புதன், 26 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி



கில்லர்ஜி தொடங்கி வைத்த தொடர்பதிவு. முதல் சுற்றில் நான் மாட்டாவிட்டாலும், எப்படியும் மூன்றாம், நான்காம், ஐந்தாம் சுற்றில் மாட்டி விடுவேன் என்று நினைத்தேன். திரு  துளசிதரன் மாட்டி விட்டு விட்டார்!

சொன்ன நாள் முதல் எங்கள் ப்ளாக்கில் வீடியோ, பாசிட்டிவ், சமையல் என்று தொடர்பதிவுகள் தினமாக இருந்ததால் இன்றுதான் பதிவை வெளியிட முடிந்தது!

                                                 



1. 
நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?

இந்தியாவில்தான்

 
2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?

இருக்கிறது 

 
3. இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?


வெளி நாடு வாழ் இந்தியரை 'இது உங்களை எவ்விதம் பாதிக்கிறது என்று சொல்லுங்கள்' என்று கேட்பேன்.

 
4. முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

வைத்திருக்கிறோம் 


 
5. அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?

இருக்கே!!


 
6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?

எங்கள் பரிக்ஷை முறையில் அது நேராது.


 
7. விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?

அதுவும் உண்டு.
 
8.  இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

செய்தால் பிழைப்பார்கள்.

 
மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

ஒருமுறை விவாகரத்து செய்தவர் குறிப்பிட்ட காலத்துக்கு மீண்டும் திருமணம் செய்ய முடியாது.  வி
வாகங்களுக்கு முன் வருமானம், தாம்பத்யத் தகுதி, மருத்துவ சான்றிதழ் இவை அனைத்தும் அவசியம்.

 
10. எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?

தேவனாகப் பிறந்து அவருக்கு உதவியாளனாகி விடுவேன்.
 
 
                                      
 
 
 
 
 
 
 
 
கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரும் 'தொடர்ந்து' விட்டார்கள். எனவே தொடர நினைப்பவர்கள் தொடரலாம்....!!
 

23 கருத்துகள்:

  1. ஹா... ஹா...
    அம்புட்டுப் பேரும் பக்கம் பக்கமா கதை எழுதுனா... ஒற்றை வரி பதில்களில் கலக்கிட்டீங்க...

    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் சாதூர்யமான பதில்கள். வாசிப்பவர்களையே ஊகித்து கொள்ள வைத்து விட்டு சாமர்த்தியமாக நீங்கள் தப்பித்து விட்டீர்கள். பலே.. பலே..

    பதிலளிநீக்கு
  3. ஏதோ ஒரு படத்தில் வடிவேலு ,கேள்வியையே பதிலாக்கி கேட்டது போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  4. ஆஹா :) அருமையான பதில்கள் ..அதுவும் 9 ஆம் கேள்விக்கான பதில் ..சூப்பரோ சூப்பர்

    பதிலளிநீக்கு
  5. சுருக்கமா நறுக்குன்னு சொல்லி அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  6. பதில் பதிலாகவும் இருக்கவேண்டும். ஆனால் என்னவென்று யாருக்கும் தெரியவும் கூடாது. மிகச் சாதுர்யமான பதில்கள் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  7. ஒற்றை வார்த்தையில் ஆணி அடித்தார் போல் பதில்கள்

    பதிலளிநீக்கு
  8. ஆகா
    இதைவிட சுருக்கமாக
    அதே சமயத்தில் ஆணித்தரமாக பதில் சொல்ல யாராலும் இயலாது நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. இரண்டு காந்தி படங்களுக்கும் தாம் எவ்வளவு வித்தியாசம்?..

    இரண்டாமவரின் சாந்தமும், சத்திய பாவமும் நிஜத்தைச் சொன்னது

    பதிலளிநீக்கு
  10. அரசியல்வாதியாவதற்கு உங்களிடம் திறமை இருக்கிறது என்பதை உங்கள் பதில்கள் காட்டுகிறது.
    கண்டிப்பாக அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்து, ஒரு நல்ல ஆட்சியை வழங்குங்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு

  11. சரியான கேள்விகளுக்கு மிகச்சரியான பதில்கள்!!

    எதுவுமே பேசாத அரசியல் வாதிகளில், நீங்கள் ஒரு வார்த்தையில் பதில் அளித்திருப்பது.... சூப்பர் ஸ்ரீராம் ஐயா.

    பதிலளிநீக்கு
  12. ஹா... ஹா... அனைத்து பதில்களுக்கும் கேள்வி பிறக்கும் - என்னது...?

    பதிலளிநீக்கு

  13. முதலில் நன்றி எங்கள் வேண்டு கோளை ஏற்று நிறைவேற்றியதற்கு...

    அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நிரூபித்து விட்டீர்கள்! அதாவது டாக் லெஸ் வொர்க் மோர்....சூப்பர்!! சூப்பர்!

    மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

    ஒருமுறை விவாகரத்து செய்தவர் குறிப்பிட்ட காலத்துக்கு மீண்டும் திருமணம் செய்ய முடியாது. விவாகங்களுக்கு முன் வருமானம், தாம்பத்யத் தகுதி, மருத்துவ சான்றிதழ் இவை அனைத்தும் அவசியம்.//

    மிகவும் உன்னதமான பதில் மிகவும் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
  14. எனவே தொடர நினைப்பவர்கள் தொடரலாம்....!!

    1) நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?

    Ans : செவ்வாய் கிருகத்தில்.

    2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?

    No

    3. இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?
    Ans. அதை எதிர்த்து, இரவு 11 மணி முதல் காலை 6 மணிவரை, உண்ணா விரதம் இருப்பேன்.. (அறவழிப் போராட்டம்)

    4. முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

    Ans : 20 வயதிற்கு மேல் அனைத்து முதியோர்களுக்கும் இரயில்பயணக் கட்டணத்தில் தள்ளுபடி 40 % [Kindly note that : Presently it is only for those aged 58 and above (female); 60 and above (male) ]

    PS: Clause 1: those under 58 years of age are not considered as 'முதியோர்'


    5. அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?
    Ans : தாராளமாக ஊழல் செய்யலாம்.. பிடிக்கப் பட்டால், சிலருக்கு தண்டனையும் பலருக்கு தொடர் வழக்குகளை தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

    6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?

    Ans: ஆண்களுக்கு மட்டும் எதற்கு சிறப்பு சலுகை. ஆணாதிக்க கொட்டத்தை அடக்க, ஃபிமேலும் நீதிமன்றங்களுக்கு செல்லலாம் என ஆணை (பெண்ணை) பிறப்பிக்கப்படும்.


    7. விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?

    Ans: இருக்கே... அது வெளியிடக்கூடா ரகசியம்.

    8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
    Ans: எதை... எல்லாத்தையுமா ?



    9 மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

    Ans : நம்ம ஆட்சி முறையே புஸ்த்துதான்

    10. எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?

    Ans : omg.... -- Oh! Me (the) God

    பதிலளிநீக்கு
  15. இப்போது தான் பார்க்கிறேன்.பதில்கள் எல்லாம் மிக அருமை. நானும் மிகவும் லேட்டாக பதில்கள் சொல்லி இருக்கிறேன்.
    அரசியல்வாதியாக இருக்கவேண்டிய அத்தனை தகுதிகளும் இருக்கிறது.
    நல்லது செய்யும் அரசியல்வாதியாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  16. சுருக்கமான சுவாரஸ்யமான பதில்கள்:)!

    பதிலளிநீக்கு
  17. காந்தி கனவில் வந்தாரா. இத்தனை கேள்விகளும் நறுக். பதிலகள் சூப்பர்.இப்படி ஒரு தொடர் போய்க் கொண்டிருப்பதே தெரியாது. சூப்பர் இமாஜினேஷன். நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  18. நல்லவேளையா என்னோட கனவிலே காந்தி எல்லாம் வரதில்லை. பிழைச்சேன். :)

    பதிலளிநீக்கு

  19. நண்பரே இதுதான் ரத்தினச்சுருக்கம் என்பதோ,,, அருமை தாமதமான வருகைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  20. இரத்தினச் சுருக்கம் என்பார்கள்! அது போல, அனைத்தும் நன்று!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!