புதன், 10 மார்ச், 2021

சமீபத்தில் யாருக்காவது நன்றி சொல்லியிருக்கிங்களா ?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பச்சோந்திகளுக்கும், சந்தர்ப்பவாசிகளுக்கும் என்ன வித்தியாசம்?

# சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தம் நிலையை மாற்றிக் கொள்பவர் சந்தர்ப்பவாதி. தன்னை வெளிப்படுத்தாமல் கரந்து வாழ்பவர்   இதுபோன்றவர் அல்ல.

& யோசித்துப் பார்த்தால் ஒன்றும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. பச்சோந்திகள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நிறம் மாறுகின்றன. சந்தர்ப்பவாதி தான் பிழைக்க சந்தர்ப்பவாதம் புரிகிறான். 

ஏஞ்சல்: 

1, ஒரு செயலுக்கான அங்கீகாரம் ,பாராட்டு ஒரு நன்றி இதெல்லாம் ஒருவருக்கு சரியான நேரத்தில் கிடைக்காத பட்சத்தில் மனம் நொறுங்கி போகிறது .இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டதுண்டா ?

# நான் இதற்கெல்லாம் மனம் வருந்துவது இல்லை. அங்கீகாரம் பாராட்டு இவற்றை எதிர்பார்ப்பதுதான் பொதுவாக நாம் செய்யும் தவறு.

$ LKG யிலிருந்து வேலை செய்யும் இடங்கள் வரை பாராட்டு மிஸ்ஸிங் என்றால் வருத்தப்படுவது உண்டு. அதுவும், பாராட்டு - வேலை தெரியாதவருக்குப் போய் சேரும்போது. 

& எதையும் எதிர்பார்க்கக் கூடாது. கிடைத்தால் சரி. கிடைக்காவிட்டால்  கவலை இல்லை என்று இருந்துவிடவேண்டும். 

2, சமீபத்தில் யாருக்காவது நன்றி சொல்லியிருக்கிங்களா ?    யாருக்கு ? சொன்னீங்க எதற்கு சொன்னீங்க ?

# வாக்கிங் போனபோது வேப்பிலைக் கொழுந்து பறித்துத் தின்னத் தந்தவருக்கு.

$ 2020 - Oct 28  தொடங்கி, Neuro surgeon செல்வம், நாகர்கோவில் வசந்தம் ஆஸ்பத்திரி administrator முதல் நர்சுகள் வரை, மேலும் administrator உடைய சகோதரிக்கும், அம்மாவுக்கும், என். மகன், மருமகள் + சாரதா ஆயுர்வேத ஆஸ்பத்திரி வைத்தியர்கள் + staff. 

நினைவிழந்து கோமாவிலிருந்த என்னைக் காப்பாற்றியதற்கு.

இப்போது இதைப் படிக்கும் உங்களுக்கும். 

& தினமும் நன்றி சொல்லாமல் இருப்பதில்லை. ஒரு நாளைக்கு குறைந்தது பத்து முறையாவது "Thank You" என்னும் சொற்கள் என் வாயிலிருந்து வந்து விழுந்துகொண்டே இருக்கும். எங்கள் வீட்டில் பணிக்கு இருக்கும் பெண்மணிக்கு, அவர் செய்கின்ற ஒவ்வொரு சேவைக்கும் நன்றி கூறுவேன்.  

3,  தொலைதூரத்தில் வாசனையை வைத்தே சமையலை கண்டுபிடிக்கும் வழக்கம் உண்டா ?

# ஏதோ கருகுகிறது என்று அறிந்து கொள்வதுண்டு.

$ சமையலை கண்டு பிடிப்பதை விட overheating wire, புகையும் துணிகளைக் கண்டுபிடிப்பதில் வல்லவன். 

& உண்டு. 

4, வாழை இலை உணவு, பீங்கான், பிளாஸ்டிக் தட்டு உணவு  இதில் எதுஉங்கள் சாய்ஸ் ???

# பீங்கான் தட்டு.

$ உணவு சுத்தமாகவும் ருசியுடனும் இருந்தால் சரி.

& எங்கள் கேண்டீனில் உணவருந்திய குழித் தட்டு. ஒன்றோடு ஒன்று கலக்காமல் உணவுப் பொருட்களை எடுத்து, கலந்து சாப்பிட சௌகரியமான தட்டு. 5, எல்லாருக்கும் எப்பவும் நல்லவர்களாகவே இருப்பது போரடிக்குமா ?இப்படிப்பட்ட மனநிலை நல்லதா  ? கெட்டதா ?

# போரடிக்காது.  மகிழ்ச்சி தரும். 

$ எல்லோர்க்கும் எப்போதும் நல்லவனாக இருப்பது துர்லபம். ஏமாற்றம் அளிக்கக் கூடியது. 

& நல்லவராக 'இருப்பது' என்றால் என்ன? நாம் நாமாக இருந்தால் போதும். மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது நம் பிரச்சனை அல்லவே! 

6, சின்ன வயதில்  வெளியில் ஸ்கூலுக்கு செல்லும்போது அம்மாவுக்கு டாடா சொல்லியிருப்பிங்க  பிறகு திருமணமானதும் மனைவிக்கு டாடா சொல்லியிருப்பிங்க. இப்போ எனது கேள்வி இரண்டு டாடா விற்கும் என்ன வித்தியாசம் ?

# டாட்டா சமீபத்திய நாகரிகம். நான் பின்பற்றியதில்லை.

$ சின்னகை,  பெரிய கை !

& ' டாடா ' என்பதைவிட - எங்கும் செல்வதற்கு முன்பு ஏதோ ஒரு வகை 'விடை பெறும்' வழக்கம் என்று பார்த்தால் - " போய் வருகிறேன்" என்று சொல்லும்போது, அந்தக் காலத்தில் அம்மாவும், அடுத்த காலத்தில் மனைவியும் காட்டிய பரிவுணர்ச்சி ஒரே வகை நெகிழ்ச்சி தருபவைதாம். 

( 'டாடா' எங்கள் நிறுவனத்திற்கு போட்டி நிறுவனம் என்பதால் நான் நண்பர்களுக்கு கை அசைக்கும்போது 'டாடா' என்று சொல்லாமல் 'லேலண்ட்' என்று சொல்லுவேன்!) .  

= = = = =

நண்பர் ஒருவர் எனக்கு இமெயில் அனுப்பியுள்ளார். 

அவர் அனுப்பியுள்ள மெயிலில் " .. .. ..   சமீப காலங்களில் ஒவ்வொரு புதன்கிழமை பதிவிலும் மின்நிலா சித்திரை சிறப்பிதழ் பற்றி  - கதை தீம் பற்றி என்னென்னவோ எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். வாசகர்கள் யாரும் அதுபற்றி ஒன்றும் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. யாருமே இல்லாத டீக்கடையில் - யாருக்காக டீ ஆற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்? ------ " 

அவர் சொல்வது சரிதானோ? 

= = = = = 


92 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் என்றும் நலமாக நிம்மதியாக இருக்க வேண்டும்.
  இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. அடிக்கடி பச்சோந்தி வருகிறது கேள்வியில்.
  அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் நண்பர்களுமா
  இருக்கிறார்கள்?

  அந்த நட்பே வேண்டாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பச்சோந்திகளை எப்படி அடையாளம் காண்பது என்பதுதானே பிரச்சனை!

   நீக்கு
 3. பச்சோந்தி.... வாழ்க்கையில் தவிர்க்கமுடியாதது. நம் எல்லோருக்குமே பலவித முகங்கள் இருக்கின்றன. அது நடிப்போ, சந்தர்ப்பவாதபோ இல்லை பச்சோந்தித்தனமோ...

  நல்ல நட்பு என்று நாம் கருதும் இடங்களில் மட்டும் இவைகளுக்கு இடமில்லை.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டவர்களும் போட்டுக்கொள்ளாதவர்களும் இனி போட்டுக்கொள்ளப் போகிறவர்களும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 5. குழித்தட்டு எனக்குப் பிடித்தமானது. என உபயோகத்துக்கு நிறைய வாங்கி வைத்திருந்தேன்.

  யாத்திரையின் முதல் நாள், இதில் பரிமாறுவது சரிப்படாது, பக்கத்துக் கடைல இப்பவே போய் வட்டத்தட்டு வாங்கிக்கொண்டு வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார் யாத்திரையில் பரிமாறுபவர். அதற்கு அப்புறம் குழித்தட்டு உபயோகப்படுத்தவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க இப்படித் தான் ஓர் யாத்திரைக்குழுவுடன் செல்ல முன் பணம் எல்லாம் கட்டிவிட்டுப் பின்னர் போக இயலவில்லை. வீட்டில் நூறு தட்டுக்கள் இருக்கும்போது நம்மவர் யாத்திரைக்கெனப் புதிதாகக் குழித்தட்டு மேலே உள்ள படத்தில் உள்ளது போல் வாங்கி வந்தார். பின்னர் யாத்திரைக்குச் செல்ல முடியாமல் நாங்கள் ரத்து செய்ததும் அந்தத் தட்டுக்கள் வீட்டில் குழந்தைகள் வரும்போது சாப்பிடனு பயன்படுத்த நினைத்தால் எல்லோருமே வாழை இலையை விரும்ப அந்தத் தட்டுக்களை இப்போத் தான் 2019 ஆம் ஆண்டு அம்பேரிக்கா போனப்போப் பொண்ணு வீட்டில் கொண்டு போய்ப் போட்டோம். பிள்ளை அதெல்லாம் கிட்டேயே வரக்கூடாதுனு சொல்லிட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூக்க முடியாது!

   நீக்கு
  2. ட்ராவல் டைம்ஸில் போனப்போத் தட்டுக்கள், தம்பளர்கள், வட்டைகள்னு கொண்டு போனோம்.

   நீக்கு
 6. பச்சோந்தியும் ஓர் உயிரினம். இறைவன் படைப்பில் அதற்கு அதன் பாதுகாப்புக்காக இயல்பாக நடைபெறும் மாற்றங்கள். அதை மனிதனோடு ஒப்பிடுதல் சரியா? மனிதன் யோசிக்கத் தெரிந்தவன்! தன்னுடைய சௌகரியத்துக்காக மாறுகிறான். இதில் சுயநலம் தான் மேலோங்கி இருக்கிறது. பச்சோந்தி அப்படி இல்லையே! பாவம் பச்சோந்தி. பல நூற்றாண்டுகளாகப் பழியைத் தாங்கிக் கொண்டு வாழ்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 🦎🐿🐿🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎 well said Nirmal sollalaamaa:)

   நீக்கு
  2. ஆம், சரியான கருத்துரை. நன்றி.

   நீக்கு
  3. கீசா மேடம்.... ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்வதால், பச்சோந்தியைக் குறைத்துச் சொல்வதாக அர்த்தமில்லை. இடத்துக்கேற்றபடி வேஷம் போடும் மனிதர்களைக் குறித்துச் சொல்லப்பட்டது.

   நாய் மாதிரி நன்றி உடையவன், யானை மாதிரி அசைந்து அசைந்து வருகிறான், மின்னல் வேகத்தில் வருகிறான், மஹாலக்‌ஷ்மி பிறந்திருக்கிறாள் - எல்லாமே ஒப்பீடுதான். பன்றியோட சேர்ந்த பசுவும் - இதுவும் ஒப்பீடுதான். அதுக்காக உணர்ச்சிவசப்படலாமா?

   நீக்கு
 7. //அங்கீகாரம், பாராட்டு//- நான் செய்தவற்றை எப்போதுமே தம்பட்டம் அடித்துக்கொள்வேன் (தவறுதலாக்க்கூட என் பாஸ் அதற்குச் சொந்தம் கொண்டாடிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக). அதுபோல எனக்குக் கீழ் பணியாற்றியவர்களின் அச்சீவ்மென்டை, எல்லா இடத்திலும் அவர்களுடையது என்றுதான் பாராட்டுவேன். என்னை மேனேஜ்மென்ட் பாராட்டும்போதும், இதைச் செய்தது அவர் என்று சொல்லிடுவேன். அடுத்தவர் அச்சீவ்மென்ட் என்னுடையது என சொந்தம் கொண்டாடியதே கிடையாது.

  தவறுதலா ஒருத்தருடைய அச்சீவ்மென்டை இன்னொருவருடையது எனப் பாராட்டி பிறகு வருத்தம் தெரிவித்திருக்கிறேன்.(சில நேரம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம்ம்ம், எனக்கெல்லாம் நான் கடுமையாக உழைத்துக் காட்டினாலும் அங்கீகாரம் என்பதே கிடைத்தது இல்லை. அருமையாகச் சமைத்து வைப்பேன். பரிமாறுபவர்கள் தாங்கள் தான் சமைத்ததாகக் காட்டிக்கொண்டு விடுவார்கள். இப்படி எத்தனையோ! ஆகவே அங்கீகாரம் கிடைக்கலையேனு யோசிச்சதே இல்லை. நாம் செய்தது தான் என்பது தெரிந்தால் போதும்!

   நீக்கு
  2. அங்கீகாரம் - ஏன் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளக் கூடாது. அதை ஏன் மற்றவர்கள் கொடுக்கவேண்டும்? மற்றவர்களிடம் அதைக் கொடுத்தது யார்?

   நீக்கு
  3. அங்கீகாரம் என்பதே மற்றவர்கள் கொடுப்பதுதான். நமக்கு நாமே கொடுத்துக்கொள்வதன் பொருள் அகங்காரம் இல்லையோ?

   நீக்கு
  4. மற்றவர்கள் நமக்குக் கொடுக்கும் அங்கீகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தது யார்?

   நீக்கு
  5. இது என்ன கேள்வி கேஜிஜி சார்... நீங்க நல்லா படம் போடறீங்க, அழகா இருக்கு என்று ஓவியத்தை ரசிக்கும் மனநிலை உள்ளவர்களும், ஓவியத் திறமை உள்ளவங்களும்தான் சொல்லுவாங்க. வசிஷ்டர் வாயார் பிரம்மரிஷின்னு ஏன் சொல்றாங்க?

   எப்போதுமே துறை வல்லுநர்களால் புகழப்பட்டு அங்கீகரிக்கப்படுவதுதான் பெருமை.

   நீக்கு
  6. ஹா ! என்னைக் கட்டிபோட்டுவிட்டீர்கள் !!

   நீக்கு
 8. //கதை தீம்//- நண்பரை நினைத்து அனுதாப்ப்படுகிறேன். விதையை விதைப்பது மட்டும்தான் நம் கடமை. என்ற எண்ணத்தை, குறுகிய மனத்தோடு பார்த்திருக்கிறார் அந்த நண்பர்

  பதிலளிநீக்கு
 9. அன்பு@ஏஞ்சல் கேட்கும் போது வலி தெரிகிறது.
  இறைவன் ஒருவனே ஏமாற்ற மாட்டான் அம்மா.

  நட்புகளிலோ ,உறவுகளிலோ நம் செயல் ஏற்றம்
  பெறவில்லை என்றால்,
  செயலில் தப்பு இருக்காது.
  அவர்கள் அணுகும் முறையில்,அவர்களது பார்வையில்
  ஏற்பு இல்லாமல் இருக்கலாம்.

  இன்னும் என் உறவுகளில் என் எழுத்துக்கு அங்கீகாரம்
  இது வரை கிடையாது. அதற்காக எனக்கு வருத்தம் இல்லை.
  அவர்கள் வழி அந்த மாதிரி. ஆங்கிலத்திலோ, சமஸ்க்ருதத்திலோ
  எழுதி இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்களோ என்னவோ.:)))))))))
  என் அப்பா இருந்திருந்தால் தலைமீது வைத்துக் கொண்டாடி
  இருப்பார்.
  இது ஒரு ஆஸ்பெக்ட் ஆஃப் லைஃப்.
  இன்னும் எத்தனையோ விஷயங்கள்.
  ஏமாற்றம் வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.ஆதரவு கிடைத்தால்
  சந்தோஷம். இது என் எண்ணம் அம்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க வீட்டிலும் என் எழுத்தை அங்கீகாரம் செய்தது இல்லை. நான் கவலைப்பட்டதும் இல்லை. பல ஆண்டுகள் என் புக்ககத்தினருக்கு நான் கணினியில் எப்போதும் சாட்டிங் செய்வதாகவே எண்ணம். பின்னர் தெரிந்தப்போவும் கேலியுடன் தான் பேசினார்கள். அத்தோடு சரி. நானும்வெளிக்காட்டிக் கொள்ளுவது இல்லை.

   நீக்கு
  2. எழுத்தாளர்களை அவர்களுடைய நெருங்கிய சொந்தங்கள் (ஏனோ) அங்கீகாரம் செய்வது மிகவும் குறைவு. ஆனால் எழுத்தாளர்கள் அதை லட்சியம் செய்வதில்லை என்பது வேறு விஷயம்.

   நீக்கு
  3. எந்த சாதனையாளரும், அவரது better halfக்கு சாதாரணம்தான். இதனை கங்கை அமரன் நிறைய தடவை குறைபட்டுச் சொல்லியிருக்கிறார்.

   நீக்கு
  4. உண்மை நெல்லை. ஆரம்பத்தில் எல்லாம் மாமாவும் என்னை அங்கீகாரம் செய்தது இல்லை தான்! பின்னர் எங்கள் குருநாதர் வர ஆரம்பித்து என்னைப் பற்றிச் சொல்லவும் தான் புரிந்து கொள்ள ஆரம்பித்தார். ஆனால் இன்று வரை நான் எழுதியவற்றையோ அதற்கு வரும் கருத்துக்களையோ நிதானமாகப் படித்தது இல்லை. நான் சொல்லுவதைக் கேட்டுக் கொள்ளுவார். அவ்வளவே! மற்றபடி பிறரிடம் சொல்லும்போது இப்போதெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளுவார்.

   நீக்கு
  5. அன்பு வல்லிம்மா கீதாக்கா நெல்லைத்தமிழன் மூவருக்கும் மிக்க நன்றி .நட்பு உறவு வட்டத்தில் அங்கீகாரத்தை எதிர்பார்க்கவே மாட்டேன்மா .பல நேரங்களில் எங்கள் பிளாக் வந்து இங்கே உரையாடும்போது பெரியவங்க உங்களைப்போன்றோரின் பதிலால் மனம் நிறைவு பெறுகிறது .20 வயது பெண்ணுக்கு தாயானாலும் இன்னமும் குழந்தையாகவே இருக்கிறேன் என்பதையும் நானா உணர்கிறேன் :))அந்த அங்கீகாரத்தை இனி இறைவனிடம் மட்டும் எதிர்பார்க்கப்போகிறேன் .இது வொர்க் பிளேஸில் நடந்த சம்பவம் .ஒருவேளை நான் ஆறாம்பமுதலே வேலைக்கு போயிருந்தால் உடன் வேலை செய்வோர் /உயர் அதிகாரிகள் பற்றி ஒரு கணிப்பு கிடைத்திருக்கும் நானேதான் காலம் கடந்து சென்றதனாலோ என்னவோ இவை எனக்கு புதிது .இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையோடு இருப்பதே நன்று .எனக்கு இப்போ ஒரு வருஷமாகத்தான் இப்படிப்பட்ட சிந்தனைகள் .அநேகமா இந்த pandemic போனா எல்லாம் சரியாகும் முக்கியமா நான் ஆலயத்துக்கு ரெகுலரா போவேன் ஒரு வருஷமா ரெகுலர் சர்வீஸ் இல்லை  .அதனால்தானே இவ்ளோ ஸ்ட்ரெஸ்  இம்மிடியட்டா மனம் சுருங்குது .  

   நீக்கு
  6. என்னது... சந்தடி சாக்குல என்னை 'பெரியவங்க'ன்னு சொல்லிட்டீங்க... நான் நல்லூர் (அதிரா) ஆளை விட சின்னப்பையன்.

   நீங்க எப்போ யூடியூப் ஆரம்பிக்கப்போறீங்க? அவருக்கு விடுமுறை விட்ட உடனேயா?

   நீக்கு
  7. ஹ்ஹஹ்ஹா :) இப்போ நீங்க சொன்ன பிறகே தெரிஞ்சது உங்களையும் பெரியவங்க ஆக்கியது :) தெரிஞ்சோ தெரியாமையோ அப்பப்ப இப்படி வரும் :))))))) எனது யூ டியூபா நானா .வேணவே வேணாம் .பிளாக் போதும் எனக்கு 

   நீக்கு
  8. ..குருநாதர் வர ஆரம்பித்து என்னைப் பற்றிச் சொல்லவும் தான் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்.//

   உங்கள் அதிர்ஷ்டம். ஒவ்வொரு வீட்டிலுமா ஒரு குருநாதர் வந்து சொல்லுவார்! பாவம் மனைவி/கணவன் - as the case may be!

   நீக்கு
  9. நல்ல கருத்துப் பரிமாற்றங்கள். நன்றி.

   நீக்கு
  10. @ஏகாந்தன், அப்படி எல்லாம் இல்லை. எங்க புக்ககத்தில் அனைவருமே எனக்கு எதுவும் தெரியாது என்றே சொல்வார்கள்;நினைப்பார்கள். அதையும் மீறி யாரேனும் என்னைப் புகழ்ந்தால் எல்லோருக்குமே சிரிப்பு வந்துடும். அப்படித் தான் நம்மவரும் நான் ஏதோ பொழுது போக இணையத்தில் உட்கார்கிறேன் என்று நினைத்திருந்தார். ஆனால் இதை எங்கள் குரு கண்டு பிடித்து அவரிடம் சொன்னது தான் எனக்கு ஆச்சரியம். இப்போவும் என் கடைசி நாத்தனாருக்கு நான் எழுதியதை யாராவது பாராட்டினால் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்துடும். கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிப்பாங்க! :)))))) ஆகவே அங்கீகாரம் என்பதை நான் எதிர்பார்க்காமலே இருக்கப் பழகிட்டேன். அதனால் தானோ என்னமோ இங்கே நண்பர்கள் பாராட்டும்போது கூட நமக்காகச் சொல்கிறார்கள் என்னும் எண்ணமே ஏற்படும். அதை என்னால் தவிர்க்க முடிந்ததில்லை. என் முன்னாள் உபிச(இளைய சிநேகிதி) வேதா என்னும் பெண்ணும், தற்போது ஏடிஎம்மும் தான் என்னிடம் உங்களைப் பத்தி உங்களுக்கே தெரியலை என்பார்கள். அது எனக்குக் கொஞ்சம் சந்தோஷமாகவும் இருக்கும்.

   நீக்கு
  11. //தற்போது ஏடிஎம்மும் தான் என்னிடம் உங்களைப் பத்தி உங்களுக்கே தெரியலை என்பார்கள்//

   கிர்ர்ர்ர்ர்ர்...     நானும் சொல்லியிருக்கேன்.

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. $ 2020 - Oct 28 தொடங்கி, Neuro surgeon செல்வம், நாகர்கோவில் வசந்தம் ஆஸ்பத்திரி administrator முதல் நர்சுகள் வரை, மேலும் administrator உடைய சகோதரிக்கும், அம்மாவுக்கும், என். மகன், மருமகள் + சாரதா ஆயுர்வேத ஆஸ்பத்திரி வைத்தியர்கள் + staff. //////////////////////////////////////////////////////////////////////மனம் நெகிழ்கிறது எப்பொழுதும் நலமுடன் இருங்கள்.
  நன்றி என்ற வார்த்தையுடன் தான் காலையில் எழுந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்,திரு கேஜிஎஸ் அவர்கள் உண்மையில் செத்துப் பிழைத்திருக்கிறார். மனம் நெகிழ்ந்து பின் மகிழ்வுற்றது.

   நீக்கு
  2. நெகிழ்ச்சியான தருணங்கள்தான்.

   நீக்கு
  3. கேஜிஎஸ் அவர்களை இதைப்பற்றி எழுதச் சொன்னேன், பலருக்கு உபயோகமாக இருக்கும்னு. என்னவோ அவர் இன்னும் எழுதவில்லை. ஞாயிறு படங்கள் பகுதியில் இதனை எழுத ஆரம்பித்தால் பலருக்கு உபயோகம்.

   நீக்கு
  4. சிலருக்கு ’அந்த வாயில்’வரை சென்று மீண்டு வரும் பாக்யம் நிகழ்ந்திருக்கிறது. அவரவர் நல்வினை.

   நீக்கு
 12. ( 'டாடா' எங்கள் நிறுவனத்திற்கு போட்டி நிறுவனம் என்பதால் நான் நண்பர்களுக்கு கை அசை😁க்கும்போது 'டாடா' என்று சொல்லாமல் 'லேலண்ட்' என்று சொல்லுவேன்!) . //////😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இஃகி,இஃகி,இஃகி! நல்ல செய்ந்நன்றி! இல்லையா? :))))))

   நீக்கு
  2. நானும் பஹ்ரைன்ல எங்க கம்பெனி அவுட்லட்ஸ்ல இல்லை என்றால்தான் வேற கடைக்குக் கூட்டிச் செல்வேன். Competitor products வாங்க மாட்டேன்.

   நீக்கு
  3. என்னைப் பொறுத்த வரை "ஆச்சி" தயாரிப்புக்கள், இன்னும் சில கம்பெனி தயாரிப்புகளை வாங்க மாட்டேன். பொதுவாக திடீர்த் தயாரிப்புக்களை வாங்குவதே குறைவு!

   நீக்கு
 13. சுத்தமான உணவு, சுத்தமான தட்டு போதும்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.

  பச்சோந்தியின் குணம் இறைவனால் அதன் பாதுகாப்புக்காக, அதன் நலத்திற்காக இயற்கையாக அமையபட்டது. ஆனால், சந்தர்ப்பவாதிகள் தங்கள் நலத்திற்காக மட்டும் அடிக்கடி மாறி இன்பம் அடைபவர்கள். இரண்டிற்குமே காரணம் இறைவன் தந்த எண்ணங்களினால்தான் அவர்களின் வாழ்வு என்ற போதும், சந்தர்ப்பவாதியை கண்டால், அவரால் தீங்கிற்கு உட்பட்ட ஒரு நல்ல மனதுக்குள் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்த முடியாது.என்ன செய்வது? அதை அந்த நல்லவருக்கு அனுபவிக்க தருவதும் அந்த இறைவன்தானே....!
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. இடம் பெயர்ந்து வாழ்வு அமைபவர்களுக்கும் பச்சோந்தி தன்மை வந்தே ஆக வேண்டும்...

  பதிலளிநீக்கு
 16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலமே வாழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 17. இன்றைய பதிவின் சில விஷயங்கள் மனதை நெகிழ்விக்கின்றன..

  இறையருள் ஒன்றே காப்பு..

  பதிலளிநீக்கு
 18. வாழும் போது வருவோர்க்கெல்லாம்
  வார்த்தையாலே நன்றி சொல்வோம்..
  வார்த்தையின்றிப் போகும் போது
  மௌனத்தாலே நன்றி சொல்வோம்!..

  மக்கள் திலகத்தின் பாடல் ஒன்றின் வரிகள். சங்கே முழங்கு என்று நினைக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் திலகத்திற்கா க்ரெடிட்டு !

   நீக்கு
  2. தேடிப் பார்த்ததில் தெரிந்தது - நாலுபேருக்கு நன்றி...வரைந்தது கண்ணதாசன்.

   நீக்கு
 19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 20. என்னுடைய கேள்விகளுக்கு பதில்தந்த அனைத்து ஆசிரியர்களுக்கு மிக்க அன்றி அந்த நன்றி கூறுதல் கேள்விக்கு kgs சாரின் பதில் நெகிழ வைத்தது .அனுபவப்பட்டோருக்கே அதன் அருமை தெரியும் .கூட்டுப்பிராத்தனைக்கு என்றும் வல்லமையுண்டு .இறைவன் கஷ்டப்படற அனைவருக்கும் தனித்தனியா  உதவ  உலகத்துக்கு வர முடியாதது ஆனால் சில ரெப்ரெஸன்டேட்டிவ்ஸ் வைச்சிருக்கார் அவர்கள்தான் மருத்துவர் செவிலியர் நட்புகள் குடும்பம் மற்றும்  நம்மை சுற்றியுள்ளோர் மூலமாக நமக்கு உதவி கிடைக்க செய்வார் .

  பதிலளிநீக்கு
 21. 😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻😻

  பதிலளிநீக்கு
 22. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

  பச்சோந்திக்கு இறைவன் கொடுத்த வரம் அது, தன்னை காப்பாற்றி கொள்ள நிறம் மாறுகிறது.

  //சமீபத்தில் யாருக்காவது நன்றி சொல்லியிருக்கிங்களா ? யாருக்கு ? சொன்னீங்க எதற்கு சொன்னீங்க ?//

  இந்த கேள்விக்கு ஆசிரியர்கள் சொன்ன பதில் நெகிழ வைத்து விட்டது.

  நன்றி சொல்ல தெரிந்து விட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கை என்றால் என்ன என்று என் மகனை கேட்டால் நன்றி சொல்வது என்று முன்பு சொல்வான், அதை அவன் மகனிடம் கேட்டாலும் சொல்கிறான்.

  கிறித்துவர்கள் இரவு பிரார்த்தனையில் அன்றைய பொழுதை நல்லபடியாக நடத்தி சென்ற ஆண்டவருக்கு நன்றி என்று ஜெபம் செய்வார்கள்.

  வயதானவர்கள் காலை எழுந்து கொள்ளும் போதும், இரவு படுத்துக் கொள்ளும் போதும் நன்றி சொல்வார்கள்.

  வாழ்க்கைத்துணையின் திடீர் பிரிவால் கலங்கி நின்ற போது உறவுகளும், அக்கம்பக்கத்தினரும், நட்புகளும் எனக்கு செய்த உதவிகளுக்கு நன்றி சொன்னேன்.


  பதிலளிநீக்கு
 23. வயதானவர்கள் காலை எழுந்து கொள்ளும் போதும், இரவு படுத்துக் கொள்ளும் போதும் நன்றி சொல்வார்கள்.

  இறைவனுக்கு. அவனின்று ஒரு அணுவும் அசையாது என்று உணர்ந்தவர்கள்.

  பதிலளிநீக்கு
 24. //2020 - Oct 28 தொடங்கி, Neuro surgeon செல்வம், நாகர்கோவில் வசந்தம் ஆஸ்பத்திரி administrator முதல் நர்சுகள் வரை, மேலும் administrator உடைய சகோதரிக்கும், அம்மாவுக்கும், என். மகன், மருமகள் + சாரதா ஆயுர்வேத ஆஸ்பத்திரி வைத்தியர்கள் + staff.

  நினைவிழந்து கோமாவிலிருந்த என்னைக் காப்பாற்றியதற்கு.//

  அத்தனை பேருக்கும் நன்றி. இறைவனுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. தாவரங்களுக்கும் பாராட்டு தேவை படுகிறது என்கிறார் அரவிந்தர் அன்னை.
  தாங்கள் நேசிக்கபடும் போது அவை மகிழ்ச்சி அடைவாதாக சொல்கிறார்.

  மனிதர்களும் தாங்கள் செய்யும் செயலுக்கு மற்றவர்களின் பாராட்டும் அங்கீகாரம் கிடைத்தால் மேலும் உற்சாகத்துடன் அந்த செயலை செய்கிறான்.

  எதிர்பார்ப்பு தப்பு எதிர்பார்த்தல் ஏமாற்றம் என்று தத்துவம் பேசலாம், ஆனால் மனம்
  சின்ன புன்னகை, தட்டி கொடுத்தல் பாராட்டி பேசுதலை எதிர்ப்பார்ப்பது உண்மை.

  சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை இது உண்டு.

  பதிலளிநீக்கு
 26. குழித்தட்டு - இங்கே விதம் விதமான தட்டுகள் இப்படி கிடைக்கின்றன.

  யாருமில்லாத டீ கடையில்! ஹாஹா... பல சமயங்களில் வலைப்பூவில் பதிவுகள் இப்படித்தான்!

  பதிலளிநீக்கு
 27. 1, தீய விஷயங்களை மட்டும் //நினைவிருக்கா நினைவிருக்கா // என்று சொல்லி நம்மை பழைய கெட்ட  விஷயங்களை நினைவு     கூறவைப்பது ஒருவித மன  நோயா ? 
  2, நீங்கள் அடிக்கடி அருந்தும் (ஹெர்பல்) மூலிகை  தேநீர் எவை ?
  3, எள்ளு உருண்டை அல்லது கடலை உருண்டை இவற்றில் எது உங்கள் சாய்ஸ் ?
  4, சமீபத்தில் நீங்கள் விலை கொடுத்து வாங்கிய விலையுயர்ந்த பொருள் என்ன ?
  5, சமீபத்தில் ஏழை இருப்பிடமற்றோருக்கு உணவு வாங்கி கொடுத்திருக்கிறீர்களா ?      சந்தர்ப்பம் அமையவில்லையெனில் அப்படி சான்ஸ் அமைந்தால் செய்வீர்களா ?
  6, உங்களுக்கே உங்களில் மிகவும் பிடித்த குணம் என்ன ?


  பதிலளிநீக்கு
 28. அன்புள்ள கெளதமன் ஸார்!

  அடுத்த புதன் கேள்வி-பதில் பகுதிக்கான எனது கேள்வி.

  தமிழகத்து கீழடி அகழ்வாராய்ச்சியில் அதிகபட்சம் எத்தனை அடிகள் தோண்டி
  கண்டறிந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?.. எனது ஆய்வு ஒன்றிற்கு இந்த விவரம் தேவைப்படுவதால் ஆதாரபூர்வமான தரவுகள் அடிப்படையில் தாங்கள் பதிலளித்தால் உதவியாக இருக்கும். விவரம் தேடிப்பார்த்து சரியாகக் கிடைக்காததினால் தான் உங்களிடம் கேட்டுத் தெரிந்து என் ஆய்வுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்கிறேன்.

  மிக்க நன்றி.

  அன்புடன்,
  ஜீவி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!