Friday, October 15, 2010

காமினி கொஞ்சம் சிரியேன்! (சவால் சிறுகதை)

பியூட்டி பார்லரில் இருக்கையில் அமர்ந்திருந்த காமினி, தூரத்தில் வருகின்ற டாக்டர் சிவாவைப் பார்த்ததும், அவசரம் அவசரமாக தன முகத்திற்கு ஒரு ஃபேசியல் மாஸ்க் போடச் சொன்னாள். கையில் தான் செய்து கொண்டிருந்த ஒயர் கூடை வேலையைக் கூட அப்படியே நிறுத்தினாள். சிவா, பியூட்டி பார்லர் உள்ளே நுழைந்து ஒரு நோட்டம் விட்டுவிட்டு, 'ஹூம் இன்னும் அவள் இங்கே வரவில்லையா' என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, பியூட்டி பார்லரின் வாசலில், வீதியைப் பார்த்து நின்றுகொண்டான். 

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.  

"அப்பாடா - ஒரு பேரறுவையிடமிருந்து தப்பித்து விட்டேன், கடவுளுக்கு நன்றி" என்று கூறியவாறு மயிலாப்பூர் கடற்கரை நோக்கி வேகமாக நடந்தாள்.

தொலைவிலிருந்து அவள் வேகமாக நடப்பதைப் பார்த்து, உடனே அடையாளம் தெரிந்து, ஓடி வந்தான், டாக்டர் சிவா. "காமினி, உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றேன். நேற்று என்னுடைய நர்சிங் ஹோமில் நடந்த ஜோக் ஒன்று சொல்கிறேன், கேளேன்." 

"ஐயோ வேண்டாமே!" 

"இல்லை காமினி - இது நிஜமாவே குட் ஜோக்.. கொஞ்சம் கேளேன்..."   


"ஊம ஹூம் - இப்போ டயம் இல்லை சிவா. அப்புறம் பார்க்கலாம்."   
               
"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
     
"சரி. சொல்லித் தொலை."
     
நேற்று என்னுடைய பேஷண்ட் ஒருவர் என்னிடம், சார் எனக்கு வந்திருப்பது நிமோனியா தானா? நிச்சயம் தெரியுமா?' என்று கேட்டார். 

'நிச்சயம் நிமோனியாதான். ஏன் இவ்வளவு சந்தேகம்?' என்று நான் கேட்டேன். 

அதற்கு அவர், 'இல்லை இதற்கு முன்னால், நீங்க நிமோனியாவுக்கு ட்ரீட் செய்த நான்கு பேருங்க மஞ்சள் காமாலையில் செத்துப் போயிட்டாங்க என்று கேள்விப்பட்டேன்' என்றார். 

நான் உடனே 'வாட் நான்சென்ஸ்! நான் யாருக்காவது நிமோனியாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தால் அவர் நிச்சயம் நிமோனியாவால்தான் செத்துப் போவார்' என்றேன். 
   
காமினி சிரிப்பை அடக்க முடியாமல் பக பக வென சிரித்தாள். சிவா திருப்தியாக அப்பால் சென்றான். காமினி, தலையில் அடித்துக்கொண்டு கடலை நோக்கி நடந்தாள். 

கடல் மணலில் கால் புதிய, அலைகளை நோக்கி நடந்துகொண்டு இருக்கும்பொழுது அவள் கையில் இருந்த அலைபேசி அழைத்தது. 

அதில் பேசிய பரந்தாமனின் பதற்றக் குரலைக் கேட்டதும், அவள் பின்னால் திரும்பிப் பார்த்தவாறே, கடல் அலைகளைப் பார்த்து ஓடினாள்.

அவள் ஓடிய ஓட்டத்தில் கடல் மணல், அவள் கால்களின் அடியிலிருந்து வீசப்பட்டு, அங்கு அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்த எல்லோருடைய கண்ணிலும் பட்டது. 'டைமண்ட்...டைமண்ட்...' என்று கத்திக்கொண்டு,  திடீரென்று ஓடத்துவங்கிய காமினியை, என்னவோ ஏதோ என்று பதறியபடி அனிச்சைச் செயலாக பின் தொடர்ந்து ஓடிய கடற்கரைக் காவல் போலீஸ்காரரின் கண்ணில் கூட மண்ணைத் தூவுகின்ற வகையில் ஓடினாள், காமினி. 

ஓடிப்போய், அலையில் அடித்து இழுத்துச் செல்லப்படவிருந்த ஒரு நாய்க்குட்டியை, கைகளில் தூக்கிக் கொண்டு வந்து, தனக்கு அலைபேசியில் தகவல் அளித்த, தொடர்ந்து வந்த எதிர் வீட்டு முதியவர் பரந்தாமனிடம் கொடுத்தாள், காமினி. 

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்."
                     
"அடச்சே! இந்த நாயின் பெயர்தான் டைமண்டா?" என்று சொல்லியவாறு, மண் விழுந்த கண்களைக் கசக்கியபடி நடந்தார் போலீஸ்காரர். 
                   


9 comments:

RVS said...

துப்பாக்கி வைக்கறதுக்கும் "டைமண்ட் நாய்", "பேசியல் மாஸ்க்" போல ஏதாவது சொல்லியிருந்தா இதுதான் டாப்பு. கொஞ்சம் அந்த இடத்தில இடிக்குது. மத்தபடி ரொம்ப வித்தியாசமான சிரிப்புக் கோணம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அஹ‌ம‌து இர்ஷாத் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

Madhavan said...

comedy piece.. well done.

I also felt similar to what RVS said abt. 'pistol' part.

வானம்பாடிகள் said...

=)). இந்த நாய்க்குட்டி பீஸ் வேற யாரோ எழுதிட்டாங்களே.

எஸ்.கே said...

நன்றாக இருந்தது! வாழ்த்துக்கள்!

Gopi Ramamoorthy said...

நல்லா இருக்கு.

சமயம் கிடைக்கும்போது என் கதையைப் படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள்.

http://ramamoorthygopi.blogspot.com/2010/10/blog-post_14.html

Gayathri said...

rombha vidhyaasamaa yosichurukeenga nalla irukku

vazhthukkal

ஹுஸைனம்மா said...

அவ்வ்வ்.. எல்லாரும் இப்படியே கடிக்கிறீங்களே.. பரிசல் ஒரு போட்டி வச்சாலும் வச்சார்.. ஆளாளுக்கு இப்படி ‘வித்தியாசமா’ யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க!! :-))))

Abhi said...

நலலா எழுதியிருக்கீங்க! வெற்றி பெற வாழ்த்துக்கள்! நானும்எழுதியிருக்கேன் ... வைரம் உன் தேகம் ங்கற தலைப்பில்... http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!