Science லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Science லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.5.16

S L V 4

   
உலகில் பொருட்கள் மூன்று நிலைகளுள் ஒன்றாகத்தான் இருக்க முடியும். திரவம், திடம், வாயு. இது பள்ளிக்கூடத்துப் பாடம். இது விரைவில் நான்காக அதிகரிக்கக் கூடும். 
     

நீர் மூலக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள், தற்செயலாக இந்த மூன்று நிலைகளையும் சாராத ஒரு புதிய நிலையில் உள்ள பொருளைக் கண்டனர். இந்த புதிய நிலைக்கு அமெரிக்காவின் ஆற்றல் துறையை சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வக விஞ்ஞானிகள், 'குவாண்டம் சுழல் திரவம்' என்று பெயரிட்டுள்ளனர். 
      
நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்தே சில பொருட்கள், 'நான்காம் நிலை'யில் இருப்பது பற்றி அவ்வப்போது பேச்சு அடிபட்டு வந்தது. குறிப்பாக சில வகை காந்தங்களில் இந்த நிலை இருப்பதாக சொல்லப்பட்டது. குவாண்டம் இயற்பியலின்படி நீரில் உள்ள இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும், ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இதுவரை காணாத வடிவத்துடனும், தன்மையுடனும் ஆய்வுக்கூடத்தில் செயல்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 
       
ஆனால், ஆய்வுக் கட்டுரை மூலம் அந்த நான்காம் நிலையை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை. இந்த ஆய்வு முடிவுகள், 'பிசிகல் ரிவ்யூ ஆப் லெட்டர்ஸ்' என்ற இதழில் வெளியாகியுள்ளது.
    
நன்றி : தினமலர், ஏப்ரல் 28, 2016. 

எங்கள் வாசகர்களுக்கு ஒரு கேள்வி: தலைப்பில் "S L V 4" என்று குறிப்பிட்டுள்ளேனே, அதற்கு என்ன விளக்கம் என்று சரியாக யாராவது சொல்லமுடியுமா? 
     

   

13.9.09

இப்படி எல்லாம் நடந்தால்...


தீவிரவாதம் பெருகி விட்ட இந்நாளில் நாடு முழுக்க எல்லா வீடுகளும் கட்டிடங்களும் See thro வாக - ஒன்றிரண்டு அறைகளைத் தவிர - மாறி விட்டால்...
தெரு முழுக்க, ஊர் முழுக்க Traffic. வாகனங்கள் அதிகமாவதால்தான் நெருக்கடி, எல்லோரும் அரசாங்க வண்டியிலேயே வாருங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாள் இது...வீட்டிலுருந்து இறங்கி தெருவில் நடந்து பிரதான சாலையை அடைகிறோம். அந்தப் பிரதான சாலை நகரும் சாலை. இடது பக்கம் மெதுவாக நகரும் சாலையில் ஏறி, வேகமாக செல்ல பக்கத்துக்கு பகுதிக்கு மாறி நின்றால் நகரும் சாலையான அது நகர்ந்து கொண்டே இருக்கிறது. மாற வேண்டிய இடத்தில் மெதுவாக செல்லும் பகுதிக்கு மாறி இறங்கி அடுத்த வளைவு சாலையில் ஏறலாம், அல்லது இறங்க வேண்டிய இடம் என்றால் தெருவுக்கு மாறி செல்லுமிடம் செல்லலாம். எதிர் திசையில் செல்ல வேண்டுமானால் எதிர்ப் பக்க ரோடுக்கு மாறி ஏறி நின்று செல்லலாம்!
Cell to cell, cell to computer, என்று Blue Tooth வசதியில் தகவல்களையோ, பாடல்களையோ, எதை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளும் காலம் இது. அது போல "Tooth" வசதி! உங்கள் மூளையில் உள்ள சரக்கு எல்லாம் என் போன்றவர்களின் Empty மூளைக்கு Transfer ஆகிற வசதி...உங்கள் அனுமதியுடன்தான்...நீங்கள் OK கொடுத்தால்தான், நீங்கள் அனுமதி கொடுக்கும் விஷயங்கள்தான் Transfer ஆகும்! எவ்வளவு படித்து, புரிந்து, தெரிந்து வைத்திருக்கிறோம்...குறுக்கு வழியா என்று திட்டாதீர்கள்...! ஒரு Technology தானே...
அடுத்து இந்த வசதி ஏற்கெனவே இருப்பதாக நினைவு... அடிக்கடி Medical check-up செய்து கொள்பவர்கள் உடலில் அவர்களைப் பற்றி சகல விவரங்களும் அடங்கிய Chip பொருத்தி விடுவார்களாம். மறுபடி மறுபடி Previous History கேட்க வேண்டாம் பாருங்கள்.Old Files தூக்கிக் கொண்டு அலையவும் வேண்டாம்.இதில் அந்த சிப் கூடுதல் வசதியாக நம் உடம்பில் சர்க்கரை, இரத்தக் கொதிப்பு அளவுகள் குறையும்போது அல்லது ஏதாவது மாறுதல்களின் போது ஒரு Alert தர வேண்டும்.
நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்றார் வள்ளுவர். மனித மனதுக்கு சாத்தியமா? இரண்டு மனம் வேண்டும், நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று என்றார் நம் கவிஞர். கஷ்டம் தெரிந்தவர்! பாடகர் போல ஒரு கவசத்தை மண்டையில் மாட்டிக் கொண்டு, கணினியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, தேவை இல்லாத நினைவுகளை Delete செய்யும் வசதி இருந்தால்...
புத்தக சுமையைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறார்கள். எதற்கு இதெல்லாம்... Universal ஆக ஒரு பாடத் திட்டம். அது கணினி வலைத் தொடர்பு மூலமாக...வீட்டிலேயே...ஒரு தனி அறையில். மேலும் கூடுதல் வசதியாக Hologram ஒளிக் கற்றைகள் மூலம் ஒரு முப்பரிமாண உருவத்தை உண்டாக்க முடியும் எனும்போது அதையேவோ, அல்லது நான்கு பரிமாண உருவத்தையே கொண்டுவர முடியும் என்றால் அதை வான்வெளி வலையில் upload செய்து சம்பந்தப் பட்டவர் அருகிலேயே ஒரு குறிப்பிட்ட அறைக்குள் உருவமாக கிளர்ந்தெழ செய்ய முடிந்தால்...
cell phone இல வலைத் தொடர்பு ஏற்படுத்திய பிறகு அதை ஒரு கட்டிடத்தின் மீதோ காய்கறி, பழங்கள் என எந்தப் பொருளின் மீது வைத்து காமரா மூலம் Focus செய்தால் அந்தப் பொருள் பற்றிய சகல விவரமும், Wikipedia விவரங்களும் வருமாம். கூடுதலாக Dictionary வசதியும் உண்டாம் என்று இன்று வந்த ஒரு மின் அஞ்சல் செப்புகிறது. சரி...நாட்டு மக்கள் அனைவரையும் இந்த விவரங்களுக்குள் அடக்கி Vote போடப் போடப் போகும்போதோ அல்லது வேறு தேவை ஏற்படும் போதோ அவர்கள் மேல் இந்த Cell Camera வை Focus செய்தால் அவர்கள் பற்றி சகல விவரங்களும் அதில் வந்து விடும் . கள்ள வோட்டு , இரண்டு மூன்று ID பிரச்னைகளை சமாளிக்கலாமே...