Sunday, February 11, 2018

ஞாயிறு 180211 : எரும.... காட்டெரும......

இந்த இடங்கள் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துக்கு இங்கு செல்லவும்.இந்த இடத்தை கீழ சிக்கிம் என்று சொல்லலாமா பி...ர்ரதர்?கழுத்துல மாலை, முதுகிலே கலர்த் துண்டு....   கலக்கறியேப்பா....பார்றா.....    இங்க ஒருத்தர்......மரியாதையாய் நிற்பது வேலைக்கார எருதோ?  அமர்த்தலாய் உட்கார்ந்திருப்பது எஜமானோ?!!


அப்போ..   அதற்கும் முன்னால தலைகுனிந்து அமர்ந்திருப்பது யாராய் இருக்கும்?ஓ...    உன் ஆளா?  சரி, சரி முறைக்காதே...  நான் வேற இடம் போய் போட்டோ புடிச்சிக்கறேன்!தனிமையிலே...ஏ....  தனிமையிலே....   தனிமையிலே இனிமை காண முடியுமா?ஏதோ "திர்ளா"  போல....! 


அட பார்றா...  இந்தப் பக்கமும் தலை, அந்தப் பக்கமும் தலை...   ரெட்டெருது...!"ண்ணா...  சன்னல் வழியா எட்டிப் பார்க்கறது தப்புங்ணா...." ("பின்" குறிப்பு :  வாலில் வெள்ளை நிறம் இருந்தால் அது கடவுளின் அம்சமாம்)எல்லா(ரு)ம் எதற்காகவோ காத்திருக்கிறார்கள்!ஹர்பஜன் பாபாவுக்கு இவர் என்னங்ணா வேணும்?இந்தக் கேள்விக்கு என்கிட்டே.....................  பதில் இல்ல தம்பி!
இணையத்தில் கிடைத்த ஒரு சிறு வீடியோ.  ஹர்பஜன் மந்திர் பற்றி.

34 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

துரை செல்வராஜூ said...

ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..

Geetha Sambasivam said...

grrrrrrrrrrrr ithu aniyayam!

Geetha Sambasivam said...

ஒரு சின்னப் பொண்ணை, குழந்தையை ஏமாத்தறீங்க! :)))))

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம்.. ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா....கீதாக்கா...

வணக்கம் வைச்சாச்சு

கீதா

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா அக்கா...

துரை செல்வராஜூ said...

அதே காட்டெருமை தானே... ஆகா!...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

துரை செல்வராஜூ said...

5.57 க்கு வந்தும்!?......

ஸ்ரீராம். said...

//ஒரு சின்னப் பொண்ணை, குழந்தையை ஏமாத்தறீங்க! :)))))//

grrrrrrrrrrrr ithu aniyayam!


Thulasidharan V Thillaiakathu said...

என்னாச்சு குழந்தை அழுறது

கீதா

Geetha Sambasivam said...

மிக அருமையான படங்கள். அதற்கேற்ற வர்ணனையுடன் கூடிய அருமையான கற்பனை வளத்துடன் உள்ள தலைப்புகள்.

இவை தாம் மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா! "கவரிமான்" இல்லை! கவரி மா!

அப்பாடா இன்னிக்குப் பொழுதுக்கு ஆரம்பிச்சு வைச்சாச்சு!

Thulasidharan V Thillaiakathu said...

தலைப்பு. ஹாஹாஹா.. ஸ்ரீராம் எதுக்கு இந்தக் சிரிப்பு தெரியுதா..!!

கீதா

Geetha Sambasivam said...

5.57 க்கு வந்தும்!?......// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதானே எப்படினு புரியலை! :)))))

Thulasidharan V Thillaiakathu said...

கழுத்துல மாலை...களர்த்துண்டு...ஹாஹாஹா..அரசியல்ல குதிக்கப் போகுதோ.... ஹாஹாஹா

கீதா

ஸ்ரீராம். said...

// தலைப்பு. ஹாஹாஹா.. ஸ்ரீராம் எதுக்கு இந்தக் சிரிப்பு தெரியுதா..!!//

புரியலையே கீதா...

// கழுத்துல மாலை...களர்த்துண்டு...ஹாஹாஹா..அரசியல்ல குதிக்கப் போகுதோ.... ஹாஹாஹா//

ஹா.... ஹா... ஹா... இது கூட நல்லாருக்கே...

Geetha Sambasivam said...

இமயமலை வாசிகள் குதிரைகள், யாக் எனப்படும் இந்தக்காட்டெருமைகள் ஆகியவற்றை இப்படித் தான் நன்கு அலங்கரித்து வைக்கின்றனர்.

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா சொல்றா மாதிரி அங்கெல்லாம் இந்த யாக், குதிரைங்க எல்லாம் படா ஷோக்கா கீதும்..

தலைப்பு பார்த்ததும் நான் சிரிச்சுட்டேன் ஸ்ரீராம்..."எருமை!!!!!!!! காட்டெருமை"....

ஸ்ரீராம் சொல்லாமலேயே...இல்ல கொஞ்சம் சொன்னாலே டபக்குனு பிடிச்சுக்குற உங்களுக்குப் புரியலையா...சின்ன வயசு நினைவு இல்லையோ இல்லைனா உங்களுக்கு அனுபவம் இல்லையோ..ஹா ஹா ஹா...எனக்கு இப்பவும் கூடக் கொடுப்பினை உண்டே!!!! ஹெ ஹெ ஹெ.!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அந்தத் தனிமையிலே இனிமை காணும் எருமை பாவம் தன் ஆளை திர்ளாவுல வரும்னு நினைச்சுக் காத்திருந்து...அல்லக்கைகள் எல்லாம் இருந்ததால (அதான் இப்ப தலைவராம்!!) அதோட ஆளு கிட்ட வராம போக நம்ம தலைவர் எர்மை கண்ணுல வெளக்கெண்ணை விட்டுக்கிட்டு ரெண்டு பக்கமும் தலைய வைச்சுக்கிட்டு 360 டிகிரில தேடுது போல..!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இவர் என்னாங்க்ணா வேணும்// ஹா ஹா ஹா ஸ்ரீராம் அவரு தான் தமிழ்நாட்டுல தலைவர் வேக்கன்ஸி இருக்கு அங்கின போய் குதிக்கட்டானு பாபா கிட்ட ஆசி கேக்குறார் போல!!!! ஹிஹிஹி

படங்கள் நல்லாருக்கு...அதை விட அதுக்கான கமென்ட்ஸ் சூப்பர் ஸ்ரீராம்...

கீதா

KILLERGEE Devakottai said...

படங்களையும், வர்ணனைகளையும் இரசித்தேன்.
ஆனால் தலைப்பு சற்று நிற்க வைத்து விட்டது

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

ராமலக்ஷ்மி said...

அலங்கரிக்கப்பட்டக் காட்டெருமைகளின் படங்களும் அதற்கான வாசகங்களும் ரசிக்க வைத்தன. காணொளி நல்ல பகிர்வு.

நெல்லைத் தமிழன் said...

படங்கள் எப்போதும் போல் அருமை. வெங்கட்டின் பிரயாண படங்களை நினைவுபடுத்தியது. சிக்கிம்லலாம் சாப்மிட என்ன செய்தார்களோ?

நெல்லைத் தமிழன் said...

படங்கள் எப்போதும் போல் அருமை. வெங்கட்டின் பிரயாண படங்களை நினைவுபடுத்தியது. சிக்கிம்லலாம் சாப்மிட என்ன செய்தார்களோ?

Asokan Kuppusamy said...

கண்கவர் காட்சிகளை ரசித்தேன்

பரிவை சே.குமார் said...

ரசித்தேன் படங்களையும் சின்னச் சின்ன அழகிய வரிகளையும்...

athiraமியாவ் said...

இனிய எருமை வணக்கம்:)... இப்போ மீயும் எருமை பார்க்க வந்தேன் அயகு... இன்று சொக்கலேட் டே எனத்தான் அறிஞ்சேன் இது எடுமை:) டே போல இருக்கே:)..

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

காட்டெருமையின் கலர் கலரான படங்களும் அதற்கேற்ற அடக்கமான சிறு வர்ணனை வாசகங்களும் அருமை. காணொளி மிக அருமை. பயணத்தை,ரசித்த காட்சிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

காட்டெருமை அலங்காரம் அழகு.
படக்காட்சிகளின் கீழ் வாசகங்கள் மிக அருமை.

Geetha Sambasivam said...

வந்து உட்கார்ந்துட்டுப் பார்த்துட்டு இருக்கேன். இன்னிக்கு என்ன நடக்கப்போகுதுனு! அது சரி, அதிரா மியாவின் வழக்கமான கலக்கல் கருத்துக்களும் அதுக்கு எதிர்வினை ஆற்றும் அஞ்சுவும் இல்லாமல் போரடிக்குதுங்கோ! சீக்கிரமா வாங்க ரெண்டு பேரும் பழைய உற்சாகத்தோடு!

துரை செல்வராஜூ said...

ஆமா.. அதிராவும் அஞ்சுவும் எங்கே???...

வெங்கட் நாகராஜ் said...

Yak படங்களும் அவற்றிற்கு உங்கள் கருத்துகளும் சிறப்பு.

சிக்கிம் படங்கள் - நன்று. சென்ற வருடத்தில் இங்கே சென்றிருக்க வேண்டியது - அலுவலக வேலைப்பளு காரணமாக செல்ல முடியவில்லை.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!