6.5.15

FBI ரகசியங்கள்



சாதாரணமாக இது போன்ற புத்தகங்களை கிழக்குப் பதிப்பகம்தான் வெளியிடும்.  மதி நிலையம் வெளியிட்டுள்ள, என். சொக்கன் எழுதியுள்ள நூல்.  



                Image result for FBI ரகசியங்கள் .  images                                                                     Image result for FBI ரகசியங்கள் .  images


புத்தகம் பதினாலு சுலபத் தலைப்புகளில் விரிகிறது.

FBI எப்படித் தோன்றியது,  எதனால் அந்தத் தேவை ஏற்பட்டது என்பதில் தொடங்குகிறது புத்தகம்.  இன்றைய தேதி வரை என்னென்ன முன்னேற்றங்கள் FBI யில் ஏற்பட்டுள்ளன என்று சொல்கிறார்.



1933 ல் நடந்த ஒரு கிட்னாப்பிங் வழக்கில் துப்பு துலங்குவது சுவாரஸ்யமான முதல் அத்தியாயமாக வருகிறது.


1865 ல் FBIக்கான வித்து போடப்படுகிறது.  உள்நாட்டுப் பிரச்னை, கள்ள நோட்டுக் கும்பல் போன்றவற்றைப் பிடிக்க வெளியில் தெரியாத ஒரு ரகசிய இயக்கமாக ஆரம்பிக்கப் படுகிறது.


சீக்ரட் சர்விஸ் என்ற பெயர் ஒரு கட்டத்தில் பீரோ ஆஃப் இன்வெஸ்ட்டிகேஷன்  என்ற பெயர் பெறுகிறது.  பின்னர் ஃபெடெரல் கூட ஒட்டிக் கொள்கிறது.


உலகப்போர்களில் உள்நாட்டில் ஊடுருவும் வெளிநாட்டு உளவாளிகள் பற்றி அறிய,  மற்றும் உள்நாட்டிலேயே  இருந்து கொண்டு வெளிநாடுகளுக்கு உளவு சொல்வோர் ஆகியவர்களைப் பற்றியும் ஆராயத் தொடங்குகிறது FBI. 


முக்கியமான வழக்குகளின் மூலம் எப்படி FBI கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பிரபலமானது, எப்படி ஒரு வழக்கில் (வாட்டர்கேட் ஊழல்)  கெட்டபெயர் வாங்கியது, அதிலிருந்து மறுபடி எப்படி வெளிவந்து ஒரு சக்தி வாய்ந்த ஸ்தாபனமாக  மாறியது என்று சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.


சகல விசாரணைகளும் செய்து, ஏகப்பட்ட விவரங்களை சேகரித்து வைத்திருந்தாலும் ஒருங்கிணைப்பு இல்லாததால் மற்ற துறைகளுடன் எப்படி FBI யால் இணைந்து செயல்பட முடியாமல் நிறையக் குற்றவாளிகள் தப்பித்தார்கள், அப்புறம் எப்படி ஒருங்கிணைத்தார்கள்,  எல்லா குற்றவாளிகளின் கைரேகை  உட்பட எல்லா விவரங்களையும் எப்படி, எப்போது முதல் சேகரிக்கத் தொடங்கினார்கள்.....


சார்லி சாப்ளின் மேல் ஒரு கண் அல்ல, பல கண் வைத்து உளவு பார்த்திருக்கிறார்கள்.  அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பாரோ என்ற சந்தேகம். (இளம் சிறுமிகளை அழைத்துச் சென்று அவர்களுடன் பாலுறவில் ஈடுபட்டார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுதி வைத்திருந்தார்களாம்)  வெறுத்துப் போய்விட்டாராம் சாப்ளின்.


சோவியத் யூனியனுடனான அணுகுண்டு ரகசியங்கள் பற்றிய துப்பறியும் அத்யாயம் சுவாரஸ்யம்.  சில இடங்களில் அந்தக் கால காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் நினைவு வருகிறது!


"அமெரிக்கா என்றைக்கும் எதற்காகவும் தன்னுடைய 'முதல்' இடத்தை விட்டுக் கொடுக்க முன்வராது. அப்படி அவர்கள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதற்கு FBI போன்ற அமைப்பு அவசியம்.  அதற்காக அமெரிக்க அரசாங்கங்கள் எவ்வளவு செலவு செய்யவும் தயங்குவதில்லை" என்கிறார்.




சுவாரஸ்யமான புத்தகம்.











FBI ரகசியங்கள்.
என். சொக்கன்.
மதி நிலையம்
180 பக்கங்கள் - 130 ரூபாய்.


5.5.15

முதியோர் இல்லத்தில் வசிக்கும் இளைஞர்கள்



1) என்னவொரு யோசனை...  உருப்படியான யோசனை.  லிங்க் க்ளிக் செய்தால் கடைசிச் செய்தி.

                                      Image result for old age home images


நெதர்லாந்து முதியோர் காப்பகம் ஒன்றில் புதுமையான ஒரு யோசனையைச் செயல்படுத்தி வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் காப்பகத்தில் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். அதற்குப் பிரதிபலனாக ஒரு மாதத்தில் 30 மணி நேரங்களை முதியவர்களுடன் செலவிட வேண்டும். முதியவர்களுக்காக விளையாட்டு, பிறந்தநாள் பார்ட்டி என்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தாலும், அவர்கள் ஆதரவாகப் பேசக்கூடிய மனிதர்களைத்தான் விரும்புகிறார்கள். 

                                                                Image result for old age home images


அதனால்தான் மாணவர்களுக்கு இலவசமாகத் தங்கும் வசதியை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த யோசனை பிரமாதமாக வெற்றி பெற்றுவிட்டது. மாணவர்களும் ஆர்வமாக முதியவர்களிடம் உரையாடுகிறார்கள், உதவி செய்கிறார்கள். முதியவர்களும் மனம் விட்டுப் பேசி, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறார் விடுதியின் உரிமையாளர். மற்ற முதியோர் இல்லங்களிலும் இந்த யோசனையைச் செயல்படுத்த இருக்கிறார்கள். 

                                                                                   Image result for old age home images


நல்ல யோசனை… இந்தியாவிலும் செயல்படுத்தலாமே…



2) தெற்கு ஹாலந்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆந்தைகள் மனிதர்களின் தலை மீது வந்து அமர்கின்றன. 2.7 கிலோ எடை கொண்ட ஐரோப்பிய ஆந்தை மரங்களிலோ, வேலிகளிலோ வந்து அமர்வதில்லை. நடந்துகொண்டிருக்கிற மனிதர்கள், நின்றுகொண்டிருக்கிற மனிதர்களின் தலையை நோக்கிக் குறிவைத்து அமர்கிறது. 




ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் பறந்து செல்கிறது. ஆந்தை தலையில் வந்து அமர்வதை அங்குள்ள மக்கள் ஆட்சேபம் தெரிவிப்பதில்லை. தலையைக் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். ஆந்தை கிளம்பிய பிறகு நகர்கிறார்கள். இந்தக் காட்சியைப் புகைப்படங்கள் எடுப்பதற்காக ஏராளமானவர்கள் வருகிறார்கள். 


ஆந்தைகளின் இந்தச் செயல் மூலம் தங்களுடைய கிராமம் பிரபலமடைந்து வருவதாக அங்குள்ளவர்கள் பெருமைப்படுகிறார்கள். கேமராவைப் பார்த்துவிட்டால் இன்னும் உற்சாகமாகி, தலையில் அமர்ந்தபடி நன்றாகக் காட்சி தருகின்றன ஆந்தைகள். 


அடடா! எவ்வளவு துணிச்சல்!  



3) தியாகையர் ஆனந்தபைரவி ராகத்தில் மூன்றே பாடல்கள்  இயற்றியுள்ளாராம்.  காரணம் திரிபுவனம் சுவாமிநாத ஐயர்.

                                                      Image result for thyagaraja swamigal images

யார் இவர்?


ஆனந்த பைரவி ராகத்தை மட்டுமே கற்றுத் தேறி, எந்த ஊரில் கச்சேரி நடத்த வாய்ப்பு கிடைத்தாலும் அந்த ராகத்தைப் பிழிந்து எடுத்து விடுவாராம் அவர்.

இவர் புகழைக் கேள்விப்பட்டு,
திருவையாறில் ஒருமுறை அவர் நடத்திய கச்சேரியை தியாகையரே நேரில் வந்து கேட்டு, ரசித்துப் பாராட்ட, திரிபுவனம் சுவாமிநாத ஐயர் மகிழ்ந்து போனாலும் தியாகையரிடம் ஒரு வரம் கேட்டாராம்.  அவர் என்ன கேட்கப் போகிறார் என்று தெரிந்தும் 'தந்தேன்' என்று வரமளித்து விடுகிறார் தியாகையர்.



                                                                     Image result for thyagaraja swamigal images
 

இனி தியாகையர் ஆனந்த பைரவியில் பாடல் இயற்றக் கூடாது என்பதே வரம்.  அதனாலேயே தியாகையர் அதற்கு முன்னாலேயே இந்த ராகத்தில் இயற்றியிருந்த 'ராம ராம நீ வாராமு', 'க்ஷீர சாகர விஹார', 'நீகே தெலியக' என்கிற மூன்று பாடல்களைக் கூட அவர் அப்புறம் பாடுவதுமில்லை, சிஷ்யர்களுக்கு சொல்லிக் கொடுப்பதும் இல்லையாம். 

அப்புறம் ஆனந்த பைரவியில் அவர் பாடல் இயற்றவுமில்லை.

அந்த பழைய மூன்று கிருதிகளைக் கூட
முன்னரே பாடமாக்கிக் கொண்ட சில சீடர்களாலேயே இந்தப் பாடல்கள் வெளியுலகுக்குத் தெரிந்தனவாம். 
(படித்தது)





படங்கள்  :  இணையத்திலிருந்து.



4.5.15

'திங்க'க்கிழமை கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு.

               
Solanum melongena  (சொலனும் மெலோங்கெனா )  என்னும் உயிரியற்  பெயர் எதைக் குறிக்கின்றது தெரியுமா? 

அத அப்புறம் சொல்றேன். 

முதலில் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு எப்படி செய்வது என்று சொல்லிடறேன். 
வேண்டிய பொருட்கள்: 
கத்தரிக்காய் கால் கிலோ. (எங்க ஊர்ல இப்போ ஒரு கிலோ நாட்டுக் கத்தரிக்காய் முப்பத்தாறு ரூபாய்) 
            
மிளகாய் வற்றல் : இரண்டு அல்லது மூன்று.
மிளகு : அரை டீஸ்பூன். 
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை. 
கொப்பரைத் தேங்காய் அரை மூடி. (கத்தியால், சிறு துண்டுகளாகக் கீறி வைத்துக்கொள்ளவும்.) 
பால் : நூறு மி லி (என்னது பொரிச்ச குழம்புல பாலா! என்கிறார் திருமதி. எனக்கு இந்த சமையல் குறிப்பைச் சொன்னவர் பசும்பால் என்றார். பசும்பால் எல்லாம் இந்தக் காலத்தில் எங்கே கிடைக்கிறது. எல்லாம் பிளாஸ்டிக் கவர் பால்தான்!) 
          
உப்பு : தேவையான அளவு. 
         
தாளிக்க: 
நெய்: ஒரு டீஸ்பூன். 
உளுத்தம்பருப்பு : அரை டீஸ்பூன்.
கடுகு: கால் டீஸ்பூன்.
சீரகம் : கால் டீஸ்பூன். 
கறிவேப்பிலை : பதினான்கு இலைகள். 

கடைக்குப் போய், இளசா, உருண்டையா, சிறியதாக உள்ள பிஞ்சுக் கத்தரிக்காய் கால் கிலோ வாங்கியாங்க. ஒவ்வொரு காயும் பளபளன்னு இருக்கணும். பூச்சி, சொத்தை உள்ள காய்களை வாங்காதீர்கள். 
       

(பையன்: "அம்மா, மார்க்கட்ல இவ்வளவு கத்திரிக்காய் இருக்கே, யாருமே  வாங்காம, வாடி, வதங்கிப் போயிடிச்சுன்னா என்னம்மா பண்ணுவாங்க?" 
அம்மா : " மறுநாளைக்கு உன் அப்பா காய்கறி வாங்கப் போகும்போது அவர் தலையில கட்டி அனுப்பிடுவாங்க!") 

கத்தரிக்காயைக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். தோராயமாக ஒவ்வொரு துண்டும் ஒரு கன செ மீ இருக்கலாம். 

மிளகாய் வற்றல், மிளகு, மஞ்சள் தூள், கொப்பரைத் தேங்காய் இவற்றை பக்குவமாய் வறுத்து, மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் கத்தரிக்காய்த் துண்டுகள் மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து, நறுக்கிய துண்டங்களை அதிலிட்டு, வேகவிடவும். 

கால் லிட்டர் தண்ணீரில் அரைத்துவைத்திருக்கும் (மி வ + மி + ம + தே ) மசாலா பொடியைக் கரைத்து, தேவையான உப்புப் பொடி கரைத்து, வெந்த கத்தரிக்காய்த் துண்டுகளுடன் சேர்க்கவும். 
              
அதன் பின்னர் மேற்கண்ட கலவையில், பாலை ஊற்றவும். பால் கொதித்து, கத்தரிக்காய்த் துண்டுகள் நன்றாக வெந்தபின், கீழ்க் கண்டபடி, தாளிக்கவும். 
  
ஒரு கரண்டியில் நெய்விட்டு, கடுகு போட்டு, கடுகு வெடித்தவுடன், உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு, சத்தம் அடங்கியதும், தாளித்ததை கத்தரிக்காய் பொரிச்ச குழம்பில் இட்டு, கறி வேப்பிலைகளைக் கிள்ளிப் போட்டு, பொரிச்ச குழம்பை, அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். 
       


(செஞ்சு, சாப்பிட்டுப் பார்த்து, நல்லா இருந்தா எனக்கும் சொல்லுங்க. திருமதியின் உதவி இன்றி நானும் செய்துப் பார்க்கிறேன்!) 
             



இது கத்தரிப்பூ.






                       
எச்சரிக்கை: சிலருக்கு கத்தரிக்காய் ஒவ்வாமை (அலர்ஜி) இருக்கும். அவர்கள் கத்தரிக்காய்க்கு பதிலாக புடலங்காய் உபயோகிக்கலாம்.. 
                              

2.5.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க...  நன்றி வெங்கட்.
 

 
2) அரட்டைக்கும் பொழுது போக்குக்கும் நிறைய பேர்கள் வாட்சப்பைப் பயன் படுத்தும்போது இவர்களின் செயல் பாராட்டப்பட வேண்டிய செயல்.
 

 
3) வெரி பாஸிட்டிவ் லேடி மஞ்சுளா.
 

 
4) எமிர் சுப்பிரமணியம் எனும் 12 வயதுச் சிறுவனின் நல்லெண்ணம்.  இரக்க மனம். 8 வயது முதலே உதவும் குணம்.  பாராட்டுகள்.
 

 
5) 'தாதா'வைப் பாராட்டுவோமே...
 

 
6) அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய நபர் ஏசுராஜ்.
 

 
7) கஷ்டப்படுகிறவர்கள் நஷ்டப்படுவதில்லை என்பார்கள்.  உண்மை. திருச்செங்கோடு: சிவில் நீதிபதி தேர்வில் நாமக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  விபிசி.
 

 
8) இளைய சமுதாயம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு.  
 

 
9) மாற்றுக்கருத்தும் இருக்கலாம்.  ஆனால் இதுவும் மனிதாபிமானம்தான்.  வாழ்க!                                                                     
                               

(படம் இணையத்திலிருந்து)
 
 
10) நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான்.  ஆனால் என்ன, அதையும் தனது சொந்த செலவில் செய்திருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும்.



 
11) கடமையைச் செய்.  விருது வாங்கு! பெண் விவசாயி விசாலாட்சி.
 

 
12) அகிலேஷின் வாழ்க்கை.
 

 
13)  அவரவரால் முடிந்த அளவு நல்ல காரியம்.  இவரால் முடிந்த நல்ல காரியம் இதுதான்.
 

 
14) தனி மனிதராக திரு நமச்சிவாயத்தின் சாதனை.
 

 
15) நீதிபதி மனோகருக்குப் பாராட்டுகள்.  தவறு செய்த வழக்கறிஞருக்கு அங்கு கிடைத்திருக்கும் தண்டனை ஒரு ஆச்சர்யம்.
 

 
16) கிராம மக்களின் அதிரடி ஆக்ஷன். சில சமயங்களில் இப்படியும் ட்ரீட்மென்ட் தேவைப்படுகிறது!
 

 
17) அபுபக்கர் சித்திக் மென்மேலும்  வாழ்த்துகள்.
 


 
18) மூன்று உயிர்களைக் காப்பாற்றிய பதினாலு வயதுச் சிறுவனின் சாகசம்.  நன்றி வெங்கட்.
 

 
19) ரொம்ப ரொம்ப நல்ல செய்தி. 
 

 
 

 
21) சபாஷ் நடிகர் ஜெயராம். எளிமை மட்டுமல்ல,  ஊக்கம் காட்டவும்  தயங்குவதில்லை.
 

 
22) விசாலினி.   சாதனை இளவரசி.  நன்றி ஏஞ்சலின்.