புதன், 16 அக்டோபர், 2019

புதன் 191016 : பேய் ஏன் செடிகளில் குடியேறுவதில்லை?வல்லிசிம்ஹன் :
              

வதன,முக நூல் பக்கம் போகாமலிருந்தால் என்ன ஆகும்?

# முகநூல் பக்கம் போகாமல் இருந்தால் நல்ல நிம்மதியாக இருக்கும். ஆனாலும் என்ன ? முகநூலில் நாம் பார்க்கத் தவறுவதை வாட்ஸ் அப்பில் யாரோ போட்டு நம்மைத் தொல்லை செய்கிறார்களே.

$ வாட்ஸ் அப்பில் வந்தால் கூட உடனே அதை டெலிட் செய்துவிடுவேன்! 

& ஒன்றும் ஆகிவிடாது. மக்களுக்கு மறதி அதிகம். ஒருவாரம் அல்லது பத்துநாட்கள் கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள் அதாவது நமக்குப் பரிச்சயமானவர்கள் நம்மைத் தேடுவார்கள். பிறகு மறந்துபோய்விடுவார்கள். முகநூலை விட்டு வெளியேறுகிறேன் என்று அறிவித்த சில நபர்களின் அனுபவத்தை வைத்து இதைச் சொல்கிறேன். 


ஏஞ்சல் :

1, ஒருவருக்கு சொந்த ஊர் என்பது எது ?


$ அப்ளிகேஷன் (விண்ணப்பப் படிவங்கள்) நிரப்பும்பொழுது, பெர்மனென்ட் (மாறாத? நிலையான ?) விலாசம் எந்த ஊர் விலாசம் அந்த ஊர் என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது ஒரே ஊரில் வாழ்க்கையின் அதிக வருடங்களைக் கழித்திருந்தால் அந்த ஊராகவும் எடுத்துக்கொள்ளலாம்.


# சொந்த ஊர் என்பது ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் வந்ததும் காணாமல் போய்விட்டது. ஜமீன்தார்கள் தான் ஊர் முழுவதுக்கும்  சொந்தக்காரர்களாக இருந்தார்கள் -அந்தக் காலத்தில்.

இப்போது புலம்பெயர்ந்து வேலை தேடிப்  பலரும் பல திசைகளிலும் செல்லும்  நிலையில் சொந்த ஊர் என்று சொல்லிக்கொள்ள ஏதும் இல்லாமல் போவதே இயல்பாகிப் போய்விட்டது.

& எனக்கு சொந்தமாக ஊர் எல்லாம் ஒன்றும் இல்லை. சொந்த வீடு மட்டும்தான்! 2, இது பேய்ப்பற்றிய ஒரு கேள்வி :) ஆலமரப்பேய் ,அரசமரப்பேய் ,புளியமரப்பேய் எல்லாம் கேள்விப்பட்டிருக்கோம் ஆனா ரோஜாச்செடி பேய் செம்பருத்திச்செடி பேய்னு இல்லியே ஏன் ? 


$ ரோஜா செம்பருத்தி எல்லாம் அல்ப ஆயுள் கொண்ட செடிவகைகள். ஆலமரம், அரசமரம், புளியமரம் - ஆஹா! வாழும் பேய்களுக்கு ஏற்ற வாழுமிடம். மேலும் பேயின் வெயிட்டைத் தாங்க செடிகளால் இயலாது! 

# செடிகள் பேயின் சுமையை தாங்க முடியாதே.

& இரவில் தனியாக நடந்துசெல்கிறோம். ஒரு பேய் சிம்பிளா  ஆல/ அரச/ புளிய மரத்திலிருந்து தொப்பென்று நம் கண் முன்னே குதித்தால் கெத்தாக இருக்கும். அதை விடுத்து  ரோஜாச்செடி/ செம்பருத்தி செடியிலிருந்து, கம்பளிப்பூச்சி போல, நூலில் பேய் தொங்கினால்,  ஒரு பய மதிப்பானா அதை?  சொல்லுங்க! 
3, ஒருவரை ஒரு காணொளியில் பார்த்தேன் .யாரையும் பேசவிடாமல் காமெடி என்ற பெயரில் பிறர் பேசும்போது குறுக்கே குறுக்கே பேசிக்கொண்டிருந்தார் இது நார்மலா இல்ல அப்நார்மலா ? இல்லை எனக்கு ரசிப்புத்தன்மையில்லையா ? அதற்கு கைதட்டியது அரங்கம் முழுதும் .


$ எதிர்பார்ப்புகளும் நடைமுறை வாழ்க்கையும் எப்போதும் ஒத்துப்போவதில்லை! 

# காணொளிக் காமெடி கேலிக் கூத்தாகி வெகு நாட்களாகி விட்டது.

& He might be a normally abnormal comedian. பட்டிமன்ற நடுவர்கள் குறுக்கிட்டுப் பேசினால் - அதிக பட்சமாக ஐந்து வார்த்தைகளுக்குள் இருந்தால் ரசிக்கலாம். சாலமன் பாப்பையாவின் குறுக்குக் கமெண்ட்ஸ் அப்படி ரசிக்கும்படி இருக்கும். 

4, Greta Thunberg பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் .ட்ரம்ப் அங்கிள் நடக்கும்போது முறைத்து பார்த்த காட்சி உலகெல்லாம் டிவிக்களில் வலம் வந்தது . ஒரு குழந்தையை குழந்தையாக அதனியல்பில் இருக்க விடாமல் செய்தது எது ? அதன் வளர்ப்பா அல்லது சமூகமா ?


$ குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல், பெரியவர்கள் போல நடந்துகொள்ள முற்படும்போது, கை தட்டி அவர்களைக் கெடுத்துவிடுகிறோமோ என்று சந்தேகமாக உள்ளது. 

# நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஒரு சின்ன வயசுப் பெண் அமெரிக்க ஜனாதிபதி யை "முறைத்துப் பார்ப்பது" வளர்ப்புக் கோளாறோ என்று ஐயம் எழுந்தால் அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. உலகளாவிய பிரச்சினை யில் ஒரு தனி நபரை (பதவி எதுவானாலும்) முறைப்பதால் தீராது என்று அவர் உணர்ந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அது பெரிய தவறா என்று தெரியவில்லை. காரணம் ட்ரம்ப் MR ராதா டைப் என்று நம்மை நினைக்க வைப்பவர்.
  
& உங்கள் கேள்வியைப் படித்தபின்(தான்) விவரங்களை இணையத்தில் தேடிப்பிடித்துப் பார்த்தேன். என்னைக் கேட்டா, இந்த கிரேட்டா தன்னுடைய sweet sixteen முகத்தை இவ்வளவு கடுமையாக வைத்துக்கொள்ளாமல், இனிய புன்னகையோடு, அதே விஷயத்தைக் கூறினால் அதற்கு இன்னும் அதிக reach இருக்கும் என்று தோன்றுகிறது. அதை விடுத்து உலகத் தலைவர்களை எல்லாம் பார்த்துப் பல்லைக் கடித்துக்கொண்டு பேய் காட்டினால், அது ஒரு மனோவியாதியின் வெளிப்பாடாக இருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது. 

5, //ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் //இதில் எனக்கொரு மாற்று கருத்து இருக்கு ..யாராவது தவறை தெரிந்தே செய்வார்களா ?? தெரிந்து தவறு செஞ்சா அவர்களில் பிரச்சினை இருக்கு என்றுதானே அர்த்தம் ? அப்புறம் எப்படி MGR அங்கிள் உணர்ச்சி பொங்க யோசிக்காம தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று பாடலாம் ?# தெரிந்து தவறு செய்பவர்கள்தான் அதிகம்.
சினிமாப் பாட்டை உபநிஷதம் மாதிரி எடை போட வேண்டுமா ?
எம் ஜி ஆர் யாரோ எழுதியதை யாரோ பாட, சம்பளத்துக்காக அதற்கு வாயசைத்து டான்ஸ் ஆடினார்.

===============================================

கண்மணியே காடராக்ட் என்பது ......  01

கண்மணியே காடராக்ட் என்பது ......   கற்பனையோ / கண் வரையா(!) ஓவியமோ எத்தனை எத்தனை குழப்பங்கள் .... என்றே மனம் குழம்பிய நிலை என்பது எல்லோருக்குமே வரும் என்று நினைக்கிறேன். 

என்னுடைய இடது கண் பார்வை இயல்பான நிலையில் இல்லை என்பது முப்பது / நாற்பது வருடங்களாகவே எனக்கு இருக்கும் சந்தேகம்.

மூன்று வருடங்களுக்கு முன்பு, 'போ அப்பா ஐ டோன்ட் கேர் ' குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள கண் பரிசோதனை  மையத்திற்கு, அவர்கள் முன்பே ஃபோனில் சொன்ன 'அதிகாலை' வேளையில் சென்றேன். கண்ணில் கண்ட வெள்ளை உடை பெண்மணி ஒருவரிடம், "டாக்டர், எனது இடது கண்ணில் பார்வை சரியில்லை. பரிசோதனைக்கு வந்துள்ளேன்" என்றேன். 

அந்தப் பெண்மணி, அனுதாபத்துடன் என்னைப் பார்த்து, தலையை ஆட்டி, சைகையில் ஒரு இருக்கையைக் காட்டி, அங்கே அமரும்படி சொன்னார். அமர்ந்தேன். அந்தப் பெண்மணி, நான் நின்றிருந்த இடத்தில் 'மாப்' வைத்து நீரால் சுத்தம் செய்து அகன்றார். 

அதற்குப் பிறகு அரைமணி நேரம் சென்றபின், ஒரு மினிஸ்கர்ட், ஹைஹீல்ஸ் உதட்டுச்சாயம் பெண், மொபைலில்  பேசிச் சிரித்தபடி உள்ளே வந்தார். ரிசப்ஷன் மேஜையை அடைந்து, சுவிட்சுகளைப் போட்டார். 

கம்பியூட்டரை உயிரூட்டினார். எல்லாமே ஒரு கையில் மொபைலை ஏந்தி, பேசிச் சிரித்தபடி. 

நான் அந்த உதவி மேஜை அருகே சென்று என் வழக்கமான பல்லவி ஆரம்பிப்பதற்குள் மேஜையிருந்து ஒரு எல்லோ கார்ட் எடுத்து என் முகத்துக்கு அருகே நீட்டினார். 

இன்னும் ஏதாவது பேசினால், அடுத்து ரெட் கார்ட் கொடுத்துவிடுவாரோ என்னும் பயத்தில் எல்லோ கார்டை வாங்கிப் பார்த்தேன். 

பெயர் / வயது / இத்யாதி விஷயங்கள் நிரப்பவேண்டிய அட்டைதான். 

எல்லா விவரங்களையும் நிரப்பி, கொடுத்தேன். 

அந்த விவரங்களை அந்தப் பெண் கம்பியூட்டர் உள்ளே விரல்களால் தட்டி அனுப்பினாள். 

சிறிது நேரம் கழித்து நீல உடை சிப்பந்தி ஒருவர் வந்து என்னை மேலே பார்க்கச்சொல்லி - இரண்டு கண்களிலும் மருந்து ஒவ்வொரு சொட்டு விட்டு, 'இப்போ மணி என்னன்னு பாத்துக்குங்க, பத்து நிமிஷம் கழிச்சு கண்ணைத் திறக்கலாம்' என்று சொல்லி சென்றார். இதில் ஏதோ முரண் இருக்கு என்று அவருக்குத் தெரியவில்லை. 

கண்ணை மூடி இருக்கின்ற நேரங்களில்தான் என்னென்னவோ ஐடியா எல்லாம் தோன்றும். அட எங்கள் ப்ளாக் ல இதை எழுதலாமே என்று நினைப்பேன். அப்புறம் மறந்துபோய்விடும். 

பக்கத்தில் ஏதோ செண்ட் வாசனை. 'உஷ்' என்று யாரோ யாரையோ எச்சரிக்கிறார்கள். கண்ணைத் திறந்து பார்க்க ஆசைதான். ஆனால் அந்த நீலக்குயில் எங்கேயாவது உட்கார்ந்து என்னைக் கண்காணித்து, கண்ணைத் திறந்தால் வந்து என் தலையில் குட்டிவிடுமோ என்று பயம். 

சற்று நேரம் கழித்து, "கண்ணைத் திறங்க" என்று குரல் கேட்டு, கண்ணைத் திறந்தால் பக்கத்தில் உள்ள ஒருவருக்கு நீலக்குயில் கொடுத்த கட்டளை! அவசரமாக கண்ணைத் திரும்ப மூடிக்கொண்டேன். 

ஒருவழியாக சொட்டு மருந்து சோதனைகள் முடிந்து, ஒரு டாக்டரின் அறைக்கு அழைக்கப்பட்டேன். அவர் ஒரு வெள்ளைத்தாளை எடுத்து, அதில் 24 என்று எழுதி என் முகத்தைப் பார்த்தார். சரிதான் தமிழ்ப் படங்களில் வரும் டாக்டர், மூக்குக் கண்ணாடியைத் துடைத்து மாட்டியபடி, "எதையுமே இன்னும் இருபத்துநான்கு மணி நேரம் கழித்துதான் உறுதியா சொல்லமுடியும்; நம்ம கைல என்ன இருக்கு? எல்லாம் அவன் செயல் ...." என்று சொல்லி வானத்தைப் பார்ப்பதுபோல இவரும் சொல்லப்போகிறாரோ என்று நினைத்தேன். 

என் முகத்தைப் பார்த்து ஏதோ யோசனை செய்தவர், அந்த வெள்ளைத் தாளில், 24000 என்று எழுதினார். அதற்குக் கீழே  32000,  அப்புறம்   39000,
கடைசியாக   48000 என்று எழுதினார். அப்போதும் நான் ஒன்றும் முகத்தில் உணர்ச்சி காட்டவில்லை என்று தெரிந்ததும் லிஸ்ட் மேலே Per eye என்று எழுதி இரண்டு கோடுகள் கிழித்தார். 

இப்போதான் எனக்கு உண்மை உரைத்தது. இவர் என்னுடைய கண் ஆப்பரேஷனுக்கு என்ன செலவாகும் என்று எஸ்டிமேட் கொடுக்கிறார். 

"எப்போ காடராக்ட் ஆப்பரேஷன் செய்துக்க நினைக்கிறீங்களோ அதுக்கு மூன்றுநாட்கள் முன்னதாக இங்கே வாங்க. நாங்க ஒரு மருந்து தருவோம். அதை மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் நான்கு முறை போட்டுக்கொண்டு, நாலாம் நாள் இங்கே வாங்க - ஆப்பரேஷன் செஞ்சுடலாம். இந்த லிஸ்டுல இருக்கற விலை எல்லாம் லென்ஸ் விலை. எந்த லென்ஸ் பொருத்தவேண்டும் என்று சொல்கிறீர்களோ அதைப் பொருத்திவிடுவோம்." என்றார். 

நான் அந்த லிஸ்டை வாங்கிக்கொண்டு, " சரி டாக்டர். அப்புறம் வந்து சொல்கிறேன்" என்று சொல்லி வெளியே வந்து பார்த்தால் ..............  
உலகமே கோடி சூர்யப் பிரகாசமாய், மின்னலடிக்கும் ரின் வெண்மையாய் இருந்தது. எதுவுமே கண்ணுக்கு சுத்தமாகப் புலப்படவில்லை. சொட்டு மருந்துகள் செய்த மாயம். 

உத்தேசமாக ரோடுல காலை வைத்தால்   ஏதோ ஒரு மஞ்சள் சுவர் டுர்ர்ர்ரென்று சத்தமிட்டபடி என்னை உரசி நின்றது .. "என்னப்பா கண்ணு தெரியலையா?" என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

"ஆமாம்" என்றேன். 

"நீ மோதிக்க என் ஆட்டோதான் கெடச்சுதா?"  

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி, வீட்டை நோக்கி நடந்தேன் மீதி அடுத்தவாரம். 

==================================================


238 கருத்துகள்:

 1. இனியகாலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்...

  மீ தான் ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம்கீதா ரெங்கன்.  வாங்க..  வாங்க....

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம்கீதா ரெங்கன். வாங்க.. வாங்க....படிங்க சிரிங்க!

   நீக்கு
 2. ஆஹா ஏஞ்சல் என்னை நெல்லைகிட்ட மாட்டி விட்டுட்டாரே!!!! ஒருவருக்கு சொந்த ஊர் என்பது என்னன்னு??!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 3. தலைப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு...பேய் னாலே ரொம்ப ஸ்வாரஸ்யம் ரொம்பப் பிடிக்குதே....ஓ இதுவும் ஏஞ்சலின் கேள்வியா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ! வித்தியாசமான கேள்விகள் கேட்பதில் நிபுணி அவர்!

   நீக்கு
  2. அதனால்தானே என் செக் ஆக வச்சிருக்கிறேன்:))

   நீக்கு
  3. அட? அதிரடி தான் அந்தப் பிசாசாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

   நீக்கு
 4. க்ரேட்டா முறைத்தாரா அப்படியும் வந்துச்சா...ஓ...

  ம்ம்ம் என் தனிப்பட்டக் கருத்து அவர் பேசுவது மிக நல்ல விஷயமே. வெறுமனே பேசாமல் செயலிலும் இறங்கியிருக்கிறார்....நல்லது போசினாலும் கூட அது கொஞ்சம் அதீதமாகப் போகிறதோ என்றுதான் தோன்றியது சில விஷயங்கள் நடைமுறையில் சாத்தியமில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. க்ரேட்டா பற்றிய பதில்கள் சிறப்பு அதிலும் முதல் மற்றும் மூன்றாவதை நான் டிட்டோ செய்கிறேன்.

   கீதா

   நீக்கு
 5. Gauthaman ji. ahaaa.:)அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
  என் கேள்விக்குத் தக்க பதில் சொன்னதுக்கு மிக மிக நன்றி.
  இதே இப்ப நடந்து கொண்டிருக்கு. எல்லாருக்கும் வேலை இருக்கு.
  அதனால் ஒருவர் வராமல் இருந்தால் ஒன்றும் குடிமுழுகாது.

  ஆனால் சில நண்பர்களின் பதிவுகளை மிஸ் செய்துவிடுவோம்.
  கூகிள் ப்ளஸ் இருந்த போது இன்னும் சௌகர்யமாக இருந்தது.
  மிக மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   இனிய காலை வணக்கம்.

   நீக்கு
  2. வல்லிம்மா டிட்டோ...நானும் எதிர்பார்ப்பு வைத்திருந்தேன் இப்போ எல்லாம் விட்டுவிட்டேன்...ஏன்னா என்னாலயும் சில சமயம் டக் டக்கென்று போக முடியாம ஆகுதே...

   கீதா

   நீக்கு
  3. கூகிள் ப்ளஸ் மறந்துபோய் ரொம்பநாள் ஆயிடுச்சு. ஆனால் அதில் முகநூல் அளவுக்கு வம்பு, சண்டைகள், குடுமிப்பிடிகள் இருந்தனவா என்று தெரியவில்லை.

   நீக்கு
 6. பேய்ப் பதில்கள் சூப்பர். கௌதமஞ்சியின் காடராக்ட்
  அனுபவம் அமர்க்களம். நானும் பட்டுத் தேர்ந்ததால். என் பதிவைப் படிப்பது போல இருந்தது.
  ஆனால் இவ்வளவு வர்ணனைகள் எழுதவில்லை.
  இது ஜஸ்ட் சூப்பர்.நீலக் குயில் ஹாஹா.

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் அனைவருக்கும் பொன்னாளாக மலர இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  கேள்வி பதில் சுவாரஸ்யமாக உள்ளது. பேய்களின் பாரம் தாங்காது செடிகள் வளைவதை கற்பனையில் கண்டு ரசித்தேன். ஆம்..! பேய்கள் கம்பளி பூச்சியாய் இருந்தால்... என்ற பதில் சிரிப்பை உண்டாக்கியது.

  கண்புரை பற்றிய தெளிவான கட்டுரையும் நன்றாக நகைச்சுவையாக உள்ளது. "எண்ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" என்பது வழக்கு மொழி. ஆனால் எல்லா உறுப்புகளும் பிரதானந்தான். ஒன்றின் தேவையை அதனுடைய அருமையை அதன் பாதிப்பால்தான் அனைவருமே உணர்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலாக்கா...     இனிய காலை வணக்கமும், பிரார்த்தனைகளுக்கு நன்றிகளும்.

   நீக்கு
  2. // "எண்ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்" என்பது வழக்கு மொழி. ஆனால் எல்லா உறுப்புகளும் பிரதானந்தான். ஒன்றின் தேவையை அதனுடைய அருமையை அதன் பாதிப்பால்தான் அனைவருமே உணர்கிறோம்.// ஆம்! மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி!

   நீக்கு
 8. ஏஞ்சல் கேட்டதற்குச் சொன்ன பதில்கள்.
  அனேகமாக எல்லோர் நிலைமையும் இதுதான்.
  அம்மா அப்பா பிறந்த இடமே சொந்த ஊர்
  என்றால் ஒரு இடம் சொல்லலாம்.
  எல்லா இடங்களுமே சொந்த இடங்கள் தான்.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும். நல்லவேளையா இன்னிக்குப் பேயார் வந்து என் வயிற்றில் பால் வார்த்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா கீதாக்கா செமையா சிரிச்சுட்டேன்... ஹைஃபைவ் நானும் அட பேயார் வந்தாச்சேனு சொல்ல நினைத்து விட்டேன்.

   .அப்புறம் அவர் வந்து நான் வரவே இல்லையேனு சொல்லிடுவாரோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அப்படினு!! ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  2. வாங்க கீதா அக்கா...   நல்வரவும், நன்றிகளும்.

   நீக்கு
  3. பேயார் எங்கே வந்தார்! என் கண்களுக்குப் படவில்லையே! கீதாக்களுக்கு மட்டும்தான் கண்ணில்படுவாரோ?

   நீக்கு
  4. கேஜிஜி சார்... ஏன் இப்படி பட்டுனு 'பாம்பின் கால் பாம்பறியும்' என்று சொல்லிட்டீங்க..... அதனால்தான் 'பெண்ணைக் கண்டால் பேயும் இ ற ங்கும்-மரத்திலிருந்து' என்று அனுமானிக்கிறீங்களோ?

   நீக்கு
  5. நெல்லையாரே இன்று உங்களுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா! நாராயண, நாராயண!

   நீக்கு
  6. கௌ அண்ணா இந்த நெல்லை இன்று செம ஃபார்மில் இருக்கார் போல வீட்டில இன்று அவர் ஹஸ்பன்ட் இவரை சமைக்க விட்டுட்டார் போல!!!!! அந்த பெர்மிஷ்ன் கிடைச்ச சந்தோஷம்!!!! ஹா ஹ ஹா ஹா

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை என்னையும் கீதாக்காவையும் பேய்னு சொல்லியதற்கு ஹா ஹா ஹா ஹா ஹா...அதான் "ஓட்டறீங்களோ?!!!!"

   கீதாக்கா இப்ப செம தூக்கத்துல இருப்பாங்களே..கை கொடுக்கும் கை.இந்த் அதிராவையும் காணோம்...தனியா போராட வேண்டியிருக்கேஏஏஏஏஏஏஏஏ!!!!!!!!!!!!!!!!! முருகா என்னப்பா!!!

   கீதா

   நீக்கு
  7. கௌ அண்ணா நெல்லைக்கு இன்று வம்பு இழுக்க ஏஞ்சல் அதிரா, கீதாக்கா பதிவு போடலைனு நினைக்கிறேன்...ஹா ஹா ஹா ஹா...எங்க தளத்துல இழுத்ததை (இது கொஞ்ச நாளா ஓடுதுதான்...) இங்கு கேள்வியாக்கிட்டேன் பஞ்சாயத்தைக் கூட்டுங்கனு!!! ஹிஹிஹிஹி...

   கீதா

   நீக்கு
  8. 'பெண்ணைக் கண்டால் பேயும் இ ற ங்கும்-மரத்திலிருந்து' என்று அனுமானிக்கிறீங்களோ?//

   ஹையோ பெண்ணென்றால் பேயும் இ(ற)ரங்கும் ந்றத நான் ஒரு கதைல சொல்லியிருக்கேனே.....அதை இப்பவே நான் சொன்னா சரியாகாதே... இன்னும் எபிக்கு அனுப்பலையே..ஏஏஏஏஏ...

   கீதா

   நீக்கு
  9. பேயார் எங்கே வந்தார்! //

   கீதாக்கா பாத்தீங்களா நான் ஜொல்லல?!!!! இப்படித்தான் கௌ அண்ணா சொல்லுவார்னு.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  10. என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்களா! மீ ரொம்ப பாவம்!

   நீக்கு
  11. அதான் வந்துட்டாங்களே ரெண்டு பேரும். எனக்குத் தெரியுமே வந்துடுவாங்கனு!

   நீக்கு
  12. பேய் பிசாசு நடமாட்டம் அதிகம் ஆயிடுச்சு ! அடுத்த வாரம் எங்கள் ப்ளாக் வலைப்பக்கத்திற்கு மந்திரித்து, தாயத்து கட்டவேண்டும்!

   நீக்கு
  13. கீசாக்கா பிசாசுதான் நானாக்கும்.. ஆனா பேயை எனக்குத் தெரியாது ஹா ஹா ஹா.

   நீக்கு
 10. முகனூல் பற்றி தெரியலையே மீ அதுல இல்லாததுனால...பதிவுகள் பற்றி சொல்லலாம். நம் பதிவுகளை பலரும் வாசித்துக் கருத்து சொல்ல வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதுண்டுதான். அதிலும் ஒரு சிலரை நம் மனது எதிர்பார்க்கும். அவங்க இந்தப் பதிவுக்கு வந்தா கருத்து சொன்னா நல்லாருக்குமே என்று. நான் நினைத்ததுண்டு.

  ஆனால் இப்போது அதையும் மாற்றிக் கொண்டுவிட்டேன்.

  நான் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் பதிவுகள் சில சமயம் மிஸ் ஆவதுண்டு. பின்னர் மெதுவாக ஆறிப் போய் வாசித்தும் கருத்து இடுவதுண்டுதான் ஆனால் அது ஜஸ்ட் ஒரு பதிவாக இருக்குமே அல்லாமல் ஸ்வாரஸியமாக இருக்காது என்றே தோன்றுகிறது. இருந்தாலும் கருத்து போட்டுருவேன் ஹிஹிஹி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆறிப்போன பதிவுகள் பற்றி சுவையாக விமர்சித்து இருக்கிறீர்கள். என் நிலையும் அதுதான். ஆறியதிலும் ஒரு சுவை இருப்பதாக உணர்கிறேன்.

   நீக்கு
  2. உண்மைதான். வலைப்பூ பதிவுகள் அதிகபட்சம் ஒருநாளில் ஒன்று என்று இருப்பதால் சுலபமாக, சாவகாசமாக ஒருநாளில் அல்லது வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் வந்து, படித்து, கருத்துப் பதியலாம். முகநூல் பதிவுகள் அப்படி இல்லை. தொடர்ந்து குப்பைகள் அல்லது கோமேதகங்கள் வந்து விழுந்துகொண்டே இருக்கும். அப்பப்போ படிக்காமல் விட்டால் பிறகு தேடிப்பிடிப்பது கடினம்.

   நீக்கு
 11. தெரிந்து தவறு செய்பவர்கள்தான் அதிகம்.
  சினிமாப் பாட்டை உபநிஷதம் மாதிரி எடை போட வேண்டுமா ?
  எம் ஜி ஆர் யாரோ எழுதியதை யாரோ பாட, சம்பளத்துக்காக அதற்கு வாயசைத்து டான்ஸ் ஆடினார்.தவறு செய்பவர்கள் என்று பார்க்கப் போனால்
  அனேகம் நபர்கள் அடங்குவார்கள். நீங்கள் சொல்வது நிஜம் தான்.

  பதிலளிநீக்கு
 12. எனக்கு என்னமோ முகநூல், வாட்சப்பெல்லாம் அவசரம், அவசியத்துக்குத் தான் பயன்படுத்தணும்னு தோணுது. நான் அப்படித் தான் வைச்சிருக்கேன். அதிகம் போவதில்லை. போனாலும் அரை மணி. வாட்சப் எனில் சும்மாப் பார்த்துட்டு முக்கியமனவற்றுக்கு மட்டும் பதில்! மற்றவை டெலீட்டெ!

  பதிலளிநீக்கு
 13. பதில்கள்
  1. நன்றி! முதலில் கௌதமன் அம்மாஞ்சி என்று படித்து திகைத்தேன்! அப்புறம் சரியாகப் புரிந்துகொண்டேன்!

   நீக்கு
 14. க்ரேட்டா யார், யாரை முறைச்சார் என்பது எல்லாம் எனக்குத் தெரியாது. இப்போத் தான் கேள்விப் படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 15. கம்பளிப்பூச்சிப் பேய்க்கு நல்வரவும் வாழ்த்துகளும். கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கின்றன. நன்கு ரசிக்கும்படி உள்ளது. இந்தக்காணொளிக்காமெடி அப்புறம் பட்டிமன்றக்கூத்தெல்லாம் பார்த்தே பல வருஷங்கள் ஆகின்றன.

  பதிலளிநீக்கு
 16. டைலேடரை ஒரு கண்ணில் ஊற்றிக்கொண்டாலே வெளியே வந்து சூரிய ஒளியில் எதையும் பார்க்க முடியாது. இரண்டு கண்களிலும் ஊற்றிக்கொண்டு துணை இல்லாமல்! எப்படி வீடு போய்ச் சேர்ந்தீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜோக் சொன்னா அனுபவிக்கணும்...     ஆராயக்கூடாது!!!

   நீக்கு
  2. grrrrrrrrrrrrrrrr I know it is joke. but it is really worrying! :(

   நீக்கு
  3. நிஜமாகவே அன்று கஷ்டப்பட்டுதான் போனேன்.

   நீக்கு
  4. அதிலும் இங்கே ஸ்ரீரங்கத்தில் உள்ள கண்ணாஸ்பத்திரியில் ஒரு தரம் டைலேட்டர் விடுவதோடு நிறுத்த மாட்டாங்க. கண்ணைத் திறந்து டார்ச் அடித்துப் பார்த்துட்டு இன்னும் விரிஞ்சு கொடுக்கலை, பெரிசாகலைனு சொல்லிக் கொண்டு மறுபடி மறுபடி விட்டு ஒரு மணி நேரமாவது உட்கார்த்திவைப்பாங்க. அன்னிக்கு நோ கணினி, நோ தொலைக்காட்சி, நோ புத்தகம்! அந்த அனுபவம் அனுபவிச்சவங்களுக்குத் தான் புரியும்.

   நீக்கு
 17. கேள்விகளை விட பதில்கள் சிறப்பு..ன்னு ஜொல்லி கலாட்டா பண்ணலாம்..ன்னு பார்த்தால்
  முடியாது போல இருக்கு...

  கேள்விகளும் பதில்களும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார்! கேள்விகள் இல்லாமல் பதில்கள் இல்லை!

   நீக்கு
 18. //ஒரு மினிஸ்கர்ட், ஹைஹீல்ஸ் உதட்டுச்சாயம் பெண், மொபைலில் பேசிச் // - //நீலக்குயில்// - உங்க கண்ணுதான் இவ்வளவு ஷார்ப்பா இருக்கே.. அப்புறம் எதுக்கு ஆபரேஷன்? கொஞ்சம் விட்டால் அந்தப் பெண்ணுக்கு வலது பக்க விலா எலும்பு ஒண்ணு மிஸ்ஸிங் என்று கூட எழுதிடுவீங்க போலிருக்கே...

  நல்லா அனுபவத்தை எழுதத் தொடங்கியிருக்கீங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விலா எலும்புகள் எல்லாம் தெரியவில்லை. help desk மறைத்துவிட்டது!

   நீக்கு
 19. //நமக்குப் பரிச்சயமானவர்கள் நம்மைத் தேடுவார்கள். பிறகு மறந்துபோய்விடுவார்கள்// - இணையத்தில் நண்பர்கள் வைத்துள்ளவர்கள், தொடர்ந்து எழுதினாத்தான் அந்த நட்பை/அறிமுகத்தைப் பேண முடியும். Out of sight Out of mind என்பது எதுக்குப் பொருந்துதோ இல்லையோ இணைய நட்புக்குப் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 20. கௌ அண்ணா அடுத்த புதன் ஒரு பஞ்சாயத்து வேணும் ஹா ஹா ஹா...இந்த அதிரா வேற இரண்டு வாரத்துக்குப் பிசினு போட்டிருந்தாங்க....சரி சரி பஞ்சாயத்துக் கேள்விக்கு வரேன்...

  பெண்களின் மனது ஆழமானதா? மனதில் என்ன இருக்கு என்பதைக் கண்டுபிடிப்பது அத்தனை சிரமமா? அப்படி பார்த்தால் மனம் என்பதே ஆழமானதுதானே ?(மூளையின் ஒரு பகுதிதான் மனம். மூளையைப் பற்றி இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்க முடியாது அது ஒரு wonder. அதுமுடிவற்றதுனும் ஆழமானதுன்னும் மருத்துவ உலகம் சொல்லுது) ஏன் பெண்களின் மனம் மட்டும் அப்படிச் சொல்லப்படுகிறது?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிக்கலான கேள்விதான். பதில்கள் அளிக்க முயற்சி செய்கிறோம்!

   நீக்கு
  2. ஆஆவ்வ் கெள அண்ணன் யூப்பர் மாட்டீ:)) இதுக்கு பதில் சொல்லாமல் ஸ்ரீராம் எஸ்கேப் ஆகிடுவார்:)) ஆனா விடமாட்டோம்ம்:)) ஹா ஹா..

   நீக்கு
  3. கீதாமா அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள். என்னைக்கேட்டால் எல்லோர் மன்மும் அப்படித்தான்னு சொல்வேன்..

   நீக்கு
 21. சொந்த ஊர் என்றால் என்னது? - எனக்குமே அடிக்கடி தோன்றுவது இது. ஒருத்தர் பிறந்ததிலிருந்து நெடுநாள் வாழ்ந்த, அவ்வப்போது விடுமுறையின்போது செல்லக்கூடிய ஊர் ஏதாவது இருந்தால், அதுதான் அவங்களுக்குச் சொந்த ஊர். அப்படி இல்லாதவங்க, யாதும் ஊரே யாவரும் கேளிர் கதைதான்.

  "சில பேர்" மாதிரி ஆங்..இலங்கைல இருந்த போது, நாரோயில்ல இப்படித்தான், திருவனந்தபுரத்தில் எங்க வீட்டுக்குப் பக்கத்தில், ஆமா திருப்பதிசாரத்திலதான் எங்க அப்பா அம்மால்லாம் இருந்தாங்க.... நீங்க சொல்றது சரி..திருநெவேலில நான் இருந்தபோது...இல்லை..இப்போ பெங்களூர்ல.. என்று சொல்ற ஊரையெல்லாம் சொந்த ஊரா நினைச்சுச் சொல்வாங்க. அவங்க யார்னு நான் சொல்லி என் நட்பைக் கெடுத்துக்க விரும்பலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னவோ உள்குத்து இருக்குன்னு நினைக்கிறேன். பார்ப்போம்!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா நெல்லை உருண்டு உருண்டு சிரிக்கிறேன்...யு மேட் மி மை டே!!!!!!ஹையோ காலைலலேயே நினைச்சேன் இன்னிகு எனக்கு டின்னு நு...ஏஞ்சல் கேட்டாங்களோ இல்லையோ நெல்லை கிளம்பிடுவார்னு சொன்னெனே...கௌ அண்ணா மேலேயே சொல்லிருக்கேன் பாருங்க...ஆனா நெல்லை ஏதாவது பயணத்துல இருப்பாரு நான் தப்பிச்சேன்னு நினைச்சேன்...யதாஸ்தானத்துல இருக்காரு போல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  3. இன்னும் ஒன்றும் புகை கிளம்பவில்லையே! என்ன காரணம்?

   நீக்கு
  4. புகை கிளம்பாத காரணம் கீதா ரங்கனும் என்னோட ஊர்க்காரங்கதான்..ஹாஹா

   நீக்கு
  5. ஆஹா இப்படி ஒரு ரூட் இருக்கா!

   நீக்கு
 22. //எனக்கு சொந்தமாக ஊர் எல்லாம் ஒன்றும் இல்லை. சொந்த வீடு மட்டும்தான்//

  யாருக்குமே சொந்த ஊர் இருக்காதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ K K Nagar கலைஞருடையது இல்லியா?

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா கொ அண்ணா!!!!!!!!!!! உங்க பதில்!!!!!

   யாருக்குமே சொந்த ஊர் இருக்காதே...// - கில்லர்ஜி தேவகோட்டை?!?!?!?!

   அண்ணா கில்லர்ஜிக்கிட்ட கேக்காம போயிட்டீங்களே...கில்லர்ஜி தேவகோட்டைக்கு அர்த்தம் என்னவாம்!??!!?!!?!?

   எல்லாத்தையுமே தேவகோட்டைனுதானே சொல்லிக்குவாரு!!!!!

   கீதா

   நீக்கு
  3. அவரைப் பொறுத்தவரை தேவக்கோட்டை என்பது பூலோக சொர்க்கம்.

   நீக்கு
 23. //எம் ஜி ஆர் யாரோ எழுதியதை யாரோ பாட, சம்பளத்துக்காக அதற்கு வாயசைத்து டான்ஸ் (?) ஆடினார்//

  ஹா.. ஹா.. வாயசைத்தவன் பெயர் எடுக்குறான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி..இது நியாயமா? ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாப்பிடறேன்னு பெருமையாச் சொல்லிக்கிறவங்க, அதைச் செய்தவர்களை நினைத்துப்பார்ப்பார்களா? பெருமை கடைக்கு மட்டும்தானே போகும்.

   நம்ம எதிர்க்கட்சித் தலைவரும், சீட்டைப் பார்த்துப் படிக்கிறார். பெயர் எடுப்பது எதிர்கட்சித் தலைவரா இல்லை எழுதிக்கொடுத்தவரா இல்லை துண்டுச் சீட்டா?

   நீக்கு
  2. // ஹா.. ஹா.. வாயசைத்தவன் பெயர் எடுக்குறான்.// எம்ஜியார் கையையும் நன்கு அசைப்பாரே!

   நீக்கு
 24. கிரேட்டா அவராக வந்து பேசியதாக எனக்கு தெரியவில்லை. யாரோ உரையை தயாரித்து கொடுத்து பேசவைத்ததுபோல்தான் தெரிந்தது. How dare you என்று அவர் உலக தலைவர்களை பார்த்து குறிப்பாக டிரம்பை கேட்டது சற்று அதிகமாக தான் தெரிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

   நீக்கு
  2. இந்த துன்பர்கை யாரோ துன்புறுத்தி அப்படிச் சொல்லவைத்திருப்பதாக நான் படித்தேன்!

   நீக்கு
  3. துன்மார்க்கம் காட்டிவிட்டார்களோ?

   நீக்கு
  4. ஏகாந்தன் அண்ணா உண்மையா????வா???

   கீதா

   நீக்கு
  5. ஆமாம். சில சுற்றுச்சூழல் இயக்கங்கள் ஸ்வீடனின் Greta Thunberg-ஐத் ’தயார்’படுத்தி அனுப்பிவைத்ததாக, Sydney Morning Herald-ல் ஒரு கட்டுரை சில நாட்களுக்கு முன் படித்தேன். இதுபற்றி ஒரு பதிவு போடலாம் எனவும் நினைத்து.. மெட்டீரியல் ஃப்ரீஸரில் !

   நீக்கு
  6. எப்போ பதிவு போட்டாலும் எங்கள் ப்ளாக் கமெண்ட் பகுதியில் எங்கள் எல்லோருக்கும் சொல்லுங்க ஏகாந்தன் சார். படிக்க ஆவலாக உள்ளோம்.

   நீக்கு
 25. வித்தியாசமான கேள்விகள் பதில்கள் மிகவும் நன்று.

  பதிலளிநீக்கு
 26. உங்களுடைய ‘கண்மணியே..’ தொடர், இதுவரை வந்த தொடர்களைவிட சுவாரஸ்யமானது. தொடர்ந்து செல்லுங்கள்.. மோதிக்கொள்ளாமல் !

  பதிலளிநீக்கு
 27. //பேயின் வெயிட்டைத் தாங்க செடிகளால் இயலாது!

  # செடிகள் பேயின் சுமையை தாங்க முடியாதே.

  & இரவில் தனியாக நடந்துசெல்கிறோம். ஒரு பேய் சிம்பிளா ஆல/ அரச/ புளிய மரத்திலிருந்து தொப்பென்று நம் கண் முன்னே குதித்தால் கெத்தாக இருக்கும். அதை விடுத்து ரோஜாச்செடி/ செம்பருத்தி செடியிலிருந்து, கம்பளிப்பூச்சி போல, நூலில் பேய் தொங்கினால், ஒரு பய மதிப்பானா அதை? சொல்லுங்க!
  ///

  ஹா ஹா ஹா சூப்பர் பதில்கள்.. பேய்க்கும் கெது வேணும்தானே:))... ஆனா நான் பேயானால் உப்பூடிப் பெரிய மரங்களில் ஏற மாட்டேன்ன்.. குட்டிக் குட்டி மொட்டைமாடிச் செடிகளில்தான் ஏறியிருப்பேன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சரி ---- உங்க வெயிட்டை அதெல்லாம் தாங்குமா என்று அக்கரையிலிருந்து யாரோ ஒருவர் குரல் கொடுக்கிறாரே, அவர் யார்?

   நீக்கு
  2. மொட்டைமாடிச் செடிகளிலா! இது யாருக்கு விடும் ‘ஜாக்ரிக்கை’ ?

   நீக்கு
  3. ஹா ஹா ஹா கெள அண்ணான் நீங்க கட்ரரக் ஒபரேசனில் இருந்தமையால உங்களுக்கு ஊர்ப் புதினம் தெரிய வாய்ப்பில்லை:)) அதிரா இப்போ விரதமெல்லோ.. ரொம்ப மெலிஞ்சு.. காத்தடிச்சால் பறந்திடும் நிலையில் இருக்கிறேனாக்கும்.. ரோட்டில் நடக்கும்போது அஞ்சுவை ஒரு கையால பிடிச்சுக் கொண்டே நடக்கிறேன்ன்.. ஏனெனில் அஞ்சுவைக் காத்து அசைக்காதெல்லோ ஹா ஹா ஹா:))

   நீக்கு
  4. //ஏகாந்தன் !16 அக்டோபர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:49
   மொட்டைமாடிச் செடிகளிலா! இது யாருக்கு விடும் ‘ஜாக்ரிக்கை’ ?//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) ஏ அண்ணன் சும்மா இருப்போரை எல்லாம் கோர்த்துவிடப் பார்க்கிறீங்க.. அது ஒரு ஃபுளோவில வந்திட்டுது:)).. ஏனெனில் ரோட்டோரச் செடிகள் எனில் தூசு+ ஊத்தை எல்லாம் இருக்குமெல்லோ:))

   நீக்கு
  5. // அதிரா இப்போ விரதமெல்லோ.. ரொம்ப மெலிஞ்சு.. காத்தடிச்சால் பறந்திடும் நிலையில் இருக்கிறேனாக்கும்.. // இதை எல்லாம் நாங்க நம்பணுமா ! ஏஞ்சல் சொன்னால்தான் நம்புவோம்.

   நீக்கு
  6. //இதை எல்லாம் நாங்க நம்பணுமா ! ஏஞ்சல் சொன்னால்தான் நம்புவோம்.//

   இதைப் பார்த்தால் இப்போ து கா து கா.. என ஓடி வருவாவே:)).. கொஞ்சம் மிரட்டி வச்சிடப்போகிறேன்ன்:)) இல்லாட்டில் என் இமேஜ் என்ன ஆவுறது:))

   நீக்கு
  7. அதையும் பார்த்துவிடுவோம்! ஜெயிக்கப்போவது யாரு அதிராவா ? ஏஞ்சலா?

   நீக்கு
  8. இதோ வந்துட்டேன் :) அது புதன் கிழமையில் காலை பிசி ..அது கௌதமன் சார் நான் உண்மை பேசுவேன் உண்மை மட்டுமே பேசுவேன்கிறது உங்களுக்கு  தெரியும் இல்லையா :)
   //அதிரா இப்போ விரதமெல்லோ..// ஹையோ ஹய்யயோ .இப்போ நாலு கோழி முட்டையை உருட்டி விடுங்க பூனை அதோட உருண்டோடும் ..அப்புறம் விரதம் ஆரம்பிக்கமுன்னேயே விரத நாளுக்கும் சேர்த்து 5 மடங்கு சாப்பிட்டாச்சு மேடம் .உண்மையான விரதம்னா விரதம் துவங்குமுன்னே 15 நாளுக்கு அசைவம் தொடக்கூடா :) கமிங் டு தி பாயிண்ட் ..அந்த 5 மடங்கு உடம்பில் கொஞ்சமா கொஞ்சமா கரைஞ்சிங் அதனால் மெலிஞ்சுட்டேனு சொல்றதெல்லாம் பொய் லுலாயி :) 

   நீக்கு
  9. பூனை (உண்மை) வெளியே வந்து விட்டது ! The cat is out of the bag! தகவலுக்கு நன்றி !

   நீக்கு
  10. //அப்புறம் விரதம் ஆரம்பிக்கமுன்னேயே விரத நாளுக்கும் சேர்த்து 5 மடங்கு சாப்பிட்டாச்சு //
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பின்ன 40 நாட்களுக்குச் சாப்பிட முடியாதெல்லோ:)

   நீக்கு
 28. //# தெரிந்து தவறு செய்பவர்கள்தான் அதிகம்.//

  இதேதான் என் கருத்தும், இக்காலத்தில் மக்கள் பழிவாங்கும் நோக்குடனேயே இருக்கின்றனர்.. ஒருவர் நம்மை தெரியாமல் புண்படுத்திட்டால்.. உடனே அவரை தெரிஞ்சே புண்படுத்த வெளிக்கிடுவது... மன்னிக்கும் தன்மை குறைந்துவிட்டது ரிவெஞ் கூடிவிட்டது உலகில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் அ ஒ அதிரா ! (அடைமொழிகளை எங்கேயிருந்து எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?)

   நீக்கு
  2. இம்முறை ஏ அண்ணனின் கதையிலிருந்து பொறுக்கிட்ட்டேன்:))

   நீக்கு
  3. ஹஹ்ஹா நான் கூட இந்த குண்டு பூனைக்குள்ளும் ஒரு அரிஸ்டாட்டில் ஒரு பிளேட்டோ ஒரு சாக்ரடிஸ் ஒளிஞ்சிருக்காங்களேன்னு அப்டியே ஷாக் ஆகிட்டேன் .பட் ஐ லைக் யுவர் நேர்மை மியாவ் 

   நீக்கு
 29. எவ்வளவு அப்பாவியான கேள்வி?..
  அதற்கு எவ்வளவு யதார்த்தமான பதில்?

  -- எம்ஜிஆர் பற்றிக் கேட்டதைத் தான் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 30. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 31. //கண்மணியே காடராக்ட் என்பது//
  இன்னும் கெள அண்ணனுக்கு கண்ணு சரியாகல்ல:)) ஸ்பெல்லிங்கு மிசுரேக்கு விடுறார்ர்ர்ர்:)) அது காரராக் ஆக்கும்:)).. ஹா ஹா ஹா... இது எந்தக் கண்மணியைப் பார்த்துச் சொல்றீங்க கெள அண்ணன்?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், ஆமாம் - டீ யை ரீ ஆக்குபவர்களின் டிக்ஷனரியில் அது காரராக்.

   நீக்கு
  2. அதிரா வந்துட்டீங்களா? பிஸினு சொன்னது போல இருந்ததே....

   கை கொடுக்கும் கையே வாங்க கை கொடுங்க...

   கீதா

   நீக்கு
  3. வந்துட்டேன்ன்ன் கீதா.. இந்தாங்கோ என் றைட் காண்ட்டைப் பிடியுங்கோ:)) ஹா ஹா ஹா.. என் நிலைமை. “நாய்க்கு வேலையும் இல்லை, நடக்க நேரமுமில்லை” என இருக்குது கீதா ஹா ஹா ஹா.

   நீக்கு
 32. //என்னுடைய இடது கண் பார்வை இயல்பான நிலையில் இல்லை என்பது முப்பது / நாற்பது வருடங்களாகவே எனக்கு இருக்கும் சந்தேகம்.//

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அப்போ வலது கண்ணாலதான் அதிராவின் கொமெண்ட்ஸ் ஐ எல்லாம் படிச்சீங்களோ?:)

  பதிலளிநீக்கு
 33. // ஒரு மினிஸ்கர்ட், ஹைஹீல்ஸ் உதட்டுச்சாயம் பெண், மொபைலில் பேசிச் சிரித்தபடி உள்ளே வந்தார்.//

  இதெல்லாம் ஒழுங்காத் தெரிஞ்சிருக்கே:))

  பதிலளிநீக்கு
 34. //கண்ணை மூடி இருக்கின்ற நேரங்களில்தான் என்னென்னவோ ஐடியா எல்லாம் தோன்றும். அட எங்கள் ப்ளாக் ல இதை எழுதலாமே என்று நினைப்பேன். அப்புறம் மறந்துபோய்விடும். //

  ஹா ஹா ஹா 100 வீதமும் கரீட்டு.. எனக்கு ஜிம் இல் இருக்கும்போது ஏதோதோ எண்ணமெல்லாம் ஓடும்:)) பின்பு போயிடும்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால் என்ன செய்யவேண்டும் என்றால், நமக்கு ஐடியா வரும்போதே மொபைல் ஃபோனில் வாய்ஸ் ரிகார்டிங் பண்ணி வெச்சுடணும்.

   நீக்கு
  2. உண்மைதான், என் காண்ட் பாக்கில் எப்பவும் ஒரு குட்டி நோட் புக்கும் பென்னும் வச்சிருப்பேன்ன்.. ஆனா என்னில எனக்கு நிறைய நம்பிக்கை:) எழுதிவைக்கத் தேவையில்லை மறக்கமாட்டேன் என:)) .. ஆனா....:))

   நீக்கு
  3. எனக்கும் அதேதான். இது நிச்சயம் மறக்காது என்று நினைத்த விஷயம் சில மணி நேரங்களுக்குள் சுத்தமாக மறந்துபோகும்!

   நீக்கு
 35. //கண்ணைத் திறந்து பார்க்க ஆசைதான். ஆனால் அந்த நீலக்குயில் எங்கேயாவது உட்கார்ந்து என்னைக் கண்காணித்து, கண்ணைத் திறந்தால் வந்து என் தலையில் குட்டிவிடுமோ என்று பயம். //

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இவ்ளோ பிரச்சனைக்குள்ளும் அது நீலக்குயிலென எப்பூடிச் சொல்றீங்க?:) சிவபுக்குயிலாக இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கு:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருந்து கண்ணில் சொட்டுவதற்கு முன்பாகவே குத்து மதிப்பாக பார்த்து வைத்துக்கொண்டேன்.

   நீக்கு
 36. ///என் முகத்தைப் பார்த்து ஏதோ யோசனை செய்தவர், அந்த வெள்ளைத் தாளில், 24000 என்று எழுதினார். அதற்குக் கீழே 32000, அப்புறம் 39000,
  கடைசியாக 48000 என்று எழுதினார். அப்போதும் நான் ஒன்றும் முகத்தில் உணர்ச்சி காட்டவில்லை என்று தெரிந்ததும் லிஸ்ட் மேலே Per eye என்று எழுதி இரண்டு கோடுகள் கிழித்தார். //

  ஹா ஹா ஹா சிரிச்சு முடியுதில்லை:)).. ரோட்டோரக் பேமண்ட்டுகளில் பொருட்கள் விற்பவர்போல இருக்கே :)).. இன்னும் கூட்டியிருக்கலாமோ.. நீங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும்வரை:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது தெரிந்திருந்தால், அவர் இருபத்து நான்கு என்று எழுதியவுடனே மயக்கம் வந்தவன் போல ஆக்ட் செய்து நாற்காலியில் சாய்ந்து ஆஸ்கார் அவார்ட் வாங்கியிருப்பேனே!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா அனுபவம்தானே வாழ்க்கை:).. இனி அப்பூடியே ஆகட்டும்... சமீபத்தில் ஒரு நியூஸ் பார்த்தேன்ன்ன்.. சரியாக நினைவில்லை.. ஒரு பப்பிக்குட்டி:)) என நினைக்கிறேன்ன்.. மருந்தையோ எதையோ காட்டினால் உடனே மயங்கி விழுந்திடுதாம்.. பொல்லாத ஆக்டிங்காம்.. ஹா ஹா ஹா.

   ஒரு சம்பவம் நினைவுக்கு வருது. நம் உறவில் ஒருவர், அந்தக் காலத்தில் 80 களில் அப்போ கனடாவுக்குள் கால் வச்சால் சரி.. பாஸ்போர்ட் கிடைச்சிடும், ஆனா உள்ளே போக விசா வேண்டும், ஆனாலும் அமெரிக்காவில் இருந்து கனடா போகும்போது பெரிய செக்கிங் இல்லை தப்பி நுழைஞ்சிடலாம்.

   அப்போ இவர் இன்னொருவரின்[கனடாவில் இருப்பவர்-கனேடியன் பாஸ்போர்ட்] பாஸ்போர்ட்டில்.. ஈசியாக அமெரிக்கா போயிருக்கிறார்.. ஒரு கனேடியனைப்போலவும் பலகாலம் கனடாவில் இருப்பவர் போலவும்:)) ஆனா படத்தில்கூட கனடாவைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை அப்போ கூகிள் எல்லாம் இல்லை என நினைக்கிறேன்.

   ஆனா இவர் பார்க்க வெளிநாட்டுக்காரர் போலவே இருப்பார் தோற்றத்தில். இருப்பினும் நியூயோர்க் இமிகிரேசனில் ஆருக்கு ஒரு டவுட் வரவே, இவரிடம் கேட்டிருக்கிறார்,.. கனடாவில் இவர் வசிப்பதாக சொன்ன ஊரில் ஒரு ரோட்டின் பெயரைக் கூறி அதுபற்றி:)).. ஹா ஹா ஹா இவர் மாட்டிக் கொண்டாரா.. உடனே தலையைப் பிடிச்சுக் கொண்டு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென மயக்கம் போட்டு விழுந்திட்டார்ர்..:)) இங்கே இப்படி எனில் பெரிய ஆரவாரப்பட்டு அமளிப்படுவினம், ஏனெனில் நம்மவர்கள்போல வெள்ளைகளுக்கு நடிக்கத் தெரியாது:)) ஹா ஹா ஹா..

   உடனே அம்பியூலன்ஸ் கூப்பிட்டு ஹொஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியாச்சு, இவர் தனக்கு நெஞ்சு வலிக்குது என நடிக்கத் தொடங்கிட்டார்ர்.

   அப்படியே ஹொஸ்பிட்டலில் இருந்தே, கனடாவில் இருந்து உறவினர் போய்.. ஏதோ விதமாக ஹொஸ்பிட்டல் கார்ட்டுடன் கனடாவுக்குள் கூட்டி வந்திட்டினம் ஹா ஹா ஹா நம்மவர்களின் கூத்துக்கள் சொல்லி முடியாது:).

   இன்னொரு பெண்.. ஜேர்மனியோ எங்கோ இருந்து, பிளேனின் கார்கோ ஏரியாவில், பாக் குகளுக்கிடையில் ஒளிச்சபடி இருந்து கனடா போய்ச் சேர்ந்தா 6-7 மணிநேர பயணம்... எவ்ளோ மனத் தைரியம் வேண்டும்:).

   நீக்கு
  3. த்ரில்லிங் அனுபவங்கள்!

   நீக்கு
  4. மருத்துவருக்கு இதில் ஒரு தெக்கினிக்கு இருக்கு. கேஜிஜி சார்... ஒவ்வொண்ணாக் கூட்டி, மொத்தம் 1 லட்சத்து மேல ஆபரேஷன் செலவு வருமோ என்று மனசு திக் திக் என்றிருக்கும். அப்போ டாக்டர், இவை விதவித லென்ஸ் செலவுகள். ஆபரேஷனுக்கு 50,000ம்தான் ஆகும் என்றதும், அப்பாடா என்றிருக்கும். இப்படிச் செய்வதற்கு பதில், முதலிலேயே ஆப்பரேஷனுக்கு 50,000 என்றால் ரொம்பவும் மலைப்பா இருக்கும். கரெக்ட்தானே...

   நீக்கு
 37. அருமையான கேள்வி, அழகான பதில்கள்.

  முகநூலில் இல்லையென்றால் நமக்குப் பரிச்சயமானவர்கள் நம்மைத் தேடுவார்கள். பிறகு மறந்துபோய்விடுவார்கள் பதில் உண்மையை சொல்கிறது.

  நம் அப்பாவின் பிறந்த ஊரை தான் நம் சொந்த ஊர் என்கிறோம்.

  //இப்போது புலம்பெயர்ந்து வேலை தேடிப் பலரும் பல திசைகளிலும் செல்லும் நிலையில் சொந்த ஊர் என்று சொல்லிக்கொள்ள ஏதும் இல்லாமல் போவதே இயல்பாகிப் போய்விட்டது.//

  இருந்தாலும் பூர்வீகம் எது என்ற கேள்விக்கு பிறந்த ஊரை சொல்கிறார்கள் தானே!


  //இரவில் தனியாக நடந்துசெல்கிறோம். ஒரு பேய் சிம்பிளா ஆல/ அரச/ புளிய மரத்திலிருந்து தொப்பென்று நம் கண் முன்னே குதித்தால் கெத்தாக இருக்கும். அதை விடுத்து ரோஜாச்செடி/ செம்பருத்தி செடியிலிருந்து, கம்பளிப்பூச்சி போல, நூலில் பேய் தொங்கினால், ஒரு பய மதிப்பானா அதை? சொல்லுங்க! //

  அதானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நம் அப்பாவின் பிறந்த ஊரை தான் நம் சொந்த ஊர் என்கிறோம்.//

   இதைத்தான் நானும் நினைச்சேன்.. ஆனா எங்கள் நாடுகளில் பொதுவாக அம்மாவின் ஊர்தான் சொந்த ஊர் என்போம், ஏனெனில் திருமணத்தின் பின்பு அம்மா ஊரில்தானே அப்பா வந்து செட்டில் ஆவார்ர்..

   நீக்கு
  2. //..திருமணத்தின் பின்பு அம்மா ஊரில்தானே அப்பா வந்து செட்டில் ஆவார்ர்..//

   இந்தப் பயக்கம் கொஞ்சம் ’unsettling’ -ஆக இருக்கேம்மா !

   நீக்கு
  3. ஹா ஹா ஹா ஏன் ஏ அண்ணன், இலங்கை முறை உங்களுக்குத் தெரியாதோ, இலங்கையில் பெண் குழந்தைகளுக்குத்தான் வீடு குடுப்பினம், ஆண்பிள்ளைகளுக்கல்ல. இந்த வீடு குடுப்பதன் நோக்கமே மகள் தம்மோடு இருக்கட்டும் எனத்தான். அதனால மாப்பிள்ளைதான் நம் வீட்டில் வந்து செட்டில் ஆவார்.

   ஆனா 3,4 பெண்பிள்ளைகள் இருப்பினும் எப்படியும் ஒரு குட்டிக் காணியாவது பிரிச்சுக் குடுத்திடுவினம், அவரவர் வசதி பொறுத்து.. கூட்டுக் குடும்ப முறை இல்லை. மூத்த மகள் எனில் சில சமயம் கூட்டுக் குடும்பமாக இருப்பார்கள், 2 வது மகள் திருமணமானால் வேறு வீட்டுக்கு போயிடுவா.. ஒன்றாக ஒரு வீட்டில் இருப்பதில்லை, சில பெற்றோர் தாம் இருக்கும் வீட்டை கடசி மகளுக்கு எனக் குடுத்துவிட்டு, மூத்த மகள்களுக்கு தனித்தனி வீடு குடுத்திடுவார்கள், வீடு இல்லை எனில் அதுக்குரிய காணி, காசு குடுப்பினம்.
   இதனாலதான் அங்கு மாமி நாத்தனார் கொடுமை இல்லை. நாம் எப்பவும் நம் உறவுகளோடுதான் இருப்போம். அதே நேரம் மருமகனுக்கும் அரச உபகாரம் நடக்கும் வீட்டில், அதிலும் மூத்த மருமகன் எனில், கீழிருக்கும் மனைவியின் தங்கை தம்பி எல்லாம் ஓடி ஓடி உபச்சாரம் நடக்கும் ஹா ஹா ஹா.

   தாம் இருக்கும் வீட்டை ஆருக்குக் குடுக்கினமோ, அந்த மகள் குடும்பத்தோடு பெற்றோர் வசிப்பர். இதனாலதானே எங்களுக்கு மாமி என்றால் அதிக பாசம், இன்னும் சொல்லப் போனால் ஒன்றாக இருப்பதனால் அம்மாவோடுதான் சண்டை வருமே ஒழிய மாமி எனில் பாசம் கொட்டும்.. ஹா ஹா ஹா என் மாமி.. இப்பவும் என்னை “அதிரா வாங்கோடா”, அதிரா இந்தாங்கோ சாப்பிடுங்கோ என இடியப்பம்கூடக் குழைச்சு தீத்தி விடுவா, இம்முறை போய் நின்றபோது கூட, விடவே மாட்டா ஐகிறீம் ஜெலி நட்ஸ் எல்லாம் போட்டு எடுத்து வந்து, வேண்டாம் மாமி எனக்கு இனிப்பு பெரிசா விருப்பமில்லை என்றாலும்.. பிளீசடா சாப்பிடுங்கோ எனத் தந்தா ஹா ஹா ஹா .. மாமா இப்போ இல்லை, இருந்த போது பழங்கள் கட் பண்ணி எடுத்து வந்து, நாம் ரிவி பார்க்கையில் கையில் தருவார்ர்... இப்படி நிறையச் சொல்லலாம், ஆனா சில இடங்களில் மாமி மருமகள் பிரச்சனையும் இருக்கு, இருப்பினும் இந்தியாவோடு ஒப்பிடும் போது மிக மிகக் குறைவே.

   நீக்கு
  4. இதில் இன்னொன்றும் இருக்கு, மாப்பிள்ளைதான் நம் வீட்டுடன் வந்து இருப்பதனால், அந்த பெண் வீட்டுக்கு வரும் மூத்தமருமகன் என்பவர், இவ்வீட்டின் 2 வது அப்பா ஸ்தானத்துக்கு வருவார், பின்பு தப்பித்தவறி பெண்ணின் தந்தை தவறிட்டால், அக்குடும்ப பொறுப்பை ஏற்று மிகுதிப் பிள்ளைகளைக் கரை சேர்க்கும் பொறுப்பை இவரே எடுப்பார். அதனால அத்தான் என்பவரை நங்கள் அப்பாபோலத்தான் பார்ப்போம்... அவரின் சொல்லைக் கேட்டு நடப்போம்.

   நீக்கு
  5. அடேங்கப்பா! மூத்த மருமகன் மேல் இத்தனை வாஞ்சை, இத்தனைப் பொறுப்புமா? மாமியின் கதை வேறு அசத்தலாக இருக்கிறதே. (மருமகள் வெய்ட் போடுவதற்கான சாத்தியக்கூறுகளும் தெரியுது!) எத்தனை நுணுக்கமான, அணுக்கமான உறவுப் பராமரிப்புகள், இலங்கையில். பாராட்டவேண்டிய விஷயம்.

   விளக்கி விசிறிவிட்டதற்கு நன்றி.

   நீக்கு
  6. ஆம். நானும் நிறைய புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். நன்றி. TMS பாடலில் " மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
   மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
   கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
   புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்" என்பதில், 'பெண்ணானாலும் இலங்கைப் பட்டணத்தில் பெண்ணாவேன் ' என்று சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா, குண்டக்க மண்டக்க .... ஆ டங் ஸ்லிப் ......... அடக்க ஒடுக்கமான அதிரா?

   நீக்கு
  7. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) குண்டக்க மண்டக்க வா:))

   திடீரென என் நினைவுக்கு வரும் ஒரு ...

   “உனது அப்பா அம்மா ஏழை எனில், அது விதி, ஆனா உனது மாமா மாமி ஏழை எனில்.. அது உன் முட்டாள்தனம்””.. ஹா ஹா ஹா

   நீக்கு
  8. அதிரா, உங்கள் வழக்கம் நன்றாக இருக்கிறது.நீங்கள் சொல்வதை கேட்கும் போது கேரளாவிலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

   இலங்கையில் பெண்ணாக பிறப்பது பாக்கியம் என்று தோன்றுகிறது. கெளதமன் சார் பாட்டாக பாடி விட்டார்கள்.

   நீக்கு
  9. /'பெண்ணானாலும் இலங்கைப் பட்டணத்தில் பெண்ணாவேன் ' என்று சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா,//

   "எதுவானாலும் பெரிய பணக்காரர் வீட்டில் பிறக்கும் குழந்தையாவேன்" என்று நினைத்துக்கொள்ளுங்கள். இல்லைனா, பெண்ணா, படு ஏழையான ஒரு வீட்டில் பிறந்தால், மருமகனுக்கு வீடு எங்க கொடுக்கமுடியும்? நானே குடிசைல இருக்கேன். கூரைக்கு மேல நீங்க இருந்துக்கோங்க என்று சொல்லத்தான் முடியும்.

   அதனால கேட்கும் வரத்தை ரொம்ப யோசித்துக் கேளுங்க.

   நீக்கு
  10. கோமதி அக்கா.. இந்தியாவின் கீழக்கரைப்பக்கமும் அப்படித்தானாம், ஸாதிகா அக்காவைத்தெரியும்தானே, அவர்கள் அப்படித்தான் மணம்முடிச்சு அம்மா வீட்டில் தான் இருக்கிறா.. ஆனா அவர்கள் முறை கொஞ்சம் வேறு அதாவது, அக்கா தங்கை, பின்பு மகள் என எல்லோரும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் இருக்கினம் அது பெண்வழியாக வருகிறது. நமக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை இல்லை, இதில் இன்னொன்று, நாம் ஜாலியாக சுத்தலாம் குழந்தைகளை அப்பா அம்மாவிடம் விட்டுப்போட்டு ஹா ஹா ஹா... தம்பி தங்கைகள் இருப்பின் அவர்களே வளர்ப்பார்கள் குழந்தைகளை:))

   நீக்கு
  11. @நெ.டமிலன்:))
   ///அதனால கேட்கும் வரத்தை ரொம்ப யோசித்துக் கேளுங்க.
   ///
   என்ன இது வடை நாட்டிலிருந்து:)) ஓவராப் புகையுதே எனப் பார்த்தால்.. ஓ ஹா ஹா ஹா.. புரியுது புரியுது அதாவது நம்மை இப்படி மாமியார் வீட்டில் போய் ஜாலியாக இருக்க விடாமல் பண்ணிட்டினமே எனத்தானே இப்புகை:)) ஹா ஹா ஹா.. இனி 3 லேட்டாக்கும்:)) மறு ஜென்மம் ஒன்றிருந்தால் புள்ளி செலக்ட் பண்ணும்போது[ஸ்ரீராம்தான் சொன்னார், நாம் விரும்பும் புள்ளியை செலக்ட் பண்ணி அதனுள் நம் உயிரை புகுத்தலாமாமே:))] அதனால புள்ளியை ஒயுங்கா செலக்ட் பண்ணிக்கோங்க:)).. ஓல் த பெஸ்ட்:)) ஹா ஹா ஹா.

   ஏழையானாலும்.. அரச காணி கிடைச்சால் தனிக்க்குடித்தனம்தான் இல்லை எனிலும் அம்மா வீட்டோடுதான்:))

   நீக்கு
 38. //நான் அந்த லிஸ்டை வாங்கிக்கொண்டு, " சரி டாக்டர். அப்புறம் வந்து சொல்கிறேன்" என்று சொல்லி வெளியே வந்து பார்த்தால் ..............
  உலகமே கோடி சூர்யப் பிரகாசமாய், மின்னலடிக்கும் ரின் வெண்மையாய் இருந்தது. எதுவுமே கண்ணுக்கு சுத்தமாகப் புலப்படவில்லை. சொட்டு மருந்துகள் செய்த மாயம். //

  ஹா ஹா ஹா நீங்கள் தப்பி ஓடிடாமல், எப்படியும் கட்ரரக் செய்தே தீரோணும் எனும் நிலைக்கு ஆளாக்கிட்டார்ர் உங்களை:))...

  ஹா ஹா ஹா உங்களுக்கு சோதனை எங்களுக்கு நகைச்சுவைபோல இருக்கு சொன்னவிதம்... இப்படியே வாழ்க்கையை பொசிடிவ்வாக எடுத்திட்டால் துன்பம் ஏது.. கவலைப்பட்டு வருந்தி ச் சொன்னால் மட்டும் கடவுள் வந்து நலப்படுத்திடுவாரோ?:).. நம்மை நாம் தான் மகிழ்ச்சியாக வச்சிருக்கோணுமாக்கும்... தொடரட்டும் இதே நகைச்சுவையோடு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// இப்படியே வாழ்க்கையை பொசிடிவ்வாக எடுத்திட்டால் துன்பம் ஏது.. கவலைப்பட்டு வருந்தி ச் சொன்னால் மட்டும் கடவுள் வந்து நலப்படுத்திடுவாரோ?:).. நம்மை நாம் தான் மகிழ்ச்சியாக வச்சிருக்கோணுமாக்கும்... தொடரட்டும் இதே நகைச்சுவையோடு.../// நன்றி, நன்றி, நன்றி. ஊக்கப்படுத்தும் வாசகங்களுக்கு!

   நீக்கு
 39. எனக்கொரு மாற்று கருத்து இருக்கு ..யாராவது தவறை தெரிந்தே செய்வார்களா ?? தெரிந்து தவறு செஞ்சா அவர்களில் பிரச்சினை இருக்கு என்றுதானே அர்த்தம் ? //

  நான் ஏஞ்சலின் இந்தக் கருத்தோடு டிட்டோ செய்கிறேன். சில சமயம் தெரிந்திருந்தாலும் நிகழ்வது என்பது கனவக் குறைவால் அதுவும் தவறாகத்தானே கருதப்படுகிறது. தவறு என்பது கூட பாதிப்பைப் பொருத்து ஒவ்வொருவரின் பெர்செப்ஷன், அதை எடுத்துக் கொள்ளும் விதம் பொருத்தும் மாறுகிறது என்றும் தோன்றும்.

  இதைப் பற்றி நிறைய பேசலாம். உளவியலாகவும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 40. //கண்மணியே காடராக்ட் என்பது ...... 01

  கண்மணியே காடராக்ட் என்பது ...... கற்பனையோ / கண் வரையா(!) ஓவியமோ எத்தனை எத்தனை குழப்பங்கள் .... என்றே மனம் குழம்பிய நிலை என்பது எல்லோருக்குமே வரும் என்று நினைக்கிறேன்.//

  பாட்டாக பாடி விட்டீர்களா?  குழப்ப நிலை எல்லோருக்கும் வரும் தான்.(காட்ராக்ட் அறுவை சிகிட்சை செய்பவர்களுக்கு)
  மருந்து கண்களுக்கு விட்டால் கண் கூசும் வெளிச்சம் பார்த்தால், துணைக்கு யாரையும் அழைத்து செல்லவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துணைக்கு யாரையும் அழைத்துச் செல்ல இயலாத நிலை.

   நீக்கு
 41. கண்மணியே காடராக்ட் என்பது ......//

  தலைப்பே ஆஹா போட வைத்து அட இது ஒரு பாட்டல்லவானு தோன்றி பாட ஆரம்பிச்சா அடுத்த லைன்ல அண்ணா பாடிட்டீங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
 42. ஒரு மினிஸ்கர்ட், ஹைஹீல்ஸ் உதட்டுச்சாயம் பெண், //

  ஹா ஹா ஹா ஹா ஹா அண்ணா இது மட்டும் எப்படி தெரிந்ததோ??!!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 43. கண் வரையா///

  கண் வரைந்த
  கண் புரையோ!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 44. கண்ணை மூடி இருக்கின்ற நேரங்களில்தான் என்னென்னவோ ஐடியா எல்லாம் தோன்றும். அட எங்கள் ப்ளாக் ல இதை எழுதலாமே என்று நினைப்பேன். அப்புறம் மறந்துபோய்விடும். //

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹப்பா எனக்கொரு கட்சி சேர்க்க ஆள் இருக்கு ஹைஃபைவ் அண்ணா...

  அந்த சோகத்தை ஏன் கேக்கறீங்க...காலைல வாக்கிங்க் போகும் போது, பாத்ரூம்ல இருக்கும் போது, தூங்கப் போயி கண் மூடி இருக்கும் போது...எல்லாம் அருவி போல கதைக் கரு, வசனங்களும், வார்த்தைகள் கொட்டும்! அதை எழுத நினைக்கையில் வார்த்தைகள் மறந்து போய் முட்டும்!!!!!!!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். உண்மைதான். என்னுடைய மொபைல் ஃபோனில் ClevNote என்று ஒரு app இருக்கு. அப்பப்போ அதில் நோட் செய்து வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் பாத்ரூமில், ரோடில் நடக்கும்போது, நடுஇரவில் எல்லாம் அதில் சட்டென்று பதியத் தோணாது.

   நீக்கு
 45. கண்ணைத் திறந்து பார்க்க ஆசைதான். ஆனால் அந்த நீலக்குயில் எங்கேயாவது உட்கார்ந்து என்னைக் கண்காணித்து, கண்ணைத் திறந்தால் வந்து என் தலையில் குட்டிவிடுமோ என்று பயம். //

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....அண்ணா நல்லா யோசிச்சு சொல்லுங்க அது நீலக் குயிலா??!!!!!!!!!! (கௌ அண்ணன் இப்ப மைன்ட் வாய்ஸ் அதுக்காக இப்ப திரும்பப் போய் பார்த்துவிட்டு வந்தா சொல்ல முடியும்?!!!!)

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அதே ! 'அதுக்காக இப்ப திரும்பப் போய் பார்த்துவிட்டு வந்தா சொல்ல முடியும்?!!!!)' பெங்களூரிலிருந்து சென்னைக்குப் போய்ப் பார்த்து வருவது அவ்வளவு எளிது இல்லை!

   நீக்கு
 46. சற்று நேரம் கழித்து, "கண்ணைத் திறங்க" என்று குரல் கேட்டு, கண்ணைத் திறந்தால் பக்கத்தில் உள்ள ஒருவருக்கு நீலக்குயில் கொடுத்த கட்டளை! அவசரமாக கண்ணைத் திரும்ப மூடிக்கொண்டேன். //

  ஹா ஹா ஹா ஹா அப்ப கண்ணைத் திறந்தப்பக் கூட நீலக் குயில் நீலக் குயிலா தெரிந்த உங்களுக்காஆஆஆ காட்டராக்ட்!!!!!!!! ஹா ஹா ஹா ஹா

  ஹையோ கௌ அண்ணா சிரிச்சு முடியலை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கே ஏராளமான நீலக்குயில்கள் மருந்து பாட்டிலோடு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்!

   நீக்கு
 47. வர் ஒரு வெள்ளைத்தாளை எடுத்து, அதில் 24 என்று எழுதி என் முகத்தைப் பார்த்தார். சரிதான் தமிழ்ப் படங்களில் வரும் டாக்டர், மூக்குக் கண்ணாடியைத் துடைத்து மாட்டியபடி, "எதையுமே இன்னும் இருபத்துநான்கு மணி நேரம் கழித்துதான் உறுதியா சொல்லமுடியும்; நம்ம கைல என்ன இருக்கு? எல்லாம் அவன் செயல் ...." என்று சொல்லி வானத்தைப் பார்ப்பதுபோல இவரும் சொல்லப்போகிறாரோ என்று நினைத்தேன். //

  ஹா ஹா ஹா ஹா ஹா வானத்தை இல்லை...அங்கு சுற்றுக் கொண்டிருக்கும் மின்விசிறியை ஹிஹிஹிஹி....

  என் முகத்தைப் பார்த்து ஏதோ யோசனை செய்தவர்//

  உங்க முகத்தை பார்த்துத்தான் எஸ்டிமேட் போட்டாரோ!!!? உங்க முக பாவத்தை "பாவமா" வைச்சிருந்தீங்களா அண்ணா...ஆனா இதுக்கெல்லாம் டாக்டர்கள் அசருவதே இல்லையாக்கும்...அவங்களும் முகத்தைப் பாவம வைச்சுக்கிட்டே ரேட் போட்டுருவாங்க!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 48. உலகமே கோடி சூர்யப் பிரகாசமாய், மின்னலடிக்கும் ரின் வெண்மையாய் இருந்தது. எதுவுமே கண்ணுக்கு சுத்தமாகப் புலப்படவில்லை. சொட்டு மருந்துகள் செய்த மாயம். //

  ஹா ஹா ஹா அதானே கேட்டேன் அந்த நீலக்குயில் மட்டும் எப்படி அம்புட்டு க்ளியரா தெரிஞ்சுச்சோ?!!!!!!

  கௌ அண்ணா செம ஜாலியா சொல்லிருக்கீங்க. துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க!!! நல்லா சிரிக்க சிரிக்க எழுதியிருக்கீங்க... சிரிச்சு முடில அண்ணா....இந்த மனநிலை இருந்தால் நாம் நம் வாழ்க்கையை எளிதாகக் கையாண்டுவிடலாம்...ஹைஃபைவ் இதுக்கும்!!!...

  //உத்தேசமாக ரோடுல காலை வைத்தால் ஏதோ ஒரு மஞ்சள் சுவர் டுர்ர்ர்ரென்று சத்தமிட்டபடி என்னை உரசி நின்றது .. "என்னப்பா கண்ணு தெரியலையா?" என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

  "ஆமாம்" என்றேன்.

  "நீ மோதிக்க என் ஆட்டோதான் கெடச்சுதா?"

  இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி, வீட்டை நோக்கி நடந்தேன் //

  இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் தான் தங்கள் கடின வாழ்க்கையைக் கூட பாசிட்டிவாக நகைச்சுவையோடு எளிதாகக் கையாண்டு வெற்றி பெற்றவர்கள் எனலாம்னு எனக்குத் தோன்றுவதுண்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி. கண்ணில் மருந்து விட்டுக்கொண்டு, இருட்டில் அல்லது மின் விளக்கு வெளிச்சத்தில் இருக்கும் வரை ஒன்றும் வித்தியாசமாக இருக்காது. வெளியில் வந்து இயற்கையான சூரிய ஒளியைப் பார்க்கும்போதுதான் இருக்கு சிக்கல்.

   நீக்கு
 49. இன்று எனது கொஸ்ஸன் நெம்பர் வன்:- இதை போனகிழமையே கேட்க நினைச்சு விட்டுவிட்டேன் நேரம் போதவிலையாக்கும்:)).

  1. எனக்கு ஒரு பழக்கம் இருக்கு, நாம் வேலை செய்யும் இடங்களில், ஜிம் போகுமிடம்,மோல்கள் இப்படி அடிக்கடி போகும் இடங்களில்.. நான் எப்பவும் ஒன்றையே பாவிப்பேன், அதாவது ஸ்ராவ் றூம் எனில், ஒரு கதிரையையே பிடிச்சு இருப்பேன், அதில் வேறு ஆராவது இருந்தால், ஒருமாதிரி இருக்கும் இடம் மாறி இருக்க.

  இதேபோல ஜிம் இலும் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் மெசின்களில்தான்[ஒரே மெஷின் பல இடத்தில் இருக்குமெல்லோ] வேர்க் பண்ண பிடிக்கும், ரொயிலட்டுகள்கூட, மாத்தி மாத்திப் போக மாட்டேன் ஏதோ டிஸ்கஸ்ட்டிங் போல இருக்கும்.. ஒன்றையே யூஸ் பண்ணுவேன்.. இப்படிப் பழக்கம் உங்களுக்கும் உண்டோ?.. இப் பழக்கம் எங்கள் அப்பாவில் இருந்தது, வீட்டில் ஒரு குறிப்பிட்ட செயாரை பிடிச்சு அதில்தான் எப்பவும் இருப்பார், வேறு ஆரும் இருந்திட்டால், இருக்காமல் உலாத்திக்கொண்டிருப்பார் அப்போ நமக்குப் புரிஞ்சிடும் ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா மியாவ் ஹை 5 எனக்கும் அப்படிப்பழக்கம் இருக்கே ..எங்க சர்ச்சில் ஒரு இருக்காய் கார்னரில் இருக்கும் அதில்தான் 2006 ஆம் ஆண்டிலிருந்து  அமர்கிறேன் 

   நீக்கு
 50. கண்ணை மூடி இருக்கின்ற நேரங்களில்தான் என்னென்னவோ ஐடியா எல்லாம் தோன்றும். அட எங்கள் ப்ளாக் ல இதை எழுதலாமே என்று நினைப்பேன். அப்புறம் மறந்துபோய்விடும். /ஆஹா! நம்மாளு!

  பதிலளிநீக்கு
 51. Greta Thunberg மூஞ்சி பாத்து சந்தேகம். சில பேஷண்டுக்கு இப்படி இருக்கும். பிஷர் இன் ஏனோ இருக்கும் போலிருக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மருத்துவ சொற்கள் சில எனக்கு சுலபமாகப் புரியாது !

   நீக்கு
  2. and OCD ...when a person gets caught in a cycle of obsessions and compulsions. Obsessions are unwanted, intrusive thoughts, images, or urges that trigger intensely distressing feelings.

   நீக்கு
  3. அதனால்தான் எனக்கு தோணித்து . பிள்ளைக்கு பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சி அதை அமைதிப்படுத்தாமா உசுப்பரங்க எல்லாரும் 

   நீக்கு
  4. அருமையான தகவல்களுக்கு நன்றி!

   நீக்கு
 52. கண்களில் புரை என்பதை எளிதாக ஆப்பரேட் செய்வது சாத்தியம் ஆனால் பதிவுல்கில் அதை மாக்னிஃபை செய்து காட்டுகிறர்களோ என்று சந்தேகம் வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எளிய அறுவைதான். ஆஸ்பத்திரியிலும், பதிவுலகிலும்!

   நீக்கு
 53. ஹாஹா கௌதமன் சார் எனது கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு நன்றீஸ் ..ஆமா அந்த # யார் ?? * ஸ்டார் எங்கே போனார் :)))))))

  பதிலளிநீக்கு
 54. காடராக்ட் என்பதை இவ்வளவு நகைச்சுவையா எளிமையாந ஒன்றா சொல்ல கௌதமன் சாரால்  மட்டுமே முடியும் .

  பதிலளிநீக்கு
 55. /பத்து நிமிஷம் கழிச்சு கண்ணைத் திறக்கலாம்' என்று சொல்லி சென்றார். இதில் ஏதோ முரண் இருக்கு என்று அவருக்குத் தெரியவில்லை.  //
  நடுவுல கொஞ்சம் வார்த்தையை காணோம்னு சொல்லியிருக்கணும் நீங்க :)  
  /// பக்கத்தில் ஏதோ செண்ட் வாசனை. 'உஷ்' என்று யாரோ யாரையோ எச்சரிக்கிறார்கள்.//

  நானா இருந்தா நைசா திறந்துட்டு மூடிடுவேன் கண்ணை .கியூரியாசிட்டிக்கு முன்னே நீலக்குயிலாவது சிவப்பு குயிலாவது 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை சொல்லுங்க! (நானும் நைசாக கண்ணைத் திறந்து பார்த்தேன். அங்கே சூப்பரான ஒரு .........)

   நீக்கு
  2. //அங்கே சூப்பரான ஒரு .........)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா

   நீக்கு
 56. அதானே பொத்தாம் பொதுவா கண்ணை திறங்கன்னா எல்லாரும் திறக்க மாட்டாங்களா ??  :)) ஒரே முரண்சூழ் இடமாயிருக்கே 
  ஆனா EYE DILATOR போட்டுட்டு குறைந்தது 3 டு 4 மணி நேரம் விஷன் BLURRED ஆகவே இருக்கும் .உங்களை ஒரு மணிநேரம் அங்கேயே உட்கார வைச்சிருக்கணும் அவங்க .எப்படி வீட்டுக்கு போவீங்கன்னாவது கேட்டார்களா ? . 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை எங்கே கேட்டாங்க - சொஜ்ஜி பஜ்ஜி தின்றுவிட்டு, 'ஊருக்குப் போய் லெட்டர் போடுறோம் என்று சொல்லிச் செல்லும் மாப்பிள்ளை (வீட்டார்) போல' - நான் 'ஆப்பரேஷன் பற்றி அப்புறம் வந்து சொல்கிறேன்' என்று சொன்னதும் அவர்களுக்கு சுவாரஸ்யம் போய் விட்டது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 57. தொடருங்கள் சுவாரஸ்யமாக செல்கிறது அப்படியே ஒருவர் பல் அனுபவங்களை பாதியிலேயே ஸ்டாப் செஞ்சுட்டார் அவரையும் நினைவூட்டுங்க 

  பதிலளிநீக்கு
 58. 1, எங்கே சென்றாலும் எதையாவது நினைவா வாங்கி வரும் பழக்கமுடையவரா நீங்கள் ?அப்படி சமீபத்தில் வாங்கியது என்ன ?
  2, சமீபத்தில் தியேட்டர்ல படம் பார்த்தீர்களா ? என்ன படம் ?
  3, //ஏன் // என்ற கேள்வியை எப்போ எந்த சூழலில்   கேட்பது சிறந்தது ? கடந்த கால நிகழ்வை வைத்தா இல்லை நிகழ்க்கால சம்பவங்களை வைத்தா ?
  4, இப்போல்லாம் பேய் னு சொன்னாலோ எழுத்தை பார்த்தாலோ குபீர்னு சிரிக்கிறேன் இதன் காரணம் என்ன ?     ஒருவேளை எங்கள் பிளாகில் வந்த சிரிப்பு பேயார் காரணமா இருப்பாரோ ?
  5,  நாம் நினைப்பது பிறருக்கும் பிறர் நினைப்பது நமக்கும் தெரிந்தால் உணர்ந்தால் என்னாகும் ? அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்  ? 
  6, மாடர்ன் ஆர்ட் எதை குறிக்கிறது எதை நமக்கு சொல்ல வருகிறது ? எனக்கு ஒன்றுமே புரியவில்லை தற்கால  மாடர்ன் ஆர்ட் நீங்கள் பார்த்து ரசித்த மாடர்ன் ஆர்ட் எதாவது இருந்தா எனக்கும் விளக்கவும் ?
  7,நகைச்சுவை உணர்வு என்பது இயல்பிலேயே அமையும் குணமா ?
  8, இக்கால குழந்தைகள் அதாவது 10 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளிடம் அப்பாவித்தனம்//இன்னொசென்ஸ்  இருக்கிறதா ?
  9, கோபம் வெறுப்பு பொறாமை எரிச்சல் போன்ற துஷ்ட குணங்கள் எங்கே வளர்கின்றன ? இவை இயற்கையில் அமைந்த குணங்களா இல்லை சூழலால் உருவாகின்றனவா ?
  10, நாம் எல்லாருமே ஒரே மாதிரி இருந்தா அதாவது ஒரே குணம் இயல்புடன் இருந்தா இந்த உலகம் எப்படி இருக்கும் ?
  11, மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுளை நிந்திப்பதேன் ?
  12, பேய்கள் இசைக்கு மயங்குமா ? 
  13 ,சமூக வலைத்தளங்கள் இந்நூற்றாண்டின் வரமா ? அல்லது சாபமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //12, பேய்கள் இசைக்கு மயங்குமா ? //

   ஹா ஹா ஹா ஹையோ இந்தப் பேய்ப்பிரச்சனை எப்போ தீரும்?:))

   நீக்கு
 59. ஆஆ மை கொஸ்ஸன் நெம்பர் ரூ:-

  2. எப்போதாவது காண்டம் கேட்டதுண்டோ?.. அதில் நம்பிக்கை இருக்குதோ?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!