எங்கள் அன்பு ரசிகர்களே!
இன்று பெங்களுருவில் - ஒரு கறிகாய்க்கடையில் - ஒருவர், சில நெல்லிக்காய்கள் உள்ள கிளைகளுடன் கூடிய கொத்துகள் சிலவற்றை வாங்கிச் சென்றார். கடைக்காரரிடம், அது என்ன, எதற்கு என்று கேட்டேன். அவர் "எனக்கு சரியாகத் தெரியவில்லை சார் - ஆனால் நேற்றைக்கும் இன்றைக்கும் - நிறைய விற்பனை ஆகிறது. அதை வைத்துப் பூஜை செய்வார்களாம்." என்றார்
மேற்கொண்டு விவரங்கள் அறிய ஆவலாக உள்ளது. இந்தப் பதிவைப் படிக்கும் இரசிகர்களில் யாருக்காவது - இன்று என்ன பண்டிகை / பூஜை - நெல்லிக்கனி / கிளைகளுக்கு அதில் என்ன பங்கு என்பது குறித்து - இதில் தமிழ் / ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுங்கள். அல்லது engalblog@gmail.com க்கு மெயிலுங்கள் - அறிய ஆவலாக உள்ளோம்..
நன்றி.
'துளசி பூஜை என்று சொன்னார்கள் - எங்கள் பந்து ஒருவர். இரண்டு நாள் கொண்டாட்டம். இரண்டு நாட்களிலும் மாலையில் அகல் விளக்கேற்றி வைப்பார்களாம். துளசி செடிக்கு, இந்த நெல்லிக் கிளைகளுடன் - மாலையில் பூஜை உண்டாம். கணவன் மனைவி - குடும்ப ஒற்றுமைக்காக - மனைவி செய்யும் பூஜை.
பதிலளிநீக்குகுடும்ப ஒற்றுமைக்காக மனைவி மட்டும்தான் பூஜை செய்வார் போல...இல்லை? நன்றி பல்லி...
பதிலளிநீக்குதுவாதசி அன்று அகத்திக் கீரை நெல்லிக்காய் சேர்த்துக் கொள்வது ஆசார சீலர்களின் வழக்கம். இந்த மாதிரி வழக்கங்கள் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும் அதை ஒரு சடங்காக செய்பவர்களே அதிகம். அதன் பயனை அறியாதார் அது புண்ணியம் தரும் என்று கருதிச் செய்தாலும் உணவாக அதன் பலன் நம்பிக்கைகளால் பாழ்படாது என்று தெரிந்து பாராட்டலாம்.
பதிலளிநீக்கு// ஸ்ரீராம். said...
பதிலளிநீக்குகுடும்ப ஒற்றுமைக்காக மனைவி மட்டும்தான் பூஜை செய்வார் போல...இல்லை?//
கணவனுக்காக பூஜை செய்யும் மனைவிகளும் உண்டு; கணவனுக்கே 'பூஜை (!)' செய்யும் மனைவிகளும் உண்டு.