Monday, February 6, 2012

குளிர் கால குடை மிளகாய்.


மழைக் காலம் முடிந்ததும், குடையை மடக்கி உள்ளே வைத்துவிடுவோம். ஆனால் குளிர் காலத்துக்கேற்ற காய், குடை மிளகாய் என்று சற்று முன்பு கூகிள் தேடலில் தெரிந்து கொண்டேன். 

                                             

மஞ்சள் நிறக் குடை மிளகாய் பார்த்ததும், ஆசையாக ஐந்தாறு வாங்கி வந்துவிட்டோம், நானும், திருமதியும். 
                      
பாண்டிய மன்னனுக்கு வந்தது போல சில சந்தேகங்கள் வந்துவிட்டன, மஞ்சள் மிளகாயைப் பார்த்ததும். 
              
# வெவ்வேறு நிறங்கள் கொண்ட குடை மிளகாய்களுக்கு, வெவ்வேறு குணம், உபயோகம் உண்டா? 
                
# குடை மிளகாயின் வெவ்வேறு சமையல் பக்குவங்கள் என்னென்ன? 
            
# உங்களுக்குப் பிடித்த குடை மிளகாய் சமையல் எது? 
           
# எங்கள் ஆசிரியர்களில் ஒருவர், உணவில் குடை மிளகாய் சேர்த்துக் கொண்டால், பி பி (B.P) கன்னா பின்னாவென்று ஏறுகிறது என்கிறார். வாசக அனுபவங்கள் என்ன? 
   
(என்ன - ஆயிரம் பொற்காசுகளா? - அதெல்லாம் ஒன்றும் கிடையாது - கீ சா மாமி 'கிர்ர்ர்ர்ர்ர் ...' என்று சொன்னாலும் .....!!)   
                                 

35 comments:

கக்கு - மாணிக்கம் said...

குட மிளகாயால் பி பி எகிருவதெல்லாம் இல்லை. அதெப்படி நார் சத்துள்ள ஒரு பொருள் பி.பி யை எகிரவைக்கும்?
அதில் ஒன்றும் எண்ணெய்,கொழுப்பு போன்றவைகள் இல்லையே!

சாம்பாரில் இந்த குடமிளக்காயகளை வெட்டி போட்டு பாருங்கள். சட்டி காலியாவிவிடும்.

சுண்டைக்காய் பொறித்த குழம்பு செய்யும் பொது இவைகளையும் சற்று சேருங்கள். ருசியும் மனமும் அள்ளிக்கொண்டு போகும்.

வெறுமனே மெல்லியதாக நறுக்கி சலாட் செய்யலாம். மற்ற வெள்ளரி, கேரட் , தக்காளி, வெங்காயம் கோசு , சாலட் தழைகளுடன் இவற்றையும் சேர்த்தால் சால்ட் சூப்பர் தூள் தான்.

எங்கள் ப்ளாக் said...

கக்கு மாணிக்கம்! கலக்கு மாணிக்கம்! கலக்கிட்டீங்க!

அப்பாதுரை said...

அதாவது கிலோ விலையைக் கேட்டு bp எகிறிக்கும்னு சொல்லவந்தாரு..

geethasmbsvm6 said...

Geetha Sambasivam - (என்ன - ஆயிரம் பொற்காசுகளா? - அதெல்லாம் ஒன்றும் கிடையாது - கீ சா மாமி 'கிர்ர்ர்ர்ர்ர் ...' என்று சொன்னாலும் .....!!)//

aniyayama irukke? ilavasamaval alosanai tharuvanga? athellam kidaiyath.......
ஹிஹிஹி, கீழே உள்ள லிங்கிலே போய்ப் பாருங்க மஞ்சள், சிவப்புக் குடைமிளகாயின் உபயோகத்தில் ஒரு சிறு பகுதி கிடைக்கும்.

இரண்டையும் போட்டு, வெங்காயத் தாள், செலரி எல்லாம் போட்டு மிளகாய் சாஸ் ஊற்றி(மிளகாய் சாஸ் நான் வீட்டிலே தான் தயாரிப்பேன்.)சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் பண்ணலாம். கலர் கலராப் பார்க்க அழகா இருக்கும். மஞ்சள் குடைமிளகாயை மட்டும் வைச்சு எலுமிச்சம்பழம், இஞ்சி சேர்த்து ஊறுகாய் போடலாம்.

எங்கே ஆயிரம் டாலருக்கான செக்? ஃபெடெக்ஸ் பண்ணிடுங்க.


http://geetha-sambasivam.blogspot.com/2012/02/blog-post.html

geethasmbsvm6 said...

அப்போ அவசரமாக் குடைமிளகாய் ஊறுகாய் கூப்பிட்டதால் போயிட்டேன். குடைமிளகாய் ஸ்டஃப் இருக்கு, உ,கி. மஞ்சள், சிவப்பு, பச்சைக் கு.மி.யோடு சமைச்சால் சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ். எல்லாம் சொல்லணும்னா ஆயிரம் பொற்காசுகள் பத்தாது.

geethasmbsvm6 said...

வெஜிடபிள் உப்புமா(ரவை, சேமியா, அவல் எதானாலும்) இந்தக் கு.மி. சேர்க்கலாம். வாழைத்தண்டு பொடிப் பொடியாக நறுக்கிக் கு.மி. இஞ்சி பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொண்டு கொஞ்சம் பாசிப்பருப்பை ஊறவைத்து அதையும் போட்டு எலுமிச்சம்பழம் பிழிந்து ஒரு சிட்டிகை மிளகுத்தூள், பச்சைக்கொத்துமல்லி, உப்பு சேர்த்து சாலடாகப் பயன்படுத்தலாம். இங்கே அனுப்பி வைங்க. நாங்க பண்ணிச் சாப்பிட்டுக்கறோம்.

geethasmbsvm6 said...

மத்தது இங்கே சொல்லப்படமாட்டாது. கலர், கலரா கு.மி. மட்டும் போட்டு தக்காளி சேர்த்து சாதம் செய்யலாம்.

geethasmbsvm6 said...

பஜ்ஜி, பஜியாவை விட்டுட்டேனே. பஜியா வட இந்தியாவிலே போடும் பஜ்ஜி. கு,மி. மட்டுமில்லாமல் எல்லாக் கீரைகளும் சேர்ப்பாங்க அதிலே. நம்மூர் தூள் பஜ்ஜி மாதிரி.

அந்தக் காலத்து மதுரையில் சிம்மக்கல் மாடர்ன் லாட்ஜ் தூள் பஜ்ஜி ரொம்ப ஃபேமஸ். போட்ட அரை மணியில் தீர்ந்து போகும். இப்போ மாடர்ன் லாட்ஜே இல்லை அங்கே. :(

மேலமாசி வீதி மாடர்ன் லாட்ஜில் உளுந்து வடை. மு.ப. போட்டு.

ஹேமா said...

மீன் குழம்பில் சேர்த்தால் சுவையும் வாசனையும் கூடும்.அதிகமாகச் சின்ன வெங்காயத்தோடு சேர்த்து அச்சாறு செய்வார்கள் இலங்கையில் சிங்களச் சகோதரர்கள் !

வல்லிசிம்ஹன் said...

என்னோட வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கி அத்தனையும் கீதா சொல்லிவிட்டதால் நான் கிர்ர்ர் மட்டும் சொல்லிக்கறேன். எல்லாவற்றிலிம் பெஸ்ட் சாம்பாரும், கொத்தமல்லி,குடமிளகாய் சலாடும் தான்.

geethasmbsvm6 said...

வெண்டைக்காய், கு.மி. தக்காளி போட்டு வதக்கினால் சப்பாத்திக்கு மட்டுமில்லை; அப்படியே சாப்பிடலாம்.

வல்லி, என்ன கிர்ர்ர்ர்ரை நீங்க எடுத்துக் கொண்டு விட்டீங்க? :)))))) ராயல்டி வேணுமாக்கும். :)))))

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!! ரங் பி ரங் !!!!!

ஃப்ரைடு ரைஸ்லே போட்டால் வானவில் தோற்றுப்போகும்!!!!!!

விலையைக் கேட்டுதான் அவருக்கு பிபி எகிறி இருக்கும். இங்கே ஒன்னு மூணரை டாலர்.

பாக்கி எல்லாம் கீதா சொல்லியாச்சு:-)

துளசி கோபால் said...

மெல்லிசா நறுக்கி அதன்கூடக் கொஞ்சம் சீஸ் வச்சு சாண்ட்விச் செஞ்சு தின்னு பார்த்துட்டுச் சொல்லுங்க.

geethasmbsvm6 said...

மூணாவது கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி இருக்கேன். மிச்சத்துக்கு அப்புறமா வரேன். குடைமிளகாய் வாங்கக் கோயம்பேடு போனால் கொஞ்சம்விலை குறைச்சலாகக் கிடைக்கும். பிபி ஏறாது. :))))))

geethasmbsvm6 said...

போனால் போகுதுனு அந்த ரெசிபியை உங்களுக்காக விட்டு வைச்சேன். சீஸ் போட்டு ஸ்டஃப்ட் கூடச் செய்யலாம். :))))))

அப்பாதுரை said...

குடை மிளகாய் அபிமானி சங்க மீடிங் போல இருக்கே?

எங்கள் ப்ளாக் said...

கீதா சாம்பசிவம், ஹேமா, வல்லிசிம்ஹன், துளசி கோபால் - எல்லோரும் சூப்பர் கு(ம்)மி பக்குவங்கள் சொல்லி இருக்கீங்க. நேற்று நாங்க வாங்கிய மஞ்சள் கு மி இரண்டையும், இன்று தக்காளி, வெண்டைக்காயுடன் சேர்த்து வதக்கி கீதா மாமி சொன்ன டிஷ் செய்து பார்க்கவேண்டும் (சாப்பிடவும் வேண்டும்) என்று இருக்கின்றேன். நன்றாக இருந்தால், கீ சா மாமிக்கு, ஆயிரம் கு மி (படம்) அனுப்பிகின்றேன்! கிரியா ஊக்கி அப்பாதுரைக்கு நன்றி. உங்களுக்குப் பிடித்த கு மி டிஷ் எதுவும் கிடையாதா?

வல்லிசிம்ஹன் said...

பின்ன என்ன கீதா, ஏதோ கொஞ்சம் பீத்திக்கலாம்னு வந்தால் எல்லாம் சொல்லியாச்சு. நான் சொன்ன கிர்ர், தலைசுத்தல்:)

அப்படியே சாப்பிடற் ஒரு ரெசிபி.
கு.மி, சீஸ்,டோஃபு, தக்காளி ,கொ மி, புதினா
எல்லாத்தையும் துருவிப் பௌல்ல போட்டு
யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு சாப்பிட்லாம்.

ஹுஸைனம்மா said...

ஓ, சமையலா.... நம்ம ஏரியா இல்லை!! ;-))))

பரவால்லியே, நிறைய ரெஸிப்பீஸ் & டிப்ஸ் வந்திருக்கே, அப்ப அடுத்த பதிவு இத வச்சா? ;-))))))

RAMVI said...

குட மிளகாயினால் ப்பி.பி எல்லாம் ஏறாது,ஆனால் அதன் விலையை கேட்டால் ஏறிவிடும்.

குடமிளகாயில் பஜ்ஜி, செய்யலாம்.மிளகாய் பஜ்ஜி போலவே சுவையாக இருக்கும்,ஆனால் அதிகமாக காரம் இருக்காது.

geethasmbsvm6 said...

கீ சா மாமிக்கு, ஆயிரம் கு மி (படம்) அனுப்பிகின்றேன்! //

சரி, சரி, தங்கத்திலே தானே பண்ணறீங்க? பிடியை நினைவா நவரத்தினக்கல் பதிச்சுப் போடுங்க. 5 ஆ"சிரி"யர்கள் இருக்கீங்க இல்ல? ஆளுக்கு 200 கு.மி.னு பொறுப்பு எடுத்துண்டாத் தீர்ந்தது. விலாசம் தனி மெயிலில் அனுப்பறேன். :))))


கிரியா ஊக்கி அப்பாதுரைக்கு நன்றி. உங்களுக்குப் பிடித்த கு மி டிஷ் எதுவும் கிடையாதா?//

நல்ல கதையா இருக்கே? ஏதோ போனால் போகுதேனு கூகிள்+ல் கேட்டீங்களேனு ரெசிபி எல்லாம் சொன்னால் பாராட்டு அப்பாதுரைக்கா? எங்கே நீதி, நேர்மை, நியாயம், தர்மம் எல்லாம்??? :P:P:P:P

பெண்களே பொங்கி எழுங்கள்.

geethasmbsvm6 said...

உ.கி.யைக் கழுவித் தோல் சீவிக் கொண்டு துண்டம் துண்டமா நறுக்கிட்டுக் கு.மியையும் நறுக்கிச் சேர்த்துக் கொஞ்சமாக்காரப்பொடி உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கிட்டு, வத்தல் குழம்போட சைட் டிஷாத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க.

இதையே ஜீரகம், சோம்பு தாளித்துக் கொண்டு தக்காளி, வெங்காயம் சேர்த்துக் காரப்பொடி போட்டு வதக்கிக் கீழே இறக்குகையில் கொஞ்சம் போல் கரம் மசாலா தூவிட்டுப் பச்சைக் கொத்துமல்லியும் தூவினால் சப்பாத்தி, பூரிக்கு சைட் டிஷ்.

அப்பாவி தங்கமணி said...

//கீ சா மாமி 'கிர்ர்ர்ர்ர்ர் ...' என்று சொன்னாலும் .....!!) //

ஹா ஹா ஹா.. ஐ லைக் திஸ்...;) மத்தபடி சமையல் சங்கதி எல்லாம் மாமியே சொல்லிட்டதாலே அவங்க சொல்லாம விட்ட கிர்ர்ரர்ர்ர்ர் மட்டும் நான் சொல்லிக்கறேன்..:)

அப்பாதுரை said...

கிரியா ஊக்கினா பாராட்டா? ரொம்ப தேங்க்ஸுங்க. அடுத்த வாட்டி சென்னை வரப்போ சரவணபவன்ல சம்திங் சம்திங் கவனிச்சுக்குறேன் :) யார் உருப்படியா ஏதாவது எழுதினாலும் பாராட்டை மட்டும் இந்தப் பக்கமா தள்ளிடுங்க...

குமி சாம்பார் தான் எனக்குப் பிடிக்கும் (பிட்லை ஸ்டைல் இன்னும் ரெண்டு கரண்டி ப்லீஸ்). குமி pizza topping பிடிக்கும். ஆனால் இப்போ pizza அதிகம் சாப்பிடுறதில்லே. எப்பவோ ஒரு தடவை டெல்லி பப்பளா ஹோட்டலில் stuffed capsicum என்று கொடுத்தார்கள், சகிக்கவில்லை. குமி நடுவில் இருக்கும் தண்டை மட்டும் தனியாக எடுத்து (காம்புடன்) காரக் கொழக்கட்டை (கொழுக்கட்டை?) மாதிரி செய்வார்கள் (dumpling) என் தென்னமெரிக்க நண்பர்கள் வீட்டில்.

அப்பாதுரை said...

பாண்டிய மன்னனுக்கு குடை மிளகாயைப் பாத்து சந்தேகம் வந்ததா? புதுசா இருக்குதே கதை?

எங்கள் ப்ளாக் said...

நன்றி இரண்டாம் கட்டம்: வல்லிசிம்ஹன், ஹுஸைனம்மா, ராம்வி, கீதா சாம்பசிவம், அப்பாவி தங்கமணி, அப்பாதுரை.

எங்கள் ப்ளாக் said...

அப்பாதுரை சார் - ஒரு சினிமா போல இதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்:

எஸ் ஜானகி குரலில், தேவிகா வாயசைக்க, "..... கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல் - வண்ண
தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்......" என்று பாடியபடி வர,
இதைப் பார்த்திருந்த / கேட்டிருந்த செண்பகப் பாண்டியனுக்கு (முத்துராமனுக்கு) கார்குழல் என்றவுடன் கார்மேகம் ஞாபகம் வந்து, உடனே மழை ஞாபகம் வந்து, அதைகுப் பின் குடை ஞாபகம் வந்து, உடனே குடை மிளகாய் பற்றி இந்த சந்தேகம் வந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்! தேவிகாவின் விக் தலையிலிருந்து வந்த மணத்தை அனுபவித்து வந்த சந்தேகம் போல இந்த சந்தேகமும் வரக் கூடாதா என்ன!

வல்லிசிம்ஹன் said...

தேவிகாவின் விக் தலை:)))))))))))))))))))0

அப்பாதுரை said...

பின்னிட்டீங்க.. புதுவிளையாடலா? பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் கிலோ குடை மிளகாயா?

எங்கள் ப்ளாக் said...

கார்குழல் என்றவுடன் பின்னிட்டீங்க என்று சொல்கிறீர்களா!

அமைதிச்சாரல் said...

ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், மட்டுமல்லாம ஸ்பானிஷ் பிங்க் ரைஸும் செய்யலாம். ருசி அசத்தும்.

வெங்காயம் தக்காளியை, இஞ்சி பூண்டு விழுதோட வதக்கிட்டு, கொஞ்சூண்டு கரம் மசாலாவையும் ருசிக்கேற்ப உப்பையும் சேர்த்துட்டு கடைசில கொத்தமல்லித்தழை தூவி க்ரேவி செஞ்சா, இன்னொரு சப்பாத்தி சத்தமில்லாம வயித்துக்குள்ள போயிரும்.

geethasmbsvm6 said...

@அப்பாதுரை, யாருக்குப்பின்னினாங்களாம்??

அது சரி, அந்தக் காலத்திலேயும் அதாவது செண்பக பாண்டியன் காலத்திலேயும் குடை எல்லாம் உண்டா? இப்போ மாதிரி ஸ்ப்ரிங் குடை??? டவுட்ட்ட்ட்டு!!!!!!!!! குடை இருந்தால் தான் குடை மிளகாயும் இருந்திருக்கணும் இல்லை??

எங்கள் ப்ளாக் said...

அந்தக் காலத்திலேயும் குடை எல்லாம் உண்டா? ---

கடவுள் வாமனாவதாரம் எடுத்த பொழுது, அவர் குடையுடன்தான் காட்சியளிக்கின்றார். அரசர்களுக்கும் வெண்கொற்றக் குடை உண்டு.

geethasmbsvm6 said...

இப்போ மாதிரி ஸ்ப்ரிங் குடை??? //

heheheeheeeheee, I mean this thing. :P

RVS said...

குளிர்காலம் சரி... குடை மிளகாய் மழைக்காலத்தில் ரொம்ப யூஸ் ஆகுமாமே! அப்படியா? என் பங்கிற்கு....... அப்பாதுரை சார்! புதுவிளையாடல்... ரொம்ப நல்லா இருக்கு.. :-)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!