புதிய இடம் பழகும்வரை, அங்கு என்ன என்ன இருக்கிறது என்றெல்லாம் புரிந்துகொள்ளும்வரை, ரொம்பவே எனக்குத் தயக்கமாக இருக்கும். இதுவே கல்ஃப் தேசங்களின் அந்தக் கவலை இல்லை. நானே போய்க் கேட்டுக்கொள்வேன். எது எதற்கு நான் பணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதெல்லாம் ஆரம்பத்தில் புரியவில்லை. எல்லாமே என்னுடைய பேக்கேஜில் உள்ளடங்கியது, பணியாளர்களுக்கு டிப்ஸ் தருவது மாத்திரம் விருந்தினர்களது விருப்பம் என்று பிறகு அறிந்தேன்.
என்னை விருந்தினனாக அழைத்திருந்த அமெரிக்க கம்பெனியில் இருந்த ஒரு பொது மேலாளர் என்னிடம் மிகப் பிரியமாக இருந்தார் (அந்தக் கதை எப்படி ஆரம்பித்தது என்றால் சுவாரசியம்தான். ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்தபோது, அவர் என்னைப் பார்க்க வந்தார். ரொம்ப குண்டாக இருப்பார். வந்தவுடனேயே என்னைப் பார்த்து நீங்கள் உங்கள் கம்பெனியில் உரிமை பெறாமல் எங்கள் கம்பெனி சாஃப்ட்வேர்களை உபயோகிக்கிறீர்கள், துறைத் தலைவர் நீங்கள் என்பதால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இப்போதே போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப்போகிறேன்’ என்று ஆரம்பித்தார் (ஆரம்பமே இப்படி… தான் யார், எந்த விஷயமாக வந்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லாமல்). நானோ அலுவலக மற்றும் என் பணி விஷயத்தில் ரொம்பவே சரியாகச் செய்பவன் (என்று நினைத்துக்கொள்பவன். அதிகாரமும் உண்டு). அவரிடம் உடனே, உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துகொள்ளுங்கள், நான் எதையும் சட்டப்படியே செய்பவன். Fradulant activitiesக்கும் எனக்கும் சம்பந்தமே இருக்காது. நீங்கள் அறையை விட்டு உடனே வெளியேறலாம் என்று சொல்லிவிட்டேன். பிறகு அவர் அமைதியாகி என்னுடன் விளக்கமாகப் பேசி, நான் அவரிடம் நிரூபித்து…இப்படியே நாங்கள் நன்கு பழகுபவர்களாக ஆகிவிட்டோம். அவர் என்னிடம், தென் ஆப்பிரிக்காவில் எனக்குச் சொந்தமான மாளிகை பெரிய தோட்ட த்துடன் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அங்கு சென்று சில வாரங்கள் தங்கிவிட்டு வரலாம் என்று சொல்லும் அளவு நண்பராகிவிட்டார். அவர்தான் அன்று மாலை என்னை ஒரு ரெஸ்டாரண்டுக்குக் கூட்டிச் சென்றார்.
நானோ சாப்பாட்டில் கவனமாக இருப்பேன் (சந்தேகப் பேர்வழி. இப்படித்தான் ஒரு தடவை தாய்வானில், என்னை மாலை உணவுக்குக் கூட்டிக்கொண்டு சென்ற பெண்ணிடம் (எங்களுடன் பிஸினஸ் செய்யும் கம்பெனி ஸ்டாஃப்) எனக்கு வெஜிடேரியன் உணவு மாத்திரம்தான் வேண்டும், அது கிடைக்காது என்பது தெரியும், நான் கண்ட கண்ட இடங்களில் சாப்பிடமாட்டேன், பழங்கள் சாப்பிடுவேன் என்றெல்லாம் பாடம் நடத்தியும், தாய்பேயில் (Taipei) மிகவும் பிரபலமான உணவான Beef Noodles outletக்கு என்னைக் கூட்டிச் சென்றாள். Beef Noodles வெஜிடேரியன் இல்லையா? என்று கேட்டாள். ) அதனால் ரிசார்ட்டில் அவர் என்னை ஒரு ரெஸ்டாரண்டுக்குக் கூட்டிச் சென்றவுடன், நான் ஐஸ்க்ரீம் மாத்திரம் சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவரும் வேறு ஏதோ ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் 100 பெசோ (4 டாலர்?) வைத்தார். நானாக இருந்திருந்தால் ஒரு பைசா டிப்ஸ் வைத்திருக்கமாட்டேன்.
இதை எழுதும்போது எனக்கு சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அதில் ஒன்று தாய்பே ஆபீஸ் வேலையாகப் போயிருந்தபோது அந்த நிறுவனத்தின் பெரிய அதிகாரி எனக்கு பிஸினஸ் லஞ்ச் கொடுக்க ஆசைப்பட்டார் (பலரும் கலந்துகொள்ளும்படியாக). நானோ முன் ஜாக்கிரதையாக, பழங்கள் தவிர நான் எதையும் சாப்பிடுவதில்லை என்று சொல்லிவிட்டேன். அவர் கொஞ்சம் ஏமாற்றமடைந்து, எனக்கு பழங்கள் வரவழைத்தார். எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? அரை மேசை முழுவதும் வித விதப் பழங்கள். அன்றைக்குப் பார்த்து நான் படம் எடுக்க மறந்துவிட்டேன். பொதுவாகவே தாய்வானில் கிடைக்கும் பழங்கள், ருசியை அடித்துக்கொள்ள ஒரு தேசமும் கிடையாது என்பது என் எண்ணம். இது பற்றி பிறகொரு சமயத்தில்.
எனக்கு எப்போதுமே டிப்ஸ் வைப்பது பிடிக்காது. (திருநெவேலிக்காரன்பா) உணவு விலையில் எல்லாவற்றையும் ஏற்றிவிடுகிறானே, பிறகு எதற்கு டிப்ஸ் என்பது என் கட்சி. டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்தால், அதிகமாகக் கொடுப்பவர்களுக்கு தனி கவனம், கொடுக்க மாட்டார் என்று தோன்றுபவர்களிடம் அலட்சியம் என்று பணியாளர்கள் ஆரம்பித்துவிடுவார்கள் என்பது என் எண்ணம். ஆனால் மேற்கத்தைய நாடுகளில் டிப்ஸ் என்பது கலாச்சாரம். (நம்ம ஊர்ல சர்வீஸ் டாக்ஸ் வேற வாங்கிக்கறான்)
அன்றைக்கு அலுவலக வேலைகள் முடிந்த பிறகு ரிசார்டை சுற்றிப் பார்த்தேன். காலையிலேயே கடற்கரைக்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் கடலில் குளிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
ரிசார்ட்டில் நிறைய தென்னை மரங்கள். நமக்கு ஏன் காய் வெட்டித் தரப் போகிறான்?
கடல் ரொம்பவே ஆரவாரமாக இல்லாமல், கொஞ்ச தூரம் சென்று குளிக்கும்படியாக இருந்தது (30-40 அடிகள்)
கடற்கரையிலேயே அமர்ந்து ஓய்வெடுக்க, புத்தகம் படிக்க வசதி இருந்தது.
Sea Guard facility இருந்தது. அதனால் கடலில் சிறிது அலைகள் அதிகமாக இருந்தாலும் எச்சரிக்கைக் கொடி ஏற்றிவிடுவார்கள். குளிப்பவர்களை கண்காணிப்பார்கள், உதவி தேவைப்படுமோ என்று.
இது குளியல் தொட்டி இல்லை (ஜஹாங்கீர் குளியல் தொட்டி எனக்கு நினைவுக்கு
வந்தது) இதனை அழகுக்காக வைத்திருந்தார்கள்.
அங்கு பருவநிலை அடிக்கடி மாறுவதாக இருந்தது. வானம் அவ்வப்போது பார்க்க வித்தியாசமாக இருந்தது.
கடல் பின்னால் தெரிகிறதா?
நீச்சல் குளத்திலேயே வாட்டர் வாலிபால்.
ரிசார்ட்டில் நீச்சல் குளம் எங்கே என்ற கேள்வி
வரும் என்பதால், நீச்சல்
குளத்தின் ஒரு படம்தான் இந்த வாரம். மிகுதி
அடுத்த பதிவுகளில்.
பழங்களையும் உணவுப்பொருள்களை பற்றி அவ்வளவு சொல்லி அது சம்பந்தமாக ஒரு படம் கூட இல்லை. அந்தக் குறிப்பிட்ட நாளில் அத்தனை பழங்களை போட்டோ எடுக்க மறந்து விட்டீர்கள், சரி, அப்புறம் ஒன்று கூடவா எடுக்கவில்லை? அட, அங்கிருக்கும் உணவு வகைகளை சாப்பிடத்தான் மாட்டீர்கள். படம் கூடவா எடுக்க மாட்டீர்கள்?!!!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம். தாய்வானில் பழங்கள் விற்கும் கடைகள், அவற்றை அடுக்கி வைத்திருக்கும் விதம், மிகமிக அழகு. தாய்வான் பயணங்களில் அவற்றைப் பகிர்வேன்.
நீக்குசில கம்பெனிகள் நல்ல ட்ரீட் தரலாம் என்று காத்திருக்கும்போது எதையும் விருப்பப்படாத என்னைமாதிரி ஆட்களை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?
ஹரித்வாரிலிருந்து
ஒரு நாள் பெங்களூரு, ஒரு நாள் சென்னை, ஒருநாள் ஹரித்வார்... நீங்கள் ஒரு இந்தியா சுற்றும்...
நீக்குஇரண்டாவது முறையாக பத்ரி யாத்திரை
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம்
நீக்குபடங்கள் வெகு அழகு!
பதிலளிநீக்குமிக்க நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்
நீக்குபடங்கள் எல்லாம் செமையா இருக்கு நெல்லை.
பதிலளிநீக்குஅதுவும் கடலுடன் இருக்கும் படங்கள்!!! ஆஹா.
பின்னாடி கடல் தெரிகிறதே!
பீச் சுத்தமாக இருக்கு
கீதா
வாங்க கீதா ரங்கன் க்கா.கடல் படங்களே அழகு என்றால் அங்கு போயிருந்த எனக்கு எப்படியிருந்திருக்கும்?
நீக்குகண்டிப்பாக ரசித்திருப்பீங்க!!!! நெல்லை!
நீக்குகீதா
பிறகு எதற்கு டிப்ஸ் என்பது என் கட்சி. டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்தால், அதிகமாகக் கொடுப்பவர்களுக்கு தனி கவனம், கொடுக்க மாட்டார் என்று தோன்றுபவர்களிடம் அலட்சியம் என்று பணியாளர்கள் ஆரம்பித்துவிடுவார்கள் என்பது என் எண்ணம். //
பதிலளிநீக்குஹைஃபைவ்! ஆனால் டிப்ஸ் வைப்பது சகஜமாகிவிட்டது இப்போதெல்லாம்.
இதுவும் ஒரு வகை லஞ்சம் தான் இல்லையா? எதுக்குமே பைசா எதிர்பார்க்கும் எண்ணம். டிப்ஸ் கொடுத்தாதான் லைசன்ஸ்...போலீஸுக்கு டிப்ஸ் (டீசண்டான வார்த்தை மாமூலுக்குப் பதில்!!!!!!!!)
கீதா
லஞ்சம் காரியம் ஆவதற்கு கொடுக்கப்படுவது. டிப்ஸ்?
நீக்குநெல்லை, காரியம் ஆவதற்குன்னு சொல்றோம்....ஆனா அவங்க செய்ய வேண்டியது ட்யூட்டி அவங்க வேலை. அதுக்கு எதுக்குக் கையூட்டு?!!! அவங்களுக்குச் சம்பளம் கிடைக்குமே அரசு கொடுக்குதே.
நீக்குடிப்ஸ்னாலும் சரி, லஞ்சம் னாலும் சரி எதிர்பார்ப்பைக் கிளறுமே. லஞ்சம் கூட தரத்துக்கு ஏத்தாப்லதானே வாங்கறாங்க!
100 கொடுக்க முடியலைனா அட்லீஸ்ட் 50 ஆச்சும் கொடுன்னு கேட்பாங்களே. இது ஒரு உதாரணத்துக்குத்தான் இதெல்லாம் ஜுஜூபி அமௌன்ட்!
இன்னும் சொல்லலாம். ஆனா வேண்டாம்...அது கோவில் பத்தி...
கீதா
நீங்கள் ஐடியல் உலகத்தில் இல்லை. இந்தியாவில் காசு கொடுக்காமல் எதுவும் நடக்காது. நமக்கும் சட்டப்படிச் செல்ல பொறுமையில்லை
நீக்குரிஸார்ட் படங்கள் எல்லாமே அழகு.
பதிலளிநீக்குவெளிநாடுகளில் பொதுவாகவே பீச் ககளில் வாச் டவர், sea guard safety ரப்பர் வளையங்கள், போட்கள் என்று எல்லாமே தயாராக இருக்கும் என்று அறிந்திருக்கிறேன். அது போல குளிக்க முடியாது என்றால் அங்கு சிவப்புக் கொடி தடுப்புகள் எல்லாம் போட்டிடுவாங்க
கீதா
கீதா
ஆமாம் கீதா ரங்கன். அவங்க (பல வெளிநாடுகள்) ரொம்ப ஆர்கனைஸ்ட். மக்களும் மெச்சூரானவர்கள்
நீக்குவாட்டர் வாலிபால் வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்
பதிலளிநீக்குகீதா
நான் சிலர் விளையாடிக்கொண்டிருந்தபோது பார்த்தேன் கீதா ரங்கன்
நீக்குஅழகான கடல் காட்சிப் படங்கள் .
பதிலளிநீக்குதென்னை, மரங்கள் என வடிவாக வைத்துள்ளார்கள்.
கடலூர் நிழல் குடைகள் அணிவகுத்து நிற்கின்றன.
படங்கள் நன்றாக உள்ளன.
அறிமுகமில்லாத பழி சுமத்த வந்தவர் நண்பரானது சுவாரசியம்.
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்
நீக்குபதிவும் , படங்களும் அழகு. கருமேக சூழ்ந்த வானமும், கடலும் அழகு.
பதிலளிநீக்குரிசார்ட் படங்களும் தண்ணீர் நிரம்பிவழியும் தொட்டியும் , தென்னை மரம் சூழ்ந்து இருக்கும் இடமும் , பசுமையான புல்வெளியும் அழகு.
மோதலில் ஆரம்பித்து பின் புரிந்து கொண்ட நட்பு அருமை.
வாங்க கோமதி அரசு மேடம். அந்த நண்பரின் படத்தைப் பகிர்வேன். படங்களை ரசித்ததற்கு நன்றி. இப்போது ஹரித்வார் கங்கா ஆரத்திக்குக் காத்திருக்கிறோம்
நீக்கு