செவ்வாய், 2 ஜூலை, 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை - தாகம் - துரை செல்வராஜூ


தாகம்
துரை செல்வராஜூ 

********

சட. ..  சட ... என்று மழை இறங்கிய சத்தத்தைக் கேட்டு
விழித்துக் கொண்ட அன்னபூரணி எழுந்து அமர்ந்து
கடிகாரத்தை நோக்கினாள்...

அது ஏழரையைக் காட்டியது...

நல்லவேளை.. இன்னிக்கு பெரிய கார்த்திகை...
வீட்டுக்குள்ளே ஆயிரம் கஷ்டம் இருந்தாலும்
எல்லாரும் சந்தோஷமா வெளக்கேத்தி வைக்கிற நாளு...
அந்த நேரத்துல அடிச்சிக்கிட்டு ஊத்தாம இப்ப வந்து பெய்யுதே!..

அன்னபூரணிக்கு சற்றே ஆறுதல்...

'' தாழ்வாரத்துல சேலை காயப் போட்டிருந்தேனே... எடுத்தாச்சா மஞ்சு?...''

'' எடுத்து மடிச்சு வெச்சிட்டேன்.. அத்தை!...''

'' அவ.. அகிலா எங்கே?..''

'' பெரியப்பா போட்டோவப் பார்த்து படம் வரைஞ்சிக்கிட்டுக்கா!...''

'' பல்பு வேற மங்கலா இருக்கு.. வெளிச்சத்துல வரையலாமில்லே...''

சொல்லி முடிவதற்குள் எங்கோ ஒரு மூலையில்
டுட்டுட்... ட்ரூம்ம்ம்!.. - என்று இடியின் சத்தம்...

அதுவரைக்கும் குற்றுயிரும் குலைஉயிருமாக இருந்த
மின்சாரம் சட்டென நின்று போனது...

உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த
அரிக்கேன் விளக்கின் ஒளி கூடத்தில் பரவியது...

அந்த ஒளியையும் மீறியதாக
பூஜை மாடத்தின் கீழிருந்த நல்ல விளக்குகளின் சுடர்...

நல்ல விளக்குகளுக்கு நடுவே
மல்லிகைச் சரம் குங்குமப் பொட்டு
மகிழ்வான புன்னகை இவற்றுடன்
புகைப்படமாகிப் போன ஆறுமுகம்...

அண்ணன் முகத்தினை உற்றுப் பார்த்தாள் அன்னபூரணி...

' இந்தப் போட்டோ எப்போ எடுத்தது..ன்னு தெரியலையே...
அண்ணன் நெனைச்சுருக்குமா... இந்தப் போட்டோவ வெச்சித்தான்
நம்மளை கும்புடப் போறாங்கன்னு!...'

அதற்குள் சிவகாமியும் வீட்டின் மற்ற செல்வங்களும்
கூடத்துக்கு வந்து விட்டார்கள்...

சிவகாமி - அன்னபூரணியின் தம்பி தங்கவேலின் மனைவி..
மஞ்சு - மஞ்சுளா தங்கவேல் சிவகாமி தம்பதியினரின் மூத்த மகள்..
அகிலா - அவர்களது இளைய மகள்...
அருண் - எல்லாருக்கும் இளையவன்..

இந்த எல்லாரையும் விட வீட்டின் செல்லப்பிள்ளை - சுவாதி..
அன்னபூரணியின் ஒரே மகள்...

சமையலறையில் சிவகாமிக்கு வலது கை..

சிறு வயதிலேயே தந்தையை இழந்து -
அன்னபூரணிக்கு எல்லாமும் ஆனவள்...

பத்தாம் வகுப்பு வரைக்கும் தான் படிப்பு..
ஆனாலும் நுண்ணறிவு அதிகம்...
சக வயதினராகிய மஞ்சுவுக்கும் அகிலாவுக்கும் உற்ற தோழியானவள்...

புரட்டாசி மாதம் தான் தங்கவேல் துபாயில் இருந்து
வருடாந்திர விடுமுறையில் வந்திருந்தார்...

தன் மகள்களுக்குக் கொடுத்ததை விட
அக்கா மகளான சுவாதிக்குக் கொடுத்த நகைகள் தான் அதிகம்...

அதைப் பற்றி மஞ்சுவோ அகிலாவோ
கொஞ்சமும் குறைபட்டுக் கொண்டதில்லை..

அதற்குக் காரணம் பெரியப்பா ஆறுமுகம்...

அவர்தான் நீதி நெறிமுறைகளைச் சொல்லி வளர்த்தவர்...
அன்பின் வழி நின்று குடும்பத்தைக் கட்டிக் காத்தவர்..

சரி.. அவரது குடும்பம்??...

நாற்பதாண்டுகளுக்கு முன் அவருக்கும் கல்யாணம் சிறப்பாகத்தான் நடந்தது...

ஆனாலும் அடுத்த சில மாதங்களில் தம்பதிகளுக்கிடையே ஏதோ பிரச்னை..

இடையிலிருந்த மூடர்கள் சிலர் தலையீட்டு
மணவாழ்க்கையையே முறித்துப் போட்டார்கள்...

அதற்குப் பின் பலர் சொல்லியும் எதையும் கேட்கவில்லை ஆறுமுகம்...

மகனது வாழ்க்கை நிலைகுலைந்த சோகத்தில்
பெற்றவர்களும் போய்ச் சேர்ந்து விட
தங்கவேலுவுக்கும் அன்னபூரணிக்கும் தானே ஆலமரம் ஆனார்...

வயலும் வரப்பும் பொன்னும் மணியும் ஆடும் மாடும் சீதனம் என்று
அன்னபூரணிக்குக் கொடுத்து கல்யாணம் செய்து வைத்தார்...

நன்றாகப் படித்திருந்த தங்கவேலும் மணமாலை கொண்டு நின்றான்...

படித்ததற்கு ஏற்ற வேலை என்று
வெளிநாட்டிலிருந்து வாய்ப்பு ஒன்று வந்தபோது
தங்கவேலுக்கு தடுமாற்றம்...

அண்ணனையும் அக்காவையும் விட்டு விட்டு எப்படிச் செல்வது என்று...

ஆறுமுகம் தான் விடாப்பிடியாக அனுப்பி வைத்தார்...

கற்ற கல்வியின் பயன் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தது...
சாகுபடி அப்படியும் இப்படியுமாகத் தடுமாறினாலும்
குடும்பம் நிமிர்ந்து நின்றது..

அடுத்த பத்து வருடங்களுக்குள் மகள் சுவாதியுடன்
தனித்து நின்றாள் அன்னபூரணி...

விதி வலியது எனும்போது யார் தான் என்ன செய்யமுடியும்...

எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று நினைத்திருந்த வேளையில்
ஆறுமுகத்தின் தோள்களில் மீண்டும் சுமை ஏறிக் கொண்டன...

அதற்காக எள்ளளவும் மனம் தளரவில்லை...

தோள் என்று இருப்பதே பிறர் துன்பம் தாங்கத்தான் என்றிருப்பவர்
கலங்கி நிற்கும் தங்கையைத் தாங்கிக் கொள்ள மாட்டாரா?...

காலம் கடகட.. என்று ஓடியது...

சென்ற புரட்டாசியில் ஊருக்கு வந்திருந்த தங்கவேல் -
குலதெய்வ தரிசனம், மஹாளய பட்சம், நவராத்திரி, தீபாவளி - என,
எல்லாவற்றையும் குடும்பத்தினருடன் கொண்டாடி விட்டு

'' இந்த வருசத்துடன் விசா முடிகிறது.. வந்து விடுகின்றேன்...'' - என்றார்...

பதினைந்து வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டிலேயே கழித்து விட்டான்..
பிள்ளைகளின் வளர்ச்சியை அருகிருந்து காணக் கொடுத்து வைக்காதவன்!..
- என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும்

'' அங்கே என்ன சூழ்நிலையோ அனுசரித்துக் கொள்.. வீட்டைப் பற்றிய கவலை
உனக்கு வேண்டாம்.. நான் பார்த்துக் கொள்கிறேன்!..'' - என்றார் ஆறுமுகம்..

'' அண்ணே.. உங்களுக்கும் வயசு ஆகுது... உங்களுக்கு என்ன இருபது
வயசு...ன்னா நெனைச்சுகிட்டு இருக்கீங்க!.. ''

'' வயசு.. என்னப்பா வயசு?... மனசு தான் எல்லாத்துக்கும் காரணம்!...''
மனம் விட்டுச் சிரித்தார் ஆறுமுகம்...

அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை
அவரோடு சேர்ந்து காலதேவனும் சிரிக்கின்றான் என்பதை...

தங்கவேல் துபாய்க்குச் சென்ற சில தினங்களில்
ஐப்பசி பௌர்ணமி.. அன்னாபிஷேகம்..

விஸ்வநாதர் கோயிலில்
வருடாந்திர அன்னாபிஷேக கட்டளை நிறைவேற்றியாகி விட்டது...

பெரியவர் ஆறுமுகத்துக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள்..

கார்த்திகை அமாவாசையன்று -
காவேரி சுழித்துக் கொண்டு ஓடுகிறாள் .. பார்த்து விட்டு வருகிறேன்!..
- என்று திருவையாற்றுக்குச் சென்று தர்ப்பணம் செய்து விட்டு வந்தார்..

அடுத்து சில நாட்கள்.. மழை தூறிக் கொண்டிருந்த மதியவேளை...

'' சுவாதி.. தண்ணீர் கொண்டு வாம்மா!..'' - என்றவர்
அப்படியே திண்ணையில் சரிந்து விட்டார்...

துபாயிலிருந்து அலறியடித்துக் கொண்டு வந்தார் தங்கவேல்...
உடனடியாக வேலையை முறித்துக் கொண்டு வரமுடியாத சூழ்நிலை..

செய்ய வேண்டியவைகளைச் செய்து விட்டு
புறப்படும் வேளையில் மனம் கலங்கி நின்றார்..

அண்ணனின் குரல் காதருகில் கேட்டது -
" நான் பார்த்துக் கொள்கிறேன்!.." - என்று...

அவர்கள் வழக்கப்படி பதினோறாம் நாள் கடைத்தேற்றியாகி விட -
இன்று பதினாறாம் நாள்.....

பகலோ இரவோ எவ்வித பயமும் இல்லை... என்றாலும்
அந்தக் காலத்திலிருந்தே குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்து வரும்
பழனியும் பொன்னம்மாளும் இரவு தோறும் வீட்டின் முன் தாழ்வாரத்தில்
' ஆம்பளை இல்லாத வீடு!..' - என்று படுத்துக் கொள்வார்கள்...

வீட்டு வேலையாட்கள் என்றாலும் அவர்களுக்கும்
பாய் தலையணை போர்வை - என்று இவர்கள் கொடுத்திருந்தார்கள்..

பழனியும் பொன்னம்மாளும் வருவதற்கு இன்னும் சற்று நேரம் ஆகும்...

மழை வந்ததும் ஓடிப்போன மின்சாரம் முணுக்!.. - என்று வந்தது..

ஆனாலும் குறைவான வோல்டேஜ்..
அரிக்கேன் விளக்கைப் போல பல்புகள் மங்கலாக ஒளிர்ந்தன..

'' அத்தை டீ குடிக்கலாமா!..'' - என்றாள் மஞ்சு..

'' சாப்பிடப் போற நேரத்துல எதுக்கு டீ?...'' - என்று அதட்டினாள் சிவகாமி...

'' இருக்கட்டும் ... சில்லுன்னு குளிருக்கு ஒருவாய் சூடா இஞ்சி டீ
குடிச்சா நல்லா இருக்கும் தானே... சுவாதி.. அந்த விளக்கு..ல எண்ணெய்
இருக்கா பாரு..ம்மா!...''

சுவாதி எழுந்து சென்று விளக்குகளில் எண்ணெய் இட்டபோது -
திடீரென சாம்பிராணியின் மணம் கூடம் முழுதும் கமழ்ந்தது...

ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்...

' தூபக்காலில் தணல் இல்லை..
அப்புறம் எப்படி சாம்பிராணி வாசம்!..'

திடுக்கிட்ட சுவாதி எண்ணெய்க் கிண்ணத்தை அப்படியே வைத்து விட்டு
ஓடி வந்து சிவகாமியைக் கட்டிக் கொண்டாள்...

ஆனாலும் அந்தக் கூடத்தினுள் வளைய வந்து கொண்டிருந்தது
சாம்பிராணியின் வாசம்..

'' என்ன அத்தை இது?..''

பிள்ளைகள் அனைவரும் மருண்டு வெலவெலத்தனர்...

ஊரடங்கிக் கிடந்த அந்த வேளையில்
சாம்பிராணிப் புகையிடுவோர் எவரும் இலர்...

'' சரி..சரி.. பயப்படாதீங்க.. எல்லாரும் எங்கிட்ட வாங்க!..''
- என்றவாறு சிறகுகளைப் போல அன்னபூரணி கைகளை விரித்தாள்..

அவளது கைகளுக்குள் பிள்ளைகள் அடைக்கலமானதும்
அப்படியே அன்புடன் அரவணைத்துக் கொண்டாள்...

'' எப்படி அத்தை சாம்பிராணி வாசம் வருது?..
பேய் பிசாசு எதுவும் வந்திருக்கா?...'' - காதருகே கிசுகிசுத்தாள் அகிலா...

'' பேயாவது .. பிசாசாவது!.. அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா!...''
- ஆதரவுடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் அன்னபூரணி...

 அதற்குள்

'' ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்...''

சஷ்டி கவசத்தில் ஆழ்ந்திருந்தாள் சுவாதி...

சட்டெனப் பிரகாசம்.. இதோ மின்சாரம் வந்து விட்டது...

அதுவரைக்கும் மயங்கிக் கிடந்த பல்புகள் பளீரென விழித்துக் கொள்ள
பிள்ளைகள் எல்லாரும் '' முருகா.. முருகா!..'' - என்று கூச்சலிட்டனர்...

'' சரி.. சரி... எல்லாரும் சாப்பிட வாங்க!...'' - என்று ஆயத்தமானாள் சிவகாமி...

பிள்ளைகளும் சாம்பிராணி வாசத்தை மறந்தவர்களாக
உற்சாகத்துடன் சாப்பிடக் கிளம்பிய வேளையில்
அன்னபூரணி மட்டும் பூஜை மாடத்துக்கு அருகில் சென்றாள்...

பூஜை மாடத்துக்குக் கீழாக
மூன்றடி உயரத்துக்கு அண்ணனின் படம்..

மல்லிகைச் சரங்களுக்கிடையே சிரித்துக் கொண்டிருந்தார்..

அவருக்கு முன்பாக வாழை இலையில்
சாயங்காலம் விளக்கேற்றி விட்டு வைத்த படையல்..

அவல் பொரிகடலை, வாழைப்பழங்கள், தாம்பூலம்..
காசிச் செம்பு நிறைய தண்ணீர்...

பதினைந்து நாட்களாக அங்கு வைக்கப்படுவதை
அன்னபூரணி தான் தினமும் மாற்றி வைக்கிறாள்..

செம்பிலிருக்கும் தண்ணீரை வாழையடியில் ஊற்றி விட்டு
பொரிகடலையை கிணற்று மேடையில் வைத்து விடுவாள்..

வாழைப்பழம் தாம்பூலம் - இவை இலையோடு பசுவிற்கு ஆகிவிடும்...

ஏதோ ஒரு நினைவில்
வாழையிலையை உற்று நோக்கிய
அன்னபூரணியின் கண்கள் வியப்பால் விரிந்தன...

பொரிகடலையை கை வைத்து அள்ளிய தடம் தெரிந்தது...
நிறை செம்பாக இருந்த தண்ணீர் இரண்டு மடக்கு குறைந்திருந்தது...

ஃஃஃ

70 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, தமிழ் நெல்லை, வல்லிமா மற்றும் கோமதி அரசு அனைவருக்கும் அன்பின் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனி வரவிருக்கும் அனைத்து நட்புறவுகளுக்கும் நல்வரவும், வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. நன்றி துரை செல்வராஜு சார்...கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வணக்கம் அனைவருக்கும்

      நீக்கு
    3. நன்றி துரை. வந்திருக்கும் அனைவருக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவும் ,வணக்கமும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்!

      நீக்கு
    4. பேயானாலும் நல்ல பேயாக இருக்கார் ஆறுமுகம் அண்ணாச்சி! ஆறுமுகமாச்சே! பின்னே எப்படி இருக்கமுடியும்?

      நீக்கு
  2. இன்று எனது கதையைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை அனுப்பி கௌரவித்தவுங்களுக்கு எங்கள் நன்றி.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் துரை அண்ணா மற்றும் தொடரும் அனைவருக்கும்

    இன்று துரை அண்ணாவின் கதிய என்று மனம் சொல்லியது. அதே போல் அண்ணாவின் கதை இங்கு.

    கரன்ட் இப்பத்தான் வந்தது.

    ஆனா செம சில் வெதர்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை என்று அடித்தது கதிய என்று ஆகிவிட்டது ஹிஹிஹி மன்னிக்கவும்!

      கீதா

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    3. >>> கரன்ட் இப்பத்தான் வந்தது...<<<

      ஆஹா!..
      கதையில் தான் கரண்ட் போய்ட்டு வந்தது என்றால் அங்கே வீட்டிலும் அப்படித்தானா!...

      நீக்கு
    4. அண்ணா இப்பத்தான் இந்தக் கருத்தை அடிக்க வந்தேன் அதற்குள் உங்கள் கருத்து. அதே அதே எனக்கும் தோன்றியது...அட இங்குமா என்று

      கூடவே சாம்பிராணி மணம் வருதா என்றும் பார்த்துக் கொண்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  4. தாகம்! ஆஹா தலைப்பே சொல்லுதே ஏதோ...

    முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இன்னைக்கு ஒரு சதிராட்டம் இருக்கும்..ன்னு நெனைக்கிறேன்...

    பார்க்கலாம்!...

    பதிலளிநீக்கு
  6. முடிவில் சொன்ன வரிகள் படித்து சிலிர்த்து விட்டது ஜி

    இப்படி நிகழ்ந்ததுண்டு எமது அனுபவத்தில்...

    பதிலளிநீக்கு
  7. அப்பா!... நமக்கு ஒரு ஆள் கிடைத்து விட்டார்...

    வாங்க ஜி... வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  8. தோள் என்று இருப்பதே பிறர் துன்பம் தாங்கத்தான் என்றிருப்பவர்
    கலங்கி நிற்கும் தங்கையைத் தாங்கிக் கொள்ள மாட்டாரா?...//

    //அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை
    அவரோடு சேர்ந்து காலதேவனும் சிரிக்கின்றான் என்பதை...//

    துரை அண்ணா வின் அழகான வரிகள். அண்ணா கதை எழுதுவதில் கலக்கறீங்க. ரொம்ப அழகா எழுதறீங்க. ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பும் அமைதியும்தான் இழையோடுகிறது. எல்லா கதாபாத்திரங்களுமே கண் முன் விரிகின்றன...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பும் அமைதியும்தான் இழையோடுகிறது...<<<

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. அந்தக் காலத்திலிருந்தே குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்து வரும்
    பழனியும் பொன்னம்மாளும் இரவு தோறும் வீட்டின் முன் தாழ்வாரத்தில்
    ' ஆம்பளை இல்லாத வீடு!..' - என்று படுத்துக் கொள்வார்கள்...//

    இப்படியான மனிதர்கள் எல்லாம் கிராமத்தில் இன்னும் இருக்கிறார்கள் அண்ணா. சென்னையில் கூட எங்கள் வீட்டருகில் இருக்கிறார்கள்...அதனால்தான் இப்போதும் ஒரு துளியேனும் மழைத்துளி விழுகிறது போலும்.

    கடைசி வரிகள் ஆஹா! என்று போட வைத்தது.

    அழகான முடிவு! துரை அண்ணாவின் அக்மார்க்! கதை!

    மிக மிக ரசித்தேன் அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> மிக மிக ரசித்தேன் அண்ணா.... <<<

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. ​இப்படி எல்லாம் நடக்குமா என்று துரை ஸாரை கேட்டிருந்தேன்.

    " வாழ்வில் சம்பந்தமே இல்லாமல் சிலர் நட்பு கொள்வதும், ஒரே ரத்த உறவுடையவர்கள் அடித்துக் கொண்டு நிற்பதும்...

    இந்த நறுமணம் என்பது பக்குவம் பெற்ற ஆன்மாக்களின் வருகையைக் குறிப்பது....

    இன்னும் எவ்வளவோ இருக்கின்றன....

    வீட்டில் பூஜை அறையிலோ
    கோயில் மண்டபத்திலோ மனதை ஒருமுகப் படுத்திப் பாருங்கள்..

    உங்களுக்கே விளங்கும்....

    வேறொரு நாளில் விரிவாகத் தருகிறேன்..​ "


    என்று சொல்லியிருந்தவர் இன்னொன்றும் சொல்லியிருந்தார்.

    "இப்போது கூடப் பாருங்கள்..

    இப்படியான சிந்தனை உருவாகியிருக்கும் இந்நாள்
    அமாவாசை...

    ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..​"


    என்றும் சொல்லியிருந்தார்.

    இப்போது பாருங்கள். கதை வெளியாகி இருக்கும் நாளும் அமாவாசை!

    என்ன பொருத்தம்.. . யதேச்சையாக அமைந்ததுதான் இது.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நானும் இப்போது அதைத்தான் கேட்க நினைத்து வந்தேன் இங்கு உங்கள் கேள்வியும் அண்ணாவின் பதிலும் பார்த்துவிட்டேன்.

      நான் சொல்ல வந்தது இதுதான்....

      அண்ணா கடைசி வரிகள் என்னை பலவாறும் யோசிக்க வைத்தது.

      ஹா ஹா ஹா துரை அண்ணா நிறையப் பேர் அவங்க அனுபவங்களைச் சொல்லலாம்...

      எனக்கு எதுவுமே அப்படி நிகழவில்லையே என்றும் தோன்றுகிறது. எனக்கு அமானுஷ்யங்கள் பற்றி அறிய விருப்பம் உண்டு. வாசிக்கவும் கேட்கவும் பிடிக்கும்.

      எனக்கும் அப்படி நிகழ்ந்திருக்கலாம், என் கூட உள்ளவர்கள் சொல்லுவதும் உண்டு. ஆனால் எனக்கு அப்படித்தோன்றவில்லை என்றே தோன்றுகிறது ஒரு வேளை எனக்கு அந்த அளவிற்கு மனம் இல்லை என்றே தோன்றுகிறது.

      ஆனால் பிரார்த்தனை செய்யும் போது சிலது நடக்கும் என்று உள் மனதில் டக்கென்று தோன்றியதுண்டு பாசிட்டிவாக. நெகட்டிவாகத் தோன்றினால் உடனே அதிலிருந்து வெளிவந்து அதைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்து சில சமயம் அதற்கும் விடை கிடைத்ததுண்டு. புயல் அடித்தாலும் நல்லபடியாக முடிந்ததும் உண்டு. இது சமீபத்தில் கூட நடந்தது. மனம் பாசிட்டிவாக எண்ணும் போது சில விடைகள் கிடைக்கின்றன.

      கீதா

      நீக்கு
    2. எனக்குச் சில அனுபவங்கள் நேர்ந்தது உண்டு. திடீரென அம்மாவின் குரல் என் காதுகளில் கேட்கும். தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பார்ப்பேன். நிஜம் மாதிரி நடந்த சில நிகழ்வுகளும் உண்டு! நினைத்துப் பார்த்தாலே சிலிர்த்துவிடும். இது எனக்கு மட்டுமோ என்றும் தோன்றும். அதே போல் குழந்தைகள் நினைவு அதிகம் வந்தால் அவங்க கிட்டே இருந்து "அம்மா" என்று கூப்பிடுகிறாப்போலே தோன்றும். என்னையும் மறந்து சில சமயங்கள் என்ன வேணும் என்று கேட்கப் போயிடுவேன். பிறகு சுதாரிச்சுப்பேன். ஆனால் அன்று கட்டாயம் யாரானும் ஒருத்தர் திடீர்னு தொலைபேசிப் பேசுவாங்க!

      நீக்கு
    3. @ கீதா R...
      >>> மனம் பாசிட்டிவாக எண்ணும் போது சில விடைகள் கிடைக்கின்றன...<<<

      @கீதாக்கா..

      >>> அதே போல் குழந்தைகள் நினைவு அதிகம் வந்தால் அவங்க கிட்டே இருந்து "அம்மா" என்று கூப்பிடுகிறாப்போலே தோன்றும். என்னையும் மறந்து சில சமயங்கள் என்ன வேணும் என்று கேட்கப் போயிடுவேன்...<<<

      இதைப் போல பல சமயம் நிகழ்ந்திருக்கின்றது..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. தஞ்சையம்பதியால்தான் இவ்வாறு எழுத இயலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  13. தஞ்சையம்பதியால்தான் இவ்வாறு எழுத இயலும்

    பதிலளிநீக்கு
  14. கதையை படித்து முடிக்கும் போது மேனி சிலிர்த்து விட்டது.

    //'' சுவாதி.. தண்ணீர் கொண்டு வாம்மா!..'' - என்றவர்
    அப்படியே திண்ணையில் சரிந்து விட்டார்...//

    இறைவனடி சேருவது எவ்வளவு எளிதாகி விட்டது ஆறுமுகம் அவர்களுக்கு.

    //அண்ணனின் குரல் காதருகில் கேட்டது -
    " நான் பார்த்துக் கொள்கிறேன்!.." - என்று...//

    பார்த்துக் கொள்வார் என்றும்.

    அன்பான கதை அழகாய் நிறைவு பெற்றது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >> அன்பான கதை அழகாய் நிறைவு பெற்றது மகிழ்ச்சி...<<

      அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கம். துரை சாரின் கதையா? வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. அன்பு துரை செல்வராஜு, ஸ்ரீராம், கீதா ரங்கன், தேவகோட்டைஜி, பானுமா
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    அமாவாசையன்று வெளி வந்த உயிரின் உயரிய கதை.
    வாசனை வருவதை நானும் உணர்ந்திருக்கிறேன்.
    மல்லிகையின் மணத்தை ஒத்திருக்கும்.
    எங்கள் தந்தை இறந்த போதும், கணவர் இறையடி சேர்ந்தபோதும் என்னைச் சுற்றி
    அணைத்த அந்த மணத்தை உணர்ந்திருக்கிறேன்.
    என்ன ஒரு பாசம் ஆறுமுகம் ஐயாவுக்கு.
    நான் இருக்கிறேன் ,நான் இருக்கிறேன் என்று ஒரு சகோதரனால் இதை விட அழகாக உணர்த்த முடியுமா.

    முருகன் கருணையும் , மூத்தோர் கவனிப்பும் என்றும் நிறையட்டும்.

    //பழனியும் பொன்னம்மாளும் இரவு தோறும் வீட்டின் முன் தாழ்வாரத்தில்
    ' ஆம்பளை இல்லாத வீடு!..' - என்று படுத்துக் கொள்வார்கள்...

    வீட்டு வேலையாட்கள் என்றாலும் அவர்களுக்கும்
    பாய் தலையணை போர்வை - என்று இவர்கள் கொடுத்திருந்தார்கள்..//
    இது இன்னோரு கொடுப்பினை. அன்பு துரை உங்கள் வாழ்வு எல்லா நலனும் நிறைந்து வளமாக இருக்க வாழ்த்துகள்.
    இரவாகிவிட்டது. கடவுள் கிருபையில் காலை பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> அன்பு துரை உங்கள் வாழ்வு எல்லா நலனும் நிறைந்து வளமாக இருக்க வாழ்த்துகள்...<<<

      அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சியம்மா..

      நெஞ்சார்ந்த நன்றியுடன்..

      நீக்கு
  17. //'' சுவாதி.. தண்ணீர் கொண்டு வாம்மா!..'' - என்றவர்
    அப்படியே திண்ணையில் சரிந்து விட்டார்...//

    தண்ணீர் தாகம் அடங்கு முன்பே உயிர்கூட்டை விட்டு இறைவனடி சேர்ந்து விட்டது.

    //நிறை செம்பாக இருந்த தண்ணீர் இரண்டு மடக்கு குறைந்திருந்தது...//

    இப்போது வந்து இரண்டு மடக்கு குடித்து தாகத்தை தீர்த்து கொண்டது.

    கதை தலைப்பு பொருத்தமாய் நிறைவு பெற்றது.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. படிக்கும்போது ஏகப்பட்ட கதை மாந்தர்கள் என்று அயர்ச்சியாக இருந்தது. அப்புறம் அனைத்துக்கும் இருக்கும் காரணம் தெரிந்தது. ஆம்பிளை இல்லாத வீடு. சம்பாதிக்கிறவன் வெளிநாட்டில். குடும்பத்தின் தலைவனாக இருந்தவர், இறந்தும் குடும்பத்துக்கு ஆறுதலாக இருக்கிறார் என்ற லைன் நன்றாக இருந்தது.

    "ஆம்பிளை இல்லாத வீடு" - இந்த மாதிரியும் பலவிதமான மனித உணர்வும், உறவும் கிராமங்களில்தான் உண்டு. நகரங்களில் யாரும் யாருடனும் ஒட்டுவது கிடையாது. கிராமத்தில் அல்லது வளர்ந்த கிராமத்தில் ஒரு ஆண் அவன் மனைவியை வீட்டுக்கு வெளியே வந்து அடித்தால், அதைக் கேட்க ஊர் மக்கள் இருந்தார்கள், இன்னும் தொலைக்காட்சியில் மூழ்கிவிடாமல் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

    நகரத்தில், எதிர் ஃப்ளாட் ஆள் பெல் அடித்தாலும் ஒரு வார்த்தை இரண்டு வார்த்தையோடு கதவு சாத்தப்பட்டுவிடுகிறது.

    //வீட்டில் பூஜை அறையிலோ கோயில் மண்டபத்திலோ மனதை ஒருமுகப் படுத்திப் பாருங்கள்..// - அதே கோவில், அதே பூஜை அறை...ஆனால் அந்த உணர்வு நூற்றில் (ஆயிரத்தில்) ஒருவருக்கு வந்தாலே அதிகம். காந்தம்-இரும்பு உறவு எல்லோருக்கும் இருக்காது.

    நல்ல கதை. "தாகம்" என்பதைவிட 'காவலன்/காவல் தெய்வம்' என்பது பொருத்தமாக இருந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாகம் பொருத்தமாகவே இருக்கு! தாகத்துக்குத் தண்ணீர் கேட்டவர் தான் அது அடங்கும்முன்னரே உயிரைப் பிரிந்தார். ஆகவே தாகம் தீர்த்துக்கொள்ள வந்தார்னு வைச்சுக்கலாமே. நல்ல ஆத்மா, சாம்பிராணி மணத்திருக்கிறது. கோயிலில் வைத்துக் கும்பிட வேண்டிய ஜன்மம்!

      நீக்கு
    2. கதை மாந்தர்கள் களை அறிந்துக் கொள்ள இருமுறை க்கு மேல் வாசித்தேன் ...எனக்கு மட்டும் தான் குழப்பமோ என நினைத்தேன் ...

      நீக்கு
    3. இன்னும் தொலைக்காட்சியில் மூழ்கிவிடாமல் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.//

      நெல்லை கொஞ்சம் வளர்ந்த கிராமங்களில் வீட்டுக் கூரையின் மீது டிஷ்ஆன்டெனா பாக்கலையா? ஒதுக்குப் புற கிராமத்தில் கூட நான் பார்திருக்கிறேன் நெல்லை. அங்கும் மக்கள் சீரியல் பத்திப் பேசறவங்க இருக்காங்க. இளைஞர்கள் அவர்கள் ரசனைக்கு கிரிக்கெட் பார்ப்பதும் பட்டாசு வெடிப்பதும் நடக்கிறதுதான். எங்கூரும் அதில் ஒன்றுதான்

      கீதா

      நீக்கு
    4. அன்பின் நெல்லை..

      >>> ஆம்பிளை இல்லாத வீடு. சம்பாதிக்கிறவன் வெளிநாட்டில். குடும்பத்தின் தலைவனாக இருந்தவர், இறந்தும் குடும்பத்துக்கு ஆறுதலாக இருக்கிறார் என்ற லைன் நன்றாக இருந்தது.<<

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. அன்பின் கீதாக்கா, அனு பிரேம் மற்றும் கீதா
      அனைவரது வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. இந்த வாரம் துரை சொல்லிக் கொண்டிருந்த "பேய்"க்கதை தான் வரப்போகிறது என எதிர்பார்த்தேன். அதே மாதிரி! ஆனாலும் கோயிலில் இருக்காப்போல் வந்துவிட்டுப் போய் விட்டது அந்த ஆத்மா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா..

      நான் சொல்லியது இதுவல்ல...
      இந்தக் கதை - புதன் கிழமைப் பேயாட்டத்துக்கு முன்பே எழுதப்பட்டு
      ஸ்ரீராமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது...

      பேய்க்காகவே தனியான பதிவு எழுதத் திட்டமிட்டிருந்தேன்..
      அமாவசையன்று அத்திவரத ஸ்வாமிக்காக எழுதியதில்
      சென்று வா பேயே!. - என்று அனுப்பி வைத்து விட்டேன்...

      அன்பின் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. நெகிழ்ச்சியான கதை...உணர்வுகளின் வெளிப்பாடு மிக அருமை ...

    தாகம் ...சாந்தியுடன் நிறைவு பெறுகிறது


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட.... இது சிறப்பான தலைப்பா இருக்கும் துரை செல்வராஜு சார். 'தாக சாந்தி'.

      நீக்கு
    2. நெல்லை தாக சாந்தி நல்லாருக்கு...

      கீதா

      நீக்கு
    3. அனுவுக்கு க்ரெடிட்ஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தாக சாந்தி!!

      கீதா

      நீக்கு
    4. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      தாக சாந்தி தலைப்பு சரியாகத் தான் இருக்கிறது...

      ஆனாலும் ஆறுமுகம் அவர்களின் ஆன்மா சாந்தி அடையும் எனில்
      தம்பி , தங்கை குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்க இயலாது...

      மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  22. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. We are the leading live Tamil News Portal which delivers top trending Tamil news, Latest Tamil news Online. Get latest Tamil Newspaper updates in an instant. Stay connected to get latest Tamil breaking news, Astrology news in Tamil, Sports News in Tamil, Tamil cinema News, latest Tamil news from tamilnadu and all other exclusive Tamil Newspaper update.

    பதிலளிநீக்கு
  24. நெகிழவைக்கும் கதை. குடும்பத்தின் மேல் பற்றும் பொறுப்பும் வைத்திருந்த ஆறுமுகம் இறந்தாலும் குடும்பத்துக்கு ஆதரவாய் இருக்க முனைகிறது அவரது மனம். தான் இன்னும் அக்குடும்பத்துடன்தான் இருக்கிறேன் என்பதை நாசுக்காய் தங்கையிடம் காட்டி தைரியமூட்டிச் சென்றுள்ளார். சட்டென்று கேரக்டர்கள் புரியவில்லை. இரண்டு முறை வாசித்தபோது தெளிவேற்பட்டது. நல்ல எழுத்தோட்டம். வாழ்த்துகள் துரை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதமஞ்சரி..

      >>> நல்ல எழுத்தோட்டம். வாழ்த்துகள் துரை சார்..<<<

      தங்கள் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  25. கதை அருமை ஐயா. வழக்கம் போல உங்களது ஸ்டைலில் கிராமத்துக் கதாபாத்திரங்களைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள். உறவுகள், உணர்வுகள், அன்பு என்று மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    கதையை நான் மொபைலில் வாசிப்பதாலோ என்னவோ முதலில் கதாப்பாத்திரங்கள் முதலில் சட்டென்று பிடிபடவில்லை. யார் யாருக்கு உறவு என்பதும் பெரியப்பா என்று வேறு சொல்லுகிறார்களே என்று அப்புறம் புரிந்துவிட்டது. புரிந்ததும் கதை இன்னும் மனதில் பதிந்துவிட்டது. மொபைலில் வாசிப்பது கடினமாகத்தான் இருக்கிறது.

    அருமையான கதை. பாராட்டுகள் வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      >> அருமையான கதை. பாராட்டுகள் வாழ்த்துகள்..<<<

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், துரை சாரின் தெள்ளிய எழுத்தோட்டமும்,வர்ணனைகளும் ஒரு கிராமத்து குடும்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டன. ஓர் சிறுகதைக்கு சற்று அதிகமான பாத்திரங்கள்தான், ஆனால் பெருமழையாய் பொழியும் அன்பை ஏந்த வேண்டாமா? வாழ்க!
    அமானுஷ்யம் நம்மை விடுவதாக இல்லை. டி.டி.யைப் போல சொல்ல வேண்டுமென்றால், 'நெஞ்சம் மறப்பதில்லை,அது நினைவை இழப்பதில்லை.."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும்,..<<<

      இது எங்கள் வீட்டில் நடந்த சம்பவம்.. சாம்பிராணி வாசமாக வந்தவர் எனது தந்தை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  27. அனைவருக்கும் நன்றி...
    Net pack முடிந்து விட்டது....

    விரைவில் வருகிறேன்.. …

    பதிலளிநீக்கு
  28. அப்ஸ்ட்ராக்ட் எண்ணங்கள் அருமையான நடையில் கதையாவதை துரை செல்வராஜின் கதைகளில் காண்கிறேன்எழுத்துகள் மெருகேறி இருக்கின்றன வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  29. Net pack முடிந்த பின்னும் இழுபறியாக இருந்து 5/7 அன்று முற்றாக நின்று விட்டது..

    திரும்ப புதிதாக Net pack போட்டாலும் நேற்று வெள்ளிக்கிழமை இணையம் இழுபறி..

    அனவருக்கும் பதில் கூறுதற்கு இன்றுதான் பொழுது அமைந்தது.. பொறுத்துக் கொள்ளவும்..

    வருகை தந்து கருத்துரையும் வாழ்த்துரையும் தந்த அனைவருக்கும் நன்றி.. வணக்கம்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!