ஒவ்வொரு நாளும் இரண்டு முறை தத்தித்தத்தி ஐவி ஊசி போட்டுக்கொண்டு வந்தேன். மூன்று நாட்களும் வெவ்வேறு சோதனைகள் செய்து கொண்டுதான் இருந்தார்கள். டாக்டர் சோமுவும், அவர் உதவியாளர்களும் அவ்வப்போது வந்து சோதித்துச் சென்றனர். மூன்றாம் நாள் மறுபடி எனக்கு கவுன் சோதனை வந்தது.
ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று அழைத்தார்கள். கட்டாயம் கவுன் என்று அறிவித்தார்கள். இந்தமுறை வீல்சேர் என்பதோடு தள்ளிக் கொண்டு வர ஒரு பெண்.
வீல்சேர் போய்க்கொண்டே இருந்தது. வாசல் கேட்டுக்கு செல்லும் வழி வர, சந்தேகம் வந்தது. 'கவுனோடு என்னை கடத்துகிறார்களோ' என்று அல்லது, வேறு ஆஸ்பத்திரிக்கோ என்று! ஆனால் அந்தப் பெண்மணி 'இல்லை. இந்த ஸ்கேன் இந்த கட்டிடத்தில் இல்லை, எதிரே உள்ள கட்டிடத்தில் தான் இருக்கிறது. அங்கு செல்ல வேண்டும்' என்று சொன்னார்.
"அப்போ எதுக்கு வெயிட் செய்யறோம்?"
"ஆம்புலன்ஸுக்கு"
"என்ன? ஆம்புலன்ஸா?"
வாயிற்காப்போன்களாக இருந்தவர்களிலிருந்து ஒரு பெண் வந்து என்னைப்பற்றிய விவரங்களை கேட்டு அறிந்து ஒரு நோட்டில் பதிந்து அந்தப் பெண்ணிடம் கையெழுத்து வாங்கி கொண்டார்.
"இது எதுக்கு?"
"ரூல்ஸ்.."
எல்லோரும் இது ஒரு வார்த்தை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..
"அதுதான் எதுக்கு?"
"சில பேஷண்ட் அப்படியே எஸ்கேப் ஆயிடுவாங்க.. இன்னாரை கொண்டு போனோம், அவரை திரும்பி கொண்டு வந்துட்டோம், இன்ன டைம் என்று தெரிய.."
"ஓ.. அப்படியே எஸ்கேப் ஆவாங்களா.. அதுக்குதான் கவுன் போட்டு கூட்டிகிட்டு வரீங்களா?!"
அந்தப் பெண் களுக்கென்று சிரித்து ஐந்து விரல்களால் கண்கள் மூக்கு வாயை பொத்தி சிரிப்பை சிறிது நேரம் கண்டின்யு செய்தார்.
எரிச்சலாக இருந்தது.
பிறகு நான் வீல்சேரில்தான் அழைத்து வரப்பட்டேன், ஆம்புலன்ஸில்தான் எதிர் கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன் என்பதற்கு ஆதாரமாம். ஆம்புலன்ஸ் எண் எழுதுவார்களாம். சிறு சிரிப்புகள் இன்னும் மாரியம்மாள் அந்தப் பெண் சொன்னது இது.
அந்த நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வந்த ரயில் மாதிரி ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்று எங்களை எதிர்நோக்க, அதன் ஓட்டுநர் நிறைய 'வசனங்களுடன்' (எதற்கென்று புரியும் என்று நினைக்கிறேன்) எங்களை ஏற்றிக் கொண்டு எதிர் பிளாட்பார்மில் இருந்த கட்டிடத்துக்கு கொண்டு சேர்த்தார். ரூல்ஸ்! அந்த இடத்தை - அதாவது ரோட் க்ராஸ் செய்வதைப் போல இந்த பிளாட்பார்மில் இருக்கும் கட்டிடத்திலிருந்து எதிர்ப்பக்க பிளாட்பார்மில் இருக்கும் கட்டிடத்துக்கு - வீல்சேரில் கடக்கக் கூடாதாம்!
அந்தக் கட்டிட வாசலில் இறக்கி விட்டு முடிந்ததும் அழைக்கச் சொல்லி ஆம்புலன்ஸ் டிரைவர் விடைபெற, இன்னொரு கூத்து நடந்தது. வீல்சேர் இந்த கட்டிடத்திலிருந்து புதிதாக எடுக்க வேண்டும். அங்கு நான் உட்கார்ந்து வந்தது அந்த கட்டிடத்தின் சொத்து! அதை அங்கேயே விட்டு விட்டு வந்தாச்சு.
கூத்து என்னவென்றால், அந்தப் பெண்மணி வீல்சேர் எடுக்க உள்ளே போக இறங்கி நின்ற நான் என் மானத்தைக் காக்க பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அந்த இடத்தில் மட்டும் பேய்க்காற்று அடிக்க, 'உள்ளத்தை அள்ளித் தா' ரம்பா மாதிரி என் கவுன் பறந்தது. ரம்பாவைப் போலவே கவுனை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்துக் கொண்டு அலறினேன். "டேய்... டேய்.. ஏதாவது செய்டா.. காத்துடா... "
மகன் திணறினான். அவனும் வந்து கவுன் பறக்காமல் பிடித்துக் கொண்டான். "என்னப்பா இவ்ளோ காத்து இங்கே... மழையா இருந்தா குடை பிடிக்கலாம்... இதுக்கு என்ன செய்ய..?"
வீல்சேர் எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்த பெண்மணி என் நிலை கண்டதும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டு, வேகமாக வந்தார். வீல்சேரைப் பிரித்து அதில் அமரச் செய்து போர்வை போர்த்தி தொடைகளை மறைத்தார்.
உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு, எனக்கு முன்பாக ஒரு ஆக்சிடன்ட் ஆன இளம்பெண் காத்திருக்க, அவர் டர்ன் முடிந்ததும் எனக்கு எடுத்தார்கள். தொடைகளில் கவுனில் கைவைத்துக் கொண்டே அங்கு நான் பட்ட அவஸ்தைகள் தனி. வெளியே வந்தததும் போகலாம் என்றால் அந்தப் பெண்மணி என்னை வராண்டாவில் உட்காரவைத்து விட்டு ரிப்போர்ட் வாங்க உள்ளே செண்ட்ஸரு, அங்கிருப்போருடன் சிரித்துச் சிரித்து கதையடித்துக்கொண்டிருந்து விட்டு வந்தார்.
ஆச்சரியகரமாக ஆம்புலன்ஸ் தயாராய் நின்றிருந்தது. ரம்பா கோலம் மறுபடி வராமல் அழுத்திப் பிடித்தபடி சட்டென ஏறி ஆம்புலன்சில் அமர்ந்து ரோட் க்ராஸ் செய்து, இங்கிருக்கும் வீல்சேரில் அமர்ந்து நோட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்த பெண்ணுடன் அறையை அடைந்தேன். ரிப்போர்ட்டும் வந்ததது.
===========================================================================================
ஏதோ ஒரு
வலிய காரணத்தின்
எளிய கணத்தில்
கணவர்களிடமிருந்து
மகன் கைகளுக்கு
மாறுகிறது
மனைவிகளின் மீதான
ஆதிக்கம்!
கேள்வியாக கேட்கிறாய்
ஏன்
பதிலை மட்டும்
கேட்க மாட்டேன்
என்கிறாய்
===========================================================================================
கேள்விகள் கேட்போருக்கு... சென்ற வாரம் இதை வெளியிட்டு அது சரியாக வரவில்லை. எனவே இன்று மீண்டும் சரியாக...
=========================================================================================
1963 தாமரை புத்தகத்திலிருந்து... ஆமாம், தாமரை என்றொரு புத்தகம் வந்ததது தெரியுமோ....
எட்டாவது வகுப்பிலே தமிழ்க் கட்டுரைப் போட்டி நடந்து கொண்டிருந்தது. வகுப்பு ஆசிரியர், தன் வாயைத் திறந்து, "பேசாதீர் கள், நேரத்தை விணாக்காதீர்கள், அரை மணிக்குள் கிரிக்கெட் விளை யாட்டைப் பற்றிச் சுவையாகத் தமிழில் கட்டுரை ஒன்று எழுத வேண்டும். ஆமாம், நேரம் முப்பது நிமிடங்களே. அதற்குப் பிறகும் சும்மா எழுதிக்கொண்டிருந்தால் விடைத்தாளை ஏற்றுக்கொள்ள மாட்டேன்!" என்று முழங்கிவிட்டு அந்த அறையில் நடைபோட் டார்.
ஆயிற்று ஐந்து நிமிடங்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் விடைத்தாளில் சில வரிகளை எழுதி மடித்துக் கொடுத்துவிட்டு வகுப்பிலிருந்து மிக விரைந்து வெளியேறினான்.
போகிற அந்த மாணவனை வியப்போடு பார்த்துக்கொண்டே. "அட அவசரக்குடுக்கை !" என்று தன் வாயினால் முணுமுணுத்துக் கொண்டு அவன் என்னதான் எழுதியிருக்கிறான் என்று விடைத் தாளைப் பிரித்துப் பார்த்தார் ஆசிரியர்.
அதில் - "மழை. கிரிக்கெட் ஆட்டம் நடக்கவில்லை" என்று எழுதியிருந்தது!
============================================================================================
1988 தெற்கத்திக்கள்ளன் என்னும் படத்திலிருந்து ஜானகி அம்மாவின் குரலில் ஒரு இனிய காதல் பாடல். இளையராஜா இசை. கங்கை அமரன் பாடல். காட்சியில் விஜயகாந்தும் ராதிகாவும்.
===========================================================================================
'தமிழ்நாட்டு விளையாட்டுகள்' என்று ஒரு புத்தகம். 60 களில் வெளியான புத்தகம். அதன் முன்னுரை சுவாரஸ்யம். பொருளடக்கத்தில் பாருங்கள். வரிசை எண்களே தமிழ் எண்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது!
முகவுரை
விளையாட்டு கிலைக்களன், வாழ்க்கைத் தொழில், போர், அருஞ்செயல், சிறப்பு நிகழ்ச்சி முதலியவாகப் பலதிறப்படும். உழவர் செய்யும் பயிர்த்தொழிலைச் சிறுவர் நடித்தாடும் ஆட்டு பண்ணையென்றும்; ஓர் இளங்கன்னிக்குக் களிறுபுலி முதலிய விலங்குகளாலும் ஆழ்கீராலும் சேரவிருந்த கேட்டை, தற்செய லாக அவ்வழிவந்த காளைப் பருவத்தானொருவன் நீக்கிய செய்தி யைச் சிறார் நடித்தாடுவது கெடவால் என்றும்; பெயர்பெற்றதாக ஊகிக்க இடமுண்டு. (பண்ணை = வயல்)
"கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு"
(தொல்.உரி.21)
பிற்காலத்தில் அவ்விரு பெயர்களின் சிறப்புப் பொருளையும் அறியாதார், அவற்றை விளையாட்டு என்னும் பொதுப்பொருளி லேயே வழங்கினர் போலும்!
விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய மூன்றும் விளையாட்டின் இயல்பாகும். ஒருவன் ஓர் அருளினையை எளி தாகச் செய்துவிடின், அவன் அதை ஒரு விளையாட்டுப்போற் செய்துவிட்டான் என்பர். விளையாட்டு இன்பக் தருவதுபற்றியே,
"செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்லல் நீத்த உவகை கான்கே " என (1205), அதை இன்பவழி நான்கனுள் ஒன்றாகக் கூறிய தோடு, இன்ப நுகர்ச்சியையே 'பண்ணை' (1195) என்னுஞ் சொல்லாற் குறித்தனர் தொல்காப்பியர். அப் பண்ணை யென் னுஞ் சொற்கு, "முடியுடை மூவேந்தருங் குறுநில மன்னரு முதலாயினோர் நாடகமகளிர் ஆடலும்பாடலுங் கண்டுங் கேட்டுங் காமநுகரும் இன்ப விளையாட்டு " என்று பேராசிரியர் உரை கூறியிருத்தல் காண்க. எளியதும் இன்பந் தருவதுமான செய லெல்லாம் விரும்பப்படுவதே. இறைவன் அடியாரைக் காக்கும் திருவருட்செயல்கள் மேற்கூறிய மூவியல்புங் கொண்டன வென் னுங் கொள்கைபற்றியே, அவை திருவிளையாடல் எனப்படுவன.
ஒருசில விளையாட்டுக்கள் உலக முழுமைக்கும் பொதுவே னும், பல விளையாட்டுக்கள் வெவ்வேறு நாட்டிற்குத் தனிச் சிறப்பாகவே யுள்ளன. அவை பெரும்பாலும் நாட்டுப்பற்றை யூட்டுவன. ஆங்கில ஆட்சி நீங்கித் தமிழாட்சி வாவிருக்கும் போது, வழக்குக் குன்றிய தமிழ்நாட்டு விளையாட்டுக்களை நாடு முழுதும் பரப்புவது நல்லதென்று கண்டு, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக ஆட்சித்தலைவரும் தூயதமிழருமான திருவாளர், வ. சுப்பையா பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்கி, இச் சிறுநூலை எழுதலானேன்.
வழக்கற்ற விளையாட்டுக்கள் இறுதியிற் குறிப்பிடப்பட்டுள் ளன. இந்நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டுக்களை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்பெறும்.
1-12-54.
}
ஞா. தே-
உள. எல்லா விளையாட்டிற்கும் பொதுவாகச் சில கூறுகள் அவையாவன :
(1) கட்சி பிரித்தல்
இரு கட்சியார் விளையாடும் விளையாட்டுக்களிலெல்லாம், முதலாவது, கட்சி பிரித்துக்கொள்ளல் வேண்டும். ஆற்ற லும் மூப்பும் வாய்ந்த இருவர் முதலில் கட்சித்தலைவராய் அமர்ந்துகொள்வர். அதன்பின், பிறர் இவ்விருவராய்ச் சேர்ந்து தமக்குக் கவர்ச்சியான வெவ்வேறு புனைபெய ரிட்டுக்கொண்டு, கட்சித்தலைவரிடம் சென்று "இவ்விரு பெயராருள் உமக்கு எவர் வேண்டும்?" எனக் கேட்பர். கட்சித்தலைவர் யாரேனுமொருவரைத் தெரிந்துகொண்டு அவரைத் தம் கட்சியிற் சேர்த்துக்கொள்வர். இங்ங னம் இவ்விருவராய்ச் சேர்ந்து செல்லற்கு உத்திக்கட்டுதல் என்று பெயர். கட்சித்தலைவனைப் பொதுவாக அண்ணாவி என அழைப்பர். இவை பாண்டிநாட்டு வழக்கு.
உத்தியாளர் கட்சித்தலைவரைக் கேட்கும்போது,
"காற்றைக் கலசத்தில் அடைத்தவன் வேண்டுமா? கடலைக் கையால் நீந்தினவன் வேண்டுமா?"
என்றும்,
"வானத்தை வில்லாய் வளைத்தவன் வேண்டுமா? மணலைக் கயிறாய்த் திரித்தவன் வேண்டுமா?"
என்றும், பிறவாறும், அருஞ்செயல் ஆற்றிய பழமறவரின் சிறப்புப் பெயர்களையே கூறிக் கேட்பர். இத்தகைப் பெயர் களைக் "கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர்" என்பர் தொல் காப்பியர் (சொல்: 165.)
மகளிராயின், தாந்தாம் விரும்பிய பூப்பெயரைச் சொல்லிக் கேட்பர்.
41
(2) இரவாட்டு
திரவை. நிலவொளியில்லா தவிடத்துத் தெருவிளக்கொ இங்கு, இரவென்றது கண்தெரியும் பிலும் சில ஆட்டுக்கள் ஆடப்பெறும்."
பிடித்துவிட்டால், எறிந்தவன் தொலைவான். அதன்பின் எதிர்க்கட்சியாருள் ஒருவன் அவ்வாறு ஆடல் வேண்டும். திரி பிடிக்கப்படாவிடின், ஒருவன் எத்தனை முறையும் ஆடலாம். திரி மனைக்குட் புகாமல் எல்லைக்கு வெளியே நிலாக்கவீழினும் எறிந்தவன் தொலைவான்.
க. குதிரைக்குக் காணங்கட்டல்
ஆட்டின் பெயர் குதிரைக்குக் காணங்கட்டி அ றின்மேல் ஏறுவதாகப் பாவித்துக்கொண்டு, ஒரு கட்சிய இன்னொரு கட்சியார்மேல் ஏறி விளையாடுவது குதிரை காணங்கட்டல். காணங்கட்டுதலாவது கொள்வைத்தல்,
ஆவோர் தொகை: பொதுவாக, எண்மர்க்கு வே பட்ட சிறுவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி: ஓர் ஆடைத்துண்டை முறுக்கிப்பி னிய திரி இதற்குரிய கருவியாம். ஏறத்தாழ ஐந்துகள் இடையிட்ட இரு சமதூரக் கோடுகளைக்கீறி, அவற்க எதிரெதிராக நின்று ஆடும் இரு கட்சியாரும் தத்தம்ம் யெல்லை என்பர்.
ஆடிடம் : ஊர்ப் பொட்டலும் அகன்ற தெரு இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை: ஆடுவார் எல்லாரும் முதலாவது கட்டிச் சமத்தொகையான இருகட்சியாகப் பாகப் பிரி கொள்வர்.
முந்தி யாடவேண்டுமென்று துணியப்பட்ட யாருள் ஒருவன், திரியின் ஒரு முனையைத் தன் வலக் பெருவிரற்கும் அடுத்த விரற்கும் இடையில் இடுக்கி, கையையும் நிலத்தில் ஊன்றி, கரணம் போடுவதுபே காலைத்தூக்கித் திரியை எதிர்க்கட்சியாரின் மனைக்கு காலால் எறிவான். அதை எதிர்க்கட்சியார் அந்தரத்தில் பிடிப்பார்.
தவறாத ஒவ்வோர் எறிவும், காணம் விளைத்துக் குதி ரைக்குக் கட்டற்குரிய ஒவ்வொரு வினையாக முறையே தொடர்ந்து கூறப்படும். முதல் எறிவில், "உழுதாயிற்று" என்றும்; இரண்டாவதில், "விதைத்தாயிற்று" என்றும்; "முளைத்து விட்டது" என்றும் ; இங்ஙனமே முதாடர்ந்து மேற்பட்டவற்றில் முறையே, “ஓர் இலக்கு விட்டிருக்கிறது", "சர் இலக்கு விட்டிருக்கிறது", "மூவி லக்கு விட்டிருக்கிறது", "நாலிலக்கு விட்டிருக்கிறது", "ஐயிலக்கு விட்டிருக்கிறது", "ஆறிலக்கு விட்டிருக்கிறது" "ஏழிலக்கு விட்டிருக்கிறது", "எட்டிலக்கு விட்டிருக் கிறது", "ஒன்பதிலக்கு விட்டிருக்கிறது", "பத்திலக்கு விட்டிருக்கிறது", " கொடியோடி யிருக்கிறது", "பூப்பூத் திருக்கிறது", "பிஞ்சுவிட்டிருக்கிறது", "காய் காய்த்து விட்டது", "காணத்தை அறுத்தாயிற்று", "களத்தில் அடித்தாயிற்று", "வீட்டிற்குக் கொண்டுவந்தாயிற்று' "அடுப்பில் வேகிறது", "குதிரைக்கு வைத்திருக்கிறது" என்றும் கூறப்படும். அடுத்த எறிவில், எதிர்க்கட்சியார் குனிய, வென்ற கட்சியார் அவனவன் உத்திப்படி அவர் மேல் ஏறிக்கொள்வர். குறித்த தொலைவாவது, குறித்த தடவை ஓரிடத்தைச் சுற்றியாவது, தோற்ற கட்சியார் வென்ற கட்சியாரைச் சுமந்து செல்லவேண்டும். அதோடு ஓர் ஆட்டை முடியும்.
ஆட்டுத் தோற்றம்: இவ்விளையாட்டு ஒருகால் உழி ஞைப் போரினின்று தோன்றியிருக்கலாம்.
ஒரு நகர் அல்லது தலைநகர் நீண்டகாலமாக முற்றுகையிடப்பட்டிருக்கும்போது, நொச்சியார் (அதாவது அடை பட்டுள்ள நகரத்தார்) தமக்கும் தம் கால்நடைகட்கும்
அகப்பட்டுக் கொண்டவள் சற்றுத் தொலைவிற்போய் நிற்க, அவளுக்கு முன்னமே காட்டப்பட்ட ஒரு மணிமாலை அல்லது வேறோர் அணி, ணி ஒரு பிள்ளையிடம் ஒளித்து வைக்கப்படும். தொலைவில் நிற்பவள், "வரலாமா?" என்று சேட்டு, "வாலாம்" என்று சொன்னபின் வந்து, மணி மாலை வைத்திருக்கிறவள் என்று ஒரு பிள்ளையை ஊகிப் பாய்ச் சுட்டிக்காட்டும். இல்லாதவள் எழுந்து நிற்பாள். ஐயத்திற்கிடமாயிருப்பின், அவள் மடி முதலியவற்றைப் பிடித்துப் பார்க்கலாம். ஒருமுறை கண்டுபிடிக்கத் தவறி னவள் மறுமுறைபுங் கண்டுபிடித்தல் வேண்டும். மணி மாலை வைத்திருப்பவனைக் கண்டுபிடித்திவிடின், மற்றெல் லாப் பிள்ளைகளுஞ் சேர்ந்தி, "ஊதாமணியைக் கண்டு பிடித்தால் கைதட்டுவோம்" என்று பாடிக் கைதட்டி மகிழ்வர். இது தெருவிலும் ஊர்ப்பொட்டலிலும் விளை யாடப்பெறும்.
பூப்பறிக்க வருகிறோம்
கட்சிக்கும் பொதுவாக ஒரு பொதுவாகப் பதின்மருக்குக் குறையாத பல பிள்ளை ன் உத்திகட்டிச் சமமான இருகட்சியாகப் பிரிந்து, ஓர் அகன்ற தெருவிலேனும் ஊர்ப்பொட்டலிலேலும் இரு ஒரு நடுக்கோடு கீறி, அதற்கு இப் பாலும் அப்பாலும் நின்றுகொள்வர். பின்பு இருகட்சி பாரும் கட்சிவாரியாகக் கைகோத்து முன்பின்னாகப் பின் வருமாறு பாடிக்கொண்டு, மாறிமாறி நடுக்கோடு வரை சென்று மீள்வர்.
முதற் கட்சியார் : பூப்பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம், இந்தநாளிலே.
இரண்டாங் கட்சியார் : யாரனுப்பப் போகிறீர்? யாரனுப்பப் போகிறீர் ? இந்தநாளிலே.
கமலா அனுப்பப் போகிறோம், கமலா அனுப்பப் போகிறோம், இந்தநாளிலே.
இ: எந்தப்பூ வேண்டும்? எந்தப்பூ வேண்டும்? இந்தநாளிலே.
மு: மல்லிகைப்பூ வேண்டும், மல்லிகைப்பூ வேண்டும், இந்தகாளிலே.
இன்னபூ வேண்டுமென்று சொல்லி முதற்கட்சியார் பாடி முடிந்ததும், இருகட்சியினின்றும் ஒவ்வொரு பிள்ளை முன்சென்று நடுக்கோட்டையடுத்தவுடன், இருவரும் ஒருத்தியை யொருத்தி பிடித்திழுப்பர். கோட்டிற்கப்பால் பாடி, வேறிருவர் இழுப்பர். சேரும். பினபு முன்போற் பாடி, இங்கனம் இவ்விருவராய் எல்லாரும் இழுக்கப்பட்டபின், மிகுதியாகப் பிள்ளைகள் சேர்ந்திருக்கிற கட்சியார் வென்றவராவர்.
வழக்கற்ற விளையாட்டுக்கள் இறுதியிற் குறிப்பிடப்பட்டுள் ளன. இந்நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டுக்களை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்பெறும்.
1-12-54.
}
ஞா. தே-
முன்னுரை
(1) கட்சி பிரித்தல்
இரு கட்சியார் விளையாடும் விளையாட்டுக்களிலெல்லாம், முதலாவது, கட்சி பிரித்துக்கொள்ளல் வேண்டும். ஆற்ற லும் மூப்பும் வாய்ந்த இருவர் முதலில் கட்சித்தலைவராய் அமர்ந்துகொள்வர். அதன்பின், பிறர் இவ்விருவராய்ச் சேர்ந்து தமக்குக் கவர்ச்சியான வெவ்வேறு புனைபெய ரிட்டுக்கொண்டு, கட்சித்தலைவரிடம் சென்று "இவ்விரு பெயராருள் உமக்கு எவர் வேண்டும்?" எனக் கேட்பர். கட்சித்தலைவர் யாரேனுமொருவரைத் தெரிந்துகொண்டு அவரைத் தம் கட்சியிற் சேர்த்துக்கொள்வர். இங்ங னம் இவ்விருவராய்ச் சேர்ந்து செல்லற்கு உத்திக்கட்டுதல் என்று பெயர். கட்சித்தலைவனைப் பொதுவாக அண்ணாவி என அழைப்பர். இவை பாண்டிநாட்டு வழக்கு.
உத்தியாளர் கட்சித்தலைவரைக் கேட்கும்போது,
"காற்றைக் கலசத்தில் அடைத்தவன் வேண்டுமா? கடலைக் கையால் நீந்தினவன் வேண்டுமா?"
என்றும்,
"வானத்தை வில்லாய் வளைத்தவன் வேண்டுமா? மணலைக் கயிறாய்த் திரித்தவன் வேண்டுமா?"
என்றும், பிறவாறும், அருஞ்செயல் ஆற்றிய பழமறவரின் சிறப்புப் பெயர்களையே கூறிக் கேட்பர். இத்தகைப் பெயர் களைக் "கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர்" என்பர் தொல் காப்பியர் (சொல்: 165.)
மகளிராயின், தாந்தாம் விரும்பிய பூப்பெயரைச் சொல்லிக் கேட்பர்.
குதிரைக்குக் காணங்கட்டல்
(2) இரவாட்டு
திரவை. நிலவொளியில்லா தவிடத்துத் தெருவிளக்கொ இங்கு, இரவென்றது கண்தெரியும் பிலும் சில ஆட்டுக்கள் ஆடப்பெறும்."
பிடித்துவிட்டால், எறிந்தவன் தொலைவான். அதன்பின் எதிர்க்கட்சியாருள் ஒருவன் அவ்வாறு ஆடல் வேண்டும். திரி பிடிக்கப்படாவிடின், ஒருவன் எத்தனை முறையும் ஆடலாம். திரி மனைக்குட் புகாமல் எல்லைக்கு வெளியே நிலாக்கவீழினும் எறிந்தவன் தொலைவான்.
க. குதிரைக்குக் காணங்கட்டல்
ஆட்டின் பெயர் குதிரைக்குக் காணங்கட்டி அ றின்மேல் ஏறுவதாகப் பாவித்துக்கொண்டு, ஒரு கட்சிய இன்னொரு கட்சியார்மேல் ஏறி விளையாடுவது குதிரை காணங்கட்டல். காணங்கட்டுதலாவது கொள்வைத்தல்,
ஆவோர் தொகை: பொதுவாக, எண்மர்க்கு வே பட்ட சிறுவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி: ஓர் ஆடைத்துண்டை முறுக்கிப்பி னிய திரி இதற்குரிய கருவியாம். ஏறத்தாழ ஐந்துகள் இடையிட்ட இரு சமதூரக் கோடுகளைக்கீறி, அவற்க எதிரெதிராக நின்று ஆடும் இரு கட்சியாரும் தத்தம்ம் யெல்லை என்பர்.
ஆடிடம் : ஊர்ப் பொட்டலும் அகன்ற தெரு இதை ஆடுமிடமாம்.
ஆடு முறை: ஆடுவார் எல்லாரும் முதலாவது கட்டிச் சமத்தொகையான இருகட்சியாகப் பாகப் பிரி கொள்வர்.
முந்தி யாடவேண்டுமென்று துணியப்பட்ட யாருள் ஒருவன், திரியின் ஒரு முனையைத் தன் வலக் பெருவிரற்கும் அடுத்த விரற்கும் இடையில் இடுக்கி, கையையும் நிலத்தில் ஊன்றி, கரணம் போடுவதுபே காலைத்தூக்கித் திரியை எதிர்க்கட்சியாரின் மனைக்கு காலால் எறிவான். அதை எதிர்க்கட்சியார் அந்தரத்தில் பிடிப்பார்.
தவறாத ஒவ்வோர் எறிவும், காணம் விளைத்துக் குதி ரைக்குக் கட்டற்குரிய ஒவ்வொரு வினையாக முறையே தொடர்ந்து கூறப்படும். முதல் எறிவில், "உழுதாயிற்று" என்றும்; இரண்டாவதில், "விதைத்தாயிற்று" என்றும்; "முளைத்து விட்டது" என்றும் ; இங்ஙனமே முதாடர்ந்து மேற்பட்டவற்றில் முறையே, “ஓர் இலக்கு விட்டிருக்கிறது", "சர் இலக்கு விட்டிருக்கிறது", "மூவி லக்கு விட்டிருக்கிறது", "நாலிலக்கு விட்டிருக்கிறது", "ஐயிலக்கு விட்டிருக்கிறது", "ஆறிலக்கு விட்டிருக்கிறது" "ஏழிலக்கு விட்டிருக்கிறது", "எட்டிலக்கு விட்டிருக் கிறது", "ஒன்பதிலக்கு விட்டிருக்கிறது", "பத்திலக்கு விட்டிருக்கிறது", " கொடியோடி யிருக்கிறது", "பூப்பூத் திருக்கிறது", "பிஞ்சுவிட்டிருக்கிறது", "காய் காய்த்து விட்டது", "காணத்தை அறுத்தாயிற்று", "களத்தில் அடித்தாயிற்று", "வீட்டிற்குக் கொண்டுவந்தாயிற்று' "அடுப்பில் வேகிறது", "குதிரைக்கு வைத்திருக்கிறது" என்றும் கூறப்படும். அடுத்த எறிவில், எதிர்க்கட்சியார் குனிய, வென்ற கட்சியார் அவனவன் உத்திப்படி அவர் மேல் ஏறிக்கொள்வர். குறித்த தொலைவாவது, குறித்த தடவை ஓரிடத்தைச் சுற்றியாவது, தோற்ற கட்சியார் வென்ற கட்சியாரைச் சுமந்து செல்லவேண்டும். அதோடு ஓர் ஆட்டை முடியும்.
ஆட்டுத் தோற்றம்: இவ்விளையாட்டு ஒருகால் உழி ஞைப் போரினின்று தோன்றியிருக்கலாம்.
ஒரு நகர் அல்லது தலைநகர் நீண்டகாலமாக முற்றுகையிடப்பட்டிருக்கும்போது, நொச்சியார் (அதாவது அடை பட்டுள்ள நகரத்தார்) தமக்கும் தம் கால்நடைகட்கும்
ங. ஊதா மணி
பல பிள்ளைகளுள் மூவர் கைகோத்துச் சாட் பூட் திரி ' என்று சொல்லிக்கொண்டு மூன்றுதரம் அசைத்தி, திரி என்று சொன்னவுடன் கையையுருவிக் கை மேற்கை வைப்பர். மேற்கை, அகங்கை மேனோக்கி யிருந்தால் 'வெள்ளை' என்றும், புறங்கை மேனோக்கியிருக் கை தால் ' கருப்பு' என்றும், சொல்லப்படும். இவ்விரண்டில் எவ்வகையிலேனும், தனியாக வைத்த பிள்ளை விலகிவிட வேண்டும். பின்பு, ஏனையிருவரும் முதலிற் சேராத வேறொரு பிள்ளையுடன் கைகோத்து, முன்போன்றே ஒரு பிள்ளையைப் பிரிக்கவேண்டும். மூவரும் ஒரே வகை யாய்க் கைவைத்திருந்தால், மீண்டுங் கைகோக்கவேண் டும். இங்ஙனம் மும்மூவராய்க் கைகோத்து ஒவ்வொருத் தியைப் பிரித்தபின், இறுதியில் இருவர் இருப்பர். அவ் விருவருடன், முதன்முதற் பிரிந்த பிள்ளை 'ஒப்புக்கு ' என்று சொல்லிக் கைகோக்கும். முன்பு பிரியாத இரு வருள் யாரேனும் ஒருத்தி தனிவகையிற் கைவைப்பின், அவன் விலகிவிட, அடுத்தவள் அகப்பட்டுக்கொள்வாள்.அகப்பட்டுக் கொண்டவள் சற்றுத் தொலைவிற்போய் நிற்க, அவளுக்கு முன்னமே காட்டப்பட்ட ஒரு மணிமாலை அல்லது வேறோர் அணி, ணி ஒரு பிள்ளையிடம் ஒளித்து வைக்கப்படும். தொலைவில் நிற்பவள், "வரலாமா?" என்று சேட்டு, "வாலாம்" என்று சொன்னபின் வந்து, மணி மாலை வைத்திருக்கிறவள் என்று ஒரு பிள்ளையை ஊகிப் பாய்ச் சுட்டிக்காட்டும். இல்லாதவள் எழுந்து நிற்பாள். ஐயத்திற்கிடமாயிருப்பின், அவள் மடி முதலியவற்றைப் பிடித்துப் பார்க்கலாம். ஒருமுறை கண்டுபிடிக்கத் தவறி னவள் மறுமுறைபுங் கண்டுபிடித்தல் வேண்டும். மணி மாலை வைத்திருப்பவனைக் கண்டுபிடித்திவிடின், மற்றெல் லாப் பிள்ளைகளுஞ் சேர்ந்தி, "ஊதாமணியைக் கண்டு பிடித்தால் கைதட்டுவோம்" என்று பாடிக் கைதட்டி மகிழ்வர். இது தெருவிலும் ஊர்ப்பொட்டலிலும் விளை யாடப்பெறும்.
பூப்பறிக்க வருகிறோம்
கட்சிக்கும் பொதுவாக ஒரு பொதுவாகப் பதின்மருக்குக் குறையாத பல பிள்ளை ன் உத்திகட்டிச் சமமான இருகட்சியாகப் பிரிந்து, ஓர் அகன்ற தெருவிலேனும் ஊர்ப்பொட்டலிலேலும் இரு ஒரு நடுக்கோடு கீறி, அதற்கு இப் பாலும் அப்பாலும் நின்றுகொள்வர். பின்பு இருகட்சி பாரும் கட்சிவாரியாகக் கைகோத்து முன்பின்னாகப் பின் வருமாறு பாடிக்கொண்டு, மாறிமாறி நடுக்கோடு வரை சென்று மீள்வர்.
முதற் கட்சியார் : பூப்பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம், இந்தநாளிலே.
இரண்டாங் கட்சியார் : யாரனுப்பப் போகிறீர்? யாரனுப்பப் போகிறீர் ? இந்தநாளிலே.
கமலா அனுப்பப் போகிறோம், கமலா அனுப்பப் போகிறோம், இந்தநாளிலே.
இ: எந்தப்பூ வேண்டும்? எந்தப்பூ வேண்டும்? இந்தநாளிலே.
மு: மல்லிகைப்பூ வேண்டும், மல்லிகைப்பூ வேண்டும், இந்தகாளிலே.
இன்னபூ வேண்டுமென்று சொல்லி முதற்கட்சியார் பாடி முடிந்ததும், இருகட்சியினின்றும் ஒவ்வொரு பிள்ளை முன்சென்று நடுக்கோட்டையடுத்தவுடன், இருவரும் ஒருத்தியை யொருத்தி பிடித்திழுப்பர். கோட்டிற்கப்பால் பாடி, வேறிருவர் இழுப்பர். சேரும். பினபு முன்போற் பாடி, இங்கனம் இவ்விருவராய் எல்லாரும் இழுக்கப்பட்டபின், மிகுதியாகப் பிள்ளைகள் சேர்ந்திருக்கிற கட்சியார் வென்றவராவர்.
======================================================================================
சும்மா சுவாரஸ்யத்துக்கு ஒரு செய்தி. இப்படியும் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள!
======================================================================================
ஜானி. ரஜினி ஸ்ரீதேவி நடித்த மகேந்திரன் படம். 1980 ல் வந்தது. அதில் கீரவாணி ராக அடிப்படையில் அமைந்த பாடல் காற்றில் எந்தன் கீதம்...
கண்ணதாசன் பாடலை இளையராஜா இசையில் பாடியிருப்பார் ஜானகி அம்மா.
நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் இயக்கிக் கொண்டிருக்கும்போதே ரஜினியுடன் ஒரு படம் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தில் இதையும் எடுத்துக் கொண்டிருந்தாராம் மகேந்திரன். தயாரிப்பாளர் கடைசி கட்டத்தில் கொஞ்சம் கைவிரிக்க, இருக்கிற ஸ்டாக் ஷாட்களை வைத்து மேனேஜ் செய்து மகேந்திரன் எடுத்த விதமும் நன்றாய்த்தானிருந்ததாம். முதன்முறையாக ஓவியர் ஜெயராஜ் படத்துக்கான உடை டிசைனை தெரிவு செய்தாராம். முதலில் படம் வரைந்துகொண்டு பின்னர் உடைகள் தெரிவு செய்தாராம்.
ஜானகி அம்மா.. எங்கள் நினைவில், எங்கள் வாழ்வில் என்றும் நீங்கள் இசையாய் இணைந்திருப்பீர்கள்.
=====================================================================================
இந்தப் பெண்ணை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். மறக்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர். தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜீவனும் அறிந்த, கேட்ட குரல்.
==========================================================================================
சென்னையில், தமிழ்நாட்டில் இப்படி ஒரு படத்துக்கு விளம்பரம்!
அடுத்த இரண்டு ஹாஸ்யத்தொகுப்பும் ஏற்கனவே பார்த்திருந்தால் 'கம்'மென்று இருந்து விடுங்கள்!!!
படிக்க சிரமப்படாதீர்கள். தொடர்ச்சி கிடையாது!!
கி ராஜேந்திரன்....

/'உள்ளத்தை அள்ளித் தா' ரம்பா மாதிரி என் கவுன் பறந்தது. ரம்பாவைப் போலவே கவுனை இரண்டு கைகளாலும் அழுத்திப் பிடித்துக் கொண்டு அலறினேன். /
பதிலளிநீக்கு"அழகிய லைலா ...ரம்பா மாதிரி" என்ற தலைப்பைப் பார்த்ததும் இன்றைக்கு வியாழன்தானே என்று ஒரு டவுட். ஸ்ரீராம் ஆஸ்பத்திரி அனுபவங்களை எழுதி வந்தாரே....சொல்லாமலேயே போன வாரம் முடித்து விட்டாரா? இல்லை வியாழன் ஃபார்மாட் மாறிவிட்டதா என்று சந்தேகம். முதல் வரியைப் படித்தவுடன்தான் அப்படி ஏதும் விபரீதம் நடந்து விட வில்லையனத் தெரிந்தது. அந்த சந்தேகம் போனதும் வேறு சந்தேகம்.....ஆஸ்பத்திரி நர்ஸ்கள் யூனிஃபார்ம் கௌரவமாகத்தானே இருக்கும்...இங்கே எப்படி ரம்பாவை ஸ்ரீராம் நுழைத்தார் என்று. பிறகுதான் புரிந்தது...ரம்பா ரேஞ்குக்குத் தன்னையே ஸ்ரீராம் உயர்த்திக்கொண்டாரென்று! Very funny ஸ்ரீராம்...ரசித்தேன்.
வாங்க சூர்யா! நன்றி. ஆனால் நிஜமாகவே அது நிகழ்ந்தது! வீல் சேர் தள்ளிய பெண்மணிக்கு ஒரே சிரிப்பு தான். அவரது சிரிப்புக்கும் ஆம்புலன்ஸ் காரர் சேவைக்கும் கட்டணம் செலுத்தி பிறகு அறைக்கு வந்தேன்.
நீக்குநம்ம ரங்க்ஸைச் சேர்த்திருந்த மருத்துவமனையில் இந்தப் பிரச்னை இல்லை. எல்லாம் மருத்துவமனைக்குள்ளேயே இருந்தன. ரத்தம் சேகரிக்கக் கூட அறைக்கே வந்துடுவாங்க. ஈசிஜி, எகோ எல்லாம் அறையிலேயே. ஸ்கான், எக்ஸ்ரே, எம் ஆர் ஐ ஸ்கான் ஆகியவற்றுக்குப் போய்த் தான் ஆகணும்.
நீக்குநல்ல ரூல்ஸ் ராமானுஜம் ஆஸ்பத்திரியில் சேர்ந்தீரகள்..!
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... இப்போ கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளுமே இப்படித்தான் என்று நினைக்கிறேன்.
நீக்குஇல்லை. இன்னும் சில மருத்துவமனைகள் இப்படி எல்லாம் மாறலை. அதோடு பணம் கறப்பதும் கேஎம்சி, அப்போலோ போன்றவை போல மற்றவை இல்லை. கேம்சியில் தனி அறையே கிடையாது என்றால் அப்போலோவில் அறை கிடைப்பதே கஷ்டம். அறை கிடைக்கும் வரை நோயாளிகள் காத்திருக்கும் அறையில் ஒரு கட்டில், படுக்கையோடு கிடைக்கும். அதில் காத்திருக்கணும் அறை கிடைக்கும் வரை. மருத்துவர்கள் அங்கே வருவாங்க போல. அது பத்தித் தெரியலை. கூடத் துணைக்கு இருப்பவங்க வரவேற்பறை அல்லது வேறே எங்கேயானும் நாற்காலிகள் கிடைக்குதானு பார்த்து உட்கார்ந்து கொண்டு காத்திருக்கணும். இது நண்பர் ஒருத்தர் அவர் அப்பாவைச் சேர்த்திருந்தப்போச் சொன்னது.
நீக்குவிசாகா ஹரி சொல்வதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. முதலில் அம்மாக்கள் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டுமே?
பதிலளிநீக்குஅதைச் சொல்லுங்க.. இப்போது தலைமுறைகள் தாண்டி வந்து விட்டோம் இல்லையா.. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பெரிய நகரங்கள் தவிர சிறிய ஊர்களில் கிராமங்களில் இன்னமும் இவை பின்பற்றப்படும் என்றுதான் நினைக்கிறேன்.
நீக்குஜெல்லி ஃபிஷ், லயன் ஃபிஷ் இரண்டும் ஒன்றா? ஜெல்லி ஃபிஷ்ஷில் முள் இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஓமானின் ஒரு கடற்கரையில் ஜெல்லி ஃபிஷ்கள் நிறைய இருந்தது.
பதிலளிநீக்குயாருக்குத் தெரியும்?! இன்னொன்று ஸ்டார் ஃபிஷ் என்று ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன். அதுவும் இது போல தான் என்று படித்த ஞாபகம். அதே போல ஆக்டோபஸையும் தொட முடியாது என்று படித்திருக்கிறேனோ...
நீக்குஜானி மிகவும் வித்தியாசமான படம். ஸ்ரீதேவி ஒரு பாடகியாக வித்தியாசமாக, நன்றாக நடித்திருப்பார், கம்பீரமாக, அழகாக இருப்பார். காற்றில் எந்தன் கீதம்.. நல்ல பாடல்.
பதிலளிநீக்குஆமாம். வேற கன்னா பின்னா டிரஸ் எதுவும் இல்லாமல், படம் முழுக்க புடவையில் கம்பீரமாக, அழகாக இருப்பார் ஸ்ரீதேவி. ஆனால் நான் படம் பார்க்கவில்லை!!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு1967 லேயே வாஷிங்டனில் திருமணம் நாடகமாக நடிக்கப்பட்டு விட்டதா?. மற்ற பொக்கிஷ பகுதிகளை இன்னும் படிக்கவில்லை, படிப்பேனா என்பதும் சந்தேகமே. கி.ராஜேந்திரனின் கதையை பகிர்ந்ததற்கு ஏதாவது விசேஷ காரணம் உண்டா? அவர் கல்கியில் 'சாருலதா' என்ரு ஒரு கதை எழுதியிருந்தார். எப்போதோ படித்தது. கிடைத்தால் பகிருங்கள்.
பதிலளிநீக்குபழைய விளையாட்டுகளை பகிர்ந்திருக்கும் விதம் சிறப்பு.
பதிலளிநீக்குகவிதைகள் ரசனை.
ஆஸ்பத்திரி அனுபவங்களை நகைச்சுவையாக சொல்லி வருகிறீர்கள்.
பதிலளிநீக்கு"//சில பேஷண்ட் அப்படியே எஸ்கேப் ஆயிடுவாங்க.. இன்னாரை கொண்டு போனோம், அவரை திரும்பி கொண்டு வந்துட்டோம், இன்ன டைம் என்று தெரிய.."
"ஓ.. அப்படியே எஸ்கேப் ஆவாங்களா.. அதுக்குதான் கவுன் போட்டு கூட்டிகிட்டு வரீங்களா?!"
அந்தப் பெண் களுக்கென்று சிரித்து ஐந்து விரல்களால் கண்கள் மூக்கு வாயை பொத்தி சிரிப்பை சிறிது நேரம் கண்டின்யு செய்தார்.//
இப்படி பேசினால் சிரிக்காமல் எப்படி இருப்பார்?மாரியம்மாளை சிரிக்க வைத்து விட்டீர்கள். அவரின் வேலை பளூ குறைந்து இருக்கும்.
தமிழ் நாட்டில் எல்லோரும் அறிந்த குரலுக்கு சொந்தக்காரராமே? யாருப்பா அது? ஒரு வேளை நான் கர்நாடகா என்பதால் தெரியவில்லையோ? ஹிஹி!
பதிலளிநீக்குஉங்கள் கேள்வி கவிதையில் ஏன் பதிலை கேட்கவில்லை பதிலை கேட்க நேரம் இல்லையோ அல்லது பொறுமை இல்லையோ , பதிலை தெரிந்து வைத்து கொண்டே கேள்வி கேட்கப்படுகிறதோ!
பதிலளிநீக்குவிசாகா ஹரி பேச பேச தம்புரா போடுகிறவர் ரசித்து சிரிக்கிறார்.
பதிலளிநீக்குவிளையாட்டுகளை சொல்லி தரும் புத்தகம் அருமை.
பதிலளிநீக்குபாடல் பகிர்வு இரண்டும் அருமை.
காற்றில் எந்தன் கீதாம் பாடல் மிகவும் பிடிக்கும். ஜானகி அவர்கள் அவர் பாடிய பாடல்களில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
கேட்ட குரல். அந்த பெண்ணை பார்த்து விட்டேன்.
பதிலளிநீக்குபொக்கிஷபகிர்வுகள் எல்லாம் அருமை.
கடைத்தெருவில் உங்களுக்கு ஒரு குடை வாங்கி கொள்ளுங்கள் சிரிப்பை ரசித்தேன்.
பழந்தமிழர் விளையாட்டுகள் பகுதி... தலை சுற்ற வைக்கிறது. இதை எதற்கு இவ்வளவு நீளமாகப் பதிவு செய்தீர்கள்?
பதிலளிநீக்குஆஸ்பத்திர கவுன் அனுபவங்கள்.... படிக்க ரசனையாகிருந்தது.... மிகப் பெரிய மருத்துவமனை என்று போட்டுக்கொண்டால் இத்தனை அனர்த்தங்கள் இருக்குமா?
பதிலளிநீக்குசில மாதங்களுக்கு முன் முழு உடல் செக்கப்புக்கு பெரிய மலுத்துவமனைக்குப் போயிருந்தபோது, சிலருக்கு கவுன் போட்டு, மேலே கம்பளி மாதிரி, அல்லது சால்வை மாதிரி ஏன் துணி போட்டிருக்காங்க என்று யோசித்தேன்.
மிகுதியை மடிக்கணிணியில் பிறகு பார்க்கிறேன். அயர்ச்சியாக இருக்கு
பதிலளிநீக்குஅழகிய லைலா ரம்பா மாதிரி - ஹாஹா..... அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தேன். அவஸ்தை தான் - ரூல்ஸ்னா ரூல்ஸ் தான். கேள்வி கேட்கக் கூடாது அப்படின்னு விசாகா ஹரி சொன்ன மாதிரி ஒரு அடி வைக்காம விட்டாங்களே. அது வரைக்கும் நிம்மதி.
பதிலளிநீக்குதமிழ் விளையாட்டுகள் தலை சுற்ற வைக்கின்றன..
பாடல்கள் இரண்டுமே இனிமை. ஜானி பாடல் எப்போதும் பிடித்தது.
முருகா சரணம்
பதிலளிநீக்குநலமே வாழ்க
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
உங்களின் ஆஸ்பத்திரி அனுபவங்கள நகைச்சுவை குன்றாமல், சுவையாக சொல்லி வருகிறீர்கள்.பல இடங்களில் என்னையும் உங்கள் எழுத்தால், வாய் விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள். அந்த ஆஸ்பத்திரி "ரூல்ஸின் " மகிமையை என்னவென்று சொல்வது.? . ரம்பா பாடலை மனத்துள் பாடியவாறு பதிவை படித்தேன். அவர் கூட அந்த படத்தில் நடித்திருக்கும் போது இவ்வளவு அவஸ்தைகளை பட்டிருக்க மாட்டார். ஏன்தான் இப்படி உங்களை படுத்தி எடுத்தார்களோ.?
நான் சென்ற முறை பதிவில் சொன்ன மாதிரி, நான் அட்மிட் ஆன (மதுரையில்) ஆஸ்பத்திரியில், எதிர் பக்கமிருக்கும் ஒரு பெரிய கட்டிடத்திற்குதான் எனக்கும் ஸ்கேன் செய்ய அழைத்துப் போனார்கள். ஆனால், வீல் சேரில்தான். நல்லவேளை நீங்கள் சேர்ந்திருந்த ஆஸ்பத்திரி மாதிரி, "கவுன் ரூல்ஸ்" அந்த ஆஸ்பத்தியில் இல்லாததால் நான் தப்பித்தேன். ஹா ஹா ஹா. . பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சில மருத்துவமனைகளில் எக்ஸ்ரே எடுக்கும் முன்னர் அல்லது ஸ்கான் செய்யும் முன்னரோ அந்த அறைக்குப் போன பின்னர் அவங்க கொடுக்கும் உடையைப் போட்டுக்கலாம். நான் போன இடத்தில் எல்லாம் இப்படித் தான். அதுவும் தோஹாவில் புத்தப்புது உடை ஒவ்வொருத்தருக்கும். உடுத்திக் கொண்டு பரிசோதனை முடிஞ்ச உடனே அதைக் குப்பைக்கூடையில் போட்டு விட வேண்டும். கூடை கூடையாகத் தூக்கிக் கொண்டு போவார்கள்.
நீக்குபொதுவே iஇன் பேஷண்ட் எல்லோருக்கும் ஒரு கைதி உடை அணிவிப்பார்கள். அதாவது இனி நீ எங்கள் கைதி. நாங்கள் சொல்லும்படியெல்லாம் நடக்க வேண்டும். என்று அர்த்தம். எனக்கு 4 முழ வேஷ்டி ஒன்று, (ஆசுபத்திரி பெயர் அச்சடித்தது) மேல் சட்டை ஒரு பட்டன், கை இல்லா ஜாக்கெட் சட்டை தந்தார்கள். என்ன மருந்துகள், டெஸ்ட் ரிஸல்ட்கள் என்று எல்லா விவரங்களும் நேரடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிடுவார்கள். ஆகவே நம்முடைய முழு மெடிக்கல் சரித்திரம் அவர்களிடம் எப்போதும் உண்டு.
பதிலளிநீக்குகவிதைகள் கவிதையா என்று இருக்கின்றன.
விளையாட்டு கட்டுரையில் ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள். ஆராய்ச்சி போதாது. AI இதை விட நல்ல கட்டுரை கொடுக்கும்.
Jayakumar
வேட்டியைவிட, மூட்டின வேஷ்டி, அதாவது இரண்டு முடிவையும் கைலி மாதிரி தைத்தது பெட்டரோ?
நீக்குஉள்ளிருக்கும் நோயாளிகளுக்கு மருத்துவமனை உடை கட்டாயம். ஆனால் தினமும் மாற்றிவிடுவார்கள். ஒரே உடை இருக்காது.
நீக்குஉடல்நிலை முடியாதவங்களுக்கு எக்ரே, மற்ற ஊசிகள், மானிடரிங் கருவிகள் பொருத்த... என ஒவ்வொரு தடவையும் உடை கழற்றி மாட்டுவது கஷ்டம் என்பதால் எல்லோருக்கும் ஒரே சட்டம், தலைவலின்னு வந்தாலும் கவுன் மாட்டிக்கணும்னு ஆக்கிட்டாங்களோ?
பதிலளிநீக்குநீங்க சொல்றதைப் பார்த்தால், இந்த சீசன்ல மீன் பிடிக்கத் தடை என்று இருப்பதுபோல, ஆடி மாத்த்தில் ஆஸ்பத்ரி பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூடாதோ?
அந்தப் புண்ணியவதி யாரோ? எவரோ? எனக்குத் தெரியலை. புதுசு. புத்தப்புதுசு.
பதிலளிநீக்குஜானி படத்தின் இந்தப்பாடலைப் பல முறை கேட்டாச்சு. படம் என்னமோ பார்த்தது இல்லை.
உங்கள் மருத்துவமனை அனுபவங்களைச் சுவாரசியமாகக் கொடுத்திருக்கீங்க. அப்படியே அந்த ரிப்போர்ட்டும் என்னனு சொல்லக் கூடாதோ? இதைப் பார்த்துப் புரிஞ்சுக்கற அளவுக்கெல்லாம் படிக்கலையே? :)
மோசமான மீன்? இப்போக் கொஞ்ச நாட்களாகவே பதிவுகளில் மீன், மட்டன் வாடை! :(
விளையாட்டுக்கள் பற்றிய கட்டுரை அசத்தல், இதில் சாட், பூட், திரியும், பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டும் சிரஞ்சீவினு நினைக்கிறேன். இப்போவும் விளையாடப்படுகிறது.
தெற்கத்திக்கள்ளனைப் பார்க்கலை. பாடலும் கேட்டதில்லை. இன்னிக்குத் தான் முதல் முதல்.
கிரிக்கெட் கட்டுரை இஃகி,இஃகி,இஃகி, ஆனால் முன்னரே படிச்சிருக்கேனே. :)
விசாகா ஹரி, வர,வர ரொம்பவே போர் அடிக்கிறார்.
பிள்ளைகளின் கைக்கு மனைவியின் ஆதிக்கம் போவதாகச் சொன்னது மத்தவங்களுக்குச் சரியா இருக்கும். ஆனால் நான் ஓர் அடங்காப்பிடாரியாச்சே. எனக்குப் பொருந்தாது. :(
வங்காளப் படம் போலிருக்கு. அப்போல்லாம் அதிகம் வங்காளப்படங்கள்/கதைகள் தானே.
பதிலளிநீக்குஇவை எல்லாம் ஹாஸ்யமா? சகிக்கலை. அதிலும் அந்தக் கணக்குப் படமும். போஸ்டரைப் பிடிச்சுண்டு நிற்பவரும் எதுக்கு ஹாஸ்யம்னு சொல்றாங்கனு புரியலை.
அதே போல் கீழே பைனாப்பிள் புட்டிங்க் கேட்பவருக்கு எதிரே இருப்பவர் என்ன சொல்றாரோ, அவருக்குத் தான் தெரியும், புரியும். கண்களை ஒரு வழி பண்ணும் துணுக்குகள். படிக்காமலே இருந்திருக்கலாமோ>? :( தலை தீபாவளிக்கட்டுரையையும், வீண் புரளி கட்டுரையையும் படிக்கவில்லை. டிக்கவில்லை, க்கவில்லை, கவில்லை, வில்லை, ல்லை, லை, ஐ ஐ ஐ! (க்ர்ர்ர்ர்)
இந்த வாஷிங்டனில் திருமணம் நாடகத்துக்கு நிஜமான மாப்பிள்ளை அழைப்பு நடந்ததாகச் சித்தப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். அப்போ நான் சின்னமனூரில் இருந்தேன்னு நினைக்கிறேன். 68க்குப் பின்னர் அடிக்கடி சென்னை, தி.நகர் சித்தப்பா வீட்டு வாசம் 70 வரை.
கி.ராஜேந்திரன் எழுதின இந்த நாவல் பெயர் என்ன? நான் முன்னால் அதாவது நான் சின்னவளா இருந்தப்போ ராஜேந்திரனின் நாவல் எனப் படிச்சது "நெஞ்சில் நிறைந்தவள்" என்னும் நாவல். சரியான சோகமான நாவல். முடிவில் கதாநாயகி செத்துப் போவாள். அதனாலேயே ராஜேந்திரனைப் பிடிக்காமல் சில வருடங்கள் படிக்காமல் இருந்திருக்கேன். பின்னர் ஒரு கல்கி ஏதோ மலரில் வந்த அரத்தநாரி என்னும் குறுநாவல் பிடிச்சது. பின்னர் வந்த "அபிமானவல்லி" சரித்திர்த் தொடர் படிச்சேன். இதிலும் முடிவு சோகம்னாலும் இப்போ வயசு கொஞ்சம் விபரம் தெரிஞ்ச ரேஞ்சுக்கு வந்துடுத்து. :)))))
பதிலளிநீக்கு