வியாழன், 3 அக்டோபர், 2019

ஆனால் என்று சொல்வதைவிட அதனால் என்று சொல்லலாம்!



இன்னும் தலைப்பு வைக்கவில்லை.  ஒரு திடீர்த் தொடர்கதை.  

*******




நசநசவென்று மழை பெய்துகொண்டிருந்தது.   சங்கரன் வேஷ்டியை சற்றே தூக்கிப் பிடித்தபடி நடந்தார்.  வலது கையில் அசௌகரியமாக குடை.  இடது கையில் வேஷ்டி நுனியுடன்  காய்கறிப் பை.    கஷ்டம் என்னவென்றால் அவருக்கு வேஷ்டி கட்ட வராது. .  


இந்த வயசுக்கு வேஷ்டி கட்டத் தெரியாதா என்று யாரும் கேட்டு விடுவார்களோ என்று சற்றுத் தயக்கமும் உண்டு அவருக்கு.   லுங்கி கட்டியே பழக்கப்பட்டவர் வேஷ்டி கட்டத் தொடங்கியதும் அதே வயசு காரணமாகத்தான்.  வீட்டில் ''இவ்வளவு வயசாறது..  வேஷ்டி கட்டாம என்ன லுங்கி கிங்கி எல்லாம்...   நல்லாவே இல்லை" என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நேரம்.


லுங்கி என்றால் மடித்துக் கட்டிக்கொண்டு சுலபமாக நடந்து விடலாம்.  இதில் மடித்துக் கட்டினால் தொடை தெரியும் அசௌகரியம் இருந்தது.  


"வேஷ்டியை அப்படியே மூட்டிக்கோங்க...   கைலி மாதிரி கட்டிக்கலாம்..."

"உக்கும்... அப்புறம் அதுக்கு வேஷ்டின்னு என்ன பேர்?"


முன்னால் என்றால் பேசமாட்டார்கள்.  அப்போது வேலைக்குப் போய்க்கொண்டிருந்த காலம்.  இப்போது ஒய்வு பெற்றாகி விட்டது.  ஒய்வு பெற்றதில் சௌகர்யங்களை விட அசௌகர்யங்களே அதிகமோ என்று தோன்றியது.


தான் காய்கறி வாங்கி வருவது சங்கரனுக்கே ஆச்சர்யம்தான்.   ஆனால் இது முதல் முறையல்ல.  சமீப காலங்களில் அவ்வப்போது செய்யும் வேலைகளில் ஒன்றாக ஆகிவிட்டது.  கடைத்தெருவில் அதிக கூட்டமில்லாததற்கு மழையும் காரணமாக இருக்கலாம். இவர் குடை கொண்டு வந்ததால் தப்பித்தார்.  மற்றவர்களுக்கு அந்த முன்னெச்சரிக்கை இல்லை போலும்.  தன்னைத்தானே மனதுக்குள் பாராட்டிக்கொண்டார் சங்கரன்.   தான் எப்போதுமே சற்று முன்னே யோசிப்பவன் என்று முதுகில் மானஸீகமாகத் தட்டிக்கொண்டார்.


டீக்கடையைத் தாண்டும்போது மனதில் பாலமுரளியின் குரலில் வரிகள் ஓடியது..  ஸாதுசமாகம...    ஸாதுசமாகம...    ஸாதுசமாகம...  சம்கீர்ணானாம்....   மனதை உலுக்கிக்கொண்டார்...   நசநச மழையில் சேறான தெருவில் எங்கேயிருந்து திடீரென இந்தப் பாடல் மனதில்?  அதுவும் பாடலின் முதல் வரியிலிருந்து சம்பிரதாயமாக நினைவுக்கு வராமல்....  


சட்டெனப் புரிந்தது. டீக்கடையில் வெங்காய பஜ்ஜியோ வடையோ போடுகிறார்கள்.  அந்த வாசனை மூக்கில் ஏறியதும் மனம் இந்தப் பாட்டுக்குத் தாவி விட்டது.  என்றோ ஒரு மழை பெய்த நாளில் வீட்டில் வெங்காய பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே இந்தப்பாடலை 'டேப்'பில் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.  அப்புறம் இந்தப் பாடல் கேட்டால் வெங்காய பஜ்ஜி ஞாபகம் வரும்.   வெங்காய பஜ்ஜி வாசனை வந்தால் இந்தப் பாட்டு ஞாபகம் வரும்.

இதன் கூடவே இன்னொரு பாடல் வருமே...   அது என்ன?  கேள்வி மனதுக்குள் ஓட,  காலை எட்டிப்போட்டார்.  சீக்கிரம் காயுடன் வீட்டுக்குப் போனால்தான் மகன் ஆபீஸ் கிளம்பும் முன் சமைக்க முடியும்.  அப்புறம் விசாலி முகத்தைக் காட்டுவாள்.  


பையில் மகனுக்குப் பிடித்த காய்கள் இருந்தன.   தனக்குப் பிடித்த காய்கள் வாங்க ஆசைதான்.    ஆனால் வாங்கினால் அது ஃப்ரிஜ்ஜிலேயே இருக்கும்.  மகனுக்குப் பிடிக்காது.  விசாலிக்கும் பிடிக்காது.  அவர்களுக்குப் பிடிக்கும் காய்கறிகள் இவருக்குப் பிடிக்காது.  என்ன செய்ய...   அதெல்லாம் பார்க்க முடியாது.  மருமகளுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று அவருக்குத் தெரியாது.  ஆனால் விசாலிக்குத் தெரியும். 


ஆமாம் அந்தப் பாடலுடன் வரும் இன்னொரு பாடல் என்ன?  இப்படிதான் இப்போதெல்லாம் ஒவ்வொன்றும் மறந்து விடுகிறது..  


செருப்பையும், குடையையும் வெளியே விட்டு விட்டு உள்ளே வந்தார் சங்கரன்.   வீட்டுக்குள் நுழையும்போதே "தாத்தா வந்தாச்சு" என்று சத்தமாகக் குரல் கொடுத்தாள் பேத்தி ராகவி. 


விசாலி வெளியே வந்து பையை வாங்கி கொண்டாள்.  அவள் தன் முகத்தைப் பார்த்து ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்தார்.  நிமிர்ந்தே பார்க்காமல் பையை வாங்கி கொண்டவள், "ராகவி...   டயமாச்சு பார்...  ஸ்கூல் பஸ் வந்துடும்..  குளிக்கப் போ" என்றபடியே கிச்சனுக்கு சென்றாள்.


ஒரு காஃபி குடித்தால் நன்றாயிருக்குமென்று தோன்றியது. 


"விசாலி..   ஒரு டோஸ் காஃபி குடேன்"


உள்ளேயிருந்து பதில் ஒன்றும் வரவில்லை.  சோபாவில் அமர்ந்து சட்டையைக் கழற்றியவர், கிச்சன் வாசலைப் பார்த்தவாறு காத்திருந்தார்.  ராகவி பாட்டி சொன்னதை லட்சியம் செய்யாமல் அங்கேயே நின்று ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள்.  [ தொடரும் ]


=====================================================================================================



ஹேய்...   யார் கிட்ட...   எங்களை எல்லாம் ஏமாற்ற முடியாது...  



சொன்னதைச் சொன்னபடி செய்தால்?   இப்படிதான்...   பொறுப்பான பணியாளர்!  சபாபதியிஸம்!



===================================================================================================



கிருஷ் ஸார் அவர் தளத்தில் பிலஹரி பற்றி எழுதி இருந்தார்.  என்னிடம் அவர் கதைகள் இருக்கின்றன என்று சொல்லி, அவர் சிறுகதை ஒன்றை எங்கள் பிளாக்கில் எடுத்துக் போடுவதாகச் சொல்லி இருந்தேன்.  அது அப்படியே மறந்து விட்டது.  நேற்று பொழுதுபோக்க ஒரு பைண்டிங்கை எடுத்த உடன் விகடன் முத்திரைக்கதைகள் தொகுப்பு கிடைத்தது.  ஏராளமாக ஜெயகாந்தன் கதைகள்.  அதனுடன் பிலஹரி கதைகள் நான்கு.  அதன் தலைப்புகள் பின்வருமாறு...

உரிமை 
ப்....பூ!
விசுவரூபம் 
தாயுமானவர் 

இதில் ஒரு தலைப்பைத் தெரிவு செய்துகொடுத்தால் அந்தக் கதையை டைப்பிப் போடுகிறேன்!


சாவியோ யாரோ சொல்லியிருந்தார்கள்.  அவர்தான் விகடனுக்கு ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தியவர் என்று அவர் சொல்லிப் படித்த நினைவு.   ஜெயகாந்தன் ஒரு கண்டிஷன் போட்டாராம்...   அவர் அனுப்பும் கதைகளை எடிட் செய்யக் கூடாதாம்...எல்லாக் கதைகளையும் முத்திரைக் கதைகளாக வெளியிட வேண்டும் என்றாராம்.  (ஜீவி ஸார்...   கோச்சுக்கராதீங்க...   எங்கேயோ படித்ததைதான் நினைவிலிருந்துதான் சொல்கிறேன்..)    சாவிக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் வாசன் அதற்கு ஒத்துக்கொண்டாராம்.

ஜெயகாந்தனோடு அருள்சுடர்,   தி சா ராஜு,  வே. கோவிந்தராசன்,  ஆர். சூடாமணி, ​கிருஷ்ணா,  ஏ எஸ் ராகவன், வையவன், இதயன்,  ரா சேஷாத்திரி, சரோஜா ராமமூரத்தி, நாகநந்தி, தேவபாரதி, அம்பை, ஜெகசிற்பியன், வை சுப்பிரமணியன், சுகி சுப்பிரமணியன், ஸ்ரீ வேணுகோபாலன், எல்லார்வி  ஆகிய எல்லோர் எழுதிய கதைகளும் முத்திரைக் கதைகளாக வெளியிடப்பட்டுள்ளன.  இவை எல்லாம் அந்தத் தொகுப்பில் இருக்கின்றன.  ஒவ்வொருவரும் எழுதிய கதைகள் ஒன்றிரண்டுக்கும் மேற்பட்ட கதைகள் தொகுப்பில் இருக்கின்றன.


============================================================================================


கதை படித்திருந்தால் தெரியும், எந்தக் கதையின் முன்கதைச் சுருக்கம் என்று!

தொடர்கதை படிக்கும் காலத்தில் எனக்கெல்லாம் முன்கதைச் சுருக்கமே தேவை இல்லை.    நாங்கள்தான் அடுத்த வாரம் என்ன என்று கா....த்திருப்போமே...   இப்போது அந்த சுவாரஸ்யம் எல்லாம் போச்....  எனக்கு மட்டும்தானா?  என்று எழுதி  ஃபேஸ்புக்கில்போட்டேன்.  

எதிர்பார்த்த மாதிரியே ரிஷபன்  ஸார் வந்து விடையை சொல்லி விட்டார்.  படித்திருப்போம். ஆனால் அவை மனதில் நின்றிருந்தால்தான் உடனே நினைவுக்கு வரும்.  ரிஷபன் சார் எப்போதுமே இப்படி நான் போடும் அல்ப புதிர்களை "பூ.." என்று ஊதி விடுவார்.   இப்போதும்!




=============================================================================================


தத்துபித்துவம்.....  ஆனால் என்று சொல்வதைவிட அதனால் என்று சொல்லலாம்!



==============================================================================================

214 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன், வாங்க...  வாங்க...

      நீக்கு
  2. மீ இன்று ரொம்பவே பிஸியாக்கும் ட்ரம்பின் பெர்சனல் செக்ரட்டரியையும் விட...பின்னே நம் தலைநகரத்திலிருந்து அமெரிக்கா தலைநகரம் சென்று தமிழ்நாட்டின் தலைநகரம் வந்து மீண்டும் அமெரிக்கா தலைநகரம் போகணுமே....ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் டெல்லி மட்டுமே டியூ!

      நீக்கு
    2. கீதா எதுக்கு என் பெர்மிஷன் இல்லாமல் அம்பேரிக்கா போனவ?:).. ட்றம்ப் அங்கிள் என்னைத் திட்டிடப்போறாரே வைரவா:))

      ஊசிக்குறிப்பு:
      இதை முன்பும் கேட்டிருக்கிறேன் பதில் கிடைக்கவில்லை, கீதா எனக்கொரு டவுட்டு, என் பக்கம் உங்களின் கொமெண்ட்ஸ்க்கு, நான் போடும் பதில்களை, எப்பவும் நீங்கள் படிப்பதுண்டோ? இல்லை கொமெண்ட்ஸ் போட்டு விட்டுப் போய் விடுவீங்களோ? பின்பு வந்து பதில் படிக்காமல், ஏனெனில் பதில் படிப்பதில்லையோ நீங்கள், நான் தான் படிப்பீங்கள் எனும் நம்பிக்கையில் பதில் போடுகிறேனோ என டவுட் வரும் அடிக்கடி.. இங்கு வந்து இதனை நிட்சயம் பார்ப்பீங்க எனும் நம்பிக்கையில் கேட்கிறேன்.. இப்பவும் பதில் சொல்லாட்டில்.. மோடி அங்கிளிடம் போட்டுக் குடுப்பேன்ன் கீதாதான் அமெரிக்காவின் ரகசிய உளவாளி என கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. //ஏனெனில் பதில் படிப்பதில்லையோ நீங்கள், நான் தான் படிப்பீங்கள் எனும் நம்பிக்கையில் பதில் போடுகிறேனோ என டவுட் வரும் //

      ஹா...   ஹா...   ஹா...    அதிராவுக்கு சந்தேகம் வந்தாச்...    இனியும் அவரைப் பேய்க்காட்ட முடியாது கீதா....

      நீக்கு
    4. பெண்கள் எப்போவும் சந்தேகப்பிராணிகள்.. அதிரா மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா?. அதிராவுக்கு இந்த டவுட் மத்தவங்க மேல வரலைனா அதுக்குக் காரணம், யார் யார் தளத்துக்கு எப்போ வர்றாங்க என்று அவர் செக் பண்ணிக்கொண்டே இருப்பார். அதுல கீதா ரங்கன் மிஸ்ஸிங் என்பதால் இந்தக் கேள்வி. ஹா ஹா

      நீக்கு
    5. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெ.டமிலன்:)).. நான் ஜந்தேகம் எல்லாம் படமாட்டேன்ன், டவுட் வந்தால், சண்டைப்பிடிச்சாலும் பறவாயில்லை என நேரே கேட்டுத் தெளிவாகிடுவேனாக்கும்:))..

      //யார் யார் தளத்துக்கு எப்போ வர்றாங்க என்று அவர் செக் பண்ணிக்கொண்டே இருப்பார்.//
      ஹா ஹா ஹா இது என்னமோ உண்மைதான், அதிலயும் ஆர் தப்பினாலும் அஞ்சு மடும் என்னிடம் டப்பவே முடியாது:)).. ஊரெல்லாம் நோட்டிபிகேசன் போட்டு வச்சிருக்கிறெனாக்கும் அவ எங்கெலாம் போகிறா என பார்க்க:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. அதிரா பல சமயங்களில் வர முடிவதில்லை உண்மைதான்...

      இனி கண்டிப்பாக வருவேன் அதிரா. அது என் கணினியின் பிராப்ளமும் படங்களும், கமென்ட்ஸும் நிறைய ஆகிவிட்டால் பேஜ் ஓபன் ஆவதில்லை. கடினமாக இருக்கும்...மொபைலில் பார்க்கும் பழக்கம் மிகவும் குறைவு அதிரா.

      கணினி என்பதால் அதுவும் இப்போதெல்லாம் ரொம்பவே குறைகிறது...பல இடையூறுகள் அதிரா.

      வருகிறேன் கண்டிப்பாகப் பார்க்கிறேன்...உங்கள் பதில்களையும்...உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கும்மி அடிக்க முடியவில்லையே என்ற குறையும் உண்டு.

      நான் மெயில் பாக்ஸ் போகாமல் தளம் டைப் பண்ணித்தான் வருகிறேன். ஸோ கமென்ட்ஸ் நோட்டிஃபிக்கேஷன் கொடுப்பதுமில்லையா அதுவும் ஒரு காரணம்.....

      ஸாரி அதிரா மன்னிச்சுக்கோங்க...இனி வருகிறேன் கண்டிப்பாக.

      கீதா

      நீக்கு
    7. இன்றைக்குத்தான் எங்கள் தளமே ஓப்பன் செஞ்சு பார்த்தால் கமென்ட் மாடரேஷன் நான் கொடுத்திருந்ததே தெரிந்தது!!! இன்று எபியில் வந்த கதை ஒன்றை ஷெட்யூல் செய்ததும் கூட மறந்து போயிருக்கிறேன். இன்று ஏதேச்சையாக வேறு என்ன பதிவுகள் வந்திருக்கு என்று பார்க்க தளம் ஓபன் செய்த போதுதான் தெரிந்தது...அந்த அளவிற்கு இருக்கிறேன் இப்போது ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    8. அதிரா பதில் பார்ப்பதுண்டு. ஆனால் மீண்டும் கமென்ட் போடுவதுதான் பல சமயங்களில் அது மெயில் பாக்ஸ் போகாமல் வருவதால்..வந்திடுகிறேன் இனி..

      ஸ்ரீராம் ஹா ஹா ஹா பேய்க்காட்ட முடியாதுதான்!!!

      கீதா

      நீக்கு
    9. ஆவ்வ்வ்வ் இவ்ளோ பெரிய பதில் கீதாவிடமிருந்து.. இல்ல கீதா, நான் கேட்டது, பதில் கொமெண்ட்ஸ் போடச்சொல்லி அல்ல.. சத்தியமாக நன் அதை எதிர்பார்ப்பதில்லை, அது நம் நம் நேர வசதியைப் பொறுத்ததெல்லோ.. நமக்காக வந்து ஒரு கொமெண்ட் போட்டுச் சென்றாலே பெரிய விசயமாக கருதுவேன், ஆனா நீங்க எப்பவும் சிலபல கேள்விகள் கேட்பிங்க கொமெண்ட்ஸ் இல்,

      அதுக்கு நானும் மாஞ்சு மாஞ்சு பதில் போட்டிருக்கிறேன்ன்.. அதனை நீங்கள் படிப்பதில்லைப்போலும் எனும் சந்தேகத்திலதான் கேட்டேன்.. நான் உங்கள் கொமெண்ட்ஸ்க்குப் போடும் பதில்களை நீங்கள் படிச்சால் போதும் அவ்வளவுதான் என் எதிர்பார்ப்பு:).. இனிமேல் நோட்டிபிகேசன் போட்டு விடுங்கோ, என் பக்கம் ஓபின் பண்ணத் தேவையில்லை எல்லோ...

      நன்றி கீதா நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...  வாங்க... வாங்க...

      நீக்கு
    2. துரை அண்ணா வாங்க டக்கென்று சென்னையிலிருந்து இடையில் தஞ்சைக்கும் போய் உங்க வீட்டுல ஒரு கால் வைத்து மாமனிதர்களைப் பார்த்துவிட்டு எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் மீண்டும் இங்கு வந்தாச்சு...!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  4. வாவ்!!! ஸ்ரீராம் உங்களிடமிருந்து ஒரு தொடர் கதை வந்திருப்பது மிகுந்த சந்தோஷம்...ஆரம்ப வரியே ஈர்க்குதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா... சிறுகதையாகத்தான் நினைத்தேன்.  ஆனால் தொடருது...   எப்போ தொடர்வேனோ!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா.. என்ன இது என்னைப் போலவே பேசறீங்க எப்ப தொடருவே........னோன்னு... ஸ்ரீராம் தொடக்கத்தின் ஒரு வரி + அடுத்த பாரா எங்க நட்பூவின் (அது யாருன்னு உங்களூக்கே தெரியுமே!!!! இப்படி ரகசிய பாஷை பேசினால்தான் நம்ம சரித்திரக் கதை புகழ் எழுத்தாளருக்கு புகை வந்து சரித்திரத்தை ஆராயத் தொடங்குவார்!!!!!!!) அம்சம் தெரியுதே!!!! ஏஏஏஏஏஏஏஏஏ...ஹா ஹா ஹா ஹா...ஆனா எங்க நட்புக்கு வயசாகலை தெரியுமோ!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. தோ ஒரு உந்துதலில் தொடங்கி விட்டேன்.  இதெல்லாம் அதே மூடிலேயே எழுதி முடித்தால் ஆரம்பித்த உணர்வு அதில் வெளிவரும். அப்புறம் நம் மூடுக்குத் தகுந்த மாதிரி கதையும் திசைமாறிவிடும் அபாயம் இருக்கே கீதா....

      நீக்கு


    4. இந்த எழுத்தை முந்தைய பின்னூட்டத்தில் முதலில் சேர்த்துக்கொள்ளவும்.   எங்கோ பராக்குப் பாத்துக்கொண்டு இங்கேயே தங்கிவிட்டது!

      நீக்கு
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:)

      நீக்கு
  5. பதில்கள்
    1. இந்தக் கதையா?   எந்தக் கதை?  அந்தக் கதை இல்லை என்றே நினைக்கிறேன்...   ஆமாம்...    அது என்ன கதை!

      நீக்கு
    2. வாழ்த்துகள் ஸ்ரீராம். இனிய காலை வணக்கம்.
      அவர் நடந்து வருவதை கோபுலு வரைந்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்கிறேன்.
      ஏன்பா ஒரு அப்பாவை இப்படிப் படுத்தணும்
      தொடர்கதை சஸ்பென்ஸ் எல்லாம் இருக்குமோ.
      பழைய கதை பைண்டிங்க் உங்களிடம் இருக்கிறதா. நான் படிக்கக் கிடைக்குமா ஸ்ரீராம். அத்தனை கதைகளையும் படித்தவள் தான்.
      வையவன் மிகப் பிடிக்கும். சூடாமணி கேட்கவே வேண்டாம்.

      ஜெயகாந்தன் அப்படிச் சொன்னதை நானும் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா...    இனிய காலை வணக்கம்.  ஆமாம்..   அப்பா சேர்த்த்து வைத்த புத்தகங்கள்.  அவர் வேறு யாருக்கேனும் கொடுத்து விடுவாரோ என்று பயந்து அவர் இருக்கும்போதே என்னிடம் மாற்றிக்கொண்டேன். 

      கோபுலு படமா?  ஐ...    நல்லாயிருக்குமே...     

      நன்றிம்மா.

      நீக்கு
    4. /// ஆமாம்!.. அது என்ன கதை!?...///

      அதானே!..
      அது என்ன கதை?..
      இது என்ன கதை?..

      ஓ.. அதுதான் கதையா!..

      நீக்கு
    5. என்னவோ கதையாயிருக்கு.    ஒண்ணும்புரியலை!

      நீக்கு
    6. நல்லவேளை...

      ஒன்னும் புரியாததே கதையாகி இருக்கு!..

      நீக்கு
    7. ஊ...ஹூம்...நான் இந்த விளையாட்டுக்கு வரலை!

      நீக்கு
  6. நவராத்திரி மும்முரத்தில் விடுபட்ட பிறகெ
    அனேக பதிவுகளைப் படிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
    எல்லோரும் உற்சாகமாக அழைக்குபோது போகாமல் இருக்க முடியவில்லை.
    வந்திருக்கும், அன்பு துரை, கீதா ரங்கன் எல்லோர்க்கும் இனிய தினமாக அமைய வாழ்த்துகள். வரப் போகிறவர்களுக்கும் வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவராத்திரிக் கொண்டாட்டங்கள் அங்கும் சிறப்பாக நடைபெறுவது சந்தோஷமாக இருக்கிறது.   கொண்டாடுங்கள் அம்மா.

      நீக்கு
  7. ஆனால் வேறு அதனால் வேறு இல்லையோ ஸ்ரீராம்.
    எழுதிக் கொண்டிருக்கும் போதே

    நிகழ்காலம் கடந்து எதிர்காலம் வந்து கொண்டிருக்கிறது.
    நேற்று நடந்தது இன்று நினைவாகிறது.
    அழகான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா...    அதனால்தான் அதை அப்படிச் சொல்லியிருக்கிறேன்.

      நீக்கு
  8. புதிய தொடர்கதை ஆரம்பமா? தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...     தொடர்கதை என்றில்லை.  சிறுகதையையே தொடராகக் கொடுக்க நினைத்தேன்!  சரியாக வருமா, தெரியவில்லை!

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பானுமதி எழுதினதோ? நல்ல சரளமான ஓட்டம். நான் இப்போப் படுக்கப் போயிட்டுக் காலம்பர வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அக்கா தூக்க கலக்கமா? ஸ்ரீராம்தான் தான் பெயரை கோட்டை எழுத்தில் பொறித்திருக்கிறாரே? இருந்தாலும் நல்ல விஷயத்தை பார்க்கும் பொழுது என் நினைவு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா...    பானு அக்கா சொல்லியிருப்பது போல தூக்கக் கலக்கமா?   என் பெயர் மேலே போட்டிருக்கிறேனே....   முன்னர் இப்படிப் பெயர் போடாமல் வெளியிட்டபோது நெல்லைத்தமிழன், அதிரா எல்லாம் சொன்ன யோசனைதானே இது!

      நீக்கு
    3. ///பானுமதி எழுதினதோ? //

      ஹா ஹா ஹா ஸ்ரீராம் இன்னுமா அங்கு இருக்கிறீங்க வேட்டியுடன்?:)) ஹா ஹா ஹா

      ஹையோ ஹையோ.. கீசாக்கா...[ஒரு காலத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன்:)) இப்போ ரொம்ப ஷார்ப்பாகிட்டேன்:))]

      நீக்கு
    4. இல்லை அதிரா...      வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு நடையைக் கட்டிட்டேன்!

      நீக்கு
    5. ஹா ஹா ஹா கீசாக்கா வந்து இப்போ கலைக்கப்போறா.. வேட்டியுடன் ஓடத் தெரியுமோ ஸ்ரீராம்?:)

      நீக்கு
  10. நான் வருவதற்குள்ளே நூற்றுக்கு மேலே கருத்துகள் பதிவாகி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா அக்கா...   அவ்வளவு எல்லாம் வராது!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கீசாக்கா எழும்பி வரும்போது ஒண்ணேரை செஞ்சரி அடிச்சிடும்:))

      நீக்கு
  11. நிறைய இல்லங்களில்,அம்மாவுக்கு,
    அப்பா பழசாகி விடுகிறார். மஹா சோகம்.

    நல்ல வேளை என் மாமியார், அம்மா யாரும் அதைச் செய்யவில்லை. நானும் தான்.
    அப்பாக்கள் காக்கப் பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற வார வியாழனில் என்று ஞாபகம்...   இதைப் பற்றிப் பேசியிருக்கிறோம்...   இல்லையாம்மா?

      நீக்கு
    2. ஆமாம் மா. துரையும் ஒரு கதை எழுதி இருந்தாரே.
      அந்தக் கோவில்கள் பற்றி விவரம் சொல்லும் தந்தை.
      அப்பாக்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
    கதை, மற்றும் கதம்ப செய்திகள் அனைத்தும் அருமை.
    மீண்டும் வருகிறேன் கருத்து சொல்ல.

    //பொறுப்பான பணியாளர்! சபாபதியிஸம்!//

    ஏதோ ஏதோ தொந்திரவு செய்யும் சிந்தனைகளில் இருந்த எனக்கு இந்த' சபாபதியிஸம்' சிரிப்பை வரவழைத்து விட்டது. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா வந்தாச்சா சூப்பர்!!! திங்கள் கிழமை பார்த்தேன் என்னை விசாரித்து...மிக்க நன்றி அக்கா...ஆனால் அப்புறம் மீண்டும் காணவில்லையே...

      கை கால் வலி எல்லாம் பரவாயில்லையா கோமதிக்கா.?

      கீதா

      நீக்கு
    2. வாங்க கோமதி அக்கா...    கால் வலி எல்லாம் தேவலாம்தானே?  என்ன ஏதேதோ சிந்தனைகள்?

      நீக்கு
    3. செவ்வாய்க்கிழமை வெளி வந்த கதையை படித்து கருத்து சொல்லி இருக்கிறேன் கீதா, தாமதம் ஆனதற்கு காரணம் சொல்லி இருக்கிறேன். பாருங்கள். நவராத்திரி என்பதால் உறவினர் வருகையால் கொஞ்சம் வேலை அதிகம், அவர்களும் உதவி செய்கிறார்கள். அப்படியும் வலி கொஞ்சம் இருக்கிறது.

      நீக்கு
    4. ஸ்ரீராம் , உங்கள் தத்துபித்துவம் கவிதை போல் நேற்றின் சிந்தனைகள் அவற்றை கடக்க முடியாமல் ஏற்பட்ட தடுமாற்றம்.

      நீக்கு
    5. அடடா...    கோமதி அக்கா என்ன என்று கேட்டால் மறுபடி கிளறி விடுவது போலாகும்.     அதெல்லாம் மறந்துடுங்க கோமதி அக்கா.

      நீக்கு
  13. சொன்னதை சொன்னபடி செய்தால் ஜோக் சூப்பர். வாய்விட்டு சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  14. தொடர்கதை என்றில்லை.  சிறுகதையையே தொடராகக் கொடுக்க நினைத்தேன்!  சரியாக வருமா, தெரியவில்லை!//

    நல்லபடியாக துவக்கியிருக்கிறீர்கள்..நன்றாக வளர்ந்து நன்றாக முடிய வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  15. லுங்கி என்றால் மடித்துக் கட்டிக்கொண்டு சுலபமாக நடந்து விடலாம். இதில் மடித்துக் கட்டினால் தொடை தெரியும் அசௌகரியம் இருந்தது. //

    நம்ம சங்கரன் அம்புட்டு குண்டா என்ன? தெரியலையே!!!!!!!!!!!!!!!!!!ஹிஹிஹி...ஸ்ரீராம் இது சும்மாதான்....(இது அடுத்த புகை...பூஸாருக்கு!!!!!!)

    நானும் என் மகன் வேட்டி கட்டத் தயங்கும் போது (அவன் லுங்கியும் கட்ட மாட்டான் எல்லாம் ஹாஃப் டிராயர் கேஸ்...சொல்லுவே அடுத்த வரியை...வேஷ்டியை நுனி ரெண்டையும் தைச்சு தரேன் இடுப்புல பெல்ட் போட்டுக்க என்று...இல்லைனா இடுப்பளவு எடுத்து மூட்டி சுற்றி வரும் பகுதியில் பேன்ட் போல பக்கிள் அல்லது பட்டன் தைச்சு தரேன்னும் சொல்லுவேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்ம சங்கரன் அம்புட்டு குண்டா என்ன? தெரியலையே!!!/


      நீங்க எங்கே பார்த்தீங்க கீதா...!  பூஸாரை எந்த வகையில் வம்பிழுக்கிறீர்கள் என்று எனக்குப் புரிய மாட்டேன் என்கிறது!

      நீக்கு
    2. ///நம்ம சங்கரன் அம்புட்டு குண்டா என்ன?///

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் இங்கின எங்கு வந்தார்ர்:))

      ஹா ஹா ஹா போகிறபோக்கில் ஆரையாவது கோர்த்து விட்டிடுவோம்ம்:)) காசா பணமா?:))

      நீக்கு
    3. ஹையோ ஹையோ ஸ்ரீராம்!!! வேஷ்டி கட்டுவது பற்றி...உங்கள் சிரமத்தை முனு சொல்லியிருக்கீங்க...அதான் ஸ்ரீராம் யார்னு எப்படி இருப்பார்னு கேட்டு கேட்டு மாஞ்சு போன பூஸாருக்கு கவரிமான் பரம்பரைக்குக் கொஞ்சம் போட்டுக் கொடுக்கலாம்னு பார்த்தா!!! ஹூம்...

      கீதா

      நீக்கு
  16. தான் எப்போதுமே சற்று முன்னே யோசிப்பவன் என்று முதுகில் மானஸீகமாகத் தட்டிக்கொண்டார்//

    ஹா ஹா நம்மை நாமேதான் பாராட்டிக் கொள்ள வேண்டுமாக்கும் இடையிடையே இல்லைனா வேற யாரு?

    இப்படிப் பாராட்டிக் கொண்டால்தான் உற்சாகமாகவும் இருக்க முடியும்!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே?  செய்யும் வேலையை உற்சாகமாகச் செய்ய வேண்டாமா?

      நீக்கு
  17. தொடர்கதையா? வெல்கம்! வெல்கம்! தி.ஜானகிராமன் சாயல் தெரிகிறது. விகடனில் வெளியான முத்திரை கதைகள் பற்றி செய்தியில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களின் பெயர்களை படிக்கும் பொழுதே சிலிர்க்கிறது. எப்படிப்பட்ட எழுத்தாளர்கள்! என்னவொரு பொற்காலம்! ஹூம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தி.ஜானகிராமன் சாயல் தெரிகிறது.//

      அக்கா...அநியாயமா சொல்லாதீங்க...  அவர் மலை.

      ஆம், அந்தப் பெயர்கள் எல்லாம் நினைவலையை மீட்டுகின்றன.

      நீக்கு
    2. ஏற்கனவே ஒரு தடவை, லாசரா வந்து போனதைக் கவனித்தேன். இன்னிக்கு தி. ஜா. -வா.. வரட்டும் !

      நீக்கு
    3. வாங்க ஏகாந்தன் ஸார்...

      //ஏற்கனவே ஒரு தடவை, லாசரா வந்து போனதைக் கவனித்தேன்.//

      அது எங்கே?  எப்போ?

      நீக்கு
    4. எபி-ல் கதை வெளியிட்டால் மட்டும் போதுமா! அதற்கு வரும் பின்னூட்டங்களையும் கவனித்தால்தானே புரியும்!

      நீக்கு
  18. பிலஹரியின் கதையை வெளியிடுவதாக இருந்தால் என் விருப்பம் 'ப் ....பூ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?   குறித்து வைத்துக்கொள்கிறேன்.  கிருஷ் ஸார் இப்போதெல்லாம் இந்தப் பக்கம் வருவதில்லை போல...

      நீக்கு
    2. அப்படி நீங்களாகவே நினைத்துக் கொண்டால் எப்படி ஸ்ரீராம்? வருகிறேன் படிக்கிறேன், அரட்டையில் கலந்து கொள்கிற மூடு இருந்தால் மட்டுமே கமென்ட் எழுதுகிறேன். என்னைமாதிரி சீரியசான ஆசாமிகளுக்கு அரட்டை எல்லாம் கொஞ்சம் காஸ்டலியான சமாசாரம் இல்லையோ? :-)))

      நீக்கு
    3. அப்புறம் ஸ்ரீராம், உங்கள் கைவசம் இருப்பதே பிலஹரியின் 4 கதைகள் தான்! அதிலும் என்ன கஞ்சத்தனம்? சௌகரியப்படும்போது டைப் செய்து வைத்துக் கொண்டால், நேரம் வாய்க்கும்போது ஒவ்வொன்றாக வெளியிட ஏதுவாக இருக்குமே!

      தவிர பிலஹரி போல மறந்துபோய்விட்ட எழுத்தாளர்களை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேறு வழி இருக்கிறதா?

      நீக்கு
    4. வாங்க கிருஷ் ஸார்...    என்னிடம் கையில் கிடைத்த இந்தப் புத்தகத்தில் நான்கு கதைகள்.    மற்ற புத்தகங்களில் என்ன இருக்கிறதோ..  எவ்வளவு இருக்கிறதோ...   நினைவில்லை.  ஓகே, ஒவ்வொன்றாய் போட்டு விடலாம்.

      நீக்கு
  19. பஜ்ஜியும், வடையும் வாசனையும் புதன் கிழமை கேள்விக்கான பதில் ஹா ஹா ஹா ஹா

    இது வரை வாசித்ததில் சங்கரன் பாவம் என்று தோன்றுகிறது...

    சரி பார்ப்போம் சங்கரனின் அனுபவம் எப்படிப் போகிறது என்று. நல்ல கோணத்தில் கதை தொடங்கியிருக்கிறது அதாவது ஒரு கணவனின் பக்கமான உணர்வுகள்.

    சமீபத்தில் கூட கீதாக்கா மற்றும் ஒரு சிலர் பெண்கள் குழந்தைகள் பெரிசான பிறகு கணவனைக் கண்டுக்கமாட்டாங்கனு. நீங்க கூடச் சொல்லியிருந்த நினைவு.

    எனக்கு அது புதிதாகவே இருந்தது. என் கண்ணில் அப்படி இதுவரை யாரும் படாததால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... எல்லாப் பெண்களும் அப்படித்தான். பாருங்க... நான் ஶ்ரீராம்லாம் மனைவி, பாஸ் என்று குறிப்பிடுவோம். பண்கள் நல்ல விஷயத்துக்கு கணவரைப் பற்றி எழுதியிருக்கறதா ஹிஸ்டரி ஜ்யாக்ரபி உண்டா? எதை எடுத்தாலும் பசங்க, பெண்கள்...

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன் என்னையும் சேர்த்துக்கொண்டிருப்பதால் அவரை ஆ......தரிக்கிறேன்!    கண்டுகொள்ளப்படாத கணவன்மார்கள் பற்றி சென்ற வாரம்தான் பேசினோம் கீதா.

      நீக்கு
    3. நெல்லை, ஸ்ரீராம், நான் கணவர் புகழ் பாடுகிறேனே! அவர்களுக்கு அப்புறம் தான் பிள்ளைகள், பேரக்குழந்தைகள்.

      //"விசாலி.. ஒரு டோஸ் காஃபி குடேன்"//

      //கிச்சன் வாசலைப் பார்த்தவாறு காத்திருந்தார்.//

      நிறைய வருடம் உடன் வாழ்ந்த மனைவிக்கு கணவனுக்கு எந்த நேரம் என்ன வேண்டும் என்று தெரியதோ!

      தேவை அறிந்து மார்கட் போய் வந்த கணவருக்கு காப்பி கொடுத்து இருக்கலாம், இவரும் சமையல் அறையில் போய் வாங்கி இருக்கலாம்.
      விசாலி காப்பி கொண்டு வந்து கொடுத்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    4. கோமதி அக்கா...    ஒரொருத்தர் மனப்பாங்கு ஒரொரு மாதிரி இருக்கும் இல்லையா?  

      நீக்கு
    5. ஆமாம், ஸ்ரீராம், ஊரிலிருந்து பேரக்குழந்தைகள் வந்து விட்டால் தலை கால் புரியாமல் மறந்து போகும் சில நேரம் என் அத்தைக்கு , அப்போது என் மாமா சொல்வார்கள் அத்தையிடம் பேரக்குழந்தைகளை கண்டவுடன் என்னை மறந்து விட்டாய் என்று.

      நீக்கு
    6. அப்போ சில நேரங்களில் சில சந்தர்ப்பங்கள்!

      நீக்கு
    7. //நெல்லைத்தமிழன்3 அக்டோபர், 2019 ’அன்று’ முற்பகல் 10:05
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... எல்லாப் பெண்களும் அப்படித்தான். பாருங்க.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தாம்ஸ் கரைக்கு கொஞ்சம் வரவும் நெ.தமிழன்..:))

      அஞ்சூஊஊஊ ரெடியா நில்லுங்கோ:))

      நீக்கு
    8. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரா எனக்கும் ஒரு டிக்கெட் போடுங்க!!! நானும்!!

      கீதா

      நீக்கு
    9. என்னாது எல்லா பெண்களுமா ?? கர்ர்ர் இதோ வந்துட்டேன் 

      நீக்கு
  20. முதல் ஜோக் படம் கோபுலுதானே? இல்லையோ?

    அதானே ங்க்கக்கா நம்மை பேய்க்காட்டிட முடியுமாக்கும்!!! செம ஜோக் ஹா ஹா ஹா...

    அதே போல ரெண்டாவது ஜோக்கும் செம...அதானே கரீக்டுதானே பெயர்!!! ஹா ஹா ஹா அப்ப வந்த நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாம் என்ன அழகான நகைச்சுவை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படமும் வாணிதான் கீதா...    

      //அப்ப வந்த நகைச்சுவைத் துணுக்குகள் எல்லாம் என்ன அழகான நகைச்சுவை!/

      அப்படியும் சொல்ல முடியாது கீதா...    சில ஜோக்ஸெல்லாம் இதையும் சிரிப்பார்களென்று நம்பிப் போட்டிருக்கிறார்களே என்று தோன்றும்!

      நீக்கு
  21. பிலஹரி பற்றி கிருஷ் சார் பகுதியில் போய் வாசிக்க வேண்டும். இதுவரை பெயர் தான் கேட்டிருக்கிறேனே தவிர வேறு எதுவும் தெரியாது ஸ்‌ரீராம். இப்ப இப்படி வாசித்துத் தெரிந்து கொள்ளும் போது அட எத்தனை அறிய முடிகிறது என்று சந்தோஷம். ஸோ...
    நோ சாய்ஸ் அவர் கதைகள் எதை நீங்கள் இங்கு பகிர்ந்தாலும் வாசிக்க ரெடி..

    நீங்கள் சொல்லியிருக்கும் எழுத்தாளர்களில் சிலரை அறிவேன் ஆனால் அதிகம் வாசித்ததில்லை என்பதால் இப்போதெல்லாம் அறியும் போது நெட்டில் சென்று அவர்களின் கதைகள் கிடைத்தால் வாசித்துவிடுகிறேன்..

    நன்றி ஸ்ரீராம் இப்படி அறியத் தருவதற்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு தேடுவது சற்றே கடினம் கீதா...     நடுவில் ஏதோ ஒரு சினிமா பதிவில் அவர் போட்டிருந்தார்.

      நன்றி கீதா.

      நீக்கு
    2. இதோ அந்த லிங்க் https://suvasikkapporenga.blogspot.com/2019/09/blog-post_21.html
      இதில் எழுத்தாளர் பிலஹரியைப் பற்றி பதிவில் கொஞ்சம்தான்! பின்னூட்டங்களில் ஸ்ரீராமும் நானும் கொஞ்சம் பேசியதுதான் அதிகம்!

      நீக்கு
  22. அந்தக் கதை பற்றி ரிஷபன் அண்ணா சொல்லியிருப்பது நோ ஆச்சரியம்...அதே போல இங்கு வல்லிம்மா, கீதாக்கா, பானுக்கா சொல்லிடுவாங்கனு நினைக்கிறேன்...ஆனா வல்லிம்மா சொல்லலையோ

    ஜெகே சொன்ன இந்தக் குறிப்பிட்ட நிகழ்வு தகவலே!! ஆனால் ஒன்று மட்டும் எங்கேயோ எப்போதோ ஏதோ ஒரு கிடைத்த தருணத்தில் வாசித்த நினைவு...அவர் படைப்புகளில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள மாட்டார் என்று வாசித்த நினைவு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதே போல இங்கு வல்லிம்மா, கீதாக்கா, பானுக்கா சொல்லிடுவாங்கனு நினைக்கிறேன்...ஆனா வல்லிம்மா சொல்லலையோ//

      இங்கு இன்னும் யாரும் சொல்லவில்லை கீதா.   வல்லிம்மா பேஸ்புக்கில் இதைப் படித்துக் கமெண்ட்டியிருந்தார்!

      நீக்கு
  23. கவிதை செம...வழக்கம் போல ஒரு சிறு சிந்தனை கூட அழகான வரிகளில்!

    ஆமாம் நேற்றை நினைவுகளில் தானே இன்றைய பொழுதே பல சமயங்களில் விடியுது!!! நாளை வர வர ஒவ்வொன்றும் நேற்றைய/கடந்த நினைவுகளாகித்தானே போகுது...

    செம ஸ்ரீராம்..மிகவும் ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  24. பணி ஓய்வு பெற்றால் தாத்தாவை எந்த பாட்டிகளும் மதிப்பதில்லை போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் தாத்தாக்கள் கில்லர்ஜி!!

      நன்றி.

      நீக்கு
    2. அப்படி இல்லை தேவகோட்டை ஜி, பேரக்குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டும், மகன் ஆபீஸ் கிளம்ப வேண்டும் தாத்தா வீட்டில் தானே! என்ற நினைப்பு இருக்கலாம்.
      ஆனால் ஸ்ரீராம் கதையில் உள்ளது போல் விஷாலி கண்வனுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்கமாட்டார் என்றால் மனது கஷ்டம் தான்.
      மருமகள், மகன், பேத்திக்கு கொடுக்கும் முன் உரிமையை கணவருக்கு கொடுக்கலாம்.

      நீக்கு
    3. நம் வீட்டில் எல்லாம் முதல் சாய்ஸ் வீட்டுத் தலைவர்களுக்குத்தான். குழந்தைகள் இருக்கும் போதும் சரி. இல்லை என்றால் குழந்தைகள் தங்கள் அப்பாவுக்கு என்ன பிடிக்குதோ அதைச் செய்யுங்க என்று சொல்லிடுவாங்க இல்லை என்றால் அப்பாக்கள் பசங்களுக்கு என்ன பிடிக்குதோ அது என்று சொல்லிடுவாங்க. இல்லை என்றால் அவரவர்க்குப் பிடித்தவை என்று இரண்டு மூன்று...செய்ய வேண்டிவரும்....பெரும்பாலும் ஆண்களின் சாய்ஸாகத்தான் இருக்கும். குழந்தைகள் கண்டிப்பாக அதைத்தான் சாப்பிட வேண்டும். இல்லை என்றால் சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை அதென்ன பிடிவாதம் என்றுதான் கேட்பாங்க.

      பெரும்பாலும் பெரிய ஆண்களின் மெனுதான் சமைக்கப்படும். அதில் எங்களுக்குக் கூட சாய்ஸ் இருக்காது. இப்போதும் என்ன சொல்லப்படுகிறோ அதுதான் சமைக்கப்படும் வீட்டில்.

      கீதா

      நீக்கு
  25. எட்டு வழிச்சாலையிலிருந்து கீழடி அகழ்வாராய்ச்சி வரை எல்லாம் அரசியலாகியிருக்கும் கால கட்டம் இது. எதையும் தங்கள் நலனுக்காக திரிந்து உபயோகிக்க தேர்ந்து இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியம்.

    ஆனால் அதெல்லாம் பற்றி வெள்ளந்தியாக இருக்கக்கூடாது என்பதற்காக சொல்ல வந்தேன்.
    ==================================================================

    மேலே இருப்பது கீதா ரெங்கனின் 'காணி நிலம் வெண்டும், பராசக்தி' கதைக்கு நான் போட்டிருந்த பின்னூட்டம்.

    பின்னூட்ட கடைசி வரியில் 'ஆனால் அதெல்லாம் பற்றி' என்றிருப்பதை 'அதனால் அதெல்லாம் பற்றி' என்று திருத்த வேண்டும் என்று நினைத்தவன் மறதியில் அப்படியே விட்டு விட்டேன்.

    நீங்கள் இந்தப் பகுதிக்கு தலைப்பாகவே போட்டு திருத்தி விட்டீர்கள். நன்றி, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  26. குடும்ப காலைச் சூழலில் தொடர் ஆரம்பம். ஆரம்பமே மனத்திற்கு இதமாக இருந்தது.

    நவீன கதையெல்லாம் கட்டுரை எழுதுகிற பாணி தான். இதிலிருந்து மீட்டு எடுத்து உணர்வு பூர்வமாக கதை பின்னுகிற பழைய பாணிக்கு எடுத்துச் செல்ல இந்தத் தொடர் போலவான எழுத்து முயற்சிகள் உதவும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு பலமளிக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.   வாழ்த்து சந்தோஷம் கொடுக்க வேண்டும்.  ஆனால் பயம்தான் வருகிறது!  வழுக்காமல் இருக்கவேண்டுமே!

      நீக்கு
  27. பிலஹரி அந்நாளைய மனம் கவர் எழுத்தாளர்.
    இவரது விகடன் சிறுகதை 'ஜடம்' தான் 'தெய்வத்தின் தெய்வம்' என்ற சிவாஜி நடித்த படம்.
    பிலஹரி விகடனில் அலுவலக குமாஸ்தா (க்ளார்க்) ஒருவரை முக்கிய பாத்திரமாகக் கொண்டு தொடர்கதை ஒன்று எழுதியிருந்தார். அந்தத் தொடரின் பெயர் 'நெஞ்சே நீ வாழ்க'-- என்பது போலவான ஒரு பெயர்! மறந்து விட்டது. அந்தக் கதை பின்னால் திரைப் படமாகியிருந்தது. ஏவிஎம் தயாரிப்பு என்று நினைவு. திருமலை (மற்றும் இன்னொருவர் பெயர் மறந்து விட்டது) சேர்ந்த இரட்டையர் டைரக்ஷன்.
    அந்தப் படம் பார்த்து மனம் நெகிழ்ந்த உணர்வில் அன்று இரவே உட்கார்ந்து அந்த டைரக்டர்களுக்கு எழுதுகிற மாதிரி நீண்ட கடிததில் என் உணர்வுகளை வடித்து எழுதி குமுதத்திற்கு அனுப்பி விட்டேன்.

    அடுத்த இதழில் எனது கடிதத்தை நடுபக்கத்தில் பிரசுரித்து அந்த இயக்குனர்களில் படங்களையும் போட்டு பிரமாதமாக குமுதம் பிரசுரித்திருந்தது.

    ஒரு வாரம் கழித்து எனக்கு போஸ்டல் கவர் ஒன்று வந்தது. பிரித்துப் பார்த்தால் 'எங்களை குமுதம் பத்திரிகையில் அறிமுகப்படுத்தி தமிழ் மக்களுக்கு எங்களைத் தெரியப்படுத்திய உங்கள் நல்ல மனத்திற்கு தெண்டனிட்ட நமஸ்காரங்கள். உங்களுக்கு நாங்கள் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறோம். உங்கள் உதவிக்கு நன்றி..
    நன்றி.. நன்றி.. நன்றி.. என்று எழுதி அந்த இரட்டையர் இயக்குனர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

    அந்தக் கடிதம் பள்ளிக்கூட (அந்த நாட்களில் 40 பக்க நோட்) ரூல் போட்ட நோட் புத்தகக் காகிதம் ஒன்றில் எழுதப் பட்டிருந்தது. சாய்த்து சாய்த்து எழுதிய மை பேனா எழுத்துக்கள். போஸ்டல் கவர். ஒவ்வொரு அம்சத்திலும் ஏழ்மை தாண்டவமாடியது மனசை ரொம்பவும் நெகிழ்த்தி விட்டது. உண்மையான கலைஞர்களின்
    நிலை எந்நாட்களிலும்.. என்ன சொல்வது.. இப்பொழுது அதை நினைத்தாலும் நெஞ்சில் பாரம் ஏறி உட்கார்ந்த மாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...    சுவாரஸ்யமான தகவல்.  பாராட்டுக்கும் பிரபலத்துக்கும் ஏங்கி இருந்திருப்பார்கள்.  குமுதம் போன்ற பத்திரிகையில் (அப்போதைய நிலையில்)  வருவது என்றால் அவர்களுக்கு மிகவும் சந்தோஷமாகி இருக்கும்.

      நீக்கு
    2. பிலஹரி பற்றி தகவல்கள் ஏதும் தெரிந்தால் சொல்லுங்களேன் ஜீவி ஸார்.  கிருஷ் ஸார் தளத்தில் கூட நான் உங்களைக் குறிப்பிட்டிருந்தேன் - ஜீவி ஸார் வந்தால் அவர் பற்றி மேலதிக விவரங்கள் தரக்கூடும் என்று.  
      சமீபத்தில் மறைந்த மகரிஷியின் இயற்பெயர் பற்றியே பேஸ்புக் வாயிலாக சமீபத்தில்தான் படித்தேன்.

      நீக்கு
    3. நல்ல ஸ்வாரஸ்யமான தகவல்கள் ஜீவி அண்ணா.

      அதுவும் அந்தக் கலைஞர்கள் பாவம் இல்லையா எத்தனை ஏக்கத்துடன் இருந்திருப்பார்கள்....மனம் நெகிழ்ந்துவிட்டது...

      கீதா

      நீக்கு
  28. // (ஜீவி ஸார்... கோச்சுக்கராதீங்க... எங்கேயோ படித்ததைதான் நினைவிலிருந்துதான் சொல்கிறேன்..) சாவிக்கு அதில் விருப்பமில்லை என்றாலும்.. //

    அவர் சாவி இல்லை.. மணியன். விகடன் லைப்ரரியில் ஜெயகாந்தனின் 'ஒரு பிடிச் சோறு' என்ற முதல் சிறுகதை தொகுப்பை
    (எழுத்தாளர் விந்தனின் ஸ்டார் பிரசுரம் வெளியிட்டது) மணியன் படித்து விட்டு, பிரமித்து, இவர் விகடனில் எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைத்து, விகடன் ஆசிரியர் வாசன் அனுப்பி, ஜெயகாந்தனைத் தேடி அவர் வீட்டிற்குப் போகிறார்.

    விக்டனில் எழுத சில நிபந்தனைகளைப் போடுகிறார் ஜெயகாந்தன். அவற்றில் ஒன்று: 'எனக்குத் தெரியப்படுத்தாமல் என் கதையில் எந்தப் பகுதியையும் நீக்கக் கூடாது. அப்படிச் செய்ய நேரிட்டால் எனக்குத் தெரியப்படுத்தி விட்டு செய்ய வேண்டும்.' இதுவரை இந்த மாதிரி எதுவும் அறிந்திராத ஆனந்த விகடன் அதற்கு ஒப்புக் கொள்கிறது. எழுத்தாளர்களின் தார்மீக பலத்தை தனது இளம் வயதிலேயே தோளில் தூக்கிச் சுமந்தவர் ஜெயகாந்தன். விகடனுக்கும் சரி, ஜெயகாந்தனுக்கும் சரி, அது ஒரு பொற்காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   ஓகே ஸார்...    பதிவில் நான் திருத்தவில்லை.  நீங்கள் சொல்லியிருக்கும் திருத்தமே போதும்.

      நீக்கு
    2. இல்லை. அது சாவிதான். மணியன் எழுதினது அவரது கற்பனை, அடுத்தவர் பெருமையைத் தட்டிப் பறிக்கும் செயல். சாவி கோபக்கார்ர். ஆனால் சூது வாது அறியாதவர். மணியன் ஆளுக்கேற்ற ஜால்ரா.

      சாவி இதனைப்பற்றி தன் புத்தகத்தில் எழுதியபோது சம்பந்தப்பட்ட ஆசிரியர் பாலசுப்ரமணியம் விகடன் பொறுப்பில் இருந்தார்

      நீக்கு
    3. சபாஷ்...     சரியான போட்டி!!!!!

      நீக்கு
  29. சாவி பிற்காலத்தில் ஆசிரியராக இருந்த பொழுது தான் தினமணிக் கதிரில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதரகள்' பிரசுரமானது. இந்த தொடருக்கு ஆரம்பத்தில் 'காலங்கள் மாறும்' என்று தலைப்பிட்டு விட்டு பின்னால் 'சி.நே.சி. மனிதர்கள்' என்று ஜெயகாந்தனே மாற்றினார்.. தினமணிக்கதிரில் ஜெயகாந்தனின் சோதனை முயற்சிகளை வெளியிட்டு மகிழ்ந்தவர் சாவி. அவரைப் போய்....

    பதிலளிநீக்கு
  30. இப்பொழுது நினைவுக்கு வந்து விட்டது, ஸ்ரீராம்!

    அந்த இரட்டையர் இயக்குனர்களின் பெயர்கள்: திருமலை - மஹாலிங்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ...    நான் கேள்விப்பட்டதில்லை ஜீவி ஸார்.

      நீக்கு
    2. ஆமாம். திருமலை மஹாலிங்கம்.
      ஸாது மிரண்டால், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படங்கள் நினைவுக்கு வருகிறது, படங்களை

      பாவம் எத்தனை எளிமை.நன்றி ஜீவீ சார். ஸ்ரீராம்.

      நீக்கு
  31. அந்தத் திரைப்படத்தின் பெயரும் சட்டென நினைவுக்கு வந்தது தான் இன்னொரு ஆச்சரியம்: அந்த படத்தின் பெயர்: ஆலயம்.
    மேஜர் நடித்த படம் என்று நினைக்கிறேன். மேஜர் அப்பொழுது தொலைபேசி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலயம் என்றொரு பிற்காலப் படம் கூட உண்டு என்று நினைக்கிறேன்.  அல்லது நங்கூரம் படத்தில் வரும் 'ஆலயம்...' என்கிற பாடல் வரிகள் என்னைக் குழப்புகின்றன!

      நீக்கு
    2. மேஜர் தொலைபேசி இலாக்காவில் பணிபுரிந்தவரா?  ஏஜி இல்லையா?

      நீக்கு
    3. மேஜர் தொலைபேசி மெக்கானிக்.
      ஏஜி ஆபிஸ் க்ளார்க் பாலச்சந்தர்.

      நீக்கு
    4. தொலைபேசி மெக்கானிக்!    அப்படியா?   கேபி பற்றித்தெரியும்.

      நீக்கு
  32. ஆஆஆஆஆஆஆ மீ லாண்டிங்.. எல்லோரும் சற்று அரக்கி நில்லுங்கோ.. அக்தை படிச்சிட்டேன்ன் டொடருமோ?:) அவ்வ்வ்வ் அப்போ ஒவ்வொரு விசாளனும் ஒழுங்கா பிரசண்ட் ஆகோணும் எல்லோரும்:).. அஞ்சுவை மிரட்டி வரவைப்பேன்:) அவதான் இப்போ அடிக்கடி காணாமல் போயிடுவா கர்ர்ர்ர்ர்ர்:)).

    //இன்னும் தலைப்பு வைக்கவில்லை//
    இதே ஒரு தலைப்புத்தான்:) ஹா ஹா ஹா.. வேஷ்டியுடன் வருபவரைப் பார்க்க எனக்கு அப்படியே வருங்கால ஸ்ரீராம் மாதிரியே தெரியுது ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவரிமியாவ் (நன்றி ஏஞ்சல்) 

      எனக்கு தொடர்ந்து எழுத ஒழுங்காய் வரணுமே வைரவா....

      நீக்கு
    2. //வாங்க கவரிமியாவ் (நன்றி ஏஞ்சல்) //

      ஹா ஹா ஹா அங்கு போய் இதைப்பார்த்திட்டுத்தான் இங்கு வந்தேன்:))... அதெல்லாம் மொட்டைமாடிக்குப் போனால் தானாஅ வந்திடும் ஸ்ரீராம் எழுதுங்கோ:))

      நீக்கு
    3. ஹா ஹா ஹா அதிரா வருங்கால ஸ்ரீராம்// அதே அதே அதுக்குத்தான் அப்பூடி கமென்ட் போட்டேன் அதிரா காதில் புகை வந்து சொல்லிடுவாங்கன்னு

      ஸ்ரீராம் புரிந்ததா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!இப்போ!!!

      கீதா

      நீக்கு
  33. //நசநசவென்று மழை பெய்துகொண்டிருந்தது//
    ஹா ஹா ஹா இது என்ன புதுவித மழை:)).. எனக்கு இதையும்.. இப்போ கொஞ்ச நாளாக நெல்லைத்தமிழன் ஒரு வேர்ட் பாவிக்கிறார்.. சவ்க் சவக்.. என இருக்கும் என.. அதையும் பார்க்கும்போது டக்கென கண்முன்னே வருவது பரோட்டா சூரிதான்:).. படப்பெயர் நினைவிலில்லை, அக்கா மகளை விரும்புவார் சூரி, அப்போ அக்கா மகளின் கொப்பியை எடுத்து அவவுக்கு கவிதை எழுதுவார்ர்..

    சடசடவென்றும்.. படபடவென்றும் ... இப்படி ஹா ஹா ஹா அந்தக் கட்டம் கண்முன்னே வந்து போய்க்கொண்டிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நசநச எனும் வார்த்தை மிகவும் பழகிய பழைய வார்த்தை ஆயிற்றே அதிரா...   என்ன இப்படிச் சொல்லிட்டீங்க....

      நெல்லைத்தமிழன் சொல்லும் வார்த்தைக்கு அர்த்தம் நமுத்துப் போயிருக்கிறது எனும் பொருளில் வரும்.

      பரோட்டா சூரி காமெடி பார்த்ததில்லை.. (நல்லவேளை!)

      நீக்கு
    2. //நசநச எனும் வார்த்தை மிகவும் பழகிய பழைய வார்த்தை ஆயிற்றே//

      பழைய வார்த்தைதான், ஆனா மழைக்குப் பொருந்துமோ:)).. எண்ணெய்ப்பசைக்குச் சொல்லுவினம் என நினைக்கிறேன்:))

      நீக்கு
    3. மழைக்குதான் அதிகம் சொல்வார்கள் அதிரா.

      நீக்கு
    4. ஓ அப்படியோ.. இப்படி வார்த்தைகளை எதுக்கும் சொல்லலாம், படிக்க நன்றாகவே இருக்கு.. நான்கூட இப்படி நிறையச் சொல்லியிருக்கிறேன்ன்.. விதைகள் போட்டு முளைக்கையில்.. கிலுகிலு என முளைச்சிருக்குது என்பேன் ஹா ஹா ஹா:)))

      நீக்கு
    5. ஸ்ரீராம் தமிழில டி வாங்கினவங்களாக்கும் அவுக!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  34. //கஷ்டம் என்னவென்றால் அவருக்கு வேஷ்டி கட்ட வராது. . //

    ஹா ஹா ஹா இந்த வேஷ்டி கட்டுவது என்பது ஆண்களுக்குப் பெரிய ஒரு பிரச்சனைதான்... உண்மை ஒன்று சொல்லட்டோ.. நான் நல்ல அழகாக வேஷ்டி கட்டி விடுவேன்:)).. சின்ன வயசில் அப்பாவிடம் பழகிட்டேன்ன்.. சாறி உடுப்பதைப்போல வேஷ்டி கட்டுவதிலும் ஒரு தக்கினிக்கு இருக்கு:))..

    இக்காலத்துப் பிள்ளைகளுக்கு மொபைலுடனும், கேம் உடனும் பொழுது போய் விடுது, ஆனா முன்பு எங்களுக்கு.. பொழுது போக்கே.. அலுமாரியைத் திறந்து வைத்துப் போட்டு, அம்மாவின் சாறிகளை எடுத்து உடுத்துப் பார்த்து மடிச்சு வைப்பது, அப்பாவின் வேஷ்டியை எடுத்துக் கட்டிப் பார்ப்பது.

    அதிலும் நம் ஊரில் சின்ன வேஷ்டி.. சாரம் போல குட்டியாக இருக்குமே அது யாரும் கட்டுவதில்லை, வேஷ்டி எனில்.. பெரிய நீளமானதே கட்டுவினம், எனக்கு அந்த குட்டி வேட்டித் துண்டை உடுப்போரைப் பார்த்தாலே பிடிக்காது, ஏதோ துவாயைக் கட்டியிருப்பதைப்போல நடக்கும்போது கால்கள் தெரியும் கர்ர்ர்ர்:).

    இந்த பெரிய வேட்டியை கட்டுவது ஒரு கலை, உள்ளே ஒரு முடிச்சுப் போட்டு பின்பு சாறி உடுப்பதைப்போல பின் பக்கத்தால சுற்றி வந்து செருவுவார் அப்பா.. அப்ப்போ நடக்கும்போது கால் தெரியாது, தடக்கவும் மாட்டுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது பஞ்சகச்சம் வகையறாவோ...     அது கட்ட நிறைய பேர்களுக்கு வராது கவரிமியாவ்... நீங்கள் அந்தக் கலையை அறிந்திருப்பது ஆச்சர்யம்.

      நீக்கு
    2. //கவரிமியாவ்//
      ஹா ஹா ஹா இப்பூடியே வச்சிருக்கலாமோ என் பெயரி என நினைக்க்கிறேன்.. அழகா இருக்கு..

      பஞ்ச கச்சம் எனில், ஐயராட்கள் உடுப்பதெல்லோ? அது கால் இடையில் கொடுத்து உடுப்பார்களே அதுவோ.. தெரியவில்லை, இது சிம்பிள்தான், ஆனா உள்ளே நல்ல இறுக்க முடிச்சு போட்டு விட்டால், வெளிப்பக்கம் ஆரும் கால் மிதிபட்டுக் கழண்டாலும் பாதகமில்லை... அப்படியே அழகாக நிற்கும் வேட்டி.

      நீக்கு
    3. தமிழர்கள் பெரும்பாலும் வேஷ்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பொங்கல் சமயத்திலும் வேஷ்டி உபயோகிப்பது குறைவு. மலையாளிகள் ஓணத்தின்போது பெரும்பாலும் சரிகை வேஷ்டிதான். சமீபத்தில் ஆக்ரா போயிருந்த அன்று ஆக்ரா கோட்டைக்கு நிறைய மலையாளி இளைஞர்கள் வேஷ்டியுடன் (ஓணம்) வந்திருந்தனர்.

      நீக்கு
    4. இப்போதைய இளைஞர்களுக்கு வேட்டி கட்டும் விருப்பம் இருக்கு ஆனா சந்தர்ப்பம் அமைவதில்லை என நினைக்கிறேன்.

      நீக்கு
    5. அதிரா நீங்க சொல்லியிருக்கும் கட்டும் முறை தெரியும். அங்கு அப்படித்தான் கட்டுவார்கள்... டிராமாக்களில் அப்படித்தான் கட்டுவதுண்டு. விழாமல் இருக்க, எனக்கும் கட்டத் தெரியுமே ஹிஹிஹி இங்கு கட்டப்படும் பஞ்சகசமும் கட்டத் தெரியும்!!!!!

      ஸ்ரீராம் அதிரா சொல்லியிருப்பது பஞ்சகசம் போன்று இல்லை பார்க்க அப்படித் தோன்றினாலும்...உள்ளே முடிச்சுப் போட்டுக் கட்டுவது...அவிழாது..

      நெல்லை கேரள ஆண்கள் பெரும்பாலும் சாரம், காவி வேஷ்டி அல்லது வெள்ளை வேஷ்டிதான் கட்டுகிறார்கள் அங்கு இளைஞர்கள் கூட... இப்போதும்...அங்கெல்லாம் ஹாஃப் டிராயர் காண்பது வெகு அபூர்வம்.

      கீதா

      நீக்கு
  35. இம்முறை கனடாவில் சில கோயில்களுக்கு மகன்கள் இருவரும் வேஷ்டி கட்டினார்கள்.. [கட்டி விட்டார்கள்], முதல் நாள் சின்னவர் அடிக்கடி ஓடிவந்து கட்டி விடுங்கோ கட்டி விடுங்கோ என கோயிலில் என்னிடம் வந்தார்.. அடிக்கடி கழரத் தொடங்கி விட்டது.

    மற்ற நாள் அழகாக வேட்டி இடுப்பில் நின்றுது சின்னவருக்கு.. அன்று அத்தான் உடுத்து விட்டார், இது என்ன இன்று கழராமல் இருக்கே என அக்காவைக் கேட்டேன், அதுக்கு அக்கா சொன்னா.. இது ஒட்டு வேட்டி:)).. இப்போ இப்படிக் கிடைக்குது, சுத்திப்போட்டு ஒட்டி விட்டால் அசையாமல் இருக்கும் என ஹா ஹா ஹா.

    எனக்கு இப்படிக் கனடாவில் கோயில்களுக்குப் போவதில் ஒரு மகிழ்ச்சி என்னவெனில், வீட்டில் எனில் சேட் இல்லாமல் இருக்க மாட்டினம்.. வெக்கை காலத்தில் கூட கழட்டச் சொன்னால் கழட்ட மாட்டினம்[அது என் கணவரின் பழக்கதோசம்:)ஹா ஹா ஹா], ஆனா கோயிலில் எல்லோரோடும் சேர்ந்து சேட் கழட்டி, வேட்டி கட்டி.. சுவாமி காவினார்கள்.. பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாகவும் கண்கலங்கியும் விட்டேன்...ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயும் வேஷ்டி கட்டிதான் கோவிலுக்குள் செல்ல வேண்டுமோ...    உங்கள் மகன்கள் அதற்குள் வேஷ்டி கட்டிப் பழகுவது நல்ல விஷயம்.  ராம்ராஜ் வேட்டிகளில் 'ஒட்டிக்கொ கட்டிக்கோ வேஷ்டி' பிரபலம்.   நான் அதை வாங்குவதில்லை. பஞ்சகச்சம் கட்டிக்கொள்ள எனக்கு தெரியுமாக்கும்!

      நீக்கு
    2. //பஞ்சகச்சம் கட்டிக்கொள்ள எனக்கு தெரியுமாக்கும்!//

      ஹா ஹா ஹா இங்கே யாருக்கெல்லாம் வேட்டி கட்டத் தெரியுமோ தெரியல்லியே:))

      நீக்கு
    3. கணவரைப் பற்றிய வரிகள் நகிழ்ச்சி. காரணம் வெளிநாடு போயும் கோவில் வாய்ப்பு வந்தபோது அதற்கேற்றவாறு இருப்பது.

      எனக்கு சட்டை போடவே பிடிக்காது. வீட்டில் சொல்லியும் திருந்தவில்லை ஹாஹா. சில கோவில்களில் சட்டை கழட்டிவிட்டு உள்ளே போகணும்னா எனக்கு கஷ்டமாயிடும். சட்டைல உள்ள காசை எதில் வைப்பது, சட்டை, பனியன் கழட்டி பிறகு மாட்டும்போது கசங்கி இருக்கும்.

      இந்த ஊரில் வந்து டவுசருடன் சுற்றுவது குறைந்து வேஷ்டிதான். ஹாஹா

      நீக்கு
    4. ஆஆஆ நெல்லைத்தமிழனும் வேஸ்டி கட்டத் தெரியும் என்பதை சொல்லாமல் சொல்லிட்டார்ர்:)).. உங்கள் எல்லோருக்கும் ஒரு ரகசியம் சொல்லட்டோ:)) ரகசியம் எனில் வெளியே சொல்லிடக்கூடாது ஓகே:)).. அஞ்சுவுக்கு சாறி கட்டத் தெரியாதாக்கும்:)).. ஹா ஹா ஹா மீ அந்தக் கவரிமான் கூட்டுக்குள்ளேயே ஓடிப்போய் ஒளிக்கப்போறேன்ன்:))

      நீக்கு
    5. கர்ர்ர் :) ஆனால் ஒன்னு அதிரா இந்த ஸ்ரீலங்கன்ஸ் அப்புறம் பஞ்சாபியர்கள் மட்டும் அவங்க திருமணம் கோயில் போன்ற விழாக்களுக்கு இன்னமும் புடவை பாவாடை தாவணியில் வராங்க பார்க்க குளுமையா இருக்கும் .

      நீக்கு
  36. //''இவ்வளவு வயசாறது.. வேஷ்டி கட்டாம என்ன லுங்கி கிங்கி எல்லாம்... நல்லாவே இல்லை" என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நேரம்.//

    ஓ இப்படியும் ஒன்றிருக்கோ... இது எவ்ளோ தப்பு... வயசானாலும் இளமையானவர்போல இருப்பதில் என்ன தப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய வீடுகளில் இந்தக் குரல் ஒலிப்பதுண்டு!

      நீக்கு
    2. //நிறைய வீடுகளில் இந்தக் குரல் ஒலிப்பதுண்டு!//
      நான் இதற்கு எதிர்... எப்பவும் இளமையாக இருக்கோணும் என நினைப்பேன்.. [நான் எனப்து நான்மட்டுமில்லை:)]... ஆனா சிலர் இளமையாக இருக்கிரேன் என, பிள்ளைகளைக் காட்டிலும் அசிங்கமாக உடுப்பு அணிவது கெயார் ஸ்டைல் பண்ணுவது அதுவும் பிடிக்காது... வயசுக்கேற்றபடி அழகாக இளமையாக இருக்கப் பழகோணும்..

      நீக்கு
  37. //ஒய்வு பெற்றதில் சௌகர்யங்களை விட அசௌகர்யங்களே அதிகமோ என்று தோன்றியது.
    //
    உண்மையை அழகாக சொல்லிட்டீங்க.. பெரும்பாலான இடங்களில் காண முடியுது... இது முழுக்க முழுக்க மனைவி அமைவதைப் பொறுத்தது.. சில மனைவிமார்களுக்கு கணவன் வீட்டில் நிற்பது பிடிப்பதில்லை... சாகும்வரை உழைச்சுக் கொண்டே இருந்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சியே.. என்ன ஜென்மங்களோ இபடியான பெண்களெல்லாம் எனத்தான் எண்ணத் தோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாணயத்துக்கு ரெண்டு பக்கம்!

      நீக்கு
    2. அப்படி இல்லை ஸ்ரீராம், உலகில் பெரும்பாலான குடும்பங்கள், திருமணம் முடிச்சாச்சு குழந்தைகளும் வந்துவிட்டன .. இனி என்ன வாழ்ந்து முடிப்போம் எனவும் வாழ்கிறார்கள்.. ஏதோ ஒரு வீட்டுக்குள்ளேயே அந்நியர்போல.. நிறைய இடங்களில் பார்த்து படிச்சு கவலைப்பட்டிருக்கிறேன், ஒருவர் பேஸ் புக்கில் சொன்னார், தன் நண்பர், 2,3 வருடத்துக்கொருமுறை ஒருமாத லீவில் ஊருக்குப் போனால், 15 நாட்களிலேயே மனைவியுடன் சண்டை வந்து நிற்க முடியாமல் திரும்பி விடுவாராம்.. சொல்வதெல்லாம் உண்மையிலும் இப்படி சிலது பார்த்தேன்.. மனைவிமார் சண்டையிட்டே கலைத்து விடுவார்களாம்.. அப்போ ஓய்வுபெற்றால் இவர்கள் நிலைமை எப்படி இருக்கும்..

      ஏதோ மனம் ஒத்துப் போகாமையாலே தானே இப்படி நடக்கிறது.. இங்கெல்லாம் வயசான தம்பதிகள் பார்க்க மிக அழகாக இருக்கும்... ஒருநாள் சூப்பர்மார்கட்டில் பார்க்கிறேன்.. இருவருக்கும் நல்ல வயசு, பொல்லுடன் நடந்தார்கள்.. அப்போ தாத்தா ஒரு பீன்ஸ் பக்கெட்டைத் தூக்கினார்ர்.. உடனே பாட்டி சொன்னா.. “வீ டோண்ட் நீட் தட்.. டார்லிங்”.. என..

      நீக்கு
    3. //..தாத்தா ஒரு பீன்ஸ் பக்கெட்டைத் தூக்கினார்ர்.. உடனே பாட்டி சொன்னா.. “வீ டோண்ட் நீட் தட்.. டார்லிங்”..//

      ஏன்? வேறொரு பாட்டியின் பக்கெட்டைத் தூக்கிவிட்டாரா!

      //.. பொல்லுடன் நடந்தார்கள்..//

      பொல்லுடன்? ஒருவேளை, பல்லுடன் நடந்தார்களோ! நடப்பதற்குப் பல்லும் தேவையோ அங்கேயெல்லாம்..
      என்ன கஷ்டம்டா இது.. பேசாம கிரிக்கெட்டே பார்க்கலாம்..!

      நீக்கு
    4. பொல்லுடன் புதிர் விலக நானும் காத்திருக்கிறேன்!

      நீக்கு
    5. ///ஏன்? வேறொரு பாட்டியின் பக்கெட்டைத் தூக்கிவிட்டாரா!//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏ அண்ணன்.. நீங்க பேசாமல் மச் ஐயே பாருங்கோ ஹா ஹா ஹா:))..

      பொல்லுத் தெரியாதோ வோக்கிங் ஸ்ரிக்கூஊஊஊஊஊஊஊஉ:))

      ஆண்டவா இப்பூடி ஒரு டமில்ல டி எடுத்த பிள்ளையைப்போட்டு படுத்தும் பாடிருக்கே:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. //..பொல்லுத் தெரியாதோ வோக்கிங் ஸ்ரிக்கூஊஊ..//

      பொல்லு-ன்னா வாக்கிங் ஸ்ரிக்கா ! இந்தப் பொல்லைக் கண்டுபிடிச்சவனின் பல்லைக் கழட்டினாலொழிய என் ஆத்திரம் தீராது!

      நீக்கு
  38. // ஸாதுசமாகம... ஸாதுசமாகம... ஸாதுசமாகம... சம்கீர்ணானாம்.... மனதை உலுக்கிக்கொண்டார்//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா..

      கீதா ரெங்கன் கம்முனு கடந்து சென்று விட்டார்!

      நீக்கு
    2. ஹையோ ஸ்ரீராம் நான் அதைச் சொல்ல வந்து இன்று பிஸியானதில் (ஏற்கனவே தேம்ஸ் பதிலுக்குப் போகலைனு அதிரா வருந்த....நான் தளமே போகாமல் இருந்து போனேனா....அதுல இதை மீண்டும் வந்து போட நினைத்து விட்டுப் போனேன்...அப்போது நான் சிரித்துக் கொண்டே என்ன போட நினைத்தேன் என்பது இப்போது மறந்தே போச்!!!!! ஆனால் அதை வாசித்து சிரித்துவிட்டேன்!!!! அதில் ஸ்ரீராம் பளிச்! சங்கரனில் பாதி ஸ்ரீராம்!!! ஹா ஹா ஹா ஹா வேட்டி, பாலமுரளி, பாட்டு என்று!!

      இன்று பலதும் கதையில் ரசித்தாலும் போட விட்டுப் போய்விட்டது ஸ்ரீராம். ஃபாஸ்டாக அடிக்க முடியவில்லை. கை ஒரு தடை என்றால் வேறு சில....!!

      கீதா

      நீக்கு
  39. //சோபாவில் அமர்ந்து சட்டையைக் கழற்றியவர், கிச்சன் வாசலைப் பார்த்தவாறு காத்திருந்தார்.//

    சூப்பராக போகுது கதை ஸ்ரீராம்.. அப்படியே நாமும் கூடவே பயணிப்பதைப்போல இருக்கு.. கூடவே மனதில் குட்டியாக ஒரு கவலையும் படருது.. பாவம் அவர் என்பதைப்போல.. தொடருங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...     பாராட்டுக்கு நன்றி கவரிமியாவ்....  தொடர்கிறேன்...   (முயற்சிக்கிறேன்!)

      நீக்கு
  40. //தொடர்கதை படிக்கும் காலத்தில் எனக்கெல்லாம் முன்கதைச் சுருக்கமே தேவை இல்லை. நாங்கள்தான் அடுத்த வாரம் என்ன என்று கா....த்திருப்போமே... இப்போது அந்த சுவாரஸ்யம் எல்லாம் போச்.... எனக்கு மட்டும்தானா? என்று எழுதி ஃபேஸ்புக்கில்போட்டேன்.//

    முங்கதை சுருக்கம் படித்தால் அடுத்து என்ன என்று சுவாரஸ்யம் போய் விடும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறந்தால்தானே அக்கா முன்கதைச்சுருக்கம் படிக்க?   அப்போதெல்லாம் ஒரே பொழுதுபோக்கு இதெல்லாம்தானே?!!

      நீக்கு
    2. ஆமாம், அப்போது தொடர்கதைக்கு காத்து கிடந்த காலம் ,பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தையும் முடிவு படிக்க மாட்டேன். தொடர்ந்து படிக்கத்தான் விரும்புவேன்.

      நீக்கு
    3. ஏற்கெனவே படித்துத் தெரிந்த கதைகள் விதிவிலக்கு!

      நீக்கு
  41. //யார் கிட்ட... எங்களை எல்லாம் ஏமாற்ற முடியாது... //
    ஹா ஹா ஹா சூப்பர்..

    பதிலளிநீக்கு
  42. ஓ இப்போதுதான் அறிகிறேன் தோண்டி, தவலை எனும் பெயர்கள்.. தோண்டி கேள்விப்பட்டதே இல்லை, தவலை என அறிஞ்சிருக்கிறேன் கதைகளில் ஆனா என்னவென இப்போதான் தெரியுது.. இப்படி இருக்கிறதே பெயர்கள் ஒவ்வொரு சைஸ் க்கு ஏற்ப...

    பேசின் எனத்தான் நாங்களும் சொல்வோம் ஆனா அது தமிழ் வார்த்தை இல்லையெல்லோ..
    டமரா வும் புது வார்த்தை.

    அதுதானே பெயர் சரியாத்தானே போடிருக்கிறார் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    இவ்வளவு பெயர்கள் இருப்பது இப்போதுதான் தெரியுமா?  ஆச்சர்யம்!

      நீக்கு
  43. //இதில் ஒரு தலைப்பைத் தெரிவு செய்துகொடுத்தால் அந்தக் கதையை டைப்பிப் போடுகிறேன்!
    //
    யாரைக் கேட்கிறீங்க ஸ்ரீராம்? தெரிவு செய்து தரும்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ் ஸாரைக் கேட்கிறேன்.   அவர் வராவிட்டால் பானு அக்கா விருப்பத்தைநிறைவேற்றிவிட வேண்டியதுதான்!

      நீக்கு
  44. //அவர் அனுப்பும் கதைகளை எடிட் செய்யக் கூடாதாம்...//
    உண்மைதானே.. எடிட் செய்யாமல் விட்டால்தானே சொந்தக் கதையாகவே தெரியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய பத்திரிகைகளில் அப்படி எல்லாம் விடமாட்டார்களே...!

      நீக்கு
  45. பேரன் வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு கொலு பொம்மைகளை எடுத்து படியில் வைக்கும் காட்சியை பையன் அனுப்பி இருந்தான்.
    மகனும், பேரனும் பொங்கல், நவராத்திரி, போன்ற பணிடைகை காலங்களில் வேஷ்டி கட்டி கொள்வார்கள்.

    பேரனுக்கு ஒட்டிக்கோ, கட்டிக்கோ வேஷ்டி வாங்கி கொடுத்து இருக்கிறேன்.
    மகன் வேஷ்டி அழகாய் கட்டிக் கொள்வான். என் அப்பா போல். என் அப்பா தழை தழைய அழகாய் வேஷ்டி கட்டி கொள்வார்கள் தினம்.வீட்டுக்கு லுங்கி கட்டிக் கொள்ள மாட்டார்கள் அப்பா.

    என் கணவர் குடும்பவிழா. கோவில்களில் பேசும் போது எல்லாம் வேஷ்டி கட்டிக் கொள்வார்கள்.

    என் மாமா திருவனந்தபுரத்தில் இருந்தார்கள் வேஷ்டிக் கட்டிக் கொண்டு ஒரு பக்க வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டு நடந்து போவார்கள் கேரள் பழக்கப்படி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேஷ்டி கட்டிக்கொள்வதே ஒரு கலையாகி விட்ட நாளில்,  அபூர்வமாகிப் போன நாளில் அதைத் தொடர்வது சந்தோஷம் கோமதி அக்கா.

      நீக்கு
  46. முன்கதைச் சுருக்கம் நன்றாக இருக்கு.. ஆனா என்னால எப்பூடிக் கண்டுபிடிக்க முடியும்..:)

    தத்துப்பித்துவம் அழகு.. எப்பவும் கவனிச்சுப் பாருங்கோ.. நமக்கு இன்றைய நாள் பிடிப்பதைவிட, கடந்துவிட்ட நாட்களை எண்ணியே ஏங்குவோம், ஆனா சில காலத்தால்.. இன்றைய நாளையும் எண்ணி மகிழ்வோம்:))..

    வாழ்க்கையிலும், நாம் எடுக்கும் படங்களைல்கூட அப்படித்தான்.. இன்று எடுக்கும் படத்தில் நாம் எவ்வளாவு அழகாக இருந்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை, 2 வருடம் முன்பு எடுத்த படத்தைப் பார்த்து மனம் ஏங்கும்:).. ஆனா இன்னும் சில காலம் போனபின், இன்று எடுத்ததைப் பார்த்து ரசிப்போம்...

    இதைத்தான் கையில் இருப்பதன் அருமை நமக்க்கு எப்பவும் தெரிவதில்லை, கைவிட்டுப் போனபின்னர்தான் தெரியும் என்பதன் உண்மைபோலும்:))..

    அழகிய தொகுப்பு ஸ்ரீராம் அனைத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவுரையாய் மொத்தமாய்த் தொகுத்துப் பாராட்டியமைக்கு நன்றி அதிரா...    சரியாய்ச் சொன்னீர்கள்.

      நீக்கு
  47. வியாழன் தொகுப்பு அதிரா சொன்னது போல் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  48. ஆஆஆஆஆஆஆஅ கேட்க மறந்த கதை...
    ஸ்ரீராம் உங்களின் நேற்றைய “திகில் இரவுக் கதை அனுபவம்”.. எப்போ சொல்லுவீங்க.. நேற்று நானும் அஞ்சுவும் கொஞ்சம் குழம்பிப்போய்க் கவலைப்பட்டோம்... அப்படி இருக்குமோ.. இப்படி இருக்குமோ என்றெல்லாம்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா....ஹா... ஹா...  பதிவாகலாம்.  ஆகாமலும் போகலாம்!

      நீக்கு
    2. நோஓஓஓஓஓஒ பதிவாகாதுவிட்டால், எங்களுக்கு ஒரு குளூவாவது தரோணும்:))

      நீக்கு
    3. https://encrypted-tbn3.gstatic.com/shopping?q=tbn:ANd9GcTZzWUnPYmu6juPyyYMdNhi1Z92L6gUKUKijvlwYAI9XvbTQFLZwn1qjCCYbWZbEwdwCw7d9CqhMg&usqp=CAc

      இந்தாங்க மியா நீங்க கேட்ட குளு :)

      நீக்கு
    4. அதிரா அது ஸ்ரீராம் முன்னரேயே ஒரு முறை சொல்லியிருக்கிறாரே திகில் கனவு பற்றி...பாம்பு வந்து என்றெல்லாம்...அதுவும் பெரிய பாம்பு ...அங்கும் உங்கள் பதிவிலும் போட்டிருக்கிறேன்...அந்தக் கனவின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அது அடிக்கடி வருவதாகவும் ஸ்ரீராம் சொல்லியிருந்த நினைவு...

      ஏஞ்சல் ஹா ஹா ஹா ஹா ஹா குளு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  49. /தான் காய்கறி வாங்கி வருவது சங்கரனுக்கே ஆச்சர்யம்தான்.   //
    இந்த காட்சி வசனம்லாம் அப்டியே உலக நாயகனை கண் முன் கொண்டு வருதே :) அந்த உன்னை போல் ஒருவனில் இப்படித்தான் காய்கறி கூடையோடு அங்கிள் நடப்பார் .
    நமக்கு பிடிச்ச கதாபாத்திரத்தை பாத்திரங்களோடு பொருத்தி பார்ப்பதும் ஒரு ஆவல்தான் தொடருங்கள் ,கதை அழகாய் நகர்கிறது 

    பதிலளிநீக்கு
  50. யாராவது இங்கே என் ஊதா நிற பட்டுப்புடவை பத்தி பேசினாங்களா ??சேசே இருக்காது :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாதூஊஉ ஊதா நிறத்தில பட்டுப் புடவையோ?:)) அதைக் கட்டத் தெரிஞ்ச ஆராவது எடுத்துப் போயிருப்பினம் அஞ்சு:) நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்.. இதை இத்தோடு விட்டிடுங்கோ ஹா ஹா ஹா:))

      நீக்கு
    2. ஹலோவ் கெ, ளப்பி  மியாவ் :) இந்த கிறிஸ்மஸுக்கு போத்தீஸ் சேப்பு இல்லைன்னா மஞ்சள் கலர் சாரியை வாங்கி காட்டியே தீருவேன் இல்லைன்னா இல்லைன்னா :) அதை சுடிதாரா தச்சிடுவேன் இது உங்க பச்சை கல் நெக்லஸ் மேலாணை ஆனை :)

      நீக்கு
    3. @ ஏஞ்சலின் - //வாங்கி காட்டியே தீருவேன் இல்லைன்னா இல்லைன்னா // - இதைத்தானே அதிராவும் மாஞ்சு மாஞ்சு சொல்லியிருக்காங்க. 'கட்டத் தெரியாது'ன்னுதான் சொல்லியிருக்காங்களே தவிர 'காட்டத் தெரியாது'ன்னா சொல்லியிருக்காங்க. சாரியை வாங்கி, காட்டிருவீங்க. அதில் சந்தேகம் எங்களுக்கு இல்லை.

      நீக்கு
    4. ஹையோ ஹையோ உண்மையில் கட்டியே தீருவேன்னு தான் டைப்பினேன் ..நமக்கு ஸ்பெல்லிங் கூட இப்படி சதீ பண்ணுதே .நீங்க சொல்லலைன்னா கவனிச்சிருக்கவே மாட்டேன் :)

      நீக்கு
    5. நான் என்ன செய்வேன்றது என்னைவிட கூகிள் தமிழ் எழுத்துக்கு மட்டும் நல்லா தெரியுது ஹாஹ 

      நீக்கு
  51. ஆனா சபாபதியிஸம் செஞ்சாலும் சரியாய் செஞ்சிருக்கார் .எனக்கே பல பெயர்கள் மறந்து இன்னிக்கு எல்லாத்தையும் நினைவூட்டிக்கொண்டேன் 

    பதிலளிநீக்கு
  52. குட்டி கவிதை உண்மைதானே ..அடுத்த நாளும் நேற்றைய நினைவுகள் வராமல் போவதில்லையே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டங்களைப் பார்க்கப் படிக்க அருமை. அதிரா, ஏஞ்சல்.கோமதி அனைவருக்கும் மிக மிக நன்றி.
      சுகமான உரையாடல்கள் வாழ்வின் வசந்த காலத்தை மீட்டுகின்றன.
      எங்கள் சிங்கம் லுங்கியைக் கட்டின நாளே இல்லை.
      மாமியார் அவ பஞ்சகச்சம் கட்டினால், எப்படி இருக்கான் பாரு என் பிள்ளை என்று என்னிடம் சொல்லி மகிழ்வார்.
      இப்போ மகன் களும் பஞ்சகச்சம் கட்டப் பழகி விட்டார்கள்.

      நீக்கு
    2. நன்றி வல்லிம்மா, இன்று நேரம் கிடைச்சது கும்மி போட முடிஞ்சுது... கடந்த காலத்தில் நடந்த, மனதுக்கு மகிழ்ச்சியானதை மட்டுமே நினையுங்கோ.. இல்லை எனில் வாழ முடியாது:))..

      நீக்கு
  53. இந்த கதை ...வழிப்போக்கன் எழுதியவர் சாவி :)யாருக்காச்சும் pdf லிங்க் வேணுமா :))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0003983_வழிப்போக்கன்.pdf

      நீக்கு
    2. கிண்டிலில் கிடைக்கலாம் போட்டு வைக்கோணும்..

      நீக்கு
    3. வெல்கம் வல்லிம்மா .நானும் ஆரம்பிச்சுட்டேன் படிக்க 

      நீக்கு
    4. @miyaw கெ,ளப்பி  கிண்டி :)) எதை கிண்டப்போறீங்க ஹாஹிய் 

      நீக்கு
    5. ஏஞ்சல் நானும் இப்பத்தான் எடுத்தேன் அந்த லிங்கை பார்த்து இங்க சொல்ல வேண்டும் என்றால் நீங்களே சொல்லிட்டீங்க...அதையும் சைடி எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க....இங்கு துளசியின் கமெண்டைப் போட வந்த பொது கருத்துகள் பார்த்துட்டேனா அங்கேயே போயிடுச்சு,,,ஹா ஹா

      கீதா

      நீக்கு
  54. ஸ்ரீராம்ஜி அட! நீங்கள் எழுதும் கதையா! அதுவும் தொடர்கதை. ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது இல்லையா?

    கதை மிக மிக இயல்பான நடையில், யதார்த்தமாக அழகான நடை போடுகிறது! நன்றாக இருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக நன்றாகத் தொடர்வீர்கள். அழகான தொடக்கம் பாராட்டுகள் ஸ்ரீராம்ஜி.

    நகைச்சுவை இரண்டையும் மிகவும் ரசித்தேன். நல்ல நகைச்சுவை. பழைய புத்தகத் தொகுப்பிலிருந்து போடுகின்றீர்கள் இல்லையா.

    புதிய தகவல்கள் பல. எழுத்தாளர்கள் குறித்தும் ஜெயகாந்தன் குறித்த தகவல் எல்லாமே புதியதாய் அறிகிறேன். நீங்கள் பகிர்ந்து யார் எழுத்தாளர் என்று கேட்டிருக்கும் அந்தக் கதையின் லிங் எனக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. வழிப்போக்கன் - சாவி என் என்றிருக்கு.

    கவிதை மிக மிக அருமை. யதார்த்தம். ஸ்ரீராம்ஜி நீங்கள் கவிதை எழுதுவது பற்றிச் சொல்லவும் வேண்டுமா. பாராட்டுகள்.

    எல்லாமே நன்றாக நல்ல பதிவு

    துளசிதரன்





    பதிலளிநீக்கு
  55. கதை நன்றாக செல்கிறது.... காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!