வியாழன், 8 ஏப்ரல், 2010

தோனியின் நிபந்தனைகள்

பிரின்சிபால் ரூமிற்குள் நுழைந்தார் பியூன். 
"என்ன?"  
"சார் தோனி வந்துருக்காரு."
"ஓ அப்படியா? வரச் சொல்லு."


தோனி உள்ளே வருகிறார். 
"காலை வணக்கம் சார்." 
"வணக்கம், வாங்க தோனி."
"எதுக்கு சார் என்னைக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்?"
"தோனி நீங்க பி காம் பரீட்சை பாஸ் பண்ணவே இல்லை போலிருக்கே? எனி பிராப்ளம்?"


"ஆமாம் சார், பரீட்சை முறையை சற்று மாற்றியமைக்க வேண்டும்."
"எப்படி?"
"சார் ஐந்து நாள் பரீட்சை முறையை மாற்றி, ஒரே நாள் இரண்டு மணி நேர பரீட்சை என்று ஆக்கிவிட வேண்டும்."
"ஓஹோ ஐந்து நாள் டெஸ்ட் இல்லாமல் ட்வென்டி ட்வென்டி போலயா? ஓ கே, அப்புறம்?"


"ஒவ்வொரு சப்ஜெக்டுக்கும் ஒவ்வொரு ஆசிரியர், மொத்தம் ஐந்து ஆசிரியர்கள்.  ஒரு ஆசிரியர், ஆறு நிமிடங்களில் ஆறு கேள்வி கேட்கலாம். ஒருவர் ஆறு கேள்வி கேட்டவுடன், அடுத்த ஆசிரியர் அவர் சப்ஜெக்டில் ஆறு கேள்விகள் - இந்த வகையில் மாற்றி மாற்றி, ஐந்து ஆசிரியர்களும் மொத்தம் நூற்று இருபது கேள்விகள், ஆளுக்கு இருபத்துநான்கு கேட்கலாம்."
"ஓஹோ ஐந்து பவுலர்கள் ஆளுக்கு நான்கு ஓவர்கள் போடுகின்றர்ற்போல்! அப்புறம்?"


"ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் சொல்லுவேன். உடனுக்குடன் எனக்கு மார்க் கொடுக்கவேண்டும்."
"ஸ்கோர் போர்டில் உடனுக்குடன் ஸ்கோர் தெரிவது போலயா? சரி."


"ஆமாம் சார். அதுமட்டும் இல்லை - யாராவது ஒரு ஆசிரியர் அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வி கேட்டுவிட்டால், அந்த கேள்வி கணக்கில் வராது - எனக்கு ஒரு மார்க் கொடுக்கணும்."
"வைடு பால்? ஓ கே."


"பிறகு எந்த ஆசிரியராவது தவறான கேள்வி கேட்டுவிட்டால் ....."
"தவறான கேள்வியா? எப்படி?"
"அந்த ஆசிரியர் பி காம் சப்ஜெக்ட் இல்லாமல் வேறு எதிலாவது கேட்டுவிட்டால், அல்லது வேறொரு ஆசிரியரின் சப்ஜெக்டில் இவர் கேட்டுவிட்டால் - அதற்கு எனக்கு ஒரு மார்க்; அந்த கேள்வி கணக்கில் வராது; மேலும் அதற்கு அடுத்த கேள்வி அவர் என்ன கேட்டாலும் - நான் எனக்குத் தெரிந்த பதில் எதையும் சொல்லுவேன், அதற்கு முழு மதிப்பெண் கொடுக்கவேண்டும்."
"அட! நோ பால் + ப்ரீ ஹிட் போல.பலே, பலே, அப்புறம்?"


"அறுபது கேள்விகள் முடிந்தவுடன், நான் என் தோழர்களுடன் கூடி, மேற்கொண்டு என்ன செய்யலாம், என்ன கேள்விகள் வரும், என்ன பதில்கள் கூறலாம் என்று இரண்டரை நிமிடங்கள் விவாதிப்பேன்."
"ஸ்டிரேட்டஜி டிஸ்கஷன்ஸ் டைம் - ஓ கே."


"நான் சொல்லும் பதில்களுக்கு கேள்வி கேட்கும் ஆசிரியர் மார்க் போடக் கூடாது. வேறு மூன்று ஆசிரியர்கள்தான் மார்க் போடலாம்."
"அம்பயர்கள் - சரி சரி."


"கேள்விக்கு பதில் எப்படி இருந்தாலும், மார்க் போடும் ஆசிரியர்கள் என்ன மார்க் கொடுக்கிறார்களோ அதைத்தான் யுனிவெர்சிடி ஏற்றுக் கொள்ளவேண்டும்."
"அம்பயர் முடிவுதான் இறுதியானது. சரி."


"கடைசி கண்டிஷன். ரொம்ப முக்கியமானது. பரீட்சை ஹாலில், மஞ்சளாடை அணிந்த சியர் லீடர்ஸ் இருக்கவேண்டும். என்னுடைய முழு மதிப்பெண்கள் பெறுகின்ற ஒவ்வொரு பதிலுக்கும் அவங்க குத்தாட்டம் ஆட வேண்டும். சிவமணி டிரம்ஸ் ஒலிக்கவேண்டும். "













பிரின்சிபால் முகம் சிவந்தது. அவர் தோனியைப் பார்த்து,
"கெட் அவுட்" என்று அடித்தொண்டையிலிருந்து கத்துகிறார். 


தோனி எழுந்து அறைக்கு வெளியே ஓடுகிறார்.    

28 கருத்துகள்:

  1. எப்பிடி இப்படி எல்லாம் சிந்திக்கிறிங்க தலைவா. சூப்பர் ஒவ்வொரு கற்பனையும் அசத்தல். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சை கொ ப.
    நன்றி சத்தீஷ். உங்கள் ஊக்கம் எங்கள் உற்சாகம்.

    பதிலளிநீக்கு
  3. Fantastic Comedy..

    இந்த மாதிரியெல்லாம், எனக்குத் தோணமாட்டேங்குதே ?

    பதிலளிநீக்கு
  4. நன்றி தர்மராஜன், தர்மராஜன் (!), மாதவன், சிவன்.

    பதிலளிநீக்கு
  5. கதை நல்லா இருக்கு..
    வாழ்த்துக்கள்.............

    பதிலளிநீக்கு
  6. கலக்கிடீங்க! விழுந்து விழுந்து அடிபட்டுக்காம சிரிச்சேன்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி பாலா (உங்க negamam பிளாகுல கோபிகா படம் நல்லா இருக்கு )
    நன்றி மீனாக்ஷி.
    நன்றி சாய்ராம்.

    பதிலளிநீக்கு
  8. //பரீட்சை ஹாலில், மஞ்சளாடை அணிந்த சியர் லீடர்ஸ் இருக்கவேண்டும். என்னுடைய முழு மதிப்பெண்கள் பெறுகின்ற ஒவ்வொரு பதிலுக்கும் அவங்க குத்தாட்டம் ஆட வேண்டும். //

    இதை மாதிரி யாரும் ஆடாமேயே என் மார்க் ப்ஹானால் ?

    பதிலளிநீக்கு
  9. உங்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி.

    பதிலளிநீக்கு
  10. 6,4 ஐயும் சேர்த்து இருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான கற்பனை. ஆடுபவர் மேலே இருப்போரைக் கேட்டு அதன்படி ஆடுவது அந்தக் காலம். ஆடுபவர் நிபந்தனைகளைப் போட அப்பிராணியாக அமைப்பாளர்கள் தாளம் போட வேண்டியது இந்தக் காலம். இதை ரசனையாகச் சொல்லி இருப்பது அபாரம்.

    பதிலளிநீக்கு
  12. ஆறையும் நாலையும் சேர்த்திருக்கலாமே என்று ஒரு பின்னூ பார்த்தேன். ஷண்மதம், நான்குவேதம், ஷடாக்‌ஷரம் மாதிரி இந்த ஆறும் நாலும் பெற்றிருக்கும் பெருமை வியக்க வைக்கிறது. அதிகம் ஆறு அடித்தவருக்கு அரிய பரிசுகள் கிடைக்கிறது. அதிகம் நாலு அடித்தவர் அடிபட்டுப் போகிறார். அதிகம் விக்கெட் எடுத்தவருக்கு விசேஷ கவனம் எதையும் காணோம். காரணம் இரண்டு விக்கெட் இரண்டு பேர் எடுத்து டை கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்பது தானா?

    பதிலளிநீக்கு
  13. //மேலே இருப்போரைக் கேட்டு அதன்படி ஆடுவது அந்தக் காலம்//

    ஏன், இப்பொழுது கூட எங்கிருந்தோ வரும் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்துதான் ஆடுகிறார்கள் என்கிறார்கள்!.

    பதிலளிநீக்கு
  14. நடக்கும்!நடந்தாலும் நடக்கும். என்ன கொஞ்சம் ஃபீஸ் அதிகமாகலாம். வங்கி கடன் கொடுக்கும்:))

    பதிலளிநீக்கு
  15. சூப்பரு... சூப்பரு.... அந்த cheerleaders மேட்டர் பத்தி வீட்டுல பேசிட்டீங்களா

    பதிலளிநீக்கு
  16. நல்ல கற்பனை..

    இன்னொன்னும் போட்டுடலாம்..

    "இந்த பரீட்சை எழுதி வேலைக்குப் போய் தான் சம்பாரிக்கனும்னு எனக்கு தேவையில்லை.. நான் லீவு போட்டால் இதை விட சம்பாரிப்பேன்..."

    விளம்பரப் படங்களில் நடிப்பதைச் சொல்லுகிறேன்..

    ரசித்தேன்...

    நன்றி..

    பதிலளிநீக்கு
  17. சூப்பர் போங்க.. கலக்கிட்டிங்க...
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  18. நன்றி தமிழ் உதயம், மால்குடி, அனானிகள், வானம்பாடிகள், விஜய், அப்பாவி தங்கமணி, பிரகாஷ், ஆனந்தி.

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. அவார்டெல்லாம் தரனும்......
    ஒவ்வொரு நாளும் பர்ஸ்டு மார்க்கு வாங்குறவனுக்கு - "Man of the Exam"
    எல்லா எக்ஸாமும் சேர்ந்து பர்ஸ்டு மார்க்கு வாங்குறவனுக்கு - "Man of All Exams"

    ஹி.. ஹி.. இதுக்கு பேருதான் 'second Innings ' பின்னோட்டம் இடுரதுல.. (இதே இடுகைக்கு, என்னோட ரெண்டாவது பின்னூட்டமில்லையா இது?)

    பதிலளிநீக்கு
  21. மாதவன் அடேங்கப்பா! ஐ பி எல் ட்வென்டி / ட்வென்டி ல கூட செகண்ட் இன்னிங்க்ஸ் ?? கில்லாடி நீங்க.

    பதிலளிநீக்கு
  22. //எங்கள் said..."மாதவன் அடேங்கப்பா! ஐ பி எல் ட்வென்டி / ட்வென்டி ல கூட செகண்ட் இன்னிங்க்ஸ் ?? கில்லாடி நீங்க."//

    மேச்சு 'டை' ஆனால், சூப்பர் ஓவர் இருக்கில்லையா?.. அதுதான், 'செகண்ட் இன்னிங்க்ஸ்'.

    என்னா சார்.. சூப்பர் ஓவர்ல கூட 'டை' ஆனால், 'டாஸ்' போடுறமாதிரி, என்னை 'தேர்ட் இன்னிங்க்ஸ்' ஆட வச்சுட்டீங்களே

    பதிலளிநீக்கு
  23. மாதவன் நீங்க எவ்வளவு இன்னிங்க்ஸ் ஆடினாலும் நாங்க சளைக்காமல் ஓவருக்கு மேல் ஓவர் போட்டுக் கொண்டே இருப்போம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!