பானுமதி வெங்கடேஸ்வரன்
அந்த மூன்று பெண்களும் வேலையை முடித்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள்.
மல்லிகாவும், எஸ்தரும் முன்னால் நடக்க, பின்னால் வந்த மரியம், “என்னடி பேசிட்டே போறீங்க? சுத்தி முத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்க மாட்டீங்களா?” என்றாள்.
“நாமதான் நடக்கறோம், வேற என்ன நடக்குதாம்?” எஸ்தர் நக்கலாக கேட்டாள்.
இதுதான் நீ கவனிக்கற லட்சணம்! மூணு நாளா நானும் பாக்கறேன், அங்கன ஒரு காரு தெனமும் வந்து நிக்குது..”
“ஏன்கா பீச்சுனா நூறு காரு வரும், போகும், அதுல என்ன இருக்கு?”
“பீச்சுக்கு வரும் காருக்கெல்லாம் நம்ம குப்பத்தாண்ட என்ன வேலை? இதுல என்னமோ இருக்கு”
“உன்க்கு எல்லாமே சந்தேகம்” மல்லிகா சிரித்தாள். ஆனால் அன்று இரவு தன் கணவனிடம் சொன்னாள்.
மறுநாள் அந்த கார் வந்து நின்றதும், மீனவ குப்பத்து ஆண்கள் ஆறு பேர்கள் அந்த வண்டியை சூழ்ந்து கொண்டனர். வண்டி ஓட்டி வெலவெலத்து இறங்கினார். அவர் பயத்தோடு ஏதோ சொல்ல, பின் சீட்டிலிருந்த பிரபல சினிமா நடிகை விினோதா இறங்க, எல்லோரும் திகைத்து, பிரமித்தார்கள்.
“மேடம், நீங்களா..?”
“ஆமாம், என்னோட அடுத்த படத்தில் மீனவ குப்ப பெண்ணாக நடிக்கிறேன்,
அதுக்காக உங்க பெண்களை அப்சர்வ் பண்ணத்தான் தினமும் இங்க வரேன்”
“அதுக்கென்ன மேடம், தாராளமா வாங்க, உங்களுக்கு இல்லாததா? ஏன் ஓரமா உக்காந்து வேடிக்க பாக்கறீங்க? வாங்க எங்க வீட்டுக்கு” என்று வினோதாவை அழைத்துச் சென்றார்கள்.
========================================================================================
*அந்நிய நாட்டு அரசன் பீ ர்பாலை விருந்துக்கு அழைத்தான். தன் அரண்மனையைச் சுற்றிக் காட்டினான். அவனுக்கு அக்பரைக் கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அதனால் கழிப்பிடத்தில் அக்பரின் படத்தை மாட்டி வைத்திருந்தான்.
பீர்பால் அமைதியாகச் சொன்னார் "சரியான இடத்தில்தான் அக்பரின் படத்தை மாட்டி இருககிறீர் உமக்கு மலச்சிக்கல். அக்பரின் படத்தைப் பாரத்தாலே உமக்கு பயம் ஏற்பட்டு வயிற்றைக் கலக்கும் மலம் கழிப்பது சுலபமாக இருக்கும். ஆகவே எமது மன்னர் படம் உமது அரண்மனையின் கழிப்பிடத்தில் இருப்பதே முறை".

காலை வணக்கம்.
பதிலளிநீக்கு"....அதுக்காக உங்க பெண்களை அப்சர்வ். "
பதிலளிநீக்குஹி..ஹி..
தூரத்திலிருந்து அப்சர்வ் செய்து நடிக்கப்போகிறாரா? பரவாயில்லையே
பதிலளிநீக்குநடிகை வினோதாவை பேய்க்கதையில் நடிக்கக் கூப்பிட்டால் என்ன செய்வார்?
வீட்லே குந்திகினு 'அப்சர்வ்' பண்ணறதை விட வெளியுலகில் கைகளை வீசி, கலந்துரையாடி சிரித்தும், சிணுங்கியும் அவர்கள் இயல்பா பழகிக் களிக்கிற பார்த்து அதையே தன் நடிப்பில் வினோதா பிரதிபலிக்கிறது
நீக்குஉருப்படியான கற்றலாய் இருக்கும் இல்லையா?
மேலே சொன்ன இந்தக் காரணத்தைச் சொல்லி வினோதா அவர்கள் சொல்வதை மறுத்திருந்தால் இன்னும் சிறப்பாகக் களை கட்டியிருக்குமில்லையா, நெல்லை?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வாண்ணா
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துரை செல்வராஜ் சகோதரரே. வாழ்க வளமுடன். நல்ல ஆரோக்கியத்தை உங்களுக்கு இறைவன் அருள வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நீக்குதம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் சிறக்கட்டும்.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்... இனிமேல் கதை எழுத ஆரம்பியுங்கள்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசின்ன கதை நன்றாக உள்ளது. கவனித்து அதன்படி நடிக்க வேண்டுமென்ற அந்த நடிகையின் திறமையை பாராட்டுவோம்.
பீர்பாலின் புத்திசாலித்தனமான பேச்சு அருமை.
கவிதைகளை ரசித்தேன். இடையில் வரும் அந்த நதியின் மனப்பக்குவம் நமக்கும் வந்தால் முதல், கடைசி கவிதையின் வரிகளை துச்சமாக்கி நகர்ந்து விடலாம். மூன்றுமே அருமை. வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்
பதிலளிநீக்குநலமே வாழ்க..
பதிலளிநீக்குசின்னஞ்சிறு கதை அழகு...
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குஇந்தக் கவிதையையே திருப்பிப் போட்டால்?..
பதிலளிநீக்குபின்னால்
இருப்பதைப் போல
நேரில் பேசுவதில்லை
மனிதர்கள்
எல்லா நாளும்
நீக்குஎல்லா நேரமும்
ஒரேமாதிரி பேசுவதில்லை
மனிதர்கள்
இப்படி கூட எழுதலாம் இல்லை?!
அப்போ இடக்கரடக்கலுக்கு அர்த்தமே இருக்காதே
நீக்குபிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அன்பின் கமலா ஹரிஹரன் அவர்களது பிரார்த்தனைக்கு நன்றி
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அன்பின் அண்ணா ஜீவி அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்கு(தொடர்ச்சி)
பதிலளிநீக்குவாழ்க்கையில்
இருப்பது போலப்
புத்தகத்தில் இல்லை.
நானும் ஒன்று இந்த பாணியில்..
நீக்குஅறிவுரை சொல்பவர்கள்
அப்படி
நடப்பதில்லை
அறிவுரைகள்
நீக்குசொல்வதற்குதான்
சுலபம்.
அதை
கடைப்பிடிப்பது
கடினம்.
கடினத்தை
சுலபம்
வெற்றி கொள்வது
அதிசயமாகிப் போகிறது.
//நதி அறியுமோ
பதிலளிநீக்குநதி மூலம்?//
ஆனால்
சால்மன் மீன் அறியும்.
//மலர் உதிர்த்து சருகாகும்
மறுபடியும் பூவாகும்.//
மலர் சருகாய் உதிரும்.
காய் ஒன்று அங்கு தோன்றும்.
வாழ்க்கை வாழ்வது
நம் பிள்ளைகளுக்கே.
/
Jayakumar
Positive?
நீக்கு//தேரில் பேசியதைப் போல் // நேராக்கவும்.
பதிலளிநீக்குDone!
நீக்கு