1.9.26

ப பொ சிறுகதை --- தியானம் --- பானுமதி வெங்கடேஸ்வரன்

 

தியானம்

பானுமதி வெங்கடேஸ்வரன் 



ரமேஷ் சந்தோஷம், அதிர்ச்சி, பிரமிப்பு என்று கலவையான உணர்ச்சிக் குவியலில் தத்தளித்தான்.

நண்பன் வீட்டிலிருந்து திரும்பும் பொழுது் அவன் வீட்டிற்கு எதிரே 
இருக்கும் கோவிலில் எக்கச்சக்க கும்பலைப் பார்த்து. “என்ன விசேஷம்?” என்று நண்பனைக் கேட்டான்.

"ஸங்கடஹர சதுர்த்தியாக இருக்கலாம்”

"வரயா? நம்பளும் தரிசனம் செய்யலாம்?”  இவன் கேட்க, “ இல்லப்பா, இருக்கற கும்பலைப் பார்த்தா இன்னும் ஒன் அவர் ஆகும்னு தோணறது.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. உனக்கு செண்ட் ஆஃப் குடுக்கத்தான் நான் வந்தேன்”

"ஓகே! கேரி ஆன், நான் கோவிலுக்கு போயிட்டு போறேன்”

நண்பனோடு கை குலுக்கி கோவிலை நோக்கி நடந்தான்.

அங்கு அப்போதுதான் பூஜை முடிந்து, பக்தர்கள் வரிசையாக நிற்கவைக்கப் பட்டார்கள். இவனும் அதில் சேர்ந்து கொண்டான். இரண்டு வரிசைகள். ஒன்று உள்ளே செல்ல, இன்னொன்று வெளியே வருவதற்கு. வெளியே வந்தவர்களுக்கு பிரசாதம் வழங்க ஏதுவாக ஒரு பெஞ்சில் பொங்கல், சுண்டல், வைக்கப்பட்டிருந்தன. ஒருவர் தொன்னைகளைத் தர, இன்னொருவர் பிரசாதங்களை தந்து கொண்டிருந்தார். அவருக்கு அருகில் இன்னொருவர் பழங்களை நறுக்கிக் கொண்டிருந்தார்.


“ வாங்கிட்டு நகருங்க, நிக்காதீங்க, பொங்கல் சூடா இருக்குமா,  குழந்தைக்கும் சேர்த்து நீங்களே வாங்குங்க” பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தவர் அதட்டினார்.

கோவில் வாசலை நெருங்கும் போது, கர்பகிரஹத்தை ஒட்டியிருக்கும் மேடையில் அமர்ந்திருந்த அர்ச்சகர் இவனை கை நீட்டி அழைத்தார். இவனுக்கு எதுவும் புரியவில்லை, தன்னைத்தான் அழைக்கிறாரா? வேறு யாரையாவது அழைக்கிறாரா? புரியாமல் பின்னால் திரும்பி பார்த்தான்.

"உங்களத்தான்..” என்று மீண்டும் இவனை அழைக்க, ஒன்றும் புரியாமல் அவரை நோக்கி நடந்தான்.

அவன் கையில் ஒரு வாழைப்பழம்,கொஞ்சம் பூ இவைகளைத் தந்தவர், இவன் தலையில் கை வைத்து, “விநாயகரை தியானம் செய்கிறீர்களா?” என்று கேட்டு விட்டு, "தொடர்ந்து செய்யுங்கள்,  நல்லது நடக்கும்” என்று கூறி பிரதட்சிணம் செய்ய உந்தி தள்ளினார்.

ரமேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. உடல் சிலிர்த்தது, மெய் மறந்து சன்னதியை சுற்றி வந்தவனுக்கு காணிக்கை ஏதாவது தட்டில் போட 
வேண்டும் என்பது கூட மறந்து போயிற்று.

நமஸ்கரித்து வெளியே வந்தவன் ஆட்டோ பிடித்து தன் வீட்டை நோக்கி பயணித்த பொழுது யோசித்து யோசித்து குழம்பினான்.

“விநாயகர் தியானமா? நானா?” பெரிதாக பூஜை என்று கூட செய்வது  கிடையாது. குளித்து விட்டு, சாமிக்கு ஒரு கும்பிடு போட்டு, நமஸ்காரம் செய்வதோடு சரி. அவர் என்னை யாரோ என்று தவறாக புரிந்து கொண்டு விட்டாரோ?” என்ற ரீதியில் சிந்தனை ஓடியது.

ஏதோ மெஸேஜ் வந்ததற்கான அறிவிப்பு வர, செல்ஃபோனைத் திறந்தான். படத்திற்கு பொருத்தமான கதை எழுத கேட்டிருந்த குழுவில் புது கதை ஒன்று வெளியாகியிருந்தது.

அதைப்பார்த்ததும் சட்டென்று புரிந்தது. பிள்ளையார் படம் ஒன்றிற்கு பொருத்தமான கதை எழுத வெண்டும் என்று ஆசைப்பட்டு, அந்த விநாயகரைப் பற்றியே ஒரு வாரமாக இடை விடாமல் யோசித்துக் கொண்டிருந்தான். எந்த வேண்டுதலும் இல்லாமல் விநாயகரையே நினைத்தது தியானத்திற்கு ஈடுதானோ?

விநாயகா எத்தனை சுலபமாக என்னை ஏற்றுக் கொண்டு விட்டாய்?

அவனுக்கு கண்கள் பனித்தன.

=============================================================================================

தினமணியில் கனவுக்கன்னிகள் என்கிற தலைப்பில் சரோஜா தேவி பற்றி வெளியான கட்டுரை.


வீட்டையொட்டி வாசலில் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் ருத்ரம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி!

‘ஜெமினி’ எஸ்.எஸ். வாசன்!

சரோவின் தாயாரால் நிஜமாகவே நம்ப முடியவில்லை.

கால விரயம் செய்யாமல் நேரடியாகத் தன் வருகையின் நோக்கத்தை வெளியிட்டார் வாசன்.

அவரது அடுத்த ப்ராஜெக்ட்டான இரும்புத்திரையில் ‘வைஜெயந்திமாலாவின் தங்கையாக சரோ நடிக்க வேண்டும். ’

கதைப்படி அப்பா எஸ். வி. ரங்காராவ் இரண்டு பெண்டாட்டிக்காரர்.

தனித்து வாழும் ஏழைத் தாயிடம் வளரும் முதல் மகள் ‘ஜெயந்தி’யாக வைஜெயந்திமாலா.

தொழிலதிபர் எஸ்.வி.ரங்காராவுடன் வசதியோடு வசிக்கும் இன்னொரு பெண் ‘மாலதி’.

வைஜெயந்தியின் சாயலில் சரோ தெரிவதால், இருவரும் சகோதரிகளாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார் வாசன்.

சரோவின் தாயாருக்குச் சம்மதமில்லை.

‘வேணாம். குழந்தை நடிக்காதுங்க’ என்று தைரியமாகவே சொல்லி விடத் தோன்றியது.

சினிமா பரமபதத்தில் எம்.ஜி.ஆர். என்கிற மிகப் பெரிய ஏணியில் ஏறி, இப்போதுதான் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறோம்...

மீண்டும் துணைக் கதாபாத்திரங்களில் சிக்கி அவதிப்படுவானேன்!

ஹீரோயினுக்குத் தங்கையாக நடித்தால் கடைசி வரை அதே ரோலுக்கு அழைப்பார்கள்.

விடாப்பிடியாக உட்கார்ந்திருந்தார் நினைத்ததை முடிக்கும் வாசன். ருத்ரம்மாவின் ஒப்புதல் அவருக்குத் தேவையில்லை என்பதைச் சில நொடிகளில் உணர்த்தினார்.

‘இதுல மட்டும் உங்க பொண்ணு நடிக்க மாட்டான்னு சொல்லிட்டீங்கன்னு வெச்சுக்குங்க... இப்பவே சரோஜாவைக் குண்டுக்கட்டாத் தூக்கிக்கிட்டு போயிடுவேன்... ’என்றார் சிரித்தவாறே.

‘கதர்ச்சட்டைக்குள் ஒரு தீவிரவாதி...! ’

வாசனின் வல்லமை ருத்ரம்மாவுக்குச் சட்டென்று புரிந்தது.

கைதட்டினால் ஏவலுக்கு ஆயிரம் பேர் காத்திருக்க, ஜெமினி முதலாளியே மெனக்கெட்டு வீடு தேடி வந்திருக்கிறார்..!

அதுவே சரோவுக்குக் கிடைத்த மிகப் பெரிய அந்தஸ்து. அப்படியிருக்க சரோவின் மேன்மையைக் குறைக்கும் விதத்திலா வாசன் படம் எடுப்பார்..?

‘எல்லாம் நன்மைக்கே’ என்று எண்ணினால் எப்போதும் எதிலும் மனம் சலனப்படாது.’

தன் சஞ்சலத்தை வியர்வையைத் துடைப்பது போல் துடைத்த ருத்ரம்மா,

‘ உங்க விருப்பப்படியே செய்யுங்க’ என்றார்.

தனது நிஜமான அன்னை வசுந்தரா தேவிக்கு சினிமாவிலும் மகளாக வைஜெயந்தி நடித்த ஒரே படம் இரும்புத்திரை.

இந்தியிலும் தமிழிலும் சம காலத்தில் ஜெமினி ஸ்டுடியோவில் படமானது. இரண்டிலும் இரு நாயகிகள் வைஜெயந்திமாலா - சரோஜாதேவி.

இந்தியில் அதன் பெயர் ‘பைகாம்’ ஹீரோ திலீப் குமார். தமிழில் சிவாஜி கணேசன்.

முன்னேறி வரும் சில்வர் ஜூபிளி ஸ்டார் சரோ. அவரது உச்ச நட்சத்திர ஸ்தானத்துக்கு எந்த பங்கமும் நேரிடாமல் வாசன் டைட்டில் போட்டார்.

இரும்புத்திரையில் எடுத்த எடுப்பில் வைஜெயந்திமாலா - சரோஜாதேவி இருவரின் பெயரையும் காட்டினார்.

அதற்கு அடுத்தே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இடம் பெறும்.

அக்கா- தங்கை என்று அறியாமலே ஆரம்பத்திலேயே சிநேகிதிகளாகி சிறகடிப்பார்கள் வைஜெயந்தியும்- சரோவும்.

‘படிப்புக்கும் ஒரு கும்பிடு பட்டத்துக்கொரு கும்பிடு

பாஸூம் ஃபெயிலும் போடும் இந்தப் பழக்கத்தொரு கும்பிடு’

என்று பி. லீலா - ஜிக்கி குரல்களில் ஒலிக்கும் படத்தின் துவக்கப் பாடல். தேர்வுகள் முடிந்த சந்தோஷத்தில் தோழிகளுடன் இணைந்து மோட்டாரில் நகர்வலம் வருவார்கள்.

‘கலைமணி’ கொத்தமங்கலம் சுப்பு எழுதிய அர்த்தம் நிறைந்த ஹாஸ்யப் பாடல். அனைத்துக் கல்லூரி மாணவிகளாலும் அதிகம் பாடப்பட்டது.

எஸ்.எஸ். வாசனின் தயாரிப்பு இயக்கத்தில் சரோ அதற்குப் பின் நடிக்க முடியாத அளவு பிசி.

சரோவுக்கு, பொங்கல் வெளியீடாக 1960ன் முதல் சூப்பர்ஹிட் ஜெமினியின் இரும்புத்திரை.

தமிழில் கோவை- கர்நாடிக் தியேட்டரில் இரும்புத்திரை 25 வாரங்களைக் கடந்தது.

16 மாதங்களுக்குள் சரோவின் 5 வது வெள்ளிவிழாச் சித்திரம்- ‘பைகாம்’ ஆண்டுக்கணக்கில் ஓடி அபாரமாக வசூலித்தது!

தென்னக சினிமாவில் வேறு எந்த நாயகியாலும் என்றும் எண்ணிப் பார்த்திட முடியாத இமாலய சாதனை!

ஜெமினியைத் தொடர்ந்து சரோவைத் தேடி அடுத்துக் களம் இறங்கியது ஜூபிடர் பிக்சர்ஸ். அவர்களது பிரம்மாண்டத் தயாரிப்பு ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’.

அன்றைய கால கட்டத்தில் மிக அதிக சம்பளம் வாங்கிய டைரக்டர் டி. பிரகாஷ்ராவ் இயக்கியது. வசனம் - மு.கருணாநிதி. ஹீரோ ஜெமினி கணேசன்.

ஒரு டஜன் படங்களில் நாயகியாக நடித்து முடிப்பதற்குள், முதன் முதலாக இரண்டு லட்சத்துக்கு நெருக்கமாக சரோஜாதேவிக்கு, ஜூபிடர் மிகக் கூடுதலான ஊதியத்தை மனமுவந்து கொடுத்தது.

ஏறக்குறைய மூவேந்தர்களுக்கு நிகரான பேமென்ட்!

சரோ மீது அனைவரது கண் திருஷ்டியும் விழுந்திருக்க வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் க்ளைமாக்ஸில் அவர் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது.

வில்லன், சரோவைக் கூண்டில் அடைத்து நெருப்பு வைக்கும் கட்டம்.

காட்சி வெகு ஜோராக வர வேண்டும் என்கிற ஆர்வக் கோளாறு. டைரக்டர் பெட்ரோலை நிறைய ஊற்றித் தீ வைத்தார்.

திடீர் எம்.ஜி.ஆராகி சிவந்த தீக்கங்குகளும் சரோவைத் தழுவ வந்தன.

கதாசிரியரும்- துணை இயக்குநருமான மா. லட்சுமணன் சரோ நின்றிருந்த கூண்டைச் சற்றே தள்ளி விட்டார்.

நல்ல நேரம்! சரோவை ‘சத்யநாராயண விரதம்’ காப்பாற்றியது!

‘இன்றைக்கும் சரோஜாதேவி எங்கள் குடும்பத்தில் ஒருவர். சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வராமல் போக மாட்டார். மறக்காமல் அவரது உயிரைக் காப்பாற்றிய சம்பவத்தை நினைவு கூறுவார்.

நன்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு சரோஜாதேவி!

ஒரு நாள் மதியம் உணவு வேளையில் அவர், ‘ஏன் லட்சுமணன்... இப்பவும் நாம சாப்பிடறது எம்.ஜி.ஆர். சாப்பாடுதானே...? ’ என்றார்.

தனது உயர்வுக்குக் காரணமான எம்.ஜி.ஆரை எப்போதும் எண்ணிப்பார்க்கும், சரோஜாதேவி போன்ற நல்ல உள்ளம் சினிமா உலகில் அபூர்வமானது. ’ கதாசிரியர் மா. லட்சுமணன். ( 2001 கோடை)

சரோ அனலில் அகப்பட்டு நடித்தும், 1960 ஜூலை முதல் தேதி வெளியான எல்லோரும் இந்நாட்டு மன்னர் கல்லா கட்டவில்லை.

பட்டுக்கோட்டையாரின் ‘என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே’ பாடல் மட்டும் அதன் நினைவைப் பறை சாற்றுகிறது.

1960 தீபாவளிக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் மூன்று. மக்கள் திலகத்தின் மன்னாதி மன்னன், நடிகர் திலகத்தின் இரட்டைஇலக்கியச் சித்திரங்கள் 1. அகிலனின் பாவை விளக்கு 2. மு.வரதராசனாரின் பெற்ற மனம் ஆகியன.

அதே அக்டோபர் 19-ல் எந்த விதப் பரபரப்புமின்றி வெளியானது வாசு பிலிம்ஸ் கைராசி.

ஜெமினி கணேசன் -சரோஜாதேவி இருவருக்கும் கல்யாணப்பரிசுக்குப் பிறகு அற்புதமாக நடிக்க அதிக வாய்ப்பு வழங்கிய மற்றொரு காதல் காவியம்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் உறவினர் வாசுமேனனின் தயாரிப்பு.

தீபாவளி ரேஸில் கைராசி ஓஹோவென்று ஓடியது. அது வாரிக் கொடுத்த வசூலில் ‘வாசு ஸ்டுடியோ’ கோலிவுட்டில் உருவானது.

‘எம்.ஆர். ராதா அழுதால் யார் பார்ப்பார்கள்... ’என்று கேட்டார் நடிகவேள். அவரை முழு உற்சாகமூட்டி நடிக்க வைத்தவர் டைரக்டர் கே. சங்கர். அவரது முந்திய படம் சிவகங்கைச் சீமை ஓடவில்லை. அதனால் மிகுந்த வெறியோடு வெற்றிக்காக உழைத்தார்.

கதை வசனம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இசை கோவர்த்தனம் என ஒரு புது யூனிட் கைராசியில் கை கோர்த்தது.

வசந்தி, பொன்னி வரிசையில் கைராசி ‘சுமதி’யும் தாய்க்குலங்களின் கவனத்தைக் கவர்ந்தாள். சரோ நர்ஸாகவும் ஜெமினி டாக்டராகவும் நடித்தனர்.

காலத்தால் அழியாத கண்ணதாசனின் காதல் கீதங்கள்-

1.கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ, 2.காத்திருந்தேன் காத்திருந்தேன், 3.காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே 4. அன்புள்ள அத்தான் வணக்கம் என ஒவ்வொருப் பாடலும் வாலிப உள்ளங்களைக் கிறங்க அடித்தது.

அதே தீபாவளி நாளில் ரிலீசான சரோவின் இன்னொரு படம் தேவர் பிலிம்ஸ் யானைப்பாகன். தோல்வியைத் தழுவியது.

1960ன் கடைசி தினம். அன்றும் சரோ நடிக்க ஒரு சினிமா வெளியானது. அது ஸ்ரீதரின் விடிவெள்ளி.

சிவாஜியின் சிநேகிதர் - வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் தயாரித்தது - பிரபுராம் பிக்சர்ஸ் விடிவெள்ளி. ஏறக்குறைய நடிகர் திலகத்தின் சொந்தப்படம் எனலாம்.

விடிவெள்ளி க்ளைமாக்சிலும் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் உண்டு. இசை ஏ.எம். ராஜா.

‘கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை

நினைத்துப் பார் பார் அதன் தெம்பை’

என்கிற நல்ல நோக்கம் கொண்ட கோஷ்டி கானம் விடிவெள்ளியில் சூப்பர் ஹிட்!

ஆண்டின் இறுதியாக வந்தாலும் தரத்திலும் வசூலிலும் முதலிடம் பிடித்தது. முக்கிய நகரங்களில் 100 நாள்கள் ஓடியது விடிவெள்ளி.

டி.ஆர். ராஜகுமாரியின் ஆர். ஆர். பிக்சர்ஸ் சரோவைக் கை தூக்கி விட்ட நிறுவனங்களில் மிக முக்கியமானது. அதற்குப் பிள்ளையார் சுழி 1961ன் பொங்கல் வெளியீடான ‘மணப்பந்தல்’.

கதாநாயகன் எஸ்.எஸ். ராஜேந்திரன். அவரது அண்ணனாக அசோகன். தம்பியைக் காதலிக்கும் சரோ, விதி வசத்தால் மூத்தவனை மணக்க நேரிடுகிறது.

எஸ்.எஸ். ஆர்.- சரோ நடித்து மிக அதிக முறை மக்களைச் சந்தித்த ஒரே படம் மணப்பந்தல்.

‘பூத்து மணம் பரப்புகிறவர் சரோஜாதேவி’ என்று சரோ நடிப்பை குமுதம் பாராட்டியது.

‘பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்’

பி.பி. ஸ்ரீநிவாஸ் - பி. சுசிலா குரல்களில் எஸ்.எஸ். ஆர்- சரோ பங்கேற்ற மணப்பந்தல் டூயட் இன்றைக்கும் நேயர் விருப்பமாக வலம் வருகிறது.

1959ல் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடிக்கப் போன எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. நீண்ட கால சிகிச்சைக்குப் பின், வாத்தியார் குணமானதும் மீண்டும் திருடாதே ஷூட்டிங் தொடங்கியது.

‘என் அருகே நீ இருந்தால் ‘பாடல் காட்சி. எம்.ஜி.ஆர். காத்திருந்தார். சரோவைக் காணோம். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.

எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காத உயரத்தில் எம்.ஜி.ஆரை விட பிஸி சரோ!

கை படாத ரோஜா, கன்னடத்துக் கிளி என்றெல்லாம் பட்டங்கள். அவரது பெயரில் ஆபாசப் புத்தகங்கள். ரசிகர்களின் ரகசியக் கனவுகளில் சரோவின் உலா சகட்டு மேனிக்கு.

எம்.ஜி.ஆர். பொறுமை இழக்கத் தொடங்கினார். அப்புறம் என்ன நடந்தது. அதனை சரோவே சொல்வது அதை விட சுவாரஸ்யம்.

‘வாகினியில் சிவாஜியோட விடிவெள்ளி, பரணி ஸ்டுடியோல திருடாதே. விடிவெள்ளி படத்துக்கு பெரிய அளவில் செட் போட்டு எடுத்தாங்க. அதை முடிச்சிட்டு நான் பரணிக்கு வரணும். சில காரணங்களால் காட்சி நீண்டு விட்டது.

திருடாதேவுக்காக நான் கொடுத்திருந்த கால்ஷீட்டில் பாதி நேரத்தை விடிவெள்ளி எடுத்துக் கொண்டது.

ஒரு வழியாக நடித்து முடித்து விட்டு பரணிக்குப் பதற்றத்துடன் ஓடி வந்தேன். மொத்த யூனிட்டும் எனக்காகக் காத்திருந்தது.

என் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் படத்துக்கே நான் லேட்டாக வருகிறேன் எனும் போது என் குற்ற உணர்வு எப்படி இருக்கும்?

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் யாராவது லேட்டாக வந்தால், அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களின் முகத்தையே பார்க்க மாட்டார். அன்று என்னையும் பார்க்கவில்லை.

அவரைக் கடந்து நான் மேக் அப் ரூமுக்குப் போக வேண்டும். அவர் அருகே சென்றதும், மன்னிச்சுடுங்க என்றேன். அண்ணனோ,

‘நான் என்ன பண்றது நீ பெரிய ஸ்டார் ஆயிட்டே’ என்றார்.

சந்தோஷமான டூயட் பாடலில் நடித்து முடிக்கும் வரை, தாமதமாக வந்த உணர்வில் என் தலையில் ஒரு தயக்கம் சுழன்று கொண்டிருந்தது. ’ சரோஜாதேவி.

என் அருகே பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். போலீசுக்கு பயந்து மறைவிடத்தில் தங்கி இருப்பார். அங்கே செல்லும் சரோவோடு டூயட் பாடுவார்.

அவசரத்தில் சரோவின் பாவாடையை எம்.ஜி.ஆர். அணிந்து பாடுவதாக காட்சி. தியேட்டர்களில் கலகலப்பை ஏற்படுத்தும்.

எம்.ஜி.ஆர்.-சரோ சேர்ந்து நடித்த முதல் முழு நீள டாக்கி திருடாதே. அதுவும் விடிவெள்ளியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதை.

திருடி விட்டு அதற்காக வருந்தும் ஹீரோவின் மன உளைச்சலே அடிப்படை. இரண்டிலும் ஒரே நாயகி சரோ.

விடிவெள்ளி மாதிரி திருடாதே ஓடுமா...!

கண்டிப்பாக ஓடியே தீர வேண்டும் என்கிற கட்டாயம் எம்.ஜி.ஆருக்கு. திருடாதே வெற்றி அடைந்தால் மட்டுமே எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் மறு மலர்ச்சி ஏற்படும் அசாதாரண சூழ்நிலை.

போதாததற்கு சிவாஜியின் அடுத்த ‘பா’ வரிசைச் சித்திரம் பாவமன்னிப்பு மார்ச் 16ல் வெளியானது. மற்றொரு போட்டிக்கு முந்திக் கொண்டு உற்சாகமாகத் தோள் தட்டியது.

மார்ச் 23ல் திருடாதே ரிலீஸ்!

தனது சக்ஸஸூக்கு சரோவின் பாபுலாரிடியை நம்ப வேண்டிய சங்கடம், முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டிருந்தது எவராலும் மறுக்க முடியாத நிஜம்!

திருடாதே அநேக ஊர்களில் அநாயாசமாக 100 நாள்களைக் கடந்து ஆர்ப்பரித்தது.

எம்.ஜி.ஆர். நிரந்தரமாகச் சமூகச் சித்திரங்களுக்கு திசை மாற, திருடாதேயின் மகத்தான வசூலும் வெற்றியும் அஸ்திவாரம் அமைத்தது.

‘திருடாதே வெற்றிப்படத்துக்கு நான் தான் அஸ்திவாரம் என்ற நிஜம், வெளியே பலருக்குத் தெரியாமல் போயிற்று. ஆனால் சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும்.

அதனால் ‘திருடாதே’ நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்து கொடுத்து விட்டுச் சென்றார்’ - சின்ன அண்ணாமலை.

தமிழ் சினிமாவில் தரித்திரம் தொலைய வேண்டுமானால், எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி ஜோடி தொடர்ந்து இணைந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியானது.

அதற்கான அவசியத்தை அழகாகச் சொன்னது குமுதம் - ‘திருடாதே’ சினிமா விமர்சனம்-

‘எம்.ஜி.ஆருக்கு மற்றொரு புரட்சிதான். இதமாகத்தான் செய்திருக்கிறார். எத்தனையோ பேர் நாட்டுக்கட்டையாக நடித்து விட்டார்கள். என்ன போடு போடுகிறது அந்தப் பெண்! நாட்டுக்கட்டையாக சரோஜாதேவி செய்திருக்கும் விதத்தில் ஒரு தனிச்சிறப்பு உண்டு.

50 கருத்துகள்:

  1. என் கதையை பிரசுரித்ததற்கு நன்றி. ஏ.ஐ. உதவியோடு படமும் இணைத்திருந்தேனே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. AI படம் ஒன்றும் அதில் இல்லையே.... இருந்தால் அனுப்புங்கள் இப்போது கூட சேர்த்து விடுகிறேன்.

      நீக்கு
    2. படத்தை இணைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. சரோஜாதேவி பற்றிய தகவல்கள் புதுசு. எம்.ஜி.ஆர். படம் ஓடுவதற்கு சரோஜா தேவி துணையாக இருந்தாரா? ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் சரோஜாதேவிக்காகத்தான் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்தேன் என்று சொன்னவர்களைத் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்.  யார் கண்டது..  கன்னடத்துப் பைங்கிளியின் கொஞ்சும் தமிழில் எத்தனைபேர் கிறங்கினார்களோ...

      நீக்கு
  3. ​எனது இஷ்ட தெய்வம் பிள்ளையார். சிறப்பாக பழவங்காடி பிள்ளையார். நிறைய பிள்ளையார் கலெக்ஸன் இருந்தது. தற்போது எல்லாவற்றையும் கேட்பவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டேன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்...   என் இஷ்ட தெய்வம் முருகனாக்கும்!  ஆனால் நான் படம், சிற்பம் எல்லாம் சேர்க்கவில்லை.  மனதில் வைத்திருக்கிறேன்!

      நீக்கு
    2. எனக்கும் இஷ்ட தெய்வம் பில்ளையார்தான். கதை பற்றி கருத்து கூறவில்லையே?

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.  வணக்கம்.  நல்லதையே நாடுவோம்.

      நீக்கு
  5. சிறுகதை நன்று. படத்திற்கு பொருத்தமான கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. சரோஜா தேவி தகவல்கள் நன்று. கடைசி மூன்று வரிகள் முதலிலும் வந்து இருக்கின்றன. எடுத்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  7. // பெரிதாக பூஜை என்று கூட செய்வது
    கிடையாது. குளித்து விட்டு, சாமிக்கு
    ஒரு கும்பிடு போட்டு, நமஸ்காரம் செய்வதோடு சரி.//

    இங்கும் இப்படித்தான்....

    நேற்று சங்கடஹர சதுர்த்தி..
    கோயிலில் நிற்க முடியவில்லை..

    முழங்கால் வலி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். உடம்பு முடியவில்லை என்பது அவனுக்குத் தெரியாதா என்ன? மானசீகமாக வழிபட வேண்டியதுதான், அதுவும் சுலபம் கிடையாது.

      நீக்கு
    2. முழங்கால் வலியை இப்போவே காட்டிக் கொஞ்சம் நடமாடும்படி செய்து கொள்ளுங்கள்.

      நீக்கு
    3. // பெரிதாக பூஜை என்று கூட செய்வது
      கிடையாது. குளித்து விட்டு, சாமிக்கு
      ஒரு கும்பிடு போட்டு, நமஸ்காரம் செய்வதோடு சரி.//

      நான் அது கூட கிடையாது.  சும்மா அப்பப்போ மனசுல நினைச்சுக்கறதோட சரி.  அதுவும் சமீப காலத்துல நான் செய்யும் பிரார்த்தனைக்கு உல்ட்டாவாகத்தான் எல்லாம் நடக்குது.  வெறுத்துப்போச்சு.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்

      நீக்கு
  9. /// மானசீகமாக வழிபட வேண்டியதுதான்,
    அதுவும் சுலபம் கிடையாது.///

    உண்மை தான்...

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரி

    இன்றைய பதிவில் தாங்கள் எழுதிய மிகவும் கதை சிறப்பானதாக இருக்கிறது. "மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம்" என்பது போல் மனதுக்குள் இறைவனை நினைத்தாலே, இறைவன் நம் அருகிலேயே நின்று வழி நடத்துவான் என்பதை உணர்த்தும் கதை. அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    எனக்கும் இஷ்ட தெய்வம் விநாயகர்தான். அவனருளால் உண்டு, வளர்ந்து வந்தவள்தான் நான். 🙏. கதை மனதுக்கு திருப்தியாக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. நமக்கும் பிள்ளையார் தான் ஃபிரண்டை. :)))) ஆனால் அப்போல்லாம் கிருஷ்ணன் கோயில், பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில்களைத் தவிர்த்து வேறே எங்கும் பிரசாதமெல்லாம் கிடைச்சதில்லை. மார்கழி மாசத்தில் சில சமயங்களில் இந்த மாதிரி சின்னக் கோயில்களில் பிரசாதம் கிடைச்சிருக்கலாம். எனக்குத் தெரிஞ்சு இல்லை. இங்கேயும் இம்மாதிரி வலுவில் வந்து கோயில் குருக்கள் சொல்லி இருப்பதைப் பார்த்தால் அவர் உள்லத்தின் மன ஒருமை குருக்களைப் போய்த் தாக்கி இருந்திருக்கு. எனில் அவர் எவ்வளவு தீர்க்கமாக ஆழமான பிள்ளையார் சிந்தனையில் ஒருமித்திரு இருந்திருக்க வேண்டும். கதைக்கரு அருமை. விரிவால அலசினால் நிறையச் சொல்லலாம். பகிர்வுக்கு நன்றி. ஏஐ படத்துக்கும் ஒரு "ஓ" போட்டுடறேன்.

    சரோஜா தேவி பற்றிய முற்றிலும் அறியாத பல தகவல்களைக் கொடுத்ததுக்கு (ஸ்ரீராம் கவனிக்க. நான் சரோஜா தேவியைப் பார்த்ததே இல்லை.) ஸ்ரீராமுக்கு நன்றி. எனக்கு அவர் நடிச்சுப் பிடிச்ச படம் எனில் பாலசந்தர் படம் ஒண்ணு, அவரும் வாணிஸ்ரீயும் நடிச்சது. அதில் நாகேஷும், சரோஜா தேவியும் போட்டி போட்டுக்கொண்டு நடிச்சிருப்பாங்க. படம் பேரு........ம்ம்ம்ம்ம்ம் தாமரை நெஞ்சமா? கல்யாணத்துக்குப் பின்னால் சரோஜா தேவி நடிச்ச படம்னு நினைவு. ஆமாம் இல்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாமா இல்லையா? எனக்கு நினைவு தெரிந்து, நீங்கள் எழுதியதில் அம்பத்தூருக்கோ இல்லை மதுரைக்கோ வராத ஒரே நடிகை இந்த சரோஜாதேவி மாத்திரம்தான் என நினைக்கிறேன். சரியா? (அடிக்க வராதீங்க)

      நீக்கு
    2. நன்றி கீதா அக்கா. சிறு வயதில் எனக்கும் பிள்ளையார் கோவிலில் பிரசாதம் வாங்கிய அனுபவம் இல்லை. ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குறுணி விநாயகர் சன்னிதியில் சுடச்சுட அருமையான சர்க்கரைப் பொங்கல் கிடைத்தது.
      பெங்களூரில் எங்கள் குடியிருப்புக்கு எதிரே ஒரு விநாயகர் கோவில் உண்டு, அங்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை விமரிசையாக நடக்கும். நல்ல கும்பல் இருக்கும். பொங்கல், சுண்டல் போன்ற பிரசாதங்கள் வழங்குவார்கள்.

      நீக்கு
    3. கர்நாடகாவில் சங்கடஹர சதுர்த்தியன்று தமிழ் நாட்டு கோவில்களைப் போல அபிஷேகம் செய்வதில்லை. அலங்காரம், அர்ச்சனை, கதை வாசித்தல் மட்டுமே. ஹோமமும் உண்டு.

      நீக்கு
    4. // அறியாத பல தகவல்களைக் கொடுத்ததுக்கு //

      நிஜம்மாவா சொல்றீங்க கீதா அக்கா?  எப்பவும் முன்னரே படிச்சாச்சுன்னுதானே சொல்வீங்க!!

      நீங்க சொல்ற படம்  நெஞ்சம்தன்னுதான் நினைவு.  பிழிய பிழிய சோகப்படம்.

      நீக்கு
    5. Saroja Devi came to Madurai so many times. But I didn't get a chance to see her. Instead mama saw her so many time in Coimbatore Railway Station when he was in Higginbothoms.

      நீக்கு
  12. எப்படியோ எழுத்துப் பிழைகள் இப்போதெல்லாம் அதிகம் வருகின்றன. :(

    பதிலளிநீக்கு
  13. கதை அற்புதம்..சினிமா தகவல்களும் இதுவரை அறியாதவை..பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. இன்றைய பிள்ளையார் கதையைப் படித்தேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பிரசாதம் கிடைக்கும்போது மனது சிலிர்க்கும். அதனைப் பெறுபவர்களுக்குத்தான் அது தெரியும்.

    சாமுண்டீஸ்வரி கோயிலில் அத்தனை கூட்டம். சன்னதி முன்பு அன்னையை வணங்கிவிட்டுத் திரும்ப யத்தனிக்கைம்போது அர்ச்சகர் தேங்காய் பூ பழம் கொடுத்தார். நான் பூஜைக்குக் கொடுக்கவில்லை என்றேன். இல்லை உங்களுக்குத்தான் என்றார். யாத்திரை குழுவுடன் திருவனந்தபுரம் போயிருந்தபோது ரெகுலராகு அங்கு விஸ்வரூப தரிசனத்தின்கோது பிரபந்தம் சேவிக்கும் இருவருடன் நானும் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சன்னிதானத்தின் அருகிலேயே இருபது நிமிடங்கள். கூட வந்தவர்களுக்குப் பொறாமையாக இருந்திருக்கும், யாரும் ஓரிரு நிமிடங்களே நிற்கமுடியாமல் வரிசை நகர்ந்தது. பிரசாதம் இதுபோல பல கோயில்களில் கிடைத்திருக்கிறது.

    வெகு அபூர்வமாக இரண்டாவது தரிசனத்துக்கு குறுக்குவழியில் அனுமதி கிடைக்காத சந்தர்ப்பங்களும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஸ்கட் சென்ற புதிது, முதல் முறையாக சிவன் கோவிலுக்குச் சென்றேன்(றோம்). ஒரே கோவிலில் பிள்ளையார், சிவன், அஞ்சனேயர், மாடியில் துர்கை சன்னதிகள் இருக்கும்.
      நானும் எங்கள் நண்பரின் மனைவியும் கோவிலில் நுழைகிறார், அங்கிருந்த மேடையில் அமர்ந்து பிரசாதம்(தேங்காய் கீற்று, கல்கண்டு) சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு வட இந்திய சிறுவன் என்னைப் பார்த்ததும் கிடுகிடுவென்று வந்து என் கையில் ஒரு தேங்காய் காற்றையும், சில கல்கண்டு கட்டிகளையும் திணித்து விட்டு விறுவிறுவென்று நடந்து போய் விட்டான். அவன் யார்? ஏன் அப்படி செய்தான் என்று தெரியவில்லை.

      நீக்கு
    2. சமயபுரத்தில் எனக்கும் என் சகோதரிக்கும் ஸ்பெஷல் தரிசனம்(நாங்கள் அதற்கான டிக்கெட் வாங்காமலேயே) மற்றும், மாலை, பிரசாதம் கிடைத்தது ஒரு மெய்சிலிர்க்க வைத்த அனுபவம்.

      நீக்கு
    3. நெல்லையின் அனுபவம் ஆச்சர்யகரமானதுதான்.

      நீக்கு
    4. சமீபத்தில் ஷீர்டி சென்ற என் சகோதரர் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார், பாபா அருகில் நின்று கொண்டிருந்த பண்டா என் அண்ணாவை அழைத்து அவர் கழுத்தில் பாபாவின் மேல் சாத்தியிருந்த வஸ்திரம் ஒன்றை போர்த்தி, பிரசாதங்கள் கொடுத்து அனுப்பினாராம்..

      நீக்கு
    5. ​ஆனா.... கோச்சுக்காதீங்க...   இதெல்லாம் ஒருவகை தந்திரம்னு எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

      நீக்கு
  15. கும்பகோணம் முருகர் சன்னிதிக்குக் காலையில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முழு அபிஷேகம் காணும் வாய்ப்பு யதேச்சையாக அமைந்தது. அஹோபிலம் பிரகலாதன் மெட்டில் (பலரும் கஷ்டம் கருதி இங்கு செல்வதில்லை. அங்கு அர்ச்சகர் கை பொறுக்காத சூட்டில் சர்க்கரைப் பவங்கல் போன்ற பிரசாதங்கள் கொடுத்தார். யாத்திரைக் குழுவில் நான் மட்டுமே அங்கு சென்றேன். மனைவி உட்பட வேறு யாரும் நடக்கத் துணியவில்லை

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. //எந்த வேண்டுதலும் இல்லாமல் விநாயகரையே நினைத்தது தியானத்திற்கு ஈடுதானோ?//

    ஆமாம், அவரையே நினைத்து கொண்டு இருப்பது தியானம் தானே!

    //“விநாயகரை தியானம் செய்கிறீர்களா?” என்று கேட்டு விட்டு, "தொடர்ந்து செய்யுங்கள், நல்லது நடக்கும்” என்று கூறி பிரதட்சிணம் செய்ய உந்தி தள்ளினார்.//

    விநாயகரை நினைத்து கொண்டு இருந்ததே சிறந்த தியானம் தான். இறைவன் குருக்கள் மூலம் சொல்லி விட்டார். கதையை நல்ல படியாக எழுதி அனுப்பி விடுவார் ரமேஷ்.

    நீங்களும் நல்ல கதையை எழுதி அனுப்பி விட்டீர்கள்.
    வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!