Sunday, November 22, 2015

ஞாயிறு 333 :: மூன்று, மூன்று, மூன்று.

ஞாயிறு மூன்று மூன்று மூன்று . இந்தப் படத்தில் கானப்படுபவைகளையும், மூன்று என்ற எண்ணையும்  இணைத்து, கருத்துரையிடுபவர்களுக்கு பாயிண்டுகள் அளிபபோம்.
   
        

33 comments:

Geetha Sambasivam said...

மூன்று முறை யோசித்தும் அவங்க மூன்று வளையல்களுக்கான விளம்பரம் செய்யறாங்களா இல்லாட்டி மூன்று ஜோடி வளையல்கள் வாங்கினால் அந்த அழுக்கு ஐந்து ரூபாய் நோட்டுத் தள்ளுபடினு சொல்றாங்களானு எதுவும் புரியலை! முக்கா முக்கா மூன்று தரம். அதனால் இன்னும் மூன்று தரம் வந்து மூன்று கருத்துச் சொல்லலாம்னு எண்ணம். எப்பூடி வசதி? :)

Dr B Jambulingam said...

நண்பர்களை சிந்திக்கவைக்க நல்ல உத்தி. நன்றி.

Geetha Sambasivam said...

இந்த மூன்று படங்களைத் தவிர வேறே ஏதும் மூன்று விஷயங்கள் இந்தப் படத்திலே மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ எனப் படத்தையும் மூன்று முறை பார்த்துட்டேன். :)

Geetha Sambasivam said...

இத்தனை மூன்று சொன்னதுக்காக எனக்கு மூன்று தனித்தனி பரிசுகள் மூன்று முறை தனித்தனியாக அனுப்பிடுங்க! மூன்று முறை கருத்துகள் சொல்லியாச்சு! இனி பாயிண்டுகள் மூன்றாக இல்லாமல் முழுசாகக் கொடுத்துடுங்க!

திண்டுக்கல் தனபாலன் said...

பிறகு வருகிறேன்...!

ராமலக்ஷ்மி said...

மூன்று, மூன்று, மூன்றுக்கு வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

மூன்று, மூன்று, மூன்றுக்கு வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

மூன்று, மூன்று, மூன்றுக்கு வாழ்த்துகள்!

அன்பே சிவம் said...

ன்னத்த சொல்லுறது அடி அடின்னு பெஞ்ச மழையில ஒருவழியா கொஞ்சம் நிமிந்து நின்னா இப்படியெல்லாமா யோசிப்பீங்க?

வீட்டுக்கார அம்மாவுக்கு புதுசா வந்திருக்குற டிசைன்ல வளவி வேனும்னு கேட்டு ஒரே அழுகாச்சி. எதோ எக்ஸ்சேஞ்ச் மேளாவாமே. நச்சரிப்ப தாங்க முடியாம போய் பாத்தா பழைய நகைக்கு பதில் புதுசு தாராங்களாம். வித்தியாசப்படுற துகைமட்டும் கட்டினா போதும்னு சொன்னாங்க.. பழைய நகைக்கு அவங்க சொன்ன வெலைக்கி பேசாம வீட்டிலயே இருந்திருக்கலாம். ஆனா விதி விட்டாத்தானே. சரின்னு ஒரு வழியா பழசை அரைமனசோட அரைவெலைக்கி குடுத்துட்டு புது நகையோட விலைய கழிக்க சொன்னா கடையில இருக்குற அம்மணி சொல்லுது நான் தான் மீதி 3333 ரூபா தரனும்னு...! அப்பவே எனக்கு மயக்கம் வந்துடுச்சு.. ஒருவழியா வீடு வந்து சேந்ததுமே சட்டைபையில ஈரமா ஏதோ தட்டுப்பட்டுச்சு என்னன்னு பாத்தா? அதுதான் இப்ப நீங்க படத்துல பாக்குற நஞ்சி போன அஞ்சி ரூபா..

அப்புறம் சொல்ல மறந்த்துட்டேனே உங்க பதிவப்பாத்ததும் கோவம் கோவமா வந்தது. அந்தகோவத்துல ஓங்கி ஒரே குத்தா வாக்கு குத்திட்டு பாக்குறேன்.. என்னோட வாக்கும் 3வதாவே பதிவாயிருக்கு :-) ஸ்மைலி போட்டுட்டேன் பாஸ்..

வெங்கட் நாகராஜ் said...

மூணு மூணு மூணு - மூணு நாளைக்குப் பிறகு உங்கள் பதிவுப் பக்கம் வந்தேன் :) இப்பதான் பதிவெல்லாம் படிச்சேன்!

middleclassmadhavi said...

காஜல் (தானே) இரண்டு கைகளிலும் ஐந்து விரல்கள் காண்பிக்கிறார். பக்கத்தில் இரண்டு பேர் பெயர் இட்ட 5 ரூபாய்த்தாள். ஆக, ஐந்திலிருந்து இரண்டைக் கழித்தால் மூன்று!!

‘தளிர்’ சுரேஷ் said...

வித்தியாசமான போட்டி! ஹிஹி! பதில் தெரியலை!

KILLERGEE Devakottai said...

5 ம் நம்பர் மூன்று இருக்கிறது
அவள் விரல்களை விரிப்பதில் மூன்று இருக்கிறது.

Geetha Sambasivam said...

கில்லர்ஜி, விரல்கள் ஐந்தும் தானே விரிந்திருக்கின்றன. ஐந்தாம் நம்பர் மூன்று தான் என்பதை இப்போது நீங்கள் குறிப்பிட்டதும் தான் பார்த்தேன்.

ரூபன் said...

வணக்கம்
ஐயா
யாவரையும் சிந்திக்கவைத்து விட்டீங்கள்..ஐயா.. த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

இந்த நடிகை மூன்று பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்டார். ரூபாய் நோட்டில் 5*3=15 முறை ஐந்து ரூபாய் என்று பல மொழிகளில் பதிவாகியிருக்கிறது..

ரொம்ப யோசிச்சுட்டேன், சரி.. எனக்கு எத்தனை பாயிண்ட் ?

G.M Balasubramaniam said...

மூன்று முடிச்சுக்குத் தயாராயிருக்கும் மங்கை சுந்தரம் திருப்பத்தூருக்கு வேற வேலை இல்லையா?

Thulasidharan V Thillaiakathu said...

மூன்று எழுத்து நடிகையான அவருக்கு வளையல் மேக்கிங்க் சார்ஜில் மூன்று ரூபாய் கழிப்பதாகச் சொன்னதால் மூன்று 5 கள் இருக்கும் அந்த 5 ரூபாயில் மூன்று ரூபாய் கழித்ததால் மீதி கிடைத்த 2 ரூபாயுடன், இடது கையால் 3 விரல்களைக்காட்டி 3 மோதிரங்கள்... சிம்பாலிக்காக 3 ரூபாய் தள்ளுபடி என்று சொல்லிச் சிரிக்கின்றார். வலது கை கிளியராக இல்லாததால்.....ம்ம்ம்ம்

kg gouthaman said...

கீதா சாம்பசிவம் அவர்களுக்கு முதல் கமெண்ட் காரணமாக நூறு பாயிண்டுகள். மீதி இரண்டு கமெண்ட் முப்பது + மூன்று = முப்பத்து மூன்று பாயிண்டுகள். மொத்தம் நூற்று முப்பத்து மூன்று.

kg gouthaman said...

டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு நன்றி.

kg gouthaman said...

திண்டுக்கல் தனபாலன் மீண்டும் வரும்வரை காத்திருப்போம்.

kg gouthaman said...

ராமலக்ஷ்மி நன்றி, நன்றி, நன்றி!

kg gouthaman said...

அன்பே சிவம் சுவாரஸ்யக் கருத்து! நூற்று ஐம்பது பாயிண்டுகள்!

kg gouthaman said...

வெங்கட் நாகராஜ்! ஓ இப்படிக் கூட மூன்றைக் கொண்டுவரலாமா!

kg gouthaman said...

மிடில்கிளாஸ் மாதவி நல்ல ஆப்சர்வேஷன்! நூறு பாயிண்டுகள்.

kg gouthaman said...

தளிர் சுரேஷ். பதில் என்று எதுவும் குறிப்பாகக் கிடையாது. எப்படியாவது, படத்தில் காணப்படுபவைகளையும்,மூன்றையும் இணைக்கவேண்டும்!!! நன்றி.

kg gouthaman said...

கில்லர்ஜி நல்ல ஆப்சர்வேஷன்! நூற்று ஐம்பது பாயிண்டுகள்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், பெண்களுக்கு 33% தானா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)

kg gouthaman said...

// Geetha Sambasivam said...
கில்லர்ஜி, விரல்கள் ஐந்தும் தானே விரிந்திருக்கின்றன. ஐந்தாம் நம்பர் மூன்று தான் என்பதை இப்போது நீங்கள் குறிப்பிட்டதும் தான் பார்த்தேன்.//
கில்லர்ஜி சொல்லியிருப்பது என்னவென்றால் ....... காஜல் கைகளில் உள்ளங்கை, விரல், நகம் என்று மூன்றும் உள்ளது என்று! (ஹா ஹா கில்லர்ஜி - அப்புறமா எனக்கு கடலைமிட்டாய் பாக்கெட் பார்சல் பண்ணிடுங்க!)

kg gouthaman said...

ரூபன் வாக்குக்கும், கருத்துக்கும் நன்றி!

kg gouthaman said...

//தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
இந்த நடிகை மூன்று பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்டார். ரூபாய் நோட்டில் 5*3=15 முறை ஐந்து ரூபாய் என்று பல மொழிகளில் பதிவாகியிருக்கிறது..

ரொம்ப யோசிச்சுட்டேன், சரி.. எனக்கு எத்தனை பாயிண்ட் ?//
அட! கரெக்ட்! முப்பது வயது ஆகிவிட்டது அவருக்கு!
ஐந்து ரூபாய் நோட்டில் வரிசையாக எழுதியிருப்பது இந்தி உட்பட பதின்மூன்று மொழிகள். ஆங்கிலத்தில் இரண்டு இடங்களிலும், இந்தியில் மேலும் இரண்டு இடங்களிலும் இருக்கிறது என்று நினைக்கின்றேன்.
ரொம்ப யோசித்துவிட்டீர்கள். அதற்காக இருநூறு பாயிண்டுகள்!

kg gouthaman said...

ஜி எம் பி ! ஒரு கருத்துரை, ஒரு கடிதல்!!! உங்களுக்கு ஐம்பது பாயிண்டுகள் கொடுத்துவிடுகின்றோம்! எங்களைத் திட்டாதீர்கள்!!! :-)

kg gouthaman said...

// Thulasidharan V Thillaiakathu said...
மூன்று எழுத்து நடிகையான அவருக்கு வளையல் மேக்கிங்க் சார்ஜில் மூன்று ரூபாய் கழிப்பதாகச் சொன்னதால் மூன்று 5 கள் இருக்கும் அந்த 5 ரூபாயில் மூன்று ரூபாய் கழித்ததால் மீதி கிடைத்த 2 ரூபாயுடன், இடது கையால் 3 விரல்களைக்காட்டி 3 மோதிரங்கள்... சிம்பாலிக்காக 3 ரூபாய் தள்ளுபடி என்று சொல்லிச் சிரிக்கின்றார். வலது கை கிளியராக இல்லாததால்.....ம்ம்ம்ம்///

ஐயோ தலை சுத்துது! நான் மயக்கமாகி விழுவதற்குள் உங்களுக்குக் கொடுக்கவேண்டிய பாயிண்டுகளாகிய நூற்று இருபத்தைந்தை .........
தடால்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!