காஞ்சிபுரம் இட்லி அடை!
ஹா............. ஹா................. ஹா................. என்ன பெயர் வைக்கிறதுனு யோசிச்சுட்டு இந்தப் பெயரை வைச்சுட்டேன். காஞ்சிபுரம் இட்லிமாவு மிஞ்சினதுனு சொன்னேன் இல்லையா? அதோட கூடக் கொஞ்சம் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஊற வைத்துக் கொஞ்சமாய் மி.வத்தல், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்து இந்த இட்லி மாவோடு சேர்த்துக் கொண்டு அடையாக வார்த்தேன். ஒருநாள் பாடு தீர்ந்தது. :)))) கீழே படங்கள் பார்க்கலாம்.

===========================================================================================
ஒரு பூனையின் புத்திமதி!
"ஐயோ உலகம் தினம் திமை அவ்வளவு சின்னதாகி கொண்டே வருகிறது! முதலில் ரொம்ப பெரிதாக நான் பயப்படும்படியாக அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே இருந்தேன். ஓடிய வண்ணம் இருந்தேன். இரண்டு பக்கத்து சுவர்களும் தூரத்திலயேதான் தெரிந்தன. ஆனால் அந்தச் சுவர்கள் எவ்வளவு வேகமாக நெருங்கி விட்டன? கடைசியாக அறைக்குள்ளேயே வந்து விட்டேனே..
அதோதெரிகிறதே பொறி, அதில் அல்லவா நான் போய் விழவேண்டும்?
நீ இந்தப் பக்கமாக திரும்பி ஓடினால் பொறியில் விழவேண்டியிருக்காது" என்று சொல்லிக்கொண்டே அதைப் பிடித்து விழுங்கி விட்டது ஒரு பூனை. - பிரான்ஸ் காஃப்கா - தமிழில் புதுமைப்பித்தன்.
======================================================================================
கோபுலுவின் படத்திலிருந்து இது யார், என்ன கதை என்று சொல்ல முடிகிறதா?
துணைக்கு இந்த இருவரின் படங்களையும் கொடுத்தால் யூகிக்க முடிகிறதா?
என்னதான் சொல்லுங்கள்.. ஒரு படம்தான் என்றிருந்தாலும், சில சமயம் ஒன்றுக்குமேல் இரண்டு படங்கள் இருந்தாலும் படம் பார்த்துக் கொண்டே கதை படிக்கும் சுவாரஸ்யம் தனிதான், இல்லை?






காலை வணக்கம்.
பதிலளிநீக்குசில நேரங்களில் சில மனிதர்கள் கங்காவின் ஓவியத் தோற்றம் மா
பதிலளிநீக்குகங்கை எங்கே போகிறாள் கதையில் மாறி விடக்கூடாதல்லவா?
அதற்காகவே கோபுலு குமுதத்தில் வரைந்திருக்கிறார்.
ஆக, குமுதத்திற்கு ஜெயகாந்தனும் புதுசு கோபுலுவும் புதுசு என்று
ஆகிவிட்ட நேர்த்தி.
கோபுலுவின் முதல் படம். Repetition.
பதிலளிநீக்குஓகோ.. அடுத்த படக்கண்டுபிடிப்புக்காக இந்தப் படம் இரண்டாம் தடவை வந்திருக்கோ?
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகாஞ்சிபுரம் இடலி கீதா சாம்பசிவம் அவர்கள்பதிவு தவறுதலாக இடம் பெற்று விட்டதோ?
பதிலளிநீக்குஅவர்களின் வேறு சமையல் குறிப்பு இடம் பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.