வெள்ளி, 26 மார்ச், 2021

வெள்ளி வீடியோ : காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ

 பானு அக்கா சில நாட்களுக்கு முன்னால் ஒரு நேயர் விருப்பம் கேட்டிருந்தார்.  'தாகம்' திரைப்படத்தில் வரும் 'வானம் நமது தந்தை' என்று தொடங்கும் பாடல்.

பாபு நந்தன்கோடு இயக்கத்தில் முத்துராமனும் நந்திதா போஸும் நடித்த இத் திரைப்படம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்தது.  இசை எம் பி ஸ்ரீநிவாசன்.  பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன்

படம் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.  பாடல் இதோ...

எஸ் ஜானகி குரலில் பாடல்.  நடுவில் ஒரு ஆண்குரல் 'மனித இனத்தில் பிறப்பதற்கு?' என்று கேட்கும்.  அது முத்துராமன் குரல் என்று நினைக்கிறேன்.


இனி என் விருப்பமாக...​

தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களாக வந்ததை தமிழ்ப்படுத்தி பி வாசு எழுத, கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஜெயராம் குஷ்பூ, அஞ்சு நடிப்பில் 1993 இல் வெளிவந்த திரைப் படம் புருஷ லட்சணம்.

காளிதாசன் பாடலுக்கு இசை தேவா.  படம் பார்க்காவிடினும், என்ன பாடல்கள் இதில் இருக்கின்றன என்று பார்ப்போம் அல்லவா...   அதில் இந்த ஒரு பாடல் மட்டுமே எனக்குப் பிடித்த பாடல்.

தேவா இசையில் நிறைய நல்ல பாட்டுக்கள் உண்டு.  இதுவும் அதில் ஒன்று.

எஸ் பி பாலசுப்ரமணியம் சித்ரா குரலில் ஒரு மெலடி.

செம்பட்டுப்பூவே வெண்மொட்டுத்தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே
மண்ணிலே ஒரு வெண்ணிலா
கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா
குயில் பாடும் கீதம் சொல்லிலா

காஞ்சி பட்டுடுத்தி
நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ
கால ப்ரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ
மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்
பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்
புன்னகைதான் பொன்னகையோ
கன்னிகை வா வா வா வா

பூவின் நெஞ்சுக்குள்ளே
புதுவித போதை துள்ளியதே
காதல் பள்ளியிலே
படித்திட ஆசை சொல்லியதே
என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம்
இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்
என் விழியில் உன் முகம்தான்
நின்றது வா வா வா வா

செம்பட்டுப் பூவும் வெண்மொட்டுத் தேரும்
ஸ்ரீரங்க நாதருக்கே ஹோய்
பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும்
என்னுயிர் ராமனுக்கே... ஹோய்
மண்ணிலே வந்த வெண்ணிலா
இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா
குயில் கீதம் காதல் சொல்லிலா

62 கருத்துகள்:

 1. என்ன இது? என்ன இது? இன்னும் யாருமே வரலையா? அப்புறமாக் கூடவே வந்து பின்னாலே இருந்து கிள்ளிட்டு எட்டிப் பார்க்கக் கூடாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   இன்னும் யாரையும் காணோம்.

   நீக்கு
  2. எதுக்கு சீனியர்ட்ட வம்பு வச்சுக்கணும்னு, நீங்க வந்து உங்க முத்திரை பதித்தப்பறம் நாம நுழைவோம்னு இருக்கேன். இல்லைனா, நீங்க மிரட்டற மாதிரியே கனவுகளா வந்து என் தூக்கம் போனால் நான் என்ன செய்வது?

   நீக்கு
  3. ஹா..  ஹா...  ஹா...   என்ன மரியாதை...   என்ன மரியாதை....

   நீக்கு
 2. யாராவது எட்டிப் பார்த்தால் தெரியும் சேதி!

  பதிலளிநீக்கு
 3. தாகம் திரைப்படம் பெயர் கேட்டிருக்கேன். புருஷ லக்ஷணம்? ம்ஹூம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரைபபடம் பெயர் சரி, பாடல்? இப்போ கேளுங்க!

   நீக்கு
  2. புருஷ லட்சணம்/கேளடி கண்மணி ஆகிய படங்களில் அஞ்சுவைப் பார்த்துட்டுப் பின்னர் தொலைக்காட்சித் தொடர்களின் அஞ்சுவைப் பார்த்தால் கண்ணில் ரத்தம் வந்தது. :(

   நீக்கு
  3. வானம் நமது தந்தை பாடல் வானொலியில் கேட்ட நினைவு. எம்.பி.ஶ்ரீநிவாசன் இசை என்பதால்! இல்லைனா கேட்டிருக்க வாய்ப்பே இல்லை.

   நீக்கு
  4. ஹா...   ஹா...  ஹா...  ஏதோ ஒரு படத்தில் விவேக்குடன் நகைச்சுவை வேடத்தில் வேறு வந்திருப்பார்.  கன்றாவியான நகைச்சுவை!

   நீக்கு
  5. கோமதியின் பதிவில் ரோபோ வரலை. இங்கே தான் பிடுங்கல் தாங்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  6. நடுவில் இல்லாதிருந்தது.  இப்போது மறுபடி வருகிறது.  எனக்கு எல்லா தளங்களிலும் வருகிறது.  சமயங்களில் சைக்கிளைக் கண்டுபிடி, பஸ்ஸைக் கண்டுபிடி என்று வேறு வந்து கழுத்தறுக்கும்.  எவ்வளவு செலெக்ட் செய்தாலும் திரும்பத்திரும்ப வரும்.  நான் வெங்கட்டிடம் சென்று ஒருமுறை முறையிட்டேன் - படுத்தகிறது என! - ஏதோ அவர்தான் இதை எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறவர் போல!!!

   நீக்கு
  7. //அவர் தான் இதை எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறவர் போல....// ஹாஹாஹா...

   நீக்கு
 4. ஹிஹிஹி, அனைவருக்கும் நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஆரோக்கியமான வாழ்வுக்குப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 5. அதுக்குள்ளே நான் ரோபோவோனு ஜந்தேகம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை, மறுபடி எல்லோர் பதிவுகளிலும் கேள்வி கேட்கிறது!  அவரவர் பக்கம் தவிர்த்து.

   நீக்கு
 6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலமே வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் நோய் பற்றிய பயம்
  இல்லாமல் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க
  இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. பானு வெங்கடேஸ்வரனின் தேர்வு மிக இனிமை.
  எம் பி ஸ்ரீனிவாசனின் இசை எப்போதுமே
  காதுகளுக்கு அதிர்வு இல்லாமல் அமைதியாக ஒலிக்கும்.

  அந்த முறையில் முத்துராமனின் குரல் நடுவே
  ஒலிக்கக் கேட்க அருமையாக இருந்தது.
  மிக நன்றி ஸ்ரீராம்.
  ஜானகி அம்மாவின் குரலுக்கு என்றுமே
  சிறப்பு அதிகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா..    மிக இனிமையான பாடல்.

   நீக்கு
  2. எம் பி ஸ்ரீனிவாஸன் இசையில் எப்போதுமே குழுவினரின் லலலா இருக்கும்!

   நீக்கு
 9. ஜயராம், குஷ்பூ, அந்தக் குட்டிப் பெண்

  சிந்து, அஸ்வினியுடன் ஒரு படத்தில் வருமே.
  அழகிய கண்ணே பாட்டு.
  பிறகு ரமேஷ் அரவிந்துடன் கேளடி கண்மணி படத்திலும் வரும்.

  இந்தப் படம் நினைவில் வருகிறதா என்று யோசிக்கிறேன்.

  நீங்கள் கொடுத்திருக்கும் பாடல் மிக இனிமை.
  காளிதாசன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுத்துக்களை வடித்திருக்கிறார்.
  அதற்கு இசையும் தேவாவின் திறமையில்

  அழகாக வந்திருக்கிறது.
  வெள்ளிக்கிழமை என்றால் சிறந்த பாடல்கள் என்று ஆகிவிட்டது.
  மனம் நிறை நன்றி மா.

  பதிலளிநீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை. நேயர் விருப்ப முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன்.பாடல் வரிகளை பார்த்ததுமே பாட்டு மனதுக்குள் ஓடவாரம்பித்து விட்டது.

  இரண்டாவதாக வந்த உங்கள் தெரிவு பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டு விட்டு சொல்கிறேன். கேட்டால் அது ஏற்கனவே கேட்டிருக்கிறேன் என நினைவுக்கு வந்து விடும். இந்தப் படம் பற்றிய தகவல்களுக்கும், இனிய பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது கேட்டேன். இதுவரை கேட்ட நினைவு வரவில்லை. பாடல் இனிமையான இசையுடன் எஸ்.பி பி. சித்ரா குரலினிமையுடன் நன்றாக உள்ளது. நன்றி.

   நீக்கு
  2. இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்துவிட்டுக் கருத்திட்டதற்கு நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 13. பாடல்கள் இரண்டும் மிக நன்றாக இருக்கிறது.
  கேட்டேன்.

  பதிலளிநீக்கு
 14. வானம் நமது தந்தை..
  பூமி நமது அன்னை!..

  இந்தப் பாடலைக் கேட்டு எத்தனையோ வருடங்கள் ஆகின்றன... இந்தப் பாடல் தான் மனப்பாடம் ஆயிற்றே!.. ஆனாலும் மறந்து போனது எப்படி என்று தெரிய வில்லை..

  தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லாமலே இனிமையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் சூழ்ந்திருந்த காலம் அது... வானொலியில் அடிக்கடி ஸ்ரீ எம். பி. ஸ்ரீநிவாசன் அவர்களது சேர்ந்திசைப் பாடல்கள் ஒலிபரப்பாகும்...

  தகவமைப்புகள் சில மாற்றம் அடைந்ததனால் மக்களது வாழ்க்கையும் மாறிப் போனது..

  15/20 ஆண்டுகளுக்கு முன் 'ஓப் போடு...' என்றொரு மகா கேவலமான - பொது வெளியில் ஒலிக்கக் கூடாத துக்கிரிப் பாட்டு ஒன்று ஊர் முழுக்க ஓலமிட்ட போது -

  அந்த கால கட்டத்தின் நன்மைகள் அழிந்தே போயின...

  கூடவே கடுங்காமத்தை முன் வைத்து எழுதப்பட்ட பிற பாடல்களால் மனிதனின் மெல்லிய உணர்வுகள் வக்கிரமாகித் தொலைந்தன...

  இன்றைக்கு YouTube சென்று பழைய பாடல்களைத் தேடி அவற்றுக்கான கருத்துரைக் கண்டால் கண்கள் கசிகின்றன...

  சற்று வயதானவர்கள் அந்தப் பாடல்களால் பழைய நினைவுகளுக்குள் மூழ்கும்போது இளையவர்கள் ததும்புகின்றார்கள் -

  சொல்லும் பொருளும் இசையும் நடிப்புமாகத் திகழும் இப்படியான பாடல்கள் வெளியான காலத்தில் நாங்கள் பிறக்க வில்லையே.. என்று!...

  இன்றைய முதல் பாடல் மகத்தானது..
  பதிவில் வைத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இன்றைய முதல் பாடல் மகத்தானது..
   பதிவில் வைத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி.. //

   உணர்ந்து ரசித்திருப்பதற்கு நன்றி.

   நீக்கு
  2. // இன்றைக்கு YouTube சென்று பழைய பாடல்களைத் தேடி அவற்றுக்கான கருத்துரைக் கண்டால் கண்கள் கசிகின்றன...//

   ஆம்... உண்மை...

   அதிலும் குறளுக்கேற்ப (இன்றளவில்) 500 பாடல்களுக்கு மேல்) பல பாடல்களை தேர்வின் போது கண்டேன்... பெண்களை கேவலப்படுத்துவதில் - "முதுகில் சில அற்ப" - நூல் கொண்ட நூலோர் முன்னிலையில் பல வரிகளும் மாற்றப்பட்டுள்ளது என்பதையும் கண்டேன்...

   நன்றி ஐயா...

   நீக்கு
 15. மனித இனத்தில் பிறப்பதற்கு?..

  என்று கேட்பவர் திரு.முத்துராமன் அவர்கள் தான்!..?

  பதிலளிநீக்கு
 16. இரண்டும் கேட்ட பாடல்கள். மீண்டும் கேட்டு ரசிக்க இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வானம் நமது தந்தை .. என்ற பாடலின் இனிமையில் ஒரு விஷயம் மறக்கடிக்கப்படு விட்டது..

  சொல் நயமான பாடலில் ஒளிந்திருக்கின்ற ஒந்றைத் தேடுவோமா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேடுங்கள்.. தேடிக் கண்டு பிடியுங்கள்!...

   நீக்கு
  2. அந்தக் கருத்தினை அவ்வளவாக யாரும் கண்டு கொள்வதில்லை என்று கருதுகின்றேன்...

   நீக்கு
  3. புதிர் மேல் புதிர்...   மண்டை உடைகிறதே....

   நீக்கு
  4. அந்தப் பாட்டில் விடுபட்டிருக்கும் விஷயம் என்ன!?...

   இந்தப் புதிரையே ஒரு பதிவாகப் போடலாம்..

   நீக்கு
  5. அருமையான இசையால் தான் அந்தப் பாடலுக்குள் புதிர் வந்து புகுந்து கொண்டது!..

   நீக்கு
 18. பூவை செங்குட்டுவன்...
  நல்ல பல பக்திப் பாடல்களைத் தந்தவர்..

  திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..
  ஆடுகின்றானடி தில்லையிலே!...

  இவை சூலமங்கலம் சகோதரிகள் பாடியவை.

  இனிய சொல் நயத்தால் சற்று உருமாறி
  கந்தன் கருணை மற்றும் ராஜராஜ சோழன் ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்று இன்றும் நம்மை மயக்குகின்றன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... காலம் கடந்தும் கவரும் பாடல்.

   நீக்கு
 19. இரண்டாவதாக இடம் பெற்றிருக்கும் பாடலை இப்பொழுது தான் கேட்கிறேன்...

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 20. நான் விரும்பி கேட்ட பாடலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மிகவும் இனிமையான பாடல். (தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்). அந்தப் பாடல் இடம் பெற்ற தாகம் என்னும் படம் தேசிய விருது வென்றதாக நினைவு. குமுதத்தில் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதிய சுஜாதா, 'தமிழ்ப் படத்தின் ஓவர் ஆக்டிங்கிலிருந்து மாறுபட்டு இயல்பாக நடித்திருக்கிறார் முத்துராமன்' என்று சிலாகித்திருந்தார். 
  இரண்டாவது பாடலை இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன். 

  பதிலளிநீக்கு
 21. செம்பட்டுப்பூவே பாடல் நல்லா இருக்கே ..இப்போதான் முதன்முறையா கேட்கிறேன் .ஆஆ அஞ்சுவா இது ..சமீபத்தில் எதோ ஒரு தொலைக்காட்சி தொடரில் ஒரு செகண்ட் பார்த்தேன் .அடையாளமே தெரியலை ..சித்தி என்று நினைக்கிறேன் .யூ டியூபில் 

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!