Conditional pass. Dhoni லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Conditional pass. Dhoni லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.4.10

தோனியின் நிபந்தனைகள்

பிரின்சிபால் ரூமிற்குள் நுழைந்தார் பியூன். 
"என்ன?"  
"சார் தோனி வந்துருக்காரு."
"ஓ அப்படியா? வரச் சொல்லு."


தோனி உள்ளே வருகிறார். 
"காலை வணக்கம் சார்." 
"வணக்கம், வாங்க தோனி."
"எதுக்கு சார் என்னைக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்?"
"தோனி நீங்க பி காம் பரீட்சை பாஸ் பண்ணவே இல்லை போலிருக்கே? எனி பிராப்ளம்?"


"ஆமாம் சார், பரீட்சை முறையை சற்று மாற்றியமைக்க வேண்டும்."
"எப்படி?"
"சார் ஐந்து நாள் பரீட்சை முறையை மாற்றி, ஒரே நாள் இரண்டு மணி நேர பரீட்சை என்று ஆக்கிவிட வேண்டும்."
"ஓஹோ ஐந்து நாள் டெஸ்ட் இல்லாமல் ட்வென்டி ட்வென்டி போலயா? ஓ கே, அப்புறம்?"


"ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் ஒவ்வொரு ஆசிரியர், மொத்தம் ஐந்து ஆசிரியர்கள்.  ஒரு ஆசிரியர், ஆறு நிமிடங்களில் ஆறு கேள்வி கேட்கலாம். ஒருவர் ஆறு கேள்வி கேட்டவுடன், அடுத்த ஆசிரியர் அவர் சப்ஜெக்டில் ஆறு கேள்விகள் - இந்த வகையில் மாற்றி மாற்றி, ஐந்து ஆசிரியர்களும் மொத்தம் நூற்று இருபது கேள்விகள், ஆளுக்கு இருபத்துநான்கு கேட்கலாம்."
"ஓஹோ ஐந்து பவுலர்கள் ஆளுக்கு நான்கு ஓவர்கள் போடுகின்றர்ற்போல்! அப்புறம்?"


"ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் சொல்லுவேன். உடனுக்குடன் எனக்கு மார்க் கொடுக்கவேண்டும்."
"ஸ்கோர் போர்டில் உடனுக்குடன் ஸ்கோர் தெரிவது போலயா? சரி."


"ஆமாம் சார். அதுமட்டும் இல்லை - யாராவது ஒரு ஆசிரியர் அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வி கேட்டுவிட்டால், அந்த கேள்வி கணக்கில் வராது - எனக்கு ஒரு மார்க் கொடுக்கணும்."
"வைடு பால்? ஓ கே."


"பிறகு எந்த ஆசிரியராவது தவறான கேள்வி கேட்டுவிட்டால் ....."
"தவறான கேள்வியா? எப்படி?"
"அந்த ஆசிரியர் பி காம் சப்ஜெக்ட் இல்லாமல் வேறு எதிலாவது கேட்டுவிட்டால், அல்லது வேறொரு ஆசிரியரின் சப்ஜெக்டில் இவர் கேட்டுவிட்டால் - அதற்கு எனக்கு ஒரு மார்க்; அந்த கேள்வி கணக்கில் வராது; மேலும் அதற்கு அடுத்த கேள்வி அவர் என்ன கேட்டாலும் - நான் எனக்குத் தெரிந்த பதில் எதையும் சொல்லுவேன், அதற்கு முழு மதிப்பெண் கொடுக்கவேண்டும்."
"அட! நோ பால் + ப்ரீ ஹிட் போல.பலே, பலே, அப்புறம்?"


"அறுபது கேள்விகள் முடிந்தவுடன், நான் என் தோழர்களுடன் கூடி, மேற்கொண்டு என்ன செய்யலாம், என்ன கேள்விகள் வரும், என்ன பதில்கள் கூறலாம் என்று இரண்டரை நிமிடங்கள் விவாதிப்பேன்."
"ஸ்டிரேட்டஜி டிஸ்கஷன்ஸ் டைம் - ஓ கே."


"நான் சொல்லும் பதில்களுக்கு கேள்வி கேட்கும் ஆசிரியர் மார்க் போடக் கூடாது. வேறு மூன்று ஆசிரியர்கள்தான் மார்க் போடலாம்."
"அம்பயர்கள் - சரி சரி."


"கேள்விக்கு பதில் எப்படி இருந்தாலும், மார்க் போடும் ஆசிரியர்கள் என்ன மார்க் கொடுக்கிறார்களோ அதைத்தான் யுனிவெர்சிடி ஏற்றுக் கொள்ளவேண்டும்."
"அம்பயர் முடிவுதான் இறுதியானது. சரி."


"கடைசி கண்டிஷன். ரொம்ப முக்கியமானது. பரீட்சை ஹாலில், மஞ்சளாடை அணிந்த சியர் லீடர்ஸ் இருக்கவேண்டும். என்னுடைய முழு மதிப்பெண்கள் பெறுகின்ற ஒவ்வொரு பதிலுக்கும் அவங்க குத்தாட்டம் ஆட வேண்டும். சிவமணி டிரம்ஸ் ஒலிக்கவேண்டும். "













பிரின்சிபால் முகம் சிவந்தது. அவர் தோனியைப் பார்த்து,
"கெட் அவுட்" என்று அடித்தொண்டையிலிருந்து கத்துகிறார். 


தோனி எழுந்து அறைக்கு வெளியே ஓடுகிறார்.