எங்கள் அன்பு ரசிகர்களே!
இன்று பெங்களுருவில் - ஒரு கறிகாய்க்கடையில் - ஒருவர், சில நெல்லிக்காய்கள் உள்ள கிளைகளுடன் கூடிய கொத்துகள் சிலவற்றை வாங்கிச் சென்றார். கடைக்காரரிடம், அது என்ன, எதற்கு என்று கேட்டேன். அவர் "எனக்கு சரியாகத் தெரியவில்லை சார் - ஆனால் நேற்றைக்கும் இன்றைக்கும் - நிறைய விற்பனை ஆகிறது. அதை வைத்துப் பூஜை செய்வார்களாம்." என்றார்
மேற்கொண்டு விவரங்கள் அறிய ஆவலாக உள்ளது. இந்தப் பதிவைப் படிக்கும் இரசிகர்களில் யாருக்காவது - இன்று என்ன பண்டிகை / பூஜை - நெல்லிக்கனி / கிளைகளுக்கு அதில் என்ன பங்கு என்பது குறித்து - இதில் தமிழ் / ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுங்கள். அல்லது engalblog@gmail.com க்கு மெயிலுங்கள் - அறிய ஆவலாக உள்ளோம்..
நன்றி.