19.6.26

"என்னன்னு நினைச்சுக்கறது?"

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருந்தான் ரவி.
ஏன் ஓடுகிறோம் என்று நினைத்துப் பார்க்கும்போது எரிச்சலாகவும் வெறுப்பாகவும்தான் இருந்தது.  களைப்பில் சிலநொடிகள்  'என்ன பெரிய உயிரு ம**....  போகட்டும்' என்று விட்டு விடக்கூட தோன்றியது.

சில சமயங்களில் சில தலைவர்களுக்கு இப்படி பைத்தியம் பிடிக்குமாம்.  அப்படிப்பட்ட தலைவன் போலும் இவன்.  திடீரென மக்கள் எல்லோரையும் கொன்று குவிக்கும்படி ஆணை பிறப்பித்து விட்டான்.  என்ன ஏது என்ற கேள்வி இல்லை.  ராணுவமும், போலீஸும் ஆணையை நிறைவேற்றத் தொடங்கினர்.

என்ன ஏது என்று அறியாத நிறைய ஜனங்கள் 'மேலே' அனுப்பப்பட்டனர்.  விவரம் தெரிந்து தப்பிக்க நினைத்த சிலரால் தப்பிக்க முடிந்தது.  பலரால் முடியவில்லை.  அந்த சிலரால் எவ்வளவு நேரம் தா காட்ட முடியும்!

தேர் போன்ற ஒரு இடத்தின் பின்னால் மறைந்து நின்றான். இரண்டு பக்கமும் சேராத ஒரு பலகையின் வழியே வேட்டை நாய் போல அதிகாரம் மக்களை தேடிக்கொண்டிருந்த காட்சி தெரிந்தது.  ஒருவன் அருகில் வந்து அந்த இடைவெளி வழியே உள்ளே பார்த்துத் தேடினான்.

'நியாயப்படி இவர்களையும் கொல்லவேண்டும்தானே..  இவர்களை யார் கொல்லுவார்?'

தப்பித்தவறி உயிரை இழந்த ஒரு போலீஸ் அல்லது ஏதோ ஒரு ஆளின் துப்பாக்கி இவன் கையில் கிடைத்தது.  இதுவரை துப்பாக்கியை பார்த்திராவிடினும் ரவி அதை எடுத்து இடைவெளியில் தெரிந்த நபரைச் சுட்டான்.  டிவியில் ஜூம் காட்சியில் தெரிவது போல தெரிந்த அவன் மெகா வயிறை நோக்கி சுட்டான்.  குண்டு என்ன ஆனதோ தெரியவில்லை.    ஆனால் இந்த சலனத்தில் அவன் இவனைப் பார்த்து விட்டான்.

எடு ஓட்டம்...

பேசாமல் செத்துக் கிடப்பவர்கள் நடுவே செத்தவன் போல படுத்து கிடைக்கலாமா என்று மனதில் எண்ணம் வந்தாலும் பின்னால் நெருக்கமாக துரத்தி வரும் ஆட்களாலும் நேரமும் கிடைக்கவில்லை, தைரியமும் வரவில்லை.

திறந்திருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்து கதவை மூடித் தாழிட்டான்.  உள்ளே தொலைக் காட்சியில் இப்போது போடப்பட்ட அந்த மரண ஆணை திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தது.  இது தெரியாமல், இதைக் கேட்காமல் அல்லது பார்க்காமல் கொலைகாரர்கள் இன்னமும் கொலை செய்து கொண்டிருக்கிறார்களே...  

'சட்'டென கரண்ட் போனது.  டிவி நின்றது.  கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.  தான் சுடப்படுவது உறுதி என்று ரவிக்கு தெரிந்தது.  வீட்டினுள் நுழையாமல் வெளியிலேயே எங்காவது ஓடி இருக்கலாம்.  உள்ளே வருபவனுக்கு அல்லது வருபவர்களுக்கு அரசின் புதிய ஆணையைக் காட்டலாம் என்றால் டீவியும் நின்று விட்டது.

மறுபடி கதவு தட்டப்படுகிறது - இந்த முறை நல்ல பலமாக.  கூடவே அவன் செல்போன் ஒலிக்கத் தொடங்கியது. 

சட்டென விழித்துக் கொண்டான்.  முழுதாக விழிப்பு வருவதற்குமுன் மறுபடி மறுபடி கதவு உடைபடுவது போல தட்டப்பட்டது.

விழித்துக் கொண்டான் ரவி.  கதவு மறுமுறையும் தட்டப்பட, எழுந்து கதவைத் திறந்தால் நேருக்கு நேராய் நெஞ்சிலேயே சுடப்படுவோம் என்று தெரிந்தது..

ஆனால் மூளை மெல்ல உயிர்பெற்றது.

"ஆஹா..  கனவா...   நல்லவேளை கதவு தட்டப்படும் சத்தத்தில் விழித்துக் கொண்டோம்...   ஏர்போர்ட் போயிருப்பவர்கள் வந்து விட்டார்கள் போல" என்று நினைத்தபடியே எழுந்து அறைக் கதைவைத் திறந்து வெளியே சென்று வாசல் கதவைத் திறந்தான்.   

மகன், மருமகள், மனைவி எல்லோரும் வெறுத்து, அலுத்து, சலித்துப் போய் உட்கார்ந்திருந்தவர்கள் இவன் மேல் பாய்ந்தார்கள்..

னவும் நிகழ்காலமும் எப்படி சங்கமிக்கிறது பாருங்கள் கனவும் நிகழ்காலமும் ஒரு இடத்தில் இணைகின்றன 

அதுகூட சமயங்களில் தான்  அதுபோல ஒரு சந்தர்ப்பம் இது. கனவுகளால் ஆனது வாழ்க்கை.  கனவுகள் நம்மை வழிநடத்துகின்றன.  கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னார்.  அப்துல் கலாம் சொல்லியிருக்கும் அறிவுரைகளில் நான் ஏற்றுக் கொண்டிருப்பது இது ஒன்றைத்தான் என்று நினைக்கிறேன்!  நேற்று கூட சொல்லி இருந்தேன், தூக்கத்தினால் ஒரு விபரீதம் வந்தது என்று.  இதுதான் அது.

ஒரு சுவாரஸ்யத்துக்காக கதைபோல சொல்லப்பட்ட சம்பவத்தின் நாயகன் ரவி நான்தான் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்!

எனக்கு என் பாட்டி வைத்து உபயோகிக்காமல் போன பெயர் ரவிச்சந்திரன்!

இளைய மகன் திருமண வரவேற்பு 13 ஆம் தேதி முடிய, ஞாயிறு விட்டு, திங்களன்று அதாவது 15 ஆம் தேதி மாலை பாலிக்கு தேனிலவு புறப்பட்டார்கள் இளையவனும் மருமகளும்.  அவர்களை ஏர்போர்ட் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்த பாஸ், பெரியவன், பெரிய மருமகளுக்குதான் இந்த நிலை.  சத்தம் கேட்டு நேரத்தில் கண்விழித்து விட்டேன் என்று நான் நினைத்திருக்க, அவர்கள் அரைமணிநேரம் அல்லாடி இருக்கிறார்கள் என்று தெரிந்தபோது.....    

வெட்கமாகத்தான் இருந்தது!  

என்னென்னவோ நினைத்து விட்டதாகச் சொன்னார்கள்.  பக்கத்து வீட்டு வாலிபன் மொட்டை மாடியில் ஏறி, அதன் வழியாக எங்கள் வீட்டு டெர்ரஸில் இறங்க முடியுமா என்று பார்த்திருக்கிறான்.  கதவை உடைத்து விடலாம் என்று அவர்கள் முடிவெடுத்த சமயம் நான் கதவைத் திறந்து விட்டேன். 

அதுவும் கனவு கண்டு கனவில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பயந்துதான் எழுந்து, உணர்ந்து, கதவு திறந்தேன் என்றதும் கடுப்பாகி விட்டார்கள்!  ஏஸி ரூமில் வெறும் தரையில் படுத்தால் எனக்கு குளிர் தூக்கிப் போடும்.  அந்நிலை வந்த நேரம்தான் விழிப்பும் வந்திருந்திருக்கிறது!  இதையும் சொல்லவும் இன்னமும் கடுப்பானார்கள்.

"என்னன்னு நினைச்சுக்கறது?"

"அன்னிக்கி பாட்டியை சொன்னீங்க?"

"அபார்ட்மெண்ட்டே எழுந்துடுச்சு..  உன்னைத்தவிர!"

"ஏஸி ரூம்ல வெறும் தரைல படுக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா?"
 
ரவு எட்டே முக்கால் போல ஹாலில் என் செல்லை  சார்ஜரில் போட்டுவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்து ஏஸியை ஆன்செய்து படுத்து விட்டேன்.  என் தூக்கமும் கனவும் சதி செய்ய, ஹாலில் அடித்த போனின் ரிங்கிங் சத்தம் மூடிய அறைக்குள் காதில் விழாமல் போனது.  அவர்கள் ஒன்பதேகால் மணியிலிருந்து காலிங் பெல் அடிக்கத்தொடங்கி இருக்கிறார்கள்.  

இந்நிகழ்வை மெல்லிய சோகத்துடன் கீதாவிடம் சொன்னபோது "ஆஹா..  சூப்பரா சொல்றீங்க..  இதை அப்படியே கதையா எழுதிடுங்க "என்றார்.  "அல்லது நான் எழுதிடுவேன்" என்றார்.  நானே எழுதி விட்டேன் - கதையாக அல்ல, சம்பவமாகவே!

=======================================================================================

சாண்டில்யன் பக்கம்  :

அவனை உற்றுப் பார்த்த பிரும்மானந்த அடிகள், "அப்பனே! உன்னைப் பார்த்தால் ஊருக்குப் புதிது போலிருக்கிறது?" என்று சந்தேகக் குறியுடன் கூடிய கேள்வியைத் தொடுத்தார்.

“ஆம்” என்றான் அவன். (டைபீரியஸ்)

"ஆனால் தமிழ் பேசுகிறாயே?”

"எங்கள் நாட்டில் பயின்றேன்.”

"யவன நாட்டிலா?”

“ஆம்”

“உங்கள் ஊரில் தமிழ்ப் பள்ளிக்கூடம் வைத்திருக் கிறார்களா?"

"இல்லை, ஆசிரியர்களிடம் பயிலுகிறோம்.”

"தமிழாசிரியர்கள் இருக்கிறார்களா?”

"இல்லை. இங்கிருந்து வந்து போகும் வணிகர்களிடம் படிக்கிறோம்."

அடிகள் அவனை மேற்கொண்டு கேள்வி ஏதும் கேட்காமல், "பார்த்தீரா படைத்தலைவரே! யவனர்களின் கீர்த்தி எங்கும் பரவிக் கிடப்பதன் காரணத்தை. தாய் மொழிப் பற்றுடன் பிறமொழித் தேவையையும் உணர்ந்திருக்கிறார்கள். உள்ளத்தின் உணர்ச்சிக்கும் உள்நாட்டு வளர்ச்சிக்கும் தாய்மொழிப்பற்று. பிறநாட்டு வணிகத்துக்கும் முடிந்தால் ஆதிக்கத்துக்கும் பிறமொழிப்பயிற்சி. இது நாமும் கற்க வேண்டிய பாடம். தமிழர்கள் ஏன் போதிய அளவு யவன மொழியைக் கற்கவில்லையோ தெரியவில்லை. கற்றிருந்தால் இந்த யவன ராணியை அவர்கள் இங்கு அனுப்பியதுபோல் நாமும் நமது பூவழகியை அவர்கள் நாட்டை ஆள அங்கு அனுப்பலாமல்லவா!” என்று கேட்டார்.

- யவனராணி, சாண்டில்யன் - 

===========

திருச்சி அருகில் இருக்கும் கருவூர் என்னும் கரூர் அந்தக் காலத்திலேயே ஃபேமஸ் தான்!


" எத்தனையோ விவாதங்களுக்கு தற்காலத்தில் இலக்கான திருச்சி ஜில்லா கருவூர்..."

பின், நிலவு லேசாகக் காய்ந்த அந்த இரவில் சேரமான் தலைநகரான கருவூர் வஞ்சி கண்ணுக்கு இணையற்ற பெரு விருந்தாகக் காட்சியளித்தது. எத்தனையோ விவாதங்களுக்குத் தற்காலத்தில் இலக்கான திருச்சி ஜில்லா கருவூர் அக்காலத்தே பெரும் பொலிவு பூண்டு விளங்கியதென்பது ஆராய்ச்சியாளர் முடிவு. சேரமான் தலைநகராகச் சங்க காலத்தில் விளங்கியது இந்தக் கருவூர்தானா, அன்றி மலையாளத்திலுள்ள கொடுங்கோளூர் என்ற முசிறியா என்பது பற்றிச் சமீப காலம் வரை பெரும் தர்க்கம் நடந்து வந்தது. திருவஞ்சிக்குளமே, சேரமான் தலைநகராயிருந்தது என்பது மலையாள அறிஞர்கள் கருத்து. திருச்சி ஜில்லாவிலுள்ள கருவூர், சங்க காலத்தில் வஞ்சி மாநகர் என்ற பெயருடன் சேரன் தலை நகராகத் திகழ்ந்தது என்பது தமிழறிஞர் வழக்கு. முற்காலத்திய தமிழ் நூல்களையும், பிற்காலத்திய சில சாஸனங்களையும் ஆராயுமிடத்து தமிழர் வழக்குக்கே சரியான ஆதாரங்கள் இருக்கின்றன என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிகிறது.


* ஆராய்ச்சியில் ஆசையுள்ள தமிழ் மாணவர்களுக்காக இந்தக் குறிப்பு கொடுக்கப்படுகிறது.

சேரர் வஞ்சி கருவூர்தான் என்பதைக் காலஞ்சென்ற மகாவித்வான்கள், மு. ராகவய்யங்கார் எழுதிய 'சேரன் செங்குட்டுவன்'; 'ஆராய்ச்சித் தொகுதி' ஆகிய நூல்களிலும், ரா. ராகவய்யங்கார் எழுதிய 'வஞ்சி மாநகர்' என்ற நூலிலும் காணலாம். A Descriptive entalouge of Tamil Manuscripts. Vol.II p.612 (1916) The Madras Museum plates of Jatilavarman [Er Ind. VolXXII] Mackenies : Miss : कां गण, இவற்றிலுள்ள விவரங்களையும் தொகுத்துக் காண்க.

"யவனராணி" -  சாண்டில்யன்.

=======================================================================================


பாஹே பக்கம்  :




========================================================================================

நந்துவும். சுந்துவும்  =- 1955 ல் குமுதத்தில் வந்த பகுதி!  பின்னாட்களில் இதேபோல 'குப்பாச்சு குழப்பாச்சு' என்று ஒன்று வந்தது.  அதுவும் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

சுந்து: சினிமாவுக்குப் போகலாம் வருகிறாயா, நந்து !

நந்து : சினிமாவுக்கே போவதில்லையென்று தீர்மானம்,

சுந்து ; முந்தாநாள் போயிருந்தாயே!

நந்து ; : அது சினிமா இல்லை. சினிமாஸ்கோப் சினிமாஸ்கோப் பார்த்திருக்கிறாயோ

சுந்து : பார்த்திருக்கிறேன். அதிலே படமே தெரியவில்லை. சத்தம்தான் காதில் விழுந்தது.

நந்து: பேஷ்! ரொம்பப் புதுமாதிரிப் படமோ?

சுந்து ; : அப்படி ஒன்றுமில்லை. என் முன் ஸீட்டிலே உட்கார்த்திருந்த ஆள் கிராப்பு வெட்டிக்கொள்ளாமல் ஏகமாய்த் தலைமயிரை வளர்த்துக் கொண்டிருந்தான்!

நந்து: நான்கூடக் கிராப்பு வெட்டிக் கொள்ளவேண்டும்.

சுந்து ; : போன வாரம்தானே வெட்டிக் கொண்டாய்! அதற்குள்ளா இவ்வளவு வளர்ந்துவிட்டது?

நந்து: நான் என்ன பண்ணட்டும்? நல்லெண்ணெய் என்று நினைத்து என் மனைவியின் கூந்தல் தைலத்தைத் தடவிக் கொண்டு விட்டேன். 

சுந்து ;: உசத்தித் தைலம்தான். உன் மனைவிக்குப் பிரமாதமாய் வளர்க் திருக்குமே?

நந்து: அதுதான் இல்லை. அவள் தன் கூந்தல் தைலம் என்று என் கல் லெண்ணெயைத் தடவிக் கொண்டு வந்திருக்கிறான்!

சுந்து ; : என் வீட்டில் கூந்தல் தைலம் எதுவுமில்லாமலே, ரிப்பனுக்குக் கொள்ளையாய்ச் செலவழிகிறது,

நந்து:  உன் மனைவிக்கு அவ்வளவு கூந்தலா?

சுந்து:  ஊஹூம். ஊரிலிருந்து என் மைத்துனிகள் நாலு பேர் வந்திருக்கிறார்கள்.

நந்து: என் மாமனார், மாமியார் ஊரிலிருந்து வருவதாயிருந்தது. சாமர்த்திமாய்த் தடுத்துவிட்டேன்.

சுந்து: என்ன பண்ணினாய்!

நந்து :  அவர்கள் இங்கே வருவதற்குள் நான் அவர்கள் ஊருக்குப் போய் உட்கார்ந்து விட்டேன்.

==========================================================================================

நா முத்துக்குமார் கவிதைகள் 

சீப்புகள்

இருந்தும்

பரட்டைத் தலையுடன்

நிற்கிறார்

வாழை வியாபாரி.

 


இரக்கமில்லாத மழை 

ஈர விறகுகளுடன் 

இருமுகிறாள் அம்மா.

 

ஒரு பாதி கதவு நீ 

மறு பாதி கதவு நான் 

பார்த்துக்கொண்டே பிரிந்திருக்கிறோம் 

சேர்த்து வைக்க காத்திருக்கிறோம் !

 

ஆதாம் ஏவாள் கனவில் 

ஆப்பிள் துரத்துகிறது 

ஆப்பிள் கனவில் 

பாம்பு துரத்துகிறது 

பாம்பின் கனவில் 

சைத்தான் துரத்துகிறது 

அனைவரில் கனவிலும் தோன்றி

கடவுள் சொல்கிறார் 

காதலித்து கெட்டுப் போங்கள்!

 

உனக்கும் எனக்கும் 

பிடித்த பாடல் 

தேநீர்க் கடையில் 

பாடிக் கொண்டிருக்கிறது கடைசி பேருந்தையும் 

விட்டு விட்டு 

கேட்டுக் 

கொண்டிருக்கிறது காதல்!

 

நீ உன் முந்தானையால் தலைதுவட்டி விடுவாய் என்பதற்காகவே குடை மறந்து வந்த மழைநாளில்

ஜீன்சும் டீ சர்ட்டுமாய் நின்றிருந்த உன்னை என்ன சொல்லி திட்டுவது?

மௌன அஞ்சலி கூட்டத்திலும் 

விடாது ஒலிக்கிறது செல்போன்

இன்று வேண்டாம் நாளை வா நிலா ஊட்டுவதற்குச் சோறில்லை.

புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன் எங்களிடமிருந்து பறிக்கிறான் பூனை வளர்க்கும் சுதந்திரம்

 

===========================================================================================

கண்ணதாசன் பற்றி சிலாகிக்கும் நெல்லை கண்ணன்.

===========================================================================================

தன்னம்பிக்கையா தலைக்கனமா? 

"அந்த பெண்ணுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்று ஒருவர் கமெண்ட் போட்டு இருந்தார்!!!


========================================================================================

பாலகுமாரன் கதை பற்றி....

போராடவோ கலகம் பண்ணி மறிக்கவோ கட்சி ஆரம்பித்து ஜன நாயக வழியில் எதிர்க்கவோ ஒன்றுகூடாமல், இந்த பொறியியல் மருத்துவப்படிப்பை விட்டு காமர்ஸ் கம்ப்யூட்டர் என்று பரவி. ஹிந்தி ஆங்கிலம் என்று மொழி வளம் கற்று, மைலாப்பூரையும் திருவல்லிக்கேணியையும் நங்கநல்லூரையும் விட்டகன்று முதலில் பம்பாய் டெல்லி என்று பரவி, பிறகு அரபு தேசம் அமெரிக்கா என்று நகர்ந்து முன்னேற ஆரம்பித்த, வலி மிகுந்த வரலாற்றைச் சொல்லும் கதை இது.

புலம் பெயர்ந்த ஈழத்தைப் பற்றி இவ்வளவு பேசும் நாம். அதற்கு ஈடான ரத்தமும் இறப்பும் இல்லைதான். ஆனால் கிட்டத் தட்ட அதற்கு ஒப்பான கடுமையான மன வலிகளைத் தொண்ணூறுக்கு மேல் மார்க் வாங்கின ஏழை சாஸ்திரிகளின் மகனுக்கு கல்லூரியில் இடம் இல்லை. பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் எண்பது பர்சணட் வாங்கின அய்யங்காரின் பேத்திக்கு டைப்பிஸ்ட் வேலை கிடைக்கக் கூடாது. சம்பாதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வயதான தகப்பனையும் தாயாரையும் கல்யாணம் ஆகாத மூத்த சகோதரியை யும் விட்டுவிட்டு நேரத்துக்குச் சரியான அரிசிச்சோறு கூடக்கிடைக் காத அரபு நாட்டின் பாலைவனக் கம்பெனியில் கணக்கெழுதிச் சம்பாதிக்கப் புறப்பட்ட பூணூல் அணிந்த இளைஞனின் பிரிவுத் துயரையும் ஏற்ற இந்த பிராம்மண சமூகம் பற்றி எழுதவோ அதை உரத்துச்சொல்லவோ யாரும் இல்லாத குறையை இந்தக் கதை நிவர்த்திக்கிறது ஆழ்மனத்தில் யுகாந்திரமாக ஊறிக்கிடந்த நியமனங்களை விடுத்து பிழைப்பும், முன்னேற்றமும் வேணுமானால் இடம் பெயரவேண்டும். மொழி மாறவேண்டும். அனுஷ்டானங் களைத் தியாகம் செய்யவேண்டும் என்று இந்தச் சமூகம் ஏற்ற மன வலிகள் எந்த விதத்தில் வலிமை குறைந்தவை?

ஒரு பிராம்மணக் குடும்பத்தில் தாய், வழி தவறி அதன் மூலம் பிறந்த பிள்ளையை வேதம் படிக்க அனுப்பின கதையும், சோரம் போனாள் என்பதற்காக ஒரு சாவித்திரியின் கதையை அக்ரஹாரத் தில் நடத்தின சினிமாவும்தான் தமிழுக்குப் பழக்கம். மற்ற பல நாவல்களில் பிராம்மண சமூகம் ஒரு பின்புலமாகத்தான் எழுதப் பட்டு நடிக்கப்பட்டிருக்கிறது. வேற்று ஜாதியினரின் கிண்டலுக்காக வேஷ்டி நழுவும் சாஸ்திரிகளையும், ஐஸ் புரூட் அய்யர்களையும், மடிசார் மாமிகளையும் காட்டி "நேக்கு, நோக்கு" என்று எப்போதோ வழக்கத்திலிருந்து ஒழிந்துவிட்ட பாஷைக் கிண்டல்கள்  ,மட்டுமே பிராம்மண சமூகத்தின் அடையாளமாக இன்றைய தமிழ்க்கலை உலகம் அறிந்திருந்தது

"சாப்பாட்டுக்கும் தட்சணைக்கும் கணக்கா வந்துடப் பிராமணனுக்கு சொல்லியா தரவேண்டும்" என்று எழுதிய ஆ மாதவைய்யாவின் கிளாரிந்தாவையும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பையும் இலக்கியமாகக் கொண்டாடினபோது அமைதி காத்த பிராமணனுக்கு, வாசவேஸ்வரம் என்ற கிராமத்தில் ஒவ்வொரு பிராம்மணனையும் பிறன்மனை விழையும் காமுகர்களாகச் சித்தரித்த நாவலை இலக்கியம் என்றும் அதன் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதையும் சகித்துக்கொள்ளும் பிராமணனுக்குப் பெயர் கோழையா?"இது இலக்கிய சுதந்திரத்துக் கான அவன் அளிக்கும் மதிப்பு, அவனின் டாலரன்ஸ், அவனுடைய முதிர்ச்சி" என்று யாரும் சொல்லவில்லை.

இதுவே ஒரு தேவரையோ அல்லது நாடாரையோ பற்றி எழுதியிருந்தால் . அந்த எழுத்தாளரே ரத்த விளாராக புலம் பெயர்ந்திருக்க வேண்டியதுதான்!

"கொசவத்தெளவு" "சவத்தெளவு" என்னும் திரு நெல்வேலிப் பிரயோகமும். கொண்டே புடுவேன்" என்னும் மதுரைப்பேச்சும், "வணக்கங்கண்ணா" என்னும் கோவை வாய்மொழியும், "நைனா! சுகுரா இருக்குபா" என்னும் சென்னை பாஷையும் வட்டார வழக்குகளாக இலக்கிய அந்தஸ்து கொடுக்கப்படும்போது, "எங்காத்துக்கு எப்போ வரே மன்னி" என்னும் பிராமணப் பேச்சு மட்டும் கிண்டலுக்குள்ளாவது துரதிர்ஷ்டமான நிகழ்வு. இதுவும் வட்டார வழக்கு என்று ஒப்புக் Politically incorrect!

ஆனால் பாலகுமாரன் இதைச் சும்மா விட்டுவிடவில்லை.

"இதப்பார். இந்த சமூகம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அமைதியான போராளிகளும் வெற்றிக்கொடி நாட்டினவர்களும் நிறைந்த குழு, அவர்களும் காலத்திற்கு ஏற்றார்போல் மாறி. தன்னையும் மேம்படுத்திக்கொண்டு. நாட்டு நலன்களிலும் அக்கறையுடன் ஈடுபட்டு, பழைய ஜாதி அபிமானத்தைத் துறந்து எல்லா சமூகத்தோடும் ஒன்றி வாழத் தயாரான கூட்டம்" என்பதை ஆணித்தரமாகவும் ஆதாரத் தார்மீகத்தோடும் எழுதியிருக்கிறார்.

அதே சமயம் இந்த சமூகத்தின் கொடியை சும்மா உயரத்தூக்கி பிடிக்கும் செயலைச் செய்யாமல் அவர்களின் குறைகளையும் சரியான தராசில் நிறுத்தி இவர் முழங்கியிருக்கும் கதை இந்த 333 அம்மையப்பன் தெரு...

===========================================================================================

ஹிந்திப் பாடல்தான் ஒரிஜினல்.  ஸௌ பாரு ஜனம் லேங்கே.  மொஹம்மது ரஃபி இனிமையான பாடகர்தான்.  திறமைசாலிதான்.  தமிழில் வேதா காப்பிதான் அடித்தார்.  ஆனால் தமிழில் நம்ம TMS இந்தப் பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்.  கண்ணதாசனும் காரணம்.

மாடர்ன் தியேட்டர்ஸாரின் 100 வது படம் வல்லவனுக்கு வல்லவன்.  ஜெமினி  வில்லன். அசோகன் ஹீரோ.  மனோகர் இன்ஸ்பெக்டர்!
 

 

நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும் உனைப் பிரிந்து வெகுதூரம் - நான் ஒருநாளும் போவதில்லை உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை!

 


ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

 

இந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும் அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும் நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

 

இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களை தழுவுகின்றேன் இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையில் ஆடுகின்றேன் நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்

 

99 கருத்துகள்:

  1. கனவு அனுபவம் சுவாரசியம் , படிப்பவர்களுக்கு. வீட்டின் வெளியே காத்திருந்தவர்கள் காண்டாகியிருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.... உண்மையிலேயே கடும் கோபத்தில் இருந்தார்கள் .ஏற்கனவே களைப்பில் வந்தவர்கள் அரை மணி நேரம் அந்த வெப்பத்தில் வியர்வை வழிய வெளியில் உட்கார்ந்து இருந்தது கொடுமையாக இருந்திருக்கும் தான்.

      நீக்கு
    2. எனக்கு எப்போதுமே இது மாதிரி நிகழ்ந்தால் கோபம் சொல்லி மாளாது. பசங்களை நம்பி வீட்டை விட்டுச் சென்றால் என்னிடம் சாவி இல்லாமல் செல்ல மாட்டேன். (இப்போதுமே என்னிடம் இரண்டு கதவுகளுக்கான சாவிகளும் இருக்கும்)

      நீக்கு
    3. இதற்கு முந்தைய இரண்டு சந்தர்ப்பத்தில் நானே கோபப்பட்டிருக்கிறேன். அப்போது நான் வெளியிலும், உள்ளே சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் ஒருமுறை மாமியாரும், ஒருமுறை இளையவனுமாக இருந்தார்கள்.

      நீக்கு
  2. ஓராயிரம் பார்வையிலே... எனக்குமிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  3. வஞ்சிமாநகரம் கருவூரா? திருவஞ்சிக்களம் என்றே நான் அறிந்திருந்தேன். மேப்பில் பார்க்கணும்.

    சாண்டில்யன் எழுத்து எப்போதுமே ரசிக்கும்படி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஞ்சிமா நகரம் என்றே சாண்டில்யன் ஒரு கதை எழுதியிருந்தார்

      நீக்கு
  4. பாஹே... கடைசி சில வருடங்களிலும் எழுதிக்எஒண்டிருந்தாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. கடைசி ஆறு ஏழு வருடங்களில் அவர் எதுவும் எழுதவில்லை. கடைசி இரண்டு வருடங்களில் படிப்பதையும் நிறுத்திவிட்டார். ஸ்ட்ரோக் வந்து படுக்கையில் விழுந்ததால் படிக்க முடியாமல் போனது.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா! வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி சிதறல்கள் எப்போதும் போல் அருமையாக உள்ளது.
    உங்களின் கனவு அனுபவம் சினிமா படத்தைப்போல சுவாரஸ்யமாக இருக்கிறது.கனவில் வீட்டுகதவை தட்டும் சத்தம் உண்மையிலேயே வீட்டின் கதவை தட்டும் சத்தத்தோடு இணைவது கனவு காண்பவர்களுக்கு சகஜந்தானே..! "கனவு மெய்ப்பட வேண்டும்." என்ற பாடல் நினைவுக்கு வந்தது. .

    நீங்கள் அவ்வளவு சத்தத்திற்கும் எழவில்லையெனில், அவர்கள் பயத்துடன் பதட்டமாகித்தான் போயிருப்பார்கள். அவர்கள் வெளியில் போகும் போதே இன்னுமொரு வீட்டுச் சாவியையும் கையோடு கொண்டுப் போயிருக்கலாம்.. (காலம் கடந்த யோசனை என்கிறீர்களா.?) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா. மாற்றுச்சாவி எடுத்துப் போவது பற்றி நாங்களும் பேசிக் கொண்டோம் தான். ஆனால் ரொம்ப லேட்டாக வராமல் 9:30க்குள் வருவதற்கு எதற்கு என்று விட்டு விட்டுப் போனார்கள். என் தூக்கத்தின் மகிமை பற்றி அறியாதவர்கள்! ஆனால் இந்த தூக்கம் சில நாட்களாகத்தான்...

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய சாண்டில்யன் கதைப் பகுதியில், இந்த வரிகள் படித்ததும் நினைவுக்கு வந்தது. சின்ன வயதில் எப்போதோ இந்தக்கதை (யவனராணி) படித்துள்ளேன். சாண்டில்யன் அவர்களின் எழுத்துக்கு அடிமையாயிருந்த காலம் அது. இப்போதும் படிக்க கிடைத்தால், நன்றாகத்தான் இருக்கும்.

    கருவூரர் பற்றிய தகவல்கள் அருமை.கரூர் ஒருதடவை நாங்கள் சென்றிருக்கிறோம். எங்கள் அண்ணா பையன் ஸ்ரீராம் அங்கு வேலை செய்து வந்தார். அவர் குடும்பத்துடன் அங்கு தங்கி இருக்கும் போது சென்று வந்தோம். "கருவூரார் போற்றும் காங்கேயா.. ஸ்கந்த குரு." என்ற கந்த குரு கவசம் நினைவுக்கு வந்தது. முருகன் கோவில்கள் அத்தனை ஊர்களிலும் பிரசித்திதானே..! நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, அங்கு சென்று வந்திருக்கிறீர்களா? அட, உங்கள் அண்ணா பையன் பெயர் ஸ்ரீராமா? அட ஸ்கந்த குரு கவசம் வரிகள் நினைவுக்கு வந்தனவா?

      நீக்கு
    2. :)) அடராமா.. எத்தனை அட..., ஹா ஹா ஹா. முன்பே ஒரு தடவை எங்கள் அண்ணா பையன் பெயர் உங்கள் பெயர்தான் என நான் ஒரு பதிவில் சொல்லியிருந்தாகவும் நினைவு.

      உங்கள் பாட்டி உங்களுக்கு வைத்தப் பெயரும் நன்றாக உள்ளது. (அம்மா வழி பாட்டியா" அப்பா வழியா? இப்போதெல்லாந்தான் அப்பா வழி பாட்டிக்கு மவுசு கம்மிதான் என்றால், அப்போதேவா.? .)

      நீக்கு
    3. அப்பத்தாதான்! ஆனால் அவர்களோடு அவ்வளவு நெருக்கம் இல்லை எங்களுக்கு. ஏன், இப்போது என் மகன் கல்யாணத்துக்கு கூட வருந்தி வருந்தி கூப்பிட்டும் என் அப்பா பக்கத்திலிருந்து ஒரே ஒரு உறவு மட்டுமே வந்திருந்தது!

      நீக்கு
  8. கைத்தலபேசியில் தொடர்ந்து பதிவுகளை
    வாசிக்க இயலாத சூழ்நிலை...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    தங்கள் தந்தையின் எழுத்துக்கள், எண்ணங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. "வாழ்க்கைக் கவிதை" பற்றிய சிந்தனை அருமை. அவர் எழுத்துக்கள் அத்தனையையும் படித்து ரசித்தேன்.

    நா. முத்துக்குமார் கவிதைகளும் படிக்க நன்றாக இருக்கிறது. படித்தேன். ரசித்தேன்.

    நந்து, சுந்து பற்றி எங்கள் அம்மா சேர்த்து வைத்த புத்தகங்களில், அவர்கள் ரசித்துப் படித்ததாக சொல்லி அறிந்த ஞாபகம். அந்தப்பகுதி குமுதத்தில் வந்த போது, 55 ல் நான் பிறக்கவேயில்லையே..! எனினும் என்னுடைய ஒரு பத்து வயதில், அம்மா கூறியதாக நினைவு.

    பிறந்த நாள் என்றதும் நேற்றைய பதிவில் நான் வர இயலாததற்கு காரணம் தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. இன்றும் வேலைகள் அழைக்கின்றன. பிறகென்று ஒத்திப் போட்டால், இன்று நாளையாகி விடுமேயென்று இன்றைய பதிவை ஒரளவு படித்து விட்டேன்.

    "ஓராயிரம் பார்வையிலே" இந்தப்பாடல் எனக்கும் மிக, மிகப்பிடித்த பாடல். அடிக்கடி அவரைப்போலவே (டி. எம். எஸ்) பாடிப் பார்ப்பேன். அருமையான பாடல். இன்றைய பதிவு நன்றாக உள்ளது. காணொளி பகுதிகளை பிறகு பார்த்துப் படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க ஹ மேடம்... இப்போதும் எனக்கு தனிமை, மூடு வரும் சமயங்களில் இந்தப் பாடலைப் பாடுவேன். ஏதோ நாம் அறியாத உள் நினைவு சில பாடல்களை மறக்க இயலாத்ததாகச் செய்துவிடுகிறது.

      நீக்கு
    2. ஆம். தங்கள் கருத்து சரிதான். மறக்க முடியாத சிலப் பாடல்களின் வரிகள் ஸ்ரீராம் அவர்கள் தந்தை சொல்வது போல நம் வாழ்க்கைக் கவிதையில் ஒளிந்து கொண்டபடிதான் இருக்கின்றன.

      நீக்கு
    3. வேலைகளை முடித்துக் கொண்டு வந்து கூட மீதியைப் படியுங்கள் கமலா அக்கா,. விளக்கமான உங்கள் பதில் மனத்தைக் கவர்கிறது.
      நந்து சுந்து அப்புறமும் தொடர்ந்திருக்குமே.. குப்பாச்சு குழப்பாச்சு 70 களில்.

      அஞ்சு பைசா அம்மு, குண்டு மம்மா போன்ற நகைச்சுவை படங்கள் சீரிஸும் வந்தன.

      நீக்கு
    4. // எனக்கு தனிமை, மூடு வரும் சமயங்களில் இந்தப் பாடலைப் பாடுவேன். //

      நெல்லை....!!

      நீக்கு
  10. ​வரிகளுக்கு இடையில்
    ஒளிந்து கொண்டிருக்கிறது
    வாழ்க்கைக் கவிதை
    வரிகளுக்கு இடையில்
    நடந்து கொண்டிருக்கிறது
    வாழ்க்கை
    வரிகளுக்கிடையில்
    இருட்டில் குருடனைப் போல்
    தடுமாறுகிறது
    வாழ்க்கைப்பயணம்
    முடிவை நோக்கி.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலிலிருந்தே
      முடிவை நோக்கிதான்
      ஆரம்பிக்கிறோம் பயணங்களை.
      முடிவுரைக்கான
      முன்னுரைகளாய்
      நம் வியாதிகள்!

      நீக்கு
    2. இரண்டுமே சூப்பர். முதலும் முடிவும் இல்லாமல் நடுவில்தான் சுவாரஸ்யம்.

      நீக்கு
  11. சாண்டில்யன், பாஹே, கண்ணதாசன், நா முத்துக்குமார், முகமது ரஃபி என்று வெள்ளி நன்றாகவே சிதறியிருக்கிறது!

    2012 புத்தாண்டு நாளன்று காங்கோவிற்கான இந்திய தூதர் டி.என்.ஸ்ரீவத்ஸவா தனது ‘இந்தியா ஹவுஸ்’-ல் அளித்த லஞ்ச் பார்ட்டியில், ஒரு சக அதிகாரி ஹிந்திப் படப் பாடலொன்றைப் பாடி முடிக்க, என் பக்கம் திரும்பி ஹ்ம்ம்.. என்று ஊக்குவித்தார் தூதர். பதிலுக்கு ரஃபியின் ஸோ பாரு ஜனம் லேங்கே.. யின் தமிழ் வர்ஷன் எனச் சொல்லிவிட்டு: டிஎம் எஸ்-ன் தமிழ்ப் பாடலை - ஓராயிரம் பாடலிலே.. என்று ஆரம்பித்துப் பாடிவைத்தேன். எமது தமிழின் நயம், லாவகம் புரிந்தோர் அங்கு யாருமே...யில்லை என்பதே அந்த மதியத்தின் சோகக்கீற்று என உணர்ந்தவாறு எதிரே அமர்ந்திருந்த கார்ல்ஸ்பர்க் கேனிலிருந்து உறிஞ்சிவைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார்.. நீங்கள் பாடிய அனுபவத்தை ஏற்கனவே நீங்கள் இங்கு எழுதிய தொடரில் சொல்லி இருந்தீர்கள்! சிதறல்களை ரசித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

      நீக்கு
    2. ஆமாம். முன்பே இங்கு சொல்லியிருக்கிறேன். நினைவுக்கு வருகிறது.
      வேறு ஏதாவது புதுசா சொல்ல இருக்கிறதா என்று பார்க்கிறேன்!

      நீக்கு
  12. நா முத்துக்குமார் இவ்வளவு சீக்கிரம் இவ்வுலகை விட்டு அகன்றுவிட்டது இந்தக் காலகட்டத்தின் தமிழ் சோகம். இவரது படைப்புகள்பற்றி என் ப்ளாகில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதேபோல் இளம் கவிஞர்கள் குமரகுருபரன், ஜெ. ஃப்ரான்சிஸ் கிருபா பற்றியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவர் மறைவு எதிர்பாராதது.

      நான் மறுபடி மறுபடி சொல்கிறேன் ஏகாந்தன் ஸார்.. உங்கள் தளத்தில் நான் இடும் கருத்துக்கள் என்ன ஆகின்றன என்றே தெரியவில்லை.

      நீக்கு
    2. எனக்கும் ஏகாந்தன் அண்ணா தளத்தில் கருத்து போடவே முடியவில்லை

      கீதா

      நீக்கு
    3. என் தளத்தில் கருத்துக்கள் எதுவும் சமீப காலமாக வரவில்லை! வர்ட் ப்ரெஸ் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தே ஆகவேண்டும்!

      செட்டிங்ஸ்ல போய் ஏதாவது செய்யவேண்டியிருக்கிறதா என்று பார்க்கிறேன்.

      நீக்கு
    4. கமெண்ட் செட்டிங்ஸ் சரியாத்தான் இருக்கு..

      நீக்கு
    5. ஸ்பாமில் இருக்கிறதோ..

      நீக்கு
    6. Spam: 0 எனக் காண்பிக்கிறது! அப்ரூவ் ஆகாத கமெண்ட் ஏதுமில்லை.

      நீக்கு
    7. ஏகாந்தன் ஜி. வேர்ட்ப்ரஸ் ல இருந்து மாறுங்கள். நானும் எத்தனை தடவையோ முயற்சித்திருக்கிறேன். வருத்தமாக இருக்கும்.

      நீக்கு
  13. பாஹேவின் ஜனநாயகக் கொலை இன்று உலகம் முழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் டிரம்ப், ருசியாவில் புடின், சீனாவில் ஷி, என்று உலகமே சர்வாதிகாரத்தை நோக்கி போகும் போது இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன. நாமும் அந்த சர்வாதிகாரத்தின் நிழலில் தான் வாழ்கிறோம். நல்லதா கெட்டதா என்பதை பின் வரும் நம் சந்ததியினர் தான் கூற வேண்டும்.
    ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பெருசுகள் எப்போதும் "உலகம் போகும் போக்கைப்பாரு' என்று புலம்புவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித மனம். இன்றைய இளைஞர்கள்... நாளை இவர்களும் இதையேதான் சொல்வார்கள்!

      நீக்கு
    2. எது சர்வாதிகாரம்? எனக்குப் புரியவில்லை. மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவங்க ஐந்து வருடங்களோ இல்லை நாலு வருடங்களோ அவர்கள் நினைத்ததைச் செய்கிறார்கள். அவர்கள் செய்தவை சரியில்லை என்றால் மக்கள் அவர்களை அடுத்த தேர்தலில் நீக்கிவிடப் போகிறார்கள்.

      அப்படிப் பார்த்தால், ஸ்கூலுக்கு ஒழுங்கா வரணும்னு பள்ளிகள் சர்வாதிகாரம் செய்கின்றன, நல்லா படிக்கணும்னு பெற்றோர்கள் சர்வாதிகாரம் பண்ணுகிறார்கள், திருடர்கள் திருடக்கூடாது என்று போலீஸ் சர்வாதிகாரம் செய்கிறது என்று சொல்லிக்கிட்டே இருக்கலாம்.

      நீக்கு
    3. மற்ற தேசத்தினருக்கு எப்படியோ. இந்தியர்களுக்கு ஒருவர் ஸ்கேலுடன் பக்கத்தில் நடமாட வேண்டும். இது நம் நாட்டவரைப் பற்றிய என் எண்ணம். பெரும்பாலானோருக்கு அறம் இல்லவே இல்லை.

      நீக்கு
    4. சட்டம் இருக்கிறது. அதை செயல்படுத்துவதில்லை. அப்படி செயல்படுத்தினால் நம் மக்களும் பயப்படுவார்கள், ஒழுங்காக இருப்பார்கள்.

      நீக்கு
  14. ஹாஹாஹா கடைசில கனவு கதையாகி சம்பவத்தோடும் தொடர்ந்து இணைந்து பயணித்து....

    உங்க narration அன்று ஒரு நடிகரிடம். தயாரிப்பாளரிடம் (நான் அல்லங்க) கதை சொல்வது போல இருக்க!!! அதான் சொன்னேன் கதையா எழுதிடலாமேன்னு. உண்மையில் எனக்கு மனதில் வந்தது. ஆனால் எழுத்தாக்கறதுதானே இப்ப கஷ்டமா இருக்கு!!

    கனவு சுவாரசியமா இருக்கு அதை எழுதியதையும் ரசித்தேன்...ஆனா உங்க நிலைல இருந்திருந்தா எப்படி வியர்த்திருக்கும்!! என்றும் யோசித்தேன்.

    பாஸ், பசங்க உங்க மேல பாஞ்சுருப்பாங்க பாருங்க கனவுலயும் அவர்கள் உங்கள் மீது பாய ரெடியா இருந்தாங்க!! ரொம்பப் பொருந்திப் போயிருக்குல்ல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... பின்னே பாயாம இருப்பாங்களா... நேற்று ஜலினிக் சென்று விட்டு திரும்பும்போது பத்து நிமிடங்களுக்கொருமுறை மூவரும் மாற்றி மாற்றி என்னுடன் தொலைபேசிக்கொண்டே இருந்தார்கள்! தூங்கி விடுவேனாம். மாற்றுகிசாவியையும் எடுத்துச் செல்ல மாட்டார்களாம்!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா.....சிரித்துவிட்டேன்!! மு ஜா மு நம்ம மக்கள்! உங்களைத் தூங்கவிடாம ஒரு வழி பண்ணியே தீருவோம்ம்னுட்டு!!!

      கீதா

      நீக்கு
  15. அவனை உற்றுப் பார்த்த பிரும்மானந்த அடிகள், "அப்பனே! உன்னைப் பார்த்தால் ஊருக்குப் புதிது போலிருக்கிறது?" என்று சந்தேகக் குறியுடன் கூடிய கேள்வியைத் தொடுத்தார்.//

    அட! கனவுல கூட அந்த வெறியர்கள் ரவியை பார்த்திருந்தால் கேட்டிருப்பாங்களோ??!!!!

    அந்த வரிகளில் கடைசி தவிர மற்றதெல்லாம் கனவோடு பொருத்திப் பார்த்தால் சூப்பரா பொருந்திப் போகிறது, ஸ்ரீராம். கடைசில டேய் இவன் தமிழ்டா என்று...விட்டுவிடுவது போலவோ இல்லை டுமீல் என்றோ...முடியறாப்ல!!!! ஒரு கலவரம் ஏற்பட்ட பாணில...

    அன்று நீங்க சொன்னப்ப, எனக்குக் கிட்டத்தட்ட இப்படித்தான் தோன்றியது.ஆனால் மொழி அல்ல உரையாடலில்..நாடு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி வேற பொருந்துகிறதா... பார்றா... சாதாரணமா இந்த மாதிரி ஆராய்ச்சி, கண்டுபிடிப்பெல்லாம் கமலாக்காவும் செய்வாங்க...

      நீக்கு
  16. கரூர் இடம் பெற்றுக் கொண்டே இருக்கே செய்திகளில். //திருச்சி ஜில்லா கருவூர் அக்காலத்தே பெரும் பொலிவு பூண்டு விளங்கியதென்பது ஆராய்ச்சியாளர் முடிவு//

    ஓ! ஆனால் இப்ப அது ரொம்ப வறண்டு, ஊருக்குப் போனால் வெப்பம் கடுமையா இருக்கும் கோடை காலங்களில். நம்ம வீட்டு தெய்வம் தான்தோன்றிமலை யாச்சே! ஒவ்வொரு முறை போறப்பவும் ரொம்ப கடுப்பாகிடுவேன். கடைசியா போனது 2024ல் வெயில் காலத்திற்கு முன் போனதால் தப்பித்தேன். ஈரோடிலிருந்து கருவூர் போகும் வழி செமையா இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரூர்க்காரர் விரைவில் காராகிரகம் ஏகுவார் என்கிறது பட்சி.

      தேசிய நெடுஞசாலைகளை தயார் செய்யும்போதே இருபுறமும் மரங்கள் வைத்து வளர்க்கலாம். ஏனோ செய்ய மாட்டேன் என்கிறார்கள். வெட்டுவதற்கு மட்டும் வேகமாக வந்து விடுகிறார்கள்.

      நீக்கு
    2. கரூர்க்காரர் விரைவில் காராகிரகம் ஏகுவார் என்கிறது பட்சி.//

      முதலில் ஒரு செகன்ட் வேறொருவர் மனதில் வந்திட ஆ! ஏன் என்று எழத் தொடங்கி ..புரிந்ததும்...ஹப்பா...காராகிரகம் ஏறட்டும் பட்சி சொல்வது பலிக்கட்டும் என்றது...

      ஸ்ரீராம்..எவ்வளவு மரங்கள் இருக்கின்றன...பல இயக்கங்கள் இருக்கின்றன. அரசாங்கம் அவர்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த இயக்கங்கள் இனியேனும் இயங்கும் என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்

      நீங்க ஃபேஸ்புக்ல இதைச் சொல்லுங்களேன் பார்க்கறவங்க யாராச்சும் செயல்படுத்தமாட்டாங்களஆ?

      கீதா

      நீக்கு
    3. பழைய கள்
      புதிய மொந்தை!

      நீக்கு
    4. //கரூர்க்காரர் விரைவில் காராகிரகம் ஏகுவார் என்கிறது பட்சி.// அவர் சம்பாதித்ததில் பெரும் பகுதி யார் குடும்பத்துக்கோ போனதாமே. அதனால்தான் தொகுதி மறுவரை செய்யும் சட்டத்தை பாஸ் செய்ய எங்கள் ஆதரவைத் தருகிறோம், நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று கோரிக்கை விடப்பட்டிருக்கிறதாமே..

      நீக்கு
    5. என்ன வேணும்னாலும் நடக்கும்தான்!

      நீக்கு
  17. பாஹே அவர்களின் முதல் குறிப்பு - எப்போதும் குறை காணுதல் - கருத்து சூப்பர். அது ஒரு மன நோய்தான். பாஹே அப்பா ரொம்பவே உள ரீதியாக நிறைய சிந்தித்திருக்கிறார் என்று தெரிகிறது.

    வரிகளுக்கிடையில் ஒளிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கைக் கவிதை//

    அட்சரலட்சம்.

    வரிகளுக்கிடையில் இருப்பதைப் புரிந்து கொண்டுவிட்டால் வாழ்க்கைக் கவிதையும் இனிதாகிடுமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிதாகி விடுமே...
      ஆனால் எழுதுபவர்கள் படிப்பதில்லை!

      நீக்கு
    2. அப்படிச் சொல்வது தவறு. சொல்லுபவர்கள் அதனை ஃபாலோ பண்ணுப்வர்களாக இருக்கணும்னு அவசியம் இல்லை. அவர்கள் சொல்வதை வைத்து நாலு பேர் திருந்தினாலே போதும். கண்ணதாசன் தத்துவப் பாடல்களை நாம் எவ்வளவு ரசிக்கிறோம். ஆனால் கண்ணதாசன் அவற்றை ஃபாலோ செய்தாரா என்று கொஞ்சம்கூட நாம் நினைப்பதில்லை, நினைக்க அவசியம் இல்லை.

      நீக்கு
    3. ஆமாம். அதைதான் நானும் சொல்ல முயன்றிருக்கிறேன்.

      நீக்கு
  18. ஜனநாயகம் இப்போதும் பொருந்திப் போகும் ஒன்று. பாஹே ஃபேஸ்புக்கில் எல்லாம் இருந்திருக்கிறாரே!..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணக்கு தொடங்கி கொடுத்தேன். பேப்பரில் எழுதித் தருவார். நான் அதை அவர் கணக்கில் பேஸ்புக்கில் போடுவேன்.

      நீக்கு
    2. நினைத்தேன் ஸ்ரீராம் கீழே கேட்க நினைத்தேன் அதற்குள் உங்க பதில் வந்துவிட்டதையும் பார்த்தேன்

      கீதா

      நீக்கு
  19. நந்து சுந்து - கேள்விப்பட்டது போல இருந்தாலும் (எழுத்தாளரைச் சொல்லவில்லை!) பழைய குமுதம் எல்லாம் எங்கே பார்த்திருக்கிறேன்! குப்பாச்சு, குழப்பாச்சு இதுவும் கேள்விப்பட்டது போன்று இருக்கு ஆனால் வாசித்ததில்லை.

    நந்து சுந்து - கொஞ்சம் அச்சுப்பிச்சு? நந்து எடக்கு மடக்கு?...ஆனாலும் கடைசில சொன்னது புன்சிரிக்க வைத்தது,

    யார் இப்பக்கம் குமுதத்தில் எழுதியது ஸ்ரீராம்? நான் ஒரிஜினலை பெரிதாக்கி வாசித்தேன். அங்கும் எழுதியவர் யாரென்று போடவில்லையே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. இப்போது நந்து சுந்து என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார். பேஸ்புக்கில் பிரபலம். நகைச்சுவை ஜானர்.

      குமுதத்தில் யார் எழுதியவர் என்ற விவரம் இல்லை. இருந்திருந்தால் அதையும் சேர்த்து போட்டிருப்பேனே... .ராகிர, அல்லது ஜராசு வாகக் கூட இருக்கலாம்!

      நீக்கு
  20. நா முத்துக்குமார் - முத்தான கவிதைகள் முத்துக் குவியல். ரொம்ப ரசித்தேன். சட்டென்று மறைந்துவிட்டாரே!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இன்று வேண்டாம் நாளை வா நிலா ஊட்டுவதற்குச் சோறில்லை.//

    இது வருத்தமாகிவிட்டது

    இன்று வேண்டாம்
    நாளை வா நிலா
    என்றவர் இல்லை
    சோறூட்ட.
    நிலா வந்தது
    வானில் இருந்தார்
    நிலாவைக் காண!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா என்றால் சோகம் வரவில்லையா?

      நீக்கு
    2. சூப்பர் ஸ்ரீராம் டக்கென்று இந்தப் பாட்டை எடுத்திட்டீங்க பாருங்க....பொருத்திப் பார்க்கும் போது ரொம்பவே வருது ...

      கீதா

      நீக்கு
    3. __/\__

      பின்னே.. மனசு முழுக்க பாட்டுதானே!

      நீக்கு
    4. நீங்கள் எழுதி இருக்கும் கவிதை வரி கூட புதிய கற்பனை. நல்லா இருக்கு

      நீக்கு
  22. நீங்க அந்தப் பாட்டை எடுத்து விடும் போதுதான் கண்ணதாசன் பற்றி நெல்லைக்கண்ணன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நிஜமாகவே

    வியந்து வியந்து ரசித்தேன், ஸ்ரீராம். அதுவும் நெல்லைக்கண்ணன் கோட் பண்ணிப் பண்ணி பேசும் போது...

    கவியரசர் அரசரேதான்...

    அதான் அவர் இன்றும் பேசப்படுகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். கண்டிப்பாக அவர் மாதிரி இன்னொருவர் வரமாட்டார்.

      நீக்கு
    2. பேரரசரும்தான் ’பேச’ப்படுகிறார்..!

      நீக்கு
  23. இதுவே ஒரு தேவரையோ அல்லது நாடாரையோ பற்றி எழுதியிருந்தால் . அந்த எழுத்தாளரே ரத்த விளாராக புலம் பெயர்ந்திருக்க வேண்டியதுதான்!//

    சுஜாதாவின் நினைவு வருது...

    பாலகுமாரன் கதை பற்றி?

    யார் எழுதியது ஸ்ரீராம்?

    //333 அம்மையப்பன் தெரு// இதுதான் பாலகுமாரனின் கதையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அப்படி ஒரு கதை. அந்தக் கதை பற்றி யாரோ எழுதி .இருப்பது அது.

      நீக்கு
  24. ஓராயிரம் பார்வையிலே - பாடல் செம பாடல் ல, ஸ்ரீராம்
    ரொம்பப் பிடித்த பாடல். ரசித்துக் கேட்ட பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது சரணம் கேட்கும்போதோ, நாமே பாடினாலோ கண்களில் கண்ணீர் வந்து விடும்.

      நீக்கு
  25. சிவகுமார் பேசுவது அவ்வளவாகப் புரியவில்லை, ஸ்ரீராம் பல இடங்களில்...உச்சரிப்பு ஓகே ஆனால் அந்த உச்சரிப்பை ரொம்ப வேகமாகப் பேசும் இடங்களில் புரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். கொழகொழவென்று பேசுவார். வேகமாகவும் பேசுவார். தற்பெருமை பீத்திக்கறார்.

      நீக்கு
    2. வயசாகிவிட்டது இல்லையா? இருந்தாலும் சிவகுமார் தன்னைத் தானே ரொம்பவே பீற்றிக்கொள்ளும் இயல்பு உடையவர். அதுனாலத்தான் கடவுள் அவருக்கு ஜோதிகா ரூபத்தில் ஒரு கட்டையை அனுப்பியிருக்கார். சொந்த மகனே வீட்டை விட்டு வெளியேறும்படி அவருக்கு ஆகிவிட்டது.

      நீக்கு
    3. சொந்த மகள் வீட்டை விட்டு வெளியேறிய கதை எனக்குத் தெரியாதே! என்ன அது?

      நீக்கு
  26. நெல்லை கண்ணன் பேச்சு ரொம்பவே நல்லா இருக்கு.

    பாளையங்கோட்டையில் வசித்தபோது என் அப்பா நெல்லை கண்ணன் பேச்சைக் கேட்டுவிட்டு சிலாகித்தது நினைவுக்கு வருது.

    இந்த மாதிரி நல்ல பேச்சாளர்கள், நல்லவற்றைப் பேசினால் ரொம்பவே ரசிக்கலாம். அரசியல் பக்கம் செல்லாமல், சும்ம்மா டாக்டர்கள் பெண்டாட்டி ஜோக்குகளையே சொல்லிப் பொழுதுபோக்காமல், திரையிசைப் பாடல்களில் சிறப்பைப் பேசும்போது நல்லா ரசிக்க முடியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை கண்ணன் பேச்சு எனக்கும் ரொம்ப பிடிக்கும். சுகாவின் அப்பா. தமிழ் ரொம்ப அறிந்தவர். ஆனால் சமயங்களில் சாதிய திட்டுகளும் உண்டு்.

      நீக்கு
  27. certain things changed in settings for allowing comments. Now please try to comment Sriram, Geetha...

    பதிலளிநீக்கு
  28. ஓராயிரம் பாடல் என்றும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கீதங்களில் ஒன்று.மணி மாலா அசோகன். ''காற்றினில் நான் கலந்தேன். உன் கண்களைத் தழுவுகிறேன்'' அப்பாடி!! என்ன ஒரு உணர்வு. நம் டி எம் எஸ் போல வராது. மனதைப் பிழியும் சோகம். ஆறுதலும் தரும் நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  29. ஒரு பாலகுமாரன் கதை இப்போது முடித்தேன். இது போல எழுத இனி ஆள் இல்லை. ஒரு Vஏளை ஜயகாந்தன் கொஞ்சம் அதைத் தொட்டிருப்பாரோ. ப்ராம்மண சமூகத்துக்கு செய்த கொடுமையினால் தான் இப்போது நாங்கள் அனைவரும் வெளியே இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  30. நா. முத்துக்குமாரன் இன்னும் தெளியாத சோகம்.

    பதிலளிநீக்கு
  31. உங்கள் கனவு நடுங்க வைத்தது. நான் வேணும்னால் உங்க பாஸ் கிட்ட சொல்லட்டுமா. சாவி எடுத்துக் கொண்டு போகும்படி. ஆனால் பயங்கரக் கனவுகளிலிருந்து விழிக்க நமக்கு ஒரு சாவி வேண்டும். பாவம் பா நீங்கள்.

    பதிலளிநீக்கு
  32. ''குமுதத்தில் யார் எழுதியவர் என்ற விவரம் இல்லை. இருந்திருந்தால் அதையும் சேர்த்து போட்டிருப்பேனே... .ராகிர, அல்லது ஜராசு வாகக் கூட இருக்கலாம்!'' உண்மை.

    பதிலளிநீக்கு
  33. நந்து சுந்து மதனோடது என்று அப்போ பேசப்பட்டது.

    பதிலளிநீக்கு
  34. நெல்லைக் கண்ணன், நம்ம சுகாவின் அப்பா என்பதால் கேட்பேன். மிக நன்றி ஶ்ரீராம் மிக அருமையான பதிவு. கண்ணதாசனைச் சொல்ல ஒரு பதிவு போதாது:((((((((((((((((((((((((

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!