Saturday, May 2, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க...  நன்றி வெங்கட்.
 

 
2) அரட்டைக்கும் பொழுது போக்குக்கும் நிறைய பேர்கள் வாட்சப்பைப் பயன் படுத்தும்போது இவர்களின் செயல் பாராட்டப்பட வேண்டிய செயல்.
 

 
3) வெரி பாஸிட்டிவ் லேடி மஞ்சுளா.
 

 
4) எமிர் சுப்பிரமணியம் எனும் 12 வயதுச் சிறுவனின் நல்லெண்ணம்.  இரக்க மனம். 8 வயது முதலே உதவும் குணம்.  பாராட்டுகள்.
 

 
5) 'தாதா'வைப் பாராட்டுவோமே...
 

 
6) அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய நபர் ஏசுராஜ்.
 

 
7) கஷ்டப்படுகிறவர்கள் நஷ்டப்படுவதில்லை என்பார்கள்.  உண்மை. திருச்செங்கோடு: சிவில் நீதிபதி தேர்வில் நாமக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  விபிசி.
 

 
8) இளைய சமுதாயம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு.  
 

 
9) மாற்றுக்கருத்தும் இருக்கலாம்.  ஆனால் இதுவும் மனிதாபிமானம்தான்.  வாழ்க!                                                                     
                               

(படம் இணையத்திலிருந்து)
 
 
10) நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான்.  ஆனால் என்ன, அதையும் தனது சொந்த செலவில் செய்திருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும். 
11) கடமையைச் செய்.  விருது வாங்கு! பெண் விவசாயி விசாலாட்சி.
 

 
12) அகிலேஷின் வாழ்க்கை.
 

 
13)  அவரவரால் முடிந்த அளவு நல்ல காரியம்.  இவரால் முடிந்த நல்ல காரியம் இதுதான்.
 

 
14) தனி மனிதராக திரு நமச்சிவாயத்தின் சாதனை.
 

 
15) நீதிபதி மனோகருக்குப் பாராட்டுகள்.  தவறு செய்த வழக்கறிஞருக்கு அங்கு கிடைத்திருக்கும் தண்டனை ஒரு ஆச்சர்யம்.
 

 
16) கிராம மக்களின் அதிரடி ஆக்ஷன். சில சமயங்களில் இப்படியும் ட்ரீட்மென்ட் தேவைப்படுகிறது!
 

 
17) அபுபக்கர் சித்திக் மென்மேலும்  வாழ்த்துகள்.
 


 
18) மூன்று உயிர்களைக் காப்பாற்றிய பதினாலு வயதுச் சிறுவனின் சாகசம்.  நன்றி வெங்கட்.
 

 
19) ரொம்ப ரொம்ப நல்ல செய்தி. 
 

 
 

 
21) சபாஷ் நடிகர் ஜெயராம். எளிமை மட்டுமல்ல,  ஊக்கம் காட்டவும்  தயங்குவதில்லை.
 

 
22) விசாலினி.   சாதனை இளவரசி.  நன்றி ஏஞ்சலின்.


 

21 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமையான செய்திகள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

திண்டுக்கல் தனபாலன் said...

"நமக்கு நிறைய தெரியும்" என தனித்து நிற்காத மஞ்சுளா அவர்களுக்கு பாராட்டுக்கள்...

ரியல் தாதா...!

ஆசிஷ் சபர்வால் - இவர் தான் மனிதர்...!

கரந்தை ஜெயக்குமார் said...

அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்

புலவர் இராமாநுசம் said...

இந்த வாரம் நிறைய அறிமுகங்கள்!

நன்றி!

மனோ சாமிநாதன் said...

' தொழில், வாழ்க்கை இரண்டையும் பாலன்ஸ் செய்ய வீட்டினர் அனைவரிடமும் இணக்கமாக இருங்கள் ' என்று மஞ்சுளா சொல்லுவதை இன்றைய இளம் பெண்கள் கவனிக்க வேண்டும்.

ஏசுராஜின் சேவை மனப்பான்மை நெகிழ‌ வைக்கிறது!

நீதிபதி மனோகரின் காருண்யத்திற்கு பாராட்டுக்கள்!

‘தளிர்’ சுரேஷ் said...

இந்த வாரம் ஏகப்பட்ட நல்ல செய்திகள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நல்ல செய்திகள் தொடரட்டும்! நன்றி!

KILLERGEE Devakottai said...


அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.... வெளியிட்ட நண்பருக்கு நன்றி

கீத மஞ்சரி said...

இந்த வார பாசிடிவ் செய்திகள் இவ்வளவு இருப்பதே மனத்துக்கு தன்னம்பிக்கையூட்டும் பாசிடிவ் விஷயமாக உள்ளது. பாதிப்பேரைப் பற்றி அறிந்துகொண்டேன். மீதிப்பேரையும் அறிந்துகொள்வேன். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். பகிர்வுக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்.

Angelin said...

//மனிதாபிமானம்தான். வாழ்க! //
எனக்கு மாற்று கருத்தேயில்லை ..பெரியதோ சிறியதோ உயிர் முக்கியம் ..அந்த கார் ஓட்டினவர் போற்றுதலுக்குரியவர் ..

///eye போன் //அருமையான விஷயம்

எமிர் ! கிரேட் சின்ன வயதில் என்னே ஒரு நல்மனம்
தாதா ! கண்டிப்பா பாராட்டுக்குரியவர்
பிற செய்திகள் அனைத்திற்கும் விசாலினி பற்றிய பகிர்வுக்கும் நன்றி

G.M Balasubramaniam said...

பாசிடிவ் செய்திகளைப் படிக்கவே மனம் வருவதில்லை. இதைஎல்லாம் படிக்கும் போதுநாம் ஒன்றும் செய்ய வில்லையே என்னும் ஏக்கம் வருகிறது.வாழ்க்கையில் இன்னல்கள் அனுபவிப்பவர்களே அசாத்திய செயல் புரிய முடியுமோ/ அனைவரையும் பாராட்டுவது தவிர வேறு ஏதும் செய்ய முடியவில்லை.வாழ்த்துக்கள் பகிர்வுக்கு.

R.Umayal Gayathri said...

எவ்வளவு விஷயங்கள்...பாஸிட்டிவாக இருக்கிறது...மஞ்சுளாவின் தெரியும் என தனித்திருக்காமல்..இணக்கமாய் இருங்கள் என்றது அருமையான உண்மை..ஏசுராஜ் நல்ல மனம்..அனைத்து பகிவுக்கும் நன்றி.

stalin wesley said...

நன்றி

stalin wesley said...

நன்றி

ரூபன் said...

வணக்கம்
ஐயா
அனைத்தும் புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

rajalakshmi paramasivam said...

தன்னம்பிக்கை தரும் இத்தனை செய்திகள் இருக்க , நாம் எதை எதையோப் படித்து மனம் குமைகிறோம். கனியிருப்பக், காய் தான் நம் கண்களில் எதிர் படுகிறது. ஆனால் பாசிடிவ் செய்திகளாகத் தொகுத்து வழங்குவதற்கு உங்களுக்கு நன்றி ஸ்ரீராம் சார்.

Geetha Sambasivam said...

இத்தனை நல்ல செய்திகளையும் தேடித்தேடிக் கொடுத்திருக்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Geetha Sambasivam said...

மஞ்சுளாவும், விசாலாட்சி, விசாலினி ஆகியவை தெரிந்த செய்திகள்

Bagawanjee KA said...

அடேங்கப்பா ,இத்தனை தகவலா?
எதை சொல்வது என்றே தெரியவில்லை ,கூட்டிக் கழிச்சு யோசித்ததில் நினைவுக்கு வந்தது ..கங்கூலியின் உதவி பாராட்டுக்குரியது :)

yathavan nambi said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (23/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

Dr B Jambulingam said...

உங்களது பதிவைக் கண்டேன். வித்தியாசமான முறையில் நல்ல செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ள விதம் அருமை. இன்று வலைச்சரத்தில் தங்களை ஜீஎம்பி ஐயா அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/

Dr B Jambulingam said...

உங்களது பதிவைக் கண்டேன். வித்தியாசமான முறையில் நல்ல செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ள விதம் அருமை. இன்று வலைச்சரத்தில் தங்களை வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!