திங்கள், 1 ஜனவரி, 2018

"திங்க"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி





நான் இருக்கற ஊர்ல வருடம் முழுவதும் பூசணிக்காய் கிடைக்கும், ஆனால் எல்லாம் பிஞ்சுப் பூசணி (சின்ன சைஸ்). நம்ம ஊர்ல கிடைக்கற மாதிரி முத்தல் பூசணி இங்கு கிடைக்காது. இங்க பூசணின்னு நான் சொல்றது, வெண் பூசணி (மேலே பச்சைத் தோல்). அதுனால சென்னைலேர்ந்து வரும்போது, முத்தல் பூசணி ஒரு கீத்து, முடிந்தால் வாங்கிவருவேன் (சும்மா ஓரு கூட்டு, குழம்புத் தான் என்று போடத்தான்). தீபாவளி முடிந்து இங்கு திரும்பியபோது, காய்கறி மார்கெட்டில் 2 முத்தல் பூசணிகளைப் பார்த்தேன். அதில் ஒன்றை வாங்கினேன். இதுதான் முதன் முதலில் இந்த ஊரில் நான் வாங்கிய முத்தல் பூசணி. அதை வாங்கும்போதே காசி அல்வா செய்வது என்று நினைத்துக்கொண்டேன்.

வட நாடுகளில் பூசணியை வைத்துச் செய்யும் இனிப்புகள் புகழ் பெற்றது. ஆக்ரா பேதா (Agra Petha) என்பதில் பல வகைகள் உள்ளன. எல்லாமே சுவையா இருக்கும். ஆனா பூசணியை வைத்துச் செய்யும் இந்த அல்வாவுக்கு மட்டும், காசி அல்வான்னு பெயர். ஒருவேளை வட நாட்டுல, காசில இந்தப் பூசணியை வைத்து அல்வா செய்தார்களா இல்லை, PUMPKINக்கு ஹிந்தி பெயரான காஷி ஃபல் என்பதிலிருந்து மருவியதா என்பது தெரியவில்லை. (காஷி ஃபல்-பறங்கிக்காய் குடும்பத்துக்கான பெயர், சிவப்பு பூசணி, மஞ்சள் பூசணி, வெண் பூசணி என்று எல்லாவற்றிர்க்கும் காஷி ஃபல் தான் பெயரா என்று ஹிந்தி பண்டிட் ஸ்ரீராம் அல்லது தில்லிப் பதிவர் வெங்கட் சொன்னால்தான் உண்டு. ஹிந்தி பண்டிட் என்றவுடன், ‘ஏக் காவு மே ஏக் கிசான் ரகு தாத்தா’ ஞாபகம் வரக்கூடாது, ஸ்ரீராம் ஞாபகம் மட்டும்தான் வரவேண்டும்)

பேதா வகை (நான் பூசணி ஸ்வீட்ஸ்னு சொல்லுவேன்) இனிப்பு எனக்கு ரொம்பப் பிடித்தமானது. அப்புறம் டயட்ல இருந்த காலத்துல, காலை உணவிற்கு, கார்ன் ஃப்ளெக்ஸ், பாலுடன், சிறிது பேதா இனிப்பையும் கிள்ளிப்போட்டுக்கொள்வேன். புரியணும்கறதுக்காக பேதா ஸ்வீட்ஸ் படங்களை நெட்டிலிருந்து சுட்டுப் போட்டிருக்கிறேன்.

சரி.. நாம இப்போ காசி அல்வாவுக்கு வருவோம். இது செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்.

தேவையான பொருட்கள்

வெண் பூசணி ஒரு பெரிய கீத்து (துருவினால், 3 1/2 கப் வரணும்)
ஜீனி – ¾ - 1 கப்
முந்திரி – 10
நெய் – 2 மேசைக் கரண்டி
குங்குமப் பூ – 10-12 நூல்.  எனக்கு சட்டுனு தேட முடியாததால், நான் கேசரிப் பவுடர் உபயோகப்படுத்தினேன்.
ஏலக்காய் தூள் கொஞ்சம்
எலுமிச்சம் பழம் – 4-5 சொட்டு ரசம்
பச்சைக் கற்பூரம்

செய்முறை

·         நெய் விட்டு, முந்திரியை வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.



·         வெண்பூசணி தோலை எடுத்துவிட்டு, விதைகளை நீக்கி, துருவிக்கொள்ளுங்கள்.  ஒரு மெல்லிய துணியில் பூசணி துருவல்களைப் போட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள். வடிகட்டும்போது பூசணி ஜலத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஓரளவு நீர் எடுத்த பூசணித் துருவல்களை எவ்வளவு இருக்குன்னு அளந்துகொள்ளுங்கள். (3 கப்பா, 3 ½ கப்பா என்று)



·         இப்போ, பூசணி ஜலத்தில் பாதியை கடாயில் விட்டு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன், வடிகட்டி எடுத்த பூசணி துருவல்களைச் சேர்த்து நன்றாக வேகவிடவும். அவ்வப்போது கிளறிக்கொடுக்கவும். அளவைப் பொறுத்து, இதற்கு 10-15 நிமிடங்களாகலாம்.


·         பிறகு, துருவல் அளவில், மூன்றில் ஒரு பங்கு ஜீனியை கடாயில் சேருங்கள்.  நெய்யும் இப்போது சேருங்கள்.


·         இனி, கிளறவேண்டியதுதான். ஜீனி கரைந்து, பூசணியுடன் பாகாய்க் கலந்து அல்வா பதத்துக்கு வரணும்.


·         இந்தச் சமயத்தில் கொஞ்சமா கேசரிப் பவுடர் சேர்க்கவும். பிறகு நன்கு கிளறவும். இப்போ 4 சொட்டு எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.


·         சுருண்டு வரும் சமயம் உடனே பச்சைக் கற்பூரம் பொடி செய்து சேர்த்து நன்கு கிளறிவிட்டு உடனே அடுப்பை அணைக்கவும். (பச்சைக் கற்பூரம் கலந்தபிறகு கொதிக்கவிடக்கூடாது)


·         பிறகு, வறுத்து வைத்துள்ள முந்திரியைச் சேர்த்து கலக்கவும்.
·         இப்போ சுவையான காசி அல்வா ரெடி.

எங்கள் பிளாக் ஆசிரியர் ஒருவர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவந்திருந்தேன். அவர் காசி அல்வாவைச் சாப்பிட்டுப் பார்த்து நன்றாக வந்திருக்கிறது என்று சொன்னார். அன்று, அவரின் வருகைக்காக, கடலைப் பருப்பு/அரிசி போட்டு பாயசமும் செய்திருந்தேன்.

பின் குறிப்பு

எலுமிச்சை ஜூஸ் சேர்ப்பது, ஜீனி, ஆறினபிறகு வெண்திட்டுக்களாக ஆகிவிடக்கூடாது (ஜீனி பூத்துவிடக்கூடாது) என்பதற்காக.
கேசரி பவுடருக்குப் பதிலாக, 10-12 குங்குமப்பூ சேர்க்கலாம். தேவையான பொருட்களில் கொடுத்திருந்தாலும் நான் சேர்க்கவில்லை. குங்குமப்பூ சேர்த்தால், கேசரிப் பவுடர் தேவையில்லை.
பூசணியில் முடிந்த அளவு நீரை எடுக்கவில்லையானால், அல்வா பதம் வருவதற்கு ரொம்ப நேரமாகும். கிளறிக் கிளறி கைவலி வந்துவிடும். பின்பு, காசி அல்வா பண்ணும் ஆசையே போய்விடும்.

நம்ம ஊர்ல முத்தல் பூசணிக்குப் பஞ்சமே இல்லை. அருமையான ஸ்வீட் இது. செய்துபாருங்கள்.

அன்புடன்

நெல்லைத்தமிழன்


106 கருத்துகள்:

  1. எல்லோருக்கும் ஹப்பி நியூ இயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    பதிலளிநீக்கு
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. புத்தாண்டு வாழ்த்துகள் பூனை முந்தி விட்டது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  4. தித்திக்கும் புத்தாண்டு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  5. ஆஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ் மீ தான் இன்று 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்டூஊஊஊஊ எனக்கு ஹார்ட் படபடவென அடிக்குதூஊஊஊ ஹா ஹா ஹா:)..

    ஓ நெல்லைத்தமிழன் ரெசிப்பி... நினைச்சேன்ன்.. இன்று அவருடையதுதான் என..

    பதிலளிநீக்கு
  6. அதுக்குள்ள வந்துட்டாங்களா


    ஆஹா

    காலை வணக்கம் ஏஞ்சல், அதிரா ஸ்ரீராம், துரை சகோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. nooo நானும் 6 மணிக்கு போட்டேன் :)

    பதிலளிநீக்கு
  8. ஆ...! இனிய காலை வணக்கம் அதிரா. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் ஏஞ்சல். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. புத்தாண்டிற்கு இனிப்புடன் வந்த ஸ்ரீராம் க்கு புத்தாண்டு வாழ்த்துகள்....ஸ்வீட் வழங்கிய நெல்லைக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

    படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கே!! நெல்லையின் காசி அல்வா...பார்க்கவே பிரமாதமா இருக்கு சுவைக்க வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இனிய காலை வணக்கம் கீதா அக்கா... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. ஆவ்வ்வ்வ்வ் ஸ்ரீராம்... அஞ்சு, துரை அண்ணன்,கீதாக்கா[ஹா ஹாஅ ஹா], கீதா அனைவருக்கும் இனிய காலை வணக்கம்ஸ்ஸ்ஸ்ஸ்:)..

    பதிலளிநீக்கு
  14. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. பூஷணிக்காயைத் துருவி நீரை வடித்து நெய்யில் வதக்கிப்போம். வேக விட்டுச் செய்தது இல்லை. காரட் அல்வாவும் இந்த வகையிலேயே செய்வேன். ஆனால் காரட் அல்வாவுக்கு சர்க்கரை சேர்க்காத கோவா அல்லது நன்கு கொதித்துக் குறுக்கப்பட்ட சிவப்பு நிறத்துக்கு வந்த திக்கான பால் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  16. அது என்னமோ தெரியலை, உடனே ஓடி வரேன். ஆனாலும் அதிரடி, பேப்பர்க்ராஃப்ட்ஸ், துரை மூணு பேருமே முந்திக்கிறாங்க! ஶ்ரீராமோடு கூட்டுச் சதியோ? கண்டு பிடிக்கணும்! :)))))))))

    பதிலளிநீக்கு
  17. துளசியும் தன் வாழ்த்துகளை எல்லோருக்கும் தெரிவிக்கச் சொன்னார். ஸ்ரீராம், நெல்லை, துரை சகோ, கீதாக்கா, எகாந்தன் சகோ, எல்லோருக்கும் தன் வாழ்த்துகளைச் சொன்னார்...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அதிரா... நீங்கள் வியாழன், வெள்ளிக்கிழமை பதிவுகள் படிக்கவில்லை!!

    பதிலளிநீக்கு
  19. அஞ்சுவை செகண்ட் ல முந்திட்டேன்... ஆனா நான் மனதை ஏற்கனவே ரெடி பண்ணிட்டேன்ன் இன்று மீ 1ஸ்ச்ட்டாக இருக்க மாட்டேன் என ஹா ஹா ஹா .. ஹார்ட் இன்னமும் புஸ்ஸூஊஉ புஸ்ஸூ என அடிக்குது:)) கர்ர்ர்:))..

    பதிலளிநீக்கு
  20. வாவ் !!சூப்பர் ரெசிப்பி நெல்லைத்தமிழன் .இந்த பூசணி வங்காளிகள் கடையில் எப்பவும் கிடைக்கும் நானா அவியலுக்கு வாங்குவேன் ....கண்டிப்பா செய்வேன் குறிப்பு சுலபமா இருக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  21. // ஶ்ரீராமோடு கூட்டுச் சதியோ? கண்டு பிடிக்கணும்! :)))))))))//

    ஹா... ஹா... ஹா... அப்படி எல்லாம் ஒன்றுமில்லை அக்கா!

    பதிலளிநீக்கு
  22. நன்றி துளஸிஜி. உங்களுக்கும் இனிய ஆங்கில நாள் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. ///Geetha Sambasivam said...
    அது என்னமோ தெரியலை, உடனே ஓடி வரேன்///

    ஹா ஹா ஹா கீதாக்காவால மீ சிரிச்சு உருளுறேன்ன்ன்:).. கீதாக்கா விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி:) விடாதீங்கோ.. கீப் இட் மேலே:))..

    ///ஸ்ரீராம். said...
    அதிரா... நீங்கள் வியாழன், வெள்ளிக்கிழமை பதிவுகள் படிக்கவில்லை!!//

    ஓ சத்தியமாப் படிக்கவில்லைத்தான்.. படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  24. @மியாவ் :) லேப்டாப் சார்ஜர் மட்டும் உடையலைன்னா நான் தான் எப்பவும் first :) டெஸ்க் டாப்பில் தமிழ் பிலாக்ஸ் திறக்க கஷ்டம்

    பதிலளிநீக்கு
  25. நெல்லைத்தமிழனின் படங்கள் புது வருடத்தில் ஜொலிக்குது.. நான் மனதில் நினைச்சிருந்தேன் நியூ இயருக்கு சுவீட் போட்டால் நன்றாக இருக்குமே என...

    பூசணி அல்வா எனக்கும் கொஞ்சம் சாப்பிடப் பிடிக்கும்... இலங்கையில் இருந்தபோது அப்பப்ப வாங்குவதுண்டு, இங்கு வந்தபின் கிடைப்பதில்லை.. சாப்பிட்டது மில்லை.

    பதிலளிநீக்கு
  26. //லேப்டாப் சார்ஜர் மட்டும் உடையலைன்னா நான் தான் எப்பவும் first :) //

    ஓ.... புதுசு வருவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன!

    பதிலளிநீக்கு
  27. @ கீதா அக்கா :) ஹாஹாஹா :) கொஞ்சம் நாள் தான் அப்புறம் ஸ்கூல் ஸ்டார்ட் ஆனா நானா சீக்கிரம் தூங்கபோவேன் அபூர்வமாத்தான் 12;30 வர முடியும்

    பதிலளிநீக்கு
  28. @ ஸ்ரீராம் ஆமாம் இங்கே யூனிவேர்சல் சார்ஜர் இருக்கு ஆனா எங்களுக்கு பயம் .ஆர்டர் கொடுத்தாச்சு இப்போ ஹாலிடேஸால் டிலே

    பதிலளிநீக்கு
  29. ///PaperCrafts Angel said...
    @மியாவ் :) லேப்டாப் சார்ஜர் மட்டும் உடையலைன்னா நான் தான் எப்பவும் first :) டெஸ்க் டாப்பில் தமிழ் பிலாக்ஸ் திறக்க கஷ்டம்//

    ஹா ஹா ஹா கோட் இஸ் கிரேட் யா:)) நானே எதிர்பார்க்கவில்லை என்னை:))... ஹா ஹ ஹா கீதாக்காவை நினைச்சு இப்பவும் சிரிக்கிறேன்.. ஒருநாளைக்கு கையைப் பிடிச்சுக் கூட்டி வருவோம் :))

    பதிலளிநீக்கு
  30. காசி அல்வாவின் கலரைப் பார்க்கவே சூப்பரா இருக்குது... நீங்க சொல்லும் விதம் பார்க்க ஈசியாக தெரியுது, ஆனா பதம் சரியாக எடுக்க முடியுமோ தெரியவில்லை. பச்சைக் கற்பூரம் கட்டாயம் தேவையோ? அப்படி இங்கு கிடைக்காதே... பூசணியும் வெள்ளை கிடைப்பது இடைக்கிடைதான் .. கிடைத்தால் முயற்சிக்கலாம் என மனம் சொல்லுது.

    ரொம்பப் பொறுமையாகச் செய்திருக்கிறீங்க நெல்லைத் தமிழன்.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  31. உங்கள் வீட்டுக்கு வந்த அந்த எ.புளொக் ஆசிரியர் ஆரென ஜொள்ளவே இல்லையே:).. ஸ்ரீராமாக இருக்குமோ?:).. அவர் அல்வா பற்றி இன்னமும் சொல்லவில்லை ஏதும்:))

    பதிலளிநீக்கு
  32. அதிரடி, நெத. அரபு நாடுகளில் அல்லவா வசிக்கிறார், அவர் வீட்டுக்குச் சென்றவர் வேறே ஒருத்தர். :)

    பதிலளிநீக்கு
  33. //Geetha Sambasivam said...
    அதிரடி, நெத. அரபு நாடுகளில் அல்லவா வசிக்கிறார், அவர் வீட்டுக்குச் சென்றவர் வேறே ஒருத்தர். :)//

    ஓ இது அந்த வீட்டையோ சொன்னார்.. நான் அவர் ஊருக்குப் போயிருந்த நேரம் ஊர் வீட்டுக்கு என நினைச்சுட்டேன்ன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  34. நான் எங்கள்புளொக்கில் கால் பதிச்சு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டதூஊஊஊ:) ஆருமே கேக் கட் பண்ணவில்லை அதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  35. // நான் எங்கள்புளொக்கில் கால் பதிச்சு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டதூஊஊஊ:) ஆருமே கேக் கட் பண்ணவில்லை அதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) //

    அப்படியா... அட.... தொடர்ந்து இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வருகை தந்து எங்களை கௌரவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. @sriram it was for my multi story :) somehow i dragged her here :)

    பதிலளிநீக்கு
  37. கதை எழுதி அனுப்பின நாளில் இருந்து மிரட்டிடீ இருந்தேன் பூனையை அப்படி இழுத்து போட்டது :) அதனால் நானும் இங்கேயே சந்தோஷமா செட்டில்ட் :)
    நீங்கல்லாம் இல்லைனா ஆசை வந்திருக்காது எனக்கு

    பதிலளிநீக்கு
  38. நீங்கல்லாம் இல்லைனா தொடர்ந்து பதிவுகள் எழுதும் ஆசை வந்திருக்காது எனக்கு..
    ஆவ்வ் இந்த டெஸ்க் டாப்பில் பாதி பாதி தான் எழுத்து வருது

    பதிலளிநீக்கு
  39. ///அப்படியா... அட.... தொடர்ந்து இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வருகை தந்து எங்களை கௌரவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்.//

    அப்போ கேக் கிடையாதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா நன்றி.

    ///PaperCrafts Angel said...
    @sriram it was for my multi story :) somehow i dragged her here :) //

    ஹா ஹா ஹா இதில ஒரு பெருமை:).. உண்மைதான் அஞ்சு, நீங்க ஃபோஸ் பண்ணியிருக்காட்டில் நான் வந்திருக்க மாட்டேன் புளொக் பக்கம் என்றே நினைக்கிறேன்.. அதுவும் அடக்கொடுக்கமாக எல்லோ வந்து ஆரம்பம் கொமெண்ட்ஸ் போட்டேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  40. எங்கள் ப்ளாக் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  41. @athiraa

    //அதுவும் அடக்கொடுக்கமாக எல்லோ வந்து ஆரம்பம் கொமெண்ட்ஸ் போட்டேன்ன்ன்:))//
    இல்லையே அன்னிக்கும் கலாட்டா பண்ணீங்

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் சகோதரரே

    நலமா? உங்களுக்கும், குடுபத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    காசி அல்வா படங்களுடன் வெகுவாக தித்தித்தது.வெளியிட்டு பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  43. @Geetha Sambasivam அதிரா cbi programmer தட்கல் டிக்கெட் புக் பண்ண உண்டாக்கிய சாப்ட்வேர் போல ஒரு சாப்ட்வேர் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். அதுதான் அவர்கள் எப்போ கொமெண்ட் போட்டாலும் எல்லாருடைய கொமெண்ட்டையும் பின்னாடி தள்ளிட்டு மீ தான் பர்ஸ்ட் எண்டு முன்னே வந்துடுமாக்கும்.
    --
    Jayakumar​​

    பதிலளிநீக்கு
  44. எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுமம், குடும்பத்தினருக்கும், எங்கள் ப்ளாகின் நட்பு வட்டம் அவர்தம் குடும்பத்தினருக்கும், மற்றும் அனைவருக்கும் தித்திக்கும் புத்தாண்டு மலரட்டும். வாழ்த்துக்கள்.

    புத்தாண்டு பிறந்திருக்கு பூசணிக்காய் ஹல்வாவுடன்.
    நாக்கில் நிலவும் இனிப்பு மனதெங்கும் பரவட்டும்.

    பதிலளிநீக்கு
  45. @ துளசி சார் / கீதா ரெங்கன் :

    //துளசியும் .... ஸ்ரீராம், நெல்லை, துரை சகோ, கீதாக்கா, எகாந்தன் சகோ, எல்லோருக்கும் தன் வாழ்த்துகளைச் சொன்னார்...//

    நன்றிகள் பல.

    2018-ல் திக்கெட்டும் பரவட்டும் இனிமை, வளமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  46. புத்தாண்டு அதிகாலையில் 06:00-லிருந்து 06:02 -க்குள் நிகழந்த அடிதடியில் கேட் கழண்டு விழுந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேனே. அமைதி.. அமைதியான புத்தாண்டு அனைவருக்கும் !

    பதிலளிநீக்கு
  47. ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  48. புத்தாண்டு அதிகாலையில் 06:00-லிருந்து 06:02 -க்குள் நிகழந்த அடிதடியில் கேட் கழண்டு விழுந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேனே. அமைதி.. அமைதியான புத்தாண்டு அனைவருக்கும் !//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் சகோ இப்படி வயிறு புண்ணாகும் அளவு சிரிக்க வைச்சுட்டீங்களே!!! புத்தாண்டு மகிழ்வுடன் பிறந்திட தங்களுக்கும் வாழ்த்துகள் சகோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  49. நெல்லை காசி அல்வா படு ஜோர்!!! நான் பூஷனி துருவலை நீர் வடித்தபின் நெய்யில் வதக்கிக் கொள்வதுண்டு. நெய் அவ்வளவாக வேண்டாம் என்று உறவினர் சொன்னால் நெய்யில் வதக்காமல் உங்கள் மெத்தட்...

    பச்சைக்கற்பூரம் மட்டும் சேர்ப்பதில்லை. ரொம்ப முன்பு சேர்த்ததுண்டு மாமியார் மாமனாருக்காக....ஏனென்றால் அது மாமனார் ஆராதனம் செய்யும் போது அங்கு போய்விடும்....அப்புறம் மகனுக்கு என்று செய்யும் போது பச்சைக் கற்பூரம் சேர்க்காமல் பூஷணி டெஸ்ட் தெரியணும் என்று (என் டேஸ்டும் மகனின் டேஸ்டும் அல்மோஸ்ட் ஸேம்!!!) அப்புறம் அவனுக்குத்தான் மில்க் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று பூஷணியில் மில்க் பௌடர் சேர்த்தோ அல்லது கோவா சேர்த்தோ செய்திருக்கேன் காரட் அல்வா செய்வது போல்....அதுவும் ஒரு டிஃப்ரென்ட் டேஸ்ட்....உங்களுக்குப் பிடிச்சா செஞ்சு பாருங்க..படங்கள் எல்லாம் ரொம்ப சூப்பர் ஸ்டெப் பை ஸ்டெப்பாக....ஹப்பா...செம செஃப் தான் போங்க பேசாம வெங்கடேஷ் பட் ஸ்லாட்ட விஜயில கேள்ங்க!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  50. ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  51. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  52. பூசணிக்காய் அல்வா அதான் காசி அல்வா அருமையாக செய்திருக்கிறீர்கள் நெ தமிழன். நெய்யில் வதக்கிச் செய்வதுதான் என் வழக்கமும்.நல்லபதமும்,வாஸனையுடனும் வரும். ஸ்வீட்டெல்லாம் செய்து வருஷப்பிறப்பை நன்றாகக் கொண்டாட இடுகை. உங்கள் எல்லோருக்கும்,ஸ்ரீராம்,எங்கள் பிளாக் வாசகக் குடும்பத்தினருக்கும் அன்பான ஆங்கிலப் புது வருஷ வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  53. விடியற்காலை ஆறு மணிக்கு வந்து பின்னூட்டமும் பதிவிடுவதும் எங்கள் ப்ளாகில்தான் இருக்கும் அதிர ஏஞ்சல் உங்கள் ஊர் நேரமெப்படி அனைவருக்கு ம்புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  54. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  55. புத்தாண்டில் அனைவருக்கும் ”அல்வா” கொடுத்தமைக்கு நன்றி பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  56. புத்தாண்டில் ”அல்வா” கொடுத்துச் சுவைக்கவைத்தமைக்கு நன்றி.

    2018 பல வெற்றிகளைத் தருமென நம்புவோம்.
    எல்லோருக்கும்
    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  57. //புத்தாண்டு அதிகாலையில் 06:00-லிருந்து 06:02 -க்குள் நிகழந்த அடிதடியில் கேட் கழண்டு விழுந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேனே.// நீங்க வேறே ஏகாந்தன் சார்! அவங்க மூணு பேரும் ஆளுக்கொரு திசையில் ஏறிக் குதிக்கிறாங்க போல! :) அதான் ஒரே நேரம். நானும் அந்த நேரம் தான் போறேன். ஆனால் எப்படியோ மிஸ் ஆகுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  58. //@Geetha Sambasivam அதிரா cbi programmer தட்கல் டிக்கெட் புக் பண்ண உண்டாக்கிய சாப்ட்வேர் போல ஒரு சாப்ட்வேர் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். // இருக்கும்! :)

    பதிலளிநீக்கு
  59. நட்பூக்களுக்கு... பூசணிக்காய் திருஷ்டியாய் கழியட்டும்
    அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  60. புத்தாண்டு வாழ்த்துக்கள் . காசி அல்வா .......ம் .... பார்த்ததும் சாப்பிடணும் போல இருக்கு . செய்வது ஈஸி

    பதிலளிநீக்கு
  61. நெல்லைத்தமிழனைக் காணோம்.. எவ்வளவு பிசி என்றாலும் ஒரு வசனம் சொல்லாமல் இருக்க மாட்டார், இது எங்கோ நெட் இல்லாப் பாலைவனத்தில அகப்பட்டு விட்டார் போலும்:)).. புது வருசத்தில இப்பூடிப் பண்ணிட்டாங்களே:))

    பதிலளிநீக்கு
  62. ஹலோ அதாரது இடிக்கிறதூஊஊ.. இடிக்காமல் கியூவரிசையில:) நில்லுங்கோ எல்லோருக்கும் கிடைக்குமாக்கும்:).. முதலாவதா வந்த எனக்கே இன்னும் கிடைக்கேல்லை அல்வா:).. இதில கடசியா வந்திட்டு முறைக்கிறா கீதாக்கா கர்ர்ர்:))..

    ஏகாந்தன் அண்ணன், நீங்க சீரியசாப் பேசுறீங்களோ இல்ல ஜோக் பண்ணுறீங்களோ என என்னால சத்தியமாக் கண்டு பிடிக்க முடிவதில்லை:)).. அடிபிடி சண்டையில் கேட் உடைஞ்சு போச்சாம் எனச் சொன்னதும், நீங்க ஏதோ நியூஸ் சொல்றீங்க.. இந்தியா கேட் என ஒன்றிருக்குதெல்லோ அது உடைஞ்சுபோச்சாக்கும் என ஒரு கணம் எண்ணிட்டேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. பின்பு கீதா, கீசாக்காவைப் பார்த்துத்தான் கண்டு பிடிச்சேன்ன்:) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  63. ///jk22384 said...
    @Geetha Sambasivam அதிரா cbi programmer தட்கல் டிக்கெட் புக் பண்ண உண்டாக்கிய சாப்ட்வேர் போல ஒரு சாப்ட்வேர் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். அதுதான் அவர்கள் எப்போ கொமெண்ட் போட்டாலும் எல்லாருடைய கொமெண்ட்டையும் பின்னாடி தள்ளிட்டு மீ தான் பர்ஸ்ட் எண்டு முன்னே வந்துடுமாக்கும்.////

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லோரும் கொதிச்சுப்போய் இருக்கினம் புத்தாண்டில அதிரா 1ஸ்ட்டா வந்திட்டா என:) இதில போய் எண்ணெயை ஊத்தி விடுறீங்க:))...

    கால காலமாக முதலாவதா வருவதைப் பற்றி ஆருமே கவலைப்படுவதில்லை... நான் மீ த 1ஸ்ட்டூஊஊஊ எனக் கூவத் தொடங்கியதிலிருந்தேதான் போட்டி சூடு பிடிச்சு இப்போ காவிரி ஆறே வற்றுமளவுக்கு கொதிக்குதூஊஊஊஊ ஹா ஹா ஹா..:) என் நாரதர் வேலை இப்பூடித்தான் அடிக்கடி ஏதாவது நடக்கும்:)..

    பதிலளிநீக்கு
  64. காசி ஹல்வா பார்க்கவே பிரமாதம்! எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  65. ///G.M Balasubramaniam said...
    விடியற்காலை ஆறு மணிக்கு வந்து பின்னூட்டமும் பதிவிடுவதும் எங்கள் ப்ளாகில்தான் இருக்கும் அதிர ஏஞ்சல் உங்கள் ஊர் நேரமெப்படி அனைவருக்கு ம்புத்தாண்டு வாழ்த்துகள்///

    மிக்க நன்றி ஐயா... சேம் 2 யூஊஊஊஊஊ:))

    பதிலளிநீக்கு
  66. மிகமிகப் பிடித்த காஷி ஹல்வா. ம்ம்ம். நன்றாக இருந்தது நெல்லைத்தமிழன். பாட்டி, துருவிய பூசணியை, நெய்யில் வதக்கி சடர்க்கரை,குங்குமப்பூ சேர்த்து நொடியில் ரெடி செய்துவிடுவார்.

    பெருமாளுக்கு வைத்த ஹல்வா ரொம்ப ருசி. அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கிலப்
    புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  67. நாளைக்கு பதில் சொல்கிறேன். ஐபேட்ல பின்னூட்டம் எழுதினா காணாமல் போகிறது. பசங்களோடு சுத்திக்கொண்டிருக்கிறேன்.

    அனைவருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  68. ஶ்ரீராம்-எங்கள்பிளாக் - வெளியிட்டமைக்கு நன்றி. நாளைக்கு பதில் சொல்கிறேன். ஐபேட்ல பின்னூட்டம் எழுதினா காணாமல் போகிறது. பசங்களோடு சுத்திக்கொண்டிருக்கிறேன்.

    அனைவருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  69. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி GMB ஸார் :)wish you the same

    பதிலளிநீக்கு
  70. @நெல்லை தமிழன் :) என்ஜாய் :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் :)

    பதிலளிநீக்கு
  71. முதலில் புத்தாண்டு வாழ்த்துகள்.

    காசி அல்வாவிற்கு நன்றி.

    Petha என எழுதினாலும் படிப்பது/சொல்வது பே(t)டா என்றுதான். மூன்றாவது டா.

    பதிலளிநீக்கு
  72. @ அதிரா:
    //..ஏகாந்தன் அண்ணன், நீங்க சீரியசாப் பேசுறீங்களோ இல்ல ஜோக் பண்ணுறீங்களோ என என்னால சத்தியமாக் கண்டு பிடிக்க முடிவதில்லை:)).. அடிபிடி சண்டையில்..//

    2018 ஒருவேளை சீரியஸ்ஜோக்காக அல்லது ஜோக்கான சீரியஸாக ஆகிவிடுமோ!

    பதிலளிநீக்கு
  73. பூசணி, பரங்கிக்காய் இரண்டையும் ஹிண்டியில் Kadhu எனவும் சொல்வதுண்டு வண்ணம் கொண்டு வெள்ளை kadhu, மஞ்சள் Kadhu எனச் சொல்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  74. காஷி ஃபல் என தில்லியில் சொல்வதில்லை. மேலும் பரங்கிக்காயை சீதாஃபல் எனவும் அழைப்பர்.

    பதிலளிநீக்கு
  75. காசி அல்வா சூப்பர் நெல்லை தமிழன் சகோ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  76. எங்கள் பிளாக் ஆசிரியர்களுக்கும் இங்கு வருகை புரியும் அனைத்து தோழமைகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  77. எல்லோருக்கும் தித்திக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    சகோதரர் ஶ்ரீராம் தரும்பதி(வு) எல்லாம்
    அமோகம் மிகவான தாம்!

    நெல்லைத் தமிழனின் நீத்துக்காய் அல்வாவைச்

    சொல்லவே நாவில் சுவையேறும்! - இல்லை
    
இதற்கீ(டு) இணையுமே! வாழ்த்தினைச் சொன்னேன்!

    அதற்கும்மேல் நன்றியுட னாம்!

    அருமையாக இருக்கிறது படங்களும் அல்வா செயல் முறையும்.
    இத்தனை அழகாகப் பொறுமையாகப் படம் பிடித்துப் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரரே!
    சிறப்பான பாராட்டுக்கள்!

    இங்கு நாமிருக்கும் நாட்டில் எம்மவர் கடைகளில் எப்போவாவதுதான்
    காண்பதுண்டு இந்த வெள்ளைப் பூசணி.
    இலங்கையில் இதனை நீத்துப் பூசணிக்காய் , நீத்துக்காய் என்போம்.

    கிடைக்கும்போது செய்து பார்க்க வேண்டும்.

    நல்ல பகிர்வு! இருவருக்கும் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  78. நெல்லைத் தமிழன் இன்று எல்லோருக்கும் அல்வாக் குடுத்திட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    பதிலளிநீக்கு
  79. இன்னிக்கும் வந்துட்டேன். வழக்கம் போல் நான்காவதாக? :)))))

    பதிலளிநீக்கு
  80. ஶ்ரீராம், எங்கே என்னோட பதிவுப்பக்கம் ஆளையே காணோம்? நெ.த. தான் குடும்பத்தோடு பிசி! நீங்களும் புத்தாண்டுக்கொண்டாட்டங்களில் பிசி? :)

    பதிலளிநீக்கு
  81. அன்புளம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  82. படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. புத்தாண்டை இனிப்போடு எங்கள் பிளாக் தொடங்கியிருக்கிறது. எல்லார் வாழ்விலும் இந்த ஆண்டு வளம் சேர்ப்பதாகுக.

    நன்றி அதிரா, ஏஞ்சலின், துரை செல்வராஜு சார், தில்லையகத்து கீதா ரங்கன், கீதா சாம்பசிவம் மேடம், கமலா ஹரிஹரன் அவர்கள், ஜெயக்குமார், ஏகாந்தன், புலவர் இராமானுசம் ஐயா, கரந்தை ஜெயக்குமார் சார், காமாட்சி அம்மா, ஜி.எம்.பி சார், பிரசாத், அசோகன் குப்புசாமி, ஜீவலிங்கம், கில்லர்ஜி, மிடில் கிளாஸ் மாதவி, அபயா அருணா, பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள், வல்லி சிம்ஹன் அம்மா, வெங்கட், பூவிழி, இளமதி அவர்கள். புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்ததற்கும் நன்றி.

    நேற்று ஹஸ்பண்ட், பசங்களோட மிகவும் பிஸி. அதிகாலையில் எழுந்து எல்லோருக்கும் காலை உணவு (நான்தான் உணவு தயார் செய்தேன், ஹஸ்பண்டுக்கு தான் செய்யலைனு கோபமிருக்கும், நான் அன்போட செய்தேன் என்று மகிழ்ந்தும் இருப்பாள்), கோவில் (எங்க ஊர் கோவில்ல, திருப்பதி-Exaggerationதான் மாதிரி பெரிய வரிசை. இத்தனை வருஷத்தில் இப்போதுதான் இவ்வளவு பெரிய வரிசையைப் பார்க்கிறேன். ஒருவேளை, மற்ற வருட ஆரம்ப தினங்களில் அதிகாலை 5 மணிக்கே கோவிலுக்குச் சென்றுவிடுவதால் இருக்கும்), திரைப்படம் (ஜுமாஞ்சி), Mall உலா என வேலை அதிகம். இரவு வீடு திரும்பியதும் ஓய்வு எடுக்கத்தான் தோன்றியது. அதற்கு அப்புறம் ஐபேடிலிருந்து பின்னூட்டமிட்டால் (அதில் எனக்கு தட்டச்சுவது கஷ்டம். நான் டிரெடிஷனல் டைப் கற்றவன், பயங்கர வேகத்தில் தட்டச்சுபவன். ஒற்றை விரல் வித்தை கைவரப்பெறவில்லை) பல சமயம் அது செல்வதில்லை. மடிக் கணிணியிலோ அல்லது மேசைக்கணிணியிலோ உட்காரவில்லை. அதனால் இன்றுதான் மறுமொழி கொடுக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  83. கீதா சாம்பசிவம் மேடம் - அடுத்த முறை நெய்யில் வதக்கிப் பார்க்கிறேன். இரண்டு நாள் முன்பும் நல்ல முற்றின பூசணி இங்கு பார்த்தேன். ஆனால் பசங்களுக்கு இஷ்டமில்லாததால் வாங்கவில்லை. என் ஹஸ்பண்ட், பறங்கிப்பழம் வாங்கி, அதில் அல்வா செய்துகொடுத்தாள். மிக அருமையாக இருந்தது. (பசங்களுக்கு இதிலெல்லாம் அவ்வளவு இஷ்டமில்லை. நேற்று நான் செய்த பாயசம் மட்டும் சாப்பிட்டார்கள்). கருத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  84. கருத்துக்கு நன்றி ஏஞ்சலின். வங்காளிகள், புடலங்காய் (பச்சையாவும் வரியோடும் குட்டையா இருக்கும்), பூசணிக்காய்களை விற்பதை நானும் பார்த்திருக்கிறேன் (பங்களாதேஷிலிருந்தும் இங்கு வருகிறது). எனக்கு, அவங்க இதை எதுக்கு உபயோகிப்பார்கள் என்ற ஆச்சர்யம். நான், தமிழ் நாட்டுலதான் இதெல்லாம் உபயோகப்படுத்துவார்கள் என எண்ணியிருந்தேன். நீங்களும் பாயசமே சரியா வரலைனு எங்கயோ சொல்லியிருந்தீங்க (அதுக்கும் ரெசிப்பிக்களோடு விரைவில் வரேன்). இதுல காசி அல்வா சாப்பிட உங்கள் வீட்டில் ஆட்கள் உண்டா?

    பதிலளிநீக்கு
  85. நன்றி அதிரா - இலங்கையில் பூசணி அல்வா கிடைக்கிறதா? ஆச்சர்யம்தான். ஸ்காட்லாந்துல உங்களவர்கள் இருக்கிறார்களா (அடிக்கடி சந்திப்பதற்கு?)? ஸ்காட்டிஷ் பழக்கவழக்கங்கள்லாம் வந்தாச்சுன்னா, பசங்களுக்கு இந்த 'அல்வா' மற்ற இனிப்புகள் பிடிக்காதென்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  86. அதிரா - பச்சைக் கற்பூரம் அவசியம் இல்லை. நான் வெல்லத்தில் பாயசம் செய்யும்போதுகூட பச்சைக் கற்பூரம் சேர்ப்பேன். என் ஹஸ்பண்ட், அது அவசியம் இல்லை, அடிக்கடி உபயோகித்தால் உடம்புக்கும் நல்லதில்லை என்றாள். மற்றபடி, ஒரு தடவை நீங்கள் செய்துபார்க்கலாம் (ஆனால் அதைவிட, பறங்கிக்காயை உபயோகித்து அல்வா செய்வது சுலபம்).

    எங்க வீட்டுக்கு வந்த எங்கள் பிளாக் ஆசிரியர், நான் சொல்லாமலேயே தெரியும், இந்த இடுகைக்கு பின்னூட்டமிடுவார் என்று நினைத்தேன். என்ன செய்வது. அவரும் வரவில்லை. வந்தால் உங்களுக்குத் தெரியாமலா போய்விடும்?

    பதிலளிநீக்கு
  87. வருகைக்கு நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். அங்கு சொல்ல விட்டுப்போய்விட்டது. துளசிதரனுக்கும் நன்றி.

    உங்கள் செய்முறையைப் படித்தேன். எனக்கு பூசணி அல்வாவில், மற்றதைச் சேர்ப்பது வழக்கமில்லை. இந்தத் தடவை, பாம்பே அல்வா ஹவுஸ்(?) என்ற கடையில் (மவுண்ட் ரோட் தேவி தியேட்டர் அருகில்) கேரட் அல்வாவில் கோவா சேர்த்துச் செய்திருந்தார்கள். எனக்குப் பிடித்துத்தான் இருந்தது.

    என்னவோ, பச்சைக் கற்பூரம் சேர்த்தால் (தெய்வீக) பிரசாத நினைவு வருகிறது. அதனான் நான் சேர்க்கிறேன். (ஒரு தடவை என் ஆபீசில் வேலை பார்ப்பவரிடம், கோயமுத்தூரிலிருந்து வரும்போது எனக்குக் கொஞ்சம் பச்சைக் கற்பூரம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றேன். அவங்களுக்கு இதன் உபயோகமெல்லாம் தெரியாது என்று எனக்கு அப்போ தெரியலை. அவர் கால் கிலோ வாங்கிக்கொண்டுவந்திருந்தார். ஒரு சிறிய பாக்கெட்டே வருடத்துக்கு வரும்). என் ஹஸ்பண்ட், கற்பூரம் நெஞ்செரிச்சல் உண்டாக்கும் என்று இப்போ சொல்லி பயமுறுத்தியிருக்கா. அதனால் எல்லா இனிப்புகளிலும் அதனைச் சேர்ப்பதைக் குறைக்கப்போகிறேன்.

    பதிலளிநீக்கு
  88. காமாட்சியம்மா உங்கள் கருத்துக்கு நன்றி. என் ஹஸ்பண்ட் பறங்கி அல்வா நேற்று முந்தினம் செய்தபோது, நான் நெய்யே விடக்கூடாது என்று சொல்லிவிட்டேன் (எனக்கு எண்ணெய்லாம் வேண்டாம் என்று தோணினதால்). மைலாப்பூரில், இரு வருடங்களுக்கு முன்பு ஒரு சபா கேன்டீனில் காசி அல்வா வாங்கினே. அல்வா, நெய்யில் முழுகி இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே இவ்வளவு எண்ணெயா என்று தோன்றியது. நான் முடிந்த அளவு நெய், எண்ணெயைத் தவிர்க்கப்பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  89. நன்றி அபயா அருணா. நன்றாக இருக்கும். செய்வது சுலபம் என்று சொல்லமுடியாது. செய்துபாருங்கள்.

    பதிலளிநீக்கு
  90. வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன் அம்மா. எனக்கு துருவிய பூசணியில், ஜலத்தைப் பிழிவதுதான் கொஞ்சம் கஷ்டமாகத் தெரிந்தது. தெரிந்தே நெய்யில் வதக்கவில்லை.

    உங்கள் கருத்து, இப்போதுள்ள வெகு சுலப சமையலையும் (எதையும் செய்வது சுலபம், இங்கு எரிவாயுவைப் பற்றின கவலை இல்லை, எல்லா சமையல் உபகரணங்களும் இந்தக் காலத்தில் உண்டு), அப்போதுள்ள கஷ்டத்தையும் (விறகு அடுப்பு, உபகரணங்களும் குறைவு) நினைத்துப்பார்க்க வைத்துவிட்டது. (அதனால் பட்சணங்களின் அருமையையும் இப்போதுள்ளவர்கள் உணருவது கடினம். 'காசை வீசினா எதுவும் எப்பவும் கிடைக்கும்' என்ற எண்ணம்.

    பதிலளிநீக்கு
  91. கருத்துக்கு நன்றி வெங்கட். 'பேடா' என்றுதான் நான் கேட்பேன். ஆங்கிலத்தில் 'Petha; என்றதைப் பார்த்ததும், நான்'தான் தவறாக உச்சரிக்கிறேனோ என்று நினைத்து (எனக்கு ஹிந்தி நஹி மாலும். இங்க அரபி மேனேஜர் சட சடவென என்னிடம் ஹிந்தி பேசினார், அவர்கிட்ட நான் தமிழன், ஹிந்தி தெரியாது என்று வழியவேண்டியதாகப் போய்விட்டது. கில்லர்ஜி மாதிரி மொழியைக் கற்றுக்கொள்ளும் திறமை என்னிடம் குறைவு, ஆர்வமும் இல்லை) இங்கு 'பேதா' என்று எழுதினேன். அதுபோல, இதுக்கு ஏன் 'காசி அல்வா' என்றும் நெட்டில் தேடினேன். முன்பெல்லாம் காசியில்தான் இந்த அல்வா செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  92. நன்றி இளமதி அவர்கள். உங்கள் மொழித்திறனை நான் எப்போதும் படித்து இன்புறுவேன்.

    குறள் நன்றாக இருந்தாலும் 'ஸ்ரீ' உபயோகிக்கக் கூடாதல்லவா?

    உங்கள் வெண்பாவும் நன்றாக இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம். "தரும்பதி(வு) எல்லாம்" என்பதற்குப் பதிலாக, ஏன், "தரும்பதி வெல்லாம்" என்றே எழுதக்கூடாது? அதேபோல், "இதற்கீ(டு) இணையுமே" என்பதற்குப் பதில், 'இதற்கீ டிணையுமே' என்று எழுதலாமே?

    நான் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக, பாட்டரசர் தளத்திலும் அவர் பாடல்களுக்கு என் கருத்தைத் தெரிவிக்கிறேன். எல்லாம் சீராளனிலிருந்து ஆரம்பித்தது, பின் உங்கள் தளம், பிறகு அவர் தளத்திற்கும் அவ்வப்போது செல்கிறேன்.

    இளமதி அக்காவின் திறமையை எண்ணி
    வியப்புறும் அன்பன் நான்

    பதிலளிநீக்கு
  93. கீதா சாம்பசிவம் மேடம், அதிரா, ஏஞ்சலின், துரை செல்வராஜு சார் - நானெல்லாம் 9 மணிக்கு முன்னால் உறங்குபவன். 4-5 மணிக்கு எழுந்துகொள்பவன். (எல்லா நாளும். விடுமுறை அதனால் இன்னும் கொஞ்சம் அயர்வோம் என்பதெல்லாம் கிடையாது. 6 மணிக்கு மேல் எழுந்துகொண்டால், அந்த நாளே எனக்கு சரிப்படாது). நீங்கள்லாம், (அதிரா/ஏஞ்சலின்) 'நடுநிசி வரை எப்படித்தான் முழித்துக்கொண்டிருக்கிறீர்களோ. (என் பசங்களும் இப்படித்தான். ஆனா இங்க வரும்போது, அல்லது நான் இருக்கும்போது they would follow my rules). துரை சார்.. வேலை நிமித்தமாக முழித்துக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  94. // நானெல்லாம் 9 மணிக்கு முன்னால் உறங்குபவன். 4-5 மணிக்கு எழுந்துகொள்பவன். (எல்லா நாளும். விடுமுறை அதனால் இன்னும் கொஞ்சம் அயர்வோம் என்பதெல்லாம் கிடையாது. 6 மணிக்கு மேல் எழுந்துகொண்டால், அந்த நாளே எனக்கு சரிப்படாது).// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கிட்டத்தட்ட லக்ஷம் முறை சொல்லி இருப்பேன். நான் எட்டரைக்குப் படுத்துடுவேன்னு! என்னிக்கானும் தான் ஒன்பது மணி வரை உட்காருவேன். காலங்கார்த்தாலே மூன்றரை, நாலுக்கெல்லாம் முழிப்பு வந்துடும். செய்ய வேலை இல்லையே என்பதால் நாலே முக்கால் வரை சும்மாப் படுத்திருப்பேன். :)))) வெளிநாட்டுப் பயணங்களின் போது தான் நடுநிசி வரை முழிப்பு! ஒரு மணிக்கும், மூணு மணிக்கும் தானே விமானம் கிளம்புது!

    பதிலளிநீக்கு
  95. கீதா சாம்பசிவம் மேடம்... எனக்கு நீங்கள் 8.30க்கெல்லாம் நித்திரை கொள்பவர் என்பது தெரியும். அது மிக மிக அருமையான பழக்கம். இது இயல்பா (பசங்க இருந்தபோது, வேலை பார்த்தபோது) அல்லது இப்போவா என்பதுதான் தெரியாது. எனக்கு காலைல, வேலை இருக்கும் (க்ரியா, நடை போன்றவை). அதுனால எழுந்ததுலேர்ந்து குறைந்தது 3 மணி நேரம் (இங்க) நான் பிஸிதான். சில சமயம் அது 4 மணி நேரமும் ஆகிவிடும். ஆனால், அதிகாலை பின்னூட்டம் என்பதால், உங்க பேரையும் லிஸ்டுல சேர்த்துட்டேன்.

    பதிலளிநீக்கு
  96. //இது இயல்பா (பசங்க இருந்தபோது, வேலை பார்த்தபோது) அல்லது இப்போவா என்பதுதான் தெரியாது.// எப்போவுமே! அப்பா ரொம்பக் கண்டிப்பு. ஒன்பது மணிக்கப்புறமாப் படிக்கிறதுன்னா சிம்னி விளக்கு வெளிச்சத்திலே தான் படிக்கணும்.அப்போவும் பத்து மணிக்குப் படுத்துடணும். காலம்பர நாலு மணிக்கு எழுந்து ஐந்து மணிக்குள் குளித்துத் துணி துவைச்சுடணும். பள்ளி நாட்களில் பள்ளிக்குச் செல்லும்போது சமையல் கூடப் பண்ணி வைச்சுட்டு ஏழரை மணிக்கெல்லாம் கிளம்பும்படி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  97. சகோதரர் நெல்லைத் தமிழன்!
    உங்கள் கருத்துப் பகிர்வினுக்கு நன்றிகள் பல.

    நானும் உங்களிடமிருந்து எழுதிய குறளுக்கும் வெண்பாவுக்கும் விமர்சனத்தையும் சந்தேகம், திருத்தம்
    இவற்றை எதிர்பார்த்தேன்... அனைத்திற்கும் நன்றி!

    //குறள் நன்றாக இருந்தாலும் 'ஸ்ரீ' உபயோகிக்கக் கூடாதல்லவா?//
    ஆமாம் எழுதக் கூடாதுதான். தெரிந்தும் ஒரு ரசனைக்காக அவரின் பெயரைக்
    கொத்திக் கூறுபோட விரும்பாமல் அப்படியே எழுதினேன்.
    (ரகசியமாகச் சொல்கிறேன்... என்னை மாட்டிவிடாதீர்கள் சகோ!.. ஒருவேளை என் ஆசான் இதனைப் படித்தால் எனக்கு நல்ல பூசை கிடைக்கும்)
    மரபைப் பார்க்க வேண்டும்தான். ஆனால் சிலரின் பெயர்களை முகியமான சில சொற்களை அப்படியே எழுதினால்தான் சிறக்கும். சிறப்பு. இதனை என் ஆசானே சொல்லியிருக்கிறாரே...:)

    //உங்கள் வெண்பாவும் நன்றாக இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம். "தரும்பதி(வு) எல்லாம்" என்பதற்குப் பதிலாக, ஏன், "தரும்பதி வெல்லாம்" என்றே எழுதக்கூடாது? அதேபோல், "இதற்கீ(டு) இணையுமே" என்பதற்குப் பதில், 'இதற்கீ டிணையுமே' என்று எழுதலாமே? //

    ஆமாம் எழுதலாம். எழுதும்போது சொற்களை நீங்கள் சொல்வதுபோல எழுதலாம்.
    தரும்பதி(வு) எல்லாம் = //தரும்பதி வெல்லாம்//
    இதற்கீ(டு) இணையுமே = //இதற்கீ டிணையுமே//

    மரபிலக்கப்படி தரும்பதிவெல்லாம் என்பதை தரும்பதி வெல்லாம் இப்படிப் பிரித்தெழுதுவதை வகையுளி செய்தல் என்பர்.
    அப்படி எழுதும்போது படிப்பவர்கள் சிலர் அதை அப்படியே தரும்பதி... வெல்லாம்,
    இதற்கீ..... டிணையுமே என்று கடித்துத் துப்பி எழுதியதன் பொருள் விளங்காமல் என்ன எழுதியிருக்கின்றார்கள்?.. என எரிச்சற்பட்டுக் கொள்வதைத் தவிர்க்கலாம்.
    மேலும் அழகாக இருக்கும், பொருள் இலகுவாகப் புரியும்.
    ஆனால்... அதற்காக இதற்கீடு இணையுமே எனப் பிரித்தெழுதும்போது முதற்சொல்லின் இறுதி எழுத்து 'டு'அதிகமாகி அங்கே இலக்கண வழு வரக்கூடாது என்பற்காக இதற்கீடு இணையுமே என்றெழுதும் போது அங்கே இதற்கீ'டு' அந்த இடத்தில் மட்டும் இணைக்கும் இடத்தின் இறுதி எழுத்தை உ+ம் (வு), (டு) இப்படி அடைத்து எழுதலாமென மரபில் உள்ளதை எனது ஆசான் கற்பித்துள்ளார். அதனை அவசியம் கருதி இங்கு நானும் பின்பற்றி எழுதினேன் சகோ!
    எனக்கு விளங்கியதை நான் இங்கே எழுதினேன்.
    'அதிகப் பிரசங்கம்' ஆகிவிட்டதோ தெரியவில்லை...:(

    //நான் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக,... //
    நான் அப்படி உங்களின் எழுத்துக்களை எண்ணவில்லை சகோ!!!

    //இளமதி அக்காவின்...// அக்காவா நான்? நான் உங்களுக்கு 'அக்கா' என்று யார் சொன்னார்கள்?....
    ஒன்றும் வேண்டாம் இளமதின்னே அழையுங்கள் சகோ!அதுபோதும்!..:))

    உங்கள் ரசனை கண்டு மிகவும் மகிழ்கின்றேன்! தொடர்ந்து எனக்குத் தரும் உங்கள் பின்னூட்டங்கள்
    எனது தவறுகளைத் திருத்த, இன்னும் சிந்தித்துச் சரியாக எழுதச் தூண்டுகிறது!
    நன்றிகள் பல! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  98. நெல்லைத்தமிழன், ஊருக்குப் போகும்போது ஜொள்ளிட்டுப் போயிருக்கலாமெல்லோ அப்பூடியெனில் நாங்க நேற்று உங்களை இங்கு எதிர்பார்த்து ஏமாந்திருக்க மாட்டோமே:) கர்ர்ர்:))..

    வெளிநாட்டில் எந்த வீட்டிலும் விடுமுறையில் ஆரும் 11,12 க்கு முன் நித்திரைக்குப் போகமாட்டினம்.. அதேபோல 11,12 கு முன் எழும்பமாட்டினம்.... அதுக்கு இன்னொரு காரணம்.. குளிர் அடுத்து காலை விடியவே 10 மணியாகும்.. இன்று பாருங்கோ வெளியே இருட்டு மழை... இப்போ நேரம் 11 ஆகுது... லைட் போட்டுத்தான் வீட்டுக்குள் எழும்பி இருக்கிறோம்ம்.. இன்று இங்கெல்லாம் பப்ளிக் ஹொலிடே..

    பதிலளிநீக்கு
  99. ஊருக்குப் போகும்போது - இல்லை அதிரா. ஹாஸ்டலில் இருக்கும் பையனும், சென்னையில் இருக்கும் ஹஸ்பண்ட், பெண்ணும் இங்கு வந்திருக்கிறார்கள். அவங்களை வெளியில் அழைத்துச்சென்றதால் அன்று அனேகமாக முழுவதும் பிஸி.

    ஆமாம். இங்கும் விடுமுறையில், யாரும் 10-11 மணிக்கு முன்பு எழுந்துகொள்வதில்லை. ஆனால் நான் முடிந்த அளவு சீக்கிரமாக எழுந்துகொள்வேன் (4லிருந்து 5.30க்குள்). அதேபோல, அலுவலகத்திலும் எல்லோருக்கும் தெரியும், இரவு 9 மணிக்கு மேல் நான் தொலைபேசி எடுக்கமாட்டேன், 8 மணிக்குமேல் எந்த மெசேஜும் பார்க்கமாட்டேன் என்று.

    பதிலளிநீக்கு
  100. இளமதி அவர்கள் - உங்கள் பதிலைப் படித்தேன். மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!