புதன், 31 ஜூலை, 2019

புதன் 190731 : பிடித்த பண்டிகை எது?


சென்ற வாரக் கருத்துக் களஞ்சியத்தில், கட்டிடத்திற்கு அடிக்கப்படும் வர்ணம் பற்றியும், கால் வலி, சில்லென்ற தரையில் நடக்கும் பிரச்னை பற்றிய கருத்துகள் பெரும்பான்மை பெற்றிருந்தன. 

கருத்துகள் உரைத்த அனைவருக்கும் நன்றி. 

பதிவில் கேள்விகள் கேட்க எல்லோரும் மறந்துவிட்ட போதிலும், வாட்ஸ் அப் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவைகளை பார்ப்போம். 


நெல்லைத்தமிழன்: 

1. நாம் எதைத் தேடி கோவிலுக்குப் போகிறோம்? அதற்கான நம் முயற்சி என்ன?

# கோயில் சூழல் அமைதி ஆனந்தம் எனச்  செல்வோர் பலர்.  போகிற வழிக்குப் புண்ணியம் அல்லது செய்த பாவம் கழியும் என்று போவோரும் உண்டு. சிற்பச் சிறப்பு, வரலாற்று முக்கியத்துவம் இவற்றுடன் எதிர்மறை எண்ண அலை ஏதுமில்லாத மகிழ்ச்சி இவை காரணமாகவும் செல்லலாம்.
வெள்ளிக் கிழமை அல்லது விசேஷ நாள் என எந்திரத் தனமாகவும் போகலாம்.

& சிறிய வயதில், சுற்றிலும் குடியிருந்தவர்கள் பக்கத்தில் உள்ள கோயிலுக்கு தினந்தோறும் மாலை சென்று வருவார்கள். பெரும்பாலும் வயதான மாமிகள்தான். அவர்கள் செல்லும்போது சிறுவர்களாகிய எங்களையும் கூப்பிட்டுச் செல்வார்கள். ஒற்றை இலக்க வயதுகளில், அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வருவது, பிரகாரம் சுற்றுவது, சுவாமி சந்நிதியில் உள்ள விளக்குக்கு எண்ணெய் கொண்டு சென்று ஊற்றுவது எல்லாம் பழக்கமாகி இருந்தது. மார்கழி மாதங்களில், அதிகாலையில் கோயிலுக்குச் சென்று, பஜனை, பக்திப் பாடல்களை அங்கு பாடுகின்ற கோஷ்டியுடன் சேர்ந்து பாடி, பொங்கல் வாங்கி தின்று வந்தது எல்லாமே கோவில் அனுபவங்கள். 

இரட்டை இலக்க வயது வந்த பிறகு, கோவில்களுக்குச் செல்லுதல் என்பது திருவிழா நாட்களில் மட்டுமே என்று ஆனது. 

வேலை பார்த்த நாட்களில், டூர் போகின்ற நாட்களில் மட்டும், வேற்று ஊர்களில் விசேஷ ஸ்தலங்களுக்குச் செல்வது என்று ஆயிற்று. 

வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், ஊரில் அருகே இருக்கும் கோயில்களுக்கு அடிக்கடி சென்று வந்தது உண்டு. 

இப்போது இருக்கும் இடத்திற்கு அருகே பெரிய கோயில்கள் இல்லை. சிறிய அனுமார் கோவில் ஒன்றும், ஸ்ரீராமர் கோவில் ஒன்றும் உள்ளது. மாதம் ஒரு தடவை அங்கே சென்று வருவது உண்டு. 

கோவில் விசிட் என்பது 
சிறிய வயதில் : சந்தோஷம்.
வளர்ந்த வயதில் : ஆர்வம். 
பெரிய வயதில் : மன அமைதி, மன நிம்மதி. 

கோவிலுக்கு செல்வது என்பது மன அமைதிக்காக. நடைப் பயிற்சி + மன நிறைவு. 


2. ஒரு நடிகையை நாம் விரும்புவதின், ரசிப்பதின் காரணம் நம் மனதளவில் உள்ள ஒழுங்கீனமா?

# விரும்புவது ரசிப்பது என்பதன் அடிப்படை கலை அல்லது களை என்ற வரை சரி. அழகை ஆற்றலை ரசிப்பது புரிந்து கொள்ளக் கூடியது. அப்படி இன்றி வேறு கற்பனைகளால் தூண்டப் படுவதும் உண்டு.  அது  ஒழுங்கீனம் ஆகுமா என்பது விவாதத்துக் குரியது. அது பிறழ்வு ஈனமல்ல.

& வெறும் பொழுது போக்குதான் சுவாமி! 

3. நாம் தொடராத ஒன்றை (follow பண்ணாத ஒன்றை) advice என்ற பெயரில் மற்றவர்களுக்கு நம்மால் எப்படிச் சொல்ல முடிகிறது?


$ நான் follow பண்ணாததால் எதுவும் கெட்டுப் போகவில்லை என்பதால் இருக்கும்.

 # நான்தான் நாசமாகிப் போனேன் நீயாவது ...என்றும் அறிவுரை தரலாமே.  

& பெரும்பாலும் நான் மற்றவர்கள் யாருக்கும் advice செய்வதில்லை. suggest செய்வேன். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கவலைப்படமாட்டேன். 


பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பண்டிகைகள் அணிவகுக்கின்றன. எந்த பண்டிகையை ஆவலோடு எதிர்பார்ப்பீர்கள்? அவ்வளவாக பிடிக்காத பண்டிகை ஏதாவது உண்டா?

$ கொழுக்கட்டை பண்டிகைகளான வரலக்ஷ்மி விரதம், விநாயக சதுர்த்தி இரண்டையும் நான் கொழுக்கட்டை செய்வதில் expert
 பண்டிகைகள் என்றால் கொண்டாட்டம் தான். பிடிக்காதது என்று எதுவும் இல்லை.

# ஆவலோடு எதிர்பார்ப்பது சிறு வயதுடன் போயிற்று. வரலட்சுமி விரதம், பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி இப்படி. பனியனைக் கழற்ற வேண்டுவதால் ஆவணி அவிட்டம் அலர்ஜி.
கொழுக்கட்டை தின்போருக்குக் கொண்டாட்டம், செய்பவருக்குத் திண்டாட்டம் எனப் பின்பு விளங்கியது !

& எனக்குப் பிடித்தது என்று பார்த்தால் தீபாவளி என்று சொல்வேன். நமக்கும் சந்தோஷம் சுற்றி இருப்பவர்களுக்கும் சந்தோஷம். வியாபாரிகள், சிறுவர், சிறுமியர், வளர்ந்தவர்கள், சினிமா எடுப்பவர்கள், பார்ப்பவர்கள், ஆன்மீக ஈடுபாடுகொண்டவர்கள்  என்று எல்லோருமே கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைதான் எனக்குப் பிடித்தது. என்னுடைய அம்மா அப்பாவுக்கும் பிடித்த பண்டிகை அது. 

பிடிக்காத பண்டிகை என்று எதுவும் இல்லை. 

=======================================

P A C தொடர்கிறது. 

முன் காலத்தில் பலர் (தற்காலத்தில் சிலர் ) உறவினர் / நண்பர்கள் போன்ற மற்றவர்களின் இருப்பிடத்திற்கு சென்றால், ஸ்வீட் / இதர தின்பண்டங்கள் / பூ / பழம் அல்லது அவர்கள் ஊரில் கிடைக்கின்ற சிறப்புப் பொருட்கள் என்று ஏதாவது வாங்கிச் சென்று,  தான் செல்லும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ கொடுப்பார்கள். 

ஏன் தெரியுமா? " 

என்று சென்ற வாரம் கேட்டிருந்தேன். கருத்து உரைத்திருந்தவர்கள் எல்லோரும் பெரும்பாலும் சரியாக சொல்லியிருந்தீர்கள். 

ஒரு மனிதனின் ஆழ் மனதில், Parent / Adult /Child attitude இருக்கும் என்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு attitude மேலோங்கி இருக்கும் என்று சொல்லப்பட்டது அல்லவா? 

உளநிலை ஆய்வாளர்கள் சொல்லும் ஒரு யோசனை என்ன என்றால், 'ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே ஒளிந்து இருக்கின்ற குழந்தையைக் கண்டுபிடியுங்கள். அந்தக் குழந்தையோடு பேசுங்கள். அதனுடன் பேசுவது, பழகுவது, ஒத்துழைப்பு பெறுவது எல்லாமே எளிது. ' 

நான் சொல்வது சாதாரண, ஆரோக்கிய மனிதர் ஒருவரின் மன நிலை. சிற்சில முரண்பாடுகள் மனதில் அமைந்த மனிதர்களுக்கு இது பொருந்தாது. சிலர் வாழ்க்கையில் சிரிக்கவே மாட்டார்கள். அவர்கள் ஆழ் மனதில் குழந்தை உணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. 

நாம் வங்கி / தபால் அலுவலகங்கள் போன்று பலர் பணிபுரிகின்ற இடங்களுக்குச் சென்றால் என்ன செய்கிறோம்? ஏதேனும் விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தால், அங்கு இருப்பவர்களில் யாரைத் தேர்ந்தெடுத்து நம்முடைய கேள்விகளைக் கேட்கிறோம்? We look for a friendly, smiling face. கடுகடு / வெடுவெடு / சிடுசிடு ஆசாமிகளை ஒதுக்கிவிட்டு, புன்னகை செய்பவரிடம்தான் நம்முடைய சந்தேகங்களைக் / விவரம் அறியவேண்டிய கேள்விகளைக் கேட்கிறோம். 

ஆம். இயல்பான புன்னகையோடு இருக்கும் மனிதர்களின் உள்ளே இருக்கின்ற குழந்தையை எளிதாக இனம் காணலாம். அந்தக் குழந்தையை அணுகும் விதத்தில் அணுகி நம் சந்தேகங்களைக் கேட்டு விவரம் அறிந்துகொள்ளலாம். 

எனக்குத் தெரிந்து வங்கிகள், தபால் அலுவலகங்கள், மருத்துவமனை போன்ற இடங்களில் பணிபுரிகின்ற பெண்கள் பலரும், இயல்பாக பொதுமக்களிடம் இன்முகத்துடன், பரிவுடன்  நடந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். 

சென்ற வாரக் கேள்வி பற்றி. 

உறவினர் + நண்பர் வீட்டுக்குச் செல்லும்போது  ஏதேனும் வாங்கிச் சென்றால், அங்கு உள்ளவர்களின் குழந்தை மனநிலை சுலபமாக வெளிப்படும். அவர்களின் குழந்தை attitude மேலோங்கி இருக்கின்ற நேரத்தில், அவர்களுடன் சுமுகமாக உரையாட இயலும். 

It is easier to talk with a child (in a man or woman) and communicate and get things done. 

அடுத்த வாரம் சுமுக உரையாடல்களுக்கு பின்பற்றவேண்டிய சில விவரங்களைப் பார்ப்போம். 

=========================================

இந்த வாரக் கேள்வி : 

(அந்தக் கால / இந்தக் கால ) தமிழ் நடிகைகளில் குழந்தைபோல இனிய புன்னகை தவழும் முகம் கொண்டவர்கள் யார். சீரியஸ் முகம் கொண்டவர்கள் யார் என்று சொல்லுங்கள். 157 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. மதிய மற்றும் மாலை வணக்கம் எல்லோருக்கும்!

   சமீப காலங்களில் புதன் ரொம்பவே நெருக்கடியாகச் சென்று கொண்டிருக்க இன்றும் அப்படியாகிப் போனது. சில நாட்களில் செவ்வாயும் அப்படித்தான். காலையில் வர இயலாத அளவு...

   வந்தாச்சு...கேள்விகள் பதில்கள் மற்றும் பிஏசி வாசித்துவிட்டு வருகிறேன்..

   கீதா

   நீக்கு
 2. அன்பின் KGG, ஸ்ரீராம்..
  கீதாக்கா/கீதா மற்றும் வல்லியம்மா அனைவருக்கும் நல்வரவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழிமொழிந்து வரவேற்கிறேன் நானும்.

   நீக்கு
  2. அனைவருக்கும் நல்வரவு.

   நீக்கு
  3. நன்றி துரை. வந்திருக்கும் அனைவருக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

   நீக்கு
  4. அமாவாசை என்பதால் காலையில் வரலை! அப்புறமா வேலைகள் முன்பின்னாக ஆகிவிடும். இப்போ எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு சாப்பாடையும் முடித்துக்கொண்டு உட்கார்ந்தாச்சு! 2 மணி நேரமாவது இருக்கலாம்.

   நீக்கு
  5. வாங்க, வாங்க ! நல்வரவு!

   நீக்கு
 3. இன்னிக்கு ஆடி அமாவாசை அதுவுமா - யாருக்குக் குழந்தை போல புன்னகை தவழும் முகம்..ன்னு
  நல்ல கேள்வி தான் கேட்டிருக்கீங்க!...

  நாம -

  சிநேகா.. ந்னு சொல்லிடுவோமா!...

  சொல்லிடுவோமே!..காசா.. பணமா!..

  சிநேகா!.. சிநேகா!...

  அது சரி.... அந்தப் புள்ளையச் சொல்லாமப் போறீங்க?..

  எந்தப் புள்ளை?..

  அதான் அந்தக் கீர்த்தி!..

  சொல்லிட்டாப் போச்சு.. கீர்த்தி.. கீர்த்தி!..

  சரி.. சொன்னதெல்லாம் போதும்..
  திருவையாத்துக்குப் போகணும்... கெளம்புங்க!....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்டிபத்மினி... குழந்தை நட்சத்திரமா இருந்தபோது அவங்கதான் புன்னகை தவழும் முகம்.

   ஆடி அமாவாசைல இந்தகேகேள்வி எல்லாம் கேட்கக்கூடாதா? ஆடிப்போயிட்டேன்!

   நீக்கு
  2. குட்டி பத்மினி, பேபி இந்திரா, ரோஜா ரமணி, பேபி சுமதி - இவங்க எல்லாம் என்றைக்கும் குழந்தைகளே...

   இந்த வட்டாதத்துக்குள் வரவே
   மாட்டார்கள்...

   நாராயணா... ந்னு நரசிங்கனைத் துதித்து நிக்கும்போது பிரகலாதன்.. ந்னு அந்தக் குழந்தை முகம் தானே முன்னே வந்து நிக்குது!...

   நீக்கு
  3. துரை ஸார்... எங்கே...யோ போயிட்டீங்க... குழந்தை மனசு உங்களுக்கு!

   நீக்கு
  4. குழந்தையும், தெய்வமும், துரையும் குணத்தால் ஒன்று!

   நீக்கு
 4. ஒரு நடிகையை நாம் விரும்புவதின், ரசிப்பதின் காரணம் நம் மனதளவில் உள்ள ஒழுங்கீனமா?

  அப்படியெல்லாம் இல்லை...
  விரும்புவது ரசிப்பது என்பதன் அடிப்படை கலை என்ற வரைக்கும் சரி...
  அழகை ஆற்றலை ரசிப்பது புரிந்து கொள்ளக் கூடியது... அது தான் இயற்கை...

  அப்பாடி... ஜன்மம் கடைத்தேறி விட்டது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயிற்றில் பாலை வார்த்தீர்கள். நல்லவன் ஆனேன்...சே... தன்யனானேன்.

   நீக்கு
  2. அன்பு துரை செல்வராஜு, அன்பு ஸ்ரீராம், அன்பு பானுமா அனைவருக்கும்
   இன்னும் வரப் போகிறவர்களுக்கும் இனிய காலை வணக்கம்.
   நல்ல கேள்விகள் ,நல்ல பதில்கள்.
   கோவிலுக்குச் செல்வது நிம்மதி நாடித்தான். அதுவும் கூட்டம் இல்லாமல் இருக்க வேண்டும்.
   தனியே நின்று, அந்தத் தெய்வத்துடன் பேச வேண்டும். பாட வேண்டும்.

   சினிமா நடிகரையோ நடிகையையோ பிடிப்பதில் எதுவும் தப்பு
   இருப்பதாகத் தெரியவில்லை.
   அவ்ர்கள் அருகில் போகப் போவதில்லை.
   திரையில் பார்க்கும் போது சந்தோஷப் படப்
   போகிறோம்.

   பெற்றோர் குழந்தைப் பகுதி இண்டரஸ்டிங்காகச் செல்கிறது.

   கொடுத்திருக்கும் படங்களில் சாவித்திரியக் காணோமே.
   இருந்தால் வோட் அவருக்குதான்.
   புது நடிகைகளில் சினேகா மிகப் பிடிக்கும்..

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா...இனிய காலை வணக்கம்.

   சாவித்ரியின் புன்னகைதான் உங்களுக்குப் பிடிக்குமா?

   நீக்கு
  4. கொடுத்திருக்கும் படங்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லவில்லை. இவர்கள் எல்லோரும் என்னைத் திட்டுவதற்காக இங்கே பிரத்யட்சம் ஆகியுள்ளனர்!

   நீக்கு
  5. @ துரை செல்வராஜு சார் - //அழகை ஆற்றலை ரசிப்பது புரிந்து கொள்ளக் கூடியது// - சட்டம் 35 நொடிகளுக்கு மேல் ஒரு பெண்ணைப் பார்த்தால், அதனை ஈவ் டீசிங் என்று சொல்லி, அதற்குத் தண்டனை உண்டு என்று சொல்கிறது. சொல்லிட்டேன்.

   நீக்கு
  6. நெல்லை அது கேரளத்தில்தானே அந்தச் சட்டம்? அது சரி நீங்க என்ன துரை அண்ணாவின் பின்னாடி கேமராவோடு போகப் போறீங்களா?!! ஹா ஹா ஹா ஹா

   துரை அண்ணா கவனம்!!!!!!!!!!!!

   ஆது வேற ஒண்னுமில்ல கௌ அண்ணா இன்று தமனா படம் போடலைல அதான்!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 5. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் புன்னகை தவழும் இனிய நாளாக அமையவும் பிரார்த்திக்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...

   பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நல்வரவு.

   நீக்கு
  2. // இந்நாள் புன்னகை தவழும் இனிய நாளாக அமையவும் // அதே அதே! பிள்ளையாய் இருந்துவிட்டால், இல்லை ஒரு தொல்லையடா!

   நீக்கு
 7. நடிகையின்மீது ஆசை கொள்வதுபற்றி அல்லது ‘விரும்புவது’, ‘ரசிப்பது’பற்றி (!), நெல்லை இந்தக் காலைவேளையில் ஒரு கேள்வி கேட்டுவிட்டார் என்கிற சாக்கில், விதவிதமான ஒரு இருபத்தைந்து நடிகைகளைப்போட்டு உங்களது ரகசிய fantasy-ஐ ஜாலியாக அனுபவிக்கிறீர்களாக்கும் !

  என்ன, குழந்தைபோல இனிய புன்னகை தவழும் முகமா! - எங்கே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியோ பிடித்து விடுகிறீர்கள் ஏகாந்தன் ஸார்... வாங்க.. வாங்க...

   நீக்கு
  2. கொடுத்திருக்கும் படங்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லவில்லை. இவர்கள் எல்லோரும் என்னைத் திட்டுவதற்காக இங்கே பிரத்யட்சம் ஆகியுள்ளனர்!இருபத்தஞ்சா ! பத்துதானே இருக்கு. உங்கள் மனதில் இருக்கும் மீதி பதினைந்து நடிகைகள் யார்?

   நீக்கு
  3. //..பத்துதானே இருக்கு..//
   -ஆ! ரொம்பக் குறைச்சலாத்தானே இருக்கு என்கிற கவலை வேறயா!
   சரி, பத்து படங்களைப் போட்டதுதான் போட்டீர்கள்.. நெல்லைக்குப் பிடித்தமான அந்த மஞ்சளழகி (சாண்டில்யன் ஞாபகம் வந்தால் நானல்ல பொறுப்பு!) எங்கே!

   நீக்கு
  4. மஞ்சளழகியா ! ஓ! விரலி மஞ்சள் போல ஒல்லிக்குச்சி என்கிறீர்களா!

   நீக்கு
  5. இஃகி,இஃகி,இஃகி, மஞ்சுளாவைச் சொல்றாங்க போல!

   நீக்கு
  6. ஏகாந்தன் அண்ணா ஹா ஹா ஹா ஹா மஞ்சள் அழகியா! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது டூஊஊஊஊஊஊஊஊ மச்! நெல்லைக்கு எதுக்கு ஐஸு...

   நானே இப்ப சொல்ல வந்தேன் பாருங்க ஏகாந்தன் அண்ணா நெல்லை அம்புட்டு பொடி வைச்சுக் கேள்வி கேட்டிருந்தாலும் கூட கௌ அண்ணா புரிந்து கொள்ளாமல் அந்தச் சப்பாத்திமா போல இருக்கும் தமன்னாக்காவைப் போடாம விட்டிருக்கிறார் பாருங்க....அதான் நெல்லை துரை அண்ணாவுக்கு வார்னிங்க் வேற!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  7. @கீதா ரங்கன் - //அந்தச் சப்பாத்திமா போல இருக்கும் தமன்னாக்காவைப்// - உதாரணம் சரியாச் சொல்லணும். அந்த 'மைதாமா போல'.

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம்.

  கேள்விதான் கேட்டீங்க. திரையில் பார்த்த மேக்கப் முகத்துடன் கூடிய படங்களாகப் போடக் கூடாதா? இந்தப் படங்களைப் பார்த்தால் யாரிவர் என்ற கேள்விதான் மனசுல எழுகிறது.

  ஆடி அமாவாசை அன்றும் நடிகைகளை நினைத்துக் கொண்டிருப்பவர்கள்தாம் சரியான விடைகளைச் சொல்லுவாங்க போலிருக்கு (நான் துரை செல்வராஜு சாரை வம்புக்கு இழுக்கலை...கோத்துவிட்டுடாதீங்க)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் நெல்லைத்தமிழன்.. கோவில் ப்பற்றிய பதில் படித்து விட்டு உங்கள் கருத்துக் சொல்லக்காத்திருக்கிறீர்கள் என்கிறது என் மனசு! சரியா? தவறா?

   நீக்கு
  2. நான் துரை செல்வராஜு சாரை வம்புக்கு இழுக்கலை...கோத்துவிட்டுடாதீங்க..... நீங்களே சொல்லிட்டீங்க ! துரை சார் வாங்க, வாங்க!

   நீக்கு
  3. என்னை யாரும் கோர்த்து விடவில்லை..

   நானே கோத்துக்கிட்டேன்...

   கோலக் கிளிகளின் கூட்டம்..
   கொண்டாடுதே மனம் வண்டாட்டம்!..

   நீக்கு
  4. துரை செல்வராஜு சார்... மேக்கப் இல்லாத படங்களைப் பார்த்திருந்தால்,

   கீரிக ளனைய முகம் பார்த் துடனே
   வீறிட் டலறினேன் பயந்து

   என்று குறள் எழுதியிருக்க மாட்டீர்களோ? இப்ப என்னடான்னா...

   ஆடும் அழகிகள் பார்த்து ஆசையில்
   ஆடிச் செல்லுவேன் மயங்கி

   என்று எழுதறீங்க

   நீக்கு
  5. // கீரிக ளனைய முகம் பார்த் துடனே
   வீறிட் டலறினேன் பயந்து//
   அட! இது நல்லா இருக்கே!

   நீக்கு
  6. கீரி நல்ல சகுனம்..

   குபேரனின் கையில் இருப்பது...

   மனிதனுடன் நட்பு நாடி வந்தது..
   இவன் தான் ஒத்துக் கொள்ள வில்லை..

   பாரதப்போர் முடிந்ததும் தர்மர் செய்த யாகத்தின் துலாக் கோலாக இருப்பது கீரி...

   அதைக் கண்டு வீறிட்டு அலறினீர்களாக்கும்!?..

   நீக்கு
  7. மையிட்டெழுதிய விழிகளைக் கண்டு
   மைதொட்டெழுதினேன் கவிதை ஒன்று...

   நீக்கு
  8. மையிட் டெழுதிய விழிகளைக் கண்டு
   மைதொட் டெழுதினேன் இன்று - இப்படி இருந்தால் குறள்.

   மைதொட் எழுதிய கவிதையைக் கண்டு
   மையலாய்ப் பார்த்தாள் எனை

   மையலாய்ப் பார்த்தவள் பொன்முகம் என்னை
   தையலாய்த் தைய்த்தது ஏன்.

   இப்படி குறல் எழுதிக்கிட்டே போகலாம்........... (எங்க ஆள் படம் போட்டிருந்தால்... இந்த கேஜிஜி சார்தான் நல்லது சொன்னாக் கேட்டுக்க மாட்டாரே... நான் என்ன செய்ய?)


   நீக்கு
  9. //கோவில் ப்பற்றிய பதில் படித்து விட்டு உங்கள் கருத்துக் சொல்லக்காத்திருக்கிறீர்கள் என்கிறது என் மனசு! // -
   பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்... ஐயனே என் ஐயனே...

   கோவிலுக்குச் செல்வதற்கு முக்கியக் காரணம், இறை தரிசனம் தரும் மன அமைதிதான். நம் பக்தி எவ்வளவுக்கு எவ்வளவு முழுமையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் கொண்டு செல்லும் பாத்திரம் ஓட்டையில்லாமல் இருக்கும், அவனது கருணை என்ற பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு.

   நான் நினைக்கும் இன்னொன்று... நம் ஊர்க் கோவிலை (எங்கு இருக்கிறோமோ அங்கு இருக்கும் தெய்வம்) தினமும் தரிசனம் செய்யும்போது இறையின் உருவம் நம் மனதில் பதியும். இறக்கும் தருவாயில் அந்த இறை நினைவு நமக்கு வரும், வரணும். நிறைய தெய்வ உருவங்களை வணங்கிக்கொண்டிருக்கும்போது, அத்தகைய கூர்மையான நினைவு, உருவம் நமக்கு கடைசி காலத்தில் வராமல் கலைந்துவிடுமோ?

   நீக்கு
  10. உண்மைதான். என்னுடைய ஐ பேடில் குலதெய்வம் படத்தை ஸ்க்ரீன் சேவர் ஆக வைத்துள்ளேன். ஐ பேடை திறக்கும்பொழுதெல்லாம் குலதெய்வ தரிசனம்.

   நீக்கு
  11. ஐ-பேட், ஸ்க்ரீன் ஸேவர்-லாம் சரி. அவர் என்னவோ ஒரு தருவாயில்.. -ங்கிறாரே.. அப்போது, மனம் இறையைக் காண்பிக்குமா.. இல்லை, திரையை இழுத்துவிட்டுவிட்டுப் போய்விடுமா !

   நீக்கு
  12. நல்ல கேள்வி. பதில்கள் நம்முள்ளேயே உள்ளன!

   நீக்கு
  13. துரை அண்ணா அண்ட் நெல்லை கவித கவித!!! அசத்தல் மிகவும் ரசித்தேன்...

   மையிட்டெழுதிய விழிகளைக் கண்டு
   மைதொட்டெழுதினேன் கவிதை ஒன்று...//

   மையல் கொண்டு அவளிடம் தந்தேன் - அவளோ
   மை காட்! என்றாள்!
   ஆனந்தமா?
   அதிர்ச்சியா?

   கீதா

   நீக்கு
  14. /மையல் கொண்டு அவளிடம் தந்தேன் - அவளோ
   மை காட்! என்றாள்!//

   என்னத்தைத் தந்தீங்க 'மை காட்' என்று சொல்வதற்கு..... இந்தக் காலத்துல 'கவிதை'லாம் கொடுத்தா, அந்தப் பெண்ணுக்கு தமிழ் படிக்கத் தெரிந்திருக்கணுமே.

   நீக்கு
 9. தீபாவளி பண்டிகை இளம் வயதில்தான் பிடித்தது. இப்போல்லாம் அந்த ஆர்வமும் இல்லை...ஒழுங்கீனமா ரோட்டில், கண்ட கண்ட சமயத்தில் வெடிகளைப் போட்டு ஒலி மாசு அதிகமாவதால் வெறுப்புதான் வருகிறது. இது ஒருவேளை பெரும்பான்மை வருடங்கள் வெளிநாட்டில் தீபாவளியை மறந்ததால் இருக்கலாம்.

  கேள்விகளுக்கான பதில்களை ரசித்தேன். கோவிலுக்குப் போவதற்கான பதில்கள் கவர்ந்தன.

  யாரது...கொழுக்கட்டை எக்ஸ்பர்ட்? இப்போ கொழுக்கட்டை கேட்டு வந்தால், "அந்தக் காலத்தில்" என்று போட விட்டுப் போயிடுத்து சுவாமின்னு சொல்லக்கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராயலா நகர் சென்று ரைட் ராயலா கேட்டுச் சாப்பிடுங்கள் கொழுக்கட்டையை, வரலக்ஷ்மி விரதம் அன்று!

   நீக்கு
  2. கேஜிஜி சார்.. இது என்னவோ, துபாய் குறுக்குச் சந்து, துபாய் ரோடு, துபாய் அட்ரஸ் மாதிரின்னா இருக்கு

   நீக்கு
  3. ஸ்ரீராமை வாட்ஸ் அப்பில் கேளுங்கள்.

   நீக்கு
  4. KGS kozukkattai expert!இது தெரியலையா? & வந்தால் கேஜிஜி ! # கேஜிஒய், $கேஜிஎஸ்

   நீக்கு
  5. நெல்லை கொழுக்கட்டை எக்ஸ்பர்ட் யாரென்று கீதாக்கா சொல்லிட்டான பாருங்க...கௌ அண்ணா கொழுக்கட்டை செஞ்சா அது கொ அல்ல கௌ என்று தொடங்கும்!!!!!பெயர் பெறும்!!! "கௌ"ழுக்கட்டை நு ஏதேனும் புதுசா செய்வார்!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 10. பதில்கள்
  1. ஹை அப்ப கௌ அண்ணா இளைஞர்!!! நெல்லை???!!!???!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...நான் சொல்ல மாட்டேனே!

   கீதா

   நீக்கு
  2. அவர் (நெ த ) இளைஞர்களின் இளைஞர்?

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 12. கேள்விகளும் பதில்களும் அருமை.
  ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
  தினம் கோவிலுக்கு போய் கொண்டு இருந்தேன்,(மாயவரம்) போகும் வழியில் எத்தனை நலம் விசாரிப்புகள் , இவர்களை கடந்து சாமியை கும்பிட்டு வந்து விட்டால் அன்றைய பொழுது ஆனந்தம்.

  ஆனல் இங்கு கோவிலுக்கு போகும் போது இறுக்கமான சிரிக்க மறந்த மனிதர்களை அதிகமாக பார்க்கிறேன்.மூன்று வயதான பெண்களின் விசாரிப்பு ஒரு ஆறுதல்.

  தொடர்ந்தும் கோவிலுக்கு போக முடியாமல் இருக்கிறது. கூட்டம் இல்லா கோவில் காத்து இருப்பு இல்லா கோவில்களை விரும்புகிறார் கணவர்.
  அப்புறம் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் மிகவும் சரி. ஆம். கோவில்களுக்குச் செல்பவர்கள், அங்கு வழிபடுபவர்கள், அங்கிருந்து திரும்பி வருபவர்கள் எல்லோர் முகத்திலும் ஒரு நம்பிக்கை ஒளி தென்படும்.

   நீக்கு
  2. மதுரைக்காரங்களே கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவாங்கனு சொல்வாங்களே! அதான் இறைவனைப் போய்ப் பார்த்துட்டு இறுக்கமான மனோநிலையுடன் வராங்க போல! :))))

   நீக்கு
  3. கூட்டம் வேண்டாம் என்பதால் தான் குலதெய்வக் கோயிலுக்குக் கூட வெள்ளிக்கிழமை போகாமல் ஞாயிறன்று போனோம்.

   நீக்கு
  4. கோயிலுக்கு போய் வரும் பக்தர்கள் இறுக்கமான மனநிலையில் வராங்க என்று சொல்லவில்லை.
   நான் கோவிலுக்கு போகும் போது வளாகத்தில் எதிர்படும் அன்பர்கள் சிரிக்க மறந்து இறுக்கமான முகங்களுடன் காணபடுகிறார்கள் என்றேன் கீதா.

   நீக்கு
  5. மனதில் இறுக்கம் இருந்தால் தானே முகத்தில் காட்டும்! அதான் சொன்னேன் கோமதி!

   நீக்கு
 13. நடிகைமீது ஈர்ப்பு வருவது கவர்ச்சியின் காரணமாககூட இருக்கலாம்.
  ஆனால் நடிகனின் மீது ஈர்ப்பு வந்து முடிவில் அவனுக்கு அடிமையாவது ஏன் ?

  இதன் தொடங்கம்தான் எம்ஜிஆர் என்ற கூத்தாடி முதல்வன் ஆனான்.

  அதன் தொடர்ச்சி சின்னம்மா இன்று பெங்களூருவில்...

  தமிழன் தொடக்கத்தில் சரியாக சிந்தித்து இருந்தால் ???

  இன்று தியாகத்தலைவி சிறையில் வாடியிருக்க வேண்டாமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நடிகனின் மீது ஈர்ப்பு வந்து முடிவில் அவனுக்கு அடிமையாவது ஏன் //- இதெல்லாம் ஒரு சந்தேகமா கில்லர்ஜி... தன்னால் முடியாதவைகளை, கவர்ச்சிக் கன்னிகளை வளைத்துப்போடுவது முதற்கொண்டு, திரையில் கதாநாயகன் செய்வதால், அட... இவன் நம்மைவிடப் பெரியவன் என்ற ஆச்சர்யம்தான். (எம் ஜி ஆர் பற்றி நீங்கள் சொன்னதை நான் ஏற்கலை.. இதுபற்றி இன்று எழுதறேன்)

   நீக்கு
  2. எம்ஜியார் மீது பெரும்பான்மை மக்களுக்கு ( அவர் நல்லவர் என்று ) இருந்த நம்பிக்கையே அவரது வெற்றிக்குக் காரணம். எம்ஜியார் மீது இருந்த நம்பிக்கையில் பெரும்பகுதி பிறகு ஜெ மீது transfer ஆனது. இதே காலகட்டத்தில் சிவாஜி உட்பட மற்ற நடிகர்கள் எவ்வளவு முயன்றாலும் அரசியலில் பிரகாசிக்க இயலவில்லை. எனவே, அரசியலில் சினிமா கவர்ச்சி ஒன்று மட்டுமே வெற்றி பெற போதுமானது இல்லை. மக்களைப் பொறுத்தவரையில் எம்ஜியார் நல்லவர், வாரிக்கொடுக்கும் வள்ளல், ரிக்ஷாக்காரர்களுக்கு மழை கோட்டு அளித்தவர், என்பது போன்ற சமாச்சாரங்கள்தான் அவருக்கு ஓட்டுகள் விழக்காரணம். சிறையில் வாடும் அல்லது பாடும் சின்னம்மாவுக்கு சினிமா சம்பந்தம் எதுவும் கிடையாது. ஆரம்ப காலத்தில் சினிமா வீடியோ கடை வைத்திருந்தவர் என்பதைத் தவிர. அரசியலுக்கு வந்து காணாமல் போன சினிமாக்காரர்கள் பட்டியல் சிவாஜி, மேஜர் சுந்தரராஜன், சௌகார் ஜானகி, பாக்யராஜ், கார்த்திக், மன்சூர் அலிகான், விஜயகாந்த், .... என்று நீண்டுகொண்டே போகிறது. மய்யம் கூட விரைவில் இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கும்.

   நீக்கு
  3. சமீபத்தில் நடிகர் ராஜேஷ் (நிறைய புத்தகங்கள் படித்தவர், ஆரம்ப கால ஆசிரியர், நல்ல இண்டெலெக்சுவல்) அவரது அஸ்டிராலஜி அனுபவங்களைப் பற்றிக் கூறியதைக் காணொளியில் கேட்டேன். 1973ல் ஒரு ஜோசியர், ராஜேஷிடம், இந்த எம்.ஜி.ஆர், தமிழக முதலமைச்சராக வருவார், அவருக்கு அடுத்தது அவரது மனைவி, பிறகு வெற்றிச் செல்வி முதல்வராவார் என்று சொன்னாராம். பிறகு இவை நடந்ததைக் கண்டு ரொம்பவும் ஆச்சர்யப்பட்டேன், அது எப்படி ஜோசியர்கள் இவ்வளவு சரியாகச் சொல்லமுடியும் என்று எண்ணி, ஜோசியத்தின்பால் ஈர்க்கப்பட்டேன் என்றார்.

   /தமிழன் தொடக்கத்தில் சரியாக சிந்தித்து இருந்தால் // - இப்படி ஏன் சொல்றீங்க? விருதுநகர் மக்கள்தான் இதற்குப் பொறுப்பு. அதற்குப் பிறகு திருமங்கலம் மக்கள். இவங்களாலதான் நாடு குட்டுச்சுவரானது என்று சொன்னால் அதில் அர்த்தம் உண்டு.

   நீக்கு
  4. சரியாகச் சொன்னீர்கள் நெ த. மேலும் சினிமா நடிகர்களும் சமுதாயத்தின் ஓர் அங்கம்தானே! அண்ணா , கலைஞர் கூட சினிமா உலகத்தில் கதை வசனம் எழுதி புகழ் பெற்று அரசியலில் நுழைந்தவர்கள்தானே!

   நீக்கு
 14. முகநூல் நண்பரின் (John Durai Asir Chelliah) பகிர்வு...

  சின்னப்பதேவருடன் சிவாஜி...! இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது... இருக்கிறது...!

  எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்களுக்கு மேல் எடுத்த தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பதேவர்... என்ன காரணத்தினாலோ, சிவாஜியை வைத்து ஒரு படம் கூட எடுத்ததில்லை...

  அந்த வருத்தம் சிவாஜியின் உள்மனதுக்குள் உறுத்திக் கொண்டேதான் இருந்தது...

  தன்னை வைத்து ஒரு படம் கூட எடுக்காத, தன்னை ஓரம் கட்டி ஒதுக்கி வைத்த அந்த சின்னப்பதேவருக்கான மணிவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன...

  யாருமே எதிர்பார்க்காத வண்ணம், அந்த விழாவில் ஆர்வத்துடன், தானே முன்வந்து கலந்து கொண்டு, சின்னப்ப தேவருக்கு மலர் மாலை சூட்டி, மலர்க்கிரீடம் வைத்து, தன் மனப்பூர்வமான அன்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தார் சிவாஜி...

  இதுவல்லவோ பெருந்தன்மைக்கு சாட்சி...!

  அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

  இதைப் போலவே, எம்.ஜி.ஆரை ஓரம் கட்டி ஒதுக்கி வைத்து விட்டு, சிவாஜியை மட்டுமே வைத்து 17 படங்கள் எடுத்த தயாரிப்பாளர் ஒருவர் இருந்தார்...

  அவர்தான் கே.பாலாஜி...

  ஆனால், ஒவ்வொரு வருடப்பிறப்பன்றும் யாரை மறந்தாலும், தன்னை வைத்து ஒரு படம் கூட எடுக்காத கே.பாலாஜியை, தன் வீட்டுக்கே வரவழைத்து, அன்பளிப்புகளை வழங்கி மகிழ்வது எம்.ஜி.ஆரின் வழக்கமாம்...

  பொதுவாக நம்மில் பலரும், பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ, அதன் பிரதிபலிப்பாகவே நாமும் நடந்து கொள்கிறோம்...

  இதுதான் இயற்கை...?!

  ஆனால், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இது போல நடந்து கொள்ளவில்லை...

  அன்போ, வெறுப்போ - பிறர் எதைக் கொடுத்தாலும், அன்பை மட்டுமே அவர்கள் பிரதிபலித்திருக்கிறார்கள்...

  அதனால்தான் இன்றும் அவர்கள் மக்கள் மனங்களில் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...

  “ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்...

  வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய் விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்...

  ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்”


  அன்பே தெய்வம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னொரு செய்தி படித்தேன் தி.தனபாலன். எம்ஜியாரை கோட்டையில் பார்த்து உதவி கேட்க நிறையபேர் வருவார்கள். அவர்களை ஒழுங்குபடுத்துவது, முன்னுரிமை கொடுத்து அனுப்புவது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது எம்.ஜியாரின் பெர்சனல் பாதுகாவலர் ராமகிருஷ்ணன் அவர்கள்.

   ஒரு தடவை ஒரு வயதான பெண், போட்டிருந்த நகை, கம்மல், மூக்குத்தியை பக்கத்தில் இருந்தவரிடம் கழற்றிக்கொடுத்துவிட்டு, வரிசையில் எம்.ஜி.ஆரைப் பார்க்க நின்றாராம். இதை ராமகிருஷ்ணன் கவனித்துவிட்டார். அந்தப் பெண் எம்.ஜி.ஆரிடம் சென்று, நான் ஏழை, ஒன்றுமே எனக்கு இல்லை, உதவி வேணும் என்று கேட்டபோது, எம்.ஜி.ஆர் நிறைய பணத்தை எடுத்து அவருக்குக் கொடுத்தார். பிறகு எம்.ஜி.ஆர் உண்மை அறிந்து, ராமகிருஷ்ணனிடம், ஏன் இதைப் பற்றி எனக்கு உடனே சொல்லலை என்று கேட்க, ராமகிருஷ்ணன், உதவி கேட்பது அந்தப் பெண், உதவி செய்யப்போவது நீங்க, இதுல நான் எதுக்கு இடையில் புகுந்து பிறருடைய வாழ்வைக் கெடுக்கணும் என்று சொன்னாராம். எம்ஜிஆர் அதற்கு, இந்த நல்ல குணம்தான் உன்னை என்னோடு வைத்திருக்கிறது, அந்த நல்ல குணத்தை விட்டுவிடாதே என்றாராம்.

   ஸ்பாண்டேனியஸ் உதவும் குணம் எம்.ஜி.ஆரை புகழ் ஏணியின் உச்சியில் வைத்தது. இது கைம்மாறு கருதிச் செய்தது அல்ல.

   அதிருக்கட்டும்.... தாயைத் தெய்வமாகப் போற்றியவர்கள் பெரிய நிலைக்குப் போனதை அவதானித்திருக்கிறீர்களா? எம்.ஜி.ஆர், சிவாஜி, கருணாநிதி....

   நீக்கு
  2. சிறப்பான கருத்துரை எழுதிய திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி.

   நீக்கு
  3. தாயைப் போற்றாதவர்கள் யாருமே இல்லை. முதல்வர் என்று ஆனபின் அவர்களின் போற்றுதல்கள் உலகமறிகிறது.

   நீக்கு
  4. எங்கோ எப்போதோ ப(பி)டித்தது...

   மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன் (எம்.ஜி.ஆர்) அவர்களையே எடுத்துக்காட்டாக :-

   அவரின் தாயான சத்யபாமா அவர்களின் காலில் வணங்கிவிட்டுத்தான், முக்கிய இடங்களுக்கும், முக்கியமான பணிகளுக்கும் செல்வார்...

   அவரது தாயைத் தவிர வேறு இருவரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றார்... அதுவும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்தில், பலபேர் முன்னிலையில் விழுந்தார் என்பதை நம்ப முடிகிறதா...?

   எம்.ஜி.ஆருக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்த எம்.கே.ராதா அவர்கள் - ஒருவர்...

   இன்னொருவர் இயக்குனர் சாந்தாராம் அவர்கள்...

   ஒரு பாடல் :-

   மண்ணில் வரும் செடிகொடிகள் எவ்வளவு வகைகள் தான்...
   மரமோ கொடியோ தண்ணி மட்டும் ஒன்றே தான்... பலவித மரங்கள் என்ன... மரத்தில் பழங்கள் என்ன... நிறத்தில் ருசியில் ஒவ்வொன்றும் வேறதான்...

   பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா...?
   காயாய் இருப்பதால் கொய்யா கசக்குமா...?
   நல்ல வயிற்றில் பிறந்தா நல்லவனே தாண்டா...
   கெட்டது செய்ய மாட்டான் வல்லவனே தாண்டா...
   அவனே மனிதன் அதை நீ உணரு...

   பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...
   இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா...
   தெய்வம் அது தாயுக்கும் கீழே தான்...
   எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலே தான்...
   அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழே தான்
   எந்தன் தாய் அவளும் சாமிக்கு மேலே தான்...

   நீக்கு
  5. ​நீங்கள் சொல்லும் அந்த இரண்டு படங்களையும் முன்னர் எப்போதோ பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறேன். அல்லது இங்கு, தளத்தில்தான் என்று நினைக்கிறேன்.​

   நீக்கு
  6. டிடி செம கருத்துகள் அனைத்தும்...

   பாடல்களுடன்!!! செம..

   கீதா

   நீக்கு
 15. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.. என்று கொண்டாடி உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். சினிமாவிலும் இருந்ததால், இது நன்றாகவே தெரிகிறது.

  தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.. என்று வாழ்ந்தோரும் உண்டோ உலகினில் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இருக்கிறேன்... தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று உணர்ந்தவன் நான்... அம்மா பிள்ளை என்று பெயரெடுத்த நான், சிறுவயதில் எனது அப்பா சாப்பிடாமல், நான் சாப்பிட மாட்டேன் என்று எனது அம்மா சொல்வார்கள்... ஒருமுறை ஏதோ ஒருகுழுவின் மூலம் திருமலை சென்ற எனது அப்பா, அங்கு இருந்த கூட்டத்தில், ஒரு சிறு குழந்தை தாய்ப்பாலுக்காக அழுத நிகழ்வை பார்த்தவுடன், உடனே கிளம்பி ஊருக்கு வந்து விட்டார்... தரிசனமே செய்யவில்லை... வீட்டில் வந்தவுடனேயே என்னை தூக்கிக்கொண்டு அழுதாராம்... "இவனை விட்டு இனிமேல் எங்கும் போக மாட்டார்" என்றாராம்... இவையெல்லாம் சொன்னது எனது அம்மா... எனது அம்மா இல்லை இன்று... ஆனால் இன்று எனக்குள் இருக்கிறார்... அம்மாவுமாகிய எனது அப்பாவை வணங்கினால் போதாதா எனக்கு...?

   நீக்கு
  2. நிச்சயம் போதும்.
   அருமையான நிகழ்வைச் சேர்த்துச் சொன்னதற்கு நன்றி.

   என்னவோ தெரியவில்லை, இவ்வுலகில் அப்பாபற்றிப் பேசுவோர் குறைவுதான்!

   நீக்கு
  3. ஏகாந்தன் அண்ணா அப்பாவை வணங்குபவர்களும் உண்டு. பெரிதாக நல்ல உதாரணமாகவும் கொண்டாடுபவர்கள் உண்டு. ஆனால் பொதுவெளியில் பேசப்படுவதில்லை. இங்கு டிடி சொல்லிவிட்டார்.

   நெல்லையும், ஸ்ரீராமும் கூட சொல்லியிருக்காங்க...என்று நினைவு.,

   கீதா

   நீக்கு
  4. அந்த தசரத ராமனையும், நம்ப நெல்லை, ஸ்ரீராமையும் தாண்டி யாராவது உண்டா எனப் பார்த்ததில், டிடி கிடைத்தார்..

   நீக்கு
 16. //வயதான பெண், போட்டிருந்த நகை, கம்மல், மூக்குத்தியை பக்கத்தில் இருந்தவரிடம் கழற்றிக்கொடுத்துவிட்டு, வரிசையில் எம்.ஜி.ஆரைப் பார்க்க நின்றாராம்//
  வீட்டிலேயே கழற்றி வைச்சுட்டு வந்திருக்கலாம்! இங்கே வந்து ஏன் அனைவரும் பார்க்கும் வகையில் கழற்றி வைக்கணும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த இடத்தில், அவரிடம் கேட்டால் உதவி கிடைக்கும் என்பது தெரிந்ததால் (பணம் கிடைக்கும் என்று தெரிந்ததால்) அவசரஅவசரமாக இந்த வேடம்.... ஆசைக்கு எல்லை உண்டா?

   நீக்கு
 17. // மையிட் டெழுதிய விழிகளைக் கண்டு
  மைதொட் டெழுதினேன் இன்று - இப்படி இருந்தால் குறள் //

  நெ.த ஐயா அவர்களுக்கு : குறளுக்கு ஏற்ற பாட்டு வேண்டாமோ...?

  மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்... -
  வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்...
  காதல் மழை பொழியும் கார் முகிலா... - இவள்
  நெ.தமிழன் நான் இருக்க பேரெழிலாய்... (2)

  வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்... -
  இளம் - வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்... (2)
  கூனல் பிறை நெற்றியில் குழலாட...
  கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட... (2)
  கலை மானின் இனம் கொடுத்த விழியாட- ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
  கலை மானின் இனம் கொடுத்த விழியாட -
  அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட...!

  இங்கே சொடுக்கி ரசிக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது வாலி எழுதிய பாடல். சிவாஜிக்கு ரொம்பப் பிடித்த பாடல். வாலியைப் பார்க்கும்போதெல்லாம் இந்தப் பாடல் வரிகளை சிவாஜி பாடி வரவேற்பாராம்.

   இந்தப் பாடல் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. தமிழைச் செதுக்காமல் கணீர் குரலில் பாடிய டி.எம்.எஸ் எங்கே இப்போதுள்ள பாடகர்கள் எங்கே

   நீக்கு
  2. தனபாலன்.. மறுபடியும் ஒரு பாடம்..

   லிங்க் முதலானவற்றை பின்னூட்டத்தில் எப்படிக் கொண்டு வருவது?

   நீக்கு
 18. மேலே இருக்கும் பத்து நடிகைகளில் சிநேகாவையும், சிம்ரனையும் தவிர்த்து மற்றவங்க யாருனே தெரியலை! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்களுக்கும் தெரியாது!

   நீக்கு
  2. கேஜிஜி சார்.... தயவு செய்து ஸ்ரீராமை கோபப்படுத்தாதீர்கள். 'எனக்கும் தெரியாது'ன்னு சொன்னா ஓகே. ஸ்ரீராமையும் சேர்த்துக்கொண்டு 'எங்களுக்கும்'னு சொல்லலாமா?

   சிநேகா ப்ரசன்னா, சமந்தா, அனன்யா(? எங்கேயும் எப்போதும்), சிநேகா-திருமணத்துக்கு முன், அனுஷ்கா, அரவிந்த் கேஜ்ரிவால் இல்லை இல்லை காஜல் அகர்வால், ??, கீர்த்தி சுரேஷ், சிம்ரன், யாஷிகா ஆனந்த் (பிக் பாஸ் 2).

   நீக்கு
  3. எல்லா நடிகைகளையும் தெரிந்து வைத்திருக்கும் நெல்லைத்தமிழனுக்கு ஏதேனும் சிறப்புப் பட்டம் தரலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

   நீக்கு
 19. // மைதொட் எழுதிய கவிதையைக் கண்டு
  மையலாய்ப் பார்த்தாள் எனை //

  மையேந்தும் விழியாட... மலரேந்தும் குழலாட...
  கையேந்தும் வளையாட... நான் ஆடுவேன்...
  குழல் தந்த இசையாக...
  இசை தந்த குயிலாக...
  குயில் தந்த குரலாக நான் பாடுவேன்...

  உறவென்னும் விளக்காக... உயிர் என்னும் சுடராக...
  ஒளிவீசும் உனக்காக நான் வாழுவேன்...
  விரல் கொஞ்சும் யாழாக...
  யாழ் கொஞ்சும் இசையாக...
  இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்...

  இங்கே சொடுக்கி ரசிக்கலாம்

  பதிலளிநீக்கு
 20. // மையலாய்ப் பார்த்தவள் பொன்முகம் என்னை
  தையலாய்த் தைய்த்தது ஏன் //

  வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்
  விழி மட்டும் தனியாக வந்தாலும்
  வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று
  பெறுகின்ற சுகமென்று ஒன்று...

  தூங்காத கண்ணென்று ஒன்று
  துடிக்கின்ற சுகமென்று ஒன்று
  தாங்காத மனமென்று ஒன்று
  தந்தாயே நீ என்னைக் கண்டு

  இங்கே சொடுக்கி ரசிக்கலாம்

  நெ.த ஐயா அவர்களுக்கு → நலம் புனைந்துரைத்தல் ← அதிகாரத்தை குறளின் குரலாக முன்பு எழுதினேன்... அதில் தேர்வு செய்த பத்து பாடல்கள் போக, மீதம் உள்ளவை நிறைய உள்ளன... அதில் உள்ளது தான் மேலே உள்ள சில பாடல்கள்... நேரம் கிடைக்கும் போது அந்த பதிவை வாசிக்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 21. //எங்க ஆள் படம் போட்டிருந்தால்... //

  இதை யாரும் கவனிக்கவில்லையே...

  யார் அது...?

  இனிய புன்னகை தவழும் முகம் vs சீரியஸ் முகம் - யார் என்று பாடிடுவோம்...!

  பதிலளிநீக்கு
 22. // லிங்க் முதலானவற்றை பின்னூட்டத்தில் எப்படிக் கொண்டு வருவது? //

  (நாம் எழுதும் பதிவில் அல்ல.பின்னூட்டத்தில் மட்டும்) வழக்கமாக நாம் என்ன செய்வோம்...?

  காணொளியில் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன் என்று "youtube" இணைப்பை கொடுப்போம்... அதாவது இப்படி : -
  https://www.youtube.com/watch?v=rUmL6PFD1OE

  இதை வாசகர்கள் என்ன செய்வார்கள்... கவனிக்க → வீட்டுக்கணினி அல்லது மடிக்கணினியில் ← வாசிப்பவர்கள், அதை தேர்வு (copy) செய்து, இன்னொரு tab-ல் "paste" செய்து பார்ப்பார்கள்... "அப்படியா...?" - என்று இந்தப்பக்கம் கில்லர்ஜி முறைக்கிறார்... "எனது முன்தினம் பதிவிலே ஒரு காணொளி போட்டேன்... அதை யாரும் பார்க்கவில்லையே... அதைப்பற்றி கருத்து ஏதும் காணவில்லையே...?" - உண்மையான கோபம் தான்... பிறகு கருத்துரைகள் வந்தது வேறு விசயம்...! ஏனென்றால் அவசர உலகம்... அதுவும் ஏழாம் அறிவை தொலைத்து விட்டு, ஆறாவது வீர விரல் - கைபேசி உலகம்...!

  போதும் DD... விசயத்தை சொல்லுங்க...

  ஸ்ரீராம் சார்... சிரமம் என்றால் சேமித்து கொள்ளுங்கள்... → <a href=1>2</a> ←

  1 = இணைப்பு இங்கே... அதாவது மேலே சொன்ன இணைப்பு : https://www.youtube.com/watch?v=rUmL6PFD1OE

  2 = இணைப்பின் விளக்கம் - உங்கள் விருப்பம் போல - Example - இங்கே சொடுக்கி ரசிக்கலாம்

  அவ்வளவு தானா DD...?

  இல்லை... தொடரும்...

  நீங்கள், நான் கொடுத்த "youtube" இணைப்பை இணைத்து ஒரு கருத்துரை சொல்லுங்கள்...

  கூறினால் தான் அடுத்த பாட்டு... தேவசேனையும், அவர்களின் மருமகள் விரலி மஞ்சள் அழகியும்...!

  பதிலளிநீக்கு
 23. பதில்கள்
  1. இதுவே பேஸ்புக் ஸ்டேட்டசுக்கும் பொருந்துமா? அங்கும் இதேபோல ஸ்டேட்டஸில் லிங்க் வரவழைக்க முடியுமா?

   நீக்கு
  2. ஆகா... சூப்பர்...

   "லிங்கா...? எப்படி...!" என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்... அப்போது கிடைக்காத மகிழ்ச்சி இப்போது... மிக்க நன்றி...

   ஃபேஸ்புக் இணைப்பு இதே போல் இங்கு... கவனிக்க இங்கு கொடுக்கலாம்...

   அங்கும் முடியும்... ஆனால்...

   Facebook status = WhatsApp status...

   Facebook status - யாரும் பார்ப்பதில்லை...!

   Facebook link எப்படி என்றால், லிங்க் கொடுத்தவுடன் எண்டர் (enter) தட்டக்கூடாது... சிறிது நொடி கழித்து, நம் இணைப்பின் முன்னுரை வந்தபின் எண்டர்...!

   நீக்கு
  3. நான் கொடுத்த "youtube" இணைப்பை இணைத்து ஒரு கருத்துரை சொல்லுங்கள்.//

   சூப்பர் ஸ்ரீராம் சொல்லி விட்டீர்கள்.
   நான் முயற்சி செய்தேன் வரவில்லை. கற்பூர புத்தி வேண்டுமோ! நான் வாழை மட்டை போலும்

   நீக்கு
  4. //கூறினால் தான் அடுத்த பாட்டு... தேவசேனையும், அவர்களின் மருமகள் விரலி மஞ்சள் அழகியும்...//

   மஞ்சள் அழகியை பார்க்க ஆவல்.

   நீக்கு
  5. இதோ இங்கே இருக்காங்க மஞ்சளழகி : மஞ்சளழகி

   நீக்கு
  6. முந்தயப் பக்கம் உங்களை https://www.ntnews.com/gallery/ListSearch.aspx?name=Tamanna -க்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.

   நீங்கள் அந்தப் பக்கத்தை பார்க்க விரும்பா விட்டால், முந்தைய பக்கத்திற்குச் செல்லலாம்.

   க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  7. டிடி, ஸ்ரீராம் நானும் முயற்சி செய்தேன் எனக்கு வரவில்லையே...

   டிடி நீங்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் சரியாக என் மண்டையில் ஏறவில்லை என்று நினைக்கிறேன்...

   கீதா

   நீக்கு
 24. சோதனை முயற்சி
  எல்லோரும் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, ஸ்ரீராம் அவர்களின் படத்தை இந்த லிங்க்கில் க்ளிக் செய்து எல்லோரும் பார்க்க ஏற்பாடு செய்துள்ளேன்.
  ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 25. எங்கள் ப்ளாக் ஜூலை 17 பதிவில் கேட்கப்பட்ட படப் புதிருக்கான விடை இங்கே சொடுக்குங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 404. That’s an error.

   The requested URL was not found on this server. That’s all we know. /// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதான் வந்திருக்கு! :)

   நீக்கு
  2. அப்பீன்னா...அவுங்களுக்குமே விடை தெரியலேதுன்னு அர்த்தம்.

   நீக்கு
  3. https://photos.google.com/photo/AF1QipMEwmVvXp34XIGkvVV9V1PrdTYCSlC0_a-uyVvX காப்பி & பேஸ்ட் பண்ணிப்பாருங்க!

   நீக்கு
  4. கௌதமன் சார்... அப்படி செய்தாலும் வராது... உங்களின் ஜிமெயில் உள்ள அனைவரும் தான் பார்க்க முடியும்... கீழே விளக்கம் கொடுத்துள்ளேன்...

   நீக்கு
  5. அப்படியா? நன்றி. பரிசோதித்துப் பார்த்து, corrective action எடுக்கிறேன்.

   நீக்கு
 26. நடிகை புதிரைப் பார்த்ததும் பழைய குமுதம் இதழ்கள் நினைவிற்கு வந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சார்! அதுவும் சரிதான்! சுவாரஸ்யத்திற்காகத்தான் எல்லாம்!

   நீக்கு
 27. கேள்விகள் குறைவாக இருந்தாலும், பதில்கள் நிறைவு.
  கேள்விகள் அனுப்பும் பொழுது, ஒரு கேள்வியோடு தொடர்ந்து இன்னொரு கேள்வியையும் கேட்டால், இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்து விடுகிறீர்களே,ஏன்?(இதை அடுத்த வாரத்திற்கான கேள்வியாகவும் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? எங்கள் கவனக்குறைவுதான் காரணம். பார்க்கிறேன்.

   நீக்கு
 28. @நெல்லை: கோவிலுக்கு செல்வது எதற்காக என்று கேட்டுவிட்டு, அதற்கு நம் தயாரிப்பு என்ன? என்று கேட்டிருக்கிறீர்கள். வேறென்ன? டிக்கெட் புக்கிங், ஆன் லைன் தர்ஷன் புக்கிங், ஹோட்டல் புக்கிங் இவைதான். ஓகே,ஓகே சும்மா தமாஷுக்குத்தான் சொன்னேன், அடிக்க வராதீர்கள். ;))

  பதிலளிநீக்கு
 29. குழந்தை போல சிரிப்பா? அந்தக்கால நடிகைகளில் சாவித்திரி, இப்போது அவரை பிரதி எடுத்த கீர்த்தி சுரேஷ்.
  சினேகாவின் சிரிப்பு கொஞ்சம் செயற்கையாக இருக்கும்.
  சீரியஸ் முகம் என்றால், அப்போது தேவிகா, சௌகார் ஜானகி. இவரை அழு மூஞ்சி என்று சொல்பவர்கள் உண்டு. அழு மூஞ்சி என்றால் வெண்ணிற ஆடை நிர்மலாதான்.
  இப்போது சீரியஸ் முகம் என்றால் அனுஷ்கா. அதனால்தான் கம்பீரமான வேடங்களில் கச்சிதமாக பொருந்துகிறார்.
  ஸ்ரீவித்யா கூட கொஞ்சம் சீரியஸ் முகம்தான்.

  பதிலளிநீக்கு
 30. அழகான சிரிப்புக்கு சொந்தமான நடிகர் யார் என்று ஏன் கேட்கத்தோன்றவில்லை?
  அந்த காலத்தில் ஜெய்சங்கர். அவர் சிரிக்கும் பொழுது அவரின் சின்னக்கண்களும் சேர்ந்து சிரிக்கும்.
  பின்னர் சரத் பாபு. இப்போது தலை அஜித்.
  வசீகரா என்று தாமரையை எழுத வைத்த மாதவனை விட முடியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லேப்டாப் ஸ்கிரீனைத் துடைத்து மாளலை... ஹா ஹா

   நீக்கு
  2. நடிகைகள் பற்றிக் கேள்வி கேட்டால் ஆண்கள், பெண்கள் எல்லோரும் உற்சாகமாக பதில் சொல்வார்கள். நடிகர்கள் பற்றிக் கேள்வி கேட்டால் சில பெண்கள் மட்டுமே பதில் சொல்வார்கள். உதாரணம் பதினான்காம் தேதி ஜூலை சினிமாப் படப் புதிரில் ஜாக்கி ஷெராஃப் - யாரும் கண்டுபிடிக்கவில்லை!

   நீக்கு
  3. பானுக்கா மேடி சிரிப்புதான் செம க்யூட்! அதில் ஒரு இன்னொசென்ஸ் இருக்கும்...

   கீதா

   நீக்கு
 31. பயணம் செய்ய உங்களுக்குப் பிடிக்குமா?

  பிடிக்கும் எனில் எத்தகைய பயணங்கள்? கோயில் சுற்றுலா? பழங்காலத்து அகழாய்வுகள்? அல்லது கோவா, குலு, மனாலி போன்ற சுற்றுலா இடங்கள்?

  பழங்காலத்து அகழாய்வுகளில் தொல் குடிகள் பற்றிய விபரங்களைப் படிக்க நேரும்போது உங்களுக்கு என்ன உணர்வு வரும்?

  கீழடி அகழாய்வில் சமையல் பாத்திரங்களைப் பார்த்ததும், இதைச் சமைத்த பெண்மணி எப்படி இருந்திருப்பாளோ எனத் தோன்றியது எனக்கு! உங்களுக்கும் அப்படித் தோன்றுமா?

  மன்னர்கள் கட்டிய கோயில்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? ஒரு சிலர் எளிய மக்களை அடிமைப்படுத்திக் கட்ட வைத்ததாகச் சொல்லப்படுவது குறித்த உங்கள் கருத்து?

  அநேகமாக எல்லாக் கோயில்களும் நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் யோக முறையில் சுட்டிக்காட்டும்படியான பிரகாரங்களைக் கொண்டது. இங்கே கருவறை தான் முக்கியத்துவம் பெறும்.அதன் தாத்பரியம் புரிந்தே எல்லோரும் கோயிலுக்கு வருகிறார்களா?

  ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு ஆகமத்தைச் சார்ந்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது? யார் ஏற்படுத்தினார்கள்? அதை இன்றைய நாட்களில் கண்டு அறிந்து சொல்வோர் சொல்லுவது உண்மையாக இருக்குமா?

  குலதெய்வக் கோயில்கள் பலவற்றில் ஒரு குடும்பத்தின் முன்னோரே இறந்த பின்னர் தெய்வமாக வணங்கப்படுகிறார்.அத்தகைய கோயில்கள் தவிர்த்து இருக்கும் மற்றக் கோயில்கள் எல்லாமே வடநாட்டுத் தெய்வங்கள் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணு, ராமன்,கிருஷ்ணன் ஆகியோருடன் சம்பந்தப்பட்டே இருக்கின்றனர். ஆனாலும் அவர்களை மட்டும் தனித்துத் தமிழ் தெய்வங்கள் என்று சொல்லுவது ஏன்? வட மாநிலங்களிலும் இத்தகைய தெய்வங்கள் உண்டு! உதாரணமாக நாம் வணங்கும் மாரியம்மன் அங்கே சீதளா தேவியாக வணங்கப்படுவாள். இங்கே முருகன் என்றால் அங்கே கார்த்திகேயன்! இப்படி இருக்கையில் தெய்வங்களுக்குள் பேதம் ஏன்?

  பரசுராமரின் அம்மா ரேணுகா தேவி தான் உடலோடு மாரியம்மனாகவும், தலையோடு ரேணுகா தேவியாகவும் உருப்பெற்றாள் என்பதை எல்லாம் கட்டுக்கதை எனச் சொல்லுவதை நீங்கள் நம்புகிறீர்களா?

  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வம் குலதெய்வமாக இருக்கப் பலருக்கும் சாஸ்தா குலதெய்வமாக ஆனது எவ்வாறு? சாஸ்தாவும் ஐயப்பனும் ஒன்றா? இது பற்றிய என் கருத்துக்கள் தனியாக இருக்கின்றன.அவற்றைப் பின்னர் பகிர்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பிடிக்கும் எனில் எத்தகைய பயணங்கள்?// - இறைவா.... ஞாபக சக்திக்குப் பெயர் போனவங்களுக்கு நாலு நாள் முந்தைய சமாச்சாரமே மறந்துபோகுதே... ஏம்ப்பா இப்படிக் கொடுமைகள் செய்கிறாய்... 'ஞாயிறு படங்கள்' மூன்று தீவாளி கண்டும் ஓடிக்கொண்டிருக்கு. அதில் ஒரு 'கோவில்', 'அகழ்வாய்வுகள்' பார்த்த ஞாபகம் எனக்கு இல்லையே...

   /உங்களுக்கும் அப்படித் தோன்றுமா// - எனக்கு அந்தச் சமையலைச் சாப்பிடக் காத்திருந்தவர்களின் வயிறுதான் கண்ணில் தோன்றியது.

   ஆமாம்...கீசா மேடம்... கேள்விகளைத் தவறான முகவரிக்கு அனுப்பிட்டீங்களே. "ஆன்மீகம்' மாத இதழுக்குப் போகவேண்டிய கேள்விகளை எங்கள் பிளாக்குக்கு அனுப்பிய தைரியத்தைப் பாராட்டறேன். இதுக்கு யார் பதில் சொல்வாங்கன்னே புரியலையே...

   நீக்கு
  2. அடுத்த வாரம் பதில் அளிப்போம் .

   நீக்கு
 32. // எங்கள் ப்ளாக் ஜூலை 17 பதிவில் கேட்கப்பட்ட படப் புதிருக்கான விடை இங்கே சொடுக்குங்க! // இதில் இணைப்பு தான் முழுமையாக இல்லை என்பதால் தான், தவறாக வருகிறது...

  பின்னூட்டதிற்கான நம் லிங்க் → <a href=1>2</a> ←

  இதில்
  1 என்பது இணைப்பு முகவரி (இடைவெளி கூடாது)
  2 என்பது நாம் எழுதும் குறிப்பு ---> இங்கே சொடுக்குங்க...! (இடைவெளி இருக்கலாம்)

  முதலில் 1-யை என்னவென்று முடிவு செய்வோம்...

  அன்றைய புகைப்பட புதிர் பதிவில், கடைசி படத்தில் உள்ளவர் லதா மங்கேஸ்வர் என்று, வல்லிசிம்ஹன் அம்மா அவர்கள் சொல்லி விட்டார்கள்...

  1) இப்போது நான் இணையத்தில் "லதா மங்கேஸ்வர்" என்று தட்டச்சு செய்து தேடுகிறேன்...
  2) எனது Browser தமிழில் இருப்பதால், படங்கள் என்பதை சொடுக்குகிறேன்... (இல்லையெனில் Click Images)
  3) ஐ...! ஒரு நல்ல படம் கிடைத்து விட்டது... அந்த படத்தை சொடுக்குகிறேன்...
  4) அந்த படத்தின் மீது mouse-யை கொண்டு சென்று right click செய்து, வரும் பலவற்றில் "copy image address" என்பதை சொடுக்குகிறேன்...
  5) அதை ஒரு இடத்தில் சேமித்துக் வைத்துக் கொண்டேன்...

  அது இதோ :-
  http://3.bp.blogspot.com/-5if-6OuBtHY/UukuZ0wIRBI/AAAAAAAACrU/577ePOEClw4/s1600/4.gif - இது தான் 1

  இங்கே சொடுக்குங்க...! - இது தான் 2

  மறுபடியும் பின்னூட்டதிற்கான நம் லிங்க் :-
  → <a href=1>2</a> ←

  மாற்றியபின் :-
  → <a href=http://3.bp.blogspot.com/-5if-6OuBtHY/UukuZ0wIRBI/AAAAAAAACrU/577ePOEClw4/s1600/4.gif>இங்கே சொடுக்குங்க...!</a> ←

  மாற்றியபின் மேலே உள்ளதை அப்படியே காப்பி செய்து, கருத்துரைப்பெட்டியில் பேஸ்ட் செய்து, வெளியிடு என்பதை சொடுக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 33. தவறான இணைப்பு :
  https://www.google.com/url?sa=i&source=images&cd=&ved=2ahUKEwjlrZ-o9N7jAhUBi3AKHYFKCbwQjRx6BAgBEAU&url=https%3A%2F%2Fwww.ntnews.com%2Fgallery%2FListSearch.aspx%3Fname%3DTamanna&psig=AOvVaw0tBTyCvCVWZeNIERuJYsc9&ust=1564653948219949

  சரியான இணைப்பு :
  https://www.ntnews.com/gallery/ListSearch.aspx?name=Tamanna%20Bhatia

  இதோ இங்கே மஞ்சளழகி

  வெற்றி... வெற்றி... தேவசேனாவின் மருமகள் என்று நினைத்தது சரி தான்... ஜெய் மகிழ்மதி...!

  பதிலளிநீக்கு
 34. முடிவாக...

  கருத்துரையில் "பின்னூட்டத்திற்கான நம் லிங்க் ஸ்கிரிப்ட்" கொடுத்த பின் சரி பார்க்கலாம்... "வெளியிடு" பக்கத்தில் உள்ள "முன்னோட்டம்" என்பதை சொடுக்கினால், சின்னதாக வரும் கருத்துரைப்பெட்டியில் நமது கருத்துரை இருக்கும்...

  மெதுவாக scroll செய்து, நம் இணைப்பை அங்கேயே சொடுக்கினால், நம் லிங்க் ஸ்கிரிப்ட் சரியாக இருந்தால், அந்த இணைப்பிற்கு சென்று விடும்...! மீண்டும் பதிவை browser-ல் refresh செய்தால், நம் கருத்துரை கருத்துரைப்பெட்டியில் வந்து விடும்... "மாற்று" என்பதை சொடுக்கி பிறகு "வெளியிடு" செய்யலாம்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது நன்றாகப் புரிந்தது டிடி மிக்க நன்றி!

   கீதா

   நீக்கு
  2. மிக்க நன்றி சகோதரி கீதா... உங்களின் ஒவ்வொரு கருத்துரையை வாசிக்கும் போது, ஞாபகம் வருவதில் ஒன்று :-

   உற்சாக கருத்துரை கொடுப்பதில், நீங்கள் சகோதரி மஞ்சு அவர்களின் தங்கை என்றே நினைப்பேன்... நன்றி...

   நீக்கு
 35. கோவில் விசிட் என்பது
  சிறிய வயதில் : சந்தோஷம்.
  வளர்ந்த வயதில் : ஆர்வம்.
  பெரிய வயதில் : மன அமைதி, மன நிம்மதி. சில நாட்களுக்கு முன் ஆன்மீகம் குறித்து பேசும் போது இதனை அப்படியே மகள்களிடம் சொன்னேன்.

  பதிலளிநீக்கு
 36. கேள்விகள் அதற்கான பதில்கள் சூப்பர்.

  கோயில் செல்வதற்கான பதில் அதூம் சிறிய வயதில் சந்தோஷம் என்று தொடங்கி வயதானதும் மன அமைதி நிம்மதி என்று சொன்ன பதில் அட்டகாசம்.

  அது சரி பெண் நடிகைகள் ஃபோட்டோ மட்டும்தானோ? ஆண் நடிகர்கள் போட்டோ போட்டு கேள்வி எல்லாம் வராதோ? ஹிஹிஹி எல்லாம் ஜொல்லத்தான்...நாங்க சொல்ல மாட்டோம்னு எல்லாம் நினைக்காதீங்க..போட்டுத்தான் பாருங்களேன்!!! ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 37. 'ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே ஒளிந்து இருக்கின்ற குழந்தையைக் கண்டுபிடியுங்கள். அந்தக் குழந்தையோடு பேசுங்கள். அதனுடன் பேசுவது, பழகுவது, ஒத்துழைப்பு பெறுவது எல்லாமே எளிது. ' //

  அதே அதே! அதுக்குத்தான் சொல்லுவது போல குழந்தை போல மனதை வைத்துக் கொள்ள வேண்டும் என்று! கள்ளம் கபடமற்ற உள்ளம்!

  //எனக்குத் தெரிந்து வங்கிகள், தபால் அலுவலகங்கள், மருத்துவமனை போன்ற இடங்களில் பணிபுரிகின்ற பெண்கள் பலரும், இயல்பாக பொதுமக்களிடம் இன்முகத்துடன், பரிவுடன் நடந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் அனுபவம் வேறு. பல பெண்கள் "இது கூடத் தெரியாம வந்திருக்கீங்க" என்று சொன்னவர்களும் உண்டு.

  இன்னும் கொஞ்சம் மட்டமாகப் பேசியவர்களும் உண்டு...

  ஒரு வேளை நீங்கள் ஆண் என்பதால் இருக்கலாம் கௌ அண்ணா.

  இதைத்தான் பெண்ணுக்குப் பெண் எதிரினு சொல்றாய்ங்களோ?!!!! !!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சிடு சிடு முகத்துடன் இருப்பவர்கள் பெற்றோர் + வயதுவந்தோர் மனநிலை மேலோங்கி உள்ள நிலையில் இருக்கக்கூடும். அவர்களிடம் போய் நாம் குழந்தை கேட்பது போன்று ஏதேனும் கேட்டால், அவர்களிடமிருந்து பெற்றோர் கண்டிப்பு போன்ற 'இது கூட தெரியலையா ' response தான் வரும். அடுத்த பதிவுகளில் இன்னும் ஆழமாக அலசுவோம்.

   நீக்கு
 38. It is easier to talk with a child (in a man or woman) and communicate and get things done.//

  யெஸ் யேஸ்ஸு...மிகவும் சரியே..

  ஆனால் இதில் ஒரு சிலருக்குத்தான் இந்தக் குழந்தை மனது இருக்கிறதோ? சிலருடன் பேசுவதே அல்லது அப்ரோச் பண்ணுவதே கடினமாக இருக்கிறதே!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கும் விரிவான அலசல்களை வரும் வாரங்களில் பார்ப்போம்.

   நீக்கு
 39. ஒவ்வொருகாலத்திலும் ஒவ்வொரு பண்டிகை பிடித்தமானதாக இருந்திருக்கிறது. தலைநகர் வந்தபிறகு பல பண்டிகைகள் கொண்டாடுவதே இல்லை!

  கேள்வி பதில்கள் சிறப்பு. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!