புதன், 17 மார்ச், 2021

சமீபத்தில் நீங்கள் விலை கொடுத்து வாங்கிய விலையுயர்ந்த பொருள் என்ன ?

 

நெல்லைத்தமிழன்: 

1. கார்ப்பரேட் கார்ப்பரேட் என்று ஜன்னி வந்ததுபோல கூவும் அரசியல்வாதிகள் எத்தனைபேர் அரசாங்க மருத்துவ மனைகளில் கோவிட் வேக்ஸின் போட்டுக்கொண்டனர்? அல்லது அரசாங்க மருத்துவ மனைகளில் வைத்தியம் பார்த்துக்கொள்கின்றனர்?     

# அரசியல் வாதிகளின் மேடைப் பேச்சு கொள்கை அடிப்படையிலானதல்ல.  என்ன பேசினால் மக்களின் ஆதரவு அல்லது அனுதாபம் கிடைக்கும் என்ற தேடலின் விளைவு.  "நான் சொல்வதைச் செய், நான் செய்வதைச் செய்யாதே " எனச் சொன்ன பெருந் தலைகள் உண்டு. 

& கேட்டால், 'ஊருக்குத்தான் உபதேசம்; உனக்கும் எனக்கும் இல்லையடி கண்ணே' என்பார்கள்! 

2. அம்பானி, அதானி என்று கவலைப்படுபவர்களில் எத்தனைபேர் பொதிகை தொலைக்காட்சி மட்டும் பார்க்கின்றனர்?  பி.எஸ்.என்.எல் சேவையை மட்டும் பெறுகின்றனர்?

& பொதிகை தொலைக்காட்சியும் பி எஸ் என் எல் சேவையையும் மட்டும் பெற்றவர்கள் - தொடர்ந்து தடங்கலுக்கு வருந்திக் கொண்டிருப்பார்கள்! வேறு கவலைகள் அவர்களுக்கு வர வாய்ப்புகள் இல்லை!  

3. எது ஆட்சி அமைக்கப்போகுதோ அந்தக் கட்சி, தேர்தல் வாக்குறுதிகளை லிஸ்ட் போட்டுச் சொல்றது நியாயம். மத்த சிறு கட்சிகளெல்லாம் எந்த அடிப்படையில் வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன? கூட்டணி ஆட்சியோ அமையாது. அப்போ இவையெல்லாம் மக்களை ஏமாற்றவா?

# எந்தக் கட்சியானாலும் தேர்தல் வாக்குறுதி என்பது அவர்களின் சாமார்த்தியத்துக்குத் தொடர்பானதுதான். நன்கு திட்டமிட்டு அலசி ஆராய்ந்து எதுவும் அளிக்கப் படுவதில்லை. அப்படி ஒரு திட்டம் இருக்குமானால் அதை ஆட்சிக்கு வந்தபின்தான் வெளிப் படுத்துவார்கள். 

மக்கள் ஏமாறத் தயாராக இருந்தால் ஏமாற்றுவோருக்குப் பஞ்சமில்லை.

& தேர்தல் அறிக்கை என்பது ஒரு சம்பிரதாயம். தேர்தலுக்குப் பிறகு வோட்டுப் போட்டவர்களும், வோட்டு வாங்கியவர்களும் அதை மறந்துவிடுவார்கள். 

ஏஞ்சல் : 

1, தீய விஷயங்களை மட்டும் //நினைவிருக்கா நினைவிருக்கா // என்று சொல்லி நம்மை பழைய கெட்ட  விஷயங்களை நினைவு     கூறவைப்பது ஒருவித மன  நோயா ? 

# நினைவில் இருப்பதை வெளிக் கொணர்வது மனநோயாகாது.

(தவறாக எண்ணா விட்டால் ஒரு குறிப்பு.

உலகம் இப்படி இருக்கிறதே, மக்கள் இப்படியும் இருக்கிறார்களே என்று தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாவது மன நோய் மாதிரிதான். உலகம் உலகமாகவும் மக்கள் மக்களாகவும்தான் இருப்பார்கள். )

$ எப்படி அன்றைய நல்ல விஷயங்கள் இன்று முக்கியத்துவத்தை இழந்து விட்டனவோ அதே மாதிரி தீயவை ஒதுக்கப் படவேண்டும்.

குறள் வழி நடப்பதற்கு நினைவூட்டலும் தேவை.

2, நீங்கள் அடிக்கடி அருந்தும் (ஹெர்பல்) மூலிகை  தேநீர் எவை ?

# அடிக்கடி ஹெர்பல் அடியேனுக்கில்லை. ஆண்டுக் கொரு முறை அபூர்வமாக.

$ சண்டி கீரை டீ

& அடிக்கடி கிடையாது. ஒரு நாளில் ஒரு தடவை மட்டும் Tetley Lemon and Honey Green tea. 

3, எள்ளு உருண்டை அல்லது கடலை உருண்டை இவற்றில் எது உங்கள் சாய்ஸ் ?

 # கொள்ளு உருண்டையாக இல்லாத வரை சரி.

$ மெல்லுவதற்கு  மென்மையாக இருப்பதால் எள்.

& எ உ 

4, சமீபத்தில் நீங்கள் விலை கொடுத்து வாங்கிய விலையுயர்ந்த பொருள் என்ன ?

# நகைகள், எமக்கல்ல - பரிசாக.

$ பல் செட்!

&  செல் ஃபோன் - Redmi 8A Dual (Midnight Grey, 3GB RAM, 64GB Storage) - Dual Cameras & 5,000 mAH Battery

5, சமீபத்தில் ஏழை இருப்பிடமற்றோருக்கு உணவு வாங்கி கொடுத்திருக்கிறீர்களா ?      சந்தர்ப்பம் அமையவில்லையெனில் அப்படி சான்ஸ் அமைந்தால் செய்வீர்களா ?

 # மாட்டேன் என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள் ?

$ செய்வதுண்டு. 

& சான்ஸ் அமைந்தால் செய்வேன். 

6, உங்களுக்கே உங்களில் மிகவும் பிடித்த குணம் என்ன ?

# அறிவதில் ஆவல்.

$ கேள்வி கேட்பது.

& மற்றவர்களிடம் நான் காணும் நல்ல விஷயங்களைப் பாராட்டுவது. 

ஜீவி : 

தமிழகத்து கீழடி அகழ்வாராய்ச்சியில் அதிகபட்சம் எத்தனை அடிகள் தோண்டி கண்டறிந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?.. எனது ஆய்வு ஒன்றிற்கு இந்த விவரம் தேவைப்படுவதால் ஆதாரபூர்வமான தரவுகள் அடிப்படையில் தாங்கள் பதிலளித்தால் உதவியாக இருக்கும். விவரம் தேடிப்பார்த்து சரியாகக் கிடைக்காததினால் தான் உங்களிடம் கேட்டுத் தெரிந்து என் ஆய்வுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று கேட்கிறேன்.

# 353 cm  எனப் படித்தேன். 

அரசு தொல்லியல் துறையை அணுகலாமே.

& ஏறக்குறைய பன்னிரண்டு அடிகள். (கீழடி சம்பந்தமான சில வெளியீடுகளை உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு இன்று அனுப்புகின்றேன். ) 

= = = =


104 கருத்துகள்:

 1. ///$ பல் செட்!//

  awwwww :)))))))))))) யாருக்கு ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாருக்காவது பரிசளிக்கவோ!

   நீக்கு
  2. எனக்குத்தான். அரவங்காடு தொழிற்சாலையில் நைட்ரிக் அமிலம் காவு கொண்டது போக எஞ்சியிருந்த பற்கள் zip மாதிரி ஒன்று விட்டு ஒன்று என்றிருந்தவற்றை அகற்றிய பின்...

   நீக்கு
 2. /(தவறாக எண்ணா விட்டால் ஒரு குறிப்பு.//இந்த பதில் த்தான் வரும்னு எனக்கு தெரியுமே அதனால் தவறாக நினைக்கவேயில்லை இல்லையே :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கேள்வி கேட்கும்போதே இதுதான் பதிலா இருக்கும்னு நினைச்சிட்டு தான் கேட்பேன் அதில் 90 % எனது பதிலும் ( prediction ) உங்கள் பதிலும் ஒத்து போகும் 

   நீக்கு
 3. ///5, சமீபத்தில் ஏழை இருப்பிடமற்றோருக்கு உணவு வாங்கி கொடுத்திருக்கிறீர்களா ? சந்தர்ப்பம் அமையவில்லையெனில் அப்படி சான்ஸ் அமைந்தால் செய்வீர்களா ?

  # மாட்டேன் என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள் ?//
  ஒன்றுமே நினைக்க மாட்டேன் ..அது அவரவர் விருப்பம் :) ஒவ்வொரு விஷயத்துக்கும் காரண காரியம் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாட்டேன் என்பதைவிட பழகவில்லை என்பது பொருத்தமாக இருக்குமோ...

   நீக்கு
  2. அப்படியும் இருக்கலாம்!

   நீக்கு
  3. யாரேனும் பசி என்று கையேந்தினால் உதவுவது என் (பலரரது) சுபாவம். ஆனால் தேடிச்சென்று நான் உணவு வழங்கியதில்லை. உணவை வைத்துக் கொண்டு வாங்க ஆள் தேடி அலைந்த உறவினர்கள் அவ்வப்போது நினைவுக்கு வருவார்கள்.

   நீக்கு
  4. அப்போதெல்லாம் குடி இருந்த வீடுகளிலேயே அடுத்த போர்ஷன்காரங்க வாங்கிப்பாங்க. மதுரையில் இரவு நேரத்தில் சுமார் பத்து மணி அளவில் ஓர் கிழவி, "சாதம் தப்பா இருக்கா? அம்மா?" எனக்கேட்டுக் கொண்டு வருவார். அவருக்கென அம்மா எடுத்து வைத்துக் கொடுப்பார். காலையில் அதே கிழவி உருண்டை உருண்டைகளாகச் செம்மண்ணும் மல்லிகைப்பூவும் கொண்டு கொடுப்பார். அந்தக் காலம் அது ஓர் மல்லிகைப்பூக்காலம்! இந்தக் காலம், அது அது, மல்லிகை கிடைக்காக் காலம்! :(

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 5. சமீப காலமா அரசியல்வாதிகள் செயலைப் பார்த்துவிட்டு அரசியல் சம்பந்தமாவே கேள்விகள் எழுது. தேசத்துக்கு துரோகம் நினைத்த திருமா போன்றவர்கள் நம் இந்திய கோவிட் தடுப்பூசியை தமிழகம் ஏற்காது என்று ஏகப்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டு தாங்கள் டபக் என்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்த கடைந்தெடுத்த சுயநலவாதிகள் எதுக்குத்தான் அரசியலில் இருந்து நாட்டு மக்களைக் கெடுக்கிறார்களோ என்று தோன்றும். கார்ப்பொரேட் என்று சொல்லிக்கொண்டே தனியார் மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொள்வது, அரசு மருத்துவமனைகளை இவர்கள் ஆண்டபோது எவ்வளவு மோசமான நிலையில் வைத்திருந்தார்கள் என்பதைச் சொல்லுவதாக எண்ணுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உத்திரப்பிரதேசத்திலும் சில காங்கிரஸ் கிழங்கள், முலாயமின் அருந்தவப்புதல்வன் அகிலேஷ் யாதவ் போன்றோர் ‘கோவாக்ஸின்!, கோவிஷீல்ட்..! ஆ...இது மோதியின் வாக்ஸீன்! எங்களுக்கு வேண்டாம்!’ என ஊளையிட்டார்கள், மக்களை எதிர்த்திசையில் கிளப்பப்பார்த்தார்கள். வாக்சினேஷன் போட ஆரம்பித்ததும் உடனே ப்ரைவேட் ஹாஸ்பிட்டலுக்குப் பாய்ந்து சென்று போட்டுக்கொண்டார்கள்.
   நன்றாக இருக்கட்டும், நரிகள், நாதாரிகள்..

   நீக்கு
  2. ஏகாந்தன் சார்... எனக்கென்னவோ இப்படிப் பேசுவதற்கு வெளிநாட்டிலிருந்து இவர்களுக்கு காசு வருகிறது என்ற சந்தேகம் (உண்மையாகவும் இருக்கும்). கடந்த நான்கு வருடங்களில் ஜாக்டோ ஜியோ போராட்டம், வணிகர்கள் போராட்டம், முகிலன் எங்கே என்ற போராட்டம் இவைகளை நடத்திய தலைவர்கள் திமுகவில் எம்.எல்.ஏ. சீட் பெற்றுக்கொண்டதும் இவர்களைப்பற்றிய உண்மையை வெளிச்சம் போட்டுக்காண்பிக்கிறது. இந்த அரசியல்வாதிகளை நம்பும் பாமர ஜனங்கள்தான் பாவம்.

   நீக்கு
 6. தினமலர் தினசரியில் கீழடி அகழாய்வு பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தன. இப்போக் கொஞ்ச நாட்களாய்ப் பார்க்கவில்லை. ஏழை, இருப்பிடம் அற்றோருக்கு என இல்லாட்டியும் எங்க குடியிருப்பு வளாகத்தின் பாதுகாவலர்கள் மற்றும் எங்கள் வீட்டில் உதவிக்கு இருக்கும் பெண்மணிக்குச் சில நாட்கள் சமைக்கையில் கூடுதலாகச் சமைத்துக் கொடுப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல விஷயம். பாராட்டுகள்.

   நீக்கு
  2. கீதாம்மா, அந்த இடம் பள்ளத்தாக்கு பூமி என்று நினைக்கிறேன். அந்த இடத்து நிலவியல் பற்றித் தெரிந்திருந்தால் சொல்லுங்களேன். என் ஆய்வுக்கு உதவியாக இருக்கும்.

   நீக்கு
  3. கேட்டுச் சொல்கிறேன் ஐயா. பேராசிரியர் சாந்தலிங்கம் ஐயாவிற்குத் தெரிந்திருக்கலாம்.

   நீக்கு
  4. நன்றி.
   ஆதிச்ச நல்லூரையும் கீழடியையும் ஒரு சேரப் பார்த்து அவற்றிடையேயான ஒப்புமைகளை ஆராய்ந்தால் பல அரிய் தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

   நீக்கு
 7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். என்னாளும் அனைவரும்

  நலமாக இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 8. வரப்போகும் தேர்தலில் கட்சிகள் அறிவித்திருக்கும் இலவசங்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
  இலவசங்களையும் ஓட்டுக்குப் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
  கார்ப்பொரேட், கார்ப்பொரேட் எனக் கத்தும் அரசியல்வாதிகள் பலரும் கார்ப்பொரேட் கம்பெனிகளை நடத்துபவர்கள் தான் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உதாரணமாக எல்லாச் சானல்களின் நிர்வாகிகளும்.

  பதிலளிநீக்கு
 9. இந்தக் கார்ப்பொரேட் ஏன் இருக்க வேண்டும் என்பது பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். அரசியல்வாதிகளும் இதை உணர்ந்தே இருக்கின்றனர். ஆனாலும் எல்லோரும் கார்ப்பொரேட்டை ஏன் எதிர்க்கின்றனர்? அதிலும் முக்கியமாக அம்பானியும், அதானியும்! இருவருமே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தே தொழில் செய்தாலும் இப்போது மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதன் காரணம் என்ன?
  அம்பானி, அதானி தவிர்த்த மற்ற பஜாஜ், பிர்லா, மஹிந்திரா, டாடா, செட்டிநாடு கம்பெனிகள்(முன்னால் இருந்தவை மட்டும்), தொலைக்காட்சி சானல்கள், மருத்துவப் பல்கலைக்கழகங்கள்(தனியார்) இவை எல்லாம் கார்ப்பொரேட்டில் சேராதா? கம்பெனிகள் எத்தனையோ இருக்கின்றன! நான் பிரபலங்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். அது ஏன் அம்பானி, அதானி மட்டும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பானி, அதானி வடவர்கள். இங்க உள்ள மாறன் பிரதர்ஸ் (விமான கம்பெனி, தொலைக்காட்சி, கிரிக்கெட் அணி, மருத்துவமனை, கேபிள் டிவி போன்ற பல தொழில்கள் வைத்துள்ள பல லட்சம் கோடி மதிப்பு உடைய குழுமம்), வைகுண்டராஜன் மினரல்ஸ், எஸ்.ஆர்.எம் குழுமம், அப்போலோ குழுமம், போன்றவர்களை மறந்தும்கூட இந்த டுமிலன்கள் எழுதமாட்டாங்க. காரணம், அம்பானி, அதானி, மதவெறி இப்படில்லாம் ஜல்லியடிச்சா 200 ரூபாய் ஒரு பதிவுக்கு வாங்கறாங்க. தமிழகத்துல உள்ள கார்ப்பொரேட்டுகளை எழுதினா வீட்டுக்கு ஆட்டோ வந்துவிடுமே என்ற பயம்தான்.

   நீக்கு
  2. வீட்டுக்கு ஆட்டோவா.. டம்ளன் ஸ்டைலே அலாதி..!

   நீக்கு
 10. அரசியல் வாதிகள் சொல்வது மற்றவர்க்குத்தான் அவர்களுக்கில்லை.

  இங்கே பல அரசியவாதிகள் இளைஞர்கள்
  கோவிட் நோயே இல்லை என்று சொல்லி, வயதானவர்களுக்கு முன் தான் போட்டுக் கொண்டார்கள்.
  அனியாய வியாதிகள் அவர்கள்.

  என்ன செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 11. கார்ப்பொரேட் என்றால் அம்பானி, அதானி மட்டும் என்பது போல் நாட்டில் எது நடந்தாலும், என்ன வந்தாலும் அதற்குக் காரணம் பிரதமர் ஒருவர் மட்டுமே என்று அனைவரும் சுட்டிக்காட்டுவதற்கு என்ன காரணம்?
  இதற்கு முன்னரும் பல பிரச்னைகள்/சம்பவங்கள்/தொற்று நோய்கள் என வந்திருக்கின்றன. என்றாலும் இப்போது கொரோனா மட்டும் மத்திய அரசால் கொண்டுவரப் பட்டது என்பது போல் நினைக்கும் மக்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

  பதிலளிநீக்கு
 12. கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட பலருக்கும் (இரண்டு முறை போட்டதுக்குப் பின்னரும்) தொற்று ஏற்பட்டிருப்பதாக வந்திருக்கும் செய்தியைப் பார்த்தீர்களா? இதற்கு என்ன காரணம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவரை போட்டுக்கொண்டவர்கள் எல்லாமே கோவி-ஷீல்டுதானா? கோவாக்ஸின் போட்டுக்கொண்டவர்களும் உண்டா ?

   நீக்கு
  2. எது நல்லது ஏகாந்தன்? மஹாராஷ்ட்ராவில் கோவாக்ஸின் தான் போடணும்னு மாநில அரசு உத்தரவு. இங்கே அரசு எதைக் கொடுக்கிறதோ அதை நாங்கள் போடுவோம் என்கிறார்கள்.

   நீக்கு
  3. இரண்டுமே ஓகே-தான். எந்த சஞ்சலமும் தேவையில்லை. In terms of efficacy, Bharat Biotech's Covaxin has a slight edge over Serum Institute of India's Covishield. முன்னதற்கு 81%, பின்னதற்கு 75%. இரண்டும் இந்திய மருத்துவக்கழகத்தாலும் (ICMR) உலக சுகாதார நிறுவனத்தாலும்(WHO) அங்கீகரிக்கப்பட்டவையே. (உலகெங்கும் வைத்தியம் பார்ப்பதற்காக, WHO இந்திய அரசு மற்றும் விஞ்ஞானிகள்/ஆராய்ச்சியாளர்களை வெகுவாகப் பாராட்டி இருக்கிறது).

   மத்திய அரசு,’Make in India’ and ’Vaccine Maitri’ திட்டங்களின் மூலம் அவசரகால அடிப்படையில் இவற்றை SII, Bhart Biotech மூலம் உற்பத்தி செய்து நாடு முழுவதற்குமாக இரண்டு வாக்ஸீன்களையும் மருத்துவமனைகளுக்கு வழங்கியிருக்கிறது. மேலும் வழங்கப்பட்டுவருகின்றன. கனடா, ப்ரஸீல், மெக்ஸிகோ போன்ற 26 நாடுகளுக்கும் மேலாக இந்திய வாக்ஸீன்களை அரசிடம் விண்ணப்பித்து வாங்கி அவசர செயல்பாட்டில் கொண்டுவந்திருக்கின்றன. சிலநாடுகள் (பராகுவே போன்ற) கோவாக்ஸின் தான் எங்களுக்கு வேண்டும் எனவும் அடம்பிடிப்பதாகத் தகவல்!

   நீக்கு
  4. தெளிவான விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி ஏகாந்தன்.

   நீக்கு
 13. எங்கள் ப்ளாக் ஆசிரியக் குழுவில் அனைவருக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டு விட்டதா? உங்கள் ஆதரவு அதற்கு உண்டா?

  பதிலளிநீக்கு
 14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலமே வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 15. //மக்கள் ஏமாறத் தயாராக இருந்தால் ஏமாற்றுவோருக்குப் பஞ்சமில்லை//

  ஸூப்பர் உண்மை ஜி பதிவை ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 16. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. அனைத்தையும் ரசித்தேன். அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 18. தனியார்மயமாக்குதலை எதிர்க்கும் பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது கிடையாது. எக்கச்சக்கமாக ஃபீஸ் வாங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளை நடத்துவதும் தனியார்மயமாக்குதலை எதிர்க்கும் அரசியல்வாதிகள்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க பெண்ணுக்கு உடல்நிலை மோசமாக இருந்தப்போவும், பையருக்கு உடல்நிலை மோசமா இருந்தப்போவும் முறையே எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, மதுரை எர்ஸ்கின் மருத்துவமனைகளில் தான் சேர்த்தோம். அதன் பிறகும் அரசு மருத்துவர்கள் தான். இப்போத் தான் சிறப்பு மருத்துவர்களிடம் காட்டுகிறோம். என்றாலும் எங்க மருத்துவர்கள் எல்லோரும் முதல் ஆலோசனைக்கு 300 ரூபாய்களும் அடுத்தடுத்த ஆலோசனைகளுக்கு 200 ரூபாயும் தான் வாங்கினார்கள், இப்போ ஏத்தி இருக்காங்க. 350/400 என

   நீக்கு
 19. எல்லா அரசியல் கட்சி தலைவர்கள் தரும் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் தெரு ஓரத்தில் ஆண்மையை பெருக்க விற்கும் லேகியம் போலத்தான் விற்பவனுக்கே பலன்

  பதிலளிநீக்கு
 20. கேள்வி பதில்கள் நன்று.

  அரசியல்வாதிகள் - சொல்வதையெல்லாம் செய்து விடுவதில்லை! பல விஷயங்கள் ஓட்டுக்காகச் சொல்வதே! செய்ய முடியாது என்று தெரிந்தே வாக்குறுதி கொடுப்பது அவர்களது வாடிக்கை.

  பதிலளிநீக்கு
 21. புதன் கேள்வி
  1. கீழடி போன்றவற்றை அகழ்ந்தெடுத்து ஆராய்ந்து அதனால் நமக்கு என்ன பிரயோசனம்? 1000-2000 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில்களைப் பற்றியே நமக்கு முழுமையான ஆராய்ச்சி மனப்பான்மையோ இல்லை தெரிந்துகொள்ளும் ஆர்வமோ இல்லாதபோது, ஏதோ மண் மேடைத் தோண்டி, நாலு மண்பாண்டங்களைக் கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறோம்?
  2. தமிழர் நாகரிகம், கலாச்சாரம் என்று வாய் நிறையப் பேசிவிட்டு, பிட்சா சாப்பிடுவோம், சப்பாத்தி/கோதுமை சப்ஜி சாப்பிடுவது, பன்/ப்ரெட் உணவு, ஓலாவைக் கூப்பிடு, ஜீன்ஸ் ஆர்டர் பண்ணணும், லோக்கல் கடைகளை அம்போன்னு விட்டுவிட்டு பிக் பாஸில் ஆர்டர் செய்வோம் என்ற மனநிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. பதில் அளிப்போம்.

   நீக்கு
  2. அட? நாம் தமிழர்கள்! நமக்குப் பிறக்கும்போதே எல்லாம் தெரிந்திருந்தது. மத்தவங்க எல்லாம் நமக்கப்புறமாத் தான் என்று பீத்திக்கலாம். இது கூடத் தெரியலை. தமிழர் நாகரிகம், தொன்மையான நாகரிகம்னு சொல்லிக்கலாம். உலகிலேயே நாங்க தான் மூத்த குடிமக்கள்னு சொல்லிக்கலாம்.

   நீக்கு
  3. வடக்கு- தெற்கு மாய்மாலக்களைப் பேச முடியாது போகும் என்பது அதனால் விளயும் பெரும் நன்மை.

   நீக்கு
  4. நெல்லை. சாண்டில்யனின் வரலாற்று கதைகளின் மீதான இது வரை அறிந்திராத புதுப்பார்வைகள் கிடைக்க
   வழியேற்படலாம்

   நீக்கு
  5. கடைச்சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழகத்தைப் பற்றி அறியாமலிருக்க
   சில சக்திகள் முயன்று வருகின்றன.
   அந்த நிலை மாறும்.

   நீக்கு
  6. ஆகா!..

   நாங்க தான் மூத்த குடிமக்கள்..
   நாங்க தான் மூத்த குடி மக்கள்..

   நீக்கு
  7. //சில சக்திகள் முயன்று வருகின்றன.// - அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஜீவி சார்..இதெல்லாம் நம் கற்பனை அல்லது தாழ்வுமனப்பான்மை. தென்னகத்தில் உள்ள கோவில்கள், சிற்பங்கள் போன்றவைகள் நம் வரலாற்றைச் சொல்லுகின்றன. இங்கிருந்த சித்தர்கள் பற்றி அனைவரும் அறிவர். கீழடியில் இன்னும் 3 அடி தோண்டி, முதன் முதலில் பானையில் டிசைன் போட்டது நாம்தான் என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கப்போகிறது? தஞ்சையில் மழைநீர் வடிகால், நீர் தேங்காமல் செய்திருந்த நீர் மேலாண்மை (1000 வருடங்களுக்கு முன்பு) போன்றவைகளில் தமிழர் சிறந்திருந்தனர், கடந்த 50 ஆண்டுகளில்தான் நாட்டைச் சீரழித்துவிட்டனர் என்பதை எதையும் தோண்டாமலேயே நாம் தெரிந்துகொள்ளலாமே.

   நீக்கு
  8. ஹஹஹஹா. சில சக்திகள் என்று நான் குறிப்பிட்டது நீங்கள் நினைப்பதல்ல.

   நீக்கு
  9. அதெல்லாம் கிடையாது...

   மிஷநரி வந்தப்புறம் தான் கல்வி எல்லாருக்கும் பொதுவாகி டம்ளன் எல்லாம் தலை கீழா சிறந்து வெளங்குறாங்க... அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே!...

   நீக்கு
  10. ஹா... ஹா... ஆரிய சகதிகள்... நன்றி ஐயா...

   நீக்கு
  11. ஆரியம் சகதி..
   திராவிடம் சந்தனம்!...

   நீக்கு
  12. துரை சார்.. நீங்க சொல்றதைப் பார்த்தால், தமிழ், மலையாளம், தெலுங்கு தவிர மற்ற எல்லோரும் ஆரியர்கள் போலிருக்கே. இருக்கும் இருக்கும்.

   நீக்கு
  13. சந்தனம் எந்த பேலா ஒன்று தானா?

   நீக்கு
  14. மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களிடம் ‘Thiராவிடம்’ என்கிற ’பப்பு’ வேகாது. அது அமோகமாக விற்கப்படும் ஒரே இடம் தமிழ்நாட்டுச் சந்தைதான்! Gullible customers of TN!

   நீக்கு
  15. ஏகாந்தன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இந்தக் கொடிக் கலாசாரமும், போஸ்டர் கலாசாரமும் தமிழ்நாட்டில் இருப்பதைப் போல் மற்ற மாநிலங்களில் பார்க்கவே முடியாது.

   நீக்கு
 22. பொன்னான புதன்...

  கண்னான கணைகள்...
  கருத்தான விடைகள்...

  பதிலளிநீக்கு
 23. காசை எடுத்து நீட்டு..
  கழுதை பாடும் பாட்டு..
  ஆசை வார்த்தை காட்டு..
  உனக்கும் கிடைக்கும் ஓட்டு!...

  அது - ஆண்டவன் கட்டளை...

  ஏமாறத் தவிப்பவர்கள் மனிதர்கள்..
  ஏமாற்றத் துடிப்பவர்கள் புனிதர்கள்!..

  பதிலளிநீக்கு
 24. பொதிகையில் தான் அருமையான தமிழ் பேசப்படுகிறது. தமிழ் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நான் தனியாக வீட்டில் இருக்கும்போது பொதிகை பார்ப்பதையே விரும்புவேன். ஆனால் மற்றத் தனியார்த் தொலைக்காட்சிகளின் வீச்சு இல்லை என்பதோடு அவங்க அளவுக்குப் பொதிகையில் clarity இல்லாமலும் பண்ணி விட்டார்கள். அதை இப்போது சரி செய்து வருகின்றனர். நல்ல பட்டிமன்றம், புதிர்க்கேள்வி/பதில்கள், கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் எனப் பார்க்கப்பொதிகையை விடச் சிறந்த சானல் இல்லை. செய்திகளும் மிகைப்படுத்தாமல் வரும். அதே பொல் பிஎஸ் என் எல்லும். சமீபகாலமாக வாடிக்கையாளர்களுக்குத் தனியார்கள் செய்யும் சதியைப் பற்றிக் குறிப்பிட்டு எஸ் எம் எஸ் அனுப்புகிறார்கள். அவங்க சொல்வது எல்லாம் பொய் எனவும் பிஎஸ் என் எல்லை மூடுவதற்காகச் செய்யும் முயற்சிகள் எனவும் பொதுமக்கள் இதைப் புரிந்து கொண்டு பிஎஸ் என் எல்லுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

  பதிலளிநீக்கு
 25. பொதிகையை விட்டால் மக்கள் தொலைக்காட்சி. அதிலும் சுத்தமான கலப்படமில்லாத் தமிழ்ப் பேச்சுக் கேட்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கபாலுவின் மனைவி நடத்தும் சேனலிலும் (மெகா தொலைக்காட்சி) நிறைய நல்ல பகுதிகள் வருகின்றன.

   நீக்கு
  2. இயல்பான தமிழ் எதிலும் கிடையாது. வர்வழைத்துக் கொண்டு பேசுவது போல ஒரு தனித்தமிழ்!

   நீக்கு
  3. பொதிகைத் தமிழ் சரியான, இயல்பான தமிழ். தொடர்ந்து பார்ப்பவர்களுக்குப் புரியும். முதல் முதல் தமிழில் ஆங்கில டெக்னிகல் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கொண்டு வந்தது பொதிகை/ அப்போது சென்னைத் தொலைக்காட்சியாக இருந்தது. ம்யூசிக் என்பது இசையாகவும் டைரக்‌ஷன் இயக்கம் எனவும், காமிரா என்பது படப்பிடிப்பு எனவும், எடிட்டிங் படத்தொகுப்பு எனவும் மாற்றப்பட்டது சென்னை தூர்தர்ஷனால் தான்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!