதால் உடனுக்குடன் தீர்த்துவிடும்படி சமைக்கிறேன். அப்படி மிஞ்சினால் வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துடுவேன். குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சூடு செய்து சாப்பிடுவது என்பது வயிற்றுக்கு ஒத்து வருவதே இல்லை. :(
பதிலளிநீக்குஅதுவும் சரிதான்!
நீக்குநெல்லைத்தமிழன், பானுமதிவெங்க்டேஸ்வரன் அவர்கள் கேள்வியும், ஆசிரியரின் பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன் அவர்கள் கேள்விக்கு பதில்
// காலையில் படுக்கையை விட்டு எழுந்தால் கால்களை வெறும் தரையில் வைக்கமுடியாதபடி வலி இருந்ததால் எப்போதும் எம் சி ஆர்/எம் சி பி செருப்பு அணிந்திருக்கணும்னு சொல்றாங்க (பாத வலி). இது யாருக்கேனும் வந்துள்ளதா?//
எனக்கு வந்து இருக்கிறது 30 வயதில் 5 வருடம் பலவித செருப்புக்கள் போட்டும் ஆங்கில மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.
வேதாத்திரி மகரிஷியின் மனவளகலை உலகசமுதாயசேவா சங்கத்தில் சேர்ந்து உடபயிற்சிகள் கற்றுக் கொண்டு செய்தேன், அதில் கால்களுக்கு கொடுக்கபடும் கால்பயிற்சிகளை செய்தேன். இப்போது (வேதாத்திரி மகரிஷி ஆன்மீக மற்றும் உள்ளுணர்வுக் கல்வி நிலையம்)
குதிங்காலில் குறுத்து எலும்பு வளர்வதால் இந்த வலி அதற்கு அறுவை சிகிட்சைதான் வழி என்ற நிலை மறைந்து விட்டது.
நானும் கற்றுக் கொண்டு கற்றுக் கொடுக்கும் ஆசிரியாராகவும் ஆனேன்.
உங்கள் அருகில் இந்த மன்றம் இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
7 நிலை பயிற்சிகள் இருக்கிறது. கற்றுக் கொண்டு செய்தால் நல்லபலன் கிடைக்கும்.
இரண்டு பாத்திரங்கள் எடுத்துக் கொண்டு, ஒன்றில் கால் பொறுத்து கொள்ளும் அளவு வெந்நீர் வைத்துக் கொள்ள வேண்டும் அதில் உப்பு போட்டுக் கொள்ளுங்கள், இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு மாற்றி மாற்றி கால்களை வைத்து எடுத்தாலும் குதிங்கால் வலி போகும்.
அரிசி களைந்த தண்ணீரை சூடு செய்து அதை கால்களில் விடலாம்.
மிக்க நன்றி கோமதி அரசு மேடம். நான் இப்போ பிடிவாதமா நடைப்பயிற்சியை மீண்டும் ஆரம்பித்திருக்கேன். இல்லைனா வெயிட் அதிகமாகுதுன்னு.
நீக்குவிவரமான தகவல்களுக்கு நன்றி கோமதி அரசு மேடம்.
நீக்குஅங்கு கற்று கொடுக்கும் கபாலபதி என்ற மூச்சு பயிற்சி கற்றுக் கொண்டு காலை எழுந்தவுடன் வரும் அடுக்கு தும்மலில் இருந்து மீண்டேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்.
நீக்கு1, 2 - இப்படியெல்லாம் நேர்ந்ததில்லை...
பதிலளிநீக்குஅடுக்குத் தும்மல் அதுவாக வந்து அதுவாக போய்விட்டது...
3) உணவு சமைத்த பத்து நிமிடத்துக்குள் சாப்பிட்டு முடித்து விடுவேன்... அந்த பாத்திரத்தில் இருவேளைக்கு செய்யமுடியும் என்றாலும் செய்வதில்லை... ஒரே வேளையில் சுத்தம்...
ஆறேழு மாதத்துக்கு முன் இரவு வேலை பார்த்த போது - இரவு உணவு வேலைத்தளத்தில்...
இப்போது ஒன்றரை மாதமாக சமையலறை கைவிட்டுப் போனதால் சமையல் என்பது சிரமமாகி விட்டது...
மதிய உணவு வேலைத்தளத்தில் என்றாலும் இரவு உணவு உணவகத்தில் தான்!..
என்ன கேட்கிறீர்கள்?..
தோசை தான்!... இட்லியை எடுத்து அடித்தால் மண்டை உடைந்து விடும்...
அதனால் அந்தப் பக்கம் போவதில்லை...
// இட்லியை எடுத்து அடித்தால் மண்டை உடைந்து விடும்...
நீக்குஅதனால் அந்தப் பக்கம் போவதில்லை...// ஹ ஹா ஹா !!
முன்பு தனயா இருந்தபோது பண்குணும்ளிபோது நிறைய பாயசம் செய்தவேன், 10 டம்ப்ளர்களுக்கு மேல், பின குளிர்பெசாதனப்பெட்டியில் பாயசம் வைத்து 3 நாட்கள்வரை சாப்பிட்டிருக்கேன். பிறகு இது தவறுன்னு எதையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவதில்லை (தயிர், பால், பழம் காய் போன்றவை தவிர).
பதிலளிநீக்குஆனாலும் நிறையச் செய்து உடனே மிஞ்சினதை தூரப் போடுவதில்லை. சில நாட்கள் அதில் வைத்து பிறகு வீசி எறிவேன்்ஹா ஹா
:-)
நீக்குசூழ்நிலை மாறும்போது, தலைமைப் பொறுப்பும் அவருக்குள் இருக்கும் மற்றவருக்கு சென்றுவிடும்.//
பதிலளிநீக்குஉண்மைதான்.
குழந்தைகள், பெரியவர்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது வெறுங்கையோடு போக கூடாது என்று என் அம்மா சொல்வார்கள்.
குழந்தைகள், பெரியவர்கள் எதிர்பார்ப்பார்கள் நம்மிடமிருந்து. நம் மேல் அக்கரையாகவும், அன்பாகவும் இருக்கிறார்கள் எல்லோரும் என்று நினைப்பதால் உறவுகள் பலப்படும்.
மாயவரத்தில் மிக எளிமையானவர்கள் கூட ஒயர் கூடையில் சிறிய சிறிய நிறைய பொட்டலங்கள்(இனிப்பு, காரம்) வாங்கி வைத்துக் கொள்வதை பார்க்கலாம் பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் காத்து இருக்கும் போது பார்த்தது.
கண்டிப்பாய் பூ பொட்டலம் இருக்கும். அப்போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி எல்லையில்லா மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும்.
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நீக்குஊரெல்லாம் ஒரே வண்ணம் என்று - இந்தப் பக்கம் சொன்னால்..
பதிலளிநீக்குபெருங்கூட்டமாக கிளம்பி விடுவார்கள்...
இயற்கையான செங்காவி, சுண்ணாம்புப் பூச்சு மறந்து போனது..
எங்க கம்பேனி பெயிண்ட் அடிச்சா போற எடமெல்லாம் ...
பொண்ணு பார்க்கலாம்.. - அப்பிடின்னு வெளம்பரம் வருது
அந்த வம்பு நமக்கெதுக்கு!...
சொல்றதெல்லாம் சொல்லிட்டு, அப்புறம் என்ன அந்தக் கடைசி வரி!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குபெங்களூரில் உணவுகள் கெடுவதில்லை. சென்னையில் சுலபமாகக் கெட்டுவிடும். வெளியில் வைத்திருந்தால், பெங்களூரில் பத்துப் பன்னிரண்டு மணி நேரம் வரை கெடுவதில்லை. இப்போ இங்கே குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. (min 20 deg C, max 27 deg C) //
பதிலளிநீக்குஅதே அதே இங்கு கெடுவதில்லை. சென்னை என்றால் ஃப்ரிட்ஜ் அவசியம்
இங்கு ஃப்ரிட்ஜ் இல்லாமலேயே ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
இப்போது வெதர் செமையா இருக்கு....
கீதா
குளிர், குளிர்!
நீக்குஎனக்கும் சிவப்பு என்றால் போலீஸ் நினைவுதான் வரும்...ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
ஹா ஹா !
நீக்குநான் சிறு வயது முதலே இனிப்பை விரும்பியதில்லை.
பதிலளிநீக்குசிவப்பு என்றாலே மாமியார் வீடுதான் (போலீஸ் ஸ்டேஷன்) ஞாபகம் வரும்.
அதே, அதே!
நீக்குகில்லர்ஜி போன ஜென்மத்தில் ரொம்ப அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டிருப்பாரோ? இல்லை நான் போன ஜென்மத்தில் ரொம்பக் குறைவாக இனிப்பு சாப்பிட்டிருப்பேனோ?
நீக்குஒஜாய் போர்டு பார்த்து கேஜிஜி சார் பதில் தரலாமே
ஒய்ஜா போர்டு உரையாடலுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் அந்த போர்டு அருகே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது ஒரு கண்டிஷன்.
நீக்குகோமதி அரசு அம்மா கூறியது உண்மை... மனவளகலை உலகசமுதாயசேவா சங்கத்தில், "எளியமுறை உடற்பயிற்சி" எனும் புத்தகம் கிடைக்கிறது...
பதிலளிநீக்குஇணையத்தில் சுருக்கமாக பெற கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்...
எளியமுறை உடற்பயிற்சி
நன்றி தனபாலன்.
நீக்குதகவலுக்கும் சுட்டிக்கும் நன்றி தி த.
பதிலளிநீக்குஅனைத்து பயிற்சிகளையும் காண கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்...
பதிலளிநீக்குவேதாத்திரி_ மகரிஷி_ யோகா
தினமும் காலை (ஆர்வமுள்ளவர்கள் மாலை) அனைத்து பயிற்சிகளையும் செய்து முடிக்க அதிகபட்சம் அரை மணி நேரம் ஆகும்...
மேலே உள்ள காணொளியில் ஒரு மூச்சுப்பயிற்சின்னு ஒன்று வரும்... தொப்பை உள்ளவர்கள் கவனிக்க வேண்டியது...! அதை செய்யும் போது, உங்களின் மூக்கு தரையை தொட்டு விட்டால் சக்ஸஸ்...!
வாழ்க வளம்... சே... வாழ்க நலம்...!
நன்றி தனபாலன்.
நீக்குஅனைவருக்கும் உபயோகமான சுட்டி கொடுத்து உதவியதற்கு.
வாழ்க வளமுடன்.
உடற்பயிற்சி செய்து வாழ்க நலமுடன்.
நலமுடன் வாழ நல்வழிகள். நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//2. காலையில் படுக்கையை விட்டு எழுந்தால் கால்களை வெறும் தரையில் வைக்கமுடியாதபடி வலி இருந்ததால் எப்போதும் எம் சி ஆர்/எம் சி பி செருப்பு அணிந்திருக்கணும்னு சொல்றாங்க (பாத வலி). இது யாருக்கேனும் வந்துள்ளதா?// calcaneal spur நிறைய அவதிப் பட்டாச்சு! காலை மட்டுமில்லை. மதியத்திலும் சிறிது படுத்துவிட்டு எழுந்திருக்கையில் தரையில் காலையே வைக்க முடியாது! இது அநேகமாக நடுவயதுக்காரங்க எல்லோருக்குமே வரும்! தானாகச் சரியாகணும் என்பார்கள். எங்கே! பல வருடங்கள் அவதிக்குப் பின்னர் தானாகத் தான் சரியானது. பின்னர் வேறு பிரச்னைகள் காலில்! leg thrombosis னு வந்து அவதி! முட்டியில் எலும்பு அசையும்போது பிரச்னை! இப்போ நரம்புகள் பாதிப்பு!
பதிலளிநீக்குநலம் பெற பிரார்த்திக்கிறோம்.
நீக்குசூரிய நமஸ்காரத்தில் குதிகாலைத் தூக்கியவண்ணம் கால் விரல்களால் நின்று கொண்டு கைகளை உயரே தூக்கி நமஸ்கரிக்கும் பாணியில் நின்று கொண்டிருந்தால் சரியாகும் என்பார்கள். ஐந்து நிமிஷம் அப்படி நின்றுவிட்டுப் பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டு மறுபடி முயற்சிக்கணும். தினம் அரைமணி நேரம் இப்படிச் செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பார்கள்.
பதிலளிநீக்குகடினமான பயிற்சி என்று நினைக்கிறேன். கால் விரல்களை மட்டும் ஊன்றி சில நொடிகளுக்கு மேலே நிற்பது கஷ்டம்.
நீக்குஜெய்பூரில் ஒரு நகரமே பிங்க் கலரில் இருக்கிறது
பதிலளிநீக்குகலர்ஃபுல் ஜெய்ப்பூர் என்று நம் சினிமாக் கவிஞர்கள் பாடல் இயற்றுவார்களோ?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் சூப்பர்.
சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன், அவர்களின் கேள்வியும்,அதற்கு தகுந்த பதிலும், சகோதரர் நெல்லைத் தமிழன் அவர்களின் கேள்விகளும். அதற்கேற்ற பதில்களும் நன்றாக இருந்தன.
பொதுவாக அடர்ந்த நிறம் அனைவருக்கும் பிடித்தமானது.
கால்கள் தரையில் படாமல் ஓடுகிற வயது தாண்டினாலே கஸ்டந்தான்.(இப்போதும் தரையில் கால் பாவாமல் நடந்தால் நம் இனம் எங்கும் வியாபித்திருக்கிறதே என சென்ற வாரம் வரை வந்த "பேயாருக்கும்" கொண்டாட்டந்தான்.) இங்கு குளிரினால், தரையில் கால் வைக்க முடியவில்லை. இந்த டைல்ஸ் கற்களால்தான் குளிர் நன்கு தெரிகிறது. இதில் செருப்புடன் நடந்தால் வழுக்கும் அபாயம் வந்து விடுமென தயக்கமாக உள்ளது. (ஏற்கனவே அடிக்கடி கால்களை கால்களே வாரி விட்டு ஏகப்பட்ட அவஸ்தைகளை சந்தித்து வருகிறது.)
தெரிந்தவர், உறவுகள் வீட்டிற்கு செல்லும் சமயம் பூ பழம், ஸ்வீட் கொடுக்கும் பழக்கம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. நடைபெற்ற/நடைபெற காத்திருக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவிக்கவும், நட்பின் அடையாளத்தை சூட்சுமமாக உறுதிப்படுத்தவும் அவ்வாறான பழக்க வழக்கங்கள் இருந்திருக்கும் என நினைக்கறேன். தங்கள் பாணியில் ஏன் என அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// இங்கு குளிரினால், தரையில் கால் வைக்க முடியவில்லை. இந்த டைல்ஸ் கற்களால்தான் குளிர் நன்கு தெரிகிறது. இதில் செருப்புடன் நடந்தால் வழுக்கும் அபாயம் வந்து விடுமென தயக்கமாக உள்ளது. (ஏற்கனவே அடிக்கடி கால்களை கால்களே வாரி விட்டு ஏகப்பட்ட அவஸ்தைகளை சந்தித்து வருகிறது.// ஐயகோ ! தினந்தோறும் சர்க்கஸ் செய்துதான் பாலன்ஸ் செய்து நடமாட வேண்டுமா! கஷ்டம்தான்!
நீக்கு// தெரிந்தவர், உறவுகள் வீட்டிற்கு செல்லும் சமயம் பூ பழம், ஸ்வீட் கொடுக்கும் பழக்கம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. நடைபெற்ற/நடைபெற காத்திருக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவிக்கவும், நட்பின் அடையாளத்தை சூட்சுமமாக உறுதிப்படுத்தவும் அவ்வாறான பழக்க வழக்கங்கள் இருந்திருக்கும் என நினைக்கறேன்.// நன்கு சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்கு